கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்பட்டு விட்டன .ஆனால் மாணவர்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. மன அழுத்தம், விளையாட்டு, அலட்சியம் காரணமாக மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்பதே பல ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் வசித்து வருபவர் டெய்லர் குப்பன். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு 2 மகன்கள் இதில் 13 வயது மோகன்ராஜ், 11 வயதில் மற்றொரு மகனும் ஒரே பள்ளியில் படித்து அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 9ம் வகுப்பு இ பிரிவு மாணவர்கள் சத்தமிட்டு பேசி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதற்கு தண்டணை அளிக்கும் வகையில் வகுப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 40 மாணவர்களையும் பள்ளி முழுவதும் 4 சுற்று ஓடி வரும்படி ஆசிரியர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
அதன்படி 40 பேரும் 4 சுற்றுகள் ஓடத் தொடங்கினர். இதில் 2 ரவுண்டு ஓடியதுமே மோகன்ராஜ் கீழே மயக்கம் போட்டு விழுந்து விட்டார். உடனே பள்ளியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெற்றோரிடம் மயக்கமாக வருவதாக மோகன்ராஜ் கூறவே, அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென வலிப்பு, மாரடைப்பு ஏற்பட்டு மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளி சென்ற மாணவன் உயிரிழந்ததை கண்ட பெற்றோர்கள் கதறி துடித்த காட்சி காண்பவர்கள் கண்ணீல் நீரை வரவழைத்தது. 9ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தமிழ் நடிகர் ஆர்.கே-வின் வீட்டில் அவரது மனைவியை கட்டிப்போட்டு நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் ஆர்.கே-வின் வீடு சென்னையின் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் உள்ளது.
இங்கு நடிகர் ஆர்.கே அவரது மனைவி ராஜி, ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஆர்.கே வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, பின்பக்கம் வழியாக வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கம், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளனர்.
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் ஆர்.கே-வின் மனைவியை கூர்மையான ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர், அத்துடன் அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி கொன்று விடுவதாக மிரட்டியதுடன், அவரை கட்டிப்போட்டு நகை, பணம் இருக்கும் இடத்தை கேட்டு மிரட்டியுள்ளனர்.
20 நிமிடத்திற்குள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை அனைத்தையும் சுருட்டிய 3 கொள்ளையர்களும் வந்த வழியே வெளியேறியுள்ளனர். அதன்பின் வீட்டிற்கு வந்து பார்த்த ஆர்.கே, தனது மனைவி ராஜி கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார், இதையடுத்து உடனே ஆர்.கே சார்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆர்.கே-வின் வீட்டில் உள்ள பீரோவில் இருந்து 200 சவரன் நகை, அத்துடன் 2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடியுள்ளனர். கை ரேகைகள் என அனைத்தையும் ஆராய்ந்த போலிசார், ஆர்.கே-வின் மனைவிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அத்துடன் வீட்டின் சிசிடிவி-யை ஆராய்ந்த போலிஸார், கொள்ளையடித்தவர்களில் ஒருவர் அவர் வீட்டில் பணியாளராக இருந்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆவார். அவர் தான் இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டு உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் பீடத்தில் பயின்று வந்த மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் 23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்று கூறப்படுகின்றது.
இவரது பெற்றோர்கள் இவரது கண் உடன்பட இவரது உடல் பாகங்கள் அனைத்தையும் பேராதனைய வைத்தியசாலைக்கு தானமாக வழங்க தீர்மானித்துள்ளனர்.
சச்சினி உட்பட இவரது இரு நண்பிகளும் ஹில்டா ஒபேசேகர விடுதிக்கு செல்லும் நேரமே இவ்வாறு விபத்துக்குள்ளாகயுள்ளார். அதனை தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் தங்காலை பெண்கள் கல்லூரியின் பழைய மாணவி என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை தங்காலை பொது மயானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கில் மீது இராணுவ பேரூந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரிலிருந்து புகையிரத வீதியூடாக மோட்டார் சைக்கில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதே பாதையில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவத்தினரின் பேரூந்து குறித்த மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, தற்போது 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீட்டர் டீசல் இன்று நள்ளிரவு முதல் 430 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், தற்போது 340 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 365 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய, ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்னும் பல பகுதிகளில் பெண் சிசுக் கொலைகள் தொடர்ந்து வருகின்றன. கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களிலும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது.
