கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி மீனா (25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் வைஷாலி என்ற குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம், கார்த்திகை தீபம் என்பதால், முனிராஜ் அந்த பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் முனிராஜின் தங்கை தீபா, அண்ணன் வீட்டுக்கு துணி துவைப்பதற்காக வந்துள்ளார். அப்போது, வீட்டில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடியதால், கேட் வால்வை அடைப்பதற்காக தீபா சென்றார்.
அங்கு 7 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில், மீனா மற்றும் குழந்தை வைஷாலி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த ஓசூர் டவுன் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய தொழிலதிபர் ஒருவர், தனது மகளின் திருமணத்தை தனியார் ஜெட் விமானத்தில் நடத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.
அமீரகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் திலீப் பாப்லியின் மகள் விதி பாப்லி (Vidhi Popley),ஹ்ரிதேஷ் சைனானி (Hridesh Sainani) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் கடந்த நவம்பர் 24-ம் திகதி துபாயில் தனிப் பயனாக்கப்பட்ட “போயிங் 747 ” என்ற விமானத்தில் ஜெடெக்ஸ் தனியார் முனையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் விமானம் என்பதால் குறிப்பிட்ட சிலரை மாத்திரம் திருமணத்திற்கு அழைத்துள்ளனர். அதாவது நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் உட்பட ஏறத்தாழ 350 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் போது சரியாக , 28 ஆண்டுகளுக்கு முன்பு, திலீப் பாப்லியின் திருமணமும் இப்படி தான் இடம்பெற்றுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இந்த திருமணம் திருமணம் ஏர் இந்தியா (Air India) விமானத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் Popley & Sons Jewellers Private Limited என்கிற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை நிலையங்களின் மதிப்புமிக்க வலையமைப்பிற்கு பெயர் பெற்ற குடும்பமாக பார்க்கப்படுகின்றது.
திருமணம் சரியாக 3 மணித்தியாலங்கள் நடைப்பெற்றுள்ளது. இதில் விருந்தினர்களுக்கு உணவும் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்கத்தில் ரீல்ஸ் வீடியோ நட்பால் மனைவியை குத்திக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த ஹரிநாராயண்பூரை சேர்ந்தவர் பரிமல் பைத்யா (38). இவரது மனைவி அபர்ணா (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
மகன் ஏழாம் வகுப்பு படிக்கிறார். மகள் நர்சரி பள்ளியில் படிக்கிறார். குழந்தைகள் இருவரும், வழக்கம் போல் பள்ளிக்கு சென்று பின்னர், தம்பதிகள் இருவரும் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்ந நிலையில் அபர்ணாவுக்கு சமூக ஊடங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நிறைய நண்பர்களின் பழக்கமும் ஏற்பட்டது. அந்த வகையில் அதிகாரி ஒருவருடன் அபர்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த அதிகாரியுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார்.
மனைவியின் இந்த செயல் கணவருக்கு பிடிக்கவில்லை. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்ற பின்னர், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பரிமல் பைத்யா, தனது மனைவி அபர்ணாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர்களது மகன், வீட்டின் உள்ளே அவரது தாயார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அவர் சத்தம் எழுப்பியதையடுத்து, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அபர்ணாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘சம்பவ இடத்தில் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை மீட்டுள்ளோம்.
தலைமறைவாக உள்ள பரிமல் பைத்யாவை தேடி வருகிறோம். ரீல்ஸ் வீடியோ மூலம் சிலருடன் அபர்ணாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
அதனால் தனது கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு, தனது பெற்றோர் வீட்டிற்கு அபர்ணா சென்று விடுவார். தற்போது அபர்ணா கணவர் வீட்டிற்கு வந்ததும், மீண்டும் சண்டை வந்துள்ளது. ஆத்திரமடைந்த பரிமல் பைத்யா, மனைவி அபர்ணாவை கொன்றுள்ளார்’ என்று கூறினர்.
வேனில் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த சமயத்தில், சக மாணவரின் கழுத்தைக் கத்தியால் அறுத்த கல்லூரி மாணவரிடம், போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர், கரூர் மாவட்டம் புலியூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இதேபோல், திருச்சி மாவட்டம், தொட்டியத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரும், அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.
