யாழ்ப்பாணத்தில் இப்படியொரு திருமணமா.. 50 விலை உயர்ந்த கார்களின் பிரம்மாண்ட ஊர்வலம்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் சமீபத்தில் கிராம மக்கள் உட்பட காண்போரை ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு திருமணம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த திருமணத்திற்காக 50 விலை உயரந்த காரைகளை ஏற்பாடு செய்து மானிப்பாய் முதல் திருமணம் இடம்பெறும் இடம் வரை நகரம் வழியாக செல்லாமல் கிராமத்திற்கு ஊர்வலமாக செலுத்தி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 12 வயது மாணவன்!!

கெக்கிராவ, கனேவல்பொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த மாணவன் சில காலமாக தந்தையின் அன்பை இழந்துள்ள நிலையில் அவரது தாய் வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில் மாணவன் பாட்டியின் பராமரிப்பில் கல்வியை மேற்கொண்டு வந்த நிலையில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பின்ஓய மேல் பிரிவில் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வீடொன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனதையடுத்து சிறுவனின் தந்தையும் தோட்டத்தில் வேலை செய்பவர்களும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, சிறுவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையைத் தத்தெடுத்த பிக் பாஸ் நடிகை திடீர் கைது!!

பெங்களூருவைச் சேர்ந்த பிக் பாஸ் கன்னட நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் கன்னட ஓடிடி சீசனில் பங்கேற்று புகழ் பெற்றவர் நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா. பெங்களூருவைச் சேர்ந்த இவர் சமூக ஊடகங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான நடிகையாவார். இவர் சமீபத்தில் சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுமியுடன் உள்ள வீடியோவை அடிக்கடி சமூக ஊடகங்களில் சோனு கவுடா பகிர்ந்து வந்தார். ஏற்கெனவே குழந்தைகள் தத்தெடுப்பு விவகாரம் தொடர்பாக சோனு கவுடா மீது குழந்தைகள் நலத்துறை சார்பில் படரஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சோனு கவுடாவை பெங்களூருவில் உள்ள படரஹள்ளி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். ஜே.ஜே. சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சோனு கவுடாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சோனு வெளியிட்டுள்ள வீடியோவில், ஏழைச்சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தேன் என்று பாராட்டுங்கள். இல்லையென்றால் அமைதியாக இருங்கள். எதிர்மறையான கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் குறித்து சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சொகுசுப் பேருந்துகள் : தென்னிலங்கையில் பரபரப்பு!!

மாத்தறையின் கெகனதுர வெஹரஹேன வீதியில் உள்ள காணி ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சொகுசு பேருந்துகள் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது இன்று (22.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது தீயில் எரிந்த இரு சொகுசு பேருந்துகளும் அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுபவை என கூறப்படுகிறது.

இரு சொகுசு பேருந்துகளும் தீப்பிடித்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீட்டின் உரிமையாளர் தாக்கியதால் கலைந்த கரு.. இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!!

வீட்டை காலி செய்வதாக கூறிய கர்ப்பிணி பெண்ணை தாக்கியதில் கருகலைந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மீது புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத உதவி ஆய்வாளர் மீது பாதிக்கப்பட்ட இளம் தம்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சென்னை அண்ணாநகர் வ.உ.சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில் மாதம் 9 ஆயிரம் வாடகைக்கு, விக்னேஷ்-கவிதாவர்ஷினி தம்பதி குடியிருந்து வந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் கவிதாவர்ஷினி கருவுற்று இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. 2வது மாடி வரை படி ஏறக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மாடிப்படிகள் ஏறக்கூடாது என்பதால் வீட்டை காலி செய்வதாக வீட்டின் உரிமையாளர் சுரேஷிடம் விக்னேஷ் கூறியுள்ளார்.

