அவுஸ்திரேலிய அணியின் தலைவராக தொடர்ந்தும் கிளார்க்..!

clarkஅவுஸ்திரேலிய அணியின் தலைவராக மைக்கல் கிளார்க் தொடர்ந்தும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 -0 என்ற ஆட்டக்கணக்கில் இழந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் அணியின் திறமை வெளிப்பாட்டு முகாமையாளர் அடம் பிரேசர் இதனைக் கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள இந்தியாவிற்கான கிரிக்கெட் விஜயம் தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் மூவர் அடங்கிய அணியின் கண்காணிப்பாளர் குழுவில் அடம் பிரேசரும் அடங்கியுள்ளார்.

இந்த நிலையில் மைக்கல் கிளார்க் உலகத் தரம் வாய்ந்த வீரர் எனக் கூறியுள்ள அடம் பிரேசர், அவரின் தலைவர் பதவிக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்னல் தாக்கி இளம்பெண் பலி – மாங்குளத்தில் சம்பவம்..!

vavuniyaவவுனியா, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸர் தெரிவித்தனர்.

அவர் தனது வீட்டின் கிணற்றடியில் இருந்தவேளை மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதான கிருஷ்ணா நிர்மலாதேவி என பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மாங்குளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை பெண்ணை குளிரூட்டியில் வைத்து கொலை செய்ய முயற்சி: இலங்கைத் தூதரகம் மறுப்பு..!

fridgeகுளிரூட்டி இயந்திரத்தில் வைத்து தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக இலங்கை பெண் ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டை சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது.

நிலங்கெதர தயாரத்ன என்ற இந்த பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சவூதிக்கு தொழிலுக்காக சென்றுள்ளார்.

இந்தநிலையில் தமது எஜமானர் தம்மை கொலை செய்யும் நோக்கில் குளிரூட்டியில் வைத்து பூட்டியதாக அவர் இலங்கையில் உள்ள தமது கணவருக்கு அறிவித்திருந்தார்.

எனினும் இது தொடர்பில் சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த பெண்ணின் உடம்பில் சில எரிகாயங்கள் உள்ள போதும் அவர் நலமாக உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

வீட்டைச்சுற்றி மீன் தொட்டி மதில்!!(படங்கள் )

துருக்கியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டுக்குரிய சுற்று மதிலை மிக நீண்ட மீன் தொட்டியைக் கொண்டு உருவாக்கியுள்ளார்.

சுமார் 50 மீற்றர் நீளமான இந்த மீன் தொட்டியை உருவாக்குவதற்கு 21,000 அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளார்.

பணம் பலதையும் செய்யும் என்பதற்கு இந்த மீன் தொட்டி மதிலும் ஒரு உதாரணம்.

f1 f2 f3 f4 f5 f6 f7

சத்யராஜ் படத்தை முடக்கிய தலைவா தயாரிப்பாளர் : இயக்குனர் பரபரப்பு புகார்!!

sathiyaraj

உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் கலவரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அந்த மனுவில் தற்போது சத்யராஜை கதாநாயகனாக வைத்து கலவரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் எங்களை இரண்டு வாரங்களுக்கு முன் நேரில் அழைத்து பேசினார்.

அப்போது எங்களுடைய தலைவா படத்தின் பிரச்னையில் நாளை முடிவு தெரிந்து விடும். தெரிந்ததும் தலைவா படத்தை உடனே வெளியிடுகிறோம். உங்களுடைய கலவரம் படம் வெளியிட்டால் எனது தலைவா படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது.

எனவே நானே உங்களுடைய படத்தினை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன். ஒப்பந்தம் தயார் செய்து கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார்.

அதன்படி நேற்று ஒப்பந்தத்தோடு சந்திரபிரகாஷ் ஜெயினை சந்திக்க சென்றோம். அதற்கு அவர் எங்களை சந்திக்க மறுத்ததுடன், எங்களை தாழ்த்தியும் அவமானப்படுத்தியது மட்டுமில்லாது உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி படத்தை வாங்க மறுத்து விட்டார்.

படத்தை வெளியிடாததால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நானும் எனது தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.

