சூரியவெவ படகு விபத்து : 10 வயதான சிறுமியின் சடலம் கண்டுபிடிப்பு : இருவரை காணவில்லை!!

படகு விபத்து..

சூரியவெவ, மஹாவெலி கடார வாவியில் நேற்று காலை 08 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதன்போது, மூவர் காணாமற்போயிருந்த நிலையில், அவர்களில் 10 வயதான சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 17 மற்றும் 18 வயதான மேலும் இரண்டு சிறுமிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மழை, நீரின் அளவு அதிகரிப்பு காரணமாக தேடும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சூரியவெவ பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் படகை செலுத்தியுள்ள நிலையில் படகில் 08 மாத குழந்தை உட்பட 08 பேர் பயணித்துள்ளனர்.

இதன்போது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஐவர் மீட்கப்பட்டுள்ளதோடு மூவர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த நிலையிலேயே 10 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சூரியவெவ பொலிஸின் உயிர்காப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல்போன சிறுமிகளை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், நீர்வீழ்ச்சிகள், நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற நிலை நிலைகளுக்கு குளிக்கச் செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலியை கொன்று வீடியோ வெளியிட்ட காதலன்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

ஜபல்பூரில்..

இன்ஸ்டாகிராம் காதலி தன்னை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்ததால் ஆத்திரமடைந்த காதலன் அவரை கொலை செய்து, பின்னர் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்தவர் சில்பா. 22 வயதுடைய இளம்பெண்ணான இவர் சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்துவார். எனவே இன்ஸ்டாகிராம் மூலம், இவருக்கும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் என்ற இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அது நட்பாக மாறி, பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் தொடர்ந்து நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடனும் சில்பா பழகி வந்ததாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் இருவருடனும் பழகி வந்த சில்பா, இருவரிடமும் பணம் பறித்து வந்துள்ளார். அவ்வாறு அவர் இருவரிடமும் சுமார் ரூ.12 லட்சம் வரை பணம் பறித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே இந்த விவகாரம் அபிஜித் மற்றும் அவரது பார்ட்னருக்கு தெரிய வர, இருவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். இதனால் கோபமடைந்த இருவரும் சில்பாவை கொல்ல நினைத்துள்ளனர்.

அதன்படி சில்பாவை அவரது பகுதியான மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரிலேயே ஒரு தனியார் விடுதியில் அபிஜித் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து தான் இங்கே வந்திருப்பதாகவும், சந்திக்க விரும்புவதாகவும் அபிஜித் சில்பாவிடம் கூறியுள்ளார். அவரும் இங்கே வந்துள்ளார்.

அப்போது அவருக்கு அறைக்கு சென்ற சில்பா திரும்ப வரவில்லை. ஆனால் தனது அறையை பூட்டி விட்டு அபிஜித்தும் வெளியே சென்றுள்ளார். சுமார் இரண்டு நாட்களுக்கு பிறகு அபிஜித் வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அவரது அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது சில்பா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதை கண்டதும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல்துறைக்கு உடனே தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து ஓட்டல் சிசிடிவியை சோதனை செய்தனர். அப்போது அபிஜித்தின் புகைப்படம் அதில் பதிவாகியிருந்தது.

இதனிடையே அபிஜித், தான்தான் கொலை செய்ததாகவும், கொலைக்கான காரணத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவானது பெண்ணை கொலை செய்த பிறகு எடுக்கப்பட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே அதை நீக்கியும் உள்ளார்.

இதையடுத்து கொலையை செய்தது அபிஜித் என்று கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூலிப்படை மூலம் காதலனை துவம்சம் செய்த காதலி : நேர்ந்த பரிதாபம்!!

கன்னியாகுமரியில்..