பெண்கள் என்னதான் சாதனைபுரிந்தாலும், பெற்றவர்களை கடைசி காலத்தில் கவனித்துக் கொண்டாலும் பெண் என்றாலே செலவு தான் என்ற மனோபாவம் தொடர்ந்து வருகிறது. ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு துறையில் பெண்கள் இமாலய சாதனைகளை புரிந்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனவாசப்பூர் தாலுகா ஷெட்டிஹள்ளி கிராமத்தில் லோகேஷ் என்ற விவசாயி வசித்து வந்தார். இவரது மனைவி மஞ்சம்மா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இந்த நிலையில் மஞ்சம்மாவுக்கு நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் மீண்டும் 4வதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த முறையாவது ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த லோகேஷ் விரக்தியடைந்தார்.
மனைவியை மருத்துவமனையில் பார்த்துவிட்டு லோகேஷ் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். மகள்கள் தந்தை தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்து காண்பித்தனர். அதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து சென்றனர்.
சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லோகேஷின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் அவர் 4வதும் பெண் குழந்தை பிறந்ததால் அவர்களை எப்படி கரைசேர்க்க முடியும் என்ற துக்கத்தில்,
தனது தற்கொலை முடிவுக்கு தான்தான் காரணம் என்று எழுதியிருந்தார்.ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு 4 பெண் குழந்தைகளையும், மனைவியையும் நிர்க்கதியாக தவிக்கவிட்டு சென்ற லோகேஷால் அப்பகுதியில் சோகம் நிலவியுள்ளது.
சீராக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் வேளையில் நிச்சயம் நாம் எதிர்பாராத பிரச்சனைகள் ஏதாவது நம்மை தேடி வரும். மறுபக்கம் பிரச்சனைகளுடன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது கொஞ்சம் கூட நினைத்து பார்க்காத வேளையில் பெரிய மகிழ்ச்சியான தருணம் ஒன்றும் நடைபெறும்.
அப்படி ஒரு சூழலில் நைஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் முடிந்த பின்னர் நேர்ந்த சம்பவம், அவரது வாழ்க்கையையே தலை கீழாக புரட்டி போட்டுள்ளது.
நைஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, திருமணத்திற்கு முன்பு தொழிலதிபராக இருந்த அந்த இளைஞர் பெரும் கோடீஸ்வரராகவும் வலம் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஒவ்வொரு மாதமும் பல பில்லியன் பணம் சம்பாதித்து வந்த இளைஞர், தனது திருமணத்தையும் மிக மிக ஆடம்பரமாக நடத்த திட்டம் போட்டுள்ளார். கோடீஸ்வர தொழிலதிபரான அந்த இளைஞரின் தொழிலில் அவரது நண்பர்கள் சிலரும் முதலீடு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில் அவர்களது தொழில் வீழ்ச்சி அடையவும் ஆரம்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு மத்தியில் அந்த இளைஞரின் திருமண தேதியும் நெருங்கி வந்த நிலையில் அதற்காக மிக மிக ஆடம்பரமான முறையில் தனது திருமணத்தையும் பணத்தை செலவு செய்து திருமணத்தையும் நடத்தி உள்ளார் அந்த இளைஞர்.
மேலும் முதலீடு செய்த நண்பர்களுக்கு பணத்தை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏராளமான விருந்துகள், அனைவருக்கும் பரிசு, சொகுசு கார் உள்ளிட்ட பல ஆடம்பரம் செலவும் இந்த திருமணத்தில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து திருமணத்திற்கு பின்னர் தனது தொழில் முன்னேற்றம் கண்டு நிலைமையை சரி செய்து விடலாம் என்றும் அவர் கருதி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திருமணம் முடிந்து பல நாளாகியும் தொழிலில் பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியாமல் தற்போது பெரிய கடனாளியாகவும் அவர் மாறி உள்ளார்.
