கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம் முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன.
இதற்கு ஒரு நாளில் 30 நிமிடங்களாவது நாம் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும்.
இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 30 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.
வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை(Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம்.
ஆனால் ஒன்று நிச்சயம் எவராக இருப்பினும் நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.
தற்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது.ஏனெனில் இந்நோயை சிகிச்சை மூலமாக கட்டுப்படுத்தக் கூடும். சில சந்தர்ப்பங்களில் பூரணமாக குணப்படுத்தவும் முடியும் என்பதனாலேயே.
மனநோய் வெட்கப்பட வேண்டிய ஒன்றானதாகவோ குழப்பத்தையும், திகைப்பையும் உண்டு பண்ண கூடியதாகவோ தற்காலத்தில் எண்ணப்படுவதில்லை.மேலும் ஆபத்தை தருவது, தீராதது, சமூகத்தின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்பட்ட வேண்டிய நோய் மனநோய் என்பதும் உண்மையன்று.
மன நோயும், அறிவுத்திறன் குறைவும் ஒன்று என்று கொள்ளலாமா?
மன நோயும் அறிவுத்திறன் குறைவும் ஒன்றேயல்ல. அவை, வேறானவை. அறிவுத்திறன் குறைந்தவர்களிடையேயும் சில மன நோய்களும் ஏற்படுவதுண்டு. ஆனால் மனநோய் உள்ளவர்கள் யாவரும் அறிவுத்திறன் குன்றியவர்கள் ஆகமாட்டார்கள்.
அறிவுத்திறன் குன்றியவர்கள் கற்றுக் கொள்வதிலே சிரமும், தாமதமும் உள்ளவர்களாயிருப்பர். பொதுவாகவே குழந்தைப் பருவத்திலேயே இந்தக் கோளாறு இருப்பதைக் கண்டறியக் கூடும். இது மிகவும் கடுமையானதாகவும் அல்லது மத்தியதரமானதாகவும் இருக்கக்கூடும்.
இந்தக் கோளாறுக்கு காரணங்கள் மூளை பாதிக்கப்படுதல், சினை அணுக்களில் சீரழிவு, வளர்ப்பு ஏதுக்களில் கெடுதி முதலியனவாகும். ஆரம்பத்திலேயே அறிவுத்திறன் அளவை நிச்சயித்து அதற்குத் தகுந்த, உரிய பயிற்சிகள் தருவதன் மூலம் அறிவு நிலை குன்றியோர் வாழ்வில் நல்லதொரு திருப்பமும் மாற்றமும் கொண்டு வரக்கூடும்.
மனநோய் பாரம்பரியமாய் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு வழிவழியாய் வரக்கூடுமா?
சில வகையான மனநோய்கள் உதாரணமாக மனமுறி நோய், மன எழுச்சி நோய் போன்றவை சில குடும்பங்களில் அதிகமாய் தோன்றி பாதிக்கின்றன. பாரம்பரியக் கோளாறே இந்நிலைக்கு அடிப்படையாய் ஆதரவாய் இருக்கிறது எனக் கூறலாம்.
பாரம்பரியத்தால் வரும் தீங்கு என்னவென்றால் மனநோய் தோற்றுவாய்க்கு எளிதில் ஆளாக்கும் தன்மையை நிலையை உற்பத்தியாக்குவதேயாம்.எனினும், மற்ற பல காரணங்களும் நோய் விளைவுக்கு அவசியமாயிருப்பதனாலே ஓரிருவரைத் தவிர அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலோர் இந்த நோயால் தாக்கப்படுவதில்லை.
மனநோய் தொற்று நோயா?
மனநோய் தொற்று நோய் அல்ல. அம்மை நோய், மண்ணை கட்டி நோய், அம்மை போன்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றி பரவும் நோய் மனநோய் அல்ல.
மன நோயாளர் வன்முறையாளர்கள்?
சமூகத்தில் உள்ள பெரும்பாலரை விட மன நோயால் பாதிக்கப்பட்டவர், வன்முறைகளை கையாளுபவர் என கொள்ளுதல் சரியானதாகாது. எனினும் மன நோயாளர் அச்சமும் ஐயுறவும் கொண்டிருப்பதாலேயே குழப்பத்தோடு பயற்திற்கேற்ப சமூகத்தை பாதிக்கும் செயல்கள் ஆற்றுகிறார்கள் என கொள்ளலாம். அப்பேற்பட்ட சந்தர்ப்பங்களில் சமூகப் பாதுகாப்பிற்காகவும் நோயாளியின் நலனையும் கருதி அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமேற்படுகிறது.
