குடிபோதையில் மனைவியை அடித்த கணவர்.. வீரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

கொருக்குப்பேட்டையில்..

கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் ரகுபதி. இவர் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா. இவர்களுக்கு 8 ஆண்டுகள் முன்பு திருமணமாகி 4 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர்.

இவர்கள் கடந்த 2 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக ரகுபதி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

அதே போல் தேற்று முன்தினம் இரவு ரகுபதி வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்து உள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் மனைவியை போட்டு அவர் அடித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் வீரக்தி அடைந்த பிரியங்கா, வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை காவல் துறையினர் பிரியங்கா உடலை மீட்டு உடற் கூராய்விற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கொருக்குப் பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பிரியங்காவின் தந்தையான புதுவண்ணாரப்பேட்டையை சமேஷ், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்து உள்ளார்.

பிரியங்காவின் உடற் கூராய்வு அறிக்கை வந்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்.

கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாய் தந்தை… தங்கப் பதக்கம் வென்று நன்றிக்கடன் செலுத்திய மகள்..!

இணையத்தில்..

கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாய் தந்தைக்கு வேற லெவெலில் நன்றிக்கடன் செலுத்திய மகள் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது.

முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது.

இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைத்த தாய் தந்தைக்கு அழகாக படித்து அற்புதமாக தங்கப் பதக்கம் என்ற மகள் செய்த செயல் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அந்த வீடியோவை உங்களுக்காக நாங்கள் இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் நீங்க பகிர்ந்து கொள்ளுங்கள்.

கல்லூரி மாணவி விபரீத முடிவு : விசாரணையில் வெளியான மர்மம்!!

கேரளாவில்..

கேரளாவில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மர்மம் நிறைந்திருப்பதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கேரள மாநிலம் பீமா பள்ளியை சேர்ந்த 17 வயதான அஸ்மியா மோல் என்ற மாணவி, திருவனந்தபுரத்திற்கு அருகே பாலராமபுரத்தில் உள்ள அல் அமன் என்ற இல்ஸாமிய பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, கல்லூரியிலுள்ள நூலகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், அஸ்மியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பின்னர் விசாரணையில் பல மர்மங்கள் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரிகள், இறந்த அஸ்மியாவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், அவரது தாய்க்கு மாணவியின் தோழியிடமிருந்து அவசரமாக வரச் சொல்லி போன் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, அவர் சரியாக 1.30 மணி நேரத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார். கல்லூரிக்கு சென்றவுடன் அவரை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அவரை உள்ளே அனுமதித்துள்ளார்.

அப்போது அவர் மகள் கல்லூரியிலுள்ள நூலகத்தில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையிலிருந்துள்ளார். எனவே அவரது மகளை கொலை செய்துவிட்டு, கல்லூரி நிர்வாகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை சித்தரித்து நாடகம் ஆடுகிறது, என மாணவியின் தாய் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறைக்கு வந்திருந்த மாணவி, தனக்கு கல்லூரி நிர்வாகத்தினர் சித்தரவதை செய்வதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். எனவே இதனை தொடர்ந்து பொலிஸார் கல்லூரி மாணவிகளிடம் விசாரிக்கையில், ஏற்கனவே அவர் குளியலறையில் உயிரிழந்து கிடந்ததாக தெரிய வந்துள்ளது.

பின்னர் பொலிஸாருக்கு மாணவியின் தற்கொலையில், கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்டிருப்பதை அறிந்துள்ளனர். மேலும் அஸ்மிகா பக்ரீத் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது நான் திரும்பி கல்லூரிக்கு வர விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும் அரபிக் கல்லூரிக்கும், மதப் பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று ஜமாஅத் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் பொலிஸார் கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகாத வார்த்தைகளால் திட்டிய கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு!!

திருவள்ளூரில்..

வேறு ஒரு பெண்ணுடன் கணவர் பழகியதால் மனமுடைந்த மனைவி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பம், குப்புசாமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன்.

இவரின் மனைவி உஷா (48). இவர், மணவாளநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய மகள் பவானி (24).