இந்த நிலையில் தன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு இத்தனை ஆடம்பரமாக தனது திருமணத்தை நடத்தியது தான் என்றும் கூறி அந்த இளைஞர் நொந்து போய் உள்ளார்.
ஆடம்பர திருமணம் காரணமாக தனது வாழ்வில் பெரும் சிக்கலை அனுபவித்து வரும் கோடீஸ்வர இளைஞர் தொடர்பான செய்தி இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் நீங்கள் எப்படி இதற்கு முன் வாழ்வில் முன்னேறினீர்களோ அதே போல மீண்டும் சொந்த காலில் நின்று ஜெயிப்பீர்கள் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
தன்னை காதலித்து விட்டு, ஒன்றாக ஊர் சுற்றி நெருக்கமாக பழகிய பின்னர், வீட்டில் பணக்கார மாப்பிள்ளைப் பார்த்ததும், காதலனைக் கழற்றி விட்டு, வேறொருவருடனான கல்யாணத்திற்கு காதலி சம்மதித்ததால் தன் உயிரை மாய்த்திருக்கிறார் இளைஞர்.
பேஸ்புக் நேரலையில், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைச் செய்து கொண்டு அதிர வைத்துள்ளார். உத்தரபிரதே மாநிலம் மகாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புரந்தர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவான்பூர் பகுதியில் வசிக்கும் இளைஞன் தனது காதலியை துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி பேஸ்புக் லைவ் மூலம் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
நேரலையின் போது, அந்த இளைஞன் தனது காதலியின் குடும்ப உறுப்பினர்களை கடுமையாக திட்டியுள்ளார். அந்த நேரத்தில், பலர் அவரை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தனர், ஆனால் அவர் அதையும் மீறி வேதனையுடன் தனது உயிரைக் மாய்த்துக் கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளைஞரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான விசாரணையில், காதலித்த பெண்ணிற்கு, அவரது வீட்டில் வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும், அதற்கு காதலியும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், பேஸ்புக் நேரலையில் காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரைக் கூறியபடி, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிய வந்துள்ளது.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் திடீரென சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (10.11.2022) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தீப்பற்றிய காரில் சாரதி மாத்திரம் பயணித்திருந்ததாகவும், தீப்பற்றியதில் கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, தீப்பரவலை பொது மக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவியமைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2002ம் ஆண்டு பிரிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான மோனா-லிசா தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாக்களாக மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 1 திகதி ஒட்டிப்பிறந்த பச்சிளம் குழந்தைகளாக இருந்த மோனா-லிசா இருவரும் சுமார் 30 மருத்துவர்கள் கொண்ட குழுவால் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.
அன்றைய தினத்தில், மேற்கு வங்கத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரித்தெடுப்பதற்காக நடைபெற்ற முதல் வெற்றிகரமான அறுவை சிகிச்சை இதுவாகும்.
இந்த அறுவை சிகிச்சையில் பிரித்தெடுக்கப்பட்ட இந்த இரட்டையர்கள் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறியுள்ள நிலையில், தங்களுடைய சுவாரசியமான வாழ்க்கை குறித்து இணையதளம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளனர்.
நாங்கள் இருவரும் இரட்டையர்கள் என்பதை வெகுகாலம் கழித்தே உணர்ந்ததாகவும், பிறகு தங்கள் அம்மா முழு தகவலையும் விளக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் இருவரும் ஒட்டிப்பிறந்த கதையை திருமணத்திற்கு முன்பே அவர்களது கணவர்கள் வீட்டில் தெரிவித்து விட்டதாகவும், அவர்களும் எந்தவொரு தயக்கமும் இன்றி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக மோனாவும் லிசாவும் புன்னகையுடன் தெரிவித்துள்ளனர்.