காதல் கைகூடாத ஆத்திரத்தில் காதலியை ரயிலில் தள்ளி விடுவது, காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்வது என இன்றைய தலைமுறை சீரழிந்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுக்காதலனுடன் சேர்ந்து பழைய காதலனை கூலிப்படையை ஏவி போட்டு தாக்கியது பெரும் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்க்கிளம்பி மாத்தார் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவர் டிப்ளமோ முடித்து விட்டு வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 19 வயது கல்லூரி மாணவி ஜெஸ்லினை இன்ஸ்டா மூலம் பழகி காதலித்து வந்தார்.

ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி பிரவீனிடம் கூறினார். பிரவீனும் தனது பெற்றோர்களுடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டதும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2 வருடம் கழித்து திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்தனர்.

இதன் பிறகு இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழத் தொடங்கினர். இந்நிலையில் ஜெஸ்லின் திடீரென கடந்த ஒரு மாதமாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஜெனித்துடன் சுற்றத் தொடங்கினார்.

இதனை பிரவீன் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜெஸ்லின் தான் தற்போது ஜெனிதை காதலித்து வருவதாகவும் அவரைதான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பிரவீனிடம் தெரிவித்தார்.

மனமுடைந்த பிரவீன் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்ப கேட்டுள்ளார். அனைத்தையும் திரும்ப தருவதாக கூறி நேற்று முன்னாள் காதலன் பிரவீனை வேர்கிளம்பி பகுதிக்கு நேரில் அழைத்தார். வேர்கிளம்பி பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது 2 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் ஒன்று பிரவீனை தாக்கத் தொடங்கியது.

இந்த காட்சிகளை ஜெஸ்லின் புதிய காதலன் ஜெனித்துடன் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். பிரவீனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த பிரவீனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காதலி ஜெஸ்லின், ஜெனித் மற்றும் தாக்குதல் நடத்திய நபர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தப்பியோடி தலைமறைவாக இருக்கும் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் காதலனை காதலியே கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்பதித்தியுள்ளது.

விபத்தில் இறந்த நண்பனுக்காக தூக்கில் தொங்கிய இளைஞர் : இந்த காலத்தில் இப்படி ஒரு நட்பா?

விழுப்புரத்தில்..

செஞ்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் மற்றும் பிரபு. சிறு வயதில் இருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இவர்களில் சீனிவாசன் பள்ளி முடித்து விட்டு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் பிரபு, பள்ளியோடு நிறுத்தி விட்டு தனியார் கூரியர் சர்வீசில் வேலை செய்து வந்தார்.

வெளியே எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்த நிலையில் இவர்களின் நட்பை ஊரே பார்த்து வியந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 10) அன்று வழக்கம் போல வெளியே சென்றபோது சீனிவாசனிடம் பிரபு ஒரு கோரிக்கை வைத்தான்.

சீனிவாசன் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்சர் பைக் வாங்கிய நிலையில் அதனை ஓட்டுவதற்கு வெகுநாளாக விருப்பம் கொண்டிருக்கிறார் பிரபு. நண்பனின் விருப்பத்தை நிறைவேற்ற தனது வாகனத்தை பிரபு ஓட்டுவதற்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து நண்பனிடம் பைக்கை ஒப்படைத்த சீனிவாசன் பின்னால் ஏறி அமர்ந்தவுடன் பைக் சீறிப் பாய்ந்தது. என்.ஆர்.பேட்டை ஊராட்சி வெல்கம் நகர் அருகே சுமார் 100 கி.மீ. வேகத்தில் சென்றபோது பைக்கை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார் பிரபு. மழைநீரினால் ஏற்படும் பள்ளங்களில் செல்ல முடியாமல் தடுமாறிய பிரபு, 100 கி.மீ. வேகத்தில் பிரேக் அடித்தார்.

அப்போது பின்னால் அமர்ந்த பிரபு தூக்கி எறியப்பட்டதில் எதிரே இருந்த விளம்பரப் பலகையின் மீது மோதி மார்பு நொறுங்கியது. இந்த விபத்தில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிய பிரபு லேசான காயங்களோடு உயிர் தப்பினார். இதையடுத்து செஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு வந்த சீனிவாசனின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இதைப் பார்த்துக் கொண்டே இருந்த பிரபு, குற்றவுணர்ச்சியில் நா தழுதழுத்து சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கு கிடந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து தனது கழுத்தில் குத்திக் கிழித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் பிரபுவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்ரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை முடித்து விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார் பிரபு.

