வாகரைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காயங்கேணி கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
வாகரைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த இளைஞனின் உடல் மீட்கப்பட்டு பொலிஸாரின் உத்தரவின் பேரில் அக்கீல் அவசர சேவை வாகனத்தின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞன் அதிகமாக தொலைபேசி பாவிப்பவர் எனத்தெரிய வருகின்றது.
இவர் காயங்கேணி மத்தி, மாங்கேணி எனும் முகவரியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், பிரதேச பரிசோதனைகளின் பின்னர் இன்று மாலை உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
பூக்கோட்டு பாலம் பகுதியை சேர்ந்தவர் ஸீஜீஷா(23). இன்று காலை இவருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண மண்டபத்துக்கு இவர் காரில் சென்றபோது குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், அந்த சாலையில் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குண்டும் குழியுமான சாலையில் நின்று மணப்பெண் ஸீஜீஷா எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த 24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16 ஆம் திகதி முதல் செயலிழக்க செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதமொன்று கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோர் அடையாளப்படுத்தியுள்ளனர்.
பிரபல கிரிக்கெட் வீரரும் இராணுவ வீரருமான மகேஸ் தீக்ஷனவிற்கு இலங்கை இராணுவம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. அண்மையில் ஆசிய கிண்ண போட்டித் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக தீக்ஷன திகழ்கின்றார்.
இந்தநிலையில் விளையாட்டுத்துறையில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய இராணுவத்தை சேர்ந்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் இராணுவ தலைமையகத்தில் நேற்று நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி, ஆசிய கிண்ண வலைபந்தாட்டம் மற்றும் ஆசிய ஆணழகன் போட்டி போன்றவற்றில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மகேஸ் தீக்ஷன இராணுவ சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். குறித்த நிகழ்வில் மகேஸ் தீக்ஷன உள்ளிட்ட வீர வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளன.
சினிமா நடிகை தீபா தற்கொலையில் , அங்கிருந்த தடயத்தை அழித்தது ஏன் எனவும், தயாரிப்பாளர் சிராஜிதீன் சொல்லி, ஆண் நண்பர் செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை விறுவிறுக்க தொடங்கியுள்ளது.
சென்னையில் நடிகை தீபா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய தகவலாக தீபாவின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். ஆந்திராவை சேர்ந்தவர் தீபா (எ) பவுலின் ஜெசிகா(19).
இவர், சினிமாவில் நடித்து வந்ததால் சென்னை, விருகம்பாக்கம், மல்லிகை பூ காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடைசியாக வாய்தா படத்தில் தீபா கதாநாயகியாக நடித்துள்ளார்.
வளர்ந்து வரும் நாயகியாக வளம் வந்த தீபா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று , வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தீபா, நான்கு செல்போன்கள் பயன்படுத்தி உள்ளார்.
அதில் ஒன்று ஐபோன், அது மாயமாகி விட்டது. மற்ற மூன்று செல்போன்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆனால், அதில் எந்தவித துப்பும் துலங்கவில்லை. தற்கொலைக்கு முன் தீபா எழுதியதாக கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி இருந்தனர்.
ஆனால், அந்த கடிதத்திலும், நான் ஒருத்தரை காதலித்தேன், அவர் காதலை ஏற்கவில்லை , அதனால், நான் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என தான் இருந்தது. இந்த நிலையில் போலீசார் துப்பு துலக்கியதில், சினிமா தயாரிப்பாளர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிராஜிதீன் என்பவர் தான் தீபாவின் காதலனாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.
மாயமான ஐபோனின், சிம்கார்டு நம்பரை வைத்து, போலீசார் கால் ஹிஸ்ட்ரியை சேகரித்தனர். அதில் தீபா, கடைசியாக சிராஜிதீனிடம் வாக்கு வாதம் செய்து பேசிய உரையாடல் இருந்தது. இந்த அடிப்படையில் தான், சிராஜீதினை விசாரிக்க, அவரின் செல்போனில் தொடர்புக்கொண்டபோது, காரைக்குடியில் பட வேலையில் இருப்பதாக தெரிவித்தார்.
