என் அறை

என் அறைக்குள்
வர நினைக்கிறீர்களா
சிறிது நேரம் தாமதியுங்கள்

என் அறைக்குள் வருவதற்கு முன்
தனிமைப் புத்தகத்தை
ஒரு முறை எனினும்
நீங்கள் வாசித்திருக்க வேண்டும்

ஒரு தேநீர் குவளையோடு
யன்னல் மழைய ரசித்து
அருந்த தெரிந்திருக்க வேண்டும்
ஒற்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
நடமாட தெரிந்திருக்க வேண்டும்

புழுதி வாசத்தை
வெளியேறி செல்லும் வரை
சுவாசிக்க தயாராக
இருக்க வேண்டும்

ஒரு கதிரை
ஒரு மேசை

வெள்ளை நிறத்தில்
ஒரு பூ கிண்ணம்
இரண்டொரு கவிதை தாள்கள்
நான் எழுதும் பேனா
நான் எழுதிக் கொண்டே இருப்பேன்
நீங்கள் தரையில்தான்
அமர்ந்திருக்க வேண்டும்
என் ஆடைகளில் உள்ள கிழிசல்கள் பற்றியும்
என் அறைச் சுவரிலுள்ள
அழுக்குகள் பற்றியும்
வேறு எங்குமே பேசக் கூடாது

கவிதை தாள்களோடுதான்
நான் பேசிக் கொண்டிருப்பேன்
என் அறையிலிருந்து
ஒர வரட்சியான புன்னகையை
மட்டும்தான் நீங்கள்
எடுத்து செல்ல முடியும்
நிசப்தம் கலைப்பதற்கு
சிறு குழந்தைகள் இங்கு இல்லை

அறை சுவரில்
கொளுவப்பட்டிருக்கும்
என் சிறு வயது புகைப்படத்தில்
இருக்கும்  புன்னகையை
என் உதடுகளில்
இப்போது நீங்கள் தேடக் கூடாது

உங்களை வரவேற்க
நானும்
என் வாசல் பூக் கன்றுகளும்
என் தாயின் அன்பான புன்னகையும்தான் உண்டு

வருவதென்றால் இப்போது வாருங்கள்
என் அறைக்குள்
தாழ்ப்பாளில்லாத என் வீட்டு
வாசல் கதவு
திறந்தே இருக்கும்

-ஸமான்-

கரையொதுங்கும் மீனவர்களின் சடலங்களால் பரபரப்பு! பலி 59 ஆக உயர்வு! ஆழ்கடலிலும் தேடுதல்

 

தென்னிலங்கையில் கடந்த சனிக்கிழமை வீசிய சூறைக்காற்றினால் காணாமற்போன 17 மீனவர்களின் சடலங்கள் நேற்றைய தினம் மட்டும் கரையொதுங்கியதால் பெரும் பரபரப்பு தொடர்கிறது. கரையோர பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கடற்படையினர் தற்போது ஆழ்கடல் பகுதியில் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களில் நேற்று மட்டும் 17ற்கும் அதிகமான சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இதையடுத்து இந்த சூறைக்காற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 59 என கணிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அகுங்கல,அம்பலாங்கொட பிரதேசங்களில் 14 சடலங்களும், பம்பலபிட்டி தொடருந்து நிலைய கடற்கரையில் 2 சடலங்களும், பெந்தோட்டை பிரதேசத்தில் 1 சடலமும் கரையொதுங்கின.

