சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா..

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அபாரமாக துடுப்பெடுத்தாடி 50 ஓவர் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 333 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அதிகபட்சமாக தில்ஷான் 84 ஓட்டங்களையும் குஷால் பெரேரா 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இந்திய அணி சார்பாக புவநேஷ் குமார், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஒரு ஓவர் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பாக விராத் கோலி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 3 சிக்ஸ்சர் அடங்கலாக 120 பந்துகளில் 144 ஓடங்களையும் தினேஷ் கார்த்திக் 81 பந்துகளில் 2 சிக்ஸ்சர் அடங்கலாக 106 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.இலங்கை அணி சார்பாக எரங்க 2 விக்கெட்களையும் திசார பெரேரா சேனாநாயக்க தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்

இன்றைய போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுதாடினாலும் பந்துவீச்சு களத்தடுப்பு இரண்டிலும் தங்கள் திறமையை காட்ட தவறினர். இன்றைய போட்டியில் விட்ட தவறுகளை சரிசெய்து இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவார்களா என பொறுத்திருந்து பார்போம்.

~கேசா~

IPL தலைவர் பதவியில் இருந்து ராஜிவ் சுக்லா ராஜினாமா!

ஐபிஎல் ஆட்ட நிர்ணய விவகாரத்தில் மிகப் பெரிய விக்கெட்டாக அதன் தலைவர் ராஜிவ் சுக்லா வீழ்த்தப்பட்டிருக்கிறார். அவர் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். ஐபிஎல் ஆட்ட நிர்ணய விவகாரத்தில் வீரர்கள், புக்கிகள், பாலிவுட் நடிகர் இதற்கும் மேல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் என பலரும் சிக்கி கைதாகினர்.

இன்னும் எத்தனை தலைகள் உருளுமே என்ற நிலைமையும் உள்ளது. குருநாத் மெய்யப்பன் கைதானால் அவரது மாமனாரான பிசிசிஐ தலைவர் சீனிவாசன் ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் அனேகம் நாளை ராஜினாமா செய்யக் கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனிவாசனுக்கு முன்பாக ஐபிஎல் தலைவரான ராஜிவ் சுக்லா இன்று தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஐபிஎல் ஆட்ட நிர்ணய சர்ச்சைகளைத் தொடர்ந்து தாம் பதவியில் இருந்து விலகுவதாக ராஜிவ் சுக்லா அறிவித்துள்ளார். அவர் ஏற்கெனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் தலைவர் பதவியில் இருக்கமாட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அபாரம்.

சம்பியன்ஸ்  கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அபாரமாக துடுப்பெடுத்தாடினர். 50 ஓவர் நிறைவில் 3 விக்கட்டுகளை  இழந்து 333 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அதிகபட்சமாக  தில்ஷான்  84 ஓட்டங்களையும் குஷால் பெரேரா  82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

 

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசன் 4 நிபந்தனைகள்!

IPL ஆட்ட நிர்ணய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமெனில் 4 நிபந்தனைகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று என்.சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். ஆட்ட நிர்ணய விவகாரத்தில் தமது மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் என்.சீனிவாசன், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பிசிசிஐ செயற்குழு நாளை காலை சென்னையில் கூடுகிறது. முன்னதாக தாம் பதவி விலக வேண்டுமெனில் சீனிவாசன் முன்வைத்திருக்கும் 4 நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.
1) இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தாம் பிரதிநிதியாக இருக்க வேண்டும்
2) தனது செயலர், பொருளாளரை தாமே தேர்வு செய்ய வேண்டும்
3) பிசிசிஐ தலைவர் என்பவர் அமைப்பை சாராதவராக இருக்கக் கூடாது
4)தமக்கு எதிராக ராஜினாமா செய்த ஷிர்கே மற்றும் ஜத்காலே ராஜினாமாவை திரும்பப் பெறவே கூடாது என்பதுதான் சீனிவாசன் விதித்த நிபந்தனைகளாகும்.

நாளைய சென்னை கூட்டத்தில் இந்த நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் சீனிவாசனின் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளபட்டால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.

பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடர்ந்த பொங்கல் விழா 2013

nara

 

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடர்ந்த பொங்கல்  எதிர்வரும் 15-06-2013 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

அன்றைய தினம் இரவு நிகச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் என்பனவும் இடம்பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நேரடி ஒளிபரப்பினை www.vavuniyanet.com இன் ஊடாக பார்க்க முடியும்.