அதற்கு மூன்று மாதம் வாடகையை பிடித்து கொள்வதுடன் சுண்ணாம்பு அடிக்க ரூ.8,000 போக, நீங்கள் தான் ரூ.4000 தர வேண்டும் என்று சுரேஷ் கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், முன் பணமாக 40 ஆயிரம் ஆயிரம் கொடுத்துள்ளேன். எதற்காக 3 மாதம் வாடகை பிடித்தம் செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அட்வான்ஸ் பணம் தரமுடியாது, மீதம் 4 ஆயிரம் தந்துவிட்டு வீட்டை காலிசெய்யும்படி சுரேஷ் மிரட்டியுள்ளார். தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விக்னேஷை தாக்கும்போது குறுக்கே வந்த அவரது மனைவி கவிதாவர்ஷினியை கர்ப்பிணி என்று பாராமல் தள்ளிவிட்டார். இதனால், அருகில் இருந்த இருசக்கர வாகனத்தின் மீது கவிதா விழுந்ததில், வயிற்றில் அடிபட்டு வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

இதனை பார்த்து பதறிபோன விக்னேஷ் உடனே மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் கருக்கலைந்து விட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதி, இது குறித்து டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் காவலர் வெங்கடேசன் இருவரும் வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் புகாரை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட தம்பதியை வற்புறுத்தி உள்ளனர்.

மேலும் வீட்டு உரிமையாளர் கொடுக்கும் புகாரில் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் போலீஸார் வீட்டு உரிமையாளர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட தம்பதி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய உதவி ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் இடம்பெற்ற அசம்பாவிதம் : பெருமளவு எரிபொருள் நாசம்!!

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானதில் எரிபொருள் வீதி முழுவதும் ஓடியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்து.

இதன் காரணமாக வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது .விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.

விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது. மேலும் விபத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையில் மக்களை அச்சுறுத்தும் கடும் வெப்பம் : பரிதாபமாக ஒருவர் மரணம்!!

அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் வழங்கப்பட்ட தான நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் வருகைத்தந்துள்ளார்.

எனினும் சைக்கிள் டயரின் காற்று வெளியேறியதனால் அவர் அக்குரஸ்ஸ நகரை நோக்கி மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றுள்ளார். இதன் போது உஷ்ணம் மற்றும் சோர்வு காரணமாக சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் 72 வயதான வர்த்தகர் மற்றும் நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது. பல வருடங்களாக இதய நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த வர்த்தகரே இந்த நிலைக்குள்ளாகியுள்ளார்.

அவர் கீழே விழுந்து சில நிமிடங்களுக்கு 1990 ஆம்புலன்ஸ் வந்த போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால், பிரேத பரிசோதனை செய்வதற்காக, சடலம் மாத்தறை பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மாத்தறை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர், இதயத்தின் உயிரணுக்கள் குறைந்தமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவும் வெப்பமான காலநிலைக்கு முகங்கொடுக்கும் நோயாளர்கள் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பதன் மூலம் இவ்வாறான திடீர் மரணங்களை குறைக்க முடியும் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியாவில் T56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயினுடன் இளைஞன் கைது!!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டவராவார். அவரிடம் இருந்த ரி56 துப்பாக்கி ரவகைகள் 13 உடன் 1005 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரனைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தோணிக்கல்லில் ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் பலசரக்கு வியாபரம் செய்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவர் மனைவி பிள்ளைகளை பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்தவர் என்றும் குறித்த வர்த்தக நிலையத்திலேயே தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நேற்றைய தினம் மாலைவேளை அதிக மதுபோதையில் இருந்ததாகவும் இரத்த வாந்தி எடுத்ததாகவும் அதன்போது அயலவர்கள் அவசர அம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் வருகை தந்திருந்தும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என்று அயலவர்கள் தெரிவிக்கின்றனர்

மேலதிக விசாரனைகளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கணித்தில் தனது அற்புத திறமையால் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுவன்!!

நாம் இந்த காலத்தில் கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் மனிதனை பார்த்திருக்க முடியாது.

ஆனால் கால்குலேட்டர் இல்லாமல் ஒரு மனிதனால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வர்க்க மூலம் காணுதல் என்பது சாத்தியமாக என்றால் சாத்தியம் தான் என்று மலேசியா வாழ் இந்திய சிறுவன் யாஷ்வின் சரவணன் நிருபித்துள்ளார்.

யாஷ்வின் சரவணன் ஏசியன் சாம்பியன்ஷிப்பில் கால்குலேட்டரையும் மிஞ்சிய வேகத்தில் கணித்துள்ளார் என்றால் நம்மால் நம்ம முடியுமா?

15 வயதான குறித்த சிறுவன் பிரபலமான Asia’s Got Talent நிகழ்ச்சியில் கால்குலேட்டைரை விட வேகமாக கணித்து நடுவர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளார்.

