பலமுறை திருமணம் செய்துண்ட பெண்… புது மாப்பிள்ளையா மாற இருந்தவர் எடுத்த அதிரடி முடிவு!!

கரூரில்..

கரூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்த நிலையில், அவரிடம் விசாரித்த போது வெளியான தகவல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதி விநாயகர் கோவில் சந்தில் வசித்து வந்தவர் சவுமியா என்ற சபரி. இதற்கிடையே ஆடம்பர வாழ்க்கை வாழ விருப்பம் கொண்டிருந்த சவுமியா, அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் அவரின் பெற்றோர்களுக்கு பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பெற்றோரை பிரிந்த அவர், ராமநாதபுரத்தில் ஒரு விடுதியில் தங்கி வந்துள்ளார். அப்போது போலீஸ்காரர் ஒருவருடன் சவுமியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து மோசடி வேலையில் இறங்க முடிவு செய்துள்ளார் சவுமியா. அதன்படி, தனது கணவர் பெயரை வைத்து அவருக்கு மேலிடத்தில் நல்ல பழக்கம் இருப்பதாக கூறி, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பலரையும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார் சவுமியா.

பலரிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சவுமியா, தனது கணவரை பிரிந்து வந்துள்ளார். இதற்கு மத்தியில், மோசடி புகாரில் ராமநாதபுரம் போலீசார் அவரை கைது செய்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ளார் சவுமியா.

இதன் பின்னர், இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்த சவுமியா, அவருடன் சில மாதம் குடும்பம் நடத்தி விட்டு பிரிந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கரூர் மாவட்டம் வந்த சவுமியா, தான் வங்கியில் உதவி மேலாளராக இருப்பதாக பலரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அது மட்டுமில்லாமல், அமைச்சர் ஒருவர் தனது நெருங்கிய உறவினர் என்றும் பலரை நம்ப வைத்துள்ளார். தொடர்ந்து, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளார் சவுமியா.

இதனிடையே, வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் சம்மந்தப்பட்ட நபர்களை அவர் மிரட்டி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கடுத்து, பல பேரை திருமணம் செய்து கொண்ட சவுமியா, அடுத்ததாக ஒருவரையும் திருமணம் செய்ய திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. திருமண ஏற்பாடுகளும் நடைபெற இருந்த சமயத்தில் தான் சவுமியா குறித்த தகவல், மாப்பிள்ளையின் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.

பண மோசடி செய்ததால், பகல் நேரத்தில் அதிகம் நேரம் வீட்டில் இருக்காத சவுமியா, சமீபத்தில் வீட்டில் இருக்கும் தகவல் பணம் கொடுத்து ஏமாந்த நபர்களுக்கு கிடைத்துள்ளது. இதன் பின்னர், சவுமியா வீட்டிற்கு வந்த நபர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அவரிடம் விசாரித்த போது, ஐந்து பேரை திருமணம் செய்து கொண்டதும், பண மோசடி செய்ததும் உறுதியானது. இன்னும் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு சவுமியா ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண் உயிரை குடித்த வங்கி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் கொல்லம் அருகே தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் அஜி குமார்(Aji Kumar). இவர் வீடு கட்டுவதற்காக, ரூ.11 லட்சம் ஒரு வங்கியிலிருந்து கடன் வாங்கியுள்ளார். கொரோனா விவகாரத்தால் அஜி குமார் வேலையை இழந்ததால் அந்த கடனை திருப்பி செலுத்த தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆனாலும், கடந்த மார்ச் மாதம் ரூ.1.5 லட்சம் ரூபாய் வங்கிக்கு கொடுத்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியது.

பின்னர் வங்கி அதிகாரிகள் நேற்று மதியம் வீட்டிற்கு வந்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அஜி குமாரின் மகள் அபிராமி(வயது 20) கல்லூரியில் இருந்து வந்தபோது நோட்டீஸ் ஒட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் அபிராமி(Abhirami) கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அபிராமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அபிராமியின் மரணத்திற்கு காரணம் வங்கி அதிகாரிகள் தான் என குற்றம்சாட்டி உறவினர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

பாடசாலைக்கு உணவின்றி வரும் மாணவர்கள் : அதிபரின் நெகிழ்ச்சியான செயல்!!

அதிபரின் நெகிழ்ச்சியான செயல்..

