அன்னையர் தினத்தையொட்டி, ஒரே விமானத்தில் பணிப்பெண்களாக இருக்கும் தாய்-மக்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இன்று அன்னையர் தினம்.
இந்த சிறப்பு நாளில், சமூக ஊடகங்களில் ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. ஆனால், இந்த ஒரு காணொளி யாரையும் ஒரு நொடி நெகிழச்செய்யும்.
சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவின் ஆரம்பத்தில், indigo விமானப் பணிப்பெண் தன்னை நபிரா சம்ஷி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தொடங்குகிறார்.
பின்னர் தனது தாய இராம் சம்ஷியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி, அவரை அழைக்கிறார். அன்னையர் தினத்தில் உங்களை கண்ணீர் சிந்த வைத்ததற்கு செய்ததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார்.
தொடர்ந்து, தனது தாயார் 6 வருடங்கள் கேபின் குழுவினராக வேலை செய்வதைப் பார்த்துவருவதாகவும், தனக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்ததாகவும், இப்போது அவருக்கு முன்னாள் தானும் ஒரு விமான பணிப்பெண்ணாக நிற்பதில் பெருமை கொள்வதாகவும் கூறினார்.
அவரது தாய் கண்ணீருடன் தனது மகளுக்கு முத்தம் கொடுத்தார். நபிரா தனது அறிவிப்பை முடித்ததும், பயணிகள் இருவருக்கும் கைதட்டினர். இண்டிகோ நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, நாளை (16.05.2023) கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடுமையான வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.
மனித உடலால் உணரப்படும் வெப்பம், அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோவையில் குதிரை வாங்குவதற்குத் தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்.
இவரது மகன் மோகன். இளைஞரான இவருக்குக் குதிரைகள்மீது அதிக பிரியம் இருந்துள்ளது. மேலும் இவர் horse riding பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்குச் சொந்தமாக ஒரு குதிரையை வாங்கி அதில் horse riding செல்ல வேண்டும் என நினைத்துள்ளார்.
இதற்காக அவரது தந்தையிடம் குதிரை ஒன்று வாங்கி கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதற்கு பாலசுப்பிரமணியம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாகத் தந்தை மற்றும் மகனுக்கு இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் மோகன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தூக்குட்டிக் கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குதித்து போலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரில் வசித்து வரும் நிக்ஸன் (47) – கிருஷ்ணமாலா தம்பதிக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர்.
பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மகள், மகனுடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.
அதன்படி நிக்ஸன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு காரில் சுற்றுலா சென்றார். அங்கு அருவியை சுற்றியுள்ள இடங்களை சுற்றிபார்த்து இயற்கை அழகை கண்டுவியந்தனர்.
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஆனந்தமாய் குளித்தனர். இதைத்தொடர்ந்து பெமினா உள்பட அனைவரும் அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.
வென்னியாறு பாலம் அருகே அவர்கள் நடந்துசென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த மரத்தில் இருந்த பெரிய கிளை ஒன்று, திடீரென முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது.
இதனால் அவரது தலையில் பெரும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்தச்சம்பவம் மற்ற சுற்றுலா பயணிகளையும் சோகத்தில் ஆழ்த்தியது. தங்களின் கண் எதிரே மகளுக்கு நேர்ந்த இந்த கதியை பார்த்து, பெற்றோர்கள் இருவரும் கதறி துடித்தனர்.
இலங்கையில், தங்கத்தின் விலையில் இன்றும்(16.05.2023) வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இன்றைய தினம்(16.05.2023) தங்க அவுன்ஸின் விலை 631,773 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,290 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 178,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 163,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,440 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,530 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 156,050 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
யாழ். நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். நாவாந்துறை பகுதியில் சிறுவர் ஒருவரை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (16.05.2023) பதிவாகியுள்ளது. மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த வாரம் மன்னார் பகுதியில்பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தரம் 3 இல் கற்கும் மாணவி ஒருவரை மர்ம நபரொருவர் அழைத்து சென்ற நிலையில், மாணவி தப்பி வந்த போது ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று திங்கள் கிழமை (15.05) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையில் நேற்றைய தினம் பாடசாலை நிறைவடைந்ததும் பெற்றோர் அழைத்து செல்ல தாமதமாகியதால் முன்பகுதியில் உள்ள இருக்கையில் தரம் 3 இல் கற்கும் மாணவி இருந்துள்ளதாகவும் இவ்வேளையில் அங்கு வந்த ஒருவர் மாணவியை அழைத்து சென்றதாகவும் தெரியவருகின்றது.
