அக்காவுக்கும், தங்கைக்கும் ஒரே கணவன்… நள்ளிரவில் நடந்த விபரீதம்!!

கரூர்..

கரூர் அருகே 2வது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொன்று புதைத்த மாட்டு வண்டி தொழிலாளி. கொலை செய்து பிரேதத்தை மறைத்து வைத்துவிட்டு போலீசாரிடம் சரணடைந்தார்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ள சங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாட்டு வண்டி தொழிலாளியான தனபால் (34). இவரது மனைவி மேனகா (28). மேனகாவின் அக்கா அம்பிகா (30).

அம்பிகாவின் கணவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்த நிலையில் தனபால் முதல் மனைவியான மேனகாவின் சம்மதத்துடன் இரண்டாவதாக அம்பிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் இரண்டாவது மனைவி அம்பிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் அடித்துக் கொலை செய்து புதைத்துள்ளார். அங்கிருந்து இரண்டு நாட்கள் தலைமறைவான அவர் நேற்று வெள்ளியணை போலீசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார்.

மூன்று நாட்கள் கழித்து இன்று மனைவியின் பிரேதம் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். பிரேதத்தை கைப்பற்ற சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் தெற்கு மேட்டுபட்டி கிராமத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

தலைக்கேறிய மது போதையில் கணவர் மூலமாக தனக்கும் கொலை முயற்சி நடைபெற்றதாக முதல் மனைவி மேனகா (28) வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை நடந்ததாக கூறப்படும் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள மொட்டை கிணற்றில் பிரேதம் இருப்பதாக கூறப்படுகிறது. மாலை நேரம் என்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் உள்ளனர்.

தந்தைக்கு மாரடைப்பு… பார்க்க வந்த மகளுக்கு காத்திருந்த துயரம்!!

தருமபுரியில்..

மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையை பார்க்க வந்த மகள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி நகராட்சியில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களை மேல் அதிகாரிகள் தரக்குறைவாக பேசுவதும், அதிக வேலை பளுகொடுப்பதால் நகாரட்சியில் பணியாற்றும் உழியர்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில், நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணி செய்யும் மாதையன் என்பருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மாதையன் மகள் மீனா திருமணமாகி பென்னாகரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தந்தை மாதையன் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதை அறிந்து தந்தையை பார்ப்பதற்கு பைக்கில் வந்த போது, விபத்து ஏற்பட்டது.

படுகாயமடைந்தவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் போது மீனாஉயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

திருமண மோசடியில் ஈடுபட்ட பாட்டி.. வசமாக சிக்கியது எப்படி?

சென்னை..

2-ம் திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களை மட்டுமே குறி வைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த 54 வயது பாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அருகிலுள்ள முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் கணேஷ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. தனியார் நிறுவன மேலாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு, 6 ஆண்டுகளாக இரண்டாம் திருமணத்திற்கு திருமண தரகர் மூலம் பெண் தேடிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரண்யா என்பவர், தான் வசதியற்றவர் என்று கூறி திருமண தரகர் ஒருவர் மூலம் அறிமுகமாயுள்ளார். இதையடுத்து கணேஷ் குடும்பத்தினர், சரண்யாவை ஆந்திர மாநிலத்திற்கு பெண் பார்க்க சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கு சரண்யாவை பிடித்து போக, வரதட்சணை எதுவும் வேண்டாம், நாங்களே திருமண செலவையும் ஏற்றுக்கொளவதாக கூறி, சரண்யாவுக்கு 25 சவரன் தங்கநகையை கொடுத்து திருமணமும் செய்து கொண்டார்.

தொடர்ந்து திருமண வாழ்க்கை போய்க்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று ஒரு நாள், சம்பள பணத்தை இனி தன்னிடம் தான் கொடுக்க வேண்டுமென்றும், வீட்டின் பீரோ சாவியும் தன்னிடம் தான் இருக்க வேண்டுமென்றும் கணேஷின் சண்டையிட்டுள்ளார் சரண்யா.

இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், கணவரிடம் அவரது பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் எழுதி தர வேண்டுமென்றும் சரண்யா அடம்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் இந்திராணி, ஒரு கட்டத்தில் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.