என் மகளுக்கும், பிரசாந்த் என்பவருக்கும் கடந்த 2.9.2019-ம் தேதி திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், நல்லாத்தூரில் பிரசாந்த் வேலை பார்த்தபோது அவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அது தொடர்பாக கடந்த 14.12.2022-ம் தேதி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அப்போது பிரசாந்த், இனிமேல் இது போன்ற தவறு செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தார்.

அதனால் நான் கொடுத்த புகாரை விசாரித்து பிரசாந்தை வெளியே அனுப்பினர். அதன் பிறகும் கடந்த பிப்ரவரி மாதம், பிரசாந்த் அந்தப் பெண்ணுடன் சேர்ந்துகொண்டு என் மகளை மன உளைச்சலுக்குள்ளாகியதோடு தகாத வார்த்தைகளால் திட்டிவந்தார்.

` நீ இருந்தால் இரு. இல்லையென்றால் நீ செத்து விடு’ என பவானியை பிரசாந்த் மிரட்டியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 14.5.2023-ம் தேதி என்னுடைய மகள் தற்கொலை செய்துகொண்டார் என எனக்கு செல்போனில் தகவல் கிடைத்தது.

உடனே என் மகளைப் பார்க்க திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் சென்றேன். அப்போது பவானியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் அவர் அதிகாலையில் உயிரிழந்துவிட்டார்.

எனவே, என் மருமகன் பிரசாந்த், அவருடன் பழகிய பெண் ஆகியோர்தான் என் மகளின் மரணத்துக்குக் காரணம். என் மகளின் மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி சட்டப்பிரிவு 174 (3)-ன் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். பவானிக்குத் திருமணமாகி, சில ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்துவருகிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “பவானியையும் அவரின் குழந்தையையும் பிரிந்த பிரசாந்த், அந்தப் பெண்ணுடன் பழகிவந்திருக்கிறார். அதை பவானியும், அவரின் குடும்பத்தினரும் கண்டித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் பவானி, பிரசாந்த் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பவானியின் அம்மா உஷா அளித்த புகாரின்பேரில் பிரசாந்த்திடம் விசாரணை நடத்திவருகிறோம். பிரசாந்த்துடன் பழகிவந்த பெண்ணிடமும் விசாரணை நடத்தப்படும். ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கைக்குப் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

பவானியின் குடும்பத்தினர், திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிணவறை முன்பு சோகத்துடன் இருந்தனர். அப்போது, பவானியின் குழந்தை பிறந்து ஒன்றரை ஆண்டுகளாகிறது. ஆனால், அந்தக் குழந்தையைக்கூட பிரசாந்த் தூக்கிக் கொஞ்ச மாட்டார் எனக் கண்ணீர்மல்கத் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்!!

கட்டுநாயக்கவில்…

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா நாட்டுக்குச் செல்ல முயற்சித்தவர்களை இன்று (17.05.2023) கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் அடங்குவதுடன், கிராம உத்தியோகத்தரும் உள்ளதாக தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்.22 முதல் 36 வயதிற்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுநாயக்க பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி : பௌத்த பிக்கு செய்த மோசமான காரியம்!!

மொரட்டுவையில்..

மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் 11 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடையவரான 62 வயதான பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதான பௌத்த பிக்கு இன்றைய தினம் (17.05.2023) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சிறுமி 36 வயதான தமது தாயுடன் கல்கிசை பகுதியிலுள்ள சொகுசு மாடிக் கட்டடத்தில் இருந்துள்ளார்.

இதன்போது அங்குப் பிரவேசித்த 62 வயதான பௌத்த பிக்கு, குறித்த சிறுமியின் தாயாருக்குப் போதைப்பொருளை வழங்கி அவரை மயக்கமடையச் செய்துள்ளார். இதனையடுத்து, குறித்த 11 வயதான சிறுமியைப் பௌத்த பிக்கு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநட்டில் தாய்.. பெற்ற மகள்மீது தொடர் வன்புணர்வு செய்த தந்தை!!

மொக்கா தோட்டத்தில்..