அவர் மலேசியாவில் பிறந்தாலும், இவரின் பூர்வீகம் இந்தியா தான். இவர் தமிழரா என்று அனைவருக்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கும். இவரே இவருக்கு ஹீயூமன் கால்குலேட்டர் என்று பெயரையும் வைத்துள்ளார். கணித்தில் தனது அற்புத திறமையால், உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளார்.

யாஷ்வின் சரவணன் குடும்பம் கேரளாவை சேர்ந்தாகவும் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் மலேசியாவில் தமிழர்களை போலவே வாழ்ந்து வருகின்றனர்.

வவுனியாவில் 160வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!!

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர தலைமையில் இன்று (21.03.2024) காலை 7.30 மணியளவில் 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொலிஸ் வீரர்கள் தினம் இன்று 160வது தினமாகும். அத்துடன் யுத்தகாலத்தில் உயிர்நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர். வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சர்வமதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் , வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பேச மறுத்த காதலி காதலன் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா நஞ்சப்புரா பகுதியில் வசித்து வருபவர் 24 வயது ஹர்ஷித். இவர் துமகூருவை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த பெண்ணை, அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஹர்ஷித்திற்கு பல புதிய எண்களில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்மநபர், ஹர்ஷித்தின் காதலியை தான் திருமணம் செய்ய உள்ளதாகவும், அவளை தொந்தரவு செய்ய கூடாது எனவும் மிரட்டி உள்ளார். அவரது காதலியும் ஹர்ஷித்திடம் பேசுவதை குறைத்து கொண்டார்.

இதனால் ஹர்ஷித் மனமுடைந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தனது கையை அறுத்து, அதனை புகைப்படம் எடுத்து தனது காதலி மற்றும் அவரது தாய்க்கு அனுப்பினார். மேலும் தூக்குப்போட்டு தற்கொலையும் செய்து கொண்டார். இதுகுறித்து ஹர்ஷித் குடும்பத்தினர் உடனடியாக ஹெப்பகோடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஹர்ஷித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விசாரணை நடத்தினர்.

அதன்பேரில் ஹர்ஷித்தின் காதலி, காதலியின் அத்தை கவிதா, மாமா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல பெண் மருத்துவர் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வருபவர் 43 வயது கிஞ்சல் ஷா. மருத்துவரான இவர் தனது தந்தையுடன் வசித்து வந்தார். இவர் மார்ச் 18ம் தேதி வீட்டருகே டாக்சியில் ஏறி பயணம் செய்தார். சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட மும்பை – நவிமும்பை அடல் சேது கடல் பாலம் வழியாக செல்லுமாறு டிரைவரிடம் தெரிவித்தார்.

அதன்படி டாக்சி டிரைவர் கடல் பாலம் வழியாக டாக்சியை ஓட்டி சென்றார். பாலத்தில் நடுவழியில் டாக்சியை நிறுத்துமாறு டிரைவரிடம் பெண் டாக்டர் கேட்டுக் கொண்டார். ஆனால் கடல் பாலத்தில் டாக்சியை நிறுத்த அனுமதி கிடையாது என டிரைவர் தெரிவித்தார்.

ஆனால் பெண் டாக்டர் கிஞ்சல் ஷா வலுக்கட்டாயமாக டாக்சியை நிறுத்த செய்தார். பின்னர் டாக்சியில் இருந்து கீழே இறங்கிய அவர், திடீரென பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி கடலுக்குள் குதித்துவிட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்சி டிரைவர் நவிமும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடலோர காவல் படை, மீட்பு படையினர் கடலில் குதித்த பெண்ணை தேடி வந்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் தான் 8 வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்ததால், அடல் சேது பாலத்தில் இருந்து கடலில் குதித்து உயிரை மாய்த்து கொள்வதாக கடிதம் எழுதியுள்ளார்.

இந்த தற்கொலைக்கான காரணக் கடிதத்தை போலீசார் கைப்பற்றி, தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை : சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு!!

இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

கொழும்பில் 3000 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு!!

கொழும்பில் தங்கக் கடைகளை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சுமார் 3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் தங்கப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரின் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள்,அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மேலும் அந்த தங்கக் கடைகளில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களே இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

காத்தான்குடியைச் சேர்ந்த அஹமது முஹ்யித்தீன் உமர் ஹாசிம் என்பவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.