இளைஞர்கள் இருவரும் கல்லூரிக்குச் சொந்தமான வாகனத்தில், தினமும் கல்லூரிக்குச் சென்று வந்துகொண்டிருக்கின்றனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 21 வயது மாணவரிடம் 19 வயதான மாணவர் சரிவரப் பேசாமல், அவரைத் தவிர்த்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து 21 வயதான அந்த மாணவர், இன்று கல்லூரிக்கு வேனில் சென்றபோது, 19 வயது மாணவரிடம், “ஏன் என்னிடம் பேசாமல், என்னைத் தவிர்க்கிறாய்?” என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு அந்த மாணவர் பதில் எதுவும் சொல்லாமல், தொடர்ந்து பேசாமல் மௌனம் காத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த 21 வயது மாணவர், தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்துவைத்திருந்த சூரிக்கத்தியால், அந்த மாணவரின் கழுத்தை அறுத்திருக்கிறார்.
வலியால் துடித்த மாணவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு வேனில் பயணித்த சக மாணவர்கள் கூச்சலிடவே, வேன் டிரைவர் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வேனை ஓட்டிச் சென்று, அவரை சிகிச்சைக்காக அனுமதித்தார்.
காயமடைந்த மாணவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கே சிகிச்சையளிக்கப்பட்டு, அவருடைய கழுத்துப் பகுதியில் 12 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன.
இது குறித்து தகவலறிந்த குளித்தலை காவல் நிலைய போலீஸார், மாணவரின் கழுத்தை அறுத்த சக மாணவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் நண்பர்களாகப் பழகிவந்த நிலையில், ஒரு கட்டத்தில் 19 வயது மாணவர், 21 வயது மாணவரிடம் பேசாமல் தவிர்க்கவே… அந்தக் கோபத்தில் கழுத்தைக் கத்தியால் அறுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த மாணவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தாய்லாந்தில், திருமணத்தன்றே மணமகள், மாமியார் உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற மணமகன், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை, தாய்லாந்தின் Wang Nam Khieo மாகாணத்தில், சுசுக் (Chaturong Suksuk, 29) என்பவருக்கும் காஞ்சனா (Kanchana Pachunthuek, 44) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்து பார்ட்டி நடந்துகொண்டிருக்க, மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேகமாக வீட்டுக்குச் சென்ற சுசுக், தனது துப்பாக்கியுடன் திரும்பிவந்துள்ளார்.
அவர் குடிபோதையிலும் இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மணமகள் காஞ்சனாவையும், மாமியார் Kingthong Klajorho (62), மணமகளின் தங்கை Kornika Manator (38) ஆகியோரையும் அவர் துப்பாக்கியால் சுட, குண்டுகள் திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் இருவர் மீதும் பாய்ந்துள்ளன.
துப்பாக்கியால் சுடப்பட்ட மணமகள், மாமியார், மணமகளின் தங்கை, குண்டு பாய்ந்த விருந்தினர்களில் ஒருவரான Thong Nonkhunthod ஆகிய நால்வரும் உயிரிழந்துவிட்டனர்.
பின்னர், சுசுக் தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொள்ள, திருமண வீட்டில் ஐந்து பேர் பலியானார்கள். காஞ்சனா, சுசுக்கைவிட 15 வயது பெரியவர். இதனால் சுசுக் அசௌகரியமாக உணர்ந்ததாகவும், அதுதான் பிரச்சினைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
காஞ்சனாவும் சுசுக்கும் திருமணத்துக்கு முன்பே மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார்கள். அப்படியிருக்கும் நிலையில், சுசுக் திருமண நாளன்று இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள் பொலிசார்.
கர்நாடகா மாநிலத்தில், கந்து வட்டிக் கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் கந்து வட்டி கடனாக வாங்கியிருந்த கறிக்கடை நடத்தி வந்தவர், தனது 3 குழந்தைகளையும் கொன்று விட்டு, மனைவியுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், தும்கூர் சதாசிவா நகரைச் சேர்ந்தவர் கரீப் சாப். இவரது மனைவி சுமையா. கரீப் சாப், சதாசிவா நகர் பகுதிய்ல் கறிக்கடை நடத்தி வந்தார். இந்த தம்பதியருக்கு ஹாஜிரா என்ற மகளும், முகமது சுபான், முகமது முனீப் என்று இரு மகன்களும் இருந்தனர்.
