இலங்கையில் இரு ஆண்களுக்கு ஒரே மனைவி : ஒரே வீட்டில் வாழும் அதிசயம்!!

இலங்கையில் பெண் ஒருவர் இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் சம்பவம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அந்த சம்பவத்தின் பின்னனி நெகிழவைப்பதாக அமைந்துள்ளது.

தமிழர் பிரதேசம் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு திருமணமாகி 10 நாட்களில் கணவர் , கட்டாருக்கு வேலைக்கு சென்ற நிலையில் , அங்கு சென்று ஆறு மாதத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தில் கணவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

கட்டாரில் கோமா நிலைக்கு சென்ற கணவரை அவருடன் கூட இருந்த நண்பர் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்துள்ளார். கோமாவில் இருந்து மீண்ட கணவன், பக்கவாத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டுக்கு திரும்பி வருகின்றார்.

இலங்கை வந்த அவருக்கு மனைவியை பார்த்து மிகவும் வேதனையாகி விட்டது. தீர யோசித்த கணவர், தனது கட்டார் நண்பரிடம் தனது மனைவியை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் நண்பனின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அவர் , நண்பனின் மனைவியை திருமணம் செய்து இலங்கையில் வசித்து வருகின்றார். முதல் கணரும் அவர்களுடனேயே வசித்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனைவிக்கு விவாகரத்து கொடுத்து நணபரை திருமணம் செய்த வைத்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரை, மனைவியும் நண்பரும் மிக கவனமாக கவனித்துகொள்கின்ற சம்பவம்தான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன் நம்பி வந்த பெண்ணின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாதே என்ற கவலையில், தன் நண்பரையே மனைவிக்கு திருமணம் செய்துவத்த முன்னாள் கணவரும், இவரை எதற்கு பார்க்கவேண்டும் என எண்ணாமல் தன் முதல் கணவரை தாங்கும் இந்த குடும்பத்தின் செயலும் சமுக வலைத்தள வாசிகளை நெகிழவைத்துள்ளது.

பேஸ்புக்கில் யுவதிக்கு பாலியல் லஞ்சம் கேட்ட 21 வயது இளைஞன் கைது!!

பேஸ்புக்கில் போலி கணக்குகளை உருவாக்கி ராகம யுவதி ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய 21 வயது இளைஞனை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் சுமார் 50 போலி முகநூல் கணக்குகளை வைத்திருப்பதாகவும் அதன் மூலம் பல இளம் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ராகம பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய யுவதியின் முகநூல் கணக்கில், சுமார் 2 வருடங்களாக நண்பராக இருந்த இளைஞன் ஒருவர், பல சந்தர்ப்பங்களில் காதல் உறவைத் தொடங்குமாறு தெரிவித்திருந்த நிலையில் அவர் அந்த அழைப்பை நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை அந்த இளம்பெண் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்து ஆத்திரமடைந்த இளைஞன், இளம்பெண்ணுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய இணையதள இணைப்புடன் போலி பெண் பேஸ்புக் கணக்கு மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த பெண் அந்த லிங்கை ஓபன் செய்யாததால் அதை சரிபார்க்குமாறு காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவரது காதலன் இணைப்பைத் திறந்தபோது சந்தேகத்திற்குரிய இளைஞனின் பேஸ்புக் கணக்கை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் சந்தேகமடைந்த இளைஞன், காதலனுக்கும், காதலிக்கும் இடையே நடந்த உரையாடலில் ஈடுபட்டு, இருவரும் பரிமாறிக் கொண்ட பெண்ணின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து, நிர்வாணப்புகைப்படங்களாக எடிட் செய்துள்ளார். பின்னர், சந்தேகநபர் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை காட்டி, அவரது நிர்வாண வீடியோ காட்சிகளை கேட்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபரிடம் நிர்வாண வீடியோ அனுப்பாவிட்டால், அவரது எடிட் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதன்படி, குறித்த யுவதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதன் பின்னர் பொலிஸாரின் அறிவுறுத்தலின் பிரகாரம் சந்தேகநபரை பிடிக்க பிலியந்தலைக்கு வருமாறு பெண் ஊடாக சந்தேக நபருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சந்தேகநபர் யுவதியை சந்திப்பதற்காக கடந்த சனிக்கிழமை பிலியந்தலை பேருந்து நிலையத்திற்கு வந்த போதே பிலியந்தலை பொலிஸாரால் குறித்த நபரை கைது செய்ய முடிந்தது. ஹிக்கடுவ, கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இப்படி ஒரு மனிதரா? தள்ளாத வயதிலும் வியக்கவைத்த முதியவர்!!

