களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதால் குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் நேற்று (24.03.2024) இரவு திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகயீனமுற்ற மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க எந்தவொரு அம்புயுலன்ஸ் வசதியும் களனி பல்கலைக்கழகத்தில் காணப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, இதற்கு, எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடம் முன்பாக ஏறத்தாழ 150 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும், மேலும், 04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையிலும், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்பாகமுவ, பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் கல்விப் பொதுத் தராதர பரீட்சையில், சித்தி பெறாத மாணவர்கள் கல்வியைப் பெற்று வருவதாகவும், இதன்போதே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 அல்லது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காய் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்கின்ற தேங்காயில் ஒரு பங்கு மாத்திரமே தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும் இனி வரும் மாதங்களில் முற்றாக தேங்காய் இல்லாத நிலை காணப்படும் எனவும் தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம் கிளிநொச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளை ஈ தாக்கம் என தெரிவித்துள்ளனர். இதனால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளர்கள் மற்றும் தென்னை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெண் ஈ தாக்கம் காரணமாக பலரது தோட்டங்களிலுள்ள வெண் ஈ தாக்கப்பட்ட மரங்களில் சிறு குரும்பைகூட இல்லாமல் வெறுமனே நோய் தாக்கம் ஏற்படுத்தப்பட்ட மரமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தென்னை பயிர் செய்கையாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை (23/03/2024) இடம்பெற்றது. அதிகாலை 5.00 மணிக்கு அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜை இடம்பெற்று மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை 6.30 மணிக்கு தம்ப பூஜையும் இடம்பெற்றன. தொடர்ந்து காலை7.00 மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி 8.00 மணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர், விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து 9.00 மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. . மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று நண்பகல் 12.00 மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன் .தொடர்ந்து பிராயசித்த அபிசேகமும் இடம்பெற்றது.
அறுந்து விழுந்த கேபிள் வயரில் மின்சாரம் பாய்ந்து டூவீலரில் சென்ற புதுப்பெண்ணான செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவில் உள்ள சின்சலகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ்(36). இவர் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவில் உள்ள இப்பாடி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து லட்சுமிபாய் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரியும் லட்சுமணன் டூவீலரில் வந்துள்ளார். அவர் லட்சுமிபாயின் ஊரைச் சேர்ந்தவர் என்பதால்,வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார்.
இதனால் அவருடன், செவிலியர் லட்சுமிபாய் ஜாதவ் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது குனிகல் நோக்கி டூவீலர் சென்ற போது சாலையில் நடுவில் இருந்து கேபிள் வயர் அறுந்து டூவீலரில் சென்ற லட்சுமிபாய், லட்சுமணன் ஆகியோர் மீது விழுந்தது.
அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செவிலியர் லட்சுமிபாய் ஜாதவ் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த தலைமை ஆசிரியர் லட்சுமணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லட்சுமி பாய் உடல், பிரேத பரிசோதனைக்காக குனிகல் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குனிகல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் தான் லட்சுமிபாய் ஜாதவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியால் சின்சலகட்டே பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
64 லட்ச ரூபாய் கேட்டு கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதிய 5 பக்க கடிதம் தற்போது கிடைத்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், கே.ஆர் பேட்டை தாலுகா லிங்கபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமகுமாரி(26). இவருக்கும் மைசூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அப்போது பிரேமகுமாரியின் குடும்பத்தினர் 150 கிராம் தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால், திருமணமான மூன்றே மாதங்களில் வரதட்சணை கேட்டு பிரேமகுமாரியை அவரது கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ரூ.64 லட்சம் தராவிட்டால், வீட்டில் இடமில்லை என பிரேமகுமாரியை அவரது வீட்டுக்குத் துரத்தியுள்ளனர். வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை கொண்ட பிரேகுமாரி, தனது வீட்டில் இருந்த அதற்காக படிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில், வரதட்சணை வாங்கி வராததால் கணவர் வீட்டில் இருந்து பிரேமகுமாரிக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பிரேமகுமாரி வீட்டில் தூக்குப்போட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலைக் கைப்பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பிரேமகுமாரி எழுதிய 5 பக்க கடிதம் போலீஸாரிடம் தற்போது கிடைத்துள்ளது. அதில், வழக்கறிஞராக வேண்டும் என்ற எனது கனவு நனவாகியுள்ளது. ஆனால், என் கணவருடைய கோபத்தை என்னால் தாங்க முடியவில்லை.