கறிக்கடையில் போதுமான வருமானம் இல்லாததால் கரீப், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் 1 லட்சம் ரூபாய் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், கரீப் நடத்தி வந்த கறிக்கடையில் விற்பனை இல்லாததால் கடன் கொடுத்தவர்கள் கரீப்புக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த கரீப், இதுகுறித்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் இணைந்து குழந்தைகளைக் கொன்று விட்டு, தாங்களும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடித்தனர்.
அதன்படி நேற்றிரவு விஷம் கலந்த உணவை குழந்தைகளுக்கு கொடுத்தாகக் கூறப்படுகிறது. விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்ததை முடிவு செய்த தம்பதி, வீட்டின் ஹாலில் முகத்தை மூடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பு கரீப் தனது உறவினர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவில் கந்துவட்டியால் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார்.
இதுகுறித்து தெரிய வந்ததும் திலக்பார்க் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கரீப் சாப் வெளியிட்ட வீடியோ மற்றும் உருக்கமான கடிதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேசில் நாட்டை சேர்ந்த மருத்துவரும், ஜிம் பயிற்சியாளருமான ஒருவர் 33 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் (33). இவர், மருத்துவராகவும், ஜிம் பயிற்சியாளராகவும் இருந்து வந்துள்ளார்.
மேலும், இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்து பிரபலமாகியுள்ளார்.அதுமட்டுமல்லாமல், மருத்துவம் தொடர்புடைய வீடியோக்களையும் பதிவிட்டு வந்துள்ளார். இவரிடம் சில பயனர்கள் இன்ஸ்டாகிராம் வழியே ஆலோசனை கேட்டும் வந்துள்ளனர்.
இந்த நிலையில், இவர் ஸ்டீராய்டு வகை மருந்துகளை உட்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மருத்துவமனையில் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், சிகிச்சை பெற்று வந்துள்ள ஜிம் பயிற்சியாளர் டாஸ் சான்டோஸ் உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பிற்கு காரணம் மாரடைப்பு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சாஞ்செஸ் என்ற பெண்ணுடன் இவருக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. வருங்கால கணவரின் மறைவிற்கு கிடார் வாசித்து பாடல் பாடி சோகத்தை சாஞ்செஸ் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பாலகணேசன் நகரை சேர்ந்த தம்பதியினர் அஜித் (27) மற்றும் சுகன்யா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. இதில், சுகன்யா கர்ப்பமாகி, முதல் 5 மாதங்கள் புழல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள WCF என்ற தனியார் மருத்துவமனை விளம்பரத்தை சுகன்யா பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் பிரசவத்தின் போது பெண்ணின் கணவர் உடன் இருந்து பார்த்து கொள்ளலாம் என்று இருந்ததை பார்த்து சுகன்யா ஆசைப்பட்டுள்ளார்.
பின்பு, மனைவியின் ஆசையை நிறைவேற்றமென்று நினைத்த அஜித், சுகன்யாவை கடந்த நான்கு மாதமாக சென்னை தி.நகரில் உள்ள WCF மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.இதனைத்தொடர்ந்து WCF மருத்துவமனையில் பிரசவம் பார்க்க தம்பதிகள் முடிவு செய்த நிலையில், கடந்த 16 -ம் திகதி சுகன்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனால், அன்று மதியமே தி.நகரில் உள்ள WCF மருத்துவமனையில் சுகன்யாவை அனுமதித்துள்ளனர்.
அங்கு, சுகன்யாவுக்கு ஊசியில் சில மருந்துகளை செலுத்தியதாக கூறப்படுகிறது. பின்பு, சுகன்யாவுக்கு வலிப்பு வரவே, அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, ஆண் குழந்தை பிறந்துள்ளது.ஆனால், இதில் சுகன்யா சுயநினைவின்றி இருந்ததால் தற்போது எதுவும் கூற முடியாது என வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால், அஜித் தனது மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேறு வழி இல்லமால் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, சுயநினைவின்றி இருந்த சுகன்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட போதிலும் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும், பிறந்த ஆண் குழந்தையின் உடல் நிலையும் மோசமானதால் இன்குபேட்டரில் வைத்துள்ளார்கள்.
இதனால், ஆத்திரமடைந்த அஜித், தனது மனைவி சுகன்யா உயிரிழப்பிற்கு WCF மருத்துவமனையில் முறையான மருத்துவம் பார்க்காமல் தவறான சிகிச்சை அளித்ததே எனக் கூறி மருத்துவமனை முன்பு உறவினர்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தினார்.
