உள்நாட்டு மருந்துகளை பயன்படுத்தி இயங்கி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு மத்திய நிலையம் ஒன்றை தம்புள்ளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.
தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் தம்புள்ளை – கல்வெட்டியாய பிரதேச வீடொன்றில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தை இயக்கிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருக்கலைப்பு செய்துகொள்ள வரும் பெண்களிடம் குறித்த சந்தேகநபர் தலா 15,000 ரூபா கட்டணம் அறவிட்டு வந்துள்ளார்.
இது குறித்து தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எடை தூக்கி மூலம் செய்யப்படும் பயிற்சிகள் தளர்வடைந்த தசைகள் இறுக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதி தசைக்கும் ஒவ்வொரு விதமான உபகரணங்கள் மூலம் செய்யப்படும் எடை தூக்கும் பயிற்சிகள் அதிக அளவில் நன்மை கிடைப்பதாக உள்ளது.
நல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறவும், வயதாகும் காலங்களில் வரும் தசை இழப்பு பிரச்சினைகளுக்கும் பளு தூக்கும் பயிற்சி சிறந்தது. ஏரோபிக் பயிற்சிகளும் உடற்பயிற்சிகளும் உங்களின் தசைகள் எடுத்து கொள்ளும் ஒட்சிசன் அளவை அதிகரித்து உங்களின் இருதயமும் நுரையீரலும் நன்கு செயல் பட உதவி புரிகின்றன.
பளு தூக்கும் பயிற்சிகள் எனப்படும் எடை தூக்கும் பயிற்சிகள் உங்கள் தசைகளின் செயல்பாட்டை அதிகரிக்க செய்கின்றன. தசைகளுக்கு அதன் எடையை விடவும் அதிக அளவு எடை கொண்டு பயிற்சி செய்யப்படுவதால் அவை நன்கு வலுப்படும்.
எடை தூக்கும் பயிற்சிகள் ஆரம்பிபதற்கு முன் வார்ம்அப் (warm up) ஸ்டெரச்சிங் (stretching) மிக அவசியம். எடை தூக்கும் பயிற்சியை மற்ற உடற்பயிற்சியை விட அதிக அளவு பரிந்துரைக்கப்படுவதற்கு காரணங்கள் உள்ளன.அவையாவன
எடை தூக்கும் பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பை தசையாக மாற்ற உதவும்.
தசைகளின் அளவை அதிகரிக்கவும், உடலை கட்டுறுதி பெறவும் செய்யும்.
எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவும் (BONE டென்சிட்டி) உடலின் நெகிழும் தன்மையை அதிகரிக்கவும் செய்யும்.
வளர்சிதை மாற்றங்கள் வீதத்தை அதிகரிக்க செய்யும். (INCREASES METABOLIC RATE)
பொதுவாக எடை தூக்க டம்பெல்ஸ் (dumbbells)+ பார்பெல்ஸ்(barbells) தான் அதிக அளவில் உலகில் பயன்படுத்துகின்றனர். இத்தகைய பயிற்சிகளை செய்து வந்தால் கட்டான உடலழகை பெறவும், வயதாகும் காலங்களில் வரும் தசை இழப்பு பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் முடியும். நீங்களும் முயற்சி செய்து பலன் அடையுங்கள்.
ராஞ்சனா ஹீரோ தனுஷை பார்த்து பொலிவூட் ஹீரோக்கள் திருந்துவார்களா? பார்க்க பெரிதாக வசீகரம் இல்லை, உத்தமபுத்திரன் படத்தில் விவேக் சொல்வது போன்று நாலு நெஞ்சு எலும்பு, 2 நல்லி எலும்பு உள்ள தனுஷ் 6 பேக்கை காட்டி மிரட்டும் பொலிவூட்டில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
படத்தின் ஷூட்டிங் நடக்கையில் தனுஷை பார்த்து பிற பொலிவூட் நடிகர்கள் மிரண்டிருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது படம் ரிலீஸான பிறகு வட இந்திய மீடியாக்களும், திரை விமர்சகர்களும் தனுஷை கொண்டாடுகிறார்கள்.