கண்டியை சேர்ந்த 83 வயதான பியசேன எனும் முதியவர் தள்ளாத வயதிலும் தனது உழைப்பால் பலரையும் வியக்க வைத்துள்ளார். இந்த வயதிலும் கணியில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து வியாபாரம் செய்கின்றாராம் இவர். சோம்பேறிகளுக்கு இப்படிப்பட்ட வியாபாரிகள் முன்னுதாரண புருஷர்களாகத் திகழ்கின்றனர்.

அதுமட்டுமல்லாது சிறு வயதில் உடலில் பலமிருந்தும் யாசகம் கேட்பவர்களுக்கு இப்படிப்பட்ட மனிதர்கள் சிறந்த உதாரணம் என சமூக வலைத்தளத்தில் 83 வயதான இந்த முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இவர் விற்கும் துடைப்பம் 200 ரூபா மட்டுமேதானாம். இவரை காண்பவர்கள் முதியவரின் உழைத்து வாழவேண்டும் எனும் அவரது முயற்சியை பாராட்டி அவர் விற்கும் துடைப்பத்தை வாங்கி உதவலாமே.

கோர விபத்தில் பெண் உட்பட இருவர் பரிதாபமாக பலி!!

மாத்தளை மாவட்டம் வரக்காமுறை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் பெண் ஒருவரும் இளைஞன் ஒருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்றையதினம் (25.03.2024) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதன்படி, மோட்டார் சைக்கிளில் பயணித்த 31 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

81 வயதில் இடம்மாறிய கர்ப்பம் : அறுவை சிகிச்சையை எதிர்கொண்ட மூதாட்டி!!

இடம்மாறிய கர்ப்பத்தினால் 81 வயதில் அறுவை சிகிச்சையை எதிர்கொண்ட மூதாட்டி ஒருவர் சிகிச்சையின் பின்னர் அவருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக தெரிய வருகையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 81 வயதான டேனிலா வேரா என்பவருக்கு திடீரென அடிவயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது.

சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டேனிலாவுக்கு 3டி ஸ்கேன் எடுத்ததில் அவரது அடி வயிற்றுப் பகுதியில் இறந்த குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.

டெனிலாவுக்கு, கரு கர்ப்பப்பையில் உண்டாகாமல், கருப்பைக்கு வெளியில் உண்டாகியுள்ளது. இது இடம்மாறிய கர்ப்பம் (Ectopic pregnancy) எனப்படுகிறது.

டேனிலா முதன் முதலாக கருவுற்றிருந்தபோது இந்த இடம் மாறிய கர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கருப்பையை விட்டு வெளியே வளரும் கருவானது, போதிய வளர்ச்சியின்றி இறந்துவிடும். இறந்த கருவானது சில நாட்களில் கல் குழந்தையாக மாறிவிடும்.

அத்துடன், இதற்கு முன்பு அவர் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வயிற்றில் இன்னொரு இறந்த கரு இருப்பதை அறியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்று சிகிச்சைக்காக முதலில் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டார்.

இவ்வாறிருக்க, 56 வருடங்களாக வயிற்றிலிருந்த கல் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வைத்தியர்கள் நீக்கியுள்ளனர். ஆனால், அவருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இந்த அபூர்வ ‘கல் குழந்தை’ மூதாட்டியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாடசாலை மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு!!

வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியே உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (23) மாலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் சிறிதரன் அனார்த்தினி வயது 16 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவியின் மரணத்திற்கு காதல் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மாதவிடாய் கோளாறு : பரிதாபமாக பலியான பல்கலைக்கழக மாணவி!!