போலீசார் முறைப்படி, அவரின் வீட்டுக்கு சென்று சம்மன் வழங்கி உள்ளனர். காரைக்குடியில் இருந்து, சிராஜிதீன் கிளம்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இன்று இரவு வந்து விடுவார் எனவும், நாளை நேரில் ஆஜராகி, போலீசாரிடம் விளக்கம் அளிப்பார். அப்போது தான் தீபாவின் தற்கொலைக்கான காரணம் முழுவதும் தெரியும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தீபாவின் சகோதரர் ரமேஷ், தீபாவின் மரணம் சந்தேகமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தீபா கடைசியாக , தனது ஐபோனில், சிராஜிதீனிடம் கோபமாக பேசி, நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என கூறியுள்ளார். அதோடு, அவரின் ஐ போனும் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.
தீபாவின் ஆண் நண்பர் பிரபாகர், அவர், சிராஜிதீனுக்கும் பழக்கம் ஆனவர். தீபா கோபமாக பேசியதையும், அவர் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக கூறியதையும், பிரபாகரிடம், சிராஜிதீன் தெரிவித்துள்ளார். அவரும், தீபா வீட்டிற்கு அன்று பதட்டத்துடன் வந்தார். இந்த வீடியோ காட்சி வெளியானது.
தீபா வீட்டிற்கு சென்ற பிரபாகர், அங்கு தீபா தூக்கில் பிணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, சிராஜிதீனுக்கு அவர் தன்னுடையை செல்போன் மூலம் தகவல் தந்தார். அதன் பிறகே, அந்த ஐபோன் மாயமானது.
20 நிமிடம் கழித்து தான், பிரபாகர் , கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கூறியதாக தெரிகிறது. அங்கிருந்த தடயங்களை அவர் அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆரம்பத்திலேயே, பிரபாகரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினால், சிராஜிதீன் தலைமறைவாக வாய்ப்பு இருப்பதாக எண்ணிய போலீசார், பிரபாகரை விசாரிக்காமல் இருக்கிறது.
சிராஜிதீன் சொல்லி, பிரபாகர், அங்கிருந்த தடயத்தை அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிராஜிதீன் ஆஜராகும் பட்சத்தில், தீபாவின் மர்ம மரணம் முடிச்சு அவிழும் என தெரிகிறது.
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,534 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ் (6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர்.
இதில் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வரும் அபினேஷ் வழக்கம்போல் நேற்று பள்ளி முடிந்து அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக வீடு கட்ட தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்ததை பார்க்காமல் அதில் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓராண்டு காலமாக மனைவியின் நினைப்பிலேயே வாழ்ந்து வந்த ரவுடி அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியன்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை சூளைமேடு ராஜா புரனிகர் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி பிரசாந்த்(34).
இவர் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு கொலைவழக்கும், கோடம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு இவரது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து இவர், சூளைமேடு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடிசை வீட்டில் இருந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்துள்ளார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டில் வசித்து வந்த இவரது சகோதரர் பிரதீப் என்பவர் வெளியே வந்து பார்த்துள்ளார். வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து பிரதீப் காவல் கட்டுப்பாட்டறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவம இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, உடலில் தீக்காயத்துடன் இருந்த பிரசாந்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய தடுப்பு பிரிவில் அனுமதித்தனர்.
இதனையடுத்து கோடம்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரசாந்தின் மனைவி குளோரி கடந்த ஆண்டு இதே நாளில், இருவருக்கும் இடையேயான பிரச்னையில் தீக்குளித்து இறந்துவிட்டதாகவும் நேற்று மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் எனவும் தெரியவந்துள்ளது.
