இ.றப்புக்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என ஆவி ஒன்றிடமே நேரடியாக கேட்டிருந்த ஆவிகளுடன் பேசும் இளம்பெண் ஒருவர் கவனம் ஈர்த்து வருகிறார்.
ரெபேக்கா (29) என்னும் அந்த அமெரிக்கப் பெண் தொடர்ந்து ஆவிகளுடன் பேசும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துவருகிறார். சமீபத்தில், 18 வயது அழகிய இளம்பெண் ஒருவரின் ஆவியை சந்தித்திருக்கிறார் ரெபேக்கா.
அந்த அழகிய இளம்பெண், 1800களில் வாழ்ந்த ஒரு பா.லி.ய.ல் தொ.ழிலாளி. அவர் அயர்லாந்து வம்சாவளியினராம். அவரது பெயர் மோலி. தன்னை வ.ற்புறுத்திய ஒரு ஆணுக்கு மறுப்பு தெரிவித்ததால், அந்த ஆண் மோலியைக் கொ.லை செ.ய்.துவிட்டாராம்.
ஆனாலும், நான் அவரை ப.ழி.க்குப் ப.ழி.வா.ங்கிவிட்டேன் என்று கூறியதாம் மோலியின் ஆவி. இதற்கிடையில், ஆவிகளுடன் நண்பர்கள் போல பழகும் ரெபேக்கா, தான் சந்திக்கும் ஆவிகளின் உருவங்களை பெண் கலைஞர் ஒருவரின் உதவியுடன் படமாக வரைந்து வருகிறார்.
நாகர்கோவில் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் க.ணவனை வி.ஷ.ம் கொ.டுத்து கொ.லை செ.ய்.ய ம.னை.வி மு.ய.ற்சித்ததாக ம.ருத்துவமனையில் சி.கிச்சை பெற்று வரும் க.ணவன் கு.ற்.ற.ம் சா.ட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன். கட்டுமான தொழிலாளியான இவருக்கும் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி தி.ருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தி.ருமணத்திற்குப் பின்பு இரண்டு மாதங்கள் வரை புதுமண தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன், தி.டீரென ஒருநாள் இரவில் வீட்டில் நி.னை.விழந்து வி.ழு.ந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக அவரை ம.ருத்துவமனைக்கு கொண்டு சென்று சி.கிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையே, கடந்த ஒருமாத காலமாக சுஜாவின் நடவடிக்கையில் வடிவேல் முருகனுக்கு ச.ந்தேகம் எழுந்தது. இதையடுத்து வடிவேல் முருகன், தனது ம.னைவியை க.ண்காணிக்க தொங்கியுள்ளார்.
ஏற்கெனவே தி.ருமணமான சில நாட்களுக்கு பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இ.ளைஞரை கா.தலித்து வந்ததாகவும் அவரோடு தற்போது எவ்வித தொ.டர்பும் இல்லை எனவும் சுஜா கணவரிடம் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சமீப காலமாக சுஜாவின் ந.டவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் முன்னாள் கா.தலனுடன், ம.னைவிக்கு தற்போதும் தொ.டர்பு இருக்கிறதா என க.ணவனுக்கு ச.ந்தேகம் எ.ழுந்தது.
ஏற்கனவே ம.னைவி தனது செ.ல்போனை லாக் செய்து வைத்திருப்பதால் அதை தி.றந்து பார்க்க முடியாமல் வடிவேல் முருகன் கு.ழம்பிய நி.லையில், அதை அன்லாக் செய்வது எப்படி என்பதையும் ம.னைவியின் செல்போன் பயன்பாட்டின் போது ம.றைமுகமாக க.வனித்து தெரிந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து செல்போனை திறந்து பார்த்தபோது தனது ம.னைவிக்கும் முன்னாள் கா.தலனுக்கும் இடையே நிகழ்ந்த வாட்ஸ் அப் சாட் பெரும் அ.தி.ர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது. கணவனுக்கு அளித்த ம.ருந்தில் ஏதோ க.லந்து கொ.டுத்ததாக முன்னாள் கா.தலன் மற்றும் சுஜா ஆகியோர் பேசிக்கொண்ட தகவல் வாட்ஸ்-அப்பில் பதிவாகி உள்ளது.
க.ணவனை தனக்கு பிடிக்கவில்லை எனவும் பிடிக்காத க.ணவனோடு வாழ்க்கை நடத்துவது கஷ்டமாக உள்ளது எனவும் இன்னும் பல்வேறு அ.திர்ச்சி தரும் தகவல்களை காதலனோடு சுஜா பகிர்ந்ததும் தெரியவந்தது..