ஆனால் வீட்டுக்கு வந்தும் தனது நண்பன் சீனிவாசனையே நினைத்து குற்றவுணர்ச்சியில் குமுறிக் கொண்டிருந்தார் பிரபு. இதையடுத்து நள்ளிரவில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி உள்ளார் பிரபு.

நட்புக்காக உயிரை விட்ட தியாகத்தை பாராட்டுவதா? குடும்பத்தை மறந்து உயிரைக் கொடுத்த துயரத்தை நினைத்து அழுவதா? என்று தெரியாமல் திகைக்கின்றனர் பிரபுவின் குடும்பத்தினர்..

மன்னாரில் கட்டுப்பாட்டையிழந்து பட்டாரக வாகனம் விபத்து – : சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

விபத்து..

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று (13.11.2022) காலை 9.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த பட்டா ரக வாகனம் வீதியின் அருகில் இருந்த மரத்தில் மோதிண்டு விபத்துக்குள்ளானதுடன் வாகனத்தின் சாரதி வாகனத்தினுள் நசியுண்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த முருங்கன் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலத்தினை மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்வதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மாவீரன் பண்டார வன்னியன் புகழ் பண்பாட்டுப் பெருவிழாவின் புத்தகக் கண்காட்சி!!

பண்டார வன்னியன் புகழ் பண்பாட்டுப் பெருவிழா..

வன்னி கலை பண்டபாட்டுக் கூடமும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் மாவீரர் பண்டார வன்னியன் புகழ் பண்பாட்டுப் பெருவிழாவின் ஓர் அங்கமாக புத்தகக்கண்காட்சி இடம்பெற்றது.

குறித்த புத்தகக் கண்காட்சி வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (12.11.2022) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானதுடன் வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரை நாடா வெட்டி புத்தகக்கண்காட்சியினை திறந்து வைத்தார்.

கொழும்புத் தமிழ்ச் சங்க தலைவர் நடராஜர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் கொழும்புத் தமிழ்ச் சங்க துணைத்தலைவர் மாரிமுத்து கணபதிப்பிள்ளை , கொழும்புத் தமிழ்ச் சங்க இலக்கிய குழு செயலாளர் மதுசுதன் மற்றும் வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரை,

கொழும்புத் தமிழ்ச் சங்க மாங்குளம் கிளை தலைவர் கிந்துஜன், கொழும்புத் தமிழ்ச் சங்க செயற்பாட்டாளர்கள் பிரேம், தனுஸ், தவபாலன், வன்னி கலை பண்பாட்டுக்கூடத்தினர், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கண்காட்சிக்கான புத்தகங்களை வவுனியா பண்டார வன்னியின் புத்தகசாலையினர் வழங்கியிருந்தமையுடன் குறித்த கண்காட்சி 2022.11.12ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும் மற்றும் 13ம்திகதி காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரையும் இடம்பெறும்.

வவுனியாவில் மூன்று நூல்களின் வெளியீடு!!

நூல் வெளியீடு..

வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு.இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் நாளை 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் வெளியீடு செய்யப்படுகின்றன.

தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராசா கலந்துகொள்கிறார்.

வரவேற்புரையினை திருமதி சி.குமாரதேவியும் வாழ்த்துரையினை சிவஸ்ரீ ஜெ.மயூரக் குருக்களும் நூல்களின் அறிமுகத்தை கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமாரும் நிகழ்த்த வேப்பங்குளம் ஞானவைரவர் ஆலய அறங்காவலர் பொ.நாகேந்திரம் நூல்களின் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொள்வார்.