ஜிம் உடம்பை காட்டுவதிலேயே குறியாக இருந்து முகபாவனைகள் பற்றி மறந்துவிட்ட பொலிவூட் நடிகர்கள் மத்தியில் தனுஷ் நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவரது நடிப்பு மிகவும் அருமை என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிவுட்டில் பெயர் வாங்க 6 பேக்கும், லுக்கும் தேவையில்லை நடிப்பு இருந்தால் புகழ் பெறலாம் என்பதை தனுஷ் நிரூபித்துள்ளார். இதைப் பார்த்து பிற நடிகர்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா? உடம்பில் கவனம் செலுத்தும் நடிகர்களுக்கு மத்தியில் அமீர் கான், ரன்பிர் கபூர் உள்ளிட்ட சில நடிகர்கள் நடிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் தந்தை என்று கருதப்படும் நெல்சன் மண்டேலா நலமடைய வேண்டும் என அந்நாட்டு சிறுவர்கள், மக்கள், தலைவர்கள் என அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர் அருகிலேயே 24 மணிநேரமும் உள்ளனர்.
மண்டேலாவின் செயற்கை சுவாசதை நிறுத்துவதற்கு அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஜுமா இன்று மொசாம்பிக் நாட்டுக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார்.
நேற்று இரவு ஜூமா, மண்டேலாவை காண வந்தார். அப்போதும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் தனது பயணத்தை ரத்து செய்வதாக அவர் தெரிவித்தார்.
94 வயதான மண்டேலா நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8ஆ் திகதி பிரிட்டோரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உறுப்புகளின் இயக்கம் படிப்படியாக குறைவதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா.
இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
ஐந்தாண்டுகள் மட்டும் ஜனாதிபதியாக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று பஸ் சங்க உறுப்பினர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தனியார் பஸ் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பஸ் கண்டன அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.
இவ் பஸ்கட்டண அதிகரிப்பு தொடர்பில் கடந்த சில நாட்களாக பஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துச் சபைக்கு இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
நேற்று இவ் விடயம் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார்.
எனினும் இதன்போதும் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டண அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலாட் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று இடம்பெற்ற தொழிற்கட்சி தலைவர் தெரிவு தேர்தலில் ஜூலியா கிலாட் 45 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட கெவின் பூட் 57 வாக்குகளையும் பெற்றனர்.
இதனால் 12 வாக்குகளால் வித்தியாசத்தில் ஜூலியா கிலாட் தோல்வியடைந்தார். கட்சி தலைவர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து தான் அரசியலில் இருந்து விலகப்போவதாக ஜூலியா கிலாட் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் பூட் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஜூலியா கிலாட் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தமையைத் தொடர்ந்து அப் பதவியை கெவின் பூட் பொறுப் பேற்றுக் கொண்டுள்ளார்.
வவுனியா பூங்கா வீதியில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனியாக திரிவது இனங்காணப்பட்டு வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரியிடம் பொது மக்களால் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிறுவன் நேற்று மாலை (26) அவனது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி எஸ்.ஜெயக்கெனடி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சிறுவனின் தந்தை இறந்துவிட்டார். தாய் வேறு ஒரு வேலை நிமிர்த்தம் கொழும்பு சென்றுள்ளார்.
நாய் பிரியம் கொண்ட குறித்த மூன்று வயது சிறுவன் தனது சகோதரியுடன் இருந்த போது, நாய் ஒன்றை திரத்தி கொண்டு சென்றுள்ள நிலையிலேயே வீட்டிற்கு செல்ல வழி தெரியாது வீதியில் நின்று அல்லல் பட்டுள்ளான்.
இந் நிலையிலேயே மீட்கப்பட்ட சிறுவனை தேடியலைந்த உறவினரை இனங்கண்டு குறித்த சிறுவன் ஒப்படைக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இச்செய்தியினை உடன் பிரசுரித்து உதவிய அனைத்து ஊடகங்களுக்கும், முகநூல் பாவனையாளர்களுக்கும் தமது நன்றியையும் தெரிவித்தார்.
– See more at: http://www.athirady.com/tamil-news/news/249654.html#sthash.0yd3EUpa.dpuf
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராக அவதாரம் எடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற படங்கள் வெற்றி அடைந்ததால் கொலிவுட்டில் சிவகார்த்திகேயனுக்கு மவுசு கூடிவிட்டது.
இதனை தொடர்ந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை ராம் ஜாவ் இயக்குகிறார், இவர் ஓகே.ஓகே, பாஸ் என்ற பாஸ்கரண் போன்ற படங்களில் ராஜேஷின் உதவியாளராக பணியாற்றியவர்.
இதில் பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் டி.இமானின் இசையில் இப்படத்தில் பாடலொன்றையும் பாடியுள்ளாராம் சிவகார்த்திகேயன்.
பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்தில் அசினுக்கு காதலர் இருப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசினின் மார்க்கெட் சரிந்து கிடப்பதால், மும்பையில் இருக்காமல் அடிக்கடி ஊர் சுற்றி கிளம்பி விடுகிறார்.
