கந்தப்பளை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில் உள்ள தனிவீட்டு குடியிருப்பில் சிறுமியொருவர் சேலை பட்டி இறுகி உயிரிழந்துள்ளார். ஹைபொரஸ்ட், இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என்று அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் குறித்த சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடி கொண்டிருந்ததாகவும் தாய் வெளியே வந்து பார்த்த போது, சிறுமியின் கழுத்து ஊஞ்சல் சேலையில் இறுகியிருந்துள்ளதை அவதானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் கூச்சலிட்டதையடுத்து விரைந்துவந்த அயலர்வர்கள் சிறுமியின் கழுத்தில் இறுகியிறுந்த சேலை பட்டியை அப்புறுப்படுத்தி ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் நேற்றும் எரிவாயு விநியோகிக்கப்படாமையால் மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டினுள் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த 4 மாதங்களினுள் மிகப்பெரிய எரிவாயு வரிசைகளை நேற்று நாடு முழுவதும் காண முடிந்துள்ளது.
பல பிரதேசங்களில் சிலிண்டர்களை ஒன்றாக தொடர்புப்படுத்தி வாடகைக்கு பாதுகாக்கும் முறை ஒன்றையும் காண முடிகின்றது.
இரவு நேரங்களில் ஒரு சிலிண்டரை பாதுகாக்க 100 முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஊடாக வரிசையில் நிற்பதற்கும் கட்டணம் அறிவிடும் புதிய தொழில் ஒன்றை இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. லிட்ரோ நிறுவனம் நேற்று வரையில் தொடர்ந்து ஒன்பது நாட்களாக எரிவாயுவை வழங்கவில்லை.
இந்த 9 நாட்களும் மக்கள் வரிசையில் காத்திருந்த நிலையில் சில பிரதேசங்களில் பல நாட்களாக மக்கள் வீடுகளுக்கு செல்லாமல் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று (14.06) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கப்பம் பெறுவதற்காகவே இவர் கடத்தப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பூவரசங்குளம், வாரிக்குட்டியூர் பகுதியில் வைத்து குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கடத்தப்பட்ட பெண்ணின் மகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை விடுவிக்க 500,000 ரூபா கப்பம் கோரியுள்ளனர். கப்பம் கொடுக்காவிட்டால் குறித்த பெண்ணை சுட்டுக் கொன்று விடுவோம் என சந்தேக நபர்கள் மிரட்டியுள்ளனர். இது தொடர்பில் குறித்த பெண்ணின் மகள் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து பணம் கொடுக்கும் விதத்தில் சந்தேக நபர்கள் அழைக்கப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கப்பம் பெறுவதற்காக கடத்தி சிறைபிடிக்கப்பட்டிருந்த பெண்ணையும் பொலிசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 56 வயதான பெண், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கடத்தல் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 49 வயதுடைய வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பொது விடுமுறை வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் வெளியாகியுள்ளது. அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. என்றபோதும் இதில் நீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் அடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான அறிவித்தலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து வெளிப்படுத்தியிருந்தார்.
சந்தையில் மீனின் விலை வெகுவாக உயர்வடைந்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் இவ்வாறு மீனின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது.
பேலியகொடை மீன் சந்தையில் தலபாத் ரூ.2,200, கொப்பரை ரூ.2,300 என்ற அடிப்படையில் ஒரு கிலோ மீன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதேவேளை, சந்தையில் ஒரு கிலோ பருப்பின் விலை 650 ரூபாவைத் தாண்டியுள்ளது. பருப்புக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் விதிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எரிபொருள் கொள்வனவு செய்வோருக்காக எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி தொடக்கம் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாடிக்கையாளர்களை பதிவு செய்து, வாராந்தம் உத்தரவாத அடிப்படையில் எரிபொருள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1) தடையில்லா மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் இருக்கும் வரை, எரிபொருள் வரிசை சாத்தியமற்றது. நிதிப்பிரச்சினைகள் உள்ள நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வாரத்திற்கு நிர்வகிக்க எரிபொருளை இறக்குமதி செய்கிறது, ஆனால் சில நுகர்வோர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்காக ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக எரிபொருளை சேகரிக்கின்றனர்.
2) டீசல், உலை எண்ணெய் குதம் ஆகியவற்றிற்கு 24 மணிநேர மின் விநியோகத்திற்கு கூடுதலாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாதந்தோறும் செலவாகிறது. எரிவாயு பற்றாக்குறையால் மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த மாதாந்திர எரிபொருள் கட்டணம் தற்போது 550 மில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது.
