பசியால் அழுத குழந்தைக்கு இரக்கம் காட்டிய கொள்ளையர்கள்.!

baby

இந்தோனேஷியாவில் பசியால் அழுத குழந்தையை தூங்க வைத்து விட்டு லட்சக்கணக்கில் கும்பலொன்று திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் தம் காசாங் என்ற ஊரில் உள்ள வீட்டில் நள்ளிரவில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலொன்று புகுந்தது. வீட்டிற்குள் இருந்த ஆண்கள், பெண்கள் அனைவரையும் கயிற்றில் கட்டிப் போட்டு விட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை திருடுவதில் தீவிரமாக இருந்தனர்.

அப்போது தூங்கி கொண்டிருந்த குழந்தை பசியால் அழத் தொடங்கியது. உடனே செய்வதறியாக நின்ற கொள்ளையர்கள் தாயிடம் சென்று அழுகையை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என கேட்க 2 கரண்டி பாலுடன் சிறிது வெந்நீர் கலந்து கொடுக்கும்படி கூறினார்.

அதன்படியே அவன் செய்ய பாலை பருகியதும் குழந்தை அயர்ந்து தூங்கி விட்டது. படுக்கையில் கொண்டு குழந்தையை வைத்து விட்டு சுமார் 2½ லட்சம் பெறுமான பொருட்களை சுருட்டிக் கொண்டு கும்பல் தப்பி ஓடியது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பொலிசாரிடம் புகார் அளிக்கவே கொள்ளை கும்பல் தலைவன் உட்பட 4 பேரை பிடித்தனர் ஒருவன் மட்டும் சுட்டுக் கொல்லப்பட்டான். பயங்கர ஆயுதங்களுடன் சென்று கொள்ளையில் ஈடுபட்ட இந்த கும்பலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னைக் கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்துக் கொன்ற விவசாயி!!

snake

இந்திய மாநிலம் போபாலில் தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்து துண்டங்களாக்கிய விவசாயியை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர்.

போபால் அருகே மச்சி போர்கான் என்ற கிராமத்தில் வசித்து வரும் 30 வயது நிலாப் துர்பே என்ற விவசாயி தனது மாடுகளை மேய்த்து விட்டு இரவு சுமார் 7 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது.

தன்னைக் கடித்தப் பாம்பை திருப்பிக் கடிக்காது என முன்னோர் கூறிய அறிவுரை ஞாபகத்திற்கு வர உடனடியாக பாம்பை கையில் எடுத்து அதனை துண்டங்களாக கடித்துத் துப்பியுள்ளார் நிலாப். நிலாப்பை பாம்பு கடித்த விபரம் அறிந்த அவரது ஊர்க்காரர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவருக்கு விஷ மருந்து கொடுத்த வைத்தியர் ராகுல் இது குறித்து கூறுகையில் தான் இந்த மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து 200க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு பாம்புக்கடிக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும் ஆனால் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இதுவே முதன்முறை என்றும் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் ஹீரோக்கள்!!

jeeva_son_001

என்னதான் நடிப்பில் கவனம் செலுத்தினாலும், தமிழ் ஹீரோக்கள் குடும்ப பொறுப்புகளை கண்ணும் கருத்துமாய் செய்து வருகிறார்களாம்.
அல்டிமேட் ஸ்டார் அஜித், இளைய தளபதி விஜய், சூர்யா, ஜீவா உட்பட பல முண்ணனி ஹீரோக்கள் பலரும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும் உள்ளூரில் ஷூட்டிங் நடந்தால் குழந்தைகளுடன் அதிகளவு பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் குழந்தைகளை காரிலோ அல்லது பைக்கிலோ அழைத்து சென்று பள்ளியில் விட்டு வருகின்றனராம்.

அத்துடன் அவர்கள் விரும்பி பார்க்கும் படங்களுக்கும் அழைத்து சென்று வருகின்றனர். சமீபத்தில் ஜீவா தன் குழந்தையை பசிபிக் ரிம் என்ற ஹாலிவுட் படத்துக்கு அழைத்து சென்றாராம் ஜீவா. அவரைவிட குழந்தைதான் படத்தை ரொம்பவே ரசித்ததாம்.

