டென்மார்க் வாழ் ஈழத்தமிழரான சஞ்சீவ் மனோகரன் அவர்கள் நோர்வேயின் முதல்த்தர வரிசையில் விளையாடும் கழக்கங்களில் ஒன்றான FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் தற்காலிய முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு (10-01- 2022) முதல் இக் கழகத்தின் அகாடமி வளரிச்சியின் தலைவராக பணியாற்றி வந்த சண் அவர்கள், அதற்க்கு முன் 10 ஆண்டுகளுக்கு மேலாக டென்மார்கின் உயர்தர வரிசையில் (Super Liga) விளையாடும் உதைப் பந்தாட்டக் கழகமான AGF விளையாட்டுக் கழகத்தில் U10 தொடக்கம் U19 வரையான இளையோர் அணி பயிற்றுனராக கடமையாற்றியிருந்தார்.
நேற்று (10.09.2023) தனது கடமையை ஏற்றுள்ள சண் அவர்கள், ஐரோப்பா நாடுகளின் முதல் தரவரிசையில் விளையாடும் கழகங்களில், முதலாவது ஈழத் தமிழர் பயிற்றுனராவர்.
இவர் UEFA Elite Youth A license சான்று தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதோடு, கடந்த பல ஆண்டுகளகா AGF கழகத்தில் இளையோர் வளர்ச்சி பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிலரால் தாக்கப்பட்டதில் சுமார் 05 மாதங்களாக சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். காதல் உறவின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஹகுரன்கெத பல்லே, போவல, பம்பரகம கிராமத்தைச் சேர்ந்த இந்துனில் சாமர காரியப்பெரும என்ற 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரிய மொழி கற்கை நெறியை மேற்கொள்வதற்காக கொழுப்பிற்கு வந்துள்ளார். இதற்கிடையில், கொரிய மொழி பாடத்தின் வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்த இந்துனில், குழுவில் உள்ள 44 வயதுடைய பெண் ஒருவருடன் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவு ஆகியவற்றை பரிமாறிக்கொண்டுள்ளார்.
ஆனால் இந்துனில் உண்மையில் 44 வயது பெண் ஒருவருடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு இருந்திருப்பது அவருக்கு தெரியாது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி, இருவருக்குமிடையிலான உறவை அறிந்த பெண்ணின் உறவினர்கள், கொரிய மொழியின் இறுதிப் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த இந்துனிலை கொழும்பு கோட்டையில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.
காரில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு சபுகஸ்கந்தவுக்கு அழைத்துச் சென்று இறுதியாக கொலன்னாவ மயானத்திற்கு அருகில் இந்துனிலின் ஆடைகளை களைந்து மீண்டும் வீதியில் வைத்து அவரை தாக்கும் காணொளி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பின்னர், தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இளைஞனை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
ஏப்ரல் 19ஆம் திகதி சபுகஸ்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த இந்துனில், பிரதேசவாசிகளின் தலையீட்டினால் அன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.படுகாயமடைந்து 05 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இந்துனில் உயிரிழந்துள்ளார்.
சமூக வலைத்தளம் ஊடாக கனடா அனுப்புவதாக வந்த விளம்பரத்தை நம்பி யாழ் யுவதி ஒருவர் காத்தான்குடி நபரிடம் 10 இலட்ச ரூபாய் பறிகொடுத்த சம்பவம் ஒன்று பதிப்வாகியுள்ளது.இந்நிலையில் குறித்த பெண்ணிடன் 10 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த காத்தான்குடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினரை விளக்கமறியலில் வைக்க யாழ். மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், சமூக வலைத்தளத்தில் , கனடா அனுப்பி வைக்க முடியும் என வந்த விளம்பரம் ஒன்றினை நம்பி, விளம்பரத்தில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.
இதன்போது அழைப்பை எடுத்தவர் , கனடா அனுப்பி வைப்பதாக பெண்ணுக்கு உறுதி அளித்துள்ளார். அதனை நம்பிய யுவதி கனடா செல்லும் ஆசையில் தொலைபேசியில் தன்னுடன் கதைத்தவருக்கு 10 இலட்ச ரூபாய் முற்பணமாக வழங்கியுள்ளார்.அதன் பின்னர் நீண்ட காலமாக தனது கனடா பயண ஒழுங்குகள் எதுவும் நடைபெறாததால், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் யுவதி முறைப்பாடு செய்திருந்தார்.