தனது மகளான 19 வயது யுவதியை, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வு உட்படுத்தி வந்தார் என்றக் குற்றச்சாட்டில், கைதான யுவதியின் தந்தை நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொக்கா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தன்னுடை தந்தை தன்னை தொடர்ச்சியாக அடித்து துன்புறுத்துவதாக அந்த யுவதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ​முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின்னர் தந்தை கைது செய்யப்பட்டார்.

அந்த யுவதியான பாடசாலை மாணவி வைத்திய பரிசோதனைக்காக, டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே பல வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யுவதியின் தாய், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநப​ரை அடுத்த தவணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அறிக்கையை சமர்ப்பிப்பதாக மஸ்கெலியா பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட யுவதி, வைத்தியசாலை சிகிற்சையின் பின்னர் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை… கொழும்பில் இன்றைய நிலவரம்!!

கொழும்பில்..

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த கிழமைகளில் 160,000 ரூபாவிற்கும் அதிகமாகவிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் அண்மையில் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்.. இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

கடுமையான வெப்பம் ..

நாட்டின் பல பகுதிகளில் இன்று(17) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் சிலவற்றிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள இடங்களிலும் “கவனம்” செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அதிக நேரம் வெளியில் இருப்பது மற்றம் வேலைகளில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகள் கடுமையான சோர்வினை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், நீரிழப்பு நோய் ஆபத்துக்கள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற சோகம் : 15 வயதுடைய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். இப்பலோகம, மஹஇலுப்பள்ளம பகுதியில் காரும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

அதன்படி இச் சம்பவத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிரவ நடுநிலைப் பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் புஸ்பிக கசுந்த சமரதுங்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தகவல் தொழிநுட்ப பாடம் தொடர்பான பயிற்சி வகுப்பை முடித்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பும் வேளையில் விபத்திற்கு முகங்கொடுத்துள்ளர். இந்த விபத்தானது மாணவனின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது.

எதிரே வந்த கார் மாணவன் மீது மோதிய நிலையில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் சைக்கிளும் காரும் பலத்த சேதமடைந்துள்ளது. மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதம்!!

கஸ்தூரி ரங்கன் ஜெயசூர்ய..

தமிழ்நாட்டில் இருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா வந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (17.05.2023) இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தமிழ்நாடு- திருநெல்வேலி 76/A சர்க்கரை விநாயகர் வீதியில் வசித்து வரும் 26 வயதுடைய கஸ்தூரி ரங்கன் ஜெயசூர்ய எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலை- அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நண்பர்களுடன் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த நபர், நேற்றைய தினம் (16.055.2023) நீரில் மூழ்கிய நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்றைய தினம் (17.05.2023) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞரின் உறவினர்கள் திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில் சடலத்தை இந்தியா கொண்டு செல்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுத்து வருகின்றனர். மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மின்சார சபையின் அலட்சியப் போக்கு : மக்கள் சிரமம்!!

கடந்த இரண்டு நாட்களாக மின்சார கம்பிகளின் மேல்
மரக் கிளைகள் சரிந்துவீழ்ந்துள்ளதனைப் பாவனையாளர்கள் யாழ் மற்றும் வவுனியா மின்சாரசபை அலுவலகத்திற்கு இரண்டு நாட்களாக முறைப்பாடளித்தும் மின்சார சபை அதிகாரிகளால் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் வவுனியா ஸ்ரீராமபுரம் கிராமத்தின் தொல்காப்பியர் வீதியின் வதிவிட மின்பாவனையாளர்கள் தமது மின்உபகரணங்களை உபயோகிக்காது அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

இக்கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர் மின் தடை ஏற்பட்டிருந்த வேளையும் இ.மி.ச. அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

5 திருமணம் செய்து பணம், நகை கொள்ளை.. 6வது கணவரை ஏமாற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

நீலகிரியில்..

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா மேட்டுப்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன் – மகாலட்சுமி தம்பதி வசித்து வந்தனர். இருவருக்கு திருமணமாகி 17 வயது, 16 வயதில் 2 மகன்களும், 13 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் உடல்நலமின்றி இறந்தார்.