இதேபோன்று ஐஸ்வர்யா ராயும் தன்னுடைய மகளை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறாராம்.

கூட்டமைப்பின் சார்பில் வடக்கு தேர்தலில் 3 பெண் வேட்பாளர்கள்!!

TNA-logoநடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளிநொச்சி கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லைத்தீவு மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உப அதிபர் திருமதி மேரிகமலா குணசீலனும் போட்டியிடுகின்றனர்.

இம்மூவரில் இருவர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா ஆகியோர் முன்னிலையில் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைமைச் செயலகத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

36 பேரைக் கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும், 3 பெண்களும் அடங்கியுள்ளனர்.

TNA

மீண்டும் BCCI தலைவராகிறார் சீனிவாசன்!!

Srinivasan

குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் மீதான ஆட்ட நிர்ணய குற்றங்களுக்கு ஆதாரமில்லை என்று கூறி விட்டது இந்திய கிரிக்கெட் சபை நியமித்த விசாரணைக் குழு.

இதையடுத்து மீண்டும் தலைவர் பொறுப்புக்குத் திரும்புகிறார் சீனிவாசன். சீனியின் மருமகன் குருநாத் மெய்யப்பன். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இணை நிறுவனர் ராஜ் குந்த்ரா. இவர்கள் மீதான சூதாட்டத்தில் தொடர்பு என்ற புகார்கள் குறித்து விசாரிக்க இந்திய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட குழு தற்போது இவர்களுக்கும் அந்த புகார்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி விட்டது.

இந்த நிலையில் விசாரணையில் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் அப்பாவிகள் அவர்களுக்கும் இந்தப் புகார்களுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளதாம். விசாரணை அறிக்கையை ஓகஸ்ட் 2ம் திகதி கூடும் கிரிக்கெட் சபை ஒப்புதல் அளிக்கவுள்ளது. அன்றயை தினமே ஐபிஎல் நிர்வாகக் கூட்டமும் கூடுகிறது.

அறிக்கையில் தனது மருமகன் நல்லவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் சீனிவாசன் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளாராம்.

அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா புற்றுநோய்க்கு சிகிச்சையா?

kanaka

நடிகை கனகா ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா. அவர் ராமராஜனுடன் சேர்ந்து நடித்த கரகாட்டக்காரன் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து படு பிசியான நடிகையாக ஆன கனகா ரஜினி, பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

ஆனால் 90ம் ஆண்டு இறுதிகளில் அவரை அவ்வளவாக படங்களில் பார்க்க முடியவில்லை. திருமணம் செய்து கொள்ளாத கனகா 2000ம் ஆண்டில் தனது தாய் இறந்த பிறகு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் உடல் நலக்குறைவால் அவதிப்படுவதாக செய்திகள் வந்தன.

பின்பு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற அங்கு சென்றார்.

அந்த மருத்துவமனையில் அனாதைகள் மற்றும் கவனிக்க ஆளில்லாமல் அவதிப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்படும். அங்கு புற்றுநோயால் அவதிப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த மருத்துவமனையில் கனகா சிகிச்சை பெறுவதைப் பார்த்த அந்த பிரமுகர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் தனது நண்பர்களிடம் கூற விஷயம் அப்படியே பரவியது. கனகா புற்றுநோய்க்கு தான் சிகிச்சை பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இப்படி கவனிக்கக் கூட ஆளில்லாமல் தன்னந்தனியாக கனகா சிகிச்சை பெறுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இறந்து விட்டதாக கருதப்பட்ட மாணவர் உயிருடன் வந்த அதிசயம்!!

body

இந்திய ஒரிசா மாநிலம் காகிதா என்ற கிராமத்தை சேர்ந்த லோசன் காடிதா என்ற 19 வயது மாணவன் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த 8ம் திகதி முதல் காணவில்லை.

எனவே அவரது தந்தை பொலிஸில் புகார் தெரிவித்ததையடுத்து பொலிசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது ஊர் அருகே உள்ள காட்டில், அழுகிய சடலமொன்று கிடந்துள்ளது.

