இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக் கட்சியினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
இது குறித்து கல்முனையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முக்கிய சிறுபான்மைக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை புறக்கணித்து விட்டு இந்த நடைமுறைகளில் முஸ்லிம்களும் உரிய பங்களிப்பை பெற முடியாது என்று தெரிவித்த அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான ஹசன் அலி, சில வேளைகளில் அடுத்த கட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் உறுப்பினர்கள் அறிவிக்கப்படும் போது அதில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடமளிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்காக இந்த தெரிவுக்குழு அறிவிக்கப்பட்டதாக ஒரு புறம் கூறப்பட்டாலும், அது இனப்பிரச்சினை தீர்வுக்கானது என்று மறுபுறம் கூறப்படுவதால், அந்த தெரிவுக்குழு அமைக்கப்படுவதற்கான நோக்கம் குறித்து குழப்பம் நிலவுவதாகவும் ஹசன் அலி குறிப்பிட்டார்.
அதேவேளை 13வது திருத்தச்சட்டத்தில் உள்ளவற்றை குறைப்பதற்கான நோக்கில் அந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதனை தமது அமைப்பு கடுமையாக எதிர்க்கும் என்றும் ஹசன் அலி கூறியுள்ளார்.
இளைய தளபதி விஜய் தன்னுடைய பிறந்த நாளை மிக அமைதியான முறையில் கொண்டாடி உள்ளார்.வழக்கமாக ஒவ்வொரு பிறந்த நாளன்றும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம், ஏழைகளுக்கு இலவச பொருட்கள், அன்னதானம் வழங்கி விமர்சையாக பிறந்த நாளை கொண்டாடுவார் விஜய்.
ஆனால் இந்த முறை மிக அமைதியான முறையில் கொண்டாடியுள்ளார். இன்று காலையிலேயே தன் பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்ற விஜய், பின்னர் ஜில்லா படப்பிடிப்புக்கு சென்று பிறந்தநாளை கொண்டாடினாராம்.
அவருக்காக படக்குழுவினர் கேக் வரவழைத்திருந்தனர். கேக் வெட்டிய பிறகு, அனைவருக்கும் தன் கையாலேயே பிரியாணியை பரிமாறினாராம்.
இதற்கு அரசியல் நெருக்கடிகள் தான் காரணம் என பரபரப்பாக பேசப்படுகிறது.
புத்தளத்திலிருந்து காலி நோக்கி ஹம்பாந்தோட்டை வரையாக கடற் பரப்பு இன்றும் கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அவதான நிலைம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் கடற்தொழில் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் வானிலை அவதான நிலைம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்பில் கடும் காற்று வீசும் எனவும் இது கிலோ மீற்றருக்கு 70ஆக இருக்கும் எனவும் அவ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் மனித பாத சுவட்டினை ஒத்தமாதிரியான கற்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது. பாறைகள் சிதைவடைந்து இந்த சுவடு உருவானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால் உருவானதாகவும் இராமாயணப் போர் நடைபெற்றபோது அனுமான் மலையைத் தூக்கிக்கொண்டு வரும் போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் இது தொடர்பாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைய தளபதி விஜய் இன்று தனது 39வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங்! ஆக்ஷன் அதிரடியும், காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
முதல் நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த செந்தூரபாண்டி, விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை மிகவும் பெருந்தன்மையோடு இப்போதும் ஒப்புக்கொள்வார் விஜய்.
பின்னணிப் பாடகராக தேவா படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் சச்சின் வரை 23 பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் ஏனோ பாடுவதைத் தவிர்த்து வந்தவர், தற்போது துப்பாக்கி, தலைவா என அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார்.
விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றுவரை அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். இந்த காஸ்ட்யூம் டிசைன் சினிமா வரைக்கும் போகிற வாய்ப்பு இருக்கிறது.
திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வார் விஜய். அன்றைக்கு மாணவர்களோடு உட்கார்ந்து கலகலப்பாக உரையாடும் விஜய்யை நீங்கள் இதற்கு முன் கண்டிருக்க மாட்டீர்கள்.
ஜூன் 22 பிறந்த நாளன்று எங்கே இருந்தாலும் ஓடிவந்து தாயின் அருகில் இருக்கவே விரும்புவார். வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பிவந்து அன்று முழுவதும் அம்மா பக்கமே இருக்கிற அம்மா பிள்ளை விஜய்.