இந் நிலையில் சிறிது தூரம் சென்ற மாணவி மீண்டும் பாடசாலையை நோக்கி அழுது கொண்டு வந்தபோது அவ்வீதியால் வந்த ஒரு பெண் குறித்த மாணவியை அழைத்து வந்து பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து பெற்றோர் குறித்த மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று (16.05) பாடசாலையில் குறித்த மாணவியின் பெற்றோரை அழைத்து பாடசாலை பிரதி அதிபர் உரையாடியதாக தெரியவந்த நிலையில் அவருடன் தொடர்புகொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் கேட்டபோது, இச்சம்பவம் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
பெற்றோருடன் நீங்கள் அழைத்து கதைத்தீர்களா என கேட்டபோது, அவர்களுடன் கதைத்திருந்தோம். எனினும் அதனை நாம் சரியாக பார்க்கவில்லை. பிள்ளையின் பாதுகாப்புக்காக பெற்றோருடன் கதைத்தோம் என தெரிவித்தார்.
இந்நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவ்வாறான சம்பவம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பதியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட போது இச்சம்பவம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை எனவும் குறித்த பாடசாலை நிர்வாகத்துடன் கதைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய வாகன ஊர்திப் பவனி இன்று (15.05.2023) மதியம் வவுனியா மாவட்டத்தினை வந்தடைந்தது.
கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ் வாகன ஊர்தியானது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில மாவட்டங்களுக்கு மக்கள் அஞ்சலிக்காக சென்று மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி மலர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் மாவட்டத்தின் கிராமப் பகுதிகளுக்கு பவனி சென்றது.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (14.05) கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கராயன்குளத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் மாதாந்த விடுமுறையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கோவிலில் உள்ள விக்கிரகத்தை திருடி விற்பனைக்காக பையில் வைத்துக்கொண்டிருந்த போது முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவினால் பிடிக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,
திருடப்பட்ட சிலையின் பெறுமதி சுமார் 50,000 ரூபா மற்றும் சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் புகையிரத பாதையினை மறித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் புகையிரத பாதை அமைக்கும் செயற்பாடு இன்று (15.05.2023) இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா தோணிக்கல் வீதியிலிருந்து இருந்து ஏ9 வீதிக்கு செல்வதற்காக ஆலடி பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையினை கடந்த பல வருடங்களாக சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வடக்கிற்கான புகையிரத பாதையினை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையினை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த புகையிரத கடவை ஊடாக செல்வதற்கு தடையேற்படுத்தும் முகமாக புகையிரத பாதையினை அமைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இப் போராட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
48 வயது ஆசிரியை ஒருவரை 22 வயதான மாணவன் ஒருவர் திருமணம் செய்துக் கொண்டுள்ள சம்பவம் ஒன்று மலேசியாவில் இடம்பெற்றுள்ளது. மலேசியாவின் பெல்டா ஏர் டவார் பகுதியை சேர்ந்தவர் முகமது டேனியல் அகமது அலி(வயது 22) என்ற மாணவருக்கும் , ஜமிலா என்ற ஆசிரியைக்குமே திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜமிலாவின் குணமும், மாணவர்களுக்கு கனிவுடன் சொல்லிக்கொடுக்கும் விதமும் முகமது டேனியலை கவர்ந்துள்ளது. எனினும் ஜமிலா மீது மரியாதை கலந்த அன்பு மட்டுமே அவருக்கு இருந்தது.
எனினும் பல ஆண்டுகளுக்கு தொடர்பு இல்லாமல் போகவே ஒருநாள் ஏதேச்சையாக ஜமிலாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மெல்ல மெல்ல இருவரும் பேசத் தொடங்கிய பின்னர், ஜமிலா மீது முகமது டேனியல் காதல் வயப்பட்டுள்ளார் .
ஆனாலும் வயதை காரணம் காட்டி ஜமிலா நிராகத்துள்ளார், தன்னை விட 26 வயது இளையவரை திருமணம் செய்து கொள்ள ஜமிலா ஒப்புக் கொள்ளவில்லை.
இருப்பினும் முகமது டேனியல் தொடர்ந்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தி வந்துள்ளார் , வேறு வழியின்றி ஒருகட்டத்தில் அவரது காதலை ஜமிலா ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து இரு குடும்பத்தினரின் அனுமதியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது டிரெண்டாகி வருகிறது.
இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 3 வயது தொடக்கம் 92 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளதுடன் 92 வயதுடைய ஒருவர் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார்.
இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த 60 வயதுடைய முருகவேல் பொன்னம்பலம் என்பவர் கலந்துக்கொண்டு பதக்கம் வென்றுள்ளார். இவர் கிளிநொச்சி பூநகரி பகுதியை பூர்வீகமாக கொண்ட தமிழர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
249 பேர் பங்குபற்றிய இந்த ஓட்டப்போட்டியில் முருகவேல் பொன்னம்பலம், 124 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் 4.7 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்கள் 15 செக்கனில் ஓடி முடித்துள்ளார்.
இந்த வயதில் ஓட்டப்போட்டியில் உற்சாகமாக கலந்துக்கொண்டு பதக்கம் பெற்ற முருகவேல் பொன்னம்பலத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தொலைபேசிகளை எப்போதும் சார்ஜ் செய்து தொடர்பு கொள்ளக் கூடியவாறு தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மோசமான காலநிலையின் காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசிகளை சார்ஜ் செய்து வைத்துக்கொள்வதுடன், இயங்கக்கூடிய ஓர் தொலைபேசி தொடர்பு இருந்தால் அனர்த்த நிலைமைகளின் போது உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் ஏழு மாவட்டங்களில் 19 பிரதேச செயலகங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதன்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அனர்த்த நிலைமைகளின் போது உடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இணைப்பு அவசியம் எனவும், அதனை சார்ஜ் செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் – சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த 27.04.2023 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது மகனின் சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளதால் சடலத்தினை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்டோருக்கு கோரிக்கை விடுக்கும் முகமாக அவரது தாயார் நேற்று (14.04.2023) ஊடக சந்திப்பொன்றினை அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.
“படுகொலை செய்யப்பட்ட எனது மகன் கடந்த (19.04.2022) தினமன்று துபாய்க்கு வேலை வாய்ப்புக்காக ஃப்ரீ விசாவில் சென்று 6 மாதங்கள் விடுதி ஒன்றில் பணியாற்றினார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்கள் வேலை செய்தால் வர்க்கிங் விசா தருவதாக கூறினார்கள். அதனடிப்படையில் எனது மகன் 6 மாதங்கள் வேலை செய்ததையடுத்து வர்க்கிங் விசா 2 வருடங்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த வர்க்கிங் விசாவை வழங்கும் போது தங்குமிடம், சாப்பாடு என்பன இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்ட போதும் தங்குமிடம் வழங்கப்படவில்லை. அவர் வெளியிலேயே வாடகைக்கு தங்கினார். விசா வழங்கப்பட்டதும் அந்த நாட்டு நாணயத்தில் 3000 வழங்குவதாக கூறிவிட்டு 1800 தான் வழங்கப்பட்டது.
எனது இரண்டாவது மகன் துபாய்க்கு சென்று ஒரு வாரத்தின் பின்னரே எனது மூத்த மகன் நிலக்சன் சென்றவர். இருவரும் ஒரு ஹோட்டலில் தான் வேலை செய்தார்கள். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி எனது இரண்டாவது மகன் எனக்கு வீடியோ அழைப்பு மேற்கொண்டு, மூத்த மகனின் சடலத்தை காட்டி, ”அம்மா எனக்கு விடுதியின் காவலர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு, அண்ணா கத்தி குத்துக்கு உள்ளாகி அறையில் விழுந்து கிடப்பதாக கூறினார், அதற்கு பின்னர் இந்திய பெண் ஒருவரும் எனக்கு அழைப்பு மேற்கொண்டு விடயத்தை கூறினார்.
அதற்கு பின்னர் நான் அறைக்கு சென்று பார்த்தவேளை அறை பூட்டப்பட்டு இருந்தது. அங்கு யாரும் இல்லை. கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தவேளை மின்விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. மின்விளக்கை ஒளிரச் செய்துவிட்டு பார்த்தவேளை அண்ணா நெஞ்சில் கத்தி குத்தி இருந்தபடியே கீழே இரத்த வெள்ளத்தில் இருந்தார்.
அவர் அருகில் இருந்த சோபா செட்டையும் என்னையும் மீள மீள பார்த்தார். என்னிடம் ஏதோ சொல்ல வந்தார். அவரால் பேச முடியவில்லை. நான் வாய் மூலமாக சுவாசம் கொடுத்தேன். அதையும் மீறி அவர் உயிர் பிரிந்தது. இந்நிலையில் ஏற்கனவே விடுதி பாதுகாவலர் பொலிஸிற்கு தகவல் வழங்கி இருந்ததால் பொலிஸாரும் அங்கு வந்து விட்டனர்” என்று மகன் கூறினார்.