நூல்களின் நயவுரைகளில் ‘சைவசமய ஆலய வழிபாட்டு அமுதம்’-எஸ்.எஸ்.வாசன், ‘நாயன்மார்களின் வரலாறும் வழிபாடும்’-கி.உதயகுமார், ‘திருவாசகம்’-திருமதி. அனுஷா மதியழகன் ஆகியோர் உரையாற்றுவர். நன்றியுரையை வைத்தியகலாநிதி திருமதி.விமலா விஷ்வநாதன் நிகழ்த்துவார்.மதிய போசனத்துடன் நிகழ்வு நிறைவுபெறும்.

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி தந்தையுடன் இளம்பெண் எடுத்த துணிச்சலான முடிவு!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம், முசிறியில் வசித்து வருபவர் மருதை வீரன். அவரது மகள் 28 வயது நர்மதா. இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பாண்டியன் நகரில் வசித்து வரும் இளைஞர் ஹரிராஜூவை காதலித்தார். இருவரும் செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டு ரிஜிஸ்டர் ஆபிசில் பதிவும் செய்து கொண்டனர். இதன்பிறகு ஹரிராஜ் பெற்றோருடன் வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இருவரும் கொங்கு மெயின் ரோடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ஹரிராஜூம், நர்மதாவும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இடையில் ஆடிமாதம் வந்ததால் நர்மதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது சாதியை காரணம் காட்டி நர்மதாவை, அவரது காதல் கணவர் ஹரிராஜ் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். கடந்த 3 மாதங்களாக ஹரிராஜும் , அவரது பெற்றோரும் நர்மதாவை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்துள்ளனர்.

இது குறித்து நர்மதா திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், கொங்கு நகர் சரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காதல் தம்பதியருக்கு கவுன்சிலிங் காவல்துறையினர் கொடுத்து அனுப்பி வைத்தனர். இதன்பிறகு நர்மதா மீண்டும் மகளிர் காவல் நிலையத்தை நர்மதா அணுகியபோது காவல்துறையினர் சரிவர பதில் அளிக்கவில்லை.

இதனையடுத்து நர்மதா தனது காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி பாண்டியன் நகரில் உள்ள கணவர் வீட்டின் முன்பு தனது தந்தை மருதை வீரனுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவிலை சூழ்ந்த மழை வெள்ளம்… நனைந்த கோலத்தில் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள்!!

தமிழகத்தில்..

கோயில் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்ட மோசமான சூழ்நிலையிலும் ஈர துணியுடன் வரிசையில் நின்று தம்பதிகள் திருமணம் செய்து கொண்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அந்த கோவிலில் இன்று நடைபெற இருந்த 5 திருமணங்கள் தாமதமானதுடன் நடைபெற்றது, திருமணத்திற்காக வரிசையில் நின்றிருந்த தம்பதிகள் கோயிலுக்குள் தேங்கி இருந்த தண்ணீரில் நடந்து சென்ற போது முற்றிலுமாக நனைந்தனர்.

இருப்பினும் இறைவன் அருளோடும், முகத்தில் புன்னகையுடனும் மணமக்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணங்கள் அனைத்தும் சில மாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுவதுமாக ஈரமாகி இருந்த மணமகன் ஒருவர், கோயிலை சுற்றி முற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் நாங்கள் முழுவதுமாக ஈரமாகிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறைந்தபட்சம் கோயில் வளாகம் மற்றும் பிற பொது இடங்களையாவது சுத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இலங்கையில் தொடர்ச்சியாக குறைந்துசெல்லும் வாகனங்களின் விலை : காரணம் இதுதான்!!

வாகனங்களின் விலை..