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமையினால் பல சிறுவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து சூரியவெவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலையின் அதிபர் நெகிழ்ச்சி செயல் ஒன்றை செய்துள்ளார்.

நமடகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் உணவின்றி வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை பாடசாலை அதிபர் முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய, உணவின்றி பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் நோக்கில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, பாடசாலையில் உணவு வங்கியை நடத்தி வருகின்றனர்.

இங்கு தினசரி பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபரினால் மேலதிகமாக கொண்டுவரப்படும் 3 உணவு பொதிகள் அந்த உணவு வங்கியில் வைக்கப்படுகின்றது. அதற்கமைய, உணவின்றி வரும் மாணவர்கள் வங்கியில் வைக்கப்பட்டுள்ள உணவு பக்கட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பாடசாலைக்கு வரும் பல மாணவர்கள் பாடசாலையில் இடம்பெறும் காலை கூட்டத்தின் போது மயங்கி விழுவதை அடுத்து அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

காதல் திருமணம் செய்த 5 மாத கர்ப்பிணி பெண் விபரீத முடிவு : வேதனையில் மாமியார் தூக்கிட்டு தற்கொலை!!

புதுச்சேரியில்யில்..

புதுச்சேரி அருகே சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா (23) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

காதல் திருமணம் செய்த 5 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், வேதனையில் மாமியாரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா (23) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். செவிலியராக பணிபுரிந்து வந்த சந்தியா 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசிகுப்பத்தில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை தொடர்பாக சந்தியாவுக்கும், மாமியார் அன்னக்கிளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவர்களை அவ்வப்போது ஆனந்த் சமாதானம் செய்து வந்தார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தியா, நேற்று வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை எழுந்து பார்த்தபோது, மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு கணவர் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். மனைவி பிரிந்து சென்றதை தாங்கிக்கொள்ள முடியாத அவரும், அதே அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்த தாய் அன்னக்கிளி அலறி கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மருமகள் இறந்த துக்கம் தாங்காமலும், மகனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தாலும் மனமுடைந்து போன அன்னக்கிளியும் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த உறவினர்கள், அன்னக்கிளி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் மருமகள், மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சன்னியாசிகுப்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணமாகி 8 மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மொபைல் போனில் கேம் விளையாடி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!!

சிறுவன்..

இளைஞர் ஒருவர் மொபைல் போனில் விளையாடி பைத்தியமாகியுள்ள காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இன்று சிறியவர் முதல் பெரியவர் என அனைவரது கையில் சர்வ சாதாரணமாக மொபைல் போன் நடமாடி வருகின்றது. இதனால் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

இதில் பெரும்பாலும் சிறுவர்கள் மொபைல் போனில் விளையாட்டில் மூழ்கியதோடு, நேரம் காலம் பார்க்காமல் அதிக நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் சிந்தனை அந்த போனுக்குள் அடங்கியதோடு, பைத்தியம் போன்றும் மாறி விடுகின்றனர். இதனை விளக்கும் காட்சியினை இங்கு காணலாம்.

இங்கு மொபைல் போன் விளையாடியதால் சிறுவன் பைத்த்தியமாகியுள்ளதாக போடப்பட்டு காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. இதனை அவதானித்த பெரும்பாலான மக்கள் இது ஒரு விழிப்புணர்வு காணொளியாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

வேலைக்கு சென்ற இரு பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!!

இரண்டு பிள்ளைகளின் தாய்..

அத்தனகல்லை – ஹெலபனாகந்த பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலுக்கு சென்ற பெண், நேற்று (21) மாலை வீடு திரும்பிய போது தாக்கப்பட்ட நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த தாயார் சிகிற்சை பலனின்றி வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற நபர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த 37 வயதான பெண், வத்துப்பிட்டிவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் இன்று காலை உயிரிழந்துள்ளார். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் 45 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்லுக்குள் ஈரம் : சோகமே முடிவான ஒரு ரவுடியின் காதல் கதை : மனைவி இறந்த நாளில் அதே மாதிரி மரணம்!!

சென்னையில்..

