செக் குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல சிற்பி டேவிட் செர்னி. சர்ச்சை மன்னனான இவர் பழைய டபுள் டெக்கர் பஸ்சுக்கு எந்திர கைகளை பொருத்தி வியக்க வைத்துள்ளார்.
1957ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த டபுள் டெக்கர் பஸ்சில் ஹைட்ராலிக் முறையில் இயங்கும் வகையில் இரண்டு கைகளை பொருத்தப்பட்டுள்ளது. அந்த கைகளை வைத்து அந்த பஸ் மேலும், கீழும் நகர்வது எழுந்து நடந்து வருவது போன்று இருப்பதால் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
லண்டன், இஸ்லிங்டன் நகரில் ஒலிம்பிக் போட்டிகளின்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த பஸ்சை கீழே காணலாம்..
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!
மாதம் பன்னிரெண்டும்
எனை மதியாது கழிந்தோட,
ஈகைப் பண்புள்ள வெறுமையோ
நாளும் எனை வாட்ட,
நித்திரைப் பொழுதில்
நிசப்த்த நாளங்கள்,
ஒத்திகை நடத்துதே
என் விழியோர ஈரங்கள்..
நேசம் வீசி
நாடி வந்தேன்,
உன் சுவாசம் தேடி
ஓடி வந்தேன்,
என் பாதைகள் என்றும்
உன் பாதங்கள் தேட,
என் வீதிகள் முடியுமிடம்
என்றும் உன் வீடு தானே..
தனியொரு நாளில்
தவிப்புகள் நிறைய,
துணையிவள் வந்தால்
ஏக்கங்கள் கழிய,
விடையொன்று சொல்லிவிட்டு
வீடு செல்லு தளிரே,
நடைபிணம் நானுன்னை
நாளும் நாடுகிறேனே..
வீசும் காற்றுக்கு
விலைதான் என்னவோ,
வாடிய பயிராய்
வீதியில் நிற்கிறேன்,
எனை ஏசும் உன் விழிக்கு
என்னதான் கோபமோ,
அது சாடிய என்னுயிரும்
உடலிடத்தே பிரிந்தது..
எதுகை மோனையில்
போட்டி போட்டு,
ஏட்டுக் கவிதை வடிக்க
நான் வரவில்லை,
பதுமையிவள் பேசும்
மௌன மொழி கேட்டு,
மனப் பிதற்றலைத்
தீர்க்க வந்துள்ளேன்..
நட்பில் நாற்பது இருக்கட்டும்
நமக்கோ ! நான்கு தான் தேவை !
அவைகள்
1.அக நட்பு
2.முக நட்பு
3. யுக நட்பு
4. சக நட்பு
உன்னை அன்பு செய்தல் – அகமாக !
மற்றவரை அன்பு செய்தல் – முகமாக !
உலகை அன்பு செய்தல் – யுகமாக !
நம் சொந்தங்களை அன்பு செய்தல் – சகமாக !
எனும் நான்கில் மனம் மகிழ்வோம் !!
முல்லை மொட்டுக்களாய்…
பள்ளிச் சிட்டுக்களாய்…
பகை மறந்து,
பை சுமந்து,
சென்றோமே பள்ளிக்கு….!!!
பதின் ஒரு வருடங்கள்.
பசுமையான வருடல்கள்.
மறக்க முடியா மங்கள நினைவுகள்.
தனிமையில் மீடிப்பர்த்தேன்.
என் இளமை அழுகிறது…!!!
நாங்கள் அடி வாங்காத ஆசிரியர் இல்லை
எங்களின் பகிடி வதைக்கு பலிஆகத
ஆட்களும் இல்லை…!!!
நாங்கள் அங்கு செய்யாத சேட்டையும் இல்லை….!!!
பராமுகமுடன் படித்தோம்,
பக்க விளைவை எதிர் கொள்ள
முடியாமல் தவித்தோம்…!!!
பரீட்சை குறுக்கிட்டது
எங்களின் படிப்புக்கே
முற்றுகை இட்டது.
பெறுபேறும் வந்தது…!!
ஆனந்தத்துடன் இருந்தனர் சிலர்,
அழுகையுடன் இருந்தனர் இன்னும் சிலர்,
மரமாய் இருந்த எம் நண்பர் கூட்டம்
இன்று செடியாய் மாறியது.
உயிர் தோழி மூவருடன்
உயர் தரத்தில் தடம் பதித்தோம்.
புதுப்புது முகங்கள்…
சற்றே ஆறுதலடைண்டன அகங்கள்…
மீண்டும் ஆரம்பம்,
எங்கள் அன்பின் போராட்டம்.
பழைய ஜாபகங்கள் படர்ந்தன.
பிரிந்த தோழிகளின்
நினைவலைகள் நீண்டன…!!!
எமது பாடசாலை
வாகை மரத்திடம் கேட்டுப்பார்,
நாங்கள் செய்த சேட்டைகளை
அது மொழிபெயர்க்கும்…!!!
இதற்குள் உயர்தர வாழ்க்கை
உருண்டோடி விட்டது…!!!
இதை தனிமையில் நினைக்கையிலே
இதயம் சோக கீதம் பாடுது…!!!
அதற்குள் சிலர்,
திருமணமும் முடித்திருப்பார்!
சிலர் பல்கலைக்கழகமும்
சென்றிருப்பார்……!!!
கண்ட இடத்தில் ஒரு புன்னகை
வருடத்துக்கு ஒரு முறை
வாழ்த்து மடல்…..!!!
பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.
சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மிகவும் முன்னேறிய நாடுகளில், குறிப்பாக கணினி மற்றும் தொலைக்காட்சிகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு இந்த தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அத்தகைய நாடுகளில் உள்ள பள்ளிப் பிள்ளைகளின் கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறன் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
பொஸ்டன் கல்லூரியால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்காவிலேயே அதிகமான குழந்தைகள் தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அங்கு 9 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளில் 73 வீதத்தினருக்கு ஒழுங்கான தூக்கம் கிடையாது என்றும், 13 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளில் 80 வீதத்தினருக்கு தூக்கம் சரியாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
உலக சராசரியைவிட இது மிகவும் அதிகமாகும்.
இதேபோன்று நியூசிலாந்து, சவுதி அரேபியா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது.
நல்ல தூக்கம் இருப்பதால், கணிதம், விஞ்ஞானத்தில் அதிக பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை கொண்ட நாடுகளாக அஜர்பைஜான், கசகஸ்தான், செக் குடியரசு, ஜப்பான் மற்றும் மோல்ட்டா ஆகிய நாடுகள் திகழுகின்றன.
ஆசிய மாணவர்கள் இந்த கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறனில் முன்னணியில் திகழ்கின்றனர்.
சரியான நித்திரை இல்லாத பிள்ளைகள் ஆசிரியர்களின் உத்தரவுகளை கடைப்பிடிப்பதிலும் சோர்வு காண்பிப்பதாகக் கூறப்படுகின்றது.
தூக்கம் குறைவான நிலைமையில் மூளை புதிய விசயங்களை உள்வாங்க தடுமாறுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கணினியில் விழித்திருத்தல், நண்பர்களுக்கு அதிகமாக மெசேஜ்களை அனுப்புவர்கள் ஆகியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.