வாகன விற்பனையின் போது வாகன தரகர்கள் சட்டவிரோதமாக ஆதாயங்களை ஈட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சந்தையில் வாகனங்களின் விலையில் கடுமையான வீழ்ச்சி பதிவாகி வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் மிக வேகமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியிருந்தது. மேலும், ஆக்ஸியோ, பிரீமியோ, ரைஸ், சிஎச்ஆர், வெசல், வேகன் ஆர்,

பாஸோ, விட்ஸ், கிரேஸ் போன்ற பல வகை கார்களின் விலைகள் குறைந்து வருவதாக அந்த சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டமை காரணமாக தற்போது குறைந்த விலைக்கு வாகனங்களை விற்கும் நிலை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தற்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய பெறுமதியை விடவும் குறைந்த விலைக்கு வாகனங்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சூழ்நிலையிலும் வாகன தரகர்கள் சட்டவிரோதமாக ஆதாயங்களை ஈட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ற போதும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் சுமார் 500 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த போக்குவரத்து தொழிற்சங்க மையம் நேற்றைய தினம் நுகர்வோர் அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சமூக ஊடக பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சமூக ஊடக பயனாளர்களுக்கு..

சமூக ஊடக பயனாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு விடுத்துள்ளது.

சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் 41 சதவீதமானவை போலி முகப்புத்தக முறைப்பாடுகள் தொடர்பான கணக்குகள் தொடர்பானவை என அந்த பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியிலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,” கணக்குகள் முடக்கப்பட்டமை தொடர்பில் 16 சதவீதமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன், ஸ்கேம் எனப்படும் மோசடி முறைமைத் தொடர்பில் 468 முறைப்பாடுகளும், துஷ்பிரயோகங்கள் குறித்து 757 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

மேலும் கடந்த ஆண்டு 24 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில், இரண்டு மாதங்களில் பெரும்பாலும் கடந்த ஆண்டை விட அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பயனாளர்கள் தங்களது கணக்கையும் தனிப்பட்ட தரவுகளையும் பாதுகாப்பதற்கு வழங்கப்பட்டுள்ள முறைமைகளை உரிய வகையில் பயன்படுத்தாமையே இதற்கு காரணமாகும்.

க்ரிப்டோ கரன்ஸி எனப்படும் மெய்நிகர் நாணய பயன்பாடு முறைமை ஊடாக கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்பாடு செய்து தருவதாக மென்பொருள் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தர்ப்பங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இது போன்ற முறைமைகள் தொடர்பில் சமூக ஊடக பயனாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.”என கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ்க்குடும்பம் : விசாரணையில் வெளியான தகவல்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியா- கான்பெராவின் பகுதியில் குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றினை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தமிழ் குடும்பத்தின் உயிரிழப்பு தொடர்பில் கொலை, தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் குளத்திலிருந்து தாய் மற்றும் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உயிரிழந்த மூவருக்கும் தொடர்புள்ளதாகவும், கொலை, தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் உயிரிழப்பிற்கான தெளிவான மரண விசாரணை அறிக்கையை அதிகாரியிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, மூவரும் உயிரிழந்த குளத்திற்கு அருகில் வாகனமொன்று நிறுத்தப்பட்டடிருந்த நிலையில், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சமூகவலைதள போலிச் செய்தியால் வந்த வினை… இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூரில் செங்காந்தள் பூ செடியின் கிழங்கைச் சாப்பிட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன்.

அதேபோல் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இளைஞர்களான இவர்கள் இருவரும் தனியார் கல்குவாரி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் இருவரும் தங்களது செல்போனில் சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதன்படி சமூகவலைதளம் ஒன்றில் வந்த தகவலில் செங்காந்தள் பூ செடியின் கிழங்கைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என இருந்துள்ளது.

இந்த தகவலைப் படித்த இருவரும் அதை உண்மை என நம்பி , செங்காந்தள் பூ செடியின் கிழங்கைச் சாப்பிட்டுள்ளனர். பின்னவர் இவர்கள் இருவரும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக லோகநாதன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அதேபோல் ரத்தினத்திற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்!!

மாலத்தீவில்..

மாலத்தீவு தலைநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மாலத்தீவு தலைநகர் மாலேவில் 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரை தளத்தில் கார் பழுது பார்க்கும் நிறுவனம் உள்ளது.

கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் சுமார் இரவு 11.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால், உடனே யாரும் பார்க்காததாலும்,

பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பெட்ரோல், டீசல்கள் அதிகளவில் இருந்ததாலும், மள மளவென தீ கொளுந்து விட்டு எரிந்து 4 மாடிகளிலும் வேகமாக பரவியது.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர், பல மணி நேர போராட்டத்துக்கு பின் அதிகாலையில் முழுமையாக தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியரும் பலியானார்கள். குமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் எட்வின் ஜெனில் (44), சுந்தரி (40) உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.

உயிரிழந்த எட்வின் ஜெனிலும், அவரது மனைவி சுந்தரியும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

தம் வீட்டு பணியாளர் மீது காதலில் விழுந்த செல்வந்த பெண்.. உருக வைத்த காரணம்!!

பாகிஸ்தானில்..

பணம், அந்தஸ்து, ஜாதி, மதம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தாண்டி உண்மையுள்ள இரு மனங்களுக்கு இடையே உருவாகும் காதல் முன் மற்றது அனைத்தும் தூசு போல தான் தோன்றும்.

அந்த வகையில், அப்படி ஒரு உயர்ந்த காதலை வெளிப்படுத்தும் செய்தி தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அன்னி (Annie). பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவருக்கு பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு மாப்பிள்ளையை பார்த்த போது அன்னிக்கு பிடிக்காமல் போயுள்ளது. செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது சொத்தின் மீது பேராசை கொண்டு தான் தன்னை அந்த மாப்பிள்ளை விரும்பியதையும் Annie உணர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனது பெற்றோர்களிடம் இது பற்றி அன்னி தெரிவித்ததாகவும் அதனை அவர்கள் புரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வேறு சில மாப்பிள்ளை பார்த்த போதும் அவர்களும் பணத்தின் மீது தான் அதிக விருப்பம் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கு மத்தியில், இசாயா கில் என்ற வாலிபரை அன்னியின் தந்தை தனது அலுவலகம் மற்றும் வீட்டில் உதவி செய்ய பணியாளாக வைத்துள்ளார். அப்படி இருக்கையில், இசாயாவின் பழக்க வழக்கங்கள், நடத்தை உள்ளிட்ட விஷயங்கள் அன்னியை ஈர்த்துள்ளது. அந்தஸ்து என்பதை தாண்டி இசாயாவின் குணத்தின் மீது காதல் வயப்பட்ட அன்னி, தனது காதலையும் நேரடியாக வெளிப்படுத்தி உள்ளார்.

தனது முதலாளியின் மகள் தன்னை காதலிப்பதை அறிந்ததும் நம்ப முடியாமல் அதிர்ச்சியிலே உறைந்து போயுள்ளார் இசாயா. யோசித்து முடிவை சொல்வதாக அன்னியிடம் தெரிவித்திருந்த இசாயா, இரண்டு நாட்களுக்கு பிறகு சம்மதம் சொல்லி உள்ளார். மேலும் தனது காதல் பற்றி தந்தையிடம் தயக்கத்துடன் அன்னி கூற, அவர் சம்மதம் சொன்னது ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது.

ஆனால், குடும்பத்தினர் சிலர் ஆரம்பத்தில் அன்னி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இறுதியில் அவர்களும் சமரசம் ஆக, அன்னி மற்றும் இசாயா ஆகியோர் திருமணம் சமீபத்தில் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

பொருளாதார நிலை, அந்தஸ்து என்பதை தாண்டி குணம் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் பெண் ஈர்க்கப்பட்டதுடன் அவரது குடும்பத்தினரும் மகளின் விருப்பத்திற்கு எதிர்க்காமல் சம்மதம் சொன்ன விஷயம் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

திருமணத்துக்கு மறுத்த காதலி : நடு வீதியில் தாய் கண்முன்னே காதலனின் வெறிச்செயல்!!

சென்னை..

