நவி.பிள்ளையின் கருத்துக்களை இலங்கை நிராகரிப்பு..!

naviஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை வெளிப்படுத்தியுள்ள கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான், என்றும் இலங்கையில் எதேச்சாதிகாரம் நடைமுறையில் இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

´நவி பிள்ளை இலங்கை எதேச்சாதிகார பாதையில் செல்வதாகக் கருத்துக்கூறியிருக்கிறார். இதனைவிட வேறுவகையான நிலைப்பாட்டை இங்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காற்று எந்தப்பக்கம் வீசுகிறது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த வடக்கில் இன்று மக்களுக்கு தேர்தல் என்ற வார்த்தையாவது கேட்பதற்கு உரிமை கிடைத்திருக்கிறது´ என்றார் இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல.

´இங்கு தேர்தல்கள் நடக்கின்றன. அரசியலமைப்பின் கட்டமைப்புக்கு வெளியில் எதுவும் நடக்கவில்லை. பலமான பாராளுமன்றம் இருக்கிறது. பெரும்பான்மையான மக்களின் பங்களிப்புடன் அரசியல் நடக்கிறது எல்லாம் இருக்கிறது´ என்று தெரிவித்த இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்றின் வெளிப்பாடு தான் என்றும் கூறினார்.

´பயங்கரவாதத்தின் மூலம் இந்த நாட்டின் ஸ்திரதன்மையை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. அவை தோல்வியடைந்தாலும் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பார்க்கிறார்கள். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் கருத்துக்களை இன்னும் முன்னெடுத்துச் செல்லும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது´ என்றும் கூறினார் கெஹெலிய ரம்புக்வெல்ல.

யுத்த காலத்தில் சர்வதேச அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொண்டதோ அதேபோலவே இப்போதும் பதில் நடவடிக்கை அமையும் என்றும் அவர் கூறினார்.

´விடுதலைப் புலிகளுடனான போரின்போது சர்வதேச அமைப்புகள் எவ்வளவு நெருக்குவாரங்களை கொடுத்தன. முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியும் மக்களின் ஆணைபெற்ற கட்சியின் அரசாங்கம் என்ற வகையில் திடமான முடிவுகளை எடுக்காமல் சர்வதேச மட்டத்தில் உள்ள சிலரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தால் நாட்டில் இன்னும் யுத்தம் முடிந்திருக்காது.இனிவரும் சவால்களையும் அதேபோலவே எதிர்கொள்வோம்´ என்றார் இலங்கை அரசின் நிலைப்பாடுகள் பற்றி பேசவல்ல அதிகாரி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல.

(Source: BBC)

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்று முதல் சோதனை இல்லை!!

omanth

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளின் போது வடக்கில் இருந்த மக்கள் தெற்கிற்கு செல்வதற்கும் தெற்கில் உள்வர்கள் வடக்கிற்கு செல்வதற்கும் பிரதான பரிசோதனை மையமாக அமைக்கப்பட்டிருந்த வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்று முதல் (31) நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா ஓமந்தை இராணுவ முகாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வன்னி கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவத்திருந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களின் பதிவு மட்டும் இடம்பெறும் எனவும் போக்குவரத்து பயணிகளை வாகனங்களில் இருந்து இறக்கி சோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் இருந்து தெற்குக்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் கொண்டு செல்லப்படும் பொருட்களும் சோதனை நடவடிக்கைகளுக்காக இறக்கி ஏற்றப்படாது எனவும் வன்னி கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை சோதனைச் சாவடியானது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் உறுதுணையாக காணப்பட்டதாக தெரிவித்ததுடன் இதனூடாக தினமும் சராசரியாக 320 பேரூந்துகளும் 575 பார ஊர்திகளும் 630 சிறிய ரக வாகனங்களும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்று வந்ததாகவும் தினமும் சராசரியாக 15377 உள்ளுர் பயணிகளும் 198 வெளிநாட்டு பயணிகளும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சொன்றுவந்ததாகவும் தெரிவத்தார்.

இதேவேளை வடக்கில் இருந்து தெற்கிற்கு 254 பேரூந்துகளும் 710 பார ஊர்திகளும் 773 சிறிய ரக வாகனங்களும் வடக்கில் இருந்து தெற்கிற்கு சென்று வந்ததாகவும் தினமும் சராசரியாக 17,164 உள்ளுர் பயணிகளும் 111 வெளிநாட்டு பயணிகளும் தெற்கிற்கு செல்வதாகவும் தெரிவத்திருந்தார்.