எனவே இந்த பிரச்சினையில் போலீசார் தலையிட்டு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

என்னுடைய படங்களில் இனி லுங்கி டான்ஸ் இருக்கும் : தனுஷ்!!

danush

தனுஷ் சமீபகாலமாக சென்டிமென்ட் நிறைய பார்க்கும் மனிதராக மாறி உள்ளார். அவர் இப்போதெல்லாம் சினிமா விழாக்களுக்கு வேஷ்டி, சட்டை அணிந்துதான் வருகிறார்.

அவரிடம் ஏன் வேஷ்டி, சட்டையுடன் கலந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் ஒரு தமிழன். தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிவதில் பெருமைப்படுகிறேன் என்று கூறி அனைவரின் வாயையும் அடைத்து விடுகிறார்.

சினிமா விழாக்கள் தவிர்த்து இனிமேல் தான் நடிக்கும் படங்களிலும் ஒரு காட்சியிலாவது வேஷ்டி, சட்டை அணிந்து நடிக்கவேண்டும் என தனுஷ் முடிவு செய்துள்ளார். வேஷ்டி, சட்டையை தவிர தான் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டுக்காவது லுங்கி கட்டி ஆடுவது எனவும் தீர்மானித்துள்ளார்.

இதுகுறித்து தனுஷ் கூறும்போது, என்னுடைய பல படங்களில் லுங்கி கட்டி நடித்துள்ளேன். அதிலும் குறிப்பாக ஆடுகளத்தில் ஒரு பாட்டு முழுவதும் லுங்கி கட்டித்தான் ஆடினேன்.

அது பெரும்பாலானவர்களுக்கு பிடித்திருந்தது. அந்த டான்ஸை கிராமத்து மக்கள் பார்த்துவிட்டு என்னை தங்களில் ஒருவராகவே நினைத்தார்கள் என்று கூறினார்.

அதனால் சென்டிமென்டாக இனிவரும் படங்களில் ஒரு பாடலுக்காவது லுங்கி கட்டி ஆடுவது என தனுஷ் முடிவு செய்துள்ளார்.

கோலிவுட்டின் டொம் க்ரூஸ் அஜீத் : ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் புகழாரம்!!

ajith

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஆரம்பம் படத்தின் ஒவ்வொரு சண்டைக் காட்சிகளிலும் ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அஜீத். இதனால் பலமுறை விபத்துகளில் சிக்கியும், கடைசிவரை டூப் போடாமலேயே துணிச்சலாக நடித்துள்ளார்.

இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஹாலிவுட்டை சேர்ந்த லீ விட்டேக்கர் கூறும்போது,

அஜீத் ஒரு சாகசக்காரர். கமலுக்கு அடுத்தபடியாக கடினமாக உழைக்கக்கூடிய நடிகர். ஆரம்பம் படத்தில் நடித்தபோது, அவரது உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டபோதும் அவர் மனம் தளரவில்லை. மீண்டும், மீண்டும் கடினமான ஆக்ஷன் காட்சிகளில் தில்லாக நடித்தார். அப்போதெல்லாம் என் கண்களுக்கு ஹாலிவுட்டின் டொம் க்ரூஸ் போன்று தெரிந்தார் என்று கூறியுள்ளார்.

தெலுங்கில் விக்ரமசிம்ஹா வாக மாறிய கோச்சடையான்!!

kochadayan

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். முதன்முறையாக மோஷன் கேப்சர் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலரை தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஹாலிவுட்டில் தயாரான அவதார் படத்தைப் போல இந்த படத்திலும் விஷுவல் எபக்ட்ஸ் பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள்.

இப்படத்தின் பின்னணி இசையை லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் முடித்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான. தமிழ், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் வெளிவர உள்ளதாம். அதற்கான டப்பிங் பணிகளில் தற்போது இந்த படக்குழு களமிறங்கியுள்ளதாம். விரைவில் படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். இப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி நடிகை சோனம் கபூர் தலைமையில் நடந்த கற்பழிப்புக்கு எதிரான ஊர்வலம்!!

sonam

மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு புகைப்பட நிருபராக பணிபுரிந்த 23 வயதுப் பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடந்த 22ம் திகதி கற்பழித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இது போன்ற தொடர் நிகழ்வுகள் பொதுமக்களிடையே கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி குறித்து, பல ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் தங்களின் கோபத்தை இணையதளத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.அவர்களில் சோனம் கபூரும் ஒருவராவார்.

இவர் நடிகர் அனில் கபூரின் மகளாவார். முன்னாள் மொடல் அழகியான இவர் பிரான்ஸ் நாட்டு அழகுப் பொருட்கள் விற்பனை நிறுவனமான லோ ரியலின் செய்தித் தொடர்பாளராக இருப்பதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார்.