அந்த சடலம் லோசன் காடிதாவாக இருக்கலாம் என்று சந்தேகித்த பொலிசார், அவரது தந்தையை அடையாளம் காட்ட அழைத்து வரவே, அவரும் இது தனது மகன் தான் என்று அடையாளம் காட்டியுள்ளார்.
பின்னர் உடல் பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டிருப்பது லோசன் காடிதா என தெரிய வந்ததையடுத்து, அவரின் உடலை அவரது தந்தை எடுத்து சென்று இறுதி சடங்குகளை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து லோசனை அவரது நண்பர்கள் 6 பேர் கொலை செய்து இருக்கலாம் என்று தந்தை பொலிஸில் புகார் தெரிவிக்கவே அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட லோசன் காடிதா திடீரென வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பூரி ஜெகநாதர் கோவில் திருவிழாவை பார்க்க சென்றதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து காட்டில் கிடந்த பிணம் யாருடையது என பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை..!

Tillakaratne Dilshan

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இலங்கை அணி.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பாக அம்லா 77 ஓட்டங்களையும் டுமினி 97 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் 4 விக்கெட்டுகளையும் மலிங்க 3 விக்கெட்டுகளையும் டில்ஷான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷான் தனது 17வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். டில்ஷான் ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களையும் சங்ககார 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 5வதும் இறுதியுமான போட்டி வரும் 31ம் திகதி ஆர் பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

சிம்பாவே அணியுடனான தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

india

இந்திய சிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் வீராத் கோலி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 46 ஓவரில் 183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சிம்பாவே அணி சார்பாக அணித்தலைவர் டெய்லர் 23 ஓட்டங்களையும், மசகாட்சா 38 ஓட்டங்களையும், வில்லியம்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அமித் மிஸ்ரா 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பாக ரோகித் ஷர்மா 14 ஓட்டங்களையும் , தவான் 35 ஓட்டங்களையும், அம்பதி ராயுடு 33 ஓட்டங்களையும் கோலி 68 ஓட்டங்களையும், ரெய்னா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இறுதியில் இந்திய அணி 35.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது மட்டுமன்றி தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கின்றது.

 

காதலில் சிக்கிய 5 நடிகைகள்..!

kathal

ஹன்சிகா, சமந்தா, அமலாபால், காஜல் அகர்வால், லட்சுமிராய் ஆகிய ஐந்து நடிகைகள் காதலில் சிக்கியுள்ளனர். இதில் சிலருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஹன்சிகா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். அவர் நடித்து சமீபத்தில் ரிலீசான தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2 படங்கள் வெற்றிகரமாக ஓடின.

இந்த நிலையல் சிம்புவுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் காதலை பகிரங்கமாக அறிவித்து உள்ளனர். சிம்பு உடனடியாக திருமணம் செய்து கொள்ள அவசரப்படுகிறார் என்கின்றனர். ஹன்சிகாவோ ஐந்து வருடத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார்.

சமந்தாவும், சித்தார்த்தும் காதல் வயப்பட்டு உள்ளனர். இருவரும் கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜைகளில் பங்கேற்றார்கள். விழாக்களுக்கு ஜோடியாக வருகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளனர். சமந்தா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வருகிறார்.

லட்சுமி ராயும் காதலில் விழுந்துள்ளார். அவர் கூறும் போது நான் காதலிக்கிறேன். அவர் தொழில் அதிபராக இருக்கிறார். அவரைப்பற்றி வேறு விஷயங்கள் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை என்றார்.

அமலாபாலும் முன்னணி டைரக்டர் ஒருவரை காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியாகியுள்ளன. அது பற்றி வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் ரகசியமாக சந்தித்து காதல் வளர்ப்பதாக கூறுகின்றனர்.

காஜல் அகர்வாலுக்கும் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல், பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்புகளை சமீபத்தில் புறக்கணித்து விட்டார். தயாரிப்பாளரை மணப்பதற்காகவே சினிமாவில் நடிப்பதை குறைப்பதாக கூறப்படுகிறது.