அப்போது, அஜித் சாலையில் சென்ற லாரி முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் உயிர் தப்பினார். மேலும், சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்தில் அஜித் புகார் அளித்தார்.பின்பு, காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன பெண் சிறையில் இருந்த கடினமான சூழல் குறித்து பேசியுள்ளார்.கத்தாரின் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் கீழ் 13 ஹமாஸ் கைதிகளுக்கு ஈடாக 39 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.அவ்வாறு விடுவிக்கப்பட்ட 39 பேரில் மாரா பகீரும் (Marah Bakeer) ஒருவர். இவர் தனது 8 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் இருந்து திரும்பியிருக்கிறார். மாராவின் தாய் சவ்சன் (Sawsan) தன் மகளைக் கண்டதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.
அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது ”மாரா அழகாக இருக்கிறாள் என்று நான் சொன்னேன். அவள் என் மகள் என்பதால் அல்ல, ஆனால் மாரா அழகாக இருக்கிறாள், நீங்களே அதை பார்க்க வேண்டும்” என கூறினார்.கடந்த 2015ஆம் ஆண்டில் மாரா வீட்டிற்கு செல்லும்போது ஒரு இஸ்ரேலிய அதிகாரியைக் குத்த முயன்றதாகக் கூறி இஸ்ரேலிய படைகள் அவரை சுட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக அவர் அதில் உயிர் தப்பினாலும், கை மற்றும் தோள் பட்டையில் காயங்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாராவுக்கு 8 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.நான்கு மாதங்களில் அவரது தண்டனை காலம் முடிவடையும் நிலையில் பிணைக்கைதிகளுடன் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறையில் இருந்தது குறித்து பேசிய மாரா பகீர், தனது சிறையில் இருந்த காலம் கடினமாக இருந்தது எனவும், ஆனால் கடவுள் மீதான நம்பிக்கையாலும், தனது குடும்பத்தினர் மற்றும் சக பாலஸ்தீனிய கைதிகளின் ஆதரவாலும் அதைத் தாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘சிறையில் பல கடினமான நேரங்கள் இருந்தன, ஆனால் செல்லும் மற்றவர்களைப் போலவே வாழ்க்கையை கடந்து செல்ல வேண்டும். சிறை மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் நான் இளமையாக இருந்தேன். எனக்கு என் தாயின் அன்பும் எனது குடும்பத்தின் ஆதரவும் தேவைப்பட்டது.
என்னைப் பராமரித்து எனக்கு உதவி செய்ய சக கைதிகள் பலர் இருந்தாலும், தாயின் அன்பை எதுவும் மாற்ற முடியாது’ என உருக்கத்துடன் கூறினார். முன்னதாக, இஸ்ரேலியா அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதை பகீரும் அவரது குடும்பத்தினரும் மறுத்தனர்.
போலியோ நோயால் பாதிக்கப்பட்ட பேரனை தண்ணீர் தொட்டியில் தள்ளி விட்டு பாட்டியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி நகராட்சி நாவலர் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (50). மில் தொழிலாளியான இவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு.
முதல் மனைவி வசந்தா மணி இறந்து விட்ட நிலையில், போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மகன் நவீன்குமார் (30) இரண்டாவது மனைவி மற்றும் பொன்னுச்சாமியின் தாய் சுப்பம்மாள் (82) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். போலியோவால் பாதித்து நடக்க முடியாமல் இருந்த நவீன்குமாரை பாட்டி சுப்பம்மாள் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு பொன்னுசாமி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்ட நிலையில் நேற்று காலை இரண்டாவது மனைவி மற்றும் அவரது மகள் மேட்டுப்பாளையம் தனியார் கண் மருத்துவமனைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பொன்னுச்சாமி தாய் சுப்பம்மாள் மற்றும் மகன் நவீன்குமார் இருவரையும் காணாததால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடி உள்ளார்.