சென்னை சூளைமேடு அருகே தனது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளிலேயே கணவரும், சென்னையில் பிரபல ரவுடியுமான பிரசாந்த் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி குளோரி. பிரசாந்த் அப்பகுதியில் பிரபல ரவுடியாக சுற்றி திரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், பிரசாந்தின் மனைவி குளோரி கடந்த ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை நேற்று அனுசரித்த பின் ரவுடி பிரசாந்த் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நள்ளிரவில் உடல் அடக்கம் ரவுடி பிரசாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரவுடி பிரசாந்த் இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளிலேயே கனவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது நெகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியானது.

தீக்குளித்து தற்கொலை அதாவது பிரசாந்த் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு கொலைவழக்கும், கோடம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஆண்டு இவரது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து இவர், சூளைமேடு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடிசை வீட்டில் இருந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்துள்ளார்.

தானும் தற்கொலை இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டில் வசித்து வந்த இவரது சகோதரர் பிரதீப் என்பவர் வெளியே வந்து பார்த்துள்ளார். வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து பிரதீப் காவல் கட்டுப்பாட்டறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, உடலில் தீக்காயத்துடன் இருந்த பிரசாந்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய தடுப்பு பிரிவில் அனுமதித்தனர்.

மனைவியின் நினைவு ரவுடி பிரசாந்த், கடந்த ஓர் ஆண்டாக மனைவியின் ஞாபகமாகவே இருந்து வந்துள்ளார் எனவும் எப்போதும் மனைவியை பற்றியே சக நண்பர்களிடத்தில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், துக்கம் தாங்காமல் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலவே ரவுடி பிரசாந்தும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்உடலில் 67 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நாளைமுதல் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்!!

மின்வெட்டு..

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (23.09) முதல் ஞாயிறு (25.09) வரை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

வெஸ்ட்கோஸ்டில் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பழைய லக்சபான நிலையம் சேவையில் இன்மை ஆகிய காரணங்களால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏ முதல் டபிள்யூ வரையான 20 வலயங்களில் பகலில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இறந்த மகள் தூரிகை பற்றி பாடலாசிரியர் கபிலனின் கண்கலங்க வைத்த பதிவு!!

தூரிகை..

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகளை நினைத்து கவிலன் வெளியிட்டுள்ள கவிதை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கபிலன், இவருடைய மகள் தூரிகை. இவர் எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர். ஆங்கில இதழ் ஒன்றை அண்மையில் தொடங்கியிருந்தார்.

இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பதிவினை போட்டிருந்த இவரா இந்த முடிவை எடுத்துள்ளார் என்ற கேள்வி தற்போதும் அனைவரையும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் கபிலன், தன் மகள் தூரிகை குறித்து எழுதிய உருக்கமான கவிதைகளை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கபிலன் எழுதிய கவிதையில், “எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக்கொண்டால் நான் எப்படி தூங்குவேன்” , “எங்கே போனாள் என்று தெரியவில்லை, அவள் காலணி மட்டும் என் வாசலில்” , “மின்விசிறி காற்று வாங்குவதற்கா… உயிரை வாங்குவதற்காக.?” , “அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன்,

எறும்பாய்..?” , “அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்கு தெரியாது, அவளே என் கடவுள்..!” , “யாரிடம் பேசுவது.. எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்..” , “பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்..!” என்று மறைந்த தம் மகள் தூரிகை குறித்து கபிலன் கண்ணீரால் கவிதை வடித்துள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தூரிகை கடந்த 2020ம் ஆண்டு தற்கொலை விழிப்புணர்வு குறித்த பதிவினை பதிட்டிருந்தார். அதில், “வாழ்க்கையில் எல்லா முடிவுகளுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. ஆனால் ஒன்றை முடித்துக் கொள்வது என்பது எஞ்சிய பயணத்தை முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.

தற்கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் முடிவல்ல. நீங்கள் தற்கொலை செய்வதால் அணு அளவும் எதுவும் மாறிவிடப் போவதில்லை. வாழ்க்கையை இழக்கிறோம். மகிழ்ச்சியை இழக்கிறோம். அனுபவங்களை இழக்கிறோம். இன்பத்தை இழக்கிறோம். சிரிப்பு இழக்கிறோம். வாழ்க்கையை முழுமையாக இழக்கிறோம்.

உங்களை அறிந்தவர்கள் உங்களுடைய இழப்பினால், ஓரிரு நாள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு தங்களுடைய ஆற்றாமையை வெளிப்படுத்துவார்கள். அதன் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள்.