தண்ணீருக்காக கஞ்சா கருப்பை தேடிவரும் மனுக்கள்!!

kancha karuppu

கொலிவுட்டில் வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை தயாரித்து வரும் கொமடி நடிகர் கஞ்சா கருப்பிற்கு மனுக்கள் குவிந்து வருகிறதாம்.
அங்காடி தெரு மகேஷ் நாயகனாகவும் ஆருஷி நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை, காரைக்குடி, நாட்டரசன் கோட்டை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இப்படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லொரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம்.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தண்ணீர் இல்லாத ஊர்களுக்கு லொரியைக் கொண்டு சென்று போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம்.
இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கும் கஞ்சா கருப்பிற்கு மேலும் போர்வெல் போடச் சொல்லி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்து வருகிறதாம்.

 

உயரமான பெண்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி!!

Tall-Women-1

புற்று நோய்கள் குறித்து பல விதமான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நியூயோர்க்கில் உள்ள யெசீவா பல்கலைக்கழகத்தின் அல்பர்ட் ஐன்ஸ்டீன் மருந்தியல் துறை நிபுணர் ஜியோப்பிரி சி கபாட் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

மாத விலக்கு நிறைவு பெற்ற 20,928 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் அதிக உயரமுள்ள பெண்களுக்கு புற்றுநோய் தாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு மார்பக புற்று நோய், குடல் புற்று நோய், மற்றும் தோல் புற்று நோய் போன்றவை இருந்தன.

பொதுவாக புற்று நோய்கள் ஹோமோன்களால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதனுடன் மனிதர்களின் உயரமும் சேர்ந்து புற்றுநோய் ஏற்பட வழி வகுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் உயரமான ஆண்களை விட பெண்களையே புற்று நோய் அதிக அளவில் தாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கான காரணம் என்ன என்று தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் அதிக உயரமுள்ளவர்களின் உடல் பாகங்களும் பெரியதாக உள்ளன. எனவே அதில் உள்ள அதிக அளவிலான செல்களில் புற்று நோய் மிக விரைவில் பரவுவதாக கூறுகின்றனர்.

திருமணத்திற்கு தயாராகும் பரத்!!

barath

கொலிவுட்டில் 555 என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் பரத், விரைவில் திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
சசி இயக்கத்தில் தற்போது நடித்திருக்கும் இப்படத்தில் பரத் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் 6 பேக் உடற்கட்டுடன் தோன்றும் இவர் ஜக்பாட் என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த இந்தி படத்தில் பரத்துடன், நசிருதீன்ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நசிருதீன்ஷாவுடன் நடித்த அனுபவம் குறித்து பரத் கூறுகையில், சிறந்த நடிகர்களில் ஒருவரான நசிருதீன்ஷாவுடன் நடிப்பது, பெருமையாக இருக்கிறது. நடிப்பை பொருத்தவரை அவருடைய பாணி வித்தியாசமாக இருக்கிறது. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

தற்போது நடித்து முடித்திருக்கும் 555 படம் வெளியான பின்பே புதிய படங்களை ஒப்புக்கொள்வேன். எனது வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். மிக விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

சிறந்த பொலிவுட் நடிகராக அமிதாப் பச்சன் தெரிவு!!

bachan

பொலிவுட்டின் சூப்பர் ஸ்டாரும், பழம்பெரும் நடிகருமான அமிதாப் பச்சன் மிகச் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் வெளிவரும் ஆசிய வாரப் பத்திரிகை, இந்தியாவின் சிறந்த 100 பாலிவுட் நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் இக்கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

இதில் அமிதாப்பச்சன் விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலக சக கலைஞர்கள் போன்ற ஏராளமானவர்களின் வாக்குகளைப் பெற்று முதல் இடம் பிடித்தார். முதுபெரும் நடிகர் திலிப் குமாருக்கு இரண்டாவது இடமும், ஷாருக்கான் மூன்றாவது இடத்தையும், நடிகை ஸ்ரீதேவி 10வது இடத்தை பிடித்துள்ளனர்.

மேலும் இதில் சல்மான் கான்-11, அமீர்கான்-14, தர்மேந்திரா- 15, ஹேமா மாலினி -18, மதுபாலா -24, கஜோல் -30, ஹிரித்திக் ரோஷன் -32, ராணி முகர்ஜி -38, கரீனா கபூர் -43, பிரியங்கா சோப்ரா -86, கேத்ரீனா கைப் – 93 இடத்தைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படமாகும் கர்நாடக இசைமேதை கதை: புரந்தரதாசர் வேடத்தில் ரஜினி?

rajani

கர்நாடக சங்கீதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் புரந்தர தாசர். கர்நாடக இசையின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார். புரந்தரதாசர் அறக்கட்டளை சார்பில் பெங்களூரில் குரு வணக்க நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோச்சடையான் பட வேலைகளில் பிசியாக இருந்ததால் அவரால் போக முடியவில்லை. தனக்கு பதில் தன்னுடைய நண்பர் ராவ்பகதூரை அனுப்பி வைத்தார்.