எவ்வளவு வேலை, ஷூட்டிங் முடிந்து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்குவார். அதிசயிக்கும்படியான பெருவாரியான டிவிடி கலெக்ஷன் வைத்திருக்கிற பெருமை அவருக்கு உண்டு.
நொன்-வெஜ் உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. அதுவும் அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை.
விஜய்க்கு நகைகளின் மீது அவ்வளவாக ஆசை கிடையாது.
ஹிந்தியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந்திப் படங்களுக்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்.
ஜாலி மூடில் இருந்தால் மனைவி சங்கீதாவை ஹாய் கீஸ் எனக் கூப்பிடுவார். எப்பவாவது கொஞ்சம் கோபமாக இருந்தால் வாங்க போங்க தான்.
வருஷத்துக்கு ஒரு தடவையாவது மனைவி, குழந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு. சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்சநாள் இருந்த பிறகு, பயணம் அதற்கடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடையும். எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பையன் சஞ்சய்தான்.
தி.நகரில் சூர்யாவின் அடுத்த வீட்டுக்காரராக இருக்கிற டைரக்டர் பாரதிராஜா, கொட்டிவாக்கத்தில் விஜய்க்குப் பக்கத்துவீட்டுக்காரராக இருக்கிறார்.
விளையாடுவதற்கு மிகவும் பிரியப்படுவார். டென்னிஸில் விடாப்பிடியாக இவரிடம் ஜோடி கட்டுவது மகன் சஞ்சய்தான்.
சஞ்சய்யின் ஒவ்வொரு வயது கூடும்போதும் அவனது நடவடிக்கைகளை வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். 20 வயது ஆனதும் அவனது பிறந்த நாளுக்கு விஜய் அளிக்கப்போகிற பெரிய பரிசு அதுதான்.
அப்பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல பேசிக் காட்டியது அண்ணாமலை பட வசனம்தான். அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார்.
நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித்தானாம்.
நெருக்கமான கல்லூரி நண்பர்களை அழைப்பது மச்சி. மற்றவர்களை விஜய் அழைப்பது என்னங்கண்ணா.
கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய். நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தோடு வந்தால், அழகிய தோசை வார்த்துக் கொடுப்பது இந்த அழகிய தமிழ் மகன்தான். அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்குமாம்.
எப்போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்.
வீட்டின் வராந்தாவில் காத்திருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு.
அம்மா ஷோபா சந்திரசேகர் இசைக் கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்துவார். அம்மாவின் கச்சேரிகளுக்கு முதல் ஆளாக ஆஜர் ஆவார் எப்போதும்.
மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் அப்பாவின் நடிப்பில் ஆர்வமாக இருந்தாலும் படிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். நாலு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் விளையாடுகிறாள் சாஷா.
எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிற மொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய். தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார். சமீபத்தில் பிரபுதேவாவின் விருப்பத்திற்காக ரவுடி ரத்தோர் படத்தில் அக்ஷய் கன்னாவுடன் ஒரு குத்தாட்டம் போட்டார்.
விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. உலக அழகி ப்ரியங்கா சோப்ரா அறிமுகமானது விஜய்யுடன் ஜோடி சேர்ந்த தமிழன் படத்தில் தான்.
ஜாலியாக ரிக்கார்டிங்கில் உட்கார ஆசைப்படுவார் விஜய். எப்போதும் அவரது சமீபத்திய பாடல்களின் முணுமுணுப்போடுதான் காணப்படுவார் விஜய்.
வெளிநாடு படப்பிடிப்பு செல்லும் போதும் சரி, வரும் போதும் சரி முதலில் அம்மாவிற்கு ATTENDANCE கொடுத்து விட்டு தான் தனது வீட்டிற்கு செல்வார்.
ஒவ்வொரு படம் முடியும் போதும் அதில் பங்குபெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு கொடுத்து மகிழ்வது விஜய் வழக்கம்.
வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தால் முதல் தடவையாக வழங்கப்பட்ட குறுகியகால சுயதொழில் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் நேற்று (21) வவுனியா றோயல் காடின் மண்டபத்தில் வழங்கப்பட்டது.