பின்னர், வீட்டின் முன்புறம் உள்ள 15 அடி ஆழமுள்ள நிலத்தடி தொட்டி மூடி திறந்திருந்ததால் சந்தேகம் அடைந்து தொட்டிக்குள் பார்த்த போது சுப்பம்மாள், நவீன் குமார் இருவரும் தொட்டியில் சடலமாக மிதந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், புஞ்சை புளியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் பேரன் நவீன் குமார் சக்கர நாற்காலியில் நடமாடுவதை கண்டு மனவேதனையில் மூதாட்டி சுப்பம்மாள் இருந்ததாகவும், மன விரக்தியில் பேரனை தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. இது குறித்து பு.புளியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியாவில் விடுதலைப்புலிகளுக்கு சேறு பூசும் விதமாக காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை அகற்றமுற்ப்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், குறித்த சம்பவத்தை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் கார்த்தீபன் மீதும் பொலிசார் வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு மிக
அருகாமையில் தபால் நிலையத்திற்கு முன்பாக அரசுடன் இணைந்து செயற்பட்ட சிலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மெய்யான தலைவர்கள் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறித்த பதாதைகளில் விடுதலைப்புலிகளால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தது.
குறித்த பதாதைகள் மக்கள் மத்தியில் குழப்பநிலையினை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவருமான செ.அரவிந்தன் நேற்றயதினம் குறித்த பகுதிக்கு சென்று இவற்றை அகற்றுமாறு தெரிவித்தார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் அவரை, வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவர் மீது ஆத்திரத்தை தூண்டி குழப்பத்தை ஏற்ப்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கும் தாக்கல்செய்திருந்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டதுடன், அவருக்கு பிணை வழங்கி நிதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த சம்பவத்தினை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரும் வவுனியா ஊடக அமையத்தின் தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் மீதும் பொலிசார் பக்கச்சார்பான முறையில் அதே வழக்கினை தாக்கல் செய்துள்ளனர். இதனால் அவரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கில் முன்னாள் போராளி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் பத்திற்கும் மேற்ப்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
பிறந்தநாளுக்கு பரிசுக் கொடுக்காததால் கணவரை மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிராவில் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், வெள்ளிக்கிழமை பிற்பகல் குடும்பத் தகராறில் ஒரு பெண் தனது கணவரை புனேயில் உள்ள ஒரு உயர்தர குடியிருப்பு சமுதாயத்தில் தங்கள் வீட்டில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
நிகில் புஷ்பராஜ் கன்னா என அடையாளம் காணப்பட்ட 36 வயதுடைய நபர் தனது தந்தை மற்றும் மனைவியுடன் வனோரியில் உள்ள கங்கா சாட்டிலைட்டின் ஏ-5 பிளாக்கின் எட்டாவது மாடியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார்.நிகிலின் மரணம் குறித்து மதியம் 1:00 மணியளவில் ரூபி ஹால் கிளினிக்கிலிருந்து தங்களுக்கு எச்சரிக்கை வந்ததாக வனோவ்ரி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் சஞ்சய் பதாங்கே தெரிவித்தார்.
“சம்பவம் நடந்தபோது இருவரும் மட்டுமே வீட்டில் இருந்தனர், தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் நல்லுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றும் அடிக்கடி தகராறு செய்வதாகவும் அக்கம் பக்கத்தினர் போலீஸாரிடம் தெரிவித்தனர்.சம்பவத்தையடுத்து மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடும் வாக்குவாதத்தில் கணவரின் தலையில் கனமான பொருளால் தாக்கியிருக்கலாம் என விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டார். “அவர் மயங்கி விழுந்திருக்கலாம். அவரை தாக்க பயன்படுத்திய பொருளை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கணவரின் மூக்கில் குத்தியதால் அவருக்கு ரத்தம் கொட்டியதை ஒப்புக்கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிகிலின் தந்தை டாக்டர் புஷ்கராஜ் கண்ணாவை சம்பவத்திற்குப் பிறகு எச்சரித்ததாகக் கூறப்படுகிறது, அவர் தங்கள் வீட்டிற்கு விரைந்தார் மற்றும் இதய நுரையீரல் புத்துயிர் (CPR) கொடுத்து அவரைக் காப்பாற்ற முயன்றார். இதற்கிடையில், நிகிலுக்கும் ரேணுகாவுக்கும் இடையே திருமணமானதில் இருந்து உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அடிக்கடி அற்ப விஷயங்களுக்கு தகராறு செய்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மனைவியிடம் விசாரணை மேற்கொண்டதில், “தனது பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு விலை உயர்ந்த பரிசுகளை அவர் வழங்கவில்லை என்று கூறி இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் சிலரின் பிறந்தநாளை கொண்டாட டெல்லி செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்திற்கும் சாதகமாக பதில் அளிக்காததால் தனது கணவர் மீது கோவம்கொண்டிருந்தார்” என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டை சேர்ந்த செவிலியர் ஒருவர் கேரளாவில் மூளைச்சாவடைந்த பிறகு, அவரது உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், கீழ்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் சேகர் (36). இவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவி இருக்கும் நிலையில், இருவரும் செவியிலியராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி செல்வினுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளான செல்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கே அவரை பரிசோதித்தபோது, அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (நவம்பர் 24) மூளைச்சாவடைந்தார். இதைத்தொடர்ந்து தனது கணவரின் உடல் உறுப்புகளை மனைவி கீதா தானம் செய்ய முன்வந்துள்ளார்.அதன்படி கேரள மாநில அரசின் K Soto என்ற இணையதளம் மூலம் செல்வினின் உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைத்து தானம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, செல்வினின் இதயம், சிறுநீரகம், கணையம் மற்றும் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.இதையடுத்து அதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனே எடுக்கப்பட்டது. நேற்று இரவு சுமார் 10:20 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து செல்வினின் உடல் உறுப்புகளுடன் கொச்சிக்கு அரசு ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஹெலிகாப்டர் 11.12 மணிக்கு கொச்சியை வந்தடைந்தது.