இதனால் மனமுடைந்த கணவர் கணேஷ், தனது பெயரில் உள்ள சொத்துகளை எழுதி வைக்க சம்மதித்து சரண்யாவிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார். ஆரம்பத்தில் இது தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இப்போது இல்லை எனக்கூறி இழுத்தடித்து வந்த சரண்யா, சொத்து வேண்டும் என்பதால் தனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கணேஷிடம் அளித்துள்ளார்.

அப்போது சரணையாவின் ஆதாரில், C/O என்ற இடத்தில் ரவி என்ற பெயர் இடப்பெற்றிருந்தது. ஆந்திர மாநிலத்தில் கணவர் பெயரை Care/Of (C/O) என்பதை குறிப்பிடுவது வழக்கம். இதனால் சந்தேகமடைந்த கணேஷ் மற்றும் அவரது தாய் இந்திராணி, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பல திடுக்கிடும் தகவல்களை சேகரித்தனர். அதன்படி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரண்யாவின் உண்மையான பெயர் சுகுணா என்றும், இவர் ரவி என்பவரை முறைப்படி திருமணம் செய்து, 2 பெண் பிள்ளைகள் உள்ளதாகவும், மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளதாகவும் தெரிய வந்தது.

54 வயதாகும் இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது கணவர் ரவியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், தனது தாயுடன் திருநின்றவூரில் வசித்து வந்துள்ளதும், தொடர்ந்து வருமானம் ஏதும் இல்லாத காரணத்தினால் சுகுணா, அவரது தாயுடன் சேர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சில திருமண புரோக்கர்கள் உதவியுடன் திருமண ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

இப்படி ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் தான், கணேஷின் குடும்பம் அறிமுகமாகியுள்ளது. அவர்கள் பெண் பார்க்க வரும்போது 54 வயதுடைய அந்த பெண், தன்னை இளமையாக காட்ட வேண்டும் என்று, அலங்காரம் செய்து 35 வயதுடைய பெண்ணாக அவர்கள் முன் தோன்றியுள்ளார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, திருமணமும் நடைபெற்றது.

இதையடுத்து மாமியார் இந்திராணி அளித்த புகாரின் அடிப்படையில் ஜோலார்பேட்டை யில் பதுங்கியிருந்த சுகுணாவை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லதா மற்றும் காவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முன்னதாக ஜோலார்பேட்டையை சேர்ந்த இரயில்வே உணவு சப்ளை காண்டராக்டர் சுப்ரமணியன் என்பவரை திருமணம் செய்து 11 ஆண்டுகள் வாழ்ந்து வந்ததும், பின்னர் அவரை ஏமாற்றிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இரண்டாம் திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களை மட்டுமே குறி வைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சுகுணாவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலையை திருமணம் செய்த மேயர் : ஊர் கூடி கொண்டாடிய திருவிழா.. சுவாரஸ்ய பின்னணி!!

முதலையை மணந்த மேயர்…

மெக்சிக்கோவில் குட்டி முதலையை மேயர் ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். இது காலங்காலமாக அங்கே பின்பற்றப்பட்டு வரும் மரபாகும்.திருமணம் குறித்த பார்வை உலகம் முழுவதும் மாறிவிட்டது. ஒருபால் திருமணங்களை ஆதரிக்கவும் பல நாடுகள் சட்டங்களை இயற்றிவருகின்றன.

ஆனால், சில இடங்களில் வினோதமாக உயிரினங்களை திருமணம் செய்துகொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் மெக்சிகோவை சேர்ந்த மேயர் ஒருவர் சிறிய முதலையை திருமணம் செய்திருக்கிறார். ஆனால், இதனை அந்நாட்டு மக்கள் கலாச்சாரமாக கருதுகிறார்கள்.

மெக்சிகோவில் உள்ளது ஓக்ஸாகா என்னும் கிராமம். இங்கு மீன் பிடித்தலே முக்கிய தொழிலாக இருக்கிறது. இந்த கிராமத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹ்யூகோ சோசா. இவர் கடந்த வியாழக்கிழமை அன்று முதலை ஒன்றை திருமணம் செய்திருக்கிறார். அந்த முதலைக்கு 7 வயது ஆவதாகவும் இந்த திருமணத்தை காண பலர் வந்திருந்ததாகவும் கூறுகிறார் இந்த திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்.