பாடசாலையை விட்டு விலகிய 37 பேருக்கு சுயதொழிலை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக வழங்கப்பட்ட இப் பயிற்சி நெறியில் காளான் வளர்ப்பு, தேனி வளர்ப்பு, நாற்று மேடை தொழில்நுட்பம், சேதன விவசாயம், உணவு பதனிடல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதம விருந்தனராக கலந்து கொண்டிருந்ததுடன் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபாணு, தேசிய வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் செயலாளர் நவீன் ஆட்டிக்கல, வவுனியா பிரதேச செயலாளர் கே. உதயராசா, வவுனியா வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எம். உவைஸ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
உலகை உலுக்கிய பல படங்கள் வெளிவந்திருக்கிறன.அவையனைத்தும் உலக சரித்திரத்தை மாற்றியும் உள்ளது. இங்கு ஒருவர் தான் எடுத்த புகைப்படத்தை எண்ணி தற்கொலையே செய்துகொண்டுள்ளார் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய மர்மம் இது.
கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் உலகப் புகழ்பெற்ற புகைபபடக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருக நீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார். இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்…
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சான் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில் இ எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது. ஆம் அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும் மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு. கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார் சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.
அரிதான படம் பதிவாகி விட்டது. இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் கமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை. 1994இமே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.
அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம். ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.
புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ்பேர்க் திரும்பி விட்டார். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார். கெவின் தற்கொலை செய்துகொண்டார். அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் முதல் வரி I am Really, Really Sorry.
மனிதனுக்கு மனிதத்தன்மை என்பது நிச்சயம் வேண்டும் என்பதை கெவின் மரணம் நிருபித்துவிட்டது.
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் மாதம்தோறும் நடாத்தி வரும் மாதாந்தமுழு நிலா கருத்தாடல் நிகழ்வின் 158 வது நிகழ்வாக தமிழ் திரை இசைஉலகின் முடிசூடாமன்னன் ரி.எம்.
சௌந்தரராஜனின் நினைவு நிகழ்வு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா சுத்தானந்த இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் காலை பத்து மணிக்கு நடை பெறவுள்ளது.
வரவேற்புரையினை சி.நாகராஜா அவர்கள் வழங்க சௌந்தரராஜன் பற்றிய நினைவு குறிப்பினை நா.தியாகராஜா அவர்கள் வழங்கவுள்ளார். விசேட நிகழ்வாக இசை செல்வர் ,கலா பூஷணம் ஈழத்து சௌந்தரராஜன் இ.சிவசோதி அவர்களால் காலத்தால் அழியாத சௌந்தரராஜனின் பாடல் இசை நிகழ்வாக நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தோகை மலைநல்லூர் கிராமம், வேலூர் மாவட்டம் வாலஜாப்பேட்டை, குடியாத்தம், காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப் பூண்டி போன்ற பல்வேறு இடங்களில் அகதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள்.
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழர்கள் பலர் அந்நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறி தமிழக முகாம்களில் குடியேறி உள்ளனர். இந்த முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் அடிக்கடி வெளிநாடுகளில் தஞ்சம் புகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
முகாம்களில் இருந்து தப்பிச்சென்று விசைப்படகுகள் மூலமாக கடலிலேயே பயணம் செய்து அவுஸ்திரேலியா நாட்டில் தஞ்சம் அடைகின்றனர்.
முகாம்களில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயற்சிக்கும் இலங்கை அகதிகளுக்கு உதவ பல முகவர்கள் உள்ளனர். முகவர்களிடம் இலங்கை அகதிகள் பல லட்சம் பணம் கொடுத்து அவுஸ்திரேலியா நாட்டுக்கு செல்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 6ந் திகதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரே விசைப்படகில் தப்பிச்செல்ல முயன்ற 120 பேரை கடற்படையினர் பிடித்தனர். அவர்கள் கோர்ட்டு நடவடிக்கைகளுக்குப் பின் மீண்டும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் 60 பேர் விசைப்படகு மூலம் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல இருப்பதாக கியூ பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் கியூ பிரிவு பொலிசார் நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது நாகை கீச்சாங்குப்பம் பகுதியில் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிதாக இருந்த மர்ம படகு ஒன்றை பொலிசார் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அந்த படகில் தான் அகதிகள் அவுஸ்திரேலியா நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றிருக்கலாம் என்று பொலிசாருக்கு சந்தேகம் எழுந்ததால், படகு உரிமையாளர் குறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதுபற்றி பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தமிழக முகாம்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 60 பேர் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்து. இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் நாகையில் ஒரு விசைப்படகு சிக்கி உள்ளது.