எந்நேரமும் பயத்துடனே வாழ்க்கையை நடத்துவது போல் இருக்கிறது. நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றி விட்டனர். பணக்கார வீட்டு பெண்ணான எனக்கு சாக தைரியம் இல்லை, ஆனால், வாழவும் ஆசை இல்லை என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து பிரேமகுமாரி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ராகவேந்திரா குடும்பத்தினர் மீது கிக்கேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்திரவிளை அருகே இளம்பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் குரல்வளை நொறுங்கியதால் கொடூரமாக உயிரிழந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் கடைசி நிமிடத்தில் சித்ரவதையை அனுபவித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் சஜின் (37). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ஷானிகா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. 2 தினங்களுக்கு முன் இரவு நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பேச்சு மூச்சு இல்லாமல் ஷானிகாவை அனுமதித்துள்ளனர் .
மருத்துவமனை ஊழியர்கள் ஷானிகாவை பரிசோதனை செய்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து உடலை கேட்டு தகராறு செய்ததால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நித்திரவிளை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் ஷானிகாவின் கழுத்து நெரிக்கப்பட்டு குரல்வளை உடைந்ததால் தான் இறந்திருப்பது உறுதியானது. ஷானிகாவின் கடைசி நிமிடங்கள் மிகவும் சித்ரவதை அனுபவித்து இறந்திருக்கலாம் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே ஷானிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் அல்லது யாரேனும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்ற இரண்டு வாய்ப்பு மட்டுமே இருக்கலாம் என பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
இதையறிந்ததும் தனது மகளை கணவர் வீட்டினர் கொலை செய்துவிட்டதாக கூறி ஷானிகாவின் தந்தை தனிஸ்லாஸ் (65), நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சஜினின் வீட்டில் சென்று பார்த்தனர்.
அங்கு ஷானிகா தற்கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும் தென்படவில்லை. ஷானிகாவின் கணவர் சஜின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, சம்பவத்தன்று சஜினும், ஷானிகாவும் அறைக்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் ஷானிகா மட்டும் அறையை விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர் திடீரென மயக்கம்போட்டு விழுந்துவிட்டதாக சஜின் எங்களை அழைத்தார். நாங்கள் வந்து பார்த்தபோது ஷானிகா சுயநினைவின்றி கிடந்ததை கண்டோம்.
பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மயங்கிய நிலையில் கிடந்தபோதுதான் ஷானிகாவை பார்த்தோம். எனவே அங்கு என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு தெரியாது என சஜினின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் ஷானிகாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதே அவரது கணவர் சஜின் தலைமறைவாகிவிட்டார். எனவே சஜின் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சஜினை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. சஜின் சிக்கினால்தான் உண்மையிலேயே என்ன நடந்தது என தெரியவரும்.
இதுகுறித்து ஷானிகாவின் தந்தை தனிஸ்லாஸ் போலீசிடம் அளித்துள்ள புகாரில், 2015ம் ஆண்டு எனது மகளை சஜின் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். ஆரம்பத்தில் சஜின் நன்றாக தான் இருந்தார். கடந்த 3 வருடங்களாக கஞ்சா, மது போதையில் வீட்டுக்கு வருவதும் தெரியவந்துள்ளது.
ஷானிகா மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறினர். இதனால் எனது மகள் சாவில் சஜின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் உள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நித்திரவிளை போலீசார் சந்தேக மரணமாகவும், அதில் சஜினின் பெயரையும் சேர்த்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
10 வயசு மகளைக் கொடூரமாக குத்திக் கொன்று இங்கிலாந்தில் அதிர வைத்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய். இந்த கொலைக் குற்றத்திற்காக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட் மாகாணத்தில் உள்ள ரவுலி ரெஜிஸ் நகரத்தில் உள்ள வீடொன்றிற்கு, கடந்த 4ம் தேதி, இரவு 12.10 மணியளவில் போலீசார் அழைக்கப்பட்டார்கள். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு ஷே கேங் (10) என்கிற சிறுமி படுகாயமடைந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறாள்.