இதையடுத்து மகாலட்சுமிக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பாலாஜி என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டு அவரை 2ஆவது திருமணம் செய்துள்ளார். அவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

இந்த நிலையில் இரு குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளை ஒன்றிணைத்து ஊட்டியில் குடும்பம் நடத்தி வந்த மகாலட்சுமி, நாளடைவில் பாலாஜியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 3வதாக ஊட்டியை சேர்ந்த பெயின்டர் மணி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இவருடன் 3 மாதமே குடும்பம் நடத்திய நிலையில் அவருடனும் பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து 4ஆவதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த அருள் என்பவருடன் சமூக வலைத்தளத்தின் மூலம் பழகி, தன்னை அனாதை எனக் கூறி அவருடன் குடும்பம் நடத்தியுள்ளார்.

எனினும் சில நாட்களுக்கு பின் பணம், நகையை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவானார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிந்து மகாலட்சுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டனுடன் முகநூலில் பழகி அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் தான் அனாதை என்றும், தனக்கு வாழ்க்கை அளிக்குமாறும் மகாலட்சுமி கூறியுள்ளார்.

அதை நம்பி மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் அப்பெண்ணை அவலூர்பேட்டையில் உள்ள கோயிலுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அவருடன் ஒரு மாதம் மட்டுமே குடும்பம் நடத்திய மகாலட்சுமி, மணிகண்டன் வீட்டிலிருந்து ரூ.1.70 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி அவர் வளத்தி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிந்து மகாலட்சுமியை கடந்த 6 மாதமாக தேடி வந்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து வளத்தி போலீசார் நேற்று ஆத்தூர் பகுதிக்கு சென்று சின்ராஜையும், மகாலட்சுமியையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அனைத்து கல்யாண மோசடிகளும் அம்பலமானதால், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணனின் பேச்சை கேட்காததால் வெட்டிக்கொல்லப்பட்ட பெண்!!

தேனியில்..

தமிழக மாவட்டம் தேனியில் பெண்ணொருவர் தனது சகோதரனால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனியின் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் விமல் (34).

இவரும், மனைவி செல்லப்பிரியாவும் (32) ஒன்றாக வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விமல் தன் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய விமல், மனைவி செல்லப்பிரியாவின் சகோதரன் செல்லப்பாண்டியை (36) வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது தன் தங்கியிடம் விமலுடன் சேர்ந்து வாழுமாறு செல்லப்பாண்டி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் செல்லப்பிரியா அவரது பேச்சை மதிக்காமல் எதிர்த்து பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி தன் தங்கையை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்லப்பிரியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தப்பியோடிய விமல் மற்றும் செல்லப்பாண்டியை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் மரக்கடத்தல் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு : சாரதி தப்பியோட்டம் : விஷேட அதிரடி படை வீரர் ஒருவர் காயம்!!

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் விஷேட அதிரடி படையினரால் முறியடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (16.05) அதிகாலை இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பறயனாளங்குளம் விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு, சாளம்பன் பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் சட்டவிரோத மர கடத்தல் ஒன்றினை சுற்றி வளைப்பதற்காக சென்ற போது சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்துமாறு வழி மறித்த போது குறித்த வாகனம் விஷேட அதிரடிப்படை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்தை நிறுத்த வாகனத்தின் முன் சக்கரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது கப் ரக வாகனத்தில் இருந்த சந்தேக நபர் கப் ஓடிக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

பறயனாளங்குளம் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (33529) சந்திரதிலக என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகத்தரின் காயங்கள் பாரதூரமானதாக இல்லாததால் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வாகனத்தையும் அதனுள் இருந்த சட்டவிரோதமாக ஏற்றி செல்லப்பட்ட ஏழு பெரிய முதிரை மரக்குற்றிகளையும் ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சந்தேக நபரிடம் பறயனாளங்குளம் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டீ விற்று கோடிகளில் வருமானம் ஈட்டும் தமிழன்.. சாதனைத் தமிழனின் கதை!!