உண்மையில் இது மக்கள் நலமாக வாழ செய்யப்படும் சடங்கு தான் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். முதலையை திருமணம் செய்துகொண்டால் வேளாண்மை செழிக்கும் எனவும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் எனவும் பல ஆண்டுகளாக நம்புகிறார்கள் இந்த ஊர் மக்கள்.

ஓக்ஸாகா மாநிலத்தின் சோண்டல் மற்றும் ஹுவேவ் ஆகிய பழங்குடி இனங்களில் ஹிஸ்பானிக் காலத்திற்கு முன்பே, இந்த கலாச்சாரம் இருந்திருக்கிறது.இதுகுறித்து பேசிய திருமண மாப்பிள்ளையான விக்டர் ஹ்யூகோ சோசா,”இது இயற்கையிடம் எங்களுடைய கோரிக்கையை முன்வைப்பது போன்றது. போதுமான மழை, போதுமான உணவு, நாங்கள் ஆற்றில் மீன் வேண்டும் என்று இதன்மூலம் இயற்கையிடம் கேட்கிறோம்” என்றார்.

சடங்கில் முதலைக்கு வெள்ளை நிற திருமண ஆடை மற்றும் பிற வண்ணமயமான ஆடைகளை அணிவித்து மகிழ்கிறார்கள் மக்கள். முதலையை இளவரசி என்று அழைக்கும் இந்த மக்கள், அவை பூமியை காப்பதாகவும் நம்புகிறார்கள். முதலையை திருமணம் செய்துகொள்வதன் மூலமாக மனிதர்கள் இறைத்தன்மையுடன் கலப்பதாக கருதுகிறார்கள் இந்த மக்கள்.

இந்த திருமண விழாவின் போது, அலங்கரிக்கப்பட்ட முதலையை உள்ளூர் மக்கள் கழுத்தில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டுவருகிறார்கள். இந்த விழாவை காண வரும் வெளியூர் மக்கள், முதலையை பார்த்து பயந்து ஓடுவதும், பின்னர் அந்த நிகழ்ச்சியை அதிசயத்துடன் பார்ப்பதும் வாடிக்கை என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

தங்கத்தில் தேன் ரப்பர்.. பாலில் குளியல்… மகனுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யும் தாய்!!

பிரிட்டன்..

பிரிட்டனை சேர்ந்த தாய் ஒருவர் தன்னுடைய மகனுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்துவருவது பலரையும் திகைப்படைய வைத்திருக்கிறது. தங்களது குழந்தைகளை வாழ்வின் மையமாக கருதுகிறார்கள் ஒவ்வொரு பெற்றோரும். அவர்களை வளர்க்க, ஏராளமான சிரமங்களை சந்திக்கும் பெற்றோர்களை நாம் சந்தித்திருக்கிறோம்.

ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த கேசி அக்ரம் தனது மகனுக்காக செலவழிப்பதை பலரும் மிரட்சியுடன் பார்த்துவருகிறார்கள். இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ஷெஃபீல்டு பகுதியைச் சேர்ந்தவர் கேசி அக்ரம். 32 வயதான கேசியின் மகன் ஜரீம். தற்போது ஜரீமிற்கு 1 வயது ஆகிறது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கேசி தனது மகனுக்கு லட்சக்கணக்கில் வசித்து வருகிறார். தன்னுடைய மகன் விரும்பும் சிறிய பொருட்கள் கூட அவனுக்கு கிடைக்க வேண்டும் என தான் விருப்பப்படுவதாக கூறுகிறார்.