இந்நிலையில், உடல்நிலை தொடர்ந்து பா.திக்கப்பட்டு வருவதால் ஸ்.லோ பா.ய்.ச.ன் அ.ளித்திருப்பார் என உறுதி செய்த வடிவேல் முருகன், கா.வல்துறைக்கு பு.கா.ர் அளித்த பின்பு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சி.கிச்சைக்காக அ.னுமதிக்கப்பட்டார்.
ஐந்து நாட்களுக்கு மேலாக .சிகிச்சை பெற்று வரும் வடிவேல் முருகனுக்கு இன்னும் உ.ட.ல்.நி.லை ச.ரியாகவில்லை எனவே போ.லீசார் இச்சம்பவம் தொடர்பாக வ.ழக்குப் ப.திவு செய்து தனது ம.னைவியையும் அவரது கா.தலனையும் கை.து செ.ய்.து த.னக்கு அளித்த ம.ருந்தை அ.றிந்து அ.தற்குரிய சி.கிச்சை அளிக்க கா.வல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ.ரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ம.ருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது… வடிவேல் முருகனின் ரத்த மா.திரியை எடுத்து ஆ.ய்வு மை.யத்திற்கு அ.னுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான ம.ரு.ந்து அ.ல்லது வி.ஷ.ம் கொ.டுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் ப.ர.ப.ரப்பை ஏற்படுததியுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன்(29). இவரது மனைவி ரெஜினா பானு(26). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைக்காக வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரெஜினா பானு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நேசமணிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது போலீசாரின் விசாரணையில், மனைவி ரெஜினா பானுவை கணவர் முகமது உசேன் கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் முகமது உசேனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முகமது உசேன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, “எனக்கும், ரெஜினா பானுவுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு நாங்கள் குமரி மாவட்டத்தில் வேலைக்கு வந்தோம். தற்போது நான் புன்னைநகர் பகுதியில் தங்கி ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று நான் வேலைக்கு சென்று விட்டு வந்தபோது எனக்கும் எனது மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது எனது மனைவி ரெஜினா பானு தற்கொலை செய்வதாக கூறி கழுத்தில் துணியை வைத்துக்கொண்டு என்னை மிரட்டினார்.
அப்போது நான் அவரை சமாதானம் செய்தேன். தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் எனது மனைவியை கழுத்தை நெரித்தேன். அப்போது அவர் இறந்துவிட்டார். உடனே அவரை தூங்குவதுபோல் போட்டுவிட்டு நானும் தூங்கினேன். மறுநாள் காலையில் குழந்தைகளும் கண் விழித்தனர்.
அப்போது தாயார் எழும்பாததால் என்னிடம் கேட்டனர். அப்போது குழந்தைகளிடம் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் தூங்குவதாக கூறினேன். பின்னர் ரெஜினா பானுவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன்.
அங்கு எனது மனைவி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்” என கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட முகமது உசேனை போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். மனைவியை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டருந்த தனது புதல்வியின் திருமணத்திற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை அடகு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை சகஸ்ரவில் வசிக்கும் 21 வயதான மகள் செய்த முறைப்பாட்டின்படி 44 வயதான சந்தேத நபரான தாய் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள இந்த தங்க நகைகள் இன்னும் இரண்டொரு மாதங்களில் நடைபெற இருந்த நிலையில் தாயால் திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் மகள் தெரிவித்திருந்தார்.
தாய் அதனை அடகு வைக்கும் நிலையம் ஒன்றில் அடகு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் அதனை மீண்டும் ஒரு முறை அடகு வைத்து திரும்பவும் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து திருடப்பட்ட தங்க நகைகளை மீண்டும் மீட்டுத் தருமாறு கேட்ட போதும் தாயார் அதனை தவிர்த்து வந்ததால் தாயாருக்கு எதிராக மகள் முறைப்பாட்டை செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தாய் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது நகைகளை அடகு வைத்து பெற்றுக் கொண்ட 40 இலட்சம் ரூபாவை கசினோ விளையாட்டுக்கு பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தாய் நேற்று முன்தினம் அழுத்கடை இலக்கம் 02 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டதாக பொரளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் புதுச்சேரி கோட்டக்குப்பம் பகுதியில் வசித்து வரும் கோமதியை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் புதுச்சேரியில் நேற்று காலை கோட்டக்குப்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடத்தப்பட்டது. நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு கல்யாண வீட்டார் அனைவரும் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் உடை மாற்றும் அறைக்கு உடைகளை மாற்ற சென்ற சுரேஷ்குமார் நீண்ட நேரம் கடந்தும் வெளியே வரவில்லை. அவருடைய உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது தரையில் சுரேஷ்குமார் மயங்கி விழுந்து கிடந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமணமான அதே நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மாத்தளை- உக்குவளை லேலிஅம்ப பிரதேசத்தில் தாயும் பிள்ளைகள் மூவரும் கூரிய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்.கு.த.லு.க்.கு இலக்காகி காயமடைந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் உ.யிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவனின் சகோதரர்கள் இருவரும் பாடசாலை செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, அவர்களது வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் சிறுவர்களின் தாயையும் பிள்ளைகளையும் தா.க்.கியுள்ளார்.