ஒரேநாளில் பெரும் எண்ணிக்கையான சடலங்கள் கரைஒதுங்கியதை அடுத்து கரையோரப் பிரதேசங்களில் நேற்று பெரும் பரபரப்பு நிலை காணப்பட்டன. இந்த அனர்த்தம் ஏற்பட்டு நான்கு நாட்களாகியுள்ள நிலையில் காணாமல் போயுள்ள எஞ்சியுள்ள மீனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

காணாமற்போனவர்களை தேடும் வேட்டையில் சிறிலங்கா விமானப்படையும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்றைய தினம் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

news1 news2

30 ஆண்டுகளாக மனித ரத்தத்தை குடிக்கும் வினோத பெண்..

woman_blood_002 (1)

அமெரிக்காவை சேர்ந்த பெண் தினமும் இரண்டு லீட்டர் மனித ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் ஜூலியா கெப்லஸ்(45). இவர் கடந்த 30 ஆண்டுகளாக மனித ரத்தத்தை குடித்து வருகிறார்.நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என பலரும் ஜூலியாவிற்கு தங்கள் ரத்தத்தை இலவசமாக வழங்குகின்றனர்.

15 வயதில் தன் காதலனை முத்தமிட்ட போது ஆர்வத்தில் அவரின் உதட்டை கடித்து விட்டதாகவும், அப்போது கண்ட ரத்தத்தின் ருசி தன்னை இன்னும் விடவில்லை என ஜூலியா தெரிவித்துள்ளார்.ரத்தத்தில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால் இதை பருகுவதின் மூலம் தான் மிகவும் இளமையுடனும் புத்துணர்வாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து ரத்தம் குடிப்பதற்காக தானே பிரத்யேகமான முறையில் ஊசி ஒன்றை தயாரித்துள்ளார்.

இதைக் கொண்டு அவர்களின் உடலில் சிறிய துளையிட்டு நேரடியாக ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறார். சில நேரங்களில் ரத்த வங்கிக்கு சென்று விலை கொடுத்து வாங்கியும் ரத்தம் குடிக்கிறார். இவருக்கு ரத்தம் கொடுக்க ஏராளமான நபர்கள் காத்திருக்கின்றனர்.

இவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் கொடையாளர்கள் அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்து மகிழ்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளாக ரத்தம் குடிக்கும் ஜூலியாவுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

யுவன் சங்கர் ராஜாவின் அல்பத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம்!

Yuvan-Shankar

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அல்பத்தில் நடிக்கிறார் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கனவு நாயகன் என்றால் அது அப்துல் கலாம்தான்.

அவரது கொள்கைகளை அடிப்படையாக வைத்து “எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில்” என்ற கருத்துடன் ஒரு அல்பத்தை உருவாக்குகிறார் யுவன் சங்கர் ராஜா.

இந்த அல்பத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரிடமே கேட்டுள்ளார் யுவன். இரு வாரங்களுக்கு முன் டெல்லி சென்று அப்துல் கலாமை நேரில் சந்தித்து இந்த அல்பம் குறித்து விளக்கியுள்ளார் யுவன்.

விஷயத்தைக் கேட்டதும் அவரும் ஒப்புதல் கொடுத்துள்ளார். கலாமுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் யுவன் இதற்கு முன் எந்த அல்பமும் இப்படி பிரபலமடைந்ததில்லை என்று சொல்ல வைக்கும் அளவுக்கு தீவிரமாக வேலையில் இறங்கியுள்ளார்.

 

கண்ணீர் மழையால் நனைந்த வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி!

vav

வவுனியா சைவப்பிரகாச பாடசாலையின் உப அதிபர் பானுமதி சிவசோதிநாதனின் இறுதிக் கிரியைகள் சைவபிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியின் உப அதிபர் பாநுமதி சிவசோதிநாதன் அவர்கள் கடந்த 11ம் திகதி இறைத்துவம் அடைந்தார்.

கடந்த பல ஆண்டுகளாக இப் பாடசாலையில் விஞ்ஞானத்தை போதித்து உப அதிபர் தரத்திற்கு உயர்ததுடன் மாணவர்கள் மத்தியிலும் நீங்காத இடத்தை பெற்றிருந்தார்.

