பழம்பெரும் நடிகை மனோரமாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனைப் படைத்தவர் மனோரமா.
திரையுலகினரால் ஆச்சி என்று அழைக்கப்படுபவர். இப்போதும் கூட நடித்து வருகிறார். சமீப காலமாக அடிக்கடி உடல் நலக் குறைவுக்குள்ளாகி சிகிச்சை் பெற்று வருகிறார். முன்பு மாடிப்படியில் தவறி விழுந்து அவருக்கு பலத்த அடிபட்டது. பின்னர் முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இதிலிருந்து ஓரளவு தேறிவந்த அவருக்கு ரஜனி கமல் உள்ளிட்டோர் போனிலும் நேரிலும் ஆறுதல் கூறினர். ஓரிரு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த அவர், சமீபத்தில் தன் பேரன் திருமண அழைப்பிதழை மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வழங்கினார்.
இந்த நிலையில் அவருக்கு இன்று மீண்டும் உடல்நிலை மோசமானது. அவரை தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மனோரமாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தோசை என்றாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசை என்றால்வேண்டாம் கேட்கவே வேணாம்.. சரி, காரதோசை செய்வது எப்படியென பார்க்கலாமா….
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கப்
துவரம்பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 முடி
மிளகாய் – 4
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 10
உப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
சென்னை: ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதை முதல்வர் ஜெயலலிதா துவக்க விழாவில் கூறவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க இருந்ததை வரவேற்றிருந்தேன். ஆனால் தொடக்க விழாவில், வழக்கம்போல் திமுக ஆட்சி மீது முதல்வர் குறை கூறியுள்ளார். 1994-ஆம் (அதிமுக ஆட்சி) ஆண்டு ரூ.350 கோடி மதிப்பில் ஒகேனக்கல் திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும், போதிய நிதி உதவி கிடைக்காததன் காரணமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தாமதம் ஏன்? அதிமுக ஆட்சியில் போதிய நிதி திரட்ட இயலவில்லை என்றால் எதற்காக திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்? இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தத் திட்டத்துக்காக நிதி உதவி கேட்டு மத்திய அரசுக்கு 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-இல் கருத்துரு அனுப்பப்பட்டது என்று முதல்வர் கூறியுள்ளார்.
இரண்டாம் முறையாக அதிமுக ஆட்சி பொறுப்பேற்றது 2001-ஆம் ஆண்டு. ஆனால் 2005-ம் ஆண்டு தான் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. கருத்துரு அனுப்பாமல் 4 ஆண்டுகள் அதிமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது என்று கூறிய முதல்வர், அது திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதை மட்டும் விழாவில் கூறவில்லை. நிறுத்தி வைத்தது ஏன்? இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, கர்நாடகத்தில் பாஜக போராட்டம் நடத்தியது என்று குறிப்பிட்ட முதல்வர், அப்போது நான் (கருணாநிதி) கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும், பின்னர் நாம் கலந்து பேசி தேவைப்பட்டால் களம் காண்போம் என்று கூறி திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேரவையில் கேள்வி கேட்க முயன்ற ஜெயலலிதாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஒகேனக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, கர்நாடகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இல்லை. ஆளுநர் ஆட்சி தான் நடைபெற்றது. பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் பாஜக சார்பில் கர்நாடகத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழர் கடைகள் நாசமாக்கப்பட்டன. பஸ்கள் கொளுத்தப்பட்டன. தமிழ்த் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளின் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த நேரத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்பு கோரி, சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும், தமிழர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை. கர்நாடக பாஜகவின் செயல்களைக் கண்டித்து சேப்பாக்கத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத் தலைவராக இருந்த கேர்.ஆர்.ஜி. தலைமையில் நடந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றனர்.
இந்தப் பிரச்னை காரணமாக இரண்டு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவானது. இந்த நேரத்தில் கர்நாடகத்தில் ஓர் ஆட்சி அமைய சில நாள்கள் மட்டுமே இருந்த நிலையில், அதுவரை தாற்காலிகமாக அமைதி காப்போம் என்றும், அதற்குப் பிறகும் நிலைமை நீடிக்குமானால் பொறுமையாக இருக்கத் தேவையில்லை என்றும் முதல்வராக இருந்த நான் (கருணாநிதி) அறிக்கை விடுத்தேன் என்பது உண்மைதான். இவ்வாறு நான் அறிக்கை வெளியிடாமல் அமைதியாக இருந்திருந்தால், கர்நாடகத்தில் தமிழர்களுக்குப் பெரும் தீங்கு ஏற்பட்டிருக்கும். தமிழர்களைக் காப்பதற்காக முன்னெச்சரிக்கையாக எடுத்த நடவடிக்கையைத்தான் முதல்வர் ஜெயலலிதா பெரிய புகாராக திட்டத்தையே கைவிட்டதுபோல கூறியுள்ளார். அப்போது நான் எடுத்த முடிவை பத்திரிகைகள் பாராட்டின. மேலும் பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகே உரிமை மீறல், ஒத்திவைப்பு போன்ற பிரச்னைகளை எழுப்ப முடியும். ஆனால் அதிமுகவினர் பேரவை தொடங்கிய உடனேயே பிரச்னையை எழுப்பினர். பேரவை விதி தொடர்பாக தெளிவாக எடுத்துக் கூறியும், அவர்கள் கேட்காமல் வெளிநடப்பு செய்து, பேரவையில் பேசுவதற்கு அனுமதி தரவில்லை என்று பேரவைக்கு வெளியில் அதிமுகவினர் கூறினர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தேவைப்பட்டதை விட அதிக அளவு காவிரி நீரைத் திறந்து விட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் சம்பா மற்றும் குருவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து போதுமான நீரைத் திறந்துவிடாத கர்நாடக அரசு ரூ.2,500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அதிமுக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2012-2013ம் ஆண்டில் கர்நாடகாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரிப் பகுதியில் உள்ள பயிர்களை வாடவிட்டுவிட்டு தமிழகத்தின் சம்பா மற்றும் குருவை சாகுபடிக்கு தேவைக்கு அதிகமாகவே காவிரி நீர் திறந்துவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
தமிழ்நாடு நஷ்ட ஈடு கேட்டுள்ளது குறித்து எங்களுக்கு நோட்டீஸ் வந்தால் எங்கள் சட்டக்குழுவை வைத்து எங்கள் பதிலை முறையாக தெரிவிப்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படாததால் பயிர்கள் கருகின.