இதையடுத்து மருத்துவ உதவிக் குழுவினர் அவளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல், ஷே கேங் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் தாய் ஜஸ்கிரத் கௌர் என்னும் ஜாஸ்மின் கேங் (33) கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், குழந்தை கொல்லப்பட்டது எப்படி என்ற தகவலை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்கள். குழந்தை ஷே கேங்கின் மார்பில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், ஜாஸ்மின் வால்வர்ஹாம்ப்டன் கிரௌன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் குற்றம் செய்ததை ஒப்புக்கொள்ளவும் இல்லை, எதற்காக குழந்தையை அவர் கொலை செய்தார் என்பதும் தெரியவில்லை. மீண்டும், ஏப்ரல் மாதம் 22-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கவேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நவீன் (25). இவரும், ஹாசன் பேளூரை சேர்ந்த தேஜஸ்வினி என்ற 21 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இதை அறியாத பெண்ணின் குடும்பத்தினர் தேஜஸ்வினிக்கு சிவமொக்காவை சேர்ந்த பிரமோத் குமார் என்பவருடன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். பெற்றோருக்கு பயந்த தேஜஸ்வினி காதலை மறைத்து திருமணத்திற்கு சம்மதித்தார்.
இந்நிலையில், பேலூரு உள்ள ஒக்கலிகர் பவனில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அப்போது, மணமகன் தாலி கட்டிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த காதலன் நவீன், திடீரென தாலியை பறித்து, ‘ இந்த பெண் என்னை காதலிக்கிறாள்.
அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்” என்று கூறினர். இதனால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனால் பெண்ணின் குடும்பத்தினர் பேலூரு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் பேலூரு போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மணமகள், நவீனை யாரென்று தெரியவில்லை. மணமகன் காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், மணமகன் பிரமோத்குமார், ‘‘இந்தத் திருமணம் தேவையில்லை’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் நவீன் மற்றும் மணமகள் தேஜஸ்வினியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்தது. போலீஸ் ஸ்டேஷனில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், பெண் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் நவீன் காட்டினார்.
நேற்று இரவு குறுஞ்செய்தியில், “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. என்னால் திருமணத்தை நிறுத்த முடியாது. நீ எப்படியாவது வந்து இந்தக் கல்யாணத்தை நிறுத்து” என்று தேஜஸ்வினி குறுஞ்செய்தி அனுப்பினாள்.
இதையடுத்து இருவரது பெற்றோரையும் அழைத்து போலீசார் திருமணம் செய்து வைக்க அறிவுறுத்தினர். இதையடுத்து இரு வீட்டாரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பத்து நாடுகளில் இலங்கையும் ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் காலநிலை தொடர்பான முதலாவது அமர்விலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு இலங்கை காலநிலை நாடாளுமன்றம் உள்ளக அமைப்புகளுடனும் ஏனைய நாடுகளுடனும் இணைந்து செயற்படும் என எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.
இதேவேளை, 2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காலநிலை மாற்றம் ஒரு சதவீத இழப்பை ஏற்படுத்தும் என்றும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் விவசாயத் துறை பில்லியன் கணக்கான டொலர்களை இழக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால், வெப்ப மண்டல பாதை முயற்சி, காலநிலை நீதி முன்முயற்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சி மற்றும் சர்வதேச காலநிலை பல்கலைக்கழகம் போன்ற சுற்றுச்சூழல் நட்பு மேம்பாட்டுத் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்தில் மேலும் அதிகரித்துள்ளது. 6.6 சதவீதத்தினால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக உயர்வடைந்துள்ளது. அதன்படி, ஜப்பானிய யெனுக்கு நிகராக 14.2 சதவீதமும்,
ஸ்ரேலிங் பவுண்ட்ஸிற்கு நிகராக 7.3 சதவீதமும் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. மேலும், இந்திய ரூபாவுக்கு நிகராக 6.7 சதவீதமும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உயர்வடைந்துள்ளது.
