138 வது ஆண்டு விழா கண்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரி..!

மட்டக்களப்பு மகாஜன கல்லூரி கடந்த 28-06-2013 அன்று 138வது ஆண்டு விழாவினை கொண்டாடியது. கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பரிசளிப்பு வைபவமும் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

1
2
3 4 5 6 7

தென் தாய்லாந்தில் குண்டுத் தாக்குதல்; 8 படையினர் பலி..!

தாய்லாந்தில் தெற்குப் பிராந்தியத்தில் நடந்துள்ள வீதியோரக் குண்டுவெடிப்பில் படைச்சிப்பாய்கள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

யால மாகாணத்தில் குரோங் பினாங் மாவட்டத்தில் இராணுவ வாகனங்களை இலக்குவைத்து சக்திமிக்க இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் இராணுவ ட்ரக் வண்டி முழுமையாக சேதமடைந்துவிட்டதாக காவல்துறை பேச்சாளர் கூறினார்.

வாகனத்திலிருந்த 10 படையினரில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றைய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் தாய்லாந்து படையினர் மீது நடந்துள்ள மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தப் பிராந்தியத்தில் 2004-ம் ஆண்டில் பிரிவினைவாதக் கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். (BBC)

thailand

எங்கள் ஊர் ஓவியர்..!

நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும், அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.

ஊடகங்களின் பார்வையில் பட்டுவிடும் திறமைசாலிகள் உலகின் வெளிசத்துக்கு வந்து, அடையாளங்களையும் பெற்றுவிடுகின்றனர்.

அந்தவகையில், நமது பார்வையில் சிக்கிய வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த பிரசன்னா எனும் கலைஞரின் திறமையினை வெளிச்சப்படுத்துவதில் வவுனியா நெற் இணையத்தளம் மகிழ்ச்சியடைகிறது.

prasanna

ஒரு புகைப்படத்தினைப் பார்த்தால் அதனை அப்படியே போட்டோபிரதி எடுப்பது போல அச்சுஅசலாக வரைவதுதான் பிரசன்னாவின் அசாத்திய திறமை. ஓவியம் வரைவது தவிர பிரசன்னா ஒரு சிறந்த குரல்வளம் கொண்ட ஒரு கலைஞரும் கூட. இவரின் திறமை வெளிச்சத்துக்கு வந்து இவரது கலைப்பயணம் மெம்மேலும் சிறப்படைய வவுனியா நெற் வாழ்த்துகிறது.

இவரின் கைவண்ணத்தால் உருவாகிய சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்காக:

(பெரிதாக்கிப் பார்க்க படங்களின் மேல் கிளிக் செய்யுங்கள்.)

பல்கலைக்கழக மாணவர்களின் மனநிலையை பரிசோதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு..!

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க முன்னதாக அந்த மாணவர்களை மனநிலை தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்த அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு அண்மையில் கருத்துத் தெரிவித்த இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி ஷானிக்கா ஹிரும்புரேகம, மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவதன் காரணமாகவே பல்கலைக்கழகங்களுக்குள் மோதல்கள் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் அரசாங்கம் மாணவர்களின் சுதந்திரத்தை முடக்க முயற்சிப்பதன் காரணமாகவே பல்கலைக்கழகங்களுக்குள் மோதல்கள் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.

மாணவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் நோக்குடனேயே அரசாங்கம் இவ்வகையான திட்டங்களைக் கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் வசதிகளும் வளங்களும் குறைவாக இருக்கும் நிலையில், அவற்றுக்கு எதிராக மாணவர்கள் போராட முன்வரும்போது அந்தப் போராட்ட உணர்வுகளை நசுக்குவதற்காகவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் உயர்கல்வி அமைச்சர் கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதில் மட்டுமே அக்கறை செலுத்துவதாகவும் அதற்கு எதிரான போராட்டங்களை அரசு நசுக்கப்பார்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுகிறது.

இப்படியான யோசனைகளை முன்வைக்கும் அதிகாரிகளின் மனநிலையையே சோதிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் மனநிலையை பரிசோதிக்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

(BBC)

இனியாவை காதலிக்கும் வில்லன்..!

ஹீரோவே இல்லாத படத்தில் நாயகியாக நடிக்கிறார் இனியா.ஹீரோவே இல்லாத நுகம் என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார் ஜெஃபி.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் அன்னிய நாட்டு முதலீடுகளை தடுக்க சதி செய்யும் வெளிநாட்டு சக்திகளின் தந்திரத்தை தோலுரிக்கும் கதையாக நுகம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஹீரோ கிடையாது, இரண்டு வில்லன் கதாபாத்திரங்கள் தான்.