தற்போது மோனாவுக்கு 15 மாத குழந்தையும், லிசாவுக்கு 12 மாத பெண் குழந்தையும் உள்ளனர், இரட்டையர்களான மோனா-லிசாவுக்கு கடந்த மாதம் தான் 20 வயது நிறைவடைந்துள்ளது.
இந்த இரட்டையர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரேந்திரநாத் முகர்ஜி, மோனாவுக்கும் லிசாவுக்கும் வெவ்வெறு நுரையீரல் மற்றும் இதயங்கள் இருந்தாலும், சில உள்ளுறுப்புகள் ஒன்றாகவே இருந்தன.
அதனால் அறுவை சிகிச்சை சவால் நிறைந்ததாக இருந்தது, சுமார் 8 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மோனாவும் லிசாவும் பிரித்தெடுக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை நிறைவடைந்த சிறிது காலத்திற்கு மோனாவுக்கும் லிசாவுக்கும் உடல் உபாதைகள் இருந்ததாகவும், அவை மருத்துவ உதவியால் விடுப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. சிறுவயதில் ஒட்டிப்பிறந்து தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் மோனா-லிசாவின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக மாவட்டம் கடலூரில் கல்லூரி மாணவி ஒருவர், தனது மாமன் மகனை திருமணம் செய்துவைக்க தாமதம் ஆனதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த இவரது மகள் கிருத்திகா(19), தனது மாமன் மகனை ஆறு மாதகாலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவரை திருமணம் செய்து வைக்கக் கோரி தன் பெற்றோரிடம் கிருத்திகா கேட்டுள்ளார். ஆனால் படிப்பு முடிந்த பின்னர் தான் திருமணம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாகவே கிருத்திகாவுக்கும், அவரது பெற்றோருக்கும் மன வருத்தம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கணினி பயிற்சி மையத்திற்கு சென்று திரும்பிய மாணவி கிருத்திகா, தனது மாமன் மகனை செல்போனில் அழைத்து வல்லம்படுகை ரயில் நிலையத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அவர், உடனடியாக கிருத்திகாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெற்றோர் கிருத்திகாவை தொடர்பு கொள்ளும் முன் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பொலிஸார் கிருத்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 637,431 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு பதிவாகியுள்ளது.
அத்துடன் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை தொடர் வீழ்ச்சியில் செல்கின்றது. மேலும், கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,450 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
யாழ் – கொழும்பு சொகுசு பேருந்து பயண விபத்து கொலைகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
முகப்புத்தக பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “பல வருடங்களாக தொடர்ச்சியாக இவ்வாறு விபத்துகள் ஏற்பட்டு விபத்தில் சிக்குண்டவர்கள் பலர் சாவடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்களின் குடும்பங்கள் வாழ்நாள் சோகங்களையும் கஷ்டங்களையும் சுமக்கின்றார்கள்.
யார் பொறுப்பை ஏற்பது?
1. பொலிஸார் ?
2. வாகன உரிமையாளர்கள்?
3. வாகனச் சாரதிகள்?
இருப்பினும் விபத்தொன்றின் பின்னர் விசாரணைகள் நடைபெறுவதாகவும் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க போவதாகவும் செய்தி வருகின்றமை நகைப்பிற்குரியது.
ஒரு நாள் இரவு பத்து மணிக்கு இவ்வாறான பேருந்து ஒன்றில் பயணத்தை ஆரம்பித்தேன். கண் விழித்துப் பார்த்தபோது பேருந்து காலை 4 மணியளவில் கொழும்பை அடைந்ததை உறுதிப்படுத்திக் கொண்டேன். இவ்வளவு விரைவாக பயணம் செய்வது மிக ஆபத்தானது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான பாதையில்
1. பல இடங்களில் பாதைகளில் வளைவுகள் காணப்படுகின்றது.
2. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையான பகுதிகளில் கால்நடைகள் எப்போதும் வீதிக்கு வரும் அபாயம் காணப்படுகின்றது.
3. நாய்கள் எப்போதும் வீதியை கடக்கலாம்.
4. பல இடங்களில் குறுகிய அகலத்திலான பாலங்கள் காணப்படுகின்றது.
5. பல நகரங்களை கடந்து செல்ல வேண்டி இருக்கின்றது.
6. திடீரென பிரதான வீதிக்கு இரு பக்கங்களிலும் இருந்து வாகனங்கள் வருகின்ற நிலை காணப்படுகின்றது. ( பலரும் பயணம் முடியும் வரை பதட்டமான மனநிலையில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது)
ஆகவே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை வாகனத்தை செலுத்துவது இலகுவான காரியம் அல்ல. அதிலும் 70 km/hrற்கு அப்பால் வாகனத்தை செலுத்தினால் வாகனம் விபத்தொன்றில் சிக்கிக் கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
பேருந்து விபத்துகளை எவ்வாறு தவிர்க்க முடியும்? யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்றடைய இரண்டரை மணி நேரம் (2 மணி 30 நிமிடங்கள்) தேவை. வவுனியாவில் இருந்து புத்தளம் சென்றடைய இரண்டரை மணி நேரம் (2 மணி 30 நிமிடங்கள்) தேவை.
புத்தளத்தில் இருந்து கொழும்பு சென்றடைய சென்றடைய இரண்டரை மணி நேரம் (2 மணி 30 நிமிடங்கள்) தேவை. ஆகவே பொலிஸார் பிரதான நகரங்களை கடக்கும் நேரங்களை அனுமதித்து கண்காணித்தால் போதும்.
வாகன உரிமையாளர்கள் இந்த நீதியை விளங்கிக் கொண்டால் போதும் சாரதிகள் தமது உயிர் மற்றும் தங்கள் கைகளில் பல உயிர்கள் தங்கி இருக்கின்றது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
யாழ் – கண்டி (A9) வீதியில் விபத்துக்கள்: யாழ் – கண்டி (A9) வீதியில் விபத்துக்கள் அதிகரிக்க முறிகண்டி பிள்ளையார் கோயிலில் வாகனங்கள் நிறுத்தப்படாமையும் ஒரு காரணம்.
வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் ஏறக்குறைய 150 KM தூரத்தில் உள்ளது. வவுனியாவிலிருந்து திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 75 KM தூரத்திலுள்ளது. அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ். நகருக்கும் இடையே ஏறைக்குறைய மத்தியில் அமைந்த பிரதேசம்.
எனவே வாகன சாரதிகள் அதிக தூக்கத்தை போக்கி களைப்பு, சோர்வு, அசதி, மன உளைச்சல் இவைகளை களைந்து முகம் கழுவி பிராத்தனை செய்து உணவுண்டு செல்லும்போது, மீண்டும் புத்துணர்ச்சியுடன் களைப்பின்றி தமது பயணத்தை புதிய உத்வேகத்ததுடன் தொடர முடியும்.
இதற்குத்தான் எமது முன்னோர்கள் இது போன்ற வழிபாட்டு தலங்களை ஆங்காங்கே நிறுவினார்கள். மோட்டார் வாகன பாவனைகள் அதிகரித்துள்ள இக்காலத்தில், இவ்வழிபாட்டு தலங்களுடன் கூடிய நிறுத்துமிடங்கள் வீதி விபத்துக்களை பெருமளவு குறைக்க உதவும்.
நமது முன்னோர்களது எந்தவோர் செயலும், மிகநுட்பமான காரணகாரியத்துடன், மனிதனது ‘நன்மை’ ஒன்றை மட்டுமே கருத்திற்கொண்டு செய்யப்பட்டவையாகும். இது வெறும் பதிவு மட்டும் என்று எண்ணவேண்டாம்” என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் வீட்டில் இருந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போய் பார்த்த போது கடும் அதிர்ச்சி ஒன்று அங்கே காத்திருந்தது. ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் ஆசிஃப். இவருக்கு தற்போது 43 வயதாகிறது.