இத்துடன் இச் சோதனைச்சாவடியில் யுத்த காலத்தின் போது ரிமோட் கொன்றோல்கள், வயர்கள், தொலை நோக்கிகள், திசை காட்டிகள், சிறிய ரக பற்றரிகள், இராணுவ பயன்பாட்டிற்கான பொருட்களை கொண்டு செல்வதை கடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவத்தார்.

இந் நிலையில் சுமார் 15 வருடங்களாக செயற்பட்டு வந்த இச் சோதனைச்சாவடி இன்றில் இருந்து பரிசோதனைகள் நிறுத்தப்பட்டு மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

logo8

 

*சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.

*ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.

*ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

*மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.

*காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

*ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால்கொடுக்கும்.

*உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.

*டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும்மூடிக்கொண்டு தூங்கும். நீலத் திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள்.

*வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும் குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.

*ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.

*பென்குயின்களில் பெண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.

*பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப் பாலைமட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.

*கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

*கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ

*ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

*சீன் ஆற்றங் கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்.

*ஹூக்ளி நதிக் கரையில் அமைந்துள்ளது கல்கட்டா நகரம்.

*நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

*ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

*நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.

10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்கள் கைது!!

old man

5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்களை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர்.

சந்தேகப்பட்டு விசாரித்த போது பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும் பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி.

மேலும் சிறுமிகளை விசாரித்தபோதுதான் அறுபது வயதைக் கடந்த 3 முதியவர்கள் 2 குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்திருக்கிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ் வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர்.

அதில் தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய் திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர்.

தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் 3 முதியவர்களையும் கைது செய்து, முதலாவது ஜுடிஷியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுத்தி, தூத்துக்குடி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா விவகாரம்: மத்திய தரைக்கடலுக்கு விரையும் ரஷிய போர்க் கப்பல்கள்!!

சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் கூட்டாக தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைகின்றன.

ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்களை சிரியா படுகொலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவுக்கு எதிராக யுத்தம் நடத்த முனைப்பு காட்டுகின்றன.

1

இது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யாவும் ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் மத்திய தரைக்கடலை சுற்றிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய போர்க் கப்பல்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. செப்டம்பர் முதல் வாரத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

2

இஸ்ரேல் Vs ஈரான்

இதேபோல் இஸ்ரேலும் தமது எல்லையில் ராணுவ துருப்புகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. “சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் இஸ்ரேல் தலையிடாது.

அதே நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும். அதற்காகவே எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது என்று அந்நாடு அறிவித்துள்ளது. குறிப்பாக ஈரானை நோக்கி தனது ஏவுகணைகளை இஸ்ரேல் தயார் நிலையில் வைத்துள்ளது.

வவுனியாவில் மக்களுக்கு இடையூறாக வியாபாரம் செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் : வியாபாரிகள் எதிர்ப்பு!

vavuniya

வவுனியா நவீன சந்தையில் மக்களின் நடமாட்டத்திற்கு இடைஞ்சல் ஏற்படக்கூடிய வகையிலும் சுகாதார சீர்கேடான முறையிலும் வியாபரத்தில் ஈடுபட்டவர்களின் பொருட்களை நேற்று காலை (30.8) வவுனியா நகரசபையினர் அகற்றியபோது நவீன சந்தை வியாபாரிகள் கடைகளை பூட்டி தமது எதிர்ப்பை தெரிவத்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில்

நவீன சந்தைப்பகுதியியல் நடை பாதையில் மரக்கறிகள் வைத்து விற்கப்படுவதாக தெரிவித்த நகரசபையினர் நாம் கடைகளை திறப்பதற்கு முன்னராக வந்து எமது பொருட்களை நகரசபையின் உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்று விட்டனர். எனவே அவ்வாறான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாம் இச் செயற்பாட்டில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.

இது தொடர்பில் வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தபோது..

வவுனியா நவீன சந்தைப்பகுதியில் வர்த்தக நிலையங்களை வைத்துள்ளவர்கள் தமது கடைகளுக்கு வெளியில் நடை பாதையில் வைத்து வியாபாரத்தல் ஈடுபடுவதனால் பொது மக்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் அவர்கள் மரக்கறிகளை அவ்விடத்தில் வைத்து துப்பரவு செய்து வருவதனாலும் கழிவுப்பொருட்கள் தேங்கி நின்று சுகாதார சீர் கேடுகள் ஏற்படுகின்றது.