அவரின் முறைப்பாட்டின் பிரகாரம், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் காத்தான்குடியைச் சேர்ந்த , பிரதேச சபை முன்னாள் உறுப்பினரான 57 வயதுடைய நபரே மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபரை , காத்தான்குடியில் வைத்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் கொண்டு வந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.அதன்பின்னர் நேற்று (145)வியாழக்கிழமை யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்தில் 97 வயதான மூதாட்டி வயோதிப பெண் ஒருவர் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.குறித்த பல்கலைக்கழகத்தின் பாலி பௌத்த கற்கைகள் முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தினால் இவ்வருடம் நடாத்தப்பட்ட பௌத்த கற்கையிலேயே அவர் முதுமாணி பெற்றுள்ளார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்ற 97 வயதான விதானகே லீலாவதி அஸ்லின் தர்மரத்ன என்பவரே இந்த வெற்றியை பெற்றுள்ளார்.அந்த பல்கலைகழகத்தில் கற்கும் மூத்த மாணவியும் அவர்தான் என தெரியவந்துள்ளது.7 பாடங்களைக் கொண்ட இந்த முதுகலைப் பட்டத்திற்கான பாடங்களின் பரீட்சையில் அவர் தோற்றியுள்ளார்.
அஸ்லின் தர்மரத்ன தனது 94வது வயதில் வித்யோதயா பல்கலைக்கழகம் நடத்திய திரிபிடக தர்மம் மற்றும் பாலி மொழி பரீட்சையில் சித்தியடைந்தார்.இறுதித் தேர்வு எழுதும் போது அவர் 6 பெண் பிள்ளைகளை கவனித்து கொண்டு வாழ்க்கையை எதிர்கொண்டு இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பத்திரத்துறை பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 1952 ஆம் ஆண்டு அந்த துறையில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் பெண்மணி அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.97 வயதில் கல்வித்துறையில் சாதனை பெண்ணாக திகழும் விதானகே லீலாவதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன் எனவும் கொலை செய்த பின்னர் நானும் உயிரை மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் எனவும் பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து 12 வயது சிறுமி சடலமாகவும் , பெண்ணொருவர் சுயநினைவற்ற நிலையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையின் பின் உடல்நலம் தேறிய நிலையில் அவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.பொலிஸ் விசாரணைகளின் போது, தனது பெயர் நாகபூசணி (வயது 55) எனவும் தான் ஒரு மருத்துவ தாதியாக கடமையாற்றியவர் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் தனது பேத்தியின் பெயர் பார்த்திமா ஹீமா (வயது 12) என தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணைகளில்,” நான் மருத்துவ தாதியாக பணியாற்றியுள்ளேன். எனது மகள் முஸ்லீம் இளைஞன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு பெண் பிள்ளை பிறந்த நிலையில், அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.அதன் போது அவர்களது பிள்ளை என்னுடன் வளர்ந்து வந்தது.
சில காலத்தில் இருவரும் வெவ்வேறு திருமணம் செய்துகொண்டனர்.பேத்தி என்னுடன் வளர்த்து வந்தார். இந்நிலையில் , பேத்தியின் தகப்பன் , தன்னுடன் , தனது பிள்ளையை அனுப்புங்கள் , நான் வளர்க்கிறேன் என கூறி எனது பேத்தியை அழைத்து சென்று விட்டார். பேத்தி என்னை விட்டு பிரிந்ததும் , அவளின் பிரிவு துயரும் , அவளின் எதிர்காலம் எப்படி இருக்க போகுதோ என்ற கவலையும் எனக்கு ஏற்பட்டது.
அதனால் நான் சில மாதங்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்தேன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருகோணமலைக்கு சென்று , எனது பேத்தியின் தந்தையிடம், பேத்தி சில நாட்கள் என்னுடன் இருக்கட்டும், வீட்டுக்கு அழைத்து சென்று சில நாட்களில் மீண்டும் அழைத்து வந்து விடுகிறேன் என கூறி பேத்தியை அழைத்துக்கொண்டு, யாழ்ப்பாணம் வந்தேன்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பேத்திக்கு மருத்துவம் செய்ய வந்துள்ளோம் என கூறி அந்த வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தங்குமிடத்தில் அறையை வாடகைக்கு பெற்று, தங்கி இருந்தோம்.அப்போது, பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்தியை கொலை செய்து விட்டு. நானும் உயிரை மாய்த்துக்கொள்ள என முடிவெடுத்தேன்.