களனிப் பல்கலைக்கழக கலைப்பிரிவு இறுதியாண்டு மாணவி ஒருவர் மாதவிடாயால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு தாமதமாக சிகிற்சை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதாந்த மாதவிடாய் சுழற்சி தினங்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியைக் கவனிக்காமல், முறையான வைத்திய சிகிச்சையைப் பெறாத காரணத்தினால் உயிரிழக்க நேரிட்டதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சம்பவத்தில் பதுளை , மஹியங்கனை, திபுலபலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் லக்மினி இனோகா திஸாநாயக்க என்ற 25 வயதுடைய யுவதியே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் அகால மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி கடந்த 2019 இல் களனி பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் மாணவி கடந்த இரண்டு வருடங்களாக மாதாந்திர மாதவிலக்கு நாளன்று வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அந்த வலியை சகஜம் போல் தாங்கி கல்வி கற்று வந்துள்ளார்.

அதேவேளை இறுதியாண்டு மாணவி லக்மினியின் பட்டமளிப்பு விழாவும் இம்மாதம் 25ம் திகதிதான். தனது பட்டப்படிப்பு சான்றிதழுக்காக கடந்த 19ம் திகதி போட்டோ எடுத்திருந்தார்.

அன்றையதினம் மாதவிடாய் வயிற்றுவலி தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததால், சிகிச்சை பெறுவதற்காக நெருங்கிய தோழி ஒருவருடன் கிரிபத்கொட வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியிருந்ததால் ராகம வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி லக்மினியின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை ராகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கடந்த 22ம் திகதி மாலை 6.58 மணியளவில் லக்மினி உயிரிழந்தார். உயிரிழந்த லக்மினி அவரது குடும்பத்தில் உள்ள ஒரே பெண் குழந்தை என கூறப்படுகின்றது.

உயிரிழந்த லக்மினியின் பிரேத பரிசோதனை ராகம வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் ரமேஷ் அழகியவண்ணவினால் மேற்கொள்ளப்பட்டு திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் ராகம வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி எஸ். எஸ். திஸாநாயக்க பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். லக்மினியின் இறுதிக் கிரியைகள் நேற்று (25) மாலை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

மாணவியின் துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக வலி கொடுத்தும், குறிப்பிட்ட நோயை அலட்சியப்படுத்தியதே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணம்.

மேலும் இதுபோன்ற அகால மரணங்கள் நமது பெற்றோர், பெரியவர்கள், சமுதாயத்திற்கு பெரும் பாடம் என்றும், உங்கள் குழந்தை ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், தாமதிக்காமல் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அரிவுறுத்தியுள்ளனர்.

ஃபேஸ்புக் பழக்கம் இரட்டை கொலையில் முடிந்தது… ஓராண்டுக்குப் பின் குற்றவாளி கைது!!

ஃபேஸ்புக் மூலம் பழகிய இளம்பெண் மற்றும் அவரது மகனை கொலை செய்தவர் ஓராண்டுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவரது மகன் ரோஹன்(13). இந்த நிலையில், விஜயபுராவைச் சேர்ந்த சாகர் நாயக் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டது.

திருமணமான ஸ்ருதியுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் சாகர் நாயக்கிற்கு காதலமாக மாறியது. இதையடுத்து அவர்களது பழக்கம் நெருக்கமானது. இந்த நிலையில், ஸ்ருதியின் நடத்தையில் சாகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

இதனால் கோபித்துக் கண்டு விஜயபுராவில் உள்ள சிந்தகி சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு சாகர் வந்தார். ஆனால், அவரை பிரிய மனமில்லாத ஸ்ருதி, தனது மகன் ரோஹனுடன் சாகரைத் தேடி விடுதிக்கு 2023 மார்ச் 13 அன்று வந்தார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஸ்ருதியை கழுத்தை நெரித்து சாகர் கொலை செய்தார்.

இதை நேரில் பார்த்த ரோஹன் வெளியே சொல்லி விடுவானோ என்ற அச்சத்தில் அவனையும் சாகர் கொலை செய்தார். இதன்பின் அவர்கள் இருவரது உடல்களையும் துணி மூட்டையில் கட்டி மகாராஷ்டிரா எல்லையில் உள்ள சித்தாபூர் கிராமத்தின் எல்லையில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு சாகர் தலைமறைவானார்.

இதன்பின் ஒரு வாரம் கழித்து, பைகள் கிணற்றில் மிதந்தன. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த திருக்கோட்டை போலீஸார், இரண்டு சடலங்களை கண்டெடுத்தனர். ஆனால், உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ருதியும், அவரது மகனும் காணவில்லை என்று அவரது உறவினர்கள் மைசூரில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

மைசூருவில் காணாமல் போகும் போது ஸ்ருதி, ரோஹன் அணிந்திருந்த உடைகள் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட உடல்களில் இருந்த உடைகளும் ஒன்றாக இருந்தன.