மனநோயாளிகளின் நலன்களைக் கருதி அவர்களை பூட்டி பாதுகாப்பில் வைக்க வேண்டுமா?
பெரும்பாலான மன நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படாமலேயே வெற்றிகரமாய் குணப்படுத்தப்படுகிறார்கள். அதனால் அனேகருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய அவசியமில்லாமல் போய் விடுகிறது.
எனினும் ஒரு சிலர் நோயின் கொடுமையால் மிகவும் பாதிக்கப்படுவதன் நிமித்தமாக மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சையும், ஆதரவும் பெற வேண்டியிருக்கிறது. என்றாலும், பெரும்பாலோர் முரட்டுத்தனமாக இருப்பதில்லை. மனநோய் மருத்துவமனையில் பெரும்பாலான அறைகள் பூட்டி வைக்கப்படுவதில்லை. மிகச் சிலரையே சமூகப் பாதுகாப்பிற்காகவும், நோயாளியின் சொந்த பாதுகாப்பிற்காகவும் பூட்டி வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
மனநோயை குணப்படுத்த முடியுமா?
மக்களில் பலர் தங்கள் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை தான் மனநோயால் அவதியுற்று பின்னர் எப்போதுமே அந்நோயால் பாதிக்கப்படாமலே இருக்கின்றார்கள். ஒருசிலர் பலதடவை மறுபடியும் மறுபடியுமாக மனநோயால் தாக்கப்படுகிறார்கள்.
மிகச் சிறுபான்மையினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் மனநோயால் கஷ்டப்படுகிறார்கள். உடலைப் பற்றிய நோய்களை போலவே மன நோய்களிலும் மறுபடியும் பிணிவாய்ப்படுதல் என்பது சகஜமாய் நிகழக்கூடியது தான். மேலும் பல வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடையலாம்.
குடி போதையில் பொலீஸிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் தனது 5 மாத குழந்தையை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார் அமெரிக்க தாய் ஒருவர்.
அமெரிக்கா இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இம்பர்லின் பலோனஸ் என்ற பெண்ணுக்கு இசாக் என்ற 5 மாத குழந்தை இருந்தது. ஏற்கனவே குடி போதைக்கு அடிமையான இம்பர்லின், சம்பவத்தன்றும் தன் குழந்தை இசாக்கை தூக்கிக் கொண்டு குடிக்கச் சென்றுள்ளார்.
அமெரிக்காவில் குடிக்கும் இடங்களுக்கு குழந்தைகளை தூக்கி வரக் கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. அப்படி அதை மீறுபவர்களின் குழந்தையை போலீஸார் தூக்கிச் சென்று விடுவர். இந்தச் சட்டத்தை நன்கு அறிந்திருந்தும், இம்பர்லின் தனது 5 மாத கைக்குழந்தை இசாக்கை, கூக்கவுண்டியில் உள்ள லிகைஸ்ன் சதுக்கத்தில் ரோட்டோர ஓட்டலுக்கு அழைதுச் சென்றுள்ளார்.
வயிறு முட்ட குடித்து விட்டு இம்பர்லின் புறப்பட தயாரான போது எதிர்பாராத விதமாக அங்கே போலீஸ் வந்துவிட்டது. குழந்தையும் அழத் தொடங்கியதால் என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் அருகிலிருந்த கத்தியை எடுத்து குழந்தையை 21 இடங்களில் குத்தியுள்ளார் இம்பர்லின். அத்தோடு நில்லாமல் கழுத்தையும் நெரித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இசாக் பரிதாபமாக பலியானான். இதனால், இம்பர்லினை கைது செய்தது போலீஸ். தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த தாய்(பேய் ).
இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் அவரது பதவி விலகலை ஏற்க மறுத்துவிட்டது. அவரது வழிகாட்டல் கட்சிக்கு இப்போதுதான் முன்னரைவிட கூடுதலாக தேவைப்படுகிறது என்று கட்சியின் அதியுயர் குழுவான நாடாளுமன்ற விவகாரங்கள் குழு கூறியுள்ளது.
கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்திலேயே அத்வானியின் ராஜினாமாவை நிராகரிப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், கட்சியின் தலைவர் என்கிற முறையில் இந்த ராஜினாவை எந்த சந்தர்பத்திலும் தன்னால் ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
ஆனாலும் தனது முடிவை மாற்றி கொள்ள அத்வானி மறுத்துவிட்டார் என்று டில்லியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
கட்சியின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அத்வானியின் முடிவு திங்கட்கிழமை காலை வெளியாகியது.