அறையில் பேத்தியை விட்டு, அருகில் உள்ள மருந்தகத்திற்கு சென்று தூக்க மாத்திரை உள்ளிட்ட மாத்திரைகளையும் ஊசியையும் , (சிறிஞ்) வாங்கினேன். என்னிடம் மருத்துவ தாதி என்பதற்கான அடையாள அட்டை இருந்தமையால், அதனை காட்டி மருந்துகளை வாங்கினேன்.அறைக்கு வந்து பேத்திக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து , அவள் தூங்கிய பின்னர் மருந்துகளை கலந்து ஊசி மூலம் அவளின் உடலில் செலுத்தினேன். பின்னர் நானும் அதனை எனக்கும் செலுத்திக்கொண்டேன்.
ஊசி ஏற்றியதில் அவள் இறந்து விட்டாள், நான் காப்பாற்றப்பட்டு விட்டேன்” என தெரிவித்துள்ளார்.அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த சிறுமியின் பாட்டியை இன்றைய தினம் வியாழக்கிழமை பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு , மன்று உத்தரவிட்டுள்ளது.அதேவேளை, ” எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. எங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம்” என சிறுமியின் பாட்டி பொலிஸாருக்கு எழுதிய கடிதமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் கசிப்பு கும்பலை விரட்டிச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில், பொலிஸாருடன் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கிளிநொச்சி மலையாளபுரம் புது ஐயங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்தது.
அந்த தகவலுக்கு அமைய நேற்றையதினம் (14 )அதிகாலை கிளிநொச்சி போலீஸ் நிலையத்திலிருந்த(03) போலீஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
இதன் பொழுது அங்கு சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர் .இதனையடுத்து அவர்களை துரத்திச் சென்று பொலிஸார் மீண்டும் எட்டு முப்பது மணி அளவில் போலீசார் திரும்பி உள்ளனர்.
எனினும் மூவர் சந்தேக நபர்களை விரட்டிச்சென்ற போதும் இருவரே மீண்டு வந்த நிலையில் ஒரு பொலிஸார் மாயமாகியுள்ளார்.சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்ச் நிலைய பொறுப்பு அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய , பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் குளத்தின் கால்வாய் மற்றும் காடு போன்ற பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
நேற்று (14) மாலை வரை காணாத நிலையில் இன்று (15) 2 ஆம் நாளாக பணி முன்னெடுக்கப்ட்ட நிலையில் கிளிநொச்சி புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சதுரங்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார். சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க வழங்குவதற்கு, அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.
இன்று (15.09) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமம் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் கிராமம் ஆகும்.
குறித்த கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்து சென்றதுடன், யுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் வருகை தந்து தமது காணிகளில் குடியேறி, விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த கிராமத்தில் தமது மயானம் இருந்ததாக தெரிவித்து அருகில் உள்ள கொக்குவெளி சிங்கள கிராம மக்கள் இரு பிக்குகளின் தலைமையில் குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய காணி ஒன்றினை உரிமை கோரி வந்ததுடன், தற்போது அதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்து குழப்பம் விளைவித்து வந்தனர்.
இது தொடர்பில் குறித்த காணியினை விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தி வரும் கருப்பனிச்சாங்குளம் கிராமத்தை சேர்ந்த நபர் கருத்து தெரிவிக்கையில்,
இது எனது பரம்பரை வழியான காணி. இங்கு எனது மூதாதையர்கள் முதல் நாங்கள் வரை நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றோம். பின்னர் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் வருகை தந்து காணியில் விவசாய செய்கையினை முன்னெடுத்து வருகின்றோம்.
தற்போது எமது காணியில் காய்க்கும் நிலையில் பெரிய தென்னை மரங்களும் நிற்கின்றன. இந்நிலையில் எனது காணியில் சிங்கள மக்களுக்கான மயானம் இருந்ததாக கூறி, அதனை மீள அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, எனது காணிக்கான அனுமதி பத்திரத்தை கூட பிரதேச செயலகத்தால் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர்.