இதையடுத்து ஸ்ருதியின் உறவினர்கள், இறந்த உடல்களைக் அடையாளம் கண்டு பிடித்தனர். இதனால் ஸ்ருதியின் செல்போன் தொடர்புகளை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ஸ்ருதிக்கு சாகர் நாயக் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை பிடித்து போலீஸார் விசாரித்த போது உண்மை தெரிய வந்தது. அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த ஊரக போலீஸார், சாகரை நேற்று இரவு கைது செய்தனர்.

ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண்ணையும், அவரது மகனையும் கொலை செய்த வாலிபர் ஒரு வருடத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண் எதிரே கிணற்றில் குதித்த காதலி… காப்பாற்றாமல் தப்பிச் சென்ற காதலன்!!

பொருந்தா காதல் 30 வயதேயான இளம்பெண்ணின் வாழ்வையே பறித்துக் கொண்டுள்ளது. ஏற்கெனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாய் நிற்கிறது.’

30 வயதேயான மதுபிரியா, தன்னுடைய கள்ளக்காதலன் தொடர்ந்து 2வது திருமணத்திற்கு வற்புறுத்தியதால், மன உளைச்சலில் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்து கொண்டது சோகம் என்றால், கண் எதிரே கிணற்றில் குதித்ததைப் பார்த்தும், காப்பாற்றாமல் அப்படியே தப்பி ஓடிச் சென்றவனை என்ன சொல்வது?

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மது பிரியா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுபிரியா கடந்த 2 வருடங்களுக்கு முன் கணவரைப் பிரிந்து ஆலங்காயம் காமராஜர் நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மதுபிரியா நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நிம்மியம்பட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்து திடீரென மதுபிரியா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியடைய செய்தது. இது தொடர்பாக தகவல் அறிந்து சென்ற ஆலங்காயம் போலீசார், வழக்குப்பதிவு செய்து அதேப் பகுதியை சேர்ந்த சரத்குமார் (34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், மதுபிரியா தற்கொலைச் செய்து கொண்ட சம்பவத்தன்று சரத்குமார், மது பிரியாவை வற்புறுத்தி அருகே உள்ள மராட்டிபாளையம் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் அந்தப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது, சரத்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மதுபிரியாவை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனஉளைச்சலுக்கு ஆளான மது பிரியா, சரத்குமாரின் கண் எதிரிலேயே திடீரென ஓடிச் சென்று அருகில் இருந்த கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், கண் எதிரே மதுபிரியா கிணற்றில் குதித்ததைப் பார்த்தும், அவரை காப்பாற்றாமல் சரத்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

மது பிரியாவுக்கு திருமணம் ஆகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால் இது குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நர்ஸ் தற்கொலைக்கு காரணமாக இருந்த சரத்குமாரை கைது செய்தனர்.

லண்டனில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

லண்டனில், சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்திய இளம்பெண் ஒருவர், லொறி மோதி பலியானதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்த இந்தியப் பெண்ணான Cheistha Kochhar (34), கடந்த செவ்வாயன்று, அதாவது, மார்ச் மாதம் 19ஆம் திகதியன்று, சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார். அவரது கணவரான Prashant, அவருக்கு சில அடிகள் முன்னால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, குப்பை சேகரிக்கும் லொறி ஒன்று Cheistha மீது மோதியுள்ளது. சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த Prashant, மனைவிக்கு உதவ ஓடோடிச்சென்றுள்ளார். மருத்துவ உதவிக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தும் Cheisthaவைக் காப்பாற்ற முடியவில்லை.

உயிரிழந்த Cheistha, ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரியாகிய Lieutenant General Dr SP Kochhar என்பவரின் மகள் ஆவார்.

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Bareilly என்னுமிடத்தைச் சேர்ந்தவரான Cheistha, பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்றுள்ளார். தேசப்பற்று மிக்கவரான அவரது நோக்கம் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்புவது என்று கூறியுள்ளார் Cheisthaவின் தந்தை.