கட்சி போகும் திசையைப் பற்றி தான் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கான திட்டங்களையே முன்கொண்டு செல்வது குறித்து தான் கவலை அடைவதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அத்வானி கூறியிருக்கிறார்.
பாஜவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி, இந்த வார இறுதியில் கோவாவில் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு செல்லவில்லை. அவர் தான் உடல் நலமில்லாது இருப்பதாகக் கூறியிருந்தார்.
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியவரை நம்பிய பல நூறு பேர் ஏமாற்றமடைந்துள்ளனர். வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லலாம். விசா கிடைக்கும் என்ற ஆவலோடு வந்த வட இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வவுனியா நகர வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.
புருணை நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரலாம் எனக் கூறிய வேலை வாய்ப்பு முகவர் ஒருவரை நம்பி, மூன்று மாதங்களுக்கு முன்னர், ஐம்பதினாயிரம் ரூபாய் பணத்தைக் கட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.
“திங்களன்று விசா தருவதாகக் கூறி நேர் முகப் பரீட்சைக்கு வருமாறு வவுனியா ஈரப்பெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றிற்கு வருமாறு எங்களை அழைத்திருந்தார்கள். காலையிலேயே அங்கு சென்று காத்திருந்தோம். வருவதாகக் கூறியவர்கள் வரவே இல்லை. மதியத்தின் பின்னர் அவர்கள் தொலைபேசிகளையும் துண்டித்துவிட்டார்கள். தொடர்பு கொள்ள முடியவில்லை. நாங்கள் பணம் செலுத்திய மதவாச்சி நகரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று விசாரித்த போதிலும் சரியான பதில் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
ஜயசிங்க என்பவர் தான் விமானப் படையில் பணியாற்றுவதாகவும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்தாகவும் ஆனால் அவர் சொன்னபடி ஏதும் நடக்கவில்லை என்றும் அவர்கள் புலம்புகின்றனர்.
“இன்று காலை எட்டு மணிக்கெல்லாம் ஈரப்பெரியகுளத்திற்கு வாருங்கள். விசா தருவோம் என்றார்கள். அங்கு போய் காத்திருந்ததுதான் மிச்சம். ஒருவருமே வரவில்லை. அங்குள்ள ஓட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்கள்.
அங்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய நாங்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போனால், அவர்கள் மதவாச்சியில் பணம் கட்டியபடியால் அந்த பொலிஸ் நிலையத்தில் சென்ற முறையிடுமாறு கூறி அனுப்பி விட்டார்கள். இனி என்ன செய்வது என்று தெரியாமல் நடு வீதியில் நிற்கிறோம்” என்று அவர்கள் கவலை வெளியிட்டனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150 பேர் இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் பணம் செலுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. போர் முடிந்த பிறகும் வடக்குப் பகுதிகளில் வேலை வாயப்புகள் பெரிதாக உருவாகவில்லை. மேலும் அங்கேயிருக்கும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாகவும் பலர் இங்கையில் இருந்து வெளியேற முற்படுகின்றனர்.
இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடான வழிகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் டில்லி நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வினய் குமார் கண்ணா காவல்துறையினர் மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
ஸ்ரீசாந்த், அக்னித் சவான் மற்றும் அஷோக் சண்டிலா ஆகியோர், ‘மராட்டிய மாநிலச் சட்டமான திட்டமிட்டு குற்றங்களைச் செய்யும் தடுப்புச் சட்டத்தின் கீழ்’ குற்றவாளிகள் என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இல்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்டமிட்டு குற்றங்களைச் செய்யும் கும்பல்களுடன் இந்த மூன்று வீரர்களுக்கும் தொடர்பு இருந்தது என்று கூறுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
பின்னடைவு
நீதிதியின் பிணை உத்தரவும், கண்டனங்களும் வழக்கை விசாரித்து வரும் டில்லி காவல்துறையினருக்கு ஒரு பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.
இந்த மூன்று விரர்கள் தவிர ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகளீன் கீழ் கைது செய்யப்பட்ட 14 புக்கிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ஷகீல் போன்றவர்களுடன் இவர்களுக்கு தொடர்புகள் இருந்தன என்று கூறி மராட்டிய மாநிலச் சட்டத்தை பயன்படுத்தியதற்கு போதிய காரணங்கள் மற்றும் நீதிமன்றத்துக்கு திருப்தியை ஏற்படும் வகையிலான ஆவணங்களையும் காவல்துறையினர் சமர்பிக்கவில்லை என்றும் நீதிபதி தமது உத்தரவில் சுட்டிகாட்டியுள்ளார்.