ஆனால் பெற்றோருக்கு அது ஈடு செய்ய முடியாத வலி. நீங்கள் உங்கள் நினைவுகளை மட்டுமே அவர்களுக்கு கொடுத்துவிட்டு, கடைசி வரை அவர்கள் தனிமையில் தவிக்க விட்டு செல்கிறீர்கள். பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இன்னும் வலிமையுடனும் துணிச்சலுடனும் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

யாழில் பதின்ம வயது சிறுமியை சீரழித்த தாய்!!

யாழில்..

தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி ஒருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமி நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேசயம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளிசத்துக்கு வந்த உண்மை
சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை!!

பல்கலைக்கழக மாணவன்..

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி முதல் குறித்த மாணவன் காணாமல் போயிருந்த நிலையில், நேற்றைய தினம் மகாவலி கங்கையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. குறித்த மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 16 ஆம் திகதி குறித்த மாணவர் காணாமல் போனதாக பேராதனை காவல்துறைனருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

காணாமல் போனவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மனோதத்துவ துறையில் பயின்று வந்த மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துபாயில் அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 85 இலங்கைப் பெண்கள்!!

துபாயில்..

துபாயில் தடுப்பு முகாம் ஒன்றில் அறைக்குள் இலங்கை பெண்கள் 85 பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அந்த அறையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த நிலையில் நாடு திரும்பிய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக துபாய் சென்ற தம்புளு ஓய பிரதேசத்தை சேர்ந்த லலிதா பத்மினி என்ற பெண் துபாய் தடுப்பு முகாமில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் நாடு திரும்பியுள்ளார்.

தான் அங்கு அனுபவித்த கசப்பான அனுபவங்கள் தொடர்பான அந்த பெண், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், தம்புள்ளை பொலிஸ் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கும் அறிவித்த போதிலும் இதுவரை எந்த நியாயமும் கிடைக்கவில்லை என அந்த பெண் கூறியுள்ளார்.

தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்தின் ஊடாக துபாய் அனுப்பி வைக்கப்பட்ட தனது சகோதரியான துலிகா பிரியந்தி என்பவர் அங்கு கைவிடப்பட்ட நிலைமையில் இருப்பதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் மூன்று மாதங்கள் துபாய் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தமது பிள்ளைகள் பெரும் தொகை பணத்தை கடனாக பெற்று தன்னை இலங்கைக்கு வரவழைத்ததாகவும் லலிதா பத்மினி கூறியுள்ளார்.

உயிருக்கு போராடும் நடிகர் போண்டா மணி : கண்ணீர் விட்டு கதறிய சக நடிகர்!!

போண்டா மணி..

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான போண்டா மணி கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அவர் இதுகுறித்து பேசுகையில், “நாடுவிட்டு நாடு வந்து, இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி, திருமணம் செய்தி இரு குழந்தைகளைப் பெற்று தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்கு காப்பாற்ற வேண்டும்.

மேலும், இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஷ்” என அந்த வீடியோவில் பெஞ்சமின் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

71 வயதில் இப்படி ஒரு சாதனை? இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பாட்டி!!

கேரளாவில்..

இன்றைய காலகட்டத்தில், வயது என்பது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் தங்களுக்கு விருப்பமான துறையில் அபராமான சாதனைகள் பலவற்றை செய்து தான் வருகின்றனர்.

சமீபத்தில் கூட ஐந்து வயது சிறுவனின் கால்பந்து திறமை தொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி ஏராளமானோரை ஆச்சரியப்பட வைத்திருந்தது. அந்த வகையில், தற்போது 71 வயதாகும் பெண்மணி ஒருவர் இந்த வயதிலும் செய்துள்ள விஷயம் ஒன்று, இணையத்தில் பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.

கேரள மாநிலம் தோப்பும்படி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி அம்மா. இவர் மணியம்மா என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு தற்போது 71 வயதாகிறது. அப்படி இருக்கையில் ஜேசிபி, கிரேன், பஸ், லாரி, ஆட்டோ ரிக்ஷா உள்பட 11 கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெற்றிருக்கிறார் ராதாமணி அம்மா.