சம்பவத்தின்போது அவர்களின் தந்தை தொழிலுக்குச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் லேலிஅம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது தாயும் 19 வயது மகளும் மற்றுமொரு சிறுவனும் பாரிய காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்பவர் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சாதனை தமிழர் ஸ்ரீதர் வேம்புவின் Zoho நிறுவனம் $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழகத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு தான் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporationன் நிறுவனர்.
1989 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது மின் பொறியியல் படிப்பை ஸ்ரீதர் வேம்பு முடித்தார். பின்னர், 1994 இல் சான் டியாகோவில் இருக்கும் குவால்காமில் [Qualcomm ] சேர்ந்தார்.
அங்கிருந்த போது . குறிப்பாக, CDMA, power control மற்றும் தொலைதொடர்பில் சிக்கலான பிரச்சனைகள் குறித்த வேலைகளில் ஈடுபட்டார்.கடந்த 1996ல் நெட்ஒர்க் மேனேஜ்மெண்ட் துறையில் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த டோனி தாமஸ் என்பவருடன் இணைந்து சென்னையில் சிறிய அபார்ட்மெண்டில் Vembu Software நிறுவனத்தை ஸ்ரீதர் துவங்கி தொழிலில் முழுவதுமாக கவனம் செலுத்தி கடுமையாக உழைத்தார்.
பின்னாளில் தான் இந்த நிறுவனத்தின் பெயர் Zoho Corporation-ஆக மாறியது. 2000 ஆண்டு வாக்கில் இந்தியாவில் 115 பொறியாளர்கள், அமெரிக்காவில் 7 பொறியாளர்கள் என வளர்ந்தது நிறுவனம். மேலும் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை நடைபெற்றது.
இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், வருடத்திற்கு 1 பில்லியன் டொலர் வருவாய் அளவினை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் முதல் பில்லியன் டொலர் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை Zoho பெற்றுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களான ஸ்ட்ரைப், ட்விட்டர், பேஸ்புக், லிஃப்ட், டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
ஆனால் இந்திய மென்பொருள் நிறுவனமான Zoho அடுத்த ஒரு வருடத்தில் 1,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. ஸ்ரீதர் வேம்பு பேசுகையில், இந்தியாவில் பில்லியன் டொலர் தயாரிப்பு நிறுவனத்தை யாரும் இதுவரையில் உருவாக்கியதில்லை.
2021-ம் ஆண்டைவிட 2022-ம் ஆண்டில் உலக நிதி வளர்ச்சி குறைந்திருந்தாலும் எங்கள் பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்பு போர்ட்போலியோ மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையில் நாங்கள் சேவை வழங்கியது நிறுவனத்துக்கு லாபம் பெற உதவியது.
தரமான சாஃப்ட்வேர்களை மலிவு விலையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வழங்கினோம்; வரும் காலங்களிலும் வழங்குவோம் என கூறியுள்ளார்.
கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தில் அமுலாகும் வரையில் கட்டணங்களை 20 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து,
உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி நிலையில் புதிய வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமண நிகழ்வில், நண்பனை தங்களுடன் நேரம் செலவழிக்க அனுமதி கேட்டு மணமகளிடம், மணமகன் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கியுள்ள நிகழ்வு கேரளாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிகழ்வில், நண்பனை தங்களுடன் நேரம் செலவழிக்க அனுமதி கேட்டு மணமகளிடம், மணமகன் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கியுள்ள நிகழ்வு கேரளாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரகு. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் வகை வகையான பரிசு பொருட்கள் கொடுக்க, ரகுவின் நெருங்கிய நண்பர்கள் புது விதமாக பரிசுப்பொருட்களை கொடுப்பதற்கு பதிலாக தனது நண்பனின் மனைவியிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
அதாவது ரகுவின் திருமணத்தின் போது, அவரது நெருங்கிய நண்பர்கள் குழுவாக சேர்ந்து பாத்திரம் ஒன்றை தயார் செய்துள்ளனர். அந்த பத்திரத்தில் “என் கணவரை இரவு 9 மணி வரை அவரது நண்பர்களுடன் இருப்பதற்கு சம்மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் அதில் “போன் செய்து தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை படித்த மணப்பெண்ணும் சிரித்தபடியே சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தமானது 50 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இதில் சாட்சிக்கு 2 பேர் கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் திருமணத்தில் நடந்த நிகழ்வை ரகுவின் நண்பர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண நிகழ்வில், நண்பனை தங்களுடன் நேரம் செலவழிக்க அனுமதி கேட்டு மணமகளிடம், மணமகன் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கியுள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மின்டு – சாந்தி தம்பதியினர் தங்களது திருமணத்திற்கு முன்பு இது போன்று ஒப்பந்தத்தில் மணமக்கள் கையெழுத்திட்டனர்.
அந்த ஒப்பந்தத்தில் ஞாயிறு காலை உணவை கணவர் செய்ய வேண்டும், வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், நேரத்துக்கு வீட்டுக்கு வர வேண்டும், பார்ட்டிகளில் நல்ல புகைப்படம் எடுக்க வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங் செல்லவேண்டும், தினமும் ஜிம் செல்லவேண்டும், போன்றவை இருந்தது.
ஆண் தரப்பில், மனைவி தினமும் சேலைதான் கட்ட வேண்டும், கணவருடன் மட்டுமே இரவு பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும், மாதத்தில் ஒரு பீட்சாவுக்கு மட்டுமே அனுமதி போன்ற சில ஒப்பந்தங்களும் அதில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகளின் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்து வருகிறது. அரசும், கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இணைந்து அவசர கதியில் இதைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது.
திருச்செந்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றின் விடுதியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படிக்க கஷ்டமாக இருக்கிறது என மாணவி எழுதிய கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருச்செந்தூர், ஏரல் வட்டம் சக்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகள் செல்வராணி(19). இவர் திருச்செந்தூரில் தனியார் நர்சிங் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தபடியே இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், செல்வராணி தங்கியிருந்த அறையில் இருந்த மற்றொரு மாணவி சொந்த ஊருக்கு சென்று விட்ட நிலையில், செல்வராணி, தனது தோழியின் அறைக்கு சென்று தூங்கி உள்ளார்.
நேற்று காலை 7 மணிக்குஎழுந்து, அவரது அறைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், காலை உணவு சாப்பிட பிற மாணவிகள் செல்வராணியை அழைப்பதற்காக அவரது அறைக்குச் சென்று, கதவைத் தட்டியுள்ளனர்.
அவரது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அறைக்குள் செல்வராணி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். தகவலறிந்து திருச்செந்தூர் ஆர்டிஒ புஹாரி, தாசில்தார் சுவாமிநாதன்,
ஏ.டி.எஸ்.பி.க்கள் கார்த்திகேயன், லயோலோ இக்னிஷீயஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், மாணவியின் அறையில் இருந்து மாணவி எழுதி வைத்திருந்த துண்டு சீட்டு கைப்பற்றப்பட்டது. அதில், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. எனக்கு படிக்க கஷ்டமாக இருக்கிறது. அதனால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
என்னை மன்னித்து விடுங்கள்’ என்று மாணவி செல்வராணி எழுதி வைத்துள்ளார். மாணவியின் தற்கொலை குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டிலுள்ள அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்காக முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் (13.11.2022) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், ஜனாதிபதி சட்டத்தரணியும் கொழும்பு தமிழரசு கட்சியின் தலைவருமான கே. வி. தவராசா, யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன்,
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், சிரேஸ்ட விரிவுரையாளர் பரந்தாமன் மற்றும் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் முன்னாள் போராளிகள் ஒன்றிணைவதில் உள்ள சட்டச்சிக்கல்கள், முன்னாள் போராளிகளின் அரசியல் பிரவேசம், தற்போது அங்கம் வசிக்கும் தமிழ் கட்சிகளின் நிலமை, போராளிகளின் நலன்சார்ந்து செயற்படுவது, புலம்பெயர் உதவிகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வன்னி கலை பண்டபாட்டுக் கூடமும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் மாவீரர் பண்டார வன்னியன் புகழ் பண்பாட்டுப்பெருவிழா வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (13.11.2022) மதியம் 2.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை வெகுசிறப்பான முறையில் இடம்பெற்றது.