செ.ன்னை ப.ரங்கிமலையில் தி.ருமணத்துக்கு ம.றுத்த கா.தலியை ர.யிலில் த.ள்.ளிவிட்டு கொ.லை செ.ய்.த கா.தலனைப் போ.லவே, ம.காராஷ்டிரா மா.நி.லத்திலும், கா.தலித்துவிட்டு, இ.ப்.போ.தை.க்.கு தி.ருமணம் வே.ண்டாம்,

கொ.ஞ்சம் கா.லமாகட்டும் எ.ன்ற கா.தலியை வெ.றி.த்.த.ன.மா.க க.ழு.த்.து, மா.ர்.பு, வ.யி.று எ.ன க.த்.தி.யா.ல் அ.டு.த்.தடு.த்.து ச.ர.மா.ரியாக கா.தலன் கு.த்.தி.க் கொ.ன்.ற.து ப.ர.ப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

ம.காராஷ்டிரா மா.நி.லம் பு.னே சி.த்தார்த் ந.கரில் வ.சித்து வ.ந்தவர் ஸ்.வேதா (26). ஸ்.வேதாவின் உ.றவுக்கார பை.யன் பி.ரதீக் கி.சான். பு.னே ரா.ஜ்குரு ந.கரில் த.னியே வ.சித்து வ.ந்த பி.ரதீக் கி.சான் , பொ.றியியல் ப.டிப்பு மு.டித்து, த.ண்ணீர் கே.ன் க.ம்பெனி ந.டத்தி வ.ந்தான்.

இவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. தினமும் சந்தித்து வீட்டுக்குத் தெரியாமல் தங்களது காதலை வளர்த்து வந்த இருவரும் ஒரு கட்டத்தில் வீட்டில் தங்களது காதலைச் சொன்னார்கள். உறவு முறை என்பதால், இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்தனர். உடனே திருமணம் செய்து கொள்ளலாம் என்று பிரதீக் தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் தான் லண்டனில் சி.ஏ. படிப்பு முடித்து இந்தியா திரும்பி இருந்தார் ஸ்வேதா. அதனால், நல்ல நிறுவனத்தில் வேலை என கொஞ்சம் செட்டிலாகி விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஸ்வேதா கால அவகாசம் கேட்டுள்ளார்.

ச.ந்திக்கும் போ.தெல்லாம் தி.ருமணம் செ.ய்து கொ.ள்வது கு.றித்து பே.ச்சு எ.ழுந்து. இ.ருவருக்கும் இ.டையே க.ருத்து வே.றுபாடு ஏ.ற்பட்டு ச.ண்.டை வ.ந்துள்ளது.

இந்நிலையில் ஸ்வேதா, தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு, மதிய நேரத்தில் அவரது வீட்டுக்குத் திரும்பினார். முன்கூட்டியே ஸ்வேதா வீட்டின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் காத்திருந்த பிரதீக், ஸ்வேதாவுடன் மீண்டும் வா.க்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து ஸ்வேதா ச.ண்.டையிடவும், ஸ்வேதாவின் தாய் எதிரிலேயே, தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல் ஸ்வேதாவின் க.ழு.த்.து, மா.ர்.பு ம.ற்.று.ம் வ.யி.று எ.ன ச.ர.மா.ரி.யா.க அ.டு.த்தடுத்து கு.த்.தி.வி.ட்.டு, அ.ங்கிருந்து த.ப்.பி ஓ.டினார்.

இதையடுத்து ஸ்வேதா குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஸ்வேதாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உ.யி.ரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்வேதா குடும்பத்தார் கூறுகையில், ஸ்வேதா சிஏ படிப்பை முடித்துவிட்டு, மேல் படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பினார்.

இதற்கு த.டையாக இருந்த திருமணத்தை வெ.றுத்தார். இந்த மறுப்பால் தொ.ல்.லை கொடுத்துவந்த பிரதீக் மீதும் போலீசாரிடம் பு.கா.ர் அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது கொ.லை செ.ய்.ய.ப்பட்டார். இந்த கொ.லை.க்.கு காவல்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம்.

முன்கூட்டியே பிரதீக் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் ஸ்வேதா உ.யி.ருடன் இருந்திருப்பார் என்று தெரிவித்தனர். திருமணம் செய்ய ம.றுத்த இளம்பெண் கொ.லை செ.ய்.ய.ப்பட்ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.