பால் குளியல்

வாரத்திற்கு இரண்டு முறை ஜரீமை குளிக்க வைக்கும் கேசி, அதற்காக பால் மற்றும் தேனை பயன்படுத்துவதாக தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு மசாஜ், விலையுயர்ந்த எண்ணெய்களை உபயோகிப்பதாக கூறும் கேசி,”எனது மகனுக்கு நான் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் மிகவும் தரமானதாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

தனக்கு பிற உலோகங்களை உபயோகித்தால் அலர்ஜி வரும் எனக் கூறும் கேசி,” எனக்கு தூய தங்கத்தை தவிர்த்து பிற அனைத்து உலோகங்களும் அலர்ஜியை உருவாக்கும். அதனால் எனது மகனுக்கும் அப்படி சிக்கல் இருக்கும் என நினைத்தேன். ஆகவே, அவனுக்கு தங்கத்தில் தேன் ரப்பர் வாங்கினேன்” என்றார்.

மாடலாகவும், நடிகையாகவும் இருந்த கேசி தற்போது தனது பணிகளில் இருந்து விலகி முழுவதுமாக ஜரீனை பார்த்துக்கொள்கிறார். செலவுகள் குறித்து பேசுகையில்,”எனது மகனது செலவுகளுக்கு நான் எவ்வளவு கஷ்டப்படவும் தயாராக இருக்கிறேன். அவனுக்கு வாங்க வேண்டிய பொருட்களுக்கான பணம் என்னிடம் இல்லை என்றால் அவனுடைய தந்தைக்கு போன் செய்வேன். உடனடியாக பணம் கிடைத்துவிடும்” என்கிறார்.

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கடைகளில் தனக்கு உடைகள் வாங்கிக்கொள்ளும் கேசி, ஜரீனுக்கு 50 யூரோ மதிப்பில் ஒரு டி-ஷர்ட்டை வாங்குவதாக கூறுகிறார். இதுபற்றி அவர் கூறுகையில்,”எனது மகன் விருப்பப்படும் அனைத்தும் அவனுக்கு கிடைக்க வேண்டும். அதுவே எனது வாழ்க்கையின் முக்கிய கடமையாக கருதுகிறேன்” என்றார்.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!!

அனுரா அனுஷாந்..

படிக்கட்டில் தடுக்கி விழுந்து சுயநினைவிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்.கரவெட்டியை சேர்ந்த அனுரா அனுஷாந் (வயது 34) என்ற இளம் குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய நிலையில், கடந்த 30ம் திகதி எரிபொருள் நிரப்பு நிலையத்திலுள்ள படிக்கட்டில் ஏறியபோது தவறி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார்.

இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று (02.07.2022) காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சைக்கிள் உதிரிப்பாகங்கள் தற்போது 800 ரூபா!!

சைக்கிள் உதிரிப்பாகங்கள்..

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக தற்போது துவிச்சக்கரவண்டி பாவனை அதிகரித்துள்ளது.

மேலும் பழைய இரும்புக்காக ஒரு கிலோ ஐம்பது ரூபாவிற்கு விற்பனை செய்த துவிச்சக்கர வண்டிகளின் உதிரிப்பாகங்களை மீளவும் கிலோ 800 ரூபாவிற்கு கொள்வனவு செய்து அவற்றை திருத்தி பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது.

ஆதி காலத்தில் கால்நடையாகவும் மிருகங்களையும் போக்குவரத்து சாதனங்களாக மனிதன் பயன்படுத்திய நிலையில் கால மாற்றத்தாலும் நாகரிக வளர்ச்சியாலும் நவீன போக்குவரத்து சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதன் பின்னர் ஒவ்வொருவரும் தத்தமது போக்குவரத்துக்களுக்காக மோட்டார் சைக்கிள்கள், சொகுசு கார்களையும் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மீளவும் துடிச்சக்கர வண்டிகளை அதிகளவானோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் புதிய துவிச்சக்கர வண்டிகளினுடைய விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன் துவிச்சக்கர வண்டி பாவனையும் அதிகரித்துள்ளது.

அதாவது ஆரம்பத்தில் 18000 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டி ஒன்றின் விலை தற்போது 87ஆயிரம் ரூபாவை கடந்து சென்றுள்ளது.

அத்துடன் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வீடுகளில் காணப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் முன்பு பழைய இரும்புகளுக்காக கிலோ 50 ரூபாய்க்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டன.

