பத்து ஆண்டுகளாக சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளமைக்கு இயக்குனர்களுக்கு தான், நன்றி கூற வேண்டும் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்
எனக்கு அமைந்த கதைகள், இரசிகர்களுக்கு பிடித்திருந்தது தான், இதற்கு முக்கிய காரணம். இப்போதும், தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ரொம்ப பிசியா இருக்கேன். இதைத் தாண்டி, என் கடுமையான உழைப்புக்கும், இதில் பங்கு உண்டு.
கடந்த, 10 ஆண்டுகளில், 50 படங்களில் நடிச்சிருக்கேன். கில்லி படத்தை பார்த்து, விஜயும், நானும் நல்ல ஜோடி என, பேசப்பட்டது. அப்புறம், சாமி படம் பார்த்து விக்ரம் ஜோடி நல்லாயிருக்குன்னு சொன்னாங்க.
இதைத் தொடர்ந்து, விண்ணை தாண்டி வருவாயா படம் பார்த்திட்டு, சிம்பு நல்ல ஜோடின்னு சொல்றாங்க. இப்படி படங்களும், நாயகர்களும் மாறுவது உண்டு. நல்ல கதை அமைந்தால், எந்த நடிகருடனும், கெமிஸ்ட்ரி ஒர்க் – அவுட் ஆகும்.
தமிழில் வேணும்னு படம் பண்ணாம இருக்கிறது இல்லை. சரியான கதை அமையவில்லை என்றால், படம் பண்ண மாட்டேன். சும்மா இருக்கலாமே தவிர, லாஜிக் இல்லாத படம் பண்ண விரும்பமாட்டேன், இரண்டு மாதம், மூன்று மாதம் படம் இல்லைனாலும், காத்திருந்து, நல்ல கதை வந்தால் தான் நடிக்கிறேன்.
இதனால் தான், என்னுடைய பெரும்பாலான படங்கள், வெற்றி அடைந்திருக்கின்றன. என்றார்.
மேலும் அவருடைய திருமணம் குறித்து கேட்டதற்கு இந்த வருஷம் தான், கல்யாணம் செய்துக்கணும் இந்த வருஷம் தான், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் எல்லாம், எனக்கு இல்லை. அதில், எனக்கு நம்பிக்கையும் கிடையாது.
எனக்கு, எப்ப சரி என்று படுகிறதோ, எனக்கு பொருத்தமானவர் எப்ப அமைவாரோ, அப்போது உடனடியாக, டும் டும் டும் தான்.
கண்டிப்பாக, காதல் கல்யாணம் தான், எனக்கு செட் ஆகும். நான், கல்யாணம் செய்யும் நபர், என்னைப் பற்றி, தெரிஞ்சவரா இருக்கணும். என்னை, நல்லா பார்த்துக் கொள்பவராக இருக்கணும். இதெல்லாம் நடக்கணும்ன்னா, காதல் கல்யாணம் தான், சரியாக வரும். என்றவரிடம் நீங்க, 3 பிளேட் பிரியாணி சாப்பிடுவீங்களாமே? என்றதற்கு
“உண்மை தான். மூன்று பிளேட் இல்லை; அதுக்கும் மேலே சாப்பிடுவேன். பிரியாணி பிரியை நான். சாப்பாட்டு விஷயத்தில் என்னை யாரும், அடிச்சுக்க முடியாது” என்றார்.

குத்துப் பாடலுக்கு ஆடுவதற்கு முன்னாள் கனவுக் கன்னிகளை தேடி வருகிறார்களாம் இயக்குனர்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா திரையுலகிற்கு நடிக்க வந்து இன்றோடு 38 வருடங்கள் நிறைவாகியுள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த குள்ளமான பெண், “மெகா’ சைஸ் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

பொலிவியா நாட்டில் ஆதிவாசி மனிதன் ஒருவர் 123 வயதுடன் வாழ்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.


தடகள ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 14-வது உலக தடகள சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டி ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நேற்று கோலகலமாக முடிந்தது.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சைமன் கெரிகன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
கவுதம் கம்பீருக்காக தன்னை தேடி வந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளார் வீரேந்திர ஷேவாக்.
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை பெரிதும் விரும்புவதாகவும், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது, கச்சத்தீவை இந்தியாவுக்கு திருப்பி தரும் பேச்சுக்கே இடமில்லைஎன அதன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது.
இளவரசி டயானா இறந்தது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல்கள் உண்மைதானா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று இங்கிலாந்து பொலிசார் கூறியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தன் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த மிஸ்கோல் (Missed call) இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட இளம் பெண் ஒருவர் தனது வாழ்க்கையையே தொலைத்துள்ள சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.
விஜய் நடித்த தலைவா படம் திரையிடப்படுவதில் நீடித்துவந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்குவந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தி அவரை வந்தடைந்துள்ளது.
வவுனியா மாவட்டம் தேர்தல் தொடர்பான வன்முறைகள் எதுமின்றி அமைதியாக இருக்கிறது, இதுவரை எதுவிதமான தேர்தல் வன்முறைகளும் இடம்பெறவில்லை என்று வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சி.டி.கே.சன்ன அபேரத்ன தெரிவித்தார்.
கனடாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் அறையில் 40 மலைப் பாம்புகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.