திடீர் என இவ் ஆசிரியர் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பாடசாலை சமூகம் இன்று தமது கண்ணீர் மழைகளுடன் இறுதி விடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

முன்னதாக பட்டானிசூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிகிரியைகள் இடம்பெற்று வவுனியா சைவபிரகாச பாடசாலை பெற்றோர் ஆசிரிய சங்கம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆசிரியரியரை ஊர்வலமாக வவுனியா சைவபிரகாச பாடசாலைக்கு பான்வாத்திய அணிவகுப்புடன் எடுத்து வந்து நினைவேந்தல் நிகழ்ச்சியை மேற்கொண்டனர்

நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது பாடசாலை மட்டும் இன்றி வவுனியா நகரம் முழுவதும் சோகமயமாகியது.

 

வவுனியா பஸ்நிலைய வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் முடிவு ..!

சில தினங்களுக்கு முன்னர் வவுனியா பஸ் நிலையத்துக்குள் அரச பேரூந்து தவிர்ந்த வேறு வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டது. பெரிய வாகங்கள் மட்டுமல்லாது, மோட்டார் வண்டிகள் மற்றும் சைக்கிள்கள் கூட உட்பிரவேசிக்கத் தடை விதிக்கப் பட்டது.

இத் தடை மூலம் தமது அன்றாட வியாபார நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பஸ்நிலைய வியாபாரிகள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வவுனியா பஸ் நிலைய வியாபாரிகள் இன்றைய தினம் கடையடைப்பு போராட்டத்திற்கு ஒழுங்கு செய்திருந்தனர். இன்று காலை பஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கடைகள் எதுவும் வழமைபோன்று திறக்கப்படவில்லை.

தற்பொழுது கிடைத்த செய்திகளின்படி வவுனியா நகரசபை அதிகாரிகளில் சமரசத்தை அடுத்து கடைகள் மீண்டும் திறக்கக் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

-வவுனியாநெற் நிருபர் –

busstand

bustand2

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா இன்று..

kochi

கொழும்பு  கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

காலை 8 மணிக்குத் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுவதுடன் விசேட திருப்பலிகள் பல இன்றைய தினம் காலையிலும் நண்பகலிலும் நிறைவேற்றப்படவுள்ளன.

கொழும்பு உயர் மறைமாவட்டத் துணை ஆயர் மெக்ஸ்வல் சில்வா ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படவுள்ளது.

மாலை 5.30 மணிக்கு கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி நடைபெறவுள்ளது.

இப்பவனி வழமை போன்று திருத்தல முன்றலில் ஆரம்பித்து வேளாங்கண்ணி மாதா ஆலய வீதி, கன்னாரத் தெரு ஜிந்துப்பிட்டி வீதி, விவேகானந்த மேடு வழியாக கொட்டாஞ்சேனை பிரதான வீதியையடைந்து அங்கிருந்து மீண்டும் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடையும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழாவின் இறுதி நிகழ்வாக திருச்சுரூப ஆசிர்வாதமும் இடம்பெறவுள்ளது.

புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெறுவதால் கொச்சிக்கடை, கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதி உள்ளிட்ட அதனை அண்டிய நகர்களில் விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

 

 

பிரித்தானியாவுக்கு ஐந்து நாட்களில் விசிட் வீசா..

british-flag

பிரித்தானியாவுக்கு ஐந்து நாட்களில் “விசிட் வீசா” பெற்றுக் கொள்ளும் புதிய நடைமுறையொன்று இம்மாதம் 24 ஆம் திகதி முதல் பின்பற்றப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கிலேயே இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகக் கட்டணமாக 10000 இலங்கை ரூபாவினை செலுத்துவதன் மூலம் ஐந்து வேலை நாட்களுக்குள் வீசா விண்ணப்பத்திற்கான ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு- உரிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் வீசா வழங்கப்படும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மாணவர் வீசாக்களின் அடிப்படையில் விண்ணப்பிப்போருக்கு இது பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

கனவின் இசை.