மும்பையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்காக தான் மிகவும் வெட்கக்கேடாக உணருவதாகவும், இது ஒரு கோழைத்தனமான செயல் என்றும் சோனம் கபூர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை எதிர்த்து மும்பையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இவரது தலைமையில் ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் உட்பட பலர் ஒரு ஊர்வலம் நடத்தினர்.

ஜோகர்ஸ் பூங்காவிலிருந்து கார்ட்டர்ஸ் சாலையில் இருந்த திரை அரங்கு வரை நடந்து சென்ற இவர்கள் கற்பழிப்புக்கு எதிரான இந்தியா என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் தாங்கிச் சென்றனர்.

பாடகி சோனா மகோபத்ரா,கன்னட நடிகை ரேஷ்மா டிசோஸா,டிவி நடிகர் கரன்வீர் போரா, டீஜே சிது, குஷால் பஞ்சாபி, தலிப் தஹில்,பாபா சித்திக் போன்றோர் இவருடன் இணைந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பயங்கரவாதச் செயற்பாடுகளில் எவரும் ஈடுபட அனுமதியில்லை : கோட்டாபாய ராஜபக்ச­!!

kotapaya

இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ச­ தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாட்டின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடம ளிக்கப் போவதில்லை. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தவிருப்பவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இப்படியான ஆபத்து ஏதும் அங்கு இல்லை. பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை படையினர் எடுப்பர்.

யாழ்ப்பாணத்தில் 99 வீதம் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். அங்கு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே பாகிஸ்தான் தீவிர வாதிகளினால் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் எப்போதும் ஏற்படாது. எனினும் இந்திய கரையோரங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

வளைகுடா நாடுகளுக்கும் ஒருங்கிணைந்த விசா!!

Flagsஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 25 நாடுகளுக்கும் உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் சேர்த்து தற்போது செங்கன் விசா என்ற நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம் இந்த நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவோர் ஒரு விசா அனுமதி பெறுவதன்மூலம் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவர முடியும். இதனால் பயணிகளுக்கு காலவிரயம் ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன் ஐரோப்பாவின் பெரும்பான்மையான நாடுகளுக்கு சென்றுவர இது எளிதான நடைமுறையாகவும் இருக்கிறது.

இதே போன்றதொரு பொதுவான விசா நடைமுறையை வளைகுடா நாடுகளுக்கும் கொண்டுவர வளைகுடா கூட்டுறவு கவுன்சில் முடிவு செய்துள்ளது. வரும் 2014ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படும் இந்தத் திட்டத்தால் பயணிகளின் பயண விதிமுறைகள் எளிதாக்கப்படும் என்று கவுன்சிலின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசு ஆகிய நாடுகள் இந்தக் கூட்டுறவு கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ளன.
இந்தப் புதிய விதிமுறை மூலம் ஒற்றை நுழைவு விசா பெறும் பயணிகளுக்கு ஒரு மாதத்திற்கான அனுமதியும் பன்மடங்கு நுழைவு விசா பெறுபவர்களுக்கு ஒரு வருடத்திற்கான அனுமதியும் வழங்கப்படும் என்று கூட்டுறவு கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆயினும், இந்த விசாவினைப் பெறுவதற்கு போதுமான நிதி ஆதாரங்களுக்கான ஆவணங்களும் அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கவுன்சில் அறிவித்துள்ளது. எதிர்நோக்கப்படுகின்ற சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டபின் வரும் 2014ம் ஆண்டின் மத்தியில் இந்தப் புதிய நடைமுறை செயல்படுத்தப்படலாம் என்று கூட்டுறவு கவுன்சில் கருதுகின்றது.

இதனால் தற்போதைய நடைமுறையான ஒரு நாட்டிற்கான விசா அனுமதி தடை செய்யப்பட மாட்டாது என்றும் வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

70 வயது கணவரை தேநீர் கோப்பையால் அடித்துக் கொன்ற மனைவி!

MURDER

70 வயதான தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் அதுவும் தான் வெறுத்து ஒதுக்கிய பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கோபமடைந்த அவரது 61 வயது மனைவி தனது கணவரை தேநீர் கோப்பையால் அடித்தே கொன்று விட்டார். ஜப்பானில்தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது.