எனது காணியில் முன்பு மயானம் இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை. அல்லது சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கூட இல்லை. குறித்த சிங்கள கிராமத்திற்கு அண்மையில் மூன்று மயானங்கள் உள்ளது.
அவர்கள் அங்கு சடலங்களை புதைக்க முடியும். தற்போது எனது காணியை சுற்றி தமிழ் மக்கள் குடியமர்ந்துள்ளனர். எனவே இங்கு மயானம் அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது நீதியான செயற்ப்பாடாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பகுதிக்கு பிக்கு இருவரின் தலைமையில் வருகை தந்த சிங்கள மக்கள் குறித்த காணியில் தங்களது மூதாதையர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காணியில் மயானம் அமைப்பதற்காக அதனை மீட்டுத்தருமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் பொலிசார் இரு தரப்புடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த காணி 1967 ஆம் ஆண்டில் மயானமாக இருந்ததாக நில அளவைத்திணைக்களத்தின் கள ஆய்வு குறிப்பில் இருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.
எனினும், நில அளவைத் திணைக்களத்தின் 2019 அறிக்கையின் படி அது வன இலாகாவிற்குரிய காணியாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மயானம் இருந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என தமிழ் மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் முரண்பட்ட தமிழ் மக்கள், இப்படி ஒரு மயானம் இருப்பதாக பிரதேச சபையின் அறிக்கையில் கூட இல்லை. நாம் இந்த காணியை அளவீடு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம்.
மயானம் அமைப்பதற்கு சிங்கள கிராமத்திலேயே பல அரச காணிகள் இருக்கின்றது. அங்கு அதனை அமைக்க முடியும் என தெரிவித்ததுடன், நீண்டகாலமாக குடியிருக்கும் நிலையில் நீதிமன்றம் ஊடாக இதற்கு தீர்வைக் காணுமாறும் தெரிவித்தனர்.
எனினும், குறித்த காணியை நில அளவீடுசெய்து சிங்கள மக்களின் மயானத்திற்காக ஒதுக்குமாறு பௌத்த மதகுரு வருகை தந்த அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு பிரதேச செயலாளர் இருதரப்புக்கும் தெரிவித்ததுடன், அதுவரை தற்காலிகமாக அயலில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்குமாறும் சிங்கள மக்களுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிலமை சீராகியது.
குழப்ப நிலையால் அளவீட்டுப் பணிகளுக்காக வருகை தந்த நில அளவைத்திணைக்களத்தின் அலுவலர்கள் காணியை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றிருந்தனர்.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன் எனவும் கொலை செய்த பின்னர் நானும் உயிரை மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் எனவும் பாட்டி பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து 12 வயது சிறுமி சடலமாகவும் , பெண்ணொருவர் சுயநினைவற்ற நிலையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.
சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பின் உடல்நலம் தேறிய நிலையில் அவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பொலிஸ் விசாரணைகளின் போது, தனது பெயர் நாகபூசணி (வயது 55) எனவும் தான் ஒரு மருத்துவ தாதியாக கடமையாற்றியவர் எனவும் கூறியுள்ளார். அத்துடன் தனது பேத்தியின் பெயர் பார்த்திமா ஹீமா (வயது 12) என தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணைகளில்,
“நான் மருத்துவ தாதியாக பணியாற்றியுள்ளேன். எனது மகள் முஸ்லீம் இளைஞன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு பெண் பிள்ளை பிறந்த நிலையில், அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அதன் போது அவர்களது பிள்ளை என்னுடன் வளர்ந்து வந்தது. சில காலத்தில் இருவரும் வெவ்வேறு திருமணம் செய்துகொண்டனர்.
பேத்தி என்னுடன் வளர்த்து வந்தார். இந்நிலையில் , பேத்தியின் தகப்பன் , தன்னுடன் தனது பிள்ளையை அனுப்புங்கள் நான் வளர்க்கிறேன் என கூறி எனது பேத்தியை அழைத்து சென்று விட்டார். பேத்தி என்னை விட்டு பிரிந்ததும் , அவளின் பிரிவு துயரும் , அவளின் எதிர்காலம் எப்படி இருக்க போகுதோ என்ற கவலையும் எனக்கு ஏற்பட்டது.