பின்னர் பொலிஸார் பிரிவின் நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டு சடலம் மீட்டு செல்லப்பட்டுள்ளதுடன், எனது மகனையும் அங்கிருந்தவர்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எனது கடைசி மகனுக்கும் எனக்குமான தொடர்பு 6 மணித்தியாலங்களுக்கு மேல் இல்லை. பிறகு எனக்கு மகனிடம் இருந்து அழைப்பு வந்தது. “அம்மா பொலிஸார் என்னை விசாரணையிலிருந்து விடுவித்த பிறகு அறைக்கு வந்து பார்த்தேன், ஆனால் அங்கு எந்த தடயங்களும் இருக்கவில்லை. அண்ணாவுடைய ஒரு ஐ போன், ஒரு சாதாரண போன், கடவுச்சீட்டு, வேலை அடையாள அட்டை, பர்ஸ் (பணப்பை) எல்லாமே களவாடப்பட்டிருந்தது.
மேலும் இது ஒரு திட்டமிட்ட சதி அம்மா என்றார். தற்போது எனக்கு தெரிந்த வரையில் இவர் முதல் கடையில் வேலை செய்து கொண்டிருக்கின்ற வேளையில் இந்தியா – சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சாப்பிடுவதற்கு செல்கின்றவராம்.
அவர் அங்கு சென்று இவருடன் பழகி தொலைபேசி மூலம் பேசும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக எனது மகனை அழைத்து தனது விடுதியில் தங்க வைத்துள்ளார்.
பின்னர் ஒரு மலையாளியுடன் சேர்ந்து இவரை வைத்து 20 இலட்சம் கடன் பெற்றுள்ளார்கள். பின்னர் இவரது சம்பள பணத்தையும் பெற்றுள்ளனர். எனக்கு திடீரென ஒருநாள் எனது மகன் அழைப்பு மேற்கொண்டு, அந்த பெண்ணுக்கு நிறையபேருடன் தொடர்பு உள்ளது. என்னை ஏமாற்றி விட்டாள் என அழுதார். இது எல்லாம் வேண்டாம் தம்பி, வேலையை செய்து விட்டு வா என நான் கூறினேன்.
மகன் உயிரிழக்கும் போது அந்த பெண்ணும், பக்கத்து அறை ஆணும் தான் இவருக்கு பக்கத்தில் இருந்தார்களாம். நிறைய நேரம் எனது மகனுடன் சண்டையிட்டார்களாம். கடன் எடுத்த பின்னர் எனது மகனின் தொலைபேசியில் எனது தொலைபேசி இலக்கத்தை அந்த பெண் தடுத்து (block) பண்ணி விட்டார்.
கடந்த 24ஆம் திகதிக்கு பின்னர் எனது மகனுக்கும் எனக்கும் இடையே தொடர்பு இல்லை. அன்று காலை எனது இளைய மகனுடன் சேர்ந்து படங்கள் எடுத்து விட்டு, இதை அம்மாக்கு அனுப்பு என்று கூறிவிட்டு சென்றாராம். இச் சம்பவம் நடப்பதற்கு முன்னர், வேலை முடிந்து அறைக்கு போகும் போது எனது இளைய மகன் கண்டாராம்.
அந்த பெண்ணை பொலிஸ் விசாரித்த வேளை தன்னைத்தானே அவர் குத்திக்கொண்டு தன்னை நோக்கி நடந்து வந்து விட்டு விழுந்து விட்டாராம் என்று கூறியதுடன் அவரது கடவுச்சீட்டு, தொலைபேசி, வேலை அடையாள அட்டை, பர்ஸ் என்பன அனைத்தும் எங்கே என்று தெரியாது என கூறினாராம்.
எனது மகனின் தொலைபேசியில் தடுக்கப்பட்டிருந்த (block) எனது இலக்கம் சம்பவம் நடந்த பின்னர் தடுப்பு எடுக்கப்பட்டது. பல தடவைகள் அழைத்தும் பதில் இல்லை. அதற்கு பின்னர் ஒரு தடவை எனது மகனின் தொலைபேசியில் அந்த பெண் பேசினார். அந்த பதிவும் என்னிடம் உள்ளது.
அந்த பெண் திட்டமிட்டு எனது மூத்த மகனின் தொலைபேசிகள், வேலை அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பர்ஸ் என்பவற்றை திருடிவிட்டு, எனது மற்றைய மகன் தான் திருடினார் என பொலிஸில் கூறினார்.