இந்த நிலையில் தற்போது பழைய இரும்புகளுக்காக விற்பனை செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டி உதிரி பாகங்களை பழைய இரும்பு வியாபாரிகளிடமிருந்து கிலோ 600 முதல் 800 ரூபாவுக்கு கொள்வனவு செய்து அவற்றை மீளவும் புதிய உதிரி பாகங்களை பொருத்தி துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இதனால் துவிச்சக்கர வண்டி திருத்தும் நிலையங்களில் அதிகளமான துவிச்சக்கர வண்டிகள் திருத்துவதை அவதானிக்க முடிவதுடன் துவசக்கர வண்டி உதிரி பாகங்களினுடைய விலையும் மிக சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றன.

உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் போக்குவரத்து சாதனங்களாகவும் துவிச்சக்கர வண்டிகள் கடந்த காலங்களிலே பயன்படுத்தப்பட்டாலும் பின்னாளில் துவச்சக்கர வண்டியை பயன்படுத்துவோர் மிக அரிதாகவே காணப்பட்டனர்.

ஆனால் இன்று துவிச்சக்கர வண்டிகளினுடைய பாவனை என்பது அதிக அளவிலே காணப்படுகின்றதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

61 வயது பெண்ணை மணந்த 24 வயது இளைஞன் : கனவு குழந்தைக்காக ரூ. 5 கோடி செலவு!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் 61 வயது பெண்ணிற்கும், 24 வயது இளைஞனுக்கும் திருமணம் நடந்த நிலையில் குழந்தை தொடர்பில் தம்பதி முக்கிய முடிவு எடுத்துள்ளனர். Quran McCain (24) என்பவரும் McGregor (61) என்ற பெண்ணும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலம் தங்கள் கனவு குழந்தையை பெற்று கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதற்காக £120,000 (இலங்கை மதிப்பில் ரூ. 5,22,79,829.74) செலவிட தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர். McCain கூறுகையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற கொள்ள 6,000-120,000 யூரோ வரை ஆகும்.

நாங்கள் தேர்ந்தெடுத்த வாடகைத் தாய் கிடைப்பது எல்லாம் அதிர்ஷ்டம்.2023 வசந்த காலத்தின் பிற்பகுதியில் குழந்தை பிறக்கும் என கூறினார். இது McCainனின் முதல் குழந்தையாகும். ​ McGregorலுக்கு ஏற்கனவே ஏழு குழந்தைகள் உள்ளனர். அவருக்கு 17 வயதில் ஒரு பேரகுழந்தையும் உள்ளது.

McGregor கூறுகையில், இந்தப் புதிய பயணத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மற்றொரு குழந்தை என்பது ஒரு ஆச்சரியமாக இருக்கும். குழந்தைக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு நான் ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன்.

அவர் எப்போதும் குழந்தைகளை விரும்புகிறார், நான் அவருடைய குழந்தைக்கு தாயாக இருக்க விரும்புகிறேன். ஆனால் எனது வயதின் காரணமாக நாங்கள் ஒரு வாடகைத் தாய் மூலமாகவோ அல்லது குழந்தையை தத்தெடுத்து தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார்.

வயது வித்தியாசம் காரணமாக இந்த ஜோடி அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மக்கள் பெரும்பாலும் இருவரையும் பாட்டி – பேரன் என்று தவறாக நினைத்து விடுவது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் மொத்த குடும்பமும் பலியான சோகம் : 5 பேர் வீட்டில் சடலமாக மீட்பு!!

கேரளாவில்..

கேரளாவில் கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மணிகுட்டன். இவர் மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு அமிஷ், ஆதிஷ் என மகள், மகன் இருந்தனர்.

இந்த நிலையில் இந்த நால்வர் மற்றும் மணிகுட்டனின் மாமியார் தேவகி ஆகியோர் இன்று காலை வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மணிகுட்டன் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்ற நால்வரும் விஷம் குடித்தும் இறந்து கிடந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஹொட்டல் நடத்தி வந்த மணிகுட்டனுக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பண நெருக்கடியில் இருந்து வந்திருக்கிறார்.

இதையடுத்து பலரிடம் கடன் வாங்கியது தெரியவந்துள்ளது. கடன் அதிகமானதால் மன உளைச்சலில் குடும்பத்தார் இருந்த நிலையில் அனைவருக்கும் உணவில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு மணிகுட்டன் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதியரில் ஒருவர் மரணம்!!