அதனால் நான் சில மாதங்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்தேன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருகோணமலைக்கு சென்று எனது பேத்தியின் தந்தையிடம், பேத்தி சில நாட்கள் என்னுடன் இருக்கட்டும், வீட்டுக்கு அழைத்து சென்று சில நாட்களில் மீண்டும் அழைத்து வந்து விடுகிறேன் என கூறி பேத்தியை அழைத்துக்கொண்டு, யாழ்ப்பாணம் வந்தேன்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பேத்திக்கு மருத்துவம் செய்ய வந்துள்ளோம் என கூறி அந்த வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தங்குமிடத்தில் அறையை வாடகைக்கு பெற்று தங்கி இருந்தோம்.
அப்போது, பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்தியை கொலை செய்து விட்டு. நானும் உயிரை மாய்த்துக்கொள்ள என முடிவெடுத்தேன்.
அறையில் பேத்தியை விட்டு, அருகில் உள்ள மருந்தகத்திற்கு சென்று தூக்க மாத்திரை உள்ளிட்ட மாத்திரைகளையும் ஊசியையும் , (சிறிஞ்) வாங்கினேன். என்னிடம் மருத்துவ தாதி என்பதற்கான அடையாள அட்டை இருந்தமையால், அதனை காட்டி மருந்துகளை வாங்கினேன்.
அறைக்கு வந்து பேத்திக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து , அவள் தூங்கிய பின்னர் மருந்துகளை கலந்து ஊசி மூலம் அவளின் உடலில் செலுத்தினேன். பின்னர் நானும் அதனை எனக்கும் செலுத்திக்கொண்டேன். ஊசி ஏற்றியதில் அவள் இறந்து விட்டாள், நான் காப்பாற்றப்பட்டு விட்டேன்” என தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த சிறுமியின் பாட்டியை இன்றைய தினம் வியாழக்கிழமை பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு , மன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, ” எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. எங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம்” என சிறுமியின் பாட்டி பொலிஸாருக்கு எழுதிய கடிதமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு 11வது முறையாக முன்னேறி உள்ளது.
வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது. இதில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீரர் பக்கர் ஜமான் 4 ரன்களில் ஆட்டம் இழக்க, பாபர் அசாம் 29 ரன்களில் வெளியேறினார்.
எனினும் அப்துல்லா ஷபிக் அரை சதம் எடுத்து வெளியேற பாகிஸ்தான் அணி தடுமாறியது. இறுதியில் முகமது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணியின் இலக்கை 252 ஓட்டங்களுக்கு உயர்த்தினார்.
இதனையடுத்து டக்வர்த் லூயிஸ் விதிப்படி இலங்கைக்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் தொடக்கவீரர் குஷல் பெரேரா 15 ரன்களும், நிஷாங்கா 29 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்க இலங்கை அணி தடுமாறியது.
எனினும் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குஷல் மெண்டிஸ் மற்றும் சமர விக்ரமா அதிரடியாக விளையாடி இலங்கையின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். அபாரமாக விளையாடிய குஷல் மெண்டிஸ் இலங்கை அணியின் வெற்றியை எளிதாக்கினார்.
அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 87 பந்துகளில் 91 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஹாரிஸின் அபார பிடியெடுப்பு மூலம் ஆட்டம் இழந்தார்.
இலங்கை அணி கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்தது. கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது ஆட்டத்தின் 41வது ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி அபரமாக வீசி தனஞ்செய் டி சில்வா மற்றும் வெல்லால்கலே விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்த ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அறிமுக வீரர் ஷமான் கான் வீச முதல் மூன்று பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே அவர் கொடுக்க நான்காவது பந்து இலங்கை வீரர் பிரமோத் மதுசன் ரன் அவுட் ஆனார்.
இதனால் ஆட்டம் மீண்டும் பாகிஸ்தான் பக்கமே சென்றது. இதனையடுத்து கடைசி இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷாமான் வீசிய பந்தை அசலாங்க அடிக்க அது எட்ஜ் ஆகி பின்னால் பவுண்டரிக்கு சென்றது.
