முகநூலில் பழக்கமான பெண்ணிடம் பணம் மற்றும் நகையை பறிக்கொடுத்த நபர்!!

முகநூலில்..

முகநூல் ஊடாக நட்புறவை ஏற்படுத்திக்கொண்ட நபருடன் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு சென்று மது அருந்திக்கொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட நபரையும் அவரது நண்பரையும் மயக்கமடைய செய்து,

முகநூலில் நட்புறவை ஏற்படுத்தக்கொண்ட நபரிடம் இருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் பானத்துடன் ஏதோ ஒரு தூளை பெண் கலந்ததை தான் கண்டதாகவும் அதன் பின்னர் மயங்கி விழுந்து விட்டதாக பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற பெண், நபரின் காரையும் எடுத்துச் சென்று இடையில் கைவிட்டுச் சென்றுள்ளார். இந்த நபர், தென் கொரியாவில் தொழில் புரிந்து விட்டு, இலங்கை திரும்பி வாகனங்களை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 41 வயதான நபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

தனது நண்பன் மற்றும் முகநூலில் சில தினங்களுக்கு முன்னர் அறிமுகமான பெண்ணுடன் இந்த நபர், தனது நண்பனின் காரில் திஸ்ஸமஹாராமவுக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார்.இதன் பின்னர், திஸ்ஸமஹாராம திஸ்ஸ குளத்திற்குள் அருகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

அங்கு இந்த பெண், குறித்த நபருக்கும் அவரது நண்பருக்கும் பானம் ஒன்றை அருந்த கொடுத்து விட்டு, ஒருவரிடம் இருந்த 27 லட்சத்து 51 ஆயிரம் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விடுதியில் இரண்டு அறைகளை பெற்றுக்கொண்டதுடன் ஒன்றில் அவரும், சந்தேக நபரான பெண்ணும் மற்றைய அறையில் நண்பரும் தங்கியுள்ளனர். அன்றைய தினம் மாலையில் இருவரும் மதுபானம் அருந்த தயாரான போது, சந்தேக நபரான பெண் இனிப்பு பானத்தை தயாரித்து வழங்கியுள்ளார்.

இருவரும் உடனடியாக அந்த பானத்தை அருந்தியுள்ளனர். அதன் பின்னர் மார்பு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதுடன் உடலில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிற்பகல் 4 மணியளவில் நடந்துள்ளது.

இதனையடுத்து இரவு 7.30 மணியளவில் விழித்து பார்த்த போது வர்த்தகரிடம் இருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. நண்பரும் ஒரு இடத்தில் விழுந்து கிடந்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணைகளின் பின்னர் திஸ்ஸ குளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த காரை கண்டுபிடித்துள்ளனர். சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்காக திஸ்ஸமஹாராம பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் சரிவு : இன்றைய தங்க விலை நிலவரம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 665,680 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த இரு தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 164,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

செல்ஃபி எடுக்கும்போது கடல் அலையில் சிக்கிய பள்ளி மாணவன்.. நண்பர்கள் கண்முன்னே நடந்த சோகம்!!

கபிலன்..

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த தாழங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் நாகாஜன். இவரது மகன் கபிலன்(17). இவர் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். இதையடுத்து இன்று புதுச்சேரி அருகே உள்ள புதுக்குப்பம் கடற்கரையில் நண்பர்கள் அனைவரும் கடலில் குளித்தனர்.

ப்போது கபிலனுக்கு நீச்சல் தெரியாத நிலையில், ராட்சத அலை எழும்போது தனது மொபைலில் செல்ஃபி எடுத்துள்ளார். அந்நேரம் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட கபிலன், புதை மணலில் சிக்கிகொண்டான்.

இதனால் அதிர்ச்சியடைந்த கபிலனின் நண்பர்கள் அருகிலிருந்த மீனவர்களின் உதவியோடு, கபிலனை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கபிலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து தவளக்குப்பம் போலிஸார் கபிலனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். செல்ஃபி மோகத்தால் பள்ளி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலனுடன் திட்டம் தீட்டிய மகள் : கொலை செய்து குப்பையில் வீசிய தந்தை!!

இந்தியாவில்..

இந்தியாவில் மகளை கொன்று உடலை குப்பைத் தொட்டியில் வீசிய தந்தையை போலிஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவின் காகுன்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷாலினி, 12ம் வகுப்பு படித்துள்ள ஷாலினி பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் ஷாலினியின் குடும்பத்துக்கு தெரியவர எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இந்நிலையில் காதலனின் பெற்றோர் முறைப்படி வந்து ஷாலினியின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளனர்.

அப்போது ஷாலினியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது, போலிஸ் நிலையம் வரை விவகாரம் சென்றுவிட 18 வயது பூர்த்தி ஆகாத நிலையில் இரு குடும்பத்தாரையும் சமாதானம் செய்து வைத்து போலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஷாலினி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனைத் அறிந்து கொண்ட அவரின் பெற்றோர் கடந்த 6ஆம் தேதி இரவு சாலினியை கடுமையாகத் தாக்கி கொலை செய்ததுடன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர்.