அதிலும் குறிப்பாக நியூசிலாந்துக்கு தான் அடிக்கடி சென்று வருகிறார்.
அவரது சொந்த ஊர் கேரளா தான், ஏன் அடிக்கடி அங்கு சென்று வருகிறார் என பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் நியூசிலாந்தில் அசினுக்கு காதலர் இருப்பதாகவும், அவரையே விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திடீர் திருமண செய்தியால் படபடத்து விட்டாராம் அசின்.
எனக்கு பிடித்தமான நாடு நியூசிலாந்து, அதோடு அங்கு உறவினர்களும், நண்பர்களும் நிறைய இருக்கிறார்கள்.
அதனால் அடிக்கடி சென்று வருகிறேன். இதை போய் காதல் கல்யாணம் என்று கதை கட்டி விட்டால் எப்படி? என்று பேட்டி கொடுத்துள்ளார்.
ஆந்திராவில் பவன் கல்யாணுடன் ஸ்ருதி நடித்த கப்பார் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்.தெலுங்கு தேசத்து மக்களுக்கு ஸ்ருதியை பிடித்துப்போக, பலுபு, எவடு, ராமய்யா வத்சவய்யா என அம்மணிக்கு அங்கு படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
முதன்முதலாக சினிமாவில் கால்பதித்த “லக்” இந்திப் படம் லக்காக அமையாவிட்டாலும், தற்போது “டி டே” என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், “கப்பார் சிங்” இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதிலும் பவன் கல்யாண் தான் ஹீரோ. ஆனால், ஹீரோயினாக நடிக்க காஜலிடம் கேட்டுள்ளனர். அவர் சொன்ன சம்பளத்தைக் கேட்டதும் தயாரிப்பாளருக்கு மயக்கமே வந்துவிட்டதாம்.
பவன் கல்யாண் ஸ்ருதியை சிபாரிசு செய்ய, மறுபடியும் ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் பிஸியான நடிகையாகி விட்டார் ஸ்ருதி.
சர்வதேச விதவைகள் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை சேர்ந்த பெண் கலந்து கொண்டார். அவரை ராணுவத்தினர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான கிராமிய பொது அமைப்புகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் உள்பட 35க்கும் மேற்பட்ட விதவைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமூக சேவை பணியாளரின் வேண்டுகோளுக்கிணங்க, பெண்களுக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டார்.
இவருடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்ற எஸ்தர் தேவகுமார் என்ற பெண்ணும் கலந்து கொண்டார். இது பற்றி் தகவல் அறிந்து ராணுவ அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் விதவைகளுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சி என்பதால் அவர்கள் சென்றுவிட்டனர்.
இருப்பினும், நிகழ்ச்சி முடிந்து எஸ்தர் தேவகுமார் கொழும்புக்குத் திரும்பும்போது ஓமந்தை சோதனைச்சாவடியில் அவரை ராணுவத்தினர் பிடித்து நெடுங்கேணிக்கு அழைத்துச் சென்ற தொண்டு நிறுவனப் பெண்களையும் தடுத்து நிறுத்தி சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது, சுற்றுலா பயணியாக வந்த ஒருவர் கருத்தரங்கு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்த ராணுவ அதிகாரிகளிடம், சர்வதேச விதவைகள் தினத்தையொட்டி, அரசு சார்பில் நடத்தப்பட்ட விதவைகளுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அந்த பெண்கள் எடுத்துக் கூறினர்.
எனினும் தங்களுக்கு மேலிடத்தில் இருந்து கிடைத்த உத்தரவு படியே விசாரணை நடத்தியதாகவும், அங்கிருந்து அவர்கள் சென்றுவிட வேண்டும் என்றும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுற்றுலா பயணியாக இலங்கை சென்ற எஸ்தர் தேவகுமார் கடந்த 24ஆம் தேதி சென்னை திரும்பினார்.
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் பரோட்டாவால் வாழ்வு பெற்றவர் காமெடி நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் இப்போது சந்தானத்தை அடுத்து இவர்தான் டொப் காமெடியன்.
பெரிய ரவுண்டு வருவார் என எல்லாரும் எதிர்பார்க்க, அவர் செய்யும் அலப்பறையே அவரை சீக்கிரம் வீட்டில் உட்காரவைத்துவிடுமோ என அஞ்சுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
உதயநிதி நடிக்கும் கதிர்வேலன் காதல் படத்தில் முதல் பாதி முழுக்க சூரி வருவது போலவும், இரண்டாம் பாதி முழுக்க சந்தானம் வருவது போலவும் கதையாம்.