கொழும்புத் தமிழ்ச் சங்க தலைவர் நடராஜர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் முதல் நிகழ்வாக பிரசாந்தினி நர்த்தன நாட்டியாலயத்தினர் வரவேற்பு நடனமும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து தலைமையுரை , அடக்காப்பற்றும் தமிழர் வரலாறும் சிறப்புரை, கரகாட்டம், சிவத்தாண்டவம், பண்டார வன்னியன் சிறப்புரை, வில்லிசை, கவியரங்கம், இசை நிகழ்ச்சி, தனிநபர் நடிப்பு என பல்வேறு நிகழ்வுகளுடன் விழா சிறப்புற இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று (13.11.2022) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியிட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராசா கலந்து கொண்டிருந்தமையுடன்,
முதல் நிகழ்வாக மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் வரவேற்புரையினை திருமதி சி.குமாரதேவியும் வாழ்த்துரையினை சிவஸ்ரீ ஜெ.மயூரக் குருக்களும் நூல்களின் அறிமுகத்தை கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமாரும் நிகழ்த்தியிருந்தனர்.
அத்துடன் வேப்பங்குளம் ஞானவைரவர் ஆலய அறங்காவலர் பொ.நாகேந்திரம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் நூல்களின் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
நூல்களின் நயவுரைகளில் ‘சைவசமய ஆலய வழிபாட்டு அமுதம்’ நூலை -எஸ்.எஸ்.வாசன் மற்றும் ‘நாயன்மார்களின் வரலாறும் வழிபாடும்’நூலை -கி.உதயகுமார் மற்றும் ‘திருவாசகம் நூலை ‘-திருமதி. அனுஷா மதியழகன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
நூல்களின் நன்றியுரையை வைத்தியகலாநிதி திருமதி.விமலா விஷ்வநாதன் நிகழ்த்தியிருந்தார். நிகழ்வில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
உஹன பிரதேசத்தில் ஒரு மாத காலமாக தனது 22 வயது காதலியை வீட்டில் படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 16 வயது மாணவன் தொடர்பில் தகவல்கள் பதிவாகி வருகின்றன.
குறித்த மாணவனின் பெற்றோர்கள் கடையொன்றை நடத்தி வருவதாகவும், அவர்கள் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி இரவு தாமதமாக வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அதன் காரணமாக பகலில் வீட்டில் யாரும் இல்லாததால், தனது காதலியை இரவு நேரத்தில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அறைக்கு அழைத்து வந்து அவருக்குத் தேவையான உணவைக் கொடுத்ததாகவும், ஒரு சந்தர்ப்பத்தில், பகலில் திடீரென வீட்டிற்கு வந்த தாய், அந்த யுவதியை கண்டுபிடித்துள்ளார்.
எனினும் இந்த சம்பவத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என மகன் தயாரிடம கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்,
இருவரையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதாகவும் அப்போது வரையிலும் தந்தைக்கு சம்பவம் தொடர்பில் தெரிய வராமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அம்பலாங்கொடை – குலீகொட ரங்கோத் விஹார மாவத்தையில் உள்ள வீடொன்றில் பெற்றோர் தனது இரு குழந்தைகளை கைவிட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 2 மற்றும் 3 வயதுடைய இரண்டு குழந்தைகளே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளனர்.
இது குறித்து அறிந்த அயலவர்கள் நேற்று (11) இரவு அம்பலாங்கொடை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு குழந்தைகளையும் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள இரண்டு குழந்தைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கான அனுமதியை நீதிமன்றில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குழந்தைகளின் பெற்றோரைக் கண்டறிய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சூரியவெவ, மஹாவெலி கடார வாவியில் நேற்று காலை 08 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதன்போது, மூவர் காணாமற்போயிருந்த நிலையில், அவர்களில் 10 வயதான சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 17 மற்றும் 18 வயதான மேலும் இரண்டு சிறுமிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மழை, நீரின் அளவு அதிகரிப்பு காரணமாக தேடும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூரியவெவ பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் படகை செலுத்தியுள்ள நிலையில் படகில் 08 மாத குழந்தை உட்பட 08 பேர் பயணித்துள்ளனர்.
இதன்போது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஐவர் மீட்கப்பட்டுள்ளதோடு மூவர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த நிலையிலேயே 10 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சூரியவெவ பொலிஸின் உயிர்காப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல்போன சிறுமிகளை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், நீர்வீழ்ச்சிகள், நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற நிலை நிலைகளுக்கு குளிக்கச் செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.