பிணை வழங்கப்பட்டுள்ள அனைவரும் தமது கடவுச் சீட்டுகளை நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் இந்தியாவுக்குள் பயணத்தை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பன் மற்றும் விந்து தாரா சிங் ஆகியோர் ஏற்கனவே பிணையில் வெளிவந்துள்ளனர்.
இன்று சென்னை விமான நிலையத்தில் பறவைகளால் விமானங்கள் தரையிறங்க முடியாது வானிலேயே பல நிமிடங்களுக்கு வட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை விமான நிலையத்திற்கு ஏராளமான பன்னாட்டு, உள்நாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. அத்துடன் விமான நிலைய பகுதியில் ஏராளமான பறவைகள் பறக்கின்றன.
பறவைகள் கூட்டமாக பறக்கும்போது சில பறவைகள் விமானத்தின் மீது மோதுவதால் அதன் கண்ணாடி உடையவும் இயந்திரங்கள் சேதமடையவும் வாய்ப்பு உருவாகிறது. இதனால், விமானங்கள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னைக்கு வந்த ஒரு விமானத்தின் இயந்திரத்தில் பறவைகள் சிக்கிக் கொண்டன.
இதனால் அந்த விமானம் ஓடுபாதையிலேயே நிற்கும் சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் தரையிறங்க இயலவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்கள் விரைந்து சென்று இயந்திரத்தில் சிக்கிய பறவைகளை அகற்றினார்கள்.
இதற்குள் சென்னை விமானத்தில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் கீழே இறங்க முடியாமல் வானத்திலேயே வட்டமிட்டன. இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் 50 நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்தது. நிலைமை சரியானபிறகே சரியாக 4.20 மணிக்கு தரையிரங்கியது.
இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்கள் வருவதிலும் புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து பறவைகளை வெடி போட்டு கலைத்தனர். அதன்பிறகு விமான போக்குவரத்து சேவை வழக்கம்போல் நடந்தது.
இன்றைய தினம்நடைபெற்றுவரும் வவுனியா, புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரதான சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தாலிபன் இயக்கத்தினர் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் அந்நாட்டின் எல்லா பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆப்கன் இராணுவ முகாமுக்கு அருகே இருந்த கட்டிமுடிக்கப்படாத- 5 மாடிக் கட்டிடமொன்றை ஆயுததாரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துகொண்டு இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
மூன்று மணிநேரம் இந்த மோதல் நீடித்துள்ளது. குண்டுச் சத்தங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்துள்ளது.
ஆப்கன் பாதுகாப்புப் படையினரும் தாலிபன் ஆயுததாரிகளும் இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி கடுமையான சண்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் படையினர் 5 தாலிபன் ஆயுததாரிகளை இதன்போது சுட்டுக்கொன்றதாக காபூல் காவல்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் இருவர் தம்மைத்தாமே வெடிக்க வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தமது தரப்பில் ஆட்சேதங்கள் இல்லையென்றும் ஆப்கன் பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.
சர்வதேச படைகளின் உதவியின்றி ஆப்கன் படைகளே தனியாக இந்தத் தாக்குதலை முறியடித்துள்ளதாக காபூலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
முஸ்லிம் நாடான இந்தோனேசியா அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலை ஒன்றை பரிசளித்துள்ளது.
இந்தோனேசியாவின் மக்கள் தொகை 25 கோடி. இதில் மூன்று சதவீத மக்கள் இந்துக்கள். இதன்படி முஸ்லிம் நாடான இந்தோனேசிய சமீபத்தில், அமெரிக்காவுக்கு 16 அடி உயரமுள்ள சரஸ்வதி சிலையை பரிசளித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் இந்த சிலை தற்போது வைக்கப்பட்டுள்ளது. பாலித்தீவைச் சேர்ந்த ஐந்து சிற்பிகள் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர்.
முறைப்படி இன்னும் இந்த சிலை, திறப்பு விழா நடக்கவில்லை. அதற்குள்ளாக அந்த வழியே செல்பவர்கள் இந்த சிலையை பார்த்து வியக்கின்றனர்.
