மது போதையில் வந்த ஆசிரியரை செருப்பால் அடித்து ஓடவிட்ட மாணவர்கள் : வைரலாகும் காணொளி!!

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு வந்த நிலையில், மாணவர்கள் ஆசிரியரை செருப்பால் அடித்து விரட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தினமும் குடித்துவிட்டு பாடசாலைக்கு வரும் அந்த ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். அதோடு குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர்.

அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓட குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.

மாணவர்களின் அடிதாங்க முடியாது தெறித்து ஓடிய ஆசிரியரை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த பரபரப்பு : கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு!!

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பணக் கொள்ளைக்காக வந்த மூவரில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐபோன்களை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விளம்பரத்திற்கமைய, ருவன்வெல்ல பிரதேசத்திற்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த குழுவொன்றிற்கு ஏற்பட்ட, சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளது. அதற்கமைய, அந்த குழுவினர் பொலிஸ் அதிகாரிகளுடன் அவர்களைச் சந்திக்கச் சென்றதாக தெரியவந்துள்ளது.

அவர்களை நாரம்மல பகுதியில் உள்ள இடத்திற்கு வருமாறு கூறிய கொள்ளையர்கள், அந்த இடத்தை அடைந்ததும் கொள்ளையர்கள் கூரிய ஆயுதங்களால் அவர்களது காரை தாக்கியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, ​​கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இரண்டு கொள்ளையர்கள் தப்பியோடியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர், கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண்ணின் உடல் பாகங்கள் தானம் : துயரத்திலும் பெற்றோர் செய்த செயல்!!

அனுராதபுரத்தில் வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி உயிரிழந்த நிலையில் அவரின் உடல் பாகங்கள், யுவதியின் பெற்றோரால் தானம் செய்யப்பட்டுள்ளன.

சம்பவத்தில் அனுராதபுரம், சியம்பலகஸ்வெவ, ரம்பேவ, பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய உபேக்ஷா சந்தமாலி எனும் யுவதியே நேற்று முன்தினம் (25) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த யுவதியின் கண்கள், கல்லீரல், சிறுநீரகம் என்பன தானமாக வழங்கப்பட்டுள்ளன. உயிரிழந்த யுவதி பிரபலமான சுப்பர் மார்க்கெட் ஒன்றின் அனுராதபுர கிளையில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த எட்டாம் திகதி ரம்பேவ மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசை கச்சேரியை பார்த்துவிட்டு, மறுநாள் காலை வீடு திரும்பும் போது, ​​கெப் வண்டியில் விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த யுவதி, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இவரது தந்தை தனது மகளின் இறுதி விருப்பத்திற்கமைய அவரது உடற்பாகங்கள் தானமாக வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மகள் உயிரிழந்த துக்கத்திலும் தம் மகளின் கடைசி ஆசையை பெற்றோர் நிறைவேற்ரி உள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் வைத்தியர் எடுத்த விபரீத முடிவு.. திருமணமான சில மாதங்களிலேயே அதிர்ச்சி!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி செயின்ட் டாக்டர் அபிராமி திடீரென தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அபிராமிக்கு எந்த வித பிரச்சனையும் கிடையாது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் அபிராமிக்கு திருமணம் நடந்தது. இவரது கணவரும் ஒரு மருத்துவர். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் அபிராமியின் தற்கொலைக் கடிதம் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், வாழ்க்கை சோர்ந்து போகிறது என்றும் தற்கொலைக் கூறப்பட்டுள்ளது. பணிபுரிந்து வந்த மருத்துவக் கல்லூரிக்கு அருகே உள்ள பி.டி.சாக்கோ நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார் அபிராமி.

அதே வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபிராமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அபிராமி தற்கொலை செய்து கொள்ள எந்த காரணமும் இல்லை என்று குடும்பத்தினர் கூறியுள்ள நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மருத்துவமனையின் சக ஊழியர்கள், நண்பர்களிடம் மேலும் பல தகவல்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது மகள் அபிராமியை போனில் தொடர்பு கொள்ள முடியாததால், தாய் ரமாதேவி வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவியும் கதவை தட்டியும் நீண்ட நேரமாக திறக்காததால், பின்பக்க ஜன்னல்களை உடைத்து பார்த்தபோது, ​​அபிராமி அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

பின்னர் கதவு உடைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக கூறப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவக்கல்லூரி அருகே உள்ள இந்த வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்துள்ளார் அபிராமி.

மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதே மரணத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அபிராமியின் கணவர் கொல்கத்தாவில் பணிபுரிந்து வரும் நிலையில், தான் இன்று மார்ச் 27ம் தேதி, கொல்லத்தில் உள்ள கணவரிடம் செல்ல இருப்பதாக அபிராமி கூறியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை.. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் (30). இவர் அம்பத்தூர் பகுதியில் ஆட்டோமொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக குழந்தை இல்லை என்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதில் நேற்றுமுன்தினம் மதியம் மாமனார், மாமியாருக்கும் ஷாலினிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஷாலினி தனது தாய் தந்தைக்கு போன் செய்து குழந்தை இல்லாத காரணத்தால் மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகியோர் தன்னை துன்புறுத்துவதாக அழுதபடி கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஷாலினியின் வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முரளிதரன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சிடைந்த ஷாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

இதில் அதிகாலை 3 மணிக்கே ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த இவர்கள், ஏன் தங்களுக்கு 5 மணிக்கு தாமதமாக தகவல் தெரிவித்தனர் என ஷாலினி குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.

இதனையடுத்து செவ்வாய்பேட்டை போலீசார் விரைந்து வந்து ஷாலினியின் சடலத்தை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். இந்நிலையில் முரளிதரன் குடும்பத்தினர் மாலை வரை மருத்துவமனைக்கு வந்து பார்க்கவில்லை.

வரதட்சணையாக ரூ.12 லட்சம் ரொக்கம், நகைகள் மற்றும் அனைத்து சீர்வரிசைகளும் செய்து திருமணம் செய்து வைத்த நிலையில், குழந்தை இல்லை எனக்கூறி அவரை கொன்று விட்டதாகவும், அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும்,

இதில் முரளிதரன், அவரது தாய், தந்தை ஆகியோரை கைது செய்யும் வரை ஷாலினியின் உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் ஆகியோர் ஷாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மாணவர்களின் பரீட்சை சுமையை குறைக்கவுள்ள அரசாங்கம் : ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!!

மாணவர்களின் பரீட்சை சுமையை குறைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நிகழ்ந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டிற்கு புதிய கல்வி முறையை அமைப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதோடு அதற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றத்திற்கு கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

அதேவேளை, 2035ஆம் ஆண்டளவில் நாட்டில் உயர் தரத்திலான கல்வி முறையை உருவாக்குவதே எமது நோக்கமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஐயோ சாமி ….. இலங்கைப் பாடகிக்கு சர்வதேச விருது!!

தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலை சென்னையில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற 16ஆவது எடிசன் விருது விழாவில், வின்டி குணதிலக இந்த ஆண்டிற்கான Best Sensational Song of the Year 2023 விருதை ஐயோ சாமி பாடலுக்காக வென்றார். பொத்துவில் அஸ்மின் எழுதிய “ஐயோ சாமி” பாடலுக்காக அவர் இந்த விருதினை பெற்றுள்ளார்.

விருதினை இயக்குனர் மனோஜ் பாரதிராஜா,அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர். விருது வழங்கும் நிகழ்வில் பொத்துவில் அஸ்மின் மற்றும் இசையமைத்த சனுக விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், “ஐயோ சாமி” பாடலை சர்வதேச பாடல் வரிசையில் முதலிடத்திற்கு உயர்த்துவதற்கு உதவிய தனது இரசிகர்களின் வாக்குகளுக்கு வின்டி குணதிலக நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த அசம்பாவிதம் : யானைத் தாக்குதலுக்கு இலக்காகி 14 வயது சிறுமி பலி!!

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வாகரை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

அதீத ஆசை… விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்.. வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்!!

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் நேற்றைய தினம் (25-03-2024) கொட்டாவ, ஹைலெவல் வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் இந்தாண்டு (2024) உயர்தரத்திற்கு தோற்றும் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான சஹான் திவந்த பெரேரா என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

சஹான், நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று தனது தாயாரிடம் காட்டிய பின் மீண்டும் திரும்பி வந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார். மோட்டார் சைக்கிள் மீது அதிக ஆசை கொண்ட சஹான், அதை தனது தாயிடம் காட்டுவதற்காக அப்படி எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொட்டாவையில் இருந்து மாகும்புர நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியின் குறுக்கே (யு-டர்ன்) வலதுபுறம் திரும்ப முற்பட்டபோது, ​​மாகும்புரவில் இருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற சஹான் வேனில் மோதியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து கொட்டாவையில் இருந்து மாகும்புர நோக்கி பயணித்த கெப் வண்டியுடன் மோதியதில் சஹான் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வேன் மற்றும் கெப் வண்டியின் சாரதிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்க நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி!!

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 163,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 176,500 ரூபாவாக காணப்படுகிறது.

அதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்று 163,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22,062.50 ரூபாவாகவும்,

22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20,412.50 ரூபாவாகம் காணப்படுகிறது. இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சொகுசு பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு (25.03.2024) இடம்பெற்றுள்ளது.