முதல் பாதியில் மதுரை காட்சிகள் எடுத்தபிறகு திடீரென இரண்டாம் பாதியிலும் நான் தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார் சூரி. சந்தானத்தின் உயிர்த் தோழனான உதயநிதிக்கு இதனால் சூரி மீது செம கடுப்பு. பிறகு சந்தானமே இறங்கி வந்து சமாதானப்படுத்தியிருக்கிறார்.
தில்லுமுல்லு படத்திலும் இப்படித்தான் சந்தானம் சூரியைக் கிண்டல் செய்யும்படி வருகிற காட்சிக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாராம் சூரி. பின்னர் எப்படியோ அரை மனதோடு ஒப்புக்கொண்டுள்ளார்.
இப்படி அலப்பறை கொடுத்தா ரொம்ப நாளைக்கு இண்டஸ்ட்ரியில இருக்க முடியாதுப்பா என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.
அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் புதிய பிரதம பயிற்றுவிப்பாளராக அவ்வணியின் முன்னாள் வீரர் டெரன் லீமன் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த மிக்கி ஆதரை நேற்று திடீரென அப்பதவியிலிருந்து நீக்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை புதிய பயிற்றுவிப்பாளராக லீமனை நியமித்துள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தத் தவறி வருவதுடன் ஒழுக்கப்பிரச்சினைகளுக்கும் உள்ளாகிவருகின்றது. இந்நிலையிலேயே மிக்கி ஆதர் நீக்கப்பட்டு புதிய பயிற்றுவிப்பாளராக டெரன் லீமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து லீமனுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இந்த் வாய்ப்பை அளித்துள்ளது.
இதனிடையே அணியின் தேர்வாளர்கள் குழுவிலிருந்து அணித்தலைவர் மைக்கல் கிளார்க் விலகியுள்ளார். இந்திய அணியுடனான தொடருக்குப் பின்னர் தன்னை தேர்வுக்குழுவிலிருந்து நீக்குமாறு கிளார்க் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல பெண்களை கையடக்கத்தொலைபேசி மூலம் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்த நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி காதலித்து திருமணம் செய்வதாக நடித்து பணம், நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவரால் ஏமாற்றப்பட்டதாக கூறப்படும் வவுணதீவு நாவற்காட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் மட்டக்களப்புப் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில், தன்னை திருமணம் செய்துக்கொள்வதற்காக 40 ஆயிரம் ரூபா பணத்துடனும் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான நகையுடனும் குறித்த நபர் அழைத்து சென்றார்.
இருவரும் கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்தோம். கையிலிருந்த பணம் முழுவதும் செலவழிந்த நிலையில் கொண்டு சென்றிருந்த நகைகளில் ஒரு தங்க சங்கிலியை கொழும்பில் அடகுவைத்தார்.
அதற்கு பின்னர் நுவரெலியாவிற்கு என்னை அழைத்துச் சென்று சில நாட்கள் வைத்திருந்ததுடன் அங்கும் மற்றொரு தங்க சங்கிலியை அடகுவைத்தார்.
இந்நிலையில், திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக போதியளவு பணம் இன்மையினால் கையிலிருந்த இரண்டு காப்புகளை தருமாறு கேட்டார். அதனையும் கழற்றிகொடுத்தேன்.
வாங்கிச் சென்றவர் பல நாட்களாக திரும்பவேயில்லை அவருடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மட்டக்களப்புக்கு திரும்பினேன் என்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வாவின் ஆலோசனையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகரவின் வழிகாட்டலில் தமிழ் பெண் பொலிஸார் ஒருவர் அடங்கலாக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
மட்டக்களப்பு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸ் ஒருவர் குறித்த இளைஞருடைய தொலைபேசி இலக்கத்திற்கு மிஸ் கோள் ஒன்றை விடுத்துள்ளார்.
மிஸ் கோளுக்கு தொடர்பினை ஏற்படுத்திய குறித்த நபர் காதல் மொழிகளை பேசி உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார்.
அந்த பெண்ணும் பஸ் நிலையத்திற்கு உரியநேரத்திற்கு சென்றுள்ளார். கையடக்கதொலைபேசியுடன் காதலியை வரவேற்பதற்காக ஓடோடிசென்ற இளைஞனை அங்கு சிவில் உடையில் ஏற்கனவே தயாராகவிருந்த பொலிஸார் கைதுசெய்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் அனுராதபுரத்தில் சிங்களப் பெண்ணொருவரையும் இவ்வாறு ஏமாற்றியமை தெரிய வந்துள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸார் மோசடி செய்யப்பட்ட நகைகள் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மீட்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.