3) நிதி நிலைமையை வலுப்படுத்தி, 24 மணி நேர மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகத்தை மீட்டெடுக்கும் வரை, நுகர்வோர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவு செய்து அவர்களுக்கு உத்தரவாதமான வாராந்திர ஒதுக்கீட்டை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஜூலை முதல் வாரத்தில் இது நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த வாரத்தில் இருந்து இதை நடைமுறைப்படுத்த நம்புகிறோம். தற்போது, எரிபொருள் விலையேற்றத்தால் வேலைக்குச் செல்வதற்கும், திரும்புவதற்கும் பெரும் கூடுதல் செலவு ஏற்படுவதை அரசு ஊழியர்கள் அறிந்திருக்கிறார்கள்.
அவர்கள் வசிக்கும் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட விரும்பினால், அவர்கள் பொது நிர்வாக அமைச்சின் உதவி மற்றும் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படும்.
யாழில் கடந்த சில நாட்களில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
யாழ்.மருதங்கேணி உடுத்துறை பகுதியை சேர்ந்த பிரபாகரன் பிறேமலதா (வயது 43) என்ற பெண் கடந்த 08 ஆம் திகதி தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் இவர் யாழ்ப்பாணம் சென். சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்து வந்த நிலையில், சுகவீனம் காரணமாக ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் என உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை யாழ். உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுதாகரன் துளசிகா (வயது 28) என்பவர் கடந்த 6 ஆம் திகதி தீ காயங்களுக்கு உள்ளனர்.
பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இரு தினங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 8ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம் செய்த இளம் ஜோடி ஒன்று விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ள்து. கடந்த 8ஆம் திகதி இரவு கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் குறித்த ஜோடி உயிரிழந்தனர்.
சம்பவத்தில் வல்லவ விதானகே ரிசித குமார (24), களுதுருகே லக்ஷானி (19) ஆகியோரே உயிரிழந்தனர். காதலித்து கடந்த ஒன்றரை வருடங்களின் முன்னர் அவர்கள் திருமணம் முடித்திருந்ததாக கூறப்படும் நிலையில், கலஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உறவின வீட்டிற்கு சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
கதிர்காமம் கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதியதில் குறித்த இளம் ஜோடி ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உழவு இயந்திரத்தின் பிரதான மின் விளக்குகளில் ஒன்று செயலிழந்துள்ள நிலையில், ஒற்றை விளக்குடன் உழவு இயந்திரம் பயணித்துள்ளது. இந்நிலையில் எதிரே வருவது மோட்டார் சைக்கிள் என நினைத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பயணித்ததாலேயே விபத்து நேர்ந்ததாகவும்,
மின்வெட்டால் வீதி விளக்குகளும் எரியாததால், எதிரே வந்த உழவு இயந்திரத்தை அவர்களால் அடையாளம் காண முடியாமல் போனதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து பயணித்த யுவதி, தூக்கி வீசப்பட்டு, உழவு இயந்திரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இளைஞனும் சற்று நேரத்தில் உயிரிழந்தார்.
சடலங்கள் கந்த வீதியில் உள்ள இளைஞனின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இந்நிலையில் குறித்த இளம் ஜோடி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, பசார் வீதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பசார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக ஆண் ஒருவர் நேற்று (11.06) இரவு அடி காயங்களுடன் இறந்த நிலையில் காணப்பட்டார்.
இதனை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வவுனியா பொலிசார் வருகை தந்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட ஆணின் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அடி காயங்கள் காணப்பட்டன. இதனையடுத்து குறித்த பகுதிக்கு இன்று (12.06) காலை வருகை தந்த பதில் நீதவான் தி.திருவருள் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்கும் உத்தரவிட்டார்.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரப் பகுதியில் நாட்டாண்மை தொழில் புரிபவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்,
சீசிரீவி காணொளி உதவியுடன் கொலை சம்பவம் தொர்பில் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் இடம்பெற்றுள்ள கொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பஜார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக நேற்று (11.06.2022) இரவு 10.20 மணியளவில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
சடலமாக மீட்கப்பட்ட ஆணின் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அடிகாயங்கள் காணப்படுவதுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் சிசிரிவி காணொளியினை பொலிஸார் பார்வையிட்ட சமயத்தில் குறித்த நபரை பிரிதொரு நபர் தடியால் தாக்குதல் மேற்கொண்ட காட்சிகள் காணப்பட்டன.
அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் சந்தேகநபர் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரப் பகுதியில் நாட்டாண்மை தொழில் புரிபவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வவுனியா, பசார் வீதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (11.06) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பசார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட ஆணின் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அடி காயங்கள் காணப்படுகின்றன. சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலரிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரப் பகுதியில் நாட்டாண்மை தொழில் புரிபவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் சீரான முறையில் மண்ணெண்ணெய் கிடைக்கப்பெறாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
வவுனியாவிலுள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய்க்காகக் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் பல மணிநேரம் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்கப்பெறாது ஏமாற்றத்துடனே வீடு திரும்பியிருந்தனர்.
தோட்டம் மற்றும் விவசாய நடவடிக்கைகளின் போது நீர் பாய்ச்சும் மோட்டரை இயக்குவதற்கும், குளத்தில் கடற்தொழிலில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தங்களின் படகு மற்றும் வள்ளத்திற்கு எரிபொருள் இன்மையுடன் வீட்டில் சமையல் நடவடிக்கைக்கு அடுப்பிற்கு மண்ணெண்ணெய் இன்மை என இவ்வாறு பலர் பாதிப்படைந்துள்ளனர்.
எரிவாயுவிற்குத் தட்டுப்பாடு நிலவியதையடுத்து மண்ணெண்ணெய் அடுப்பிற்கு மாறிய பல குடும்பப் பெண்கள் மண்ணெண்ணெய்யும் இன்றி சமையலை மேற்கொள்ளாத நிலைமை உருவாகியுள்ளது.
கிராமப்புற பகுதிகளில் மக்கள் விறகுக்கு மாறியுள்ள போதிலும் நகரப்புற மக்கள் அதற்கு தங்களை மாற்றியமைக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
எனவே எமது மாவட்ட அதிகாரிகள் உரிய தரப்பினரிடம் கலந்துரையாடி மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயுவினை பெற்றுத்தருமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பிரிவுகளாக பிரித்து வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளது. எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொலைதூரப் பகுதிகளில் இருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களை அருகில் உள்ள பாடசாலைகளில் இணைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முகநூல் ஊடாக நட்புறவை ஏற்படுத்திக்கொண்ட நபருடன் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு சென்று மது அருந்திக்கொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட நபரையும் அவரது நண்பரையும் மயக்கமடைய செய்து,
முகநூலில் நட்புறவை ஏற்படுத்தக்கொண்ட நபரிடம் இருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் பானத்துடன் ஏதோ ஒரு தூளை பெண் கலந்ததை தான் கண்டதாகவும் அதன் பின்னர் மயங்கி விழுந்து விட்டதாக பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற பெண், நபரின் காரையும் எடுத்துச் சென்று இடையில் கைவிட்டுச் சென்றுள்ளார். இந்த நபர், தென் கொரியாவில் தொழில் புரிந்து விட்டு, இலங்கை திரும்பி வாகனங்களை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 41 வயதான நபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
தனது நண்பன் மற்றும் முகநூலில் சில தினங்களுக்கு முன்னர் அறிமுகமான பெண்ணுடன் இந்த நபர், தனது நண்பனின் காரில் திஸ்ஸமஹாராமவுக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார்.இதன் பின்னர், திஸ்ஸமஹாராம திஸ்ஸ குளத்திற்குள் அருகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.
அங்கு இந்த பெண், குறித்த நபருக்கும் அவரது நண்பருக்கும் பானம் ஒன்றை அருந்த கொடுத்து விட்டு, ஒருவரிடம் இருந்த 27 லட்சத்து 51 ஆயிரம் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விடுதியில் இரண்டு அறைகளை பெற்றுக்கொண்டதுடன் ஒன்றில் அவரும், சந்தேக நபரான பெண்ணும் மற்றைய அறையில் நண்பரும் தங்கியுள்ளனர். அன்றைய தினம் மாலையில் இருவரும் மதுபானம் அருந்த தயாரான போது, சந்தேக நபரான பெண் இனிப்பு பானத்தை தயாரித்து வழங்கியுள்ளார்.
இருவரும் உடனடியாக அந்த பானத்தை அருந்தியுள்ளனர். அதன் பின்னர் மார்பு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதுடன் உடலில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிற்பகல் 4 மணியளவில் நடந்துள்ளது.
இதனையடுத்து இரவு 7.30 மணியளவில் விழித்து பார்த்த போது வர்த்தகரிடம் இருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. நண்பரும் ஒரு இடத்தில் விழுந்து கிடந்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணைகளின் பின்னர் திஸ்ஸ குளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த காரை கண்டுபிடித்துள்ளனர். சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்காக திஸ்ஸமஹாராம பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 665,680 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த இரு தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 164,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.