தீவிரவாதிகளாக ஜெய்பாலா, விஜயகுமார் நடிக்கின்றனர். ஹீரோவுக்கு மட்டுமல்ல வில்லன்களுக்கும் காதல் வரும்.

அந்தவகையில் இதில் ஒரு வில்லனுக்கு இனியா மீது காதல் வருகிறது. இதன் முடிவு என்ன என்பது தான் கிளைமாக்ஸ்.

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், மும்பை மற்றும் பெங்களூரில் படப்பிடிப்பு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் புதிதாக எட்டு பேருக்கு சமுர்த்தி நியமனம்..!

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு சிறிரெலோ கட்சியினால் நேற்று (28.06) வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து சமுர்த்தி நியமனம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு, வவுனியாவைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு நேற்று (28)வவுனியா மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் கிளையில் வைத்து சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில், வவுனியா மாவட்ட திட்டமிடல் பொறுப்பதிகாரி எஸ்.கிருபாசுதன், சமுர்த்தி முகாமையாளர் வில்வராஜா, பிரபல வர்த்தகரும் சிறிரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் ஆன சிறிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அண்மையில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட்பதியூதினால் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 119 பேருக்கு சமுர்த்தி நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

samurthy1 samurthy2 samurthy3 samurthy4

பிரித்தானியாவின் புதிய விசா நடைமுறைக்கு இலங்கை கண்டனம்..!

பிரித்தானியாவிற்கு செல்ல விண்ணப்பிப்பவர்கள், 3000 பவுண்ட்களை வைப்புச் செய்யவேண்டும் என்ற பிரித்தானிய அரசின் திட்டத்திற்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ராங்கினுக்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

எனினும் இது தற்காலிக நடைமுறை எனவும், அதிக அவதானத்திற்குறிய நபர்களுக்கு மட்டுமே எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தாக கருணாதிலக்க அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா மற்றும் கானா ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த, அதிக அவதானத்திற்குரிய நபர்களுக்கு பிரித்தானியாவில் உட்செல்ல 3000 பவுண்ட்கள் செலுத்த வேண்டும் என பிரித்தானிய அரசு முன்மொழிந்திருந்தது.

இதன்படி பிரித்தானியா செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்கும் குறித்த நாடுகளில் அதிக அவதானத்திற்குரிய நபர்கள் 3000 ஸ்ரேலிங் பவுண்ட்கள் செலுத்த வேண்டும் என்ற யோசனை இவ்வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மீளத்திரும்பும் நபர்களுக்கு இந்தப் பணம் மீளளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு 30,000 – 35,000 இலங்கையர்கள் குறிப்பாக மாணவர்கள் பிரித்தானிய விசாவிற்கு விண்ணப்பிப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தகவல் வெளியிட்டுள்ளது.

மீள ஆரம்பிக்கிறது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை..!

1990ம் ஆண்டு மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் காலங்களில் சர்வதேச ரீதியில் டென்டர்களை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபன மற்றும் சீமெந்து நிறுவன தலைவர் சட்டத்தரணி என்.எஸ்.எம்.சம்சுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதால் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் அளவை நூற்றுக்கு 25 வீதம் குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாங்குளத்தில் சட்ட விரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது..!

வவுனியா மாங்குளம், பாணிக்கன்குளம் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் ஒரு தொகை முதுரை மரக்கட்டைகளை டிரெக்டர் வண்டியில் ஏற்றிச் சென்றபோதே கைதாகியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட முதுரை மரங்களின் பெருமதி இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக, முதுரை மரக்கட்டைகளுடன் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

wood

பாதுகாப்பற்ற ரயில் கடவை விபத்துகள் இவ்வருடம் 27 பேர் பலி.!

அண்மைக்காலமாக பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளதோடு இந்த வருடத்தில் மாத்திரம் பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் மேலும் இருவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றுக் காலை மீரிகம – அம்பலன்வத்தை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்றது. சிறிய ரக லொறியொன்றுடன் ரயில் மோதியதில் லொறியில் பயணித்த இருவரும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 25 ஆம் திகதி அளுத்கமை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் இறந்ததோடு இந்துருவ கைகாவ ரயில் கடவையில் 26 ஆம் திகதி நடந்த விபத்தில் மற்றொருவர் இறந்தார்.