வயோதிப தம்பதியரில் ஒருவர் மரணம்..

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் சிகிச்சை பலனின்றி நேற்று (02.07.2022) சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன் ஆகிய வயோதிப தம்பதிகள் இருவரும் கடந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சையில் உள்ள இருவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிப தம்பதிகளில் பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் சிகிச்சை பலன் இன்றி நேற்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையில் 85க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களுக்கு இலங்கை முழுமையாக முடங்கும் அபாயம்!!

எரிபொருள் நெருக்கடி..

அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படாத போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு பூட்டப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ள நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்யும் வரை இந்த அபாய நிலை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி, சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதிய எரிபொருளை வழங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்கிய போதிலும், கடந்த வாரமும் பல அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டன. இந்நிலையில், அடுத்த வாரத்தில் நாட்டின் வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அடுத்த வாரம் டீசல் கப்பல் ஒன்றும், எதிர்வரும் 22ம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் விடுமுறை அறிவிப்பு!!

பாடசாலைகளுக்கு விடுமுறை..

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி நிலைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடுமுறையை மற்றுமொரு விடுமுறை காலத்தில் ஈடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எரிபொருள் நெருக்கடி காரணமாக அரச சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீரென நிலத்திற்குள் வந்த கடலலைகள் : பொதுமக்களுக்கான அவசர அறிவித்தல் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!!

சிவப்பு எச்சரிக்கை..

நாட்டின் சில பகுதிகளில் கடல் அலைகள் திடீரென நிலத்திற்குள் புகுந்துள்ளன. தெஹிவளை, அம்பலாங்கொடை, மாத்தறை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கடல் அலைகள் இவ்வாறு கரையை தாண்டி நிலத்திற்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி அக்குரல கஹவ தெல்வத்த பகுதியிலிருந்தும் கடல் அலைகள் காலி – கொழும்பு பிரதான வீதியை வந்தடைந்துள்ளதுடன், இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குறித்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5 அல்லது 3.5 மீற்றர் வரை எழும்புவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இரு வெவ்வேறு இடங்களில் இரு சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்!!

யாழில்..

நாட்டில் பல பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் பல குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 59 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2022!!

நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா..

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் இன்று (02.07.2022) சனிக்கிழமை நடைபெற்று வருகின்றது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தது.

இரவு கலை நிகழ்ச்சிகளும், திருகோணமலை டொமினிக் பிரகாஸ்சின் நியூ வேவ்ஸ்(New Waves) இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதுடன், இரவு பூசைகள், பொங்கல் நிகழ்வுகல் என்பனவும் இடம்பெறவுள்ளது.

நாளை ஞயிற்றுக்கிழமை காலை அதிஸ்டலாபச்சீட்டு அதிஸ்டம் பார்க்கப்படும், அதனைதொடர்ந்து ஆடு, மாடு, கோழி என்பன ஏலமிடும் நிகழ்வும் இடம்பெறும்.

வவுனியாவில் கறுப்புச் சந்தையில் 3000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ள பெட்ரோல விலை!!

பெட்ரோல் 3000 ரூபாய்..

வவுனியாவில் கறுப்பு சந்தையில் பெட்ரோல் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வவுனியாவில் எரிபொருள் விநியோகம் முறையான கட்டமைப்பின் கீழ் இல்லாமையினால் எரிபொருள் மாபியாக்கள் பெட்ரோலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக பெற்று அதனை 3000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

எரிபொருள் விற்பனை மாபியாக்களின் செயற்பாடு காரணமாக எரிபொருள் அவசியமானவர்கள் கூட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சீராக சென்று பெட்ரோல் பெற முடியவில்லை எனவும், கறுப்பு சந்தை வியாபாரிகள் குறித்த வரிசைகளில் புகுந்து எரிபொருளை பெற்று விற்பனை செய்து வருகின்றனர் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரதேச செயலகத்தால் ஒன்லைன் பதிவு இடம்பெறுகின்ற போதும் அது வவுனியா மாவட்டத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தபடவில்லை. இதனால் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.