 

இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்ட பிரசுரம்.

notice

 

 

வவுனியா பிரதேச விளையாட்டு விழா 2013

Sports2

வவுனியா பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 2013ம் ஆண்டுக்கான வவுனியா பிரதேச விளையாட்டுப் போட்டிகள் நேற்றைய தினம் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

வருடம் தோறும் நடைபெற்று வரும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் இவ்வருடத்திற்கான சம்பியன்களாக வவுனியா யங்ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் தெரிவானது. இரண்டாவது இடத்தினை வவுனியா நியூலைன்ஸ் விளையாட்டுக் கழகம் கைப்பற்றியது.

11 விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில், சிறந்த மெய்வல்லுனர் கள வீரராக என். சர்மிளனும், சிறந்த மெய்வல்லுனர் கள வீராங்கனையாக வை. மயூரியும் தெரிவு செய்யப்பட்டனர்.

சிறந்த மெய்வல்லுனர் தடகள வீரராக B. பிரசாந்தும், , சிறந்த மெய்வல்லுனர் தடகள வீராங்கனையாக கே. லேகாஷினியும் தெரிவு செய்யப்பட்டனர்.

அதிசிறந்த திறமையை வெளிப்படுத்திய மெய்வல்லுனர் வீராங்கனையாக கே. லோகஷினி தெரிவு செய்யப்பட்டார்.

 

வவுனியா சன் டிவி மீள் ஒளிபரப்பு நிலையம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

SUN-TV

வவுனியாவிலிருந்து இயங்கிய சன் டி.வி மீள் ஒளிபரப்பு நிலையம் வவுனியா நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்தவாரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் யூலை 23ம், 24ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப் பட்டது.

 

மாத்தளை புதைகுழி பற்றி பத்திரிகை அறிவித்தல்கள்- நீதிமன்றம்

Marked dead bodies are seen at a building site in Matale

மாத்தளை அரச மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் காணாமல்போனவர்களின் உறவினர்களைத் தெளிவுபடுத்தும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவித்தல்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு மாத்தளை மாவட்ட நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனது வேண்டுகோளின் படி மாத்தளை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக காணாமல்போனோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

1988-89 ஆண்டு காலப்பகுதியில் காணாமல்போயுள்ள 24 நபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தாம் நீதிமன்றத்தில் மனுக்களை சமர்ப்பித்ததாக அவர் தெரிவித்தார்.

இந்தக் காலப்பகுதியில் மாத்தளைப் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளதாகவும், ஆனால் சட்டவிதிகளின் பிரகாரம் காவல்துறையினர் இந்தப் புதைகுழி தொடர்பாக காணாமல்போனோரின் உறவினர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகை அறிவித்தல்களை இதுவரை வெளியிடவில்லை என்பதையும் தாம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதாகவும் சட்டத்தரணி கூறினார்.

இந்த அறிவித்தல்களை மூன்று மொழிகளிலும் பத்திரிகைகளில் வெளியிடுமாறு மாத்தளை நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை எதிர்வரும் 28-ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும்!

Parliament-Thai-1

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும் என தாய்லாந்து பிரதமர் யின்லக் சின்வாத்ரா தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (31) இலங்கை வந்த தாய்லாந்து பிரதமர்- இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோNது இவ்வாறு கூறினார்.

தமது உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையும் தாய்லாந்தும் ஜனநாயக அரசாட்சி நடத்தும் இரண்டு நாடுகள் என்றபோதும் இரு நாட்டு ஜனநாயக ஆட்சிக்கும் சில சமயங்களில் அழுத்தங்கள் காணப்பட்டன .

இலங்கையும் தாய்லாந்தும் புத்த தர்மத்தை கடைப்பிடிக்கும் நாடுகள் என்ற காரணத்தினால் புத்த தர்மத்தை வலுவடையச் செய்து அணுகூலமான வாழ்க்கையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக மொத்த சனத் தொகையில் 60 வீத மக்கள் ஆசிய வலயத்தில் வாழ்கின்றனர். இந்த மக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய வேண்டும் என தாய்லாந்து பிரதமர் கூறினார்

சாதனையால் வந்த வேதனை!

உலகின் நெருக்கடியான நகரங்களுக்குள் ஒன்றான ஜெனிவா நகருக்குள் 200 km/h வேகத்தில் மோட்டோர் சைக்கில் ஓடி சாகசம் புரிந்த ஒருவருக்கு 18 மாத மூடிய சிறைவாசம் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் 30 மே 2007 இல் நடைபெற்றுள்ளது.

இவரின் இந்த விபரீத சாகசத்தை கீழேயுள்ள கானொளியில் பாருங்கள்!