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் விக்ரமன் தலைமையிலான ஒரு அணியும் நடிகரும் இயக்குனருமான விசு தலைமையிலான ஒரு அணியும் போட்டியிட்டது.
இதில் விக்ரமன் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விக்ரமனும் செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு வி.சேகரும் போட்டியிட்டனர்.
மேலும், துணை தலைவர் பதவிக்கு பி.வாசுவும் , கே.எஸ்.ரவிக்குமாரும் போட்டியிட்டனர். இணை செயலாளர்கள் பதவிக்கு லிங்குசாமி, சண்முக சுந்தரம், ஏகம்பவாணன், பேரரசு ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக திருமலை உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.
விசு தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு விசுவும், செயலாளராக ஆர்.சுந்தர்ராஜன், பொருளாளர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. துணை தலைவராக மங்கை அரிராஜன், அரவிந்த்ராஜ் ஆகியோரும் இணை செயலாளர்களாக செய்யாறு ரவி, வி.பிரபாகர், ஜெய்பிராகஷ், கண்ணன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ரவிமரியா உள்ளிட்ட 12 பேரும் போட்டியிட்டனர்.
2700 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்திற்கான தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் வாக்களித்தனர்.
மேலும் நடிகர்கள், சத்யராஜ், பார்த்திபன், எஸ்.வி.சேகர், ராமராஜன் ஆகியோரும் படம் இயக்கி உள்ளதால் அவர்களும் வாக்களித்தனர். இந்த வாக்குபதிவு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்பட்டன.
இதில் இயக்குனர் விக்ரமன் 716 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விசு 556 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். மற்ற பதவிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.
இதேவேளை நடிகர் ரஜினின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இத்தேர்தலில் வாக்களிக்க வந்தார். ஆனால் உள்ளே நுழைந்த அவரை தேர்தல் அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதுகுறித்து காரணம் கேட்டதற்கு, இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக நீடிப்பதற்கு வருடா வருடம் ரூ.600 சந்தா செலுத்த வேண்டும்.
இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் இந்த தொகையை செலுத்தவில்லையாம். எனவே அவர் வாக்களிக்க அனுமதி கிடையாது எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தனுஷை வைத்து ‘3’ என்ற படத்தை இயக்கினார். தற்போது கடல் படத்தில் நடித்த கௌதம் கார்த்திக்கை வைத்து புதிய படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் செரிலாக்ஸ் சாப்பிட்டோ பாரக்ஸ் குடித்தோ வளர்ந்தவன் இல்லை. இளம் வயதில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஏழ்மையில் வாடியவன் என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ். தனுஷின் மரியான், ராஞ்ஜ்ஹனா படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதையொட்டி அவர் பேட்டிகள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தன் இளமை நாட்களை நினைவு கூர்ந்துள்ளார்.
ஏழ்மை..
அவர் கூறுகையில் அடிப்படையில் ரொம்ப ஏழ்மையான குடும்பம் எங்களுடையது. என் இளமை மிகுந்த வறுமையில் கழிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் என் பெற்றோர் சென்னைக்கு வந்தனர். என் அப்பா ஒரு மில்லில் மாதம் ரூ 15 கூலிக்கு வேலை செய்தார். நான் செரிலாக்ஸோ பாரக்ஸோ குடித்து வளரவில்லை. அதிகபட்ச நல்ல உணவு அக்கம்பக்கத்து வீடுகளில் கொடுத்த தயிர்சாதம்தான்.
அண்ணன் பட்ட கஷ்டம்..
நானாவது பரவாயில்லை என் அண்ணன் வெறும் தண்ணீரைக் குடித்து பசியைப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அதனால் என் அம்மாவுக்கு இயல்பாகவே அவர் மீது பாசம் அதிகம். என் தந்தை அதற்குள் சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் இயக்குநராகவும் ஆகிவிட்டார்.
ஹீரோவானது எப்படி?
என்னுடைய 16வது வயதில் அப்பா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நான்கு சிறுவர்களில் ஒருவர் கடைசி நேரத்தில் விலகிக் கொள்ள அந்த வேடத்தில் நடிக்க 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னை கூட்டிவந்துவிட்டார். முதல் படம் வெளியாகி நன்றாக ஓடினாலும் கூட என்னை ஒரு ஹீரோவாக யாரும் மதிக்கவில்லை. ஆனால் காதல் கொண்டேன் வந்தது. ஒரே நாளில் ஹீரோவாகிவிட்டேன்.