ஆகையால் எனது மகனுக்கு பின் பக்கமாக கையை வைத்து கைவிலங்கு போட்டுவிட்டு நெற்றியில் துப்பாக்கியை வைத்து அண்ணாவை நீயா கொலை செய்தாயா? அவரது ஆவணங்கள் எங்கே என மிரட்டினர். அதற்கு எனது மகன் “அண்ணாவை இழந்த சோகத்தில் நானே இருக்கிறேன். நான் அண்ணாவை கொலை செய்ததாக கூறுகின்றீர்கள். வேண்டுமானால் என்னையும் சுட்டுக் கொல்லுங்கள்” என்று கதறியுள்ளார்.
துபாய் பொலிஸார், இது தற்கொலை என முதல் கூறியுள்ளார்கள், பின்னர் இது ஒரு கொலை என கூறுகின்றனர். வைத்தியர்களுடைய அறிக்கை வந்த பின்னர் தான் எதுவும் கூறலாம் என கூறுகின்றனர். அந்த பெண் எனது இறந்த மகனின் தொலைபேசியில் எங்களுடன் பேசியதை பதிவு செய்து துபாயில் உள்ள எனது மற்றைய மகனுக்கு அனுப்பினேன்.
அவர் அதை துபாய் பொலிஸாருக்கு காட்டுவதற்கு சென்றவேளை அவர்கள் அவரை அதை ஏற்றுக்கொள்ளாமல் விரட்டி அடித்துள்ளனர். காணாமல் போயுள்ளதாக கூறப்படும் எனது மகனின் தொலைபேசி அந்த பெண்ணிடம் இருப்பதால் அவர் அதில் உள்ள ஆதாரங்களை அழிக்கக் கூடும். அந்த கைப்பேசிக்கு நாங்கள் வாட்ஸ்அப் தகவல் போடும் போது அதனை அந்த பெண் பார்க்கிறார். ஆனால் பதில் எதுவும் போடுவதில்லை.
தற்போது அங்கிருக்கும் எனது மற்றைய மகனுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அவர் கூறுகின்றார். நான் இங்கு உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய சில இடங்களுக்கு சென்று கடிதங்களை வழங்கி விட்டேன். ஆனால் பதில் எதுவுமில்லை.
எனவே உரிய தரப்பினர் எனது மகனின் சடலத்தை இங்கு கொண்டுவந்து இறுதிச் சடங்கினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். அத்தோடு என்னுடைய மற்றைய மகனையும் பாதுகாப்பாகவும் நாட்டுக்கு அழைத்து வர வழி செய்ய வேண்டும்“ என கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிறுமியைக் கடத்தவில்லை என்றும், தந்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிறுமியை அவரிடம் அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும் கைதான இளைஞர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் நேற்றுமுன்தினம் (13.05.2023), பெண்மணி ஒருவர் தனது 10 வயதுச் சிறுமியை தனியார் கல்வி நிறுவனத்தில் இறக்கியுள்ளார்.
அதேநேரம் மோட்டார் சைக்கிளில் வந்த 23 வயது இளைஞர் ஒருவர் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்ட வேளை பொதுமக்கள் இளைஞரை மடக்கிப் பிடித்து பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைதான இளைஞரிடம் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணை நடத்திய போது, சிறுமியின் தந்தையார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிறுமியை அழைத்துச் செல்லவே முற்பட்டதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை வருடங்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள். தனது பிள்ளையைப் பார்க்க மனைவி அனுமதிப்பதில்லை என்று குறிப்பிட்டு, சிறுமியின் தந்தை தன்னிடம் உதவி கோரியதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தந்தையும், கைதான இளைஞரும் நண்பர்கள். தனியார் வகுப்புக்கு வரும் போது, சிறுமியை அழைத்து வருமாறு தந்தை கேட்டதால், சிறுமியை அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும், சிறுமிக்குத் தன்னைத் தெரியாதால் கத்தி சத்தமிட்டதாகவும் இளைஞர் விசாரணைகளில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகது.
நாட்டில் எந்தவொரு மின் தடையும் ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சார தடை ஏற்படுமென கடந்த காலங்களில் இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்த நிலையில் அவ்வாறான எந்தவொரு மின் தடையும் ஏற்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டமைப்பை 100 நாட்களுக்கு செயலிழக்கச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் மூன்றாம் திகதி முதல் 100 நாட்களுக்கு இந்த கட்டமைப்பு செயலிழக்க செய்யப்படவுள்ளதாக
குறித்து கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலப்பகுதியில் நாட்டில் மின்சார தடையை ஏற்படுத்தாது முகாமைத்துவப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 30வது சரக்கு நிலக்கரி நுரைச்சோலையில் இறக்கப்படும் நிலையில், இப் பருவத்திற்கான மின்சார சபையின் முழு நிலக்கரித் தேவையும் பூர்த்தியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.