டோக்கியோவின் தென் மேற்கில் இந்தத் தம்பதியினர் வசித்து வந்தனர். அந்த தாத்தாவுக்கு வயது 70 ஆகிறது. பெயர் யசுவோ ஹிரோஷே. இவரது மனைவி பெயர் எமிகோ ஹிரோஷே.

அவருக்கு 61 வயதாகிறது. இந்த நிலையில் தனக்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பது எமிகோவுக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் கடும் கோபமடைந்தார். வீட்டில் இருந்த தேநீர் கோப்பையை எடுத்து கணவரை சரமாரியாக அடித்தார்.

பத்துக்கும் மேற்பட்ட முறை தலையில் அடித்ததால் படுகாயமடைந்த யசுவோ, உயிரிழந்து போனார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலீஸார் எமிகோவைக் கைது செய்தனர்.

இரண்டு மகள்களை எரித்துக் கொன்ற தந்தை!!

fire

சுவிஸ்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ்லாந்தின் செமிபோடிலி என்ற இடத்தில் உள்ள இரண்டு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதில் அங்கு குழந்தைகள் காருக்குள் எரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் தந்தை சிறிது கிலோ மீட்டர் இடைவெளியில் ஆபத்தான நிலையில் எரிந்து கிடந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில் இவர் தனது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் தனது குழந்தைகளை அழைத்துச் சென்றுவிட்டதாக இவரது மனைவி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்படாத நிலையில், இவரே தனது குழந்தைகளை வைத்து காரினை எரித்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

திருடச்சென்ற வீட்டில் அசந்த தூக்கிய திருடன்!!

theif

எர்ணாகுளம் அருகே அங்கமாலியில் திருடச் சென்ற வீட்டில் அசதி காரணமாக தூங்கிய திருடனை அப்பகுதியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்த விஸ்வம்பரன்.

கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். ஒரு வாரம் கழித்த பின்னரே திரும்புவோம் என பக்கத்து வீட்டினரிடம் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் விஸ்வம்பரனின் வீட்டில் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருப்பதை பக்கத்து வீட்டினர் கவனித்தனர்.

சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலரை அழைத்துக் கொண்டு அவரை தட்டி எழுப்பினர். திடுக்கிட்டு எழுந்த அந்த நபர் தப்பி ஓட முயன்றார். இதையடுத்து,அப்பகுதியினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

இதில், அந்த நபர் ஐயம்புழா பகுதியை சேர்ந்த கிரீஷ் (35) என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது கடந்த பல மாதங்களாக அப்பகுதியில் திருடியதால் எனக்கு அலுப்பாக இருந்தது. விஸ்வம்பரனின் வீட்டில் ஆள் இல்லை என தெரிந்துதான் உள்ளே வந்தேன். பல நாட்கள் தூங்காமல் கண் விழித்த அசதி காரணமாக தூங்கிவிட்டேன் என்றார்.

இதையடுத்து, அவரை அங்கமாலி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அங்கமாலி பகுதியில் கடந்த பல மாதங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கிரீஷ் திருடியது தெரியவந்தது. விசாரணைக்குப் பின் அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓட்டுனர் இல்லாமல் செல்லும் ரோபோ டாக்ஸி!!

google car

ஓட்டுனரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது.2010ம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அந்நிறுவனம் டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது.

இருந்தாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள் கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால் தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகுள் முடிவு செய்துள்ளது.

இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன் பேசி வருவதாகவும் கூகுளின் வாகனத்துக்கு உதிரிபாகங்களை கான்டினென்டல் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இத்தாலி ஆசிரியரை காதலித்த இலங்கைச் சிறுமி மர்மமான முறையில் தற்கொலை?

Piyumi

இத்தாலியில் மெஸ்ஸினாவை சேர்ந்த 15 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து உள்ளார்.

19 வயது இத்தாலிய ஆசிரியருடன் இவருக்கு ஏற்பட்ட காதலுக்கு பெற்றோர் உடன்படாமையால் இத்துயரம் ஏற்பட்டு உள்ளது.

சடலம் தற்போது மெஸ்ஸினா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது. மரண பரிசோதனையை தொடர்ந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

சிறுமியின் பெற்றோர் 20 வருடங்களுக்கு முன்னர் நீர்கொழும்பில் இருந்து இத்தாலி சென்றவர்கள்.

இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன் இத்தாலி சென்று இருந்தார்.