தமிழகத்த்தில்..

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீக்கடையில், ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது தற்போது பேசு பொருளாகியுள்ளது.mஉலகம் முழுவதும் தேநீர் என்பது புத்துணர்ச்சி அளிக்க கூடிய அனைவரும் விரும்பி குடிக்க கூடிய பொதுவான பானமாகும்.

தமிழகத்தில் எத்தனையோ பேர் தேநீர் கடையை வைத்து கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார்கள். ஒரு டீ கடையை எந்த மாதிரி நாம் அலங்கரித்து, காட்சிப்படுத்துகிறோமோ அதைப் பொருத்து தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

இந்த அவசர உலகத்தில் மனிதர்கள் டீ குடிக்கும் சமயங்களில் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். தேனை பருகுவதற்கு மலரில் வண்டுகள் அமர்வது போல, டீ குடிக்கும் தருணமும் மன அமைதியை அளிக்க வேண்டும் என நினைப்பார்கள். அது போல டீயின் சுவையும் தரமாக இருக்க வேண்டும்.

இப்படி எல்லா சாத்தியக்கூறுகளும் அடங்கிய பிளாக் பெக்கோ என்ற டீக்கடையை, தமிழக இளைஞர் ஜோசப் ராஜேஷ் நடத்தி இன்று கோடீஸ்வரனாகியுள்ளார். பிளாக் பெக்கோ மற்றும் டீ பாய் சாய் நிறுவனரான ஜோசப் ராஜேஷ், தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள மொச்ச கொட்டம் பாளையம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.

தேநீர் சங்கிலித்தொடர் நிறுவனத்தை தொடங்கி, வெற்றி பெற்ற பல இளைஞர்கள் வரிசையில் தற்போதும் அவரும் இணைந்திருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை வேளைச்சேரியில் 100 சதுர அடி தேநீர் கடையை ரூ.50000 முதலீட்டில் துவங்கிய அவர், தமிழ்நாடு முழுவதும் பிக்பில்லி அன் ஃபுட்&பீவரேஜஸ் பிரைவட் லிமிடேட் என்ற பெயரில் 70 சங்கிலி தொடர் கடைகளை கட்டமைத்துள்ளார்.

என்னது டீக்கடையில் ஆண்டுக்கு ஏழு கோடி வருமானமா! அசத்தும் தமிழக இளைஞர்@weekendleader “2020-2021ல் எங்களது வருமானம் 7 கோடி ரூபாயாக இருந்தது.

தற்போது நிதி ஆண்டில் ரூ.10 கோடியை தாண்டுவோம் என நாங்கள் நம்புகிறோம். இந்த ஆண்டும் 60க்கும் மேற்பட்ட தேநீர் கடைகளை நாங்கள் திறந்துள்ளோம்’ என்கிறார் ஜோசப்.

பிளாக் பெக்கோ பிரான்ஞ்சைஸ்க்காக ரூ.6-7 லட்சம் ரூபாய் ஜோசப் வசூலிக்கிறார். அவருடைய நிறுவன உள்கட்டமைப்பு வசதிகளை வடிவமைத்து கொடுக்கிறது. மூலப் பொருட்களையும் விநியோகிக்கிறது. பிரான்ஞ்சைஸ்களுக்கான பயிற்சிகள் மற்றும் கடைகளை நடத்த ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.

“டீ பாய் கடைகள் சிறியவைதான் என்றாலும் பொதுவாக அவை 100-200 ச.அடிக்குள்தான் இருக்கின்றன. இந்த கடைகளில் இரண்டு முதல் மூன்று வகை தேநீர் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றோம்,” என்றார் ஜோசப்.

பிளாக் பெக்கோ கடைகள் பெரியவை. ஒரு பெரிய கடையானது 1.500 ச.அடி கொண்டது. அங்கு இஞ்சி தேநீர், மசாலா தேநீர், ஏலக்காய் தேநீர், எலுமிச்சை புல் தேநீர் மற்றும் இஞ்சி துளசி தேநீர் போன்ற பல்வேறு வகையான விரிவான தேநீர் ருசிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.