இது மீண்டும் போட்டியை இலங்கை பக்கம் கொண்டு சென்றது. இதை அடுத்து கடைசி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அசலங்கா கடைசி பந்தை அடித்து இரண்டு ஓட்டங்கள் ஓடினார்.
இதன் மூலம் இலங்கை அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் 11 வது முறையாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17.09.2023) இந்தியாவும் இலங்கையும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தங்கநகைகள் மற்றும் அமெரிக்க டொலர்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (12.09.2023) 53 பவுண் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 100 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் வசித்தவர்கள் நல்லூர் திருவிழாவுக்கு சென்றுள்ள வேளையிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப்புலிகளினால் இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அவர்கள் விளையாட்டினையும், அரசியலினையும் வெவ்வேறாக வேறுப்படுத்தி தனது இலக்கை நோக்கி பயணித்ததாகவும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு ஒருபோதும் தடைவிதிக்காது அரசியலினையும், விளையாட்டினையும் வேறுப்படுத்தி பார்த்தனர்.
அவர்களின் குறிக்கோள் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்துறை சார்ந்ததே தவிர சாதாரண மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு ஐ.நாவின் உணவு தூதராக இலங்கையில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையகத்திற்கு மூன்று முறை சென்றிருந்தேன். இருப்பினும் தலைவர் பிரபாகரனை இச்சந்தர்ப்பங்களில் சந்திக்க முடியவில்லை.
இதன்போது வடகிழக்கு பகுதிகளுக்கும் விஜயம் செய்து ஐ.நாவினால் இலவசமாக வழங்கப்படும் உணவுப்பொருட்கள் ஒழுங்கான முறையில் பாதிக்கப்படும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றதா என்பதினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.
இந்த சந்தர்ப்பத்தில், விடுதலைப்புலிகளின் தலைமையகத்திற்கும் சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து அங்கு மதிய உணவினை உட்கொண்டேன். மேலும், தனியார் நிறுவனமொன்றினால் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியில் விடுதலைப்புலிகளின் இடங்களுக்கு சென்று கிரிக்கெட் விளையாடியதாகவும், தனக்கு தமிழீழ விடுதலைப்புலிகளினால் எவ்வித தடையும் ஏற்படவில்லை.
இருப்பினும், இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குண்டுகளுக்கு பார்வையில்லை என்பதினால் சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலை சுமார் 30 ஆண்டுகளாக இலங்கையில் காணப்பட்டது.
அதேவேளை, சுனாமி அனர்த்தத்தின் போதும் விடுதலைப்புலிகளின் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து மக்களுக்கு தேவையான உணவு வழங்கல் செயற்பாட்டையும் முன்னெடுத்ததுடன் மக்களுடன் நேரடியாக கதைத்து பாதிப்புக்கள் தொடர்பிலும் கேட்டறிந்தேன்.
இந்த காலக்கட்டத்தில் தான் பார்த்த மற்றும் எதிர்நோக்கிய விடயங்களே முத்தையா முரளிதரன் சுயசரிதையை தழுவி ‘800’ என்ற பெயரில் வெளியாகும் திரைப்படத்தில் இடம்பிடித்துள்ளதாகவும், பிரமாண்டத்திற்காக கதைகளை ஒருபோதும் திரிபுப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கடந்த ஜனவரி மாதம் பொலிஸாரின் ரோந்து வாகனம் மோதியதில் இந்திய வம்சாவளி மாணவி ஜானவி கந்துலா (வயது 23) பரிதாபமாக உயிரிழந்தார்.
சவுத் லேக் யூனியனில் சாலையை கடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சியாட்டில் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன், சம்பவ இடத்தில் விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட காணொளியினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதன்போது விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி , குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும்,11 ஆயிரம் டொலர்களுக்கு செக் எழுதுமாறும் சிரித்துக்கொண்டே பேசியுள்ளார்.
இந்த உரையாடல் அதிர்ச்சி அளிப்பதாகவும் இதயத்தை நொறுங்கச் செய்வதாகவும் உள்ளது என சியாட்டில் சமூக பொலிஸ் ஆணையம் (சிபிசி) தெரிவித்துள்ளது.