விழாக்குழுவினர் புரந்தரதாசர் உருவத்தில் ரஜினியை ஓவியமாக வரைந்து ராவ்பகதூரிடம் வழங்கினர். பெங்களூரை சேர்ந்த பிரபல ஓவியர் ஒருவர் இந்த படத்தை வரைந்து இருந்தார். ரஜினி நிஜமாகவே புரந்தரர் தோற்றத்தில் இருப்பதாக ஓவியத்தை பார்த்தவர்கள் பாராட்டினர்.

புரந்தரதாசர் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்றும் அப்படத்தில் புரந்தரதாசர் வேடத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்றும் விழாவில் வற்புறுத்தப்பட்டது. ரஜினி ஏற்கனவே ஸ்ரீராகவேந்திரர் வேடத்தில் நடித்துள்ளார். எனவே புரந்தரதாசர் வேடத்திலும் அவர் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ரஜினி சார்பில் விழாவில் பங்கேற்ற அவரது நண்பர் ராவ்பகதூர் பேசும்போது விழாக்குழுவினர் அளித்த ஓவியத்தை ரஜினியிடம் ஒப்படைப்பேன். அத்துடன் புரந்தரதாசர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றும் ரஜினியிடம் வலியுறுத்துவேன் என்றார்.

எடை அதிகமானவர்கள் நியூசிலாந்தில் வாழ உரிமை இல்லையாம்..!

nz

அதிக எடை கொண்ட வெளிநாட்டவர்களை அங்கு தங்க முடியாது என்று கூறி நாடு கடத்தும் நடவடிக்கையில் நியூசிலாந்து நாடு இறங்கியுள்ளது. இந்த உத்தரவால் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 130 கிலோ எடை கொண்ட அல்பட் பியூட்டன்ஹீஸ் என்பவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேறவும் அவர் பணிக்கப்பட்டுளார்.

6 வருடத்திற்கு முன்பு நியூசிலாந்தில் தொழிலுக்காக வந்து குடியேறினார் அல்பட். ஆனால் வந்த பிறகு அவருக்கு உடல் எடை கூடி விட்டது. இதையடுத்து மிகக் கடுமையாக உடற்பயிற்சி செய்து 30 கிலோ வரை எடையைக் குறைத்தார்.

தற்போது அவரது எடை 130 கிலோவாக உள்ளது. இது அதிக எடை உங்களால் நியூசிலாந்தில் தங்க முடியாது என்றும் உங்களது தொழில் விசாவைப் புதுப்பிக்க முடியாது என்றும் நாட்டை விட்டு வெளியேறுமாறும் தெரிவித்துள்ளது நியூசிலாந்து குடியேற்றத் துறை.

இதுகுறித்து நியூசிலாந்து குடியேற்றத்துறையினர் கூறுகையில் ஏற்றுக் கொள்ளும்படியான சுகாதாரத்துடன் அல்பட் இல்லை என்று வைத்தியர்கள் குழு தெரிவித்துள்ளது. எனவே அவர் தொடர்ந்து இங்கு தங்க முடியாது என்று கூறியுள்ளது.

நியூசிலாந்து குடியேற்றத் துறையின் இந்தப் புதிய உத்தரவால் அல்பட்டும் அவரது மனைவியும் கடும் ஏமாற்றம் மற்றும் வருத்தத்தில் உள்ளனர்.

இது பற்றி அவரது மனைவி கூறுகையில் அல்பட் இங்கு வந்தபோது 160 கிலோ எடையுடன் இருந்தார். ஆனால் வந்த பின்னர் கடுமையாக போராடி 30 கிலோ வரை குறைத்தார். அப்போது விட்டு விட்டு எடை குறைந்த பின்னர் வெளியேறச் சொல்வது என்ன நியாயம் என்றார்.