ரவுடி பிரசாந்த், கடந்த ஓர் ஆண்டாக மனைவியின் ஞாபகமாகவே இருந்து வந்துள்ளார் எனவும் எப்போதும் மனைவியை பற்றியே சக நண்பர்களிடத்தில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், துக்கம் தாங்காமல் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலவே ரவுடி பிரசாந்தும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரவுடி ஒருவர் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவரது நினைவு நாளிலேயே தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தங்கை வேலை செய்த வீட்டில் அவருக்கு ஏதோ பிரச்சினை நடந்துள்ளது எனவும் அவர் வீட்டுக்கு வந்தால், அவை வெளியாகிவிடும் என்ற அச்சத்தில் தங்கைக்கு இந்த நிலைமையேற்பட்டிருக்கலாம் எனவும்,
முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் வீட்டில் வேலை செய்த போது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த இஷாலினியின் சகோதரர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திரா ஜயசூரிய முன்னிலையில் நேற்று நடைபெற்ற மரண விசாரணையில் சாட்சியமளிக்கும் போது கூறியுள்ளார்.
மரண விசாரணை சாட்சியங்கள் நேற்று விசாரிக்கப்பட்ட போதே சாட்சியாளரான விக்னேஸ்வரன் திருபிரசாத் இதனை கூறியுள்ளார்.
“றிசார்ட் பதியூதீனின் பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீட்டில் தங்கை வேலை செய்து வந்தார். அப்போது தனக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அம்மாவிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.
தங்கை வைத்தியசாலையில் இருப்பதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 3 ஆம் திகதி அம்மாவுக்கு பொரல்லை பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
நான் தங்கையை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றேன். பார்க்கவிடவில்லை. அதே மாதம் 15 ஆம் திகதி எனது தங்கை உயிரிழந்தார். தீயில் எரிந்து எனது தங்கை உயிரிழந்துள்ளார்.
தனக்கு பிரச்சினை இருப்பதாக தங்கை கூறிய போது 2021 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி வந்து அழைத்துச் செல்வதாக அம்மா கூறியிருந்தார்.
இதனிடைலேயே தங்கை தீக்காயங்களுக்கு உளளாகியுள்ளார். தங்கை வேலை செய்த வீட்டில் தங்கைக்கு பிரச்சினை நடந்துள்ளது. அவர் வீட்டுக்கு சென்றால், அவை வெளியாகி விடும் என்பதால் இப்படி செய்துள்ளனர் என நான் நினைக்கின்றேன். இது சம்பந்தமாக நான் பொலிஸாரிடமும் வாக்குமூலம் வழங்கியுள்ளேன்” என விக்னேஸ்வரன் திருபிரசாத் கூறியுள்ளார்.
“எனது மகள் வேலை செய்த காலத்தில் தனக்கு பிரச்சினை இருப்பதாக என்னிடம் கூறினார். இறுதியாக என்னிடம் பேசும் போது பொறுத்திரு நான் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறினேன்.
எனது மகள் அந்த வீட்டுக்கு வேலைக்கு சென்ற பின்னர் ஒரு நாள் கூட விடுமுறையில் வீட்டுக்கு வரவில்லை. நாங்களும் அவரை பார்க்க அங்கு சென்றதில்லை.
மகள் எரிக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் இருப்பதாக பின்னர் அறிந்துக்கொண்டேன். நாங்கள் மகளை பார்க்க சென்றோம். வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம் மகளுக்கு தையல் போடப்பட்டிருந்தது.
ஜூலை 15 ஆம் திகதி எனது மகள் இறந்து போனாள். நான் மரண விசாரணைகளில் கலந்துக்கொள்ளவில்லை. நன்றாகவே எனது மகள் வீட்டில் இருந்து சென்றார். அவளுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.