 

இன்று நாட்டின் பல பகுதிகளில் காற்றுடன் மழை!

rain_copy_copy

 

 

 

 

 

 

நாட்டில் நிலவும் தென்மேற்குப் பருவக் காற்று பலமடைந் திருப்பதால் நாட்டின் பல பாகங்களில் மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காலநிலை நிலவும். இக்காலநிலை தற்பொழுது பலமடைந்திருப்பதால் மேற்கு- சப்ரகமுவ- மத்திய மற்றும் தென்மாகாணம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என வளி மண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.

புத்தளம்- குருநாகல் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதுடன்- மத்திய மாகாணத்தின் தென்சாரல் பகுதிகளில் மழையுடன் கடுமையான காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றுக்காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியா லத்தில் லக்ஷபான பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சியாக 82.5 மில்லி மீற்றர் பதிவாகியிருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றுக் காலை கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக பெரும்பாலான வீதிகள் வெள் ளத்தில் மூழ்கியதால் காலை வேளையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்த வாகன நெரிசல் காரணமாக காலையில் வேலைக்குச் செல்பவர்கள் கடும் சிரமங்களுக்கு முகங் கொடுத்ததுடன்- வாகன நெரிசல்களில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி ஏற் பட்டிருந்தது.

இதேவேளை- குருநாகல் கிரியுல்ல இங்கார டவுல்ல மத்திய கல்லூரியில் மின்னல் தாக்கி 14 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒஸ்கார் பிஸ்ட்டோரியஸ் காதலியை கொன்ற இடத்தின் படங்கள் கசிந்துள்ளன!

reuters

கடந்த பெப்ரவரியில் ஒஸ்கார்பிஸ்ட்டோரியஸ், அவரது காதலி ரீவா ஸ்டீன்காம்பை சுட்டுக்கொன்றார். குளியலறையில் இரத்த வெள்ளம் தேங்கியிருப்பதையும் கதவின் பிடிக்கு அருகே துப்பாக்கி ரவைகள் பாய்ந்த இரண்டு ஓட்டைகள் காணப்படுவதையும் அந்தப் படங்களில் காணமுடிகிறது.

அதேபோல படுக்கையறை, இரத்தக்கறை படிந்த படிக்கட்டுகளைக் காட்டும் படங்களும் காணப்படுகின்றன. தவறுதலாக சுட்டுவிட்ட நிலையில், இறந்துகொண்டிருந்த தனது காதலியை அவர் தூக்கிவந்ததை அந்தப் படங்கள் காட்டுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஸ்கை நியூஸ் செய்திச் சேவைக்கு அந்தப் படங்கள் எவ்வாறு கசிந்தன என்பது தெரியாது என்று காவல்துறை கூறுகிறது.
அடுத்த இரண்டு வாரங்களில் பிஸ்ட்டோரியஸ் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். ஆனால், அவரது வழக்கின் முழுமையான விசாரணைகளுக்கு நீண்டகாலம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி!

GREENEARTH INDIA 3

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2012-2013 நிதியாண்டில் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வீழ்ச்சி இதுவென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர

கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாகவே இருந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் இது 4.8 வீதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாகவே தக்கவைத்து வந்திருக்கிறது.

ஆனால் கடந்த பல மாதங்களாகவே பொருளாதாரத்தில் இந்த இறங்குமுகம் தென்படுகிறது.
தற்காலிகமானது என்கிறார் பிரதமர்

கட்டுமான, சேவைத் தொழிற்துறைகளில் ஏற்பட்ட மந்தகதியே இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தின் கடுமையான வீழ்ச்சிக்கும் காரணம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புள்ளிவிபரத்துறை அமைச்சின் தகவல்களின்படி, இந்திய தயாரிப்புத் துறையின் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.6 ஐ தாண்டவில்லை. அத்தோடு விவசாய- பண்ணை உற்பத்திகள் 1.4 வீதத்தாலேயே வளர்ந்துள்ளன.

எனினும் இந்த குறைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா கடந்த ஆண்டுக்கான அதன் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 5 வீதமாக குறைத்துக் கொண்டுள்ளதாக கடந்த பெப்ரவரியில் அறிவித்திருந்தது.

இந்திய பொருளாதாரத்தின் இந்த இறங்குமுகம் ‘தற்காலிகமானது தான், விரைவில் 8 வீதமாக உயரும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த மாதம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆனால், பணவீக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில் இந்திய வர்த்தக சமூகம் பலத்த கவலைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினால் மானபங்கப்படுத்துங்கள்: சவுதி எழுத்தாளர்

Saudi Arabia women basketball

பெண்கள வீட்டை விட்டு வெளியேறினால் அவர்களை மானப்பங்கப்படுத்துமாறு சவுதி அரேபிய எழுத்தாளர் ஒருவர் ஆண்களை ஊக்குவித்து வருகிறார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல்லா முகமது அல் தாவுத். பல நூல்களை எழுதியுள்ளார். அவருக்கு ட்விட்டரில் 97,000 ரசிகர்கள் உள்ளனர். அவர் ட்விட்டரில், சவுதியில் உள்ள பலசரக்கு கடைகளில் பணியாற்றும் பெண்களை மானப்பங்கப்படுத்த ஆண்களை தூண்டிவிட்டு வருகிறார்.