சொகுசு பேருந்தொன்று வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார்சைக்கிளை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சின்னராசா சுதன்ராஜ் (வயது 40) என்பவராவார்.

சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை வந்த கப்பலால் அமெரிக்காவில் சுக்குநூறான முக்கிய பாலம் : 20 பேரை தேடும் மீட்புக் குழு!!

இரண்டாம் இணைப்பு

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த டாலி (Dali) என்ற பெயரிலான சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கைக்கு பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் பாலத்தின் ஊடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலம் இடிந்து வீழ்ந்ததில் 20 பேர் ஆற்றில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதல் இணைப்பு

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பெல்ட்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பாரிய கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலம் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மீட்புக் குழுக்கள் கடுமையாக போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் பெல்ட்டிமோர் மேயர் M. Scott தெரிவித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பாலம் Patapsco ஆற்றின் குறுக்கே செல்கிறது. இது ஒரு பயங்கரமான அவசரநிலை என பெல்ட்டிமோர் தீயணைப்புத் துறையின் தகவல் தொடர்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இப்போது எங்கள் கவனம் இந்த மக்களை மீட்டு மீட்கும் முயற்சியில் உள்ளதென குறிப்பிட்டுள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என மீட்பு குழுவினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

திருவிழா கூட்டத்தில் தவறி விழுந்த குழந்தை… தேர் சக்கரம் ஏறி உயிரிழந்த சோகம்!!

கேரள மாநிலம், கொல்லம் அருகே சமயவிளக்கு திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 5 வயது பெண் குழந்தை தேர் சக்கரத்தில் சிக்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கரா தேவி கோயிலில் சமய விளக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் ஆண்கள், பெண்களை போன்று வேடமிட்டு விளக்குகள் ஏந்தி அம்மனை வழிபடுவர்.

சமய என்றால் ‘அலங்காரம்’ என்று பொருள். ஆண்கள், பெண்களை போல் அலங்காரம் செய்து, விளக்குகள் ஏந்தி வந்து வழிபடுவதால் இது ‘சமயவிளக்கு’ திருவிழா என அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் தேவி, தனது பக்தர்களை கண்டு, ஆசி வழங்குவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இந்த திருவிழாவில் திருநங்கைகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அம்மனை வழிபடுகின்றனர்.

நேற்று இரவு, இந்த திருவிழாவுக்கு ராமேசன் – ஜிஜி ஆகிய தம்பதியினர் தங்களது மகள் ஷேத்ராவுடன் (5) வந்திருந்தனர். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ராமேசன் கையில் இருந்த ஷேத்ரா தவறி விழுந்தார்.

அப்போது விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த தேர், குழந்தையின் மீது ஏறியது. இதில், படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆயினும் குழந்தை ஷேத்ரா பரிதாமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சவாரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பரில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒரு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 மாணவர்கள் பலியானதுடன் 60 மாணவர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஸு காலமானார் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிரபல நக்கைசுவை நடிகர் லொள்ளு சபா சேஸு மருத்துவமவ்னியில் சிகிறை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் செஷூ. 2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த இவர், சன் டிவியின் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்திருந்தார். சின்னத்திரையில் நடித்துக்கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய சேஷூ நடித்திருந்தார். அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்திலும் இவரது நடிப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் சேஷுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானில் 100 ஆண்டுகளுக்கு பின் இன்று நிகழும் அபூர்வ நிகழ்வு… இந்த நாடுகளில் காணலாம்!!

வானில் 100 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ சந்திரகிரகணம் இன்றையதினம் முதன் முறையாக நிகழ்கிறது. முன்னதாக இப்படியொரு சந்திர கிரகணம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். இந்த சந்திர கிரகணத்தை இலங்கை மற்றும் இந்தியா காணமுடியாது.

எனினும், அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, பிரித்தானியா, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.

இந்த கிரகணம், இலங்கை நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை 4 மணி 36 நிமிடங்கள் வரை நீடிக்கும். இலங்கையில் இது பகல் பொழுதில் நிகழ்வதால் நம்மால் பார்க்க இயலாது.

மேலும் சூரிய கிரகணத்தைதான் வெறும் கண்களில் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. ஆனால், சந்திர கிரகணத்தை பார்க்கலாம். உயரமான மேகமூட்டம் எதுவும் இல்லாத இடத்தில் நின்று பார்த்தால் தெளிவாக சந்திரனை கிரகணம் காணலாம் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முகநூல் நட்பால் பதின்ம வயது சிறுமி வன்புணர்வு : நால்வரை தேடும் பொலிஸ்!!

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சகோதரர்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை சந்தேக நபர்கள்,சிறுமியுடன் முகநூல் மூலம் அறிமுகமானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.