இந்த நிலையில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

நாடு பூராவும் சுமார் 775 பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் கூடுதல் ஆபத்துள்ள அதிக விபத்துக்கள் இடம்பெறும் 200 பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள் உள்ள இடங்களில் துரிதமாக பாதுகாப்பான ரயில்வே கடவைகளை இட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளினூடாக வாகனம் செலுத்துகையில் அவதானமாக வாகனம் ஓட்டாததாலும் அதிக விபத்துகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதிகள் கவனமாக செயற்படுவதன் மூலம் ரயில் கடவைகளில் நிகழும் விபத்துகளை மட்டுப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த வருடத்திலுன் மாத்திரம் இதுவரை 21 விபத்துகள் ரயில் கடவைகளில் பதிவாகியுள்ளன.

இதற்கு முன் ரயில் கடவைகளில் காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது தன்னிச்சையா- இயங்கும் மணி அடிக்கும் கடவைகள் பொருத்தி வருவதாக ரயில்வே திணைக்களம் கூறியது. புதிதாக ரயில் கடவைகள் பாதுகாப்பு முறையை நிர்மாணிக்க 640 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

சுஜிபாலா மீது நடிகர் சங்கத்தில் புகார்..!

Sujibala

படப்பிடிப்புக்கு வர அதிகளவு பணம் கேட்டு சுஜிபாலா தகராறு செய்வதாக நடிகர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதர் கிரீன்லேண்ட் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ரவிக்குமார் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் உண்மை.

இந்த படத்தில் சுஜிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த ரவிக்குமார் தான் சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடைசி நேரத்தில் திருமணத்தை ரத்து செய்தார்.

திருமணம் நின்று போன பிறகும், அந்தப் படத்தில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்தார் சுஜிபாலா.

ஆனால் சண்டிகரில் நடக்கவிருந்த ஷூட்டிங்கில் சுஜிபாலா கலந்து கொள்ள மறுத்துவிட்டாராம். இது தொடர்பாக இயக்குனர் சங்கத்திலும் இயக்குநர் பி.ரவிக்குமார் புகார் செய்துள்ளார்.

அதில், சண்டிகரில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து விமான டிக்கெட் எடுக்க சுஜிபாலாவுக்கு போன் செய்தேன்.

அவரது அம்மா போனை எடுத்து சூட்டிங் வர முடியாது என்று கூறி விட்டார். சுஜிபாலாவிடம் பேச வேண்டும் என்று கூறினால் போனை கொடுக்க மறுக்கிறார்.

படத்துக்கு பேசிய மொத்த சம்பளமும் கொடுத்து விட்டேன். ஆனால் மேலும் ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் ஷுட்டிங் அனுப்ப முடியும் என்று கூறுகிறார்கள்.

என்னை இயக்குனர் என்றுகூட பார்க்காமல் சுஜிபாலாவின் தாயார் மிகவும் கீழ்தரமாக பேசுகிறார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படையிடம் இன்று ஒப்படைப்பு..!

மன்னார் வளைகுடாவில் காணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இவர்களை இன்று இந்திய கடலோர காவல் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை இராமேஸ்வரத்தில் இருந்து 600க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் அனைவரும் கச்சத்தீவு அருகே இந்திய கடலோர எல்லையில் மீன் பிடித்து கரை திரும்பினர், இதில் ஜஸ்டின் என்பவரது விசைபடகில் சென்ற 4 மீனவர்கள் மட்டும் கரை திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இராமேஸ்வர மீன்வளத்துறையில் புகார் அளித்தனர். இந்தநிலையில் இந்த நான்கு மீனவர்கள் சென்ற படகு பழுதடைந்து உணவு இன்றி நாடு கடலில் தத்தளித்து வந்தனர்.

அப்பொழுது இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீட்டு உணவு அளித்து அவர்களை பத்திரமாக தங்கள் படகுகில் தங்க வைத்தனர். பின்னர் இந்திய கடலோர காவல் படையினரிடம் தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து மீட்கப்பட்ட 4 மீனவர்களும் இன்று சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்கவுள்ளனர்.

இந்த செய்தி மீனவ குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இதர மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்விசிறி போல சுழரும் மனிதன் – நம்பமுடியாத சாகசம்(வீடியோ இணைப்பு)..!

கிழே உள்ள வீடியோவைப் பார்த்துவிட்டு இவர் மனிதரா அல்லது இயந்திரமா எனக் கூறுங்கள்!!

ATM இயந்திரத்தில் கொள்ளையிட முற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது..!