அத்துடன் எமது நகரசபை சுகாதார தொழிலாளிகள் நவீன சந்தைத் தொகுதியை துப்பரவு செய்யமுடியாத வகையில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் ஒவ்வொரு வர்த்தக நிலையத்தினரும் பொருட்களை சேகரித்து வைத்துள்ளமையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே நாம் பல தடவை இவ் வர்த்தகர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியிருந்ததுடன் நேற்றைய தினமும் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என அறிவுறுத்தல் வழங்கினோம்.
எனினும் அவர்கள் இவ் அறிவுறுத்தலை செவிசாய்க்காததால் நாம் அதிகாலையில் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் உள்ள பொருட்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது என தெரிவித்தார்.

இதேவேளை வியபாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் வவுனியா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இம் முறை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் இன்றில் இருந்து வர்த்தக நிலையத்திற்கு முன்னால் மஞ்சல் நிறத்திலான கோடு கீறப்பட்டு அதற்குள் வைத்தே வியாபாரம் செய்யப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியதுடன் ஒரு மாத காலத்தினுள் வர்த்தக நிலையத்திற்குள் மாத்திரம் வியாபாரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவத்திருந்ததை வர்த்கர்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டு நவீன சந்தை தெகுதி திறக்கப்பட்டு வியபாரம் மேற்கொள்ளப்பட்டது.

மகள்களை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்க்கு 41 ஆண்டு சிறை!!

jail

பெற்ற மகள்களை பாலியலில் ஈடுபடுத்திய புதுவை தயாருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு புதுவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் தனது மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயஸ்ரீ சென்னையில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஜெயஸ்ரீக்கு உதவிய புரோக்கர்கள் ஆனந்த், கர்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் தான் பெற்ற மகள்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய ஜெயஸ்ரீ இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தலா 10 ஆண்டு கால சிறை தண்டனையை 2 முறை அனுபவிக்க வேண்டும்.

மேலும் விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 7 ஆண்டு சிறை தண்டனையை 3 முறை அனுபவிக்க வேண்டும். மொத்தமுள்ள 41 ஆண்டுகால சிறை தண்டனையையும் 10 ஆண்டுக்குள் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

மேலும், புரோக்கர்களாக செயல்பட்ட ஆனந்த், கர்ணன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமெரிக்கா தாக்குதலுக்கு ஏதுவாக சிரியாவை விட்டு வெளியேறியது ஐ.நா. குழு!!

us-war

ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிரியாவை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஏதுவான சூழல் உருவாகியுள்ளது.

பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை சிரியா ராணுவம் வீசித் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புகார் கூறின. இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழு ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிரியா வந்தது.

இந்த நிலையில் சிரியா மீது சிறிய அளவிலாவது ராணுவ தாக்குதலை நடத்திவிடுவது என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அனேகமாக அடுத்த ஓரிரு நாட்களில் இத்தாக்குதல் நடைபெறக் கூடும் எனக் கூறப்படுகிறது.

மேலும் ஐ.நா குழு முகாமிட்டு ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் தாக்குதல் நடத்துவதை தவிர்க்கவும் அமெரிக்கா முடிவு செய்திருந்தது. தற்போது ஐ.நா ஆய்வுக் குழு சிரியாவை விட்டு வெளியேறியுள்ளதால் அமெரிக்கா தாக்குதல் நடத்த ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கிளிநொச்சியில் மோட்டார் வண்டி கொள்ளையிட்ட இருவர் கைது!!

arrest1

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 106 000 பெறுமதியான மோட்டார் வண்டி ஒன்றை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25ம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இவ்விரு சந்தேகநபர்களும் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட மோட்டார் வண்டியும் இவர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் நேற்று (30) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவேளை, ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்: நடிகர் சிவகார்த்திகேயன்!!

siva

கோவை ஆர்.எஸ்.புரம் அர்ச்சனா தியேட்டரில் இன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சினிமாவின் பாடல் சி.டி. மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. பாடல் சி.டி.யை சிவகார்த்திகேயன் வெளியிட பாபா தியேட்டர் உரிமையாளர்கள் பாலசுப்பிரமணியம், ரவீந்திரன், காஸ்மா திரைப்பட வினியோகஸ்தர் சிவா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பவிழம் ஜூவல்லரி லிஜோ சுங்கத், வாசன், தாடி பாலு, ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் ஆளுயர மாலை அணிவித்தனர். பின்னர் ஒரு பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் பேசினார். அவர் பேசியதாவது..