தொடர்ந்து ஷாலினியின் தந்தை நடந்ததை சம்பவத்தை கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார், பின்னர் போலிசார் சாலினி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பிள்ளைகளுக்கு 3 நாட்கள் உணவு இல்லை : தென்னிலங்கையில் தாய் எடுத்த விபரீத முடிவு!!

தென்னிலங்கையில்..

வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவு எதுவும் வழங்க முடியாமல், மூன்று நாட்களாக அவரது பிள்ளைகள் கடும் பசியால் நீரை மட்டும் அருந்தியுள்ளனர். அதனை பார்க்க முடியாமல் தாய் உயிரை பறிக்கும் ஆபத்தான விதைகளை உட்கொண்டுள்ளார்.

ஆபத்தான நிலையில் உள்ள போதிலும் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என அவசரகால பிரிவின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார். இந்நிலையில் அந்த குடும்பத்தின் பசியை போக்குவதற்கு உணவிற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெல்லவாய கிராமப் பகுதியில் வசிக்கும் 44 வயதான தந்தை மற்றும் தாய்க்கு ஒன்பது, எட்டு மற்றும் நான்கு வயதுடைய மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். நிரந்தர வருமானம் இல்லாததால் சமீப நாட்களாக சாப்பிட எதுவும் கிடைக்காமல் இந்த குடும்பத்தினர் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இக்குடும்பத்திற்கு யாராவது உதவ விரும்பினால் தந்தையின் தொலைபேசி இலக்கமான 076-1040036 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு!!

பெண்ணின் சடலம் மீட்பு..

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்று இன்று (10.06) இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவரும் இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து வருகைதந்து வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் வசித்துவந்த நிலையிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தேடியபோது கிணற்றில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதி இளைஞர்கள், பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

30 வயதுடைய இந்துஜா என்ற பெண்ணே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாட்டவரை நெகிழ்ச்சியடைய வைத்த கிளிநொச்சி இளைஞனின் செயல்!!

செல்லத்துரை தவக்குமார்..

கிளிநொச்சியில் தவறவிட்ட 4 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியினை இளைஞர் ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தனது 4 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர் தவறவிட்டுள்ளார்.

இந்நிலையில் அதனை கண்டெடுத்த கிளிநொச்சி புதுமுறிப்பு இளைஞன் தொலைபேசியை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். குறித்த இளைஞனின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர் கிளிநொச்சியில் உள்ள கிராம பாடசாலை ஒன்றுக்கும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கும் உதவி செய்யும் பொருட்டு கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது பாடசாலையினையும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவரையும் நேரடியாக பார்வையிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது அவரது 4 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை வீதியில் நேற்று முன்தினம் (08.06) தவறவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று (09.06) குறித்த தொலைபேசியினை கண்டெடுத்த கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை தவக்குமார் என்ற இளைஞன் அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.

மன்னாரில் இரு சகோதரர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை!!

மன்னாரில்..

மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இன்று (10.06.2022) காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

திங்கட் கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!!

அரச விடுமுறை..

எதிர்வரும் திங்கட்கிழமை 13ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பில்லை எனினும், அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்பட்டுள்ளது.

அனைத்து அரச மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் 13ம் திகதி மூடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமொன்று அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மகனின் சடலத்தை வாங்க லஞ்சம் கொடுக்கணும்., பணத்துக்காக பிச்சை எடுக்கும் ஏழை பெற்றோர்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மகனின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து வாங்க லஞ்சம் கேட்கப்பட்டதால், பணத்துக்காக வயதான ஏழைத் தம்பதி வீடு வீடாக பிச்சை எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்திய மாநிலம் பீகாரில் சமஸ்திபூரில் இப்படி ஒரு கொடுமையான சம்பவம் நடந்தேறியுள்ளது.

பீகாரின் சமஸ்திபூரின் தெருக்களில் வயதான தம்பதியினர் தங்கள் மகனின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து மீட்டெடுக்க எல்லோரிடமும் பிச்சை எடுத்து வருகின்றனர்.

மருத்துவமனை ஊழியர் ஒருவர் தங்கள் மகனின் உடலை ஒப்படைக்க தம்பதியிடம் 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களிடம் பணம் இல்லாததால், தங்கள் ஊரைச் சுற்றி எல்லோரிடமும் பிச்சை கேட்டு சுற்றி வருகின்றனர். அவர்களின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஊடகங்களில் பேசிய மகேஷ் தாக்கூர் (உயிரிழந்தவரின் தந்தை), “சில நாட்களுக்கு முன்பு என் மகன் காணாமல் போய்விட்டான்.

இப்போது, ​​என் மகனின் உடல் சமஸ்திபூரில் உள்ள சதர் மருத்துவமனையில் இருப்பதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. என் மகனின் உடலை விடுவிக்க மருத்துவமனை ஊழியர் 50,000 கேட்டுள்ளார். நாங்கள் ஏழைகள், எப்படி? இந்தத் தொகையைச் செலுத்த முடியுமா?” என்று கூறினார்.

மருத்துவமனையில் பணியாற்றும் பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதால், அவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லை.

நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து ஊழியர்கள் பணம் பறித்த சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

“இப்படி ஒரு நிலைமைக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டவர்கள், அவர்கள் தப்ப மாட்டார்கள். இது மனித குலத்திற்கு அவமானம்” என்று சமஸ்திபூர் சிவில் சர்ஜன் டாக்டர் எஸ்.கே. சௌத்ரி கூறியுள்ளார்.

எதிர்ப்புகளை மீறி தன்னை தானே திருமணம் செய்துகொண்ட பெண் : வெளியான புகைப்படங்கள்!!

ஷாமா பிந்து..

இந்தியாவில் முதல் முறையாக குஜராத் பெண் எதிர்ப்புகளை மீறி தன்னை தானே திருமணம் செய்துகொண்டார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஷாமா பிந்து, ‘சோலோகாமி’ எனும் தன்னை தானே மணந்துகொள்ளும் திருமணத்தை செய்துகொள்வதாக அறிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இந்த நடைமுறை, இந்தியாவில் சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை. எனினும், ஜூன் 11ஆம் திகதி தன்னை தானே திருமணம் செய்வதாக ஷாமா பிந்து அறிவித்தார். ஆனால் அவரது முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்து மதத்திற்கு இது எதிரானது என்றும், கோவிலில் இந்த திருமணத்தை நடத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும் பாஜகவின் நகர துணை தலைவர் சுனிதா சுக்லா கூறினார்.

அதன் பின்னர், யாருடைய மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறிய பிந்து, திருமண இடத்தை மாற்ற விரும்புவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் திடீரென அறிவித்த திகதிக்கு முன்பே, தனது வீட்டில் ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்துகொண்டார். அவரது இந்த திருமணத்தில் மெஹந்தி, மஞ்சள் பூசும் விழா உட்பட அனைத்து பாரம்பரிய வழக்கங்களும் பின்பற்றப்பட்டது. பின்னர் தனது நெற்றியில் தானே குங்குமம் வைத்து பிந்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் குறித்து ஷாமா பிந்து கூறுகையில், ‘இறுதியாக திருமணமான பெண்ணாக உணர்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. சோலோகாமி திருமணம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அறிவித்த திகதியில் விழா நடத்தினால் பிரச்சனைகள் ஏற்படலாம் என நினைத்தேன்.

இதனால் 3 நாட்களுக்கு முன்பே தோழிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன். சோலோகாமி திருமணத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஏராளமானவர்கள் எனது உணர்வை புரிந்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார். இந்த விழாவில் பிந்துவின் நெருங்கிய தோழிகள் மற்றும் அவருடன் பணியாற்றும் நபர்கள் என 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் : லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

சமையல் எரிவாயு..

நாளைய தினம் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே எரிவாயுக்கொள்வனவு செய்வதற்காக, எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 3,900 மெற்றிக் டன் எரிவாயுடன் நேற்று நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் பணம் செலுத்தப்படாமையால், இதுவரையில் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், அமைதியின்மை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.அரியாலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி!!

யாழ்.அரியாலை..

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் ரயிலுடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.

அரியாலை – மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றிரவு 7.15 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வானில் பயணித்தவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் தீ விபத்து!!

தீ விபத்து..

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (09.06.2022) மதியம் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் உள்ள காணியிலேயே ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற நகரசபை தீயணைப்பு பிரிவினர் இரண்டு மணித்தியாலய போராட்டத்தினை அடுத்து தீயினை முற்றாக அணைத்திருந்தனர்.

இதன் மூலமாக தீ பல்கலைக்கழக வளாகத்தினுள் பரவும் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அரச நிர்வாகத்தில் இனி எந்தப் பதவிகளையும் ஏற்கமாட்டேன் : பதவியை துறந்தார் பசில்!!

பசில் ராஜபக்ச..

தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இனி வரும் நாட்களில் எந்தவொரு அரச நிர்வாக பதவிகளையும் தான் வகிக்கப் போவதில்லை என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார். அரசியலில் இருந்து விலகிச் செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் கேமிற்கு அடிமையான 23 வயது இளைஞர்.. நண்பர்களின் செயலால் எடுத்த விபரீத முடிவு!!

கரூர்..

தமிழகத்தின் கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நண்பர்கள் கேம் பாஸ்வேர்டை திருடிக்கொண்டதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்லைன் கேம் மீதான மோகம் சிறுவர்கள், இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது. இதுபோன்ற விளையாட்டுகளில் மூழ்கும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத முடிவை எடுத்து விடுகின்றனர்.

இதைபோன்ற ஒரு சம்பவம் தான் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கரூர் சிவசக்தி நகரை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர், ப்ரீ பயர் என்ற ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த இளைஞரின் ப்ரீ பயர் விளையாட்டின் User ID மற்றும் பாஸ்வேர்டை அவரது நண்பர்கள் திருடியுள்ளனர். இதனை அறிந்த அந்த இளைஞர் அதிர்ச்சியும், விரக்தியுமடைந்துள்ளார்.

பின்னர் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். கேம் பாஸ்வேர்டை திருடிக் கொண்டதற்காக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விடயம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.