Cheisthaவின் உயிரிழப்பால் அதிர்ச்சியடைந்துள்ள அவரது சகாக்கள், சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள். Cheisthaவின் தந்தை மகளுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

தனது தோலில் செய்யப்பட்ட காலணியை தாய்க்கு வழங்கிய இளைஞர் : ஏன் தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி பகுதியில் நெஞ்சை வருடும் வகையில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்த ரவுனக் குர்ஜார் என்பவர் தனது தோலில் இருந்து காலணிகள் செய்த தாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பேச்சு பொருளாகி வருகின்றது.

ரவுனக் குர்ஜார் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்படும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகினார். இதன் போது அவருக்கு கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

எனவே தொடையில் உள்ள தோல் அகற்றப்பட்டது. அவரின் உடலில் இருந்து அகற்றப்பட்ட அந்த தோலை காலணிகள் செய்யும் தொழிலாளியிடம் ஒப்படைத்துள்ளார். அதிலிருந்து தனக்கு ஓர் காலணி செய்து தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி தொழிலாளியும் காலணியை வடிவமைத்துள்ளார்.

அதை ரவுனக் குர்ஜார் என்பவர் தாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். அவருடைய கிராமத்தில் நிகழ்ந்த ஓர் நிகழ்ச்சியின் போதே இதை தனது தாயிடம் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், நான் ராமாயணத்தை தவறாமல் பாராயணம் செய்வேன். அதில் தாயாருக்கு தன் தோலினால் செருப்பை செய்தாலும் போதாது என்று ராமரே கூறியிருந்தார்.

அது என் நினைவில் இருந்தது. எனவே நான் இதை செய்து முடித்தேன். சொர்க்கம் என்பது பெற்றோரின் காலடியில் தான் இருக்கிறது என்பதை சமூகத்திற்கு தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்த நெகிழ்ச்சியான செயல் குறித்து அவருடைய தாயார் கூறுகையில், ரவுனக் போன்ற ஒரு மகனை பெற்றதை நான் பாக்கியமாக பார்க்கிறேன்.

கடவுள் அவரை அனைத்து பிரச்சினையில் இருந்தும் காப்பாற்றி, சந்தோஷமாக எப்போதும் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை… கடிதம் எழுதி வைத்து விட்டு மகளுடன் தம்பதியர் தற்கொலை!!

வருவாய்த் துறையினரைக் கண்டித்து வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகக் கூறி நெசவாளர் ஒருவர் ரயிலில் பாய்ந்தும், அவரது மனைவி, மகள் தூக்கிலிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் (கடப்பா) மாவட்டத்தில் வொண்டிமிட்டா மண்டலம் கொத்த மாதவரத்தைச் சேர்ந்தவர் சுப்பாராவ்(47). இவரது மனைவி பத்மாவதி(41), மகள் வினய்(17). நெசவாளரான சுப்பாராவுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் உள்ளது.

இந்நிலையில், அந்த நிலத்தை விற்க சுப்பாராவ் முயற்சி செய்துள்ளார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளால் தனது நிலப்பதிவேட்டில் குளறுபடி செய்யப்பட்டதை சுப்பாராவ் அறிந்தார். இதனால் தனது மூன்று ஏக்கர் நிலத்தை விற்க முடியாமல் சுப்பாராவ் தவித்து வந்தார்.

இந்த நிலையில், சுப்பாராவ் தனது மனைவி, மகளோடு தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார். இன்று காலை, கொத்த மாதவரத்தில் ரயிலில் பாய்ந்து சுப்பாராவ் தற்கொலை செய்து கொண்டார்.

அதே நேரத்தில் வீட்டில் பத்மாவதி, வினய் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சுப்பாராவ் மற்றும் அவரது மனைவி, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் வீட்டில் சோதனையிட்ட போது, சுப்பாராவ் எழுதிய கடிதம் கிடைத்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களை ஏமாற்றி விட்தால், தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று சுப்பாராவ் கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும், மூன்று உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இளம் பெண்ணின் முகநூலில் இரசியமாக நுழைந்து இளைஞர் செய்த செயல் : ஆடிப்போன பெண்!!

அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் இரகசியமாக நுழைந்து பாலியல் லஞ்சம் கேட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் அந்தரங்கப்படங்களை போலியாக தயார் செய்து அவரை மிரட்டிய நிலையில் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணிடம் இளைஞர் பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது . இளம் பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்த இளைஞர், குறித்த பெண்ணிடம் காதலிக்குமாறு கேட்டுள்ளார்.