அந்த படகு செருதூர் மீனவகிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் படகு என்பது தெரியவருகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதற்கு தரகராக வேலை பார்த்த சென்னை, மதுரை ஆகிய இடங்களைச் சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு பொலிசார் கூறினர்.
நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஆபரேசன் ஆம்லா ஒத்திகை நடைபெற்றது. இதில் பொலிசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த கண்காணிப்பு பணியின்போது தான் தமிழக முகாம்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா தப்பிச்செல்ல முயன்ற தகவல் கிடைத்ததாக பொலிசார் கூறினர்.
கொலிவுட்டில் துப்பாக்கி வெற்றிக்கு பின்பு மீண்டும் ஒரு புதிய படத்தில் முருகதாஸ் கூட்டணியில் இணைகிறார் விஜய்.
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துப்பாக்கி.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு முதலில் தீபிகா படுகோனிடம் திகதி கேட்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர் மிகவும் பரபரப்பாக இருப்பதால் சமந்தாவை தெரிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தின் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸும், கலை இயக்குனராக தேசிய விருது பெற்ற லால்குடி இளையராஜாவும் பணியாற்ற உள்ளனர்.
ஜில்லா படத்தை முடித்த கைகோடு விஜய் இந்தப் படத்தில நடிக்க வருகிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரையன் லாரா மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது…
நான் எதிர்த்து விளையாடிய இந்திய தலைவர்களில், சவுரவ் கங்குலிதான் எனக்கு பிடித்தமான தலைவர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவரது தலைமை பிரமிப்பாக இருந்தது. அவர் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன்.
இதேபோல் கபில்தேவின் தலைமைப் பண்பும் சிறப்பாக இருந்தது. சச்சின் டெண்டுல்கர் எனது நண்பர். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட்டுக்கும் செய்த பங்களிப்பை அளவிட முடியாது.
தற்போதுள்ள தலைவர் டோனியின் தலைமை பற்றி அவருடன் விளையாடிய பிராவோவிடம் கேட்டேன். அப்போது மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதுதான டோனியின் மிகப்பெரிய பலம் என்று பிராவோ கூறினார்.
கொலிவுட்டில் ரவி மற்றும் அவரது அண்ணன் ராஜா ஆகிய இருவரும் ஜெயம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.
ரீமேக் இயக்குனர்களில் மிகவும் பிரபலமானவராகிய ஜெயம் ராஜா, இவர் அறிமுகமான ஜெயம் படத்திலிருந்து கடைசியாக இயக்கிய வேலாயுதம் படம் வரை அனைத்துப் படங்களும் ரீமேக் படங்களே.
இவை அனைத்தும் தெலுங்கில் ஹிட் அடித்த படங்கள். அதில் பெரும்பாலான படங்களை தம்பி ரவியை வைத்து இயக்கி இருந்தார்.
ஒரே ஒரு படத்தில் மட்டும் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஜெயம் ராஜா மீண்டும் ஒரு புதிய படத்தில் தம்பியுடன் இணைகிறார்.
கடைசியாக 2010ம் ஆண்டில் ஜெயம் ராஜா – ஜெயம் ரவி கூட்டணியில் தில்லாலங்கடி திரைப்படம் வெளியானது.
சுமார் 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்பு மீண்டும் இந்தக் கூட்டணி கைகோர்க்க இருக்கிறது. இதற்காக ஒரு சூப்பரான கதையை தயார் செய்த ஜெயம் ராஜா அதனை தம்பி ஜெயம் ரவியிடம் கூறி சம்மதம் வாங்கி விட்டாராம்.
இதில் ஜெயரம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பிறந்த மனிதராக இருந்துகொண்டு தமிழ் பேசத்தெரியாமை குறித்து நான் வெட்கப்படுகின்றேன் – இவ்வாறு அபிவிருத்தி லொத்தர் சபையின் தேசிய பணிப்பாளர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு வை. எம். சீ. ஏ. மண்டபத்தில் நடைபெற்ற அபிவிருத்தி லொத்தர் சபையின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மக்கள் நலனோம்பல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றும்போது அவர், இப்போதுதான் முதன்முறையாக தமிழ் பேசும் மக்களுக்கு முன்னால் உரையாற்றுகின்றேன். அதுவும் அந்த மக்களின் மொழியான தமிழ் மொழியில் பேசமுடியாமை மிகுந்த வேதனை தருகிறது. இதுகுறித்து வெட்கப்படுகின்றேன். பல தியாகங்களுக்கு மத்தியில் வடக்கும் தெற்கும் கிழக்கும் இணைக்கப்படடிருக்கிறது. இந்த அமைதியின் மூலம் நாம் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய நேரத்தில் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார்.