வீட்டில் இருந்த காலத்தில் எனது மகளுக்கு எந்த காதல் தொடர்பும் இருக்கவில்லை” என இஷாலினியின் தாய் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஓவம் விளையாட்டு கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான மென்பந்து சுற்றுபப்போட்டி கடந்த 18.09.2022ம் திகதி ஓவம் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தமிழ் பிரதேச சபை தவிசாளர் திரு.தர்மலிங்கம் யோகராசா, சிறப்பு விருந்தினர் கதிர்காமசேகரன் சசீலன் (Herlish Agriculture ஏற்றுமதி பிரிவு வடமாகாண முகாமையாளர்) மற்றும்,
விருந்தினர்களாக வவுனியா மாவட்ட கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.J. தாட்சாயினி, வன்னாங்குளம் கண்ணகி அம்மன் ஆலயத்தின் செயலாளர் திரு.பா.திபாகரன் மற்றும் கழகத்தின் தலைவர் திரு வரதகுமார் மற்றும் செயலாளர் திரு.விஸ்ணுதாஸன் ஓவம் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பாளர் திரு தமிழருவி சிவகுமாரன்,
கழகத்தின் ஒழுக்காற்று குழு உறுப்பினர் திரு. முரளிதரன் (ஆசிரிய கல்வியாளர் வான்மை விருத்தி நிலையம் – புளியங்குளம்) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இறுதி பேட்டிக்கு ஓவம் A அணி மற்றும் புதிய ஒளி அணியினர் மோதிகொண்டனர். நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓவம் A அணியின் தலைவர் கோகுலதாஸன் கழத்தடுப்பை தெரிவுசெய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய புதிய ஒளி அணியினர் 06 ஓவரை எதிர்கொண்டு 04 விக்கெட் இழப்பிற்கு மொத்தமாக 25 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓவம் A அணியினர் 4 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்களை பெற்று கிண்ணத்தை கைப்பற்றினர்.
இதில் ஆட்டநாயகன் விருதை யது பெற்றுக்கொண்டார். Play Boys அணிக்கு எதிராக பெற்றுகொண்ட 50 ஓட்டங்களுக்கு மற்றும் சிறந்த பந்துவீச்சாளருக்கான பரிசை ஓவம் A அணியின் யெனோஜன் பெற்றுக்கொண்டார்.
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான (NVQ Level 3,4) கள உதவியாளர் – விவசாயம் கற்கைநெறி
ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாடநெறிக்கான விண்ணப்பத்தினை கல்விப் பொது சாதாரண தரம் வரை கல்விகற்ற 17வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
என்பதுடன் குறித்த கற்கை நெறிகள் 6 மாதம் முழுநேரமாக இடம்பெறும் விண்ணப்பப் படிவங்களை தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலதிக தொடர்புகளுக்கு அதிபர் , தொழில்நுட்பக்கல்லூரி , மன்னார் வீதி , நெளுக்குளம் ,வவுனியா என்ற முகவரயில் நேரில் சென்று அல்லது 024 2223664 , 024 2226720 , 024 2050177 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தவும்
இந்திய மாநிலம் கேரளாவில் பெண்ணொருவர் கணவரின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவருக்கும் வழக்கறிஞரான கண்ணன் நாயர் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது ஐஸ்வர்யா எழுதிய கடிதம் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்தது. அதில் ‘கணவர் என்னை அடிக்கடி அடிப்பார். என்னிடம் மோசமாக நடந்துகொள்வார். அவர் என்னை அன்பாக நடத்தியதே இல்லை.
என்னை மோசமாக கொடுமைப்படுத்துவார். என் தாலியையும் அவர் அறுத்துவிட்டார். என் சம்பள பணத்தை எல்லாம் வாங்கிக்கொண்டு செலவிற்கு கூட பணம் தர மாட்டார். அவர் தான் என் மரணத்திற்கு காரணம்’ என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கண்ணன் நாயரை கைது செய்த பொலிஸார், அவரிடம் ஐஸ்வர்யா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டது கேரள மாநிலத்தையே உலுக்கியது.
அதன் பின்னர் வரதட்சணை கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கணவரின் கொடுமையால் மீண்டும் ஒரு பெண் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனிக்கு போக்குவரத்து பொலிசார் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகின்றோம்’ என்ற ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்து யாழ் நல்லூர் நோக்கி செல்கின்றது.