களுத்துறை, கடுகுரந்த பிரதேச வங்கியொன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளையிட முற்பட்ட போது கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸார் இவர்களை நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.

சந்தேகநபர்கள் தங்கியிருந்த இடத்தினை சோதனையிட்ட போது அங்கிருந்து 03 இலட்சத்து 95 ஆயிரம் பெருமதியான இலங்கை ரூபாய்கள், 500 ரூபா பெருமதி வாய்ந்த யூரோ 30 மற்றும் 1000 ரூபா பெருமதி வாய்ந்த சுவிஸ் பிராங் பணத்தாள்கள் 17 உம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கும் மேலதிகமாக கையடக்கத் தொலைபேசி, கணனி மற்றும் பணம் பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தப்படும் 71 அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த சில்க் ஸ்மிதாவாக ஆசைப்படும் பிந்து மாதவி..!

நடிகை பிந்து மாதவி இனி சில்க் ஸ்மிதா போன்ற கவர்ச்சியாக நடிக்கப் போகிறாராம்.

தமிழ் சினிமாவை தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் சில்க் ஸ்மிதா. அவர் ரஜினிகாந்த், கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தார்.

இந்தநிலையில் சில்க் ஒரு நாள் திடீர் என்று இறந்துவிட்டார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்தது.

இறுதியில் அது தற்கொலை தான் என்று தீர்மானிக்கப்பட்டது. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஹிந்தி, தமிழ், மலையாளத்தில் படங்கள் வந்தன.

அந்த படத்தில் சில்கின் சாயலில் இருக்கும் பிந்து மாதவி நடிக்க விருப்பம் தெரிவித்த போதிலும் அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை.

அதனால் அவருக்கு ஒரே வருத்தமாம். இந்தநிலையில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு சில்க் ஸ்மிதாவைப் போன்று கவர்ச்சியில் கலக்கப் போகிறாராம் பிந்து.

bindu

இப்போதைக்கு சமந்தாவுடன் திருமணம் இல்லை : சித்தார்த் உறுதி!

sidarth
ஷங்கரின், பாய்ஸ் படத்தில் ஐந்து நாயகர்களுல் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து மணிரத்னத்தின், “ஆயுத எழுத்து” படத்தில் நடித்தார்.
ஆனால் தமிழில் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு போனவருக்கு அடுத்தடுத்து ஹிட் படங்கள் அமைய தெலுங்கில் ஒரு ரவுண்ட் வந்தார்.
பின்னர் நீண்டஇடைவெளிக்கு பிறகு “180″ படம் மூலம் தமிழில் மீண்டும் தன் திருமுகத்தை காட்டினார் சித்தார்த், அதன்பிறகு “காதலில் சொதப்புவது எப்படி”, “உதயம்” படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றார்.
இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில், அவர் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” படம் கடந்தவாரம் வெளியானது.
இப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் சக்சஸ் மீட் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த்,
நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் தீயா வேலை செய்யணும் குமாரு பட ஹிட் போல எனக்கு எந்த படமும் அமையவில்லை. இப்படம் வெளியான ஒருவாரத்திலேயே ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதுவரை நான் பழகியவர்களில் சுந்தர்.சி போன்று ஒருவர் கிடையாது. பொதுவாக எனக்கு கோபம் அதிகம் வரும், ஆனால் இப்போது அதை குறைத்து ‌கொண்டுள்ளேன்.
இதற்கு சுந்தர்.சியும் ஒரு காரணம். எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படியும் வாழலாம் என்பதை புரிய வைத்தவர் சுந்தர்.சி. வாழ்க்கை என்றால் என்ன என்பதை எனக்கு புரிய வைத்த நல்ல நண்பர்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
தமிழில் நான் அதிகமாக நடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. அப்படியல்ல, நல்ல கதைக்காக காத்திருந்து நடிக்கிறேன். அடுத்து தமிழில் நான் 4 படங்களில் நடித்து வருகிறேன்.
ஒன்று பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ஜிகர்தண்டா”, வசந்தபாலனின் “காவியத்தலைவன்” மற்றொன்று எனது சொந்த தயாரிப்பு. எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும் இப்படியே இருக்கும் மனநிலை வேண்டும் என்றார். ‌
தொடர்ந்து செய்தியாளர்கள் எப்போது திருமணம் என கேட்டபோது, இப்போதைக்கு திருமணம் பற்றிய பேச்சுக்கே இடம் கிடையாது என்று உறுதியாக சொன்னார் சித்தார்த்.