பாணந்துறை பகுதியில் உயிரிழந்த தொழிலதிபர் ஒருவரின் சடலத்தினை அவரது இரண்டு மனைவிகளும் உரிமைக்கோரியதனால் மலர்சாலையில் வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை வலான பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வர்த்தகருக்கு இரண்டு மனைவிகள் இருந்ததாகவும், அவர் இறக்கும் போது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரின் முதல் மனைவி சட்டத்தரணி என்றும், இரண்டாவது மனைவி பிரதேச செயலக உத்தியோகத்தர் எனவும், இருவருக்கும் பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கமைய, பாணந்துறை மரண விசாரணை அதிகாரி துமிந்த அதிகாரம் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது சட்டத்தரணி மனைவி இறந்த கணவரின் உடலை தனது வீட்டில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும்,இறுதி அஞ்சலியை தடையின்றி நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு இரண்டாவது மனைவி,உறவினர்கள்,நண்பர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமான நிலைக்கு வராமையினால், பொலிஸாரின் தலையீட்டில் மலர்சாலையில் சடலம் வைக்கப்பட்டு பின்னர் புதைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், இறந்தவரின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும் வரை எவ்வித மோதலுமின்றி இரு தரப்பும் செயற்பட இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாவத்தகம பிரதேசத்தில் பேருந்தில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படத்திய 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கங்கொடபிட்டிய பகுதியை சேர்ந்த கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் குறித்த சிறுமி பாடசாலை மாணவர்களுக்காக சிசுசெரிய பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த தனது மகள் யாரோ ஒருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமியின் தாயார் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டிற்கமைய, நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ள நிலையில் அவர் கடந்த 16ஆம் திகதி விடுமுறையில் வந்திருந்தமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மட்டும் உள்ள பாடசாலை பேருந்தில் கடற்படை சிப்பாய் ஒருவர் சாதாரண பயணியாக பயணிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய காதலைத் தொடர்ந்து கண்டித்து வந்த கணவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து அதிர வைத்திருக்கிறார் மனைவி.
கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிங்கனோடி தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு நாயக்(38). பாஜக பிரமுகரான இவரது மனைவி சினேகா(26).
இவர்களது கிராமத்தில் கோயில் கோபுரம் கட்டும் பணிக்காக வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள வந்திருந்தனர். இதில் ஒருவருடன் சினேகாவிற்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சினேகாவின் இந்த பழக்கத்தினால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தகாத உறவைக் கைவிடுமாறு தனது மனைவியிடம் வலியுறுத்தினார். அதையும் மீறி சினேகா, வடமாநில தொழிலாள்லியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரைக் கொலை செய்ய முடிவு செய்த சினேகா, ராஜு நாயக் குடிக்கும் மதுவில் நேற்றிரவு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைப் போட்டுள்ளார். அதைக் குடித்த ராஜு நாயக் சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார்.
கணவர் மயங்கி விழுந்ததும், அவரது கழுத்தை நெரித்து சினேகா கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று ராஜு நாயக் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சினேகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் அதிக வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளை பயன்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் தொடர்ந்து மோசடிகள் மற்றும் இணைய மோசடிகளுக்கு இரையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசரகாலத் தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
தற்போது Meta, Messenger என அழைக்கப்படும் Facebook போன்ற சமூக ஊடக தளங்களில், பிரமிட் திட்டங்களுக்கு மக்கள் பணத்தை வைப்பிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக நட்பு கோரிக்கைகளை அனுப்பும் மோசடி செய்பவர்கள் சில போட்டிகளுக்கு வாக்களிக்குமாறு தனிநபர்களை கேட்டு மோசடி செய்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நண்பர் கோரிக்கையை ஏற்கனவே அவர்களின் Facebook நண்பர் பட்டியலில் உள்ள ஒருவரின் தொடர்புள்ளவர் மூலம் அனுப்பப்படலாம். போட்டிக்கு வாக்களிக்க ஒரு குறியீடாக நான்கு இலக்க எண்ணை அந்த நபருக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுக்கலாம்.
நான்கு இலக்க குறியீட்டு எண் ஒரு முறை கடவுச்சொல் (OTP) ஆகும். இது கடவுச்சொற்களை மாற்றுவது போன்ற செயல்களுக்காக பேஸ்புக் நிறுவனத்தால் அனுப்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
ஒரு முறை கடவுச்சொல்லை அனுப்பிய பிறகு, அசல் பேஸ்புக் உரிமையாளர் தனது கணக்கை இழப்பார் என தெரியவந்துள்ளது. எனவே, OTP குறியீடுகளை யாருடனும் பகிர வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் மூத்த தகவல் பாதுகாப்புப் பொறியாளர் கேட்டுக் கொண்டார்.
ஒரு தனிநபரின் தேசிய அடையாள அட்டை, இலங்கை கடவுச்சீட்டின் தகவல் பக்கம் மற்றும் ஓட்டுநர் உரிமங்களின் பிரதிகள், கையொப்பங்கள் உள்ளிட்டவற்றின் தெளிவான நகல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் பாடசாலை மாணவர்கள் கதறி அழுத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிலே இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாணவர்கள் ஆசிரியர் இடமாற்றம் காரணமாக பாடசாலையை விட்டு பிரிந்து செல்லும் போது அவரின் பிரிவை தாங்காது கண்ணீரால் வழியனுப்பி வைத்த காணொளி வெளியாகியுள்ளது.