கும் இருட்டில்-நீளும்
இரவுகளின் காவலில்
அருந்ததிகளின்
ஆசீா்வதிப்புக்களுடன்
மெல்ல அசைகிறது -இசை

சாளரங்கள் மூடப்பட்ட-பின்னும்
முற்றுப்பெறமறுத்து
கனவுகளில் வழிந்தோடும்
நீா்ச் சொரியலாய்-என்னுள்
புகுந்து தாவுகின்றது
கனவின் இசை
நான்
தேடும்என்னவனாய்..

அவனுக்கு தெரியுமோ
என்னமோ?இசைக்குத்
தெரியும் வெற்றிடமான -என்
இதயத்தில் கனவைநிரப்புவது
எப்படியென்று..

தொலை தூரம் நான்
கானும்என்னவனின்
சிரிப்பொழியை மென்றுவந்து-
இரைமீட்டு செல்கின்றது
என் கனவில் தினமும் -இசை

தகிக்கும் முத்தங்களின்
நினைவுகளின்
வெப்பக் கனதி
படுக்கையை நனைக்க…
இரவுக் குளிரின்
இதங்களைப்பறித்து-
வெப்பம்தணித்து
சென்றதுகாற்றாகி என்
கனவின்இசை…

என் மௌனங்களை உடைத்த
அவன்வெற்றுப் பார்வையை சத்தமற்றஒலிக்கசிவாக்கி…
..இசைக்கத்தொடங்கியது
இதமாக…

பரந்து கிடந்த என் உணா்வுகளை
நொருங்கி சிதைந்தஎன் கனவுகளை
இசையின் வயிற்றில்உருவாகி அழகிய பாடலென்றுவைகறையில்பிறக்கின்றது…

..அதேவிடியலிலே
நரம்பறுந்த வீணையின்
இசையாகி சுருதியில் பேதமடைகின்றது
என் கனவின் இசையெல்லாம்

மித்யா -கானவி.

 

மரத்தினால் உருவாக்கப்பட்ட இயங்கும் மரக்கைக்கடிகாரம்!

வழமையாக உலோகப்பொருட்களால் தான் கடிகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால்..இங்கே மரத்தினால் கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. மரத்தினால் தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரம் எங்கே இயங்கப்போகிறது? என்று தான் எவரும் சொல்வர்.

ஆனால் இன்று இயங்கும் மரக் கைக்கடிகாரம் ஒன்றை தயாரித்துள்ளார் உக்ரைன் நாட்டவர் ஒருவர்.என்றால் நம்புவீர்களா? ஆம்! நம்பித்தான் ஆக வேண்டும்.

மரவேலைப்பாடுகளில் மன்னராக விளங்கும் உக்ரைனைச் சேர்ந்த Valerii Danevych எனும் நபர் மரத்தினால் தொழிற்படக்கூடிய கைக்கடிகாரம் ஒன்றினை உருவாக்கி அசத்தியுள்ளார்.

எனினும் இக்கடிகாரமானது நாள் ஒன்றிற்கு ஏனைய கடிகாரங்களுடன் ஒப்பிடுகையில் 5 நிமிட நேர வித்தியாசத்தை கொண்டிருப்பதுடன், 20 மணித்தியாலங்கள் வரை வலுவை சேமிக்கக்கூடிய மரத்தினாலான சில்லுகளையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

w1 w2 w3 w4 w5 w

இதையும் கொஞ்சம் பாருங்கள்.

வவுனியா அங்காடி வியாபாரிகள் மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக உண்ணாவிரதம்!