சென்னையில் மழை பெய்தும்போது கூட வியர்க்கும், ஆனால் கோவையில் எப்போதுமே ஜில்லென்று இருக்கிறது. இந்த மக்களின் அன்பும் பாசமும் வித்தியாசமாக உள்ளது. இந்த படத்தின் சி.டி. மற்றும் டிரைலர் கோவை, சேலம், திருச்சி, ஆகிய இடங்களில் வெளியிடப்பட இருந்தது. அதன்படி கோவையில் முதலில் வெளியிடப்பட்டுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஹாலிவுட் படம்போல் இருக்காது. குடும்பத்துடன் தைரியமாக பார்த்து ரசிக்கலாம். செப்டம்பர் 6ம் திகதி இந்த படம் ரிலீசாகிறது. படம் 100 நாட்கள் கண்டிப்பாக ஓடும். 100வது நாளில் நாம் மீண்டும் சந்திப்போம் என்று அவர் கூறினார்.

சிவ கார்த்திகேயன் பேசியபோது அரங்கில் இருந்தவர்கள் இளைய சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் என்று கூறினர். அதற்கு பதில் அளித்து பேசிய சிவகார்த்திகேயன் என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள். உலகில் ஒரே சூரியன், ஒரே சந்திரன்தான். அதுபோல் ஒரே சூப்பர் ஸ்டார்தான். எனக்கு கை தட்டி ஆரவாரம் செய்தது உற்சாகமாக உள்ளது. நல்ல படம் தருவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

சக நீதிபதியை அடித்து நொருக்கிய நீதிபதி!!

judge-fight1

மெக்சிகோ நாட்டில் வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஒருவர் மற்றொரு நீதிபதியை அடித்து நொறுக்கினார். மெக்சிகோ நாட்டின், மோர்லோஸ் நகரில் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது.

இந்த நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மைக்கேல் ஏஞ்சல் பால்கன். இதே நீதிமன்றத்தில் பணிபுரியும் மற்றொரு நீதிபதி ரூபன் ஜாசோ. முக்கிய வழக்கு ஒன்றை, இந்த இரு நீதிபதிகளும், நேற்று விசாரித்தனர்.

விசாரணை நேரத்தில் ரூபன் ஜாசோவின் செய்கைகள், மைக்கேலுக்கு பிடிக்கவில்லை. முதலில் ஜாசோவை முட்டாள் என திட்டினார். அதை தொடர்ந்து, ஜாசோ மீது பாய்ந்து, அவரை நைய புடைத்தார் மைக்கேல்.

நீதிமன்றத்தில் அனைவரது முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. பின் சுதாரித்து கொண்ட மைக்கேல், தன்னுடைய செய்கைக்காக நீதிமன்றத்தில் இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

முக்கிய நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி மைக்கேல் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

திருமண நாளில் தனுசுக்கு விருந்து கொடுத்து அசத்திய சிவகார்த்திகேயன்!!

danush

டி.வி. நிகழ்ச்சிகள் நடத்திய சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன்பின் மனங்கொத்தி பறவை, 3, எதிர் நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே போன்ற படங்களில் நடித்து வருகிறார். எதிர் நீச்சல் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். இதன்மூலம் இருவரும் நட்புடன் பழகி வருகின்றனர். சிவகார்த்திகேயன் என் தம்பி என்று தனுஷ் சொல்லும் அளவிற்கு இவர்களது நட்பு பலமாக இருந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தனது திருமண நாளை கொண்டாடினார். இதில் தனுசை சிறப்பு விருந்தினராக அழைத்து விருந்து வைத்து அசத்தினார்.

விருந்து குறித்து தனுஷ் இணைய தள செய்தியி்ல் சிவகார்த்திகேயன்- ஆர்த்திக்கு திருமண வாழ்த்துக்கள். விருந்து வழங்கியதற்கு நன்றி என்று எழுதியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகை தேவயானி போட்டி!!

devayani

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7ம் திகதி நடக்கிறது. இதில் மூன்று அணிகள் மோதுகின்றன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி என்ற பெயரில் களம் இறங்கியுள்ளவர்களின் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கே.ஆர். போட்டியிடுகிறார்.

இதே அணியில் துணை தலைவர்கள் பதவிக்கு டி.ஜி. தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் செயலாளர்கள் பதவிக்கு டி.சிவா, ஞானவேல் ராஜா ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஆர்.ராதா கிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.