அவ்வாறு மானப்பங்கப்படுத்தினால் பெண்கள் வீட்டோடு இருப்பார்களாம். அவர்களின் கற்பும் பாதுகாப்பாக இருக்குமாம். எழுத்தாளர் தான் இப்படி ஆண்களை தூண்டிவிடுகிறார் என்றால் நாட்டில் மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தும் அரசுக்கு எதிரான சிறந்த போராட்டம் இது என்று இதை சிலர் பாராட்ட வேறு செய்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டில் இருந்து தான் பெண்கள் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலித் இப்ராஹிம் அல் சகாபி என்ற மத குரு எழுத்தாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தொழிலாளர் நல அமைச்சர் ஆண்களை விட்டுவிட்டு பெண்களுக்கு வேலைத் தேடிக் கொடுப்பதில் அக்கறையாக இருக்கிறார் என்று காலித் விமர்சித்துள்ளார்.

400 ஆண்டுகளுக்குப் பின்னர் , பனி விலகியதால் புத்துயிர் பெற்ற அதிசய தாவரம்!

plant

கனடாவின் வடக்குப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அல்பர்ட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 400 ஆண்டுகளுக்கு முன்பாக அழிந்துவிட்டதாக கருதிய தாவரம் ஒன்று துளிர் விட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். வடதுருவத்தில் அமையப் பெற்றிருக்கும் கனடாவின் வட பகுதியில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் அப்பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பனிமலைகள் வெப்பமயமாதலின் விளைவாக உருகியது தெரிய வந்தது. பனி மலைகள் உருகிய காரணத்தால், அப்பட்டமாக தெரிந்த தரைப்பகுதியில் பாசி போன்ற தாவரங்கள் வளர்ந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டனர். ஆராய்ச்சியில் அவை 400 ஆண்டுகளுக்கு முந்தைய தாவரங்கள் என்பதும், பனியால் உறைந்து போய் விட்டதும் கண்டறியப்பட்டது.
அவை முற்றிலும் அழிந்து போயிருக்கும் என எண்ணிய விஞ்ஞானிகள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் விட்டனர். காரணம் பனி விலகியதால் தற்போது புத்துயிர் பெற்றிருக்கின்றன அத்தாவரங்கள். இதனைக் குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

தவறாக வழங்கப்பட்ட கனடா அழகிப்பட்டம்..

miscanada

2013ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி  கனடா போட்டியில் டெனிஸ் காரிடோ என்பவர் வெற்றி பெற்றதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தவறுதலாக டெனிஸ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதாக மறுநாள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ பிரான்ட்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் டெனிஸ் காரிடோ(26). அவர் கடந்த 2008ம் ஆண்டில் பிரபஞ்ச அழகி  கனடா அழகிப் பட்டமும், 2010ம் ஆண்டில் உலக அழகி-கனடா பட்டமும் வென்றார்.

இதையடுத்து பிரபஞ்ச அழகி கனடா அழகிப் பட்டம் வெல்வதை தனது லட்சியமாக வைத்திருந்தார். அதன்படி  அழகிப் போட்டியில் கலந்து கொண்டார்.இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றார். கடந்த சனிக்கிழமை இறுதிச் சுற்று நடந்தது.

இறுதிச் சுற்றின் முடிவில் டெனிஸ் காரிடோ ” பிரபஞ்ச அழகி” கனடாவாகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு கிரீடமும் அணிவிக்கப்பட்டது. தனது கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டார் டெனிஸ்.

மறுநாள் பிரபஞ்ச அழகி கனடா போட்டியை நடத்திய இயக்குனர்  டெனிஸிடம் மதிப்பெண்களை கூட்டி கணனியில்  ஏற்றுகையில் தவறு ஏற்பட்டுவிட்டது என்றும், அவர் 4வது இடத்தை தான் பிடித்துள்ளார் என்றும் தெரிவித்தார். இதையடுத்து அன்றே பட்டத்தை திரும்பப் பெற்றனர்.

டெனிஸிடம் இருந்து திரும்பப் பெறப்பட்ட பட்டம் உண்மையான வெற்றியாளர் ரீஸா சான்டோஸுக்கு(26) வழங்கப்பட்டது.