மக்கள் மதிக்கும் வகையில் பொலிஸார் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் சிபிசி தெரிவித்துள்ளது.
இலங்கையில் நாளொன்றுக்கு 10000 ரூபா சம்பாதிக்கும் பிச்சைக்காரன் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. காலி – களுவெல்ல பிரதேசத்தில் 120 மில்லிகிராம் போதைப்பொருளுடன் யாசகர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில், நாளாந்தம் 8000 முதல் 10000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக தெரியவந்துள்ளது.
42 வயது மதிக்கத்தக்க இந்த யாசகர் , போதை மற்றும் மதுவுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் இராணுவத்தில் கடமையாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் தனது காலை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த யாசகர் தனது நாளாந்த வருமானத்தில் 3000 ரூபாவை வங்கியில் வைப்பு செய்துவிட்டு தினமும் முச்சக்கர வண்டியில் சென்று சட்டவிரோத மதுபானம் அருந்துவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த இவர் திருமணமானவர் எனவும் இரண்டு பிள்ளைகளின் பராமரிப்புக்காக மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது குறித்த 80 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியில் க.பொ.த உயர்தர மாணவி காணாமல்போன சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி குறித்த மாணவி தனது தாய்க்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கதைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விநாயகபுரம் பகுதியில் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவி ஒருவரை கண்டறிய அண்மையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டிருந்தது.18 வயதுடைய புவனேஷ்வரன் ஆர்த்தி என்ற மாணவி கடந்த ஒரு வாரமாக காணாமல்போயுள்ளார்.குறித்த மாணவி மேலதிக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்திருந்தது.
இந்த நிலையில் குறித்த மாணவியின் தாய் கூறுகையில், சம்பவ தினத்தன்று காலை பத்து மணிக்கு மேலதிக வகுப்பிற்காக மாணவியின் தந்தையே அந்த மாணவியை அழைத்து சென்று விட்டுள்ளார்.
எனினும் காலை பத்து மணிக்கு நடக்க வேண்டிய முதல் வகுப்பு நடத்தப்படவில்லை எனவும், குறித்த மாணவி வகுப்பிலுள்ள மாணவர்களிடம் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரையில் கதைத்துக் கொண்டிருந்த நிலையில் வகுப்பிலிருந்து வெளியில் சென்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து 12 மணிக்கு மகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை மகளை காணாது தேடியுள்ளார்.
இவ்வாறான நிலையில் 12.15 மணியளவில் காணாமல் போன மாணவியிடமிருந்து தாய்க்கு அழைப்பு வந்துள்ளது.அதில் அவர், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், தான் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், தாயை அழ வேண்டாம் எனவும், தங்கையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
மாணவி அழைப்பை ஏற்படுத்திய தொலைபேசி இலக்கத்திற்கான சிம் அந்த மாணவியின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது எனவும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற வெளிநாட்டு ஜோடியொன்றின் திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.இத் திருமணம் கடந்த வியாழக்கிழமை (07) திருகோணமலை சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்தேறியுள்ளது.
இத் திருமண பந்தத்தில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு தம்பதியினர் இணைந்து கொண்டனர்.திருமண நிகழ்வில் சிவ பணியில் உள்ள இரெத்தினம்பிள்ளை கலியுகவரதனை சிவநெறி முறையில் குருவாக ஏற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதன்போது சட்ட ரீதியான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன.
அதேவேளை புதுமணத் தம்பதியினருக்கு பரிசாக சிவலிங்கம் ஒன்று வழங்கப்படுவதோடு, மணமகனால் மணமகளுக்கும், மணமகளால் மணமகனுக்கும் உருத்திராட்சத்தை அணிவித்து திருமண பந்த உறுதி செய்தனர். அதேவேளை இதுபோல எட்டு திருமணங்கள் இதுவரை நடத்தி வைக்கப்பட்டதாகவும் சிவ பணியில் உள்ள கலியுகவரதன் தெரிவித்தார்.
குருநாகல் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் புறநகர் பகுதியில் உள்ள கலப்பு பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவரை குருநாகல் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது.ஆனால், பாடம் நடாத்தும் போது தேவையில்லாமல் முத்தமிடுவதாக பள்ளியின் தொடக்கப் பிரிவு மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.