5 ஆம் நாளான நேற்றும் (19.09), 6 ஆம் நாளான இன்றும் குறித்த திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவின் பல்வேறு கிராமங்களுக்கு சென்றிருந்தது. இதன்போது மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகனம் கண்டி வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணித்த போது கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் குறித்த ஊர்திப் பவனிக்கு இடையூறை ஏற்படுத்தி வாகனத்தை வழி மறித்து,
ஊர்திப் பவனி தொடர்பான விளக்கங்களை கேட்டதுடன், அதில் பயணித்தவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்திருந்ததுடன், சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தையும் புகைப்படம் எடுத்ததன் பின் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ரெலோ அமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான து.நடராஜசிங்கம் (ரவி) மரணமடைந்துள்ளார்.
வீட்டில் தனது பிள்ளைக்கு கட்டியிருந்த தொட்டில் கயிற்றை விளையாட்டாக கழுத்துக்கு போட்ட போது அது இறுகியிருந்தது. இதனை அவதானித்த குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் முன்னிலையில் இன்று (20.09) மரண விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், தனது குழந்தையின் தொட்டில் கயிற்றினை தளபாடம் ஒன்றின் மேல் ஏறி நின்று கழுத்தில் போட்ட போது,
அவர் ஏறி நின்ற தளபாடம் வீழ்ந்தமையால் கயிறு இறுகி மரணமடைந்துள்ளதாக மரண விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் தனது காதல் மனைவியை கடத்தியதாக கூறி கணவர் அளித்த புகாரின் பேரில் 10 பேர் மீது சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் சங்கர் முருகன். இவர் திருப்பூர் பகுதியில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது கோமதி என்ற பெண்மணிக்கும் சங்கர்முருகனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இருவரும் கடந்த 28.8.2022 அன்று திருப்பூர் பகுதியில் இருந்து சங்கரன்கோவில் வந்து ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது மனைவியை காணவில்லை என்றும், யாரோ கடத்திச் சென்று விட்டார்கள் எனவும் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் சங்கர் புகார் மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து கோமதியின் உறவினர்களான பவுன்பாண்டியன், அணில், ராஜம்மாள், அனிதா உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டிக்டாக் மூலம் வாழ்ந்தவர்களும் உண்டு,அதனால் தொல்லைகளை அனுபவித்து வருபவர்கள் ஏராளம். ஆனால் Khaby Lame என்பவர் டிக்டாக் வாயிலாக தொட்டு பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஒருவர் தான் இந்த Khaby Lame. ஹோட்டல், வீடுகளில் வேலை செய்து வந்தநிலையில், வேலை இழந்த விரக்தியில் டிக்டாக் செய்து பிரபலமானார்.
டிக்டாக் தளத்தில் உலகளவில் அதிகப் பாலோவர்களைக் கொண்டு உள்ளது Khaby Lame தான். இவரது டிக்டாக் கணக்கை சுமார் 150 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர்.
இன்று டிக்டாக், இன்ஸ்டா தளத்தில் ஒரு போஸ்ட் போடுவதற்கு 750000 டாலர் வாங்குகிறார், அதாவது கிட்டதட்ட 6 கோடி ரூபாய். இதுமட்டும் அல்லாமல் இந்த வருட இறுதிக்குள் 10 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு அளவை எட்ட உள்ளார் Khaby Lame.
இவருடைய வளர்ச்சி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சாதாரண வேலையைச் செய்து வந்த Khaby Lame இன்று 700 கோடி ரூபாய் சொத்து மதிப்பை எட்டவுள்ளார்.
அதனோடு, Khaby Lame தன்னைப் போவே இருக்கும் பிற விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், சமுகவலைதள influencer-களை இணைக்கும் Iron Corporation என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். Khaby Lame சற்று வித்தியாசமானவர் ரியல் எஸ்டேட்-ல் அதிகளவில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.