உடல் உறுப்புகள் அடங்கிய பெட்டிகளை ஹெலிகாப்டரில் இருந்து எடுத்த குழுவினர் அறுவை சிகிச்சைகள் நடைபெறும் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.செல்வினின் கண்கள், திருவனந்தபுரம் கண் மருத்துவமனையில் இரு நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. லிசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 வயதான ஹரிநாராயணனுக்கு அவரது இதயம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.
கிம்ஸ் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், ஆஸ்டர் மெடிசியில் ஒரு நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும் கணையமும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு தற்போது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் கேரள மாநில அமைச்சர் வீணா ஜார்ஜும் பாராட்டுகளும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதே போல் தமிழ்நாடு அரசும் உடல் உறுப்பு தானம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (28.11.2023) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக கட்டடத்துக்கு மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் அவரை மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இராகலை மத்திய பிரிவு பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி கிருஷ்ணகுமார் எனும் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபர் கடந்த 8 வருடங்களாக ராகலை நகரில் ஹாட்வெயார் கடை ஒன்றை வைத்துள்ளதாகவும், இவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் தனது கடைக்கு ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியை பொருட்களை கடனாக பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இவர் பெற்ற கடனை செலுத்துவதில் சில குழறுபடிகள் ஏற்பட்டதால் இவருக்கெதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, அவர் பெற்ற கடன் தவணை முறையில் செலுத்தப்பட்டு வந்தது.எவ்வாறாயினும், நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு, உயிரிழந்த நபர் இரண்டு முறை முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நீர்கொழும்பு பொலிஸார் கடந்த 23ஆம் திகதி இராகலை நகருக்குச் சென்று அவரை கைது செய்ததுடன், இராகலை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தியுள்ளனர். அதன் பின்னர் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவரை நாளையதினம் (29) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் பதுளை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு தேவையான பொருட்களை தாம் பெற்றுக் கொடுத்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நேற்று முன்தினம்(26) இரவு ராகலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற பொலிஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமார் நீர்கொழும்பு நீதிமன்றில் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அவரது உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் மனைவி மற்றும் சகோதரர்கள் உள்ளிட்டோர் நேற்று (28) அதிகாலை நீர்கொழும்புக்குச் சென்று உயிரிழந்தவரின் சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, அவர் அணிந்திருந்த சாரத்தினால் அவர் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததை அவதானித்ததாகவும், பதுளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர் எப்போது நீர்கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 29ஆம் திகதி தன்னை பிணையில் எடுக்குமாறு கூறிய தனது சகோதரன் இப்படி ஒரு தவறான முடிவு எடுத்திருக்க வாய்ப்பில்லை எனவும் உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் உண்டு என்று உயிரிழந்தவரின் மனைவியும் தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்திய சாலையில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நி.விதுஷா என்ற இளம் தாயே உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் திருமணம் செய்த குறித்த பெண் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்ததாக தெரிக்கப்படுகின்றது.
குழந்தைகளும் தாயும் நல்ல உடல் நலத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், தாய் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்,சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.