இவ்வைபவத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ், மாநகர ஆணையாளர் கே. சிவநாதன் அபிவிருத்தி லொத்தர் சபையின் மட்டக்களப்பு மாவட்ட விநியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ஆதரவோடு ஒரு கும்பல் கிறிஸ்தவ பெண்களை தாக்கி நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவது, பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பிஎம்எல்-என் கட்சியின் ஆதரவுள்ள நிலச் சொந்தக்காரர் அப்துல் ராஷீத் என்பவரின் மகன் மொஹமட் முனீர். அவரால் அனுப்பப்பட்ட அடியாட்கள் சிலர் கடந்த 3ம் திகதி இரவு கிறிஸ்தவ குடும்பம் ஒன்று வசிக்கும் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அந்த வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தனர். வீட்டில் அர்ஷத் பீபி, சாஜிதா பீபி மற்றும் சௌரியா பீபி ஆகிய 3 பேர் மற்றும் அவர்களது மாமனார் சாதிக் மாசிஹ் மற்றும் மாமியார் ராணி பீபி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த அடியாட்கள் சாதிக்கின் மகன்களைத் தேடினர். அவர்கள் இல்லாததால் மருமகள்கள் 3 பேரையும் அடித்து உதைத்து அவர்களின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கினர். பின்னர் அவர்களை வெளியே இழுத்து வந்து ஊராருக்கு அவர்கள் கோலத்தை காட்டினர்.
இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ந்து போயினர். அந்த 3 பெண்களும் உதவி கேட்டு அலறியதையடுத்து ஊர் பெரியவர்கள் தங்கள் தலைப்பாகையை கழற்றி அந்த அடியாட்களின் பாதங்களில் வைத்து பெண்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். இதையடுத்து அடியாட்கள் அங்கிருந்து சென்றனர். ஆனால் பொலிஸாரிடம் சென்றால் அவ்வளவு தான் என்று ஊர் மக்களை மிரட்டிவிட்டு சென்றனர்.
முன்னதாக சாதிக்கின் வீட்டு ஆடுகள் முனீரின் வயல்களில் புகுந்துவிட்டதாம். ஆடுகள் பயிர்களை சேதப்படுத்தியதாக முனீர் தெரிவித்து அவற்றை பிடித்து வைத்துக் கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சாதிக்கின் மகன் சௌகத் முனீரை சந்தித்து ஆடுகளை விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு முனீர் சௌகத்தை அறைய பதிலுக்கு அவர் முனீரை அறைந்துவிட்டார். இதனால் தான் முனீர் ஆட்களை அனுப்பி பெண்களை அவமானப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் சிங்கம் 2.
பரபர விறுவிறு காட்சிகளில் கவனம் ஈர்ப்பவர் அருவா இயக்குநர் ஹரி. சிங்கம் கதையின் தொடர்ச்சியை சிங்கம் 2வில் தொடர்ந்தாலும், சூர்யாவுக்கு இது ரொம்பவே முக்கியமான படமாக இருக்கும்.
சிங்கம் படத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளைப் புரட்டி எடுத்த சூர்யா, சிங்கம் 2வில் தூத்துக்குடியில் உலாவும் கடத்தல்காரர்களையும், பெரிய பெரிய டான்களையும் துவாம்சம் பண்ணுகிறாராம்.
பள்ளிக்கூட மாணவியாக நடிக்கும் ஹன்சிகா தான் சர்வதேசக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சூர்யாவுக்கு உதவி செய்கிறாராம்.
இதைத் தெரிந்து கொண்ட பெரிய டான் ரகுமான், அண்ணன் மகள் என்று கூட பார்க்காமல் ஹன்சிகாவைக் கொன்று விடுகிறார்.
ஹன்சிகா இறந்த பின்பு சூர்யா வெறித்தனமாக வேட்டையாடி ரகுமான் நெட்வொர்க்கைக் கண்டுபிடித்து எல்லா டான்களின் சதிச் செயல்களையும் முறியடிப்பதே சிங்கம் 2வின் கதையாம்.
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிங்கம் 2’ படம் யூலை 5ம் திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிலும் இப்படம் வெளியாகிறது. ஆந்திராவில் யமுடு 2 என்ற பெயரில் வெளியிட இருக்கின்றனர்.