எனினும் அவரது கோரிக்கைக்கு இணங்க பெண் மறுத்துள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி, அந்தரங்க புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுதாக மிரட்டியுள்ளார்.

அதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எந்தவிதமான கணினி அறிவும் இல்லை, ஆனால் மற்றவர்களின் சமூக ஊடக வலையமைப்புகளை அணுகும் அசாத்திய திறமை கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கைதான இளைஞருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்..

வியக்க வைக்கும் திறமையால் உலக சாதனையை நிகழ்த்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர்!!

யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்பவரெ இந்த சாதனையை படைத்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் இன்றையதினம் (24-03-2024) காலை 10.00 மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை தனது தாடியாலும் முடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்தது.

இதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய ஏஷ் பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரத்துக்கு தாடியாலும், 500 மீற்றர் தூரம் வரை தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் சாதனை படைத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உலக சாதனை புத்தக நிறுவனப் பிரதிநிதிகள் இந்த சாதனை நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இதன்போது வாகனத்தை இழுத்துவந்த செல்லையா திருச்செல்வத்தை ஆரம்பம் முதல் சாதனையை நிலைநாட்டும் வரையில் அமைச்சர் உற்சாகப்படுத்தி வந்தார்.

இந்த நிகழ்வை Cholan Book of World Record (CBWR) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வத்தின் சாதனையை அங்கீகரித்து, பதக்கத்தையும் விருதையும் பட்டயத்தையும் அமைச்சரின் கரங்களால் வழங்கி வைத்தனர்.

செல்லையா திருச்செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக தனது தலைமுடியாலும், தாடியாலும் வாகனங்களை இழுப்பது, தனது உடலின் மீது வாகனத்தை ஓடவிடுவது போன்ற சாதனைகளை நிலைநாட்டி வருகிறார்.

60 வயதான சாதனை நாயகன் அண்மையில் சாவகச்சேரி பஸ் நிலையத்தின் அருகில் 1550 கிலோ எடையுள்ள வாகனத்தை 1500 மீற்றர் தூரம் வரை 45 நிமிடங்களில் இழுத்து சாதனை படைத்துள்ளார்.

கனடாவில் இருந்து வெளியேறும் பலர் : இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரஜைகளினால் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கனடாவில் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

இதனால் குடியேறும் சில ஆண்டுகளில் அவர்கள் வேறும் நாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கி விடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2013ம் அண்டில் குடியேறிகளின் எண்ணிக்கை 6000 மாக காணப்பட்டதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 32000 மாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்கும் குடியேறிகளில் 50 வீதமானவர்கள் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் தாக்குப் பிடிக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீடமைப்பு, மருத்துவ சேவை, கல்வி வசதி, பாடசாலை வசதி போன்ற சில காரணிகளினால் குடியேறிகள் தொடர்ச்சியாக கனடாவில் வாழ்வதற்கு விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் போர் காரணமாக உக்ரைனிலிருந்து கனடாவின் நோவா ஸ்கோடியாவில் குடியேறிய பெண் ஒருவர் வாழ்க்கைச் செலவு பிரச்சினை காரணமாக கனடாவை விட்டு வெளியேறி, ஜோர்ஜியாவில் குடியேறியுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டில் கனடாவில் குடியேறிய டிடென்யா மெலினெக் என்ற பெண்ணே இவ்வாறு கனடாவை விட்டு வெளியேறியுள்ளார். வாழ்க்கைச் செலவு பிரச்சினை காரணமாக இவ்வாறு கனடாவை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே கனடாவிற்குள் குடியேறுவோர் இந்தக் காரணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி சரியான திட்டமிடலுடன் குடியேறுவது பொருத்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் இருந்து கனடா செல்வோரின் எண்னிக்கை அதிகமாகியுள்ள நிலையில், பெரும் தொகை கொடுத்து கனடா செல்லும் பலர் , இவ்வாறான வாழ்க்கை செலவு இடர்களுக்கு முக கொடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேசமயம் கனடாவிற்கு செல்லும் இலங்கையர்களும் இந்தக் காரணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி சரியான திட்டமிடலுடன் சென்றால் அவர்கள் வாழ்க்கை பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை.

இலங்கையில் குறைவடையும் தங்கத்தின் விலை!!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (25) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 661,766 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,350 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 186,750 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,410 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,250 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,440 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 163,450 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.