இவருக்கும் பிரியங்கா பாட்லா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆசிஃப் மற்றும் பிரியங்கா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இருவரது வீட்டிலும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதனிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, சென்னை மண்ணடி பகுதியில் ஆசிஃப் மற்றும் பிரியங்கா ஆகியோர் குடியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, மைலாப்பூர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஆசிஃப்பும், மறுபக்கம் போரூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பிரியங்காவும் பணிபுரிந்து வந்துள்ளனர்.
திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும் ஆசிஃப் – பிரியங்கா தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், இதன் பெயரில் கணவன் மனைவி ஆகியோர் அடிக்கடி சண்டை போட்டும் வந்துள்ளதாக தெரிகிறது.
அதே வேளையில் மனைவி பிரியங்காவுக்கு வேறொரு நபருடன் தொடர்பு உருவானதாகவும் அவர் மீது சந்தேகம் கொண்டுள்ளார் ஆசிஃப். இதன் பெயரிலும் மனைவியுடன் ஆசிஃப் சண்டை போட்டு வந்துள்ளார்.
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் ஆசிஃப் மற்றும் பிரியங்கா ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்படி ஒரு சூழலில் அப்பகுதி மக்கள் மத்தியில், பிரியங்காவின் அலறல் சத்தம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆசிஃப் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கே உடலில் ரத்தத்துடன் கதவை திறந்து கொண்டு நின்றுள்ளார் ஆசிஃப். இதனைக் கண்டதும் அனைவரும் பதறிப் போகவே இது பற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார், ஆசிஃப்பிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பிரியங்காவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த விசாரணையில், வழக்கம் போல ஆசிஃப் மற்றும் பிரியங்கா ஆகியோர் சண்டை போட்டுக் கொண்டிருந்ததாகவும் ஆசிப் அடித்ததால் வீட்டை விட்டு பிரியங்கா கிளம்ப முயன்றதாகவும் அப்போது வீட்டின் கதவை அடைத்து கோபத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பட்டப்பகலில் தனியாக இருந்த கணவன் மனைவி இடையே உருவான தகராறின் காரணமாக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும், கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற சவாகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் அ. ஜுட்சன் விசாரணைகளை முன்னெடுத்து , சடலத்தை மீட்டு உடல்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திற்குட்பட்ட நியூ ஏரியா பகுதியைச் சேர்ந்தவர் கேதர் லால் குப்தா. பழ வியாபாரியான அவரது மனைவி அனிதா தேவி. இவரது மகள்கள் குரியா குமாரி, சப்னம் குமாரி, சாஷி குமாரி. மகன் பிரின்ஸ் குமார் உள்ளனர்.
இந்நிலையில் பழ வியாபாரம் நன்றாகச் செல்லாததால் குடும்பத்தில் பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேதர் லால் குப்தா மணீஷ் குமார் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் இந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் மணீஷ் குமார், மூன்று நான்குபேருடன் குப்தா வீட்டிற்கு வந்து கடன் பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது எல்லாம் ரூ.1000 கொடுத்து சமாதானம் படுத்தியுள்ளார்.
ஆனால் முழு பணத்தையும் கொடுக்க வேண்டும் என மணீஷ் குமார் மிரட்டிக் கூறியுள்ளார். பிறகு ஒட்டுமொத்த குடும்பம் மன உளைச்சலில் இருந்துள்ளது.
மேலும் பழ வியாபாரத்தையும் சரியாக நடத்த முடியாததால் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுள்ளனர். இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் முடிவெடுத்து விஷம் குடித்துள்ளனர்.
இதில் கேதர் லால் குப்தா. மனைவி அனிதா தேவி. இவரது மகள்கள் குரியா குமாரி, சப்னம் குமாரி, மகன் பிரின்ஸ் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மற்றொரு மகள் சாஷி குமாரி மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.