முன்னதாக, தனது முப்பதாவது வயதில் தான் வாகனங்களை ஓட்டவே ராதாமணி கற்றுக் கொண்டுள்ளார். அதுவும் மறைந்த அவரது கணவர் லாலின் உந்துதல் பெயரில் வாகனம் ஓட்ட கற்றுக் கொண்ட ராதாமணி அம்மா, ஒரு கட்டத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் சிறப்பாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இதன் பின்னர் பல்வேறு வகையான வாகனங்களை ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விருப்பப்பட்ட ராதாமணி, தொடர்ந்து ஏராளமான கனரக வாகனங்களை ஓட்ட ஆரம்பித்துள்ளார்.

கடந்த 1978 ஆம் ஆண்டில் டிரைவிங் ஸ்கூல் ஒன்றை கணவர் லால் ஆரம்பித்தது முதல் வாகனங்களை ஓட்டி வரும் ராதாமணி, 1988 ஆம் ஆண்டு பஸ் மற்றும் டிரக் வாகனங்களுக்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறார். மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு, கணவர் மறைந்த பிறகு தனது பிள்ளைகளுடன் சேர்ந்து டிரைவிங் ஸ்கூலையும் நடத்தி வருகிறார் ராதாமணி.

11 கனரக வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் முதல் கேரள பெண் என்ற பெருமை பெற்றிருக்கும் ராதாமணி அம்மா, தற்போது பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ புரோகிராம் படித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

வயது என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தடை இல்லை என்பதை ராதாமணி அம்மா உணர்த்தும் வகையில் இருக்கும் நிலையில் பலரும் இவரை பாராட்டி கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

ஹோட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் தனியாக இருந்த கணவன்.. கையும் களவுமாகப் பிடித்த மனைவி செய்த காரியம்!!

டெல்லியில்..

வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டலில் தனியாக இருந்த கணவனை கையும் களவுமாகப் பிடித்து மனைவி தாக்கிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கோபால். இவரது மனைவி நீலம்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் கோபாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து அவர் டெல்லியில் ஓட்டல் ஒன்றில் அறை அடுத்து அந்த பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார்.

இது பற்றி அவரது மனைவி நீலத்திற்குத் தகவல் தெரிந்துள்ளது. உடனே அவர் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

அங்கு அறையில் கணவனும் அந்த பெண்ணும் தனியாக இருந்ததைப் பார்த்து அவர் ஆவேசமடைந்துள்ளார். உடனே தனது செருப்பைக் கழற்றி கணவரைச் சரமாரியாகக் தாக்கியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை தடுத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் கணவருக்கும் நீலம் போன் செய்து இது பற்றித் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மூன்று பேரையும் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வறுமையில் வாடும் மக்கள் : மதிய உணவுக்கு தேங்காய் துண்டுகள் கொண்டுசென்ற மாணவி!!

வறுமையில் வாடும் மக்கள்..

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், மாணவ தலைவியொருவர், பகலுணவுக்காக தேங்காய் துண்டுகளைக் கொண்டுசென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தரம்-9 இல் கல்விப்பயிலும் குறித்த மாணவி, கல்வியில் சிறந்து விளங்குவதுடன் மாணவ தலைவியாகவும் பணியாற்றுகின்றார்.
நிரந்த தொழில் இல்லாத அவருடைய தந்தை பிரதேசத்தில் கூலி வேலைச்செய்து வருகின்றார்.

அவருடைய தாய், வீட்டு வேலைகளைச் செய்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கின்றார். அந்த மாணவிக்கு மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகளும் உள்ளனர்.

பாடசாலையின் இடைவேளையில் ஏனைய மாண, மாணவிகளுடன் சென்ற இந்த மாணவ தலைவி, பகலுணவை சாப்பிடும் போதே, விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த சம்பவம், ஆசிரியர்களின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து ஆசிரியர்கள் தமது உணவுப் பொதிகளை கொண்டுவந்து அந்த மாணவிக்கு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், அதே பாடசாலையில் தரம் மூன்றில் கல்விப்பயிலும் மாணவர்கள் சிலரும் பகலுணவு இன்றி இருக்கின்றனர். அதேவேளை அப் பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவர்களில் பலர் முதல்நாள் இரவு உணவை உட்கொண்டிருக்க வில்லை என்பதும் தெரியவந்துள்ளது.