ரஜினியுடனான உறவு
எனக்கும் ரஜினிசாருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களுடைய உறவு சாதாரணமானதாகவும், நல்ல மதிப்புடையதாகவும் இருக்கிறது. அவருக்கு ஒரு படம் பிடித்து விட்டால் மருமகனாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி அவரே முன் வந்து பாராட்டுவார்.
எப்போதும் ரஜினி ரசிகன்
காதல் கொண்டேன் படம் திரையரங்கில் நல்லா ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் ரஜினி சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. என்னை அவரின் பண்ணை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்படியே நான் அங்கு சென்றேன். அங்கு ரஜினி சார் என்னை வெகுவாக பாராட்டினார். நான் எப்போதுமே ரஜினிசாருடைய ரசிகன்தான். அது எப்போதும் எந்த வாழ்க்கையிலும் மாறாது.
அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
29- வயதான எட்வர்ட் ஸ்நோவ்டென் என்ற இந்த இளைஞன் அமெரிக்க உளவுத்துறையான சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர்.
அமெரிக்காவின் மிகவும் ரகசியமானதும் வெளியிடப்பட முடியாததுமான மிக நுணுக்கமான உலக கண்காணிப்பு செயற்திட்டத்தை அம்பலப்படுத்தியதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். கோடிக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய உலகளாவிய நாளாந்த தொடர்பாடல்களைக் கண்காணிக்கின்ற புலனாய்வு பொறிமுறை செயற்திட்டத்தையே அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.
அமெரிக்க உளவுத்துறையினர் அரச அதிகாரத்தை சீர்குலைத்து ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் த கார்டியன் நாளிதழின் இணையதளத்துக்கு அனுப்பியுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
மக்களின் அந்தரங்க வாழ்க்கையையும் இணையதள சுதந்திரம் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களையும் அழிப்பதற்கு தான் இடமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஒபாமா இவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஸ்நோவ்டென் விசனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் தன்மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பார்கள் என்றும் தான் தற்போது ஹொங் ஹொங்(Hong Kong) இல் இருப்பதாகவும் பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள எந்தவொரு நாட்டிலும் தஞ்சம் கோரவுள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அமெரிக்க நீதிவிசாரணைத் துறை அறிவித்துள்ளது.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட தவறிட்கு, சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது நாட்டின் தேசிய கீதத்திற்கு பதிலாக ஹிந்தி பாடல் ஒன்று ஒலிபரப்பப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்பட்டுத்தியுள்ள நிலையில் இது தவறுதலாக நடந்த விபத்து ஒன்று என சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐசிசி பணிப்பாளர் கிரிஸ் ரெடிலி எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உரிய அதிகாரிகளிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.
தமன்னா அஜித் படத்தில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை. அதில் எனக்கு கவர்ச்சியான வேடம்தான் என்கிறார் தமன்னா. தெலுங்கிலும் இந்தியிலும் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணம் எனும் அளவுக்கு கவர்ச்சி காட்டும் நடிகைகள் தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் கவர்ச்சி காட்டுவதில் ஏகத்துக்கும் தயங்குவது வழக்கம்.
அந்த நடிகைகள் வரிசையில் தமன்னாவும் சேர்ந்துவிட்டதாக தயாரிப்பாளர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். நீண்ட நாளைக்குப் பிறகு தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில் குடும்பப் பாங்காகத்தான் நடிப்பேன் என்று தமன்னா அடம்பிடித்ததாகக் குற்றம்சாட்டினர்.
இதற்கு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார் தமன்னா. அவர் கூறுகையில், “நான் கவர்ச்சியாக நடிக்க மறுக்கவில்லை. காட்சிக்கு அவசியம் என்றால் கவர்ச்சியாக நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். மொழி வித்தியாசம் பார்ப்பதில்லை. அஜித் படத்தில் குடும்ப பாங்காகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்ததாக தவறான வதந்திகள் பரவியுள்ளன.
என் உடலுக்கு கவர்ச்சியான உடைகள் அணிவது தான் பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே பல படங்களில் மழைக் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். இனியும் கவர்ச்சியாகவே நடிப்பேன்,” என்றார்.
வவுனியா சேமமடு குளக்கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் தடம்புரண்டதில் அதன் சாரதி நசியுண்டு உயிரிழந்துள்ளார்.
இதன் சாரதியான முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த 50 அகவையுடைய ஆறுமுகம் சுந்தரலிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட இவர் இடம்பெயர்ந்து வவுனியாவில் வசித்து வந்துள்ள நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.