இதனால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு ரூ.2, 479 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL சூதாட்டம் விவகாரத்தில் BCCI எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் பதவி விலக நெருக்கடி அதிகரித்து வருகிறது. அவர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி BCCI செயலர் ஜக்தாலே, பொருளாளர் அஜய் ஷிர்கே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
IPL சூதாட்ட விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்ற நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
BCCI பொருளாளர் அஜய் ஷிர்கே மிக மோசமான முறையில் சீனிவாசனை விமர்சித்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினார். இந்த நிலையில் BCCI. பொருளாளர் அஜய் ஷிர்கேயும், செயலாளர் சஞ்சய் ஜக்தாலேவும் தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். கிரிக்கெட்டில் சமீபத்திய சம்பவங்கள் தன்னை மிகவும் காயப்படுத்தியதால் பதவியை ராஜினாமா செய்ததாக ஜக்தாலே கூறியுள்ளார்.
மேலும், சூதாட்டம் தொடர்பாக குருநாத் மெய்யப்பன், இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட 3 நபர் குழுவில் பணியாற்ற மாட்டேன் என்றும் ஜக்தாலே கூறியுள்ளார். இதே கருத்தை அஜய் ஷிர்கேவும் தெரிவித்திருக்கிறார்.
நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.
* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.
தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? இதைப் படியுங்கள் முதலில்!
தண்ணீர் மருந்து
ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை!
வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.
எலுமிச்சை உடம்புக்கு நல்லது!
குளிப்பதற்கு முன் – ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக எலுமிச்சை கலந்த தண்ணீரில் குளியுங்கள்.
இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
தேமலை விரட்டுங்க!
நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் அரித்து எடுத்தது , ஒருபாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பசை மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!
மெருகுக்கு பப்பாளி!
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல சிற்பி டேவிட் செர்னி. சர்ச்சை மன்னனான இவர் பழைய டபுள் டெக்கர் பஸ்சுக்கு எந்திர கைகளை பொருத்தி வியக்க வைத்துள்ளார்.
1957ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த டபுள் டெக்கர் பஸ்சில் ஹைட்ராலிக் முறையில் இயங்கும் வகையில் இரண்டு கைகளை பொருத்தப்பட்டுள்ளது. அந்த கைகளை வைத்து அந்த பஸ் மேலும், கீழும் நகர்வது எழுந்து நடந்து வருவது போன்று இருப்பதால் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
லண்டன், இஸ்லிங்டன் நகரில் ஒலிம்பிக் போட்டிகளின்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த பஸ்சை கீழே காணலாம்..
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!
மாதம் பன்னிரெண்டும்
எனை மதியாது கழிந்தோட,
ஈகைப் பண்புள்ள வெறுமையோ
நாளும் எனை வாட்ட,
நித்திரைப் பொழுதில்
நிசப்த்த நாளங்கள்,
ஒத்திகை நடத்துதே
என் விழியோர ஈரங்கள்..
நேசம் வீசி
நாடி வந்தேன்,
உன் சுவாசம் தேடி
ஓடி வந்தேன்,
என் பாதைகள் என்றும்
உன் பாதங்கள் தேட,
என் வீதிகள் முடியுமிடம்
என்றும் உன் வீடு தானே..
தனியொரு நாளில்
தவிப்புகள் நிறைய,
துணையிவள் வந்தால்
ஏக்கங்கள் கழிய,
விடையொன்று சொல்லிவிட்டு
வீடு செல்லு தளிரே,
நடைபிணம் நானுன்னை
நாளும் நாடுகிறேனே..
வீசும் காற்றுக்கு
விலைதான் என்னவோ,
வாடிய பயிராய்
வீதியில் நிற்கிறேன்,
எனை ஏசும் உன் விழிக்கு
என்னதான் கோபமோ,
அது சாடிய என்னுயிரும்
உடலிடத்தே பிரிந்தது..
எதுகை மோனையில்
போட்டி போட்டு,
ஏட்டுக் கவிதை வடிக்க
நான் வரவில்லை,
பதுமையிவள் பேசும்
மௌன மொழி கேட்டு,
மனப் பிதற்றலைத்
தீர்க்க வந்துள்ளேன்..