இந்த அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை தேவயானி, ஏ.எல். அழகப்பன், சோழ பொன்னுரங்கம், கமீலா நாசர், எடிட்டர் மோகன், கே.முருகன், கே.ராஜன், டி.டி. ராஜா, சவுந்திரபாண்டியன், விஜயகுமார், கே.பாலு, சித்ராலட்சுமணன், எஸ்.எஸ். துரைராஜ், காஜாமைதீன், எச். முரளி, பி.மதன், வேதா, பிரமிட் நடராஜன், ஜாகுவார் தங்கம், விஜயமுரளி, ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இன்னொரு அணியான நன்மை செய்யும் நல்லோர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கலைப்புலி தாணுவும், துணை தலைவர் பதவிக்கு பவித்ரன், கதிரேசன் ஆகியோரும் செயலாளர் பதவிக்கு சங்கிலி முருகன், தேனப்பனும் பொருளாளர் பதவிக்கு புஷ்பா கந்தசாமியும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அமுதா துரைராஜ், ஆர்.கே. செல்வமணி, வி.சேகர், ஆர்.மாதேஷ், கிரிதிலால் நாக்பால் ராதா ரவி, மனோஜ்குமார், தங்கர்பச்சான், கபார், கருணாஸ், ராயல் மூவீஸ் தாகா, கோவை தம்பி, ஜி.வி. பிலிம்ஸ் வெங்கடரமணி, சந்திரபிரகாஷ் ஜெயின், ஜெமினி, ராகவா, சி.பாஸ்கர், தங்கராஜ், பழனிவேல், ரிஷிராஜ், பாலாஜி, என்.ஜி. முருகேஷ்.

மூன்றாவது அணியில் செயலாளர் பதவிக்கு சிவசக்தி பாண்டியன் துணை தலைவர் பதவிக்கு பட்டியல் சேகர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அழகன் தமிழ், மணி, அரிராஜன், டைரக்டர் திருமலை, மன்னன் போன்றோர் போட்டியிடுகின்றனர்.

ஜீ.வி.பிரகாஷ் தயாரிக்கும் மதயானைக்கூட்டம் இசை அடுத்த மாதம் வெளியீடு!!

gvp

வெயில் தொடங்கி தற்போது ராஜா ராணி வரை இசையமைத்து வருபவர் ஜீ.வி.பிரகாஷ். இவர் முதன்முறையாக புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.

மதயானைக்கூட்டம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் கதிர் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். இவர்களுடன் வே.வ.ராமமூர்த்தி விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பாலுமகேந்திராவிடம் இணை இயக்குனராகவும், வெற்றிமாறனுடன் ஆடுகளம் படத்தில் வசனகர்த்தா மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய விக்ரம் சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். சுந்தரபாண்டியன் படத்திற்கு இசையமைத்த என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.

தேனி மாவட்டத்தில் உள்ள இரு முக்கிய குடும்பங்களில் நடைபெறும் சம்பவங்கள், செய்முறைகள், பழக்க வழக்கங்களை மையமாகக் கொண்டு, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் தேனி மற்றும் கேரளாவைச் சுற்றியே நடந்து முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இசையை செப்டம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஒக்டோபரில் படத்தை வெளியிடவிருக்கின்றனர்.

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் 30 வீடுகள் தீக்கிரை!!

fire

கொழும்பு15 மட்டக்குளிய பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ வித்தில் சுமார் 30 பலகை வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்குளிய கெமுனுபுர பகுதியில் சேரிபுறத்திலுள்ள வீடுகளே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றில் இருந்த குப்பி விளக்கொன்று கீழே விழுந்து தீ பரவியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீயை தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியிலுள்ள சனசமுக நிலையங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முகத்துவாரம் பொலிஸார் இத்தீவிபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

சென்னையில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவர் கைது!

arrest1

தமிழ்நாடு கடலூரில் வெடிகுண்டு சோதனை நடத்திய வழக்கில், தேடப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் சென்னையில், கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிவனேசன் மற்றும் மகேஸ்வரன் என்ற கோபி. முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவர்கள் இருவரும், இலங்கையின் முக்கிய பகுதிகளில் குண்டு வைக்க திட்டமிட்டனர்.

இத்திட்டத்தை செயல்படுத்த முன் சோதனை செய்வதற்காக, தமிழகத்திற்கு தப்பி வந்தனர். இவர்கள், கடலூர் மாவட்டத்தின் முந்திரிக் காட்டில், மேலும் நால்வருடன் சேர்ந்து சோதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சோதனையிட்ட போது உடன் இருந்த, நால்வரும் பிடிபட்டனர்.

சிவனேசன் கோபி இருவரும் தப்பிவிட்டனர். இவர்களை பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் சிவனேசனும், கோபியும் சுற்றித் திரியும் தகவல் கிடைத்தது. அவர்கள் இருவரையும், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.