வவுனியா நகரசபைக்கு முன்பாக உள்ள அங்காடி வியாபாரிகள் தமக்கு மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக இன்று (12) உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கு என புதிய அங்காடி விற்பனை நிலையமானது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நகரசபைக்கு முன்பாக அமைக்கப்பட்டு வவுனியா நகரசபையால் வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறு வழங்கப்பட்ட இடத்தில் தற்போது 40 வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை இதனால் தமக்கு மாற்றிடம் வழங்குமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பலமுறை நகரசபைக்கு தெரியபடுத்திய போதும் எந்தவிதமான பதிலும் கிடைக்காமையால் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொள்வதாக அங்காடி வியாபாரிகள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகரசபையே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, எம்மையும் வாழ விடுங்கள், எமக்கு மாற்றிடம் வழங்கு போன்ற வாசங்களை ஏந்தியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன், ஆளுனரின் ஆணையாளர் முகைதீன், வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன் மற்றும் நகரசபை உறுப்பினர்களான சிவகுமார், குமாரசாமி, செல்லத்துரை, முநௌவர் ஆகியோர் வருகைதந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் எதிர்வரும் புதன் கிழமை நகரசபைக் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவு தருவதாக நகரசபை நிர்வாகம் மற்றும் சபை உறுப்பினர்களால் உறுதி மொழியும் வழங்கப்பட்டது.

vavuniya1 vavuniya2 vavuniya3

இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதை நிறுத்துமாறு மகஜர்..

vhp

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் குறித்த ஆலயங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியும் விஸ்வ ஹிந்து பர்சஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு வழங்கும் முகமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரவிடம் இன்று காலை மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் குறிப்பிட்டுள்ளதாவது..

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்து மக்கள் மிகவும் ஆழ்ந்த வேதனையடைந்துள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் இந்து ஆலயங்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து வணக்கஸ்தளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு வழங்க அரசாங்க அதிபரிடம் வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேல் கலந்து கொண்டிருந்தார். குறித்த மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிப்பதற்காக விஸ்வ ஹிந்து பர்சஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 30 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

 

பொருளாதார நெருக்கடியால் தொலைக்காட்சியை மூடிய கிரேக்க அரசாங்கம்..

greek
கிரேக்க அரசாங்கம் எவரும் எதிர்பாராத வகையில் தனது தேசிய தொலைக்காட்சியை மூடிவிட்டது. அரசாங்க சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செவ்வாயன்று தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த நேயர்கள் திடீரென அது நின்று போனதைக் கண்டிருக்கிறார்கள்.
அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஹெலனிக் புரோட்காஸ்டிங் காப்பரேஷனுக்கு முன்பாக ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ளனர்.

இந்த ஒளிபரப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற நிதிச் செலவுகள் ஒரு ஊழலுக்கு நிகரானவை என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் 2500 ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி

cyber-attack

சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் முதனிலை வைரஸ் எதிர் கணனி மென்பொருள் உற்பத்தி நிறுவனமான கெஸ்பர்ஸ்கை (kaspersky) நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கணனி பயனர்கள் அதிகளவில் சைபர் தாக்குதல்களுக்கு இலக்காவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய உலக தர வரிசையில் இலங்கை எட்டாம் இடத்தை வகிக்கின்றது.

51 வீதமான கணனிப் பயனர்கள் சைபர் தாக்குதல்களினால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 15 வீதமான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

ஹன்சிகாவுடன் திருமண பந்தத்தில் இணைவாரா சிம்பு?

நடிகர் சிம்பு சென்னை தி.நகரில் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறாராம். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடக்க இருக்கிறது.

இதில் கலந்து கொள்ள சினிமாத் துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகை ஹன்சிகா மோத்வானி கலந்து கொள்ள இருக்கிறாராம்.

விழாவின் முக்கிய அம்சமாக சிம்புவின் திருமணம் குறித்தும் பேசப்படுகிறதாம். சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் பெயரை இந்த விழாவில் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வருவதாக சமீப காலமாக பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இந்த செய்தியை இருவரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் சிம்புவின் புதிய வீட்டின் கிரகக்பிரவேச சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கும் ஹன்சிகா மோத்வானிதான் சிம்புவை கைப்பிடிக்கும் மணப்பெண்ணாக இருக்கக்கூடுமோ? என சினிமா வட்டாராங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு விடை இன்று தெரிந்து விடும்.

வாலு என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.