லண்டனில் தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு : குவியும் பாராட்டுக்கள்!!

சுபிக்சா..

லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த சுபிக்சா என்ற பெண்னே இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற நிலையில்,

யுஎஸ்ஏவில் எம்.எஸ் படிப்பை தொடர்ந்து இவ்வாறு தேர்வாகியுள்ளார். இதையடுத்து சுபிக்சாவை பலரும் வரவேற்று பாராட்டியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.

வவுனியாவைச் சேர்ந்த 42 வயது நபரை காதலித்த மட்டக்களப்பைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி மீட்பு : ஒருவர் கைது!!

5 வயது சிறுமி மீட்பு..

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேக நபரையும் நேற்று (03.06.2022) பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுமி 42 வயதுடைய வவுனியாவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக வீட்டை விட்டு சிறுமி வெளியேறி குறித்த நபருடன் புத்தளத்திற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து சிறுமியுடன் தொலைபேசியில் உறவினர்கள் தொடர்பு கொண்டு வீட்டுக்குவருமாறு அழைத்த நிலையில் தலைமறைவாகியிருந்த இருவரும் கொக்கட்டிச்சோலைக்கு நேற்று அதிகாலை வந்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டதுடன் அவரை அழைத்துச் சென்ற நபரையும் கைது செய்துள்ளனர். அத்தோடு, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (04.06) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஏ9 வீதியூடாக நொச்சிமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது,

ஏ9 வீதியில் வவுனியா நோக்கி வந்த பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் எதிர்ப்பக்கம் சென்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த சாந்தசோலை மகளிர் அமைப்புக்கு சொந்தமான கட்டடத்திற்குள் புகுந்தது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மோட்டர் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தின் போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த சாந்தசோலை மகளிர் அமைப்புக்கு சொந்தமான கடை சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்தில் வாகனச் சாரதிக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

சம்ப இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டு விபத்துக்குள்ளான வாகனம் கொண்டு செல்லப்பட்டதுடன், வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா 9 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் : பொலிசாரால் மூன்று இளைஞர்கள் கைது!!

மூன்று இளைஞர்கள் கைது..

வவுனியாவில் 9 இடங்களில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (04.06) தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் வவுனியாவின் உக்குளாங்குளம் பகுதியில் 4 வீடுகளிலும், பண்டாரிக்குளம் பகுதியில் 2 வீடுகளிலும், நெளுக்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும், கூமாங்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும் என 9 இடங்களில் நகைகள், மோட்டர் சைக்கிள், துவிச்சக்கரவண்டி, இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட், பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348),

விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792), திசாநாயக்க (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் மதவுவைத்தகுளம் (32வயது), தேக்கவத்தை (வயது 30), 4ம் கட்டை (வயது 35) ஆகிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது அவர்களிடம் இருந்து மோட்டர்கள் 3, சிலிண்டர்கள் 8, ஜெனரேற்றர், தொலைக்காட்சி, கிறைண்டர், சைக்கிள், மோட்டர் சைக்கிள் மற்றும் தோடு, மூக்குத்தி சஙகிலி அடங்கிய 2 பவுண் நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு!!

நிவாரணப் பொதிகள்..

பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப்பொதிகளில் வவுனியா மாவட்டத்திற்கு என பகிர்ந்தளிக்கப்பட்ட 22,550 அரிசிப் பொதிகளும் 750 பால்மா பொதிகளும் கடந்த (02.06.2022) அன்று விசேட புகையிரதம் ஊடாக வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்திருந்தது.

நிவாரணப் பொதிகளை வவுனியா புகையிரத நிலைய அத்தியட்சகர் மாவட்ட செயலக அதிகாரிகளிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துடன் அதனை மாவட்ட செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று பிரதேச செயலாளர்களிடம் கையளித்தனர்.

வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக குறித்த நிவாரணப் பொதிகள் இன்று (04.06.2022) பகிர்ந்தளிப்பட்டன.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்கு 12,315 அரிசி, 452 பால்மா பொதிகளும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு 4675 அரிசி மற்றும் 148 பால்மா பொதிகளும்,

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு 3560 அரிசி, 116 பால்மா பொதிகளும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கு 2000 அரிசி, 34 பால்மா பொதிகளும் என பங்கீட்டு முறையில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தந்தூரி சிக்கன் சாப்பிட்டு பரிதாபமாக பலியான பள்ளி மாணவன்!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்த விவகாரத்தில், குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் திருமுருகன். இவர் கடந்த 24ஆம் திகதி தேர்வு எழுதி முடித்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டல் ஒன்றில் சிக்கன் தந்தூரி மற்றும் பிரைடு ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் வீட்டிற்கு வந்த அவருக்கு இரவு முழுவதும் வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு திருமுருகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு Food poison ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

மறுநாள் மாணவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு அதிகமாக ஏற்பட்டதால் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், இந்த விடயம் பூதாகரமாக வெடித்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த ஓட்டலை மூடக் கூறி கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தற்காலிகமாக ஓட்டலை மூட உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த 3 மாதங்கள் கழித்து மகளின் திருமணத்தில் பங்கேற்ற தந்தை : மனதை உருக்கும் புகைப்படங்கள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணத்தில் உறவினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (56). கடந்தாண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்தார்.

இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஷ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் வைத்து நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்தது.

உயிருடன் இருக்கும் போது மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என செல்வராஜ் திட்டமிட்டிருந்த நிலையில் செல்வராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

அதன்படி தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஷ்வரி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்துள்ளார். எனவே தந்தையின் கடைசி ஆசையை நிருவெற்றும் வகையில், இந்த குறையை போக்க பத்மாவதி குடும்பத்தினர் ஒரு நெழ்ச்சியான சம்பவத்தை செய்துள்ளனர்.

அந்த வகையில் பத்மாவதி குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் செலவில் செல்வராஜின் மெழுகு சிலையை தயாரித்தனர். மேலும் செல்வராஜுக்கு பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகுசிலை தத்ரூபமாக உருவாக்கினார்கள்.

இந்த சிலையை புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது. அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மகேஸ்வரி, தந்தை செல்வராஜியின் மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.

இதை கண்டு திருமண மண்டபத்துக்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்து மணப்பெண்ணை தேற்றினார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

16 வயது மகளின் கருமுட்டையை இரண்டாவது கணவருடன் சேர்ந்து விற்ற கொடூர தாய் : அதிர்ச்சிப் பின்னணி!!

ஈரோடு மாவட்டத்தில்..

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் சிறுமியை வன்புணர்வு செய்து, 8 முறை கருமுட்டையை விற்ற கொடூர தாய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகே உள்ள கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது முதல் கணவர் இறந்த நிலையில் மகளுடன் வசித்து வந்துள்ளார்.

அதன் பின்னர், சையத் அலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம் என சையத் அலி கூறியதை அப்பெண் ஏற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த பெண் கருமுட்டைகளை விற்று வந்த நிலையில், சையத்தின் வற்புறுத்தலின் பேரில் தனது மகளையும் கருவுற செய்து கருமுட்டைகளை விற்க முடிவு செய்துள்ளார்.

இதனால் அப்பெண்ணின் மகள் 12 வயதில் இருக்கும்போதே சையத்தின் வன்புணர்வுக்கு ஆளானார். இவ்வாறாக தொடர்ச்சியாக 4 ஆண்டுகளில் குறித்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு, அவரது கருமுட்டை 8 முறை தனியார் மருத்துவமனைக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவரின் துன்புறுத்தலால் மனவேதனைடையந்த குறித்த சிறுமி, கடந்த 20ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி, தனது தந்தையின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை அறிந்து அவரது தாயும், சையத் அலியும் சிறுமியை ஈரோட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து சிறுமியை மீட்ட உறவினர்கள் பொலிஸில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நடத்திய விசாரணையில், 16 வயதாகும் சிறுமையை 22 வயதான திருமணமான பெண் என ஆவணங்களை மாற்றி கருமுட்டையை விற்று வந்தது தெரிய வந்தது.

அதன் பின்னர் சிறுமியின் தாய், சையத் அலி மற்றும் இவர்களுக்கு கருமுட்டையை விற்க உதவியாக இருந்த மாலதி என்ற பெண்ணையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உட்பட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் பெண் : வினோத சம்பவம்!!

குஜராத்தில்..

இந்திய மாநிலம் குஜராத்தில் இளம் பெண் ஒருவர் ‘சோலோகாமி’ என்று சொல்லப்படும் முறையில் தன்னைத்தானே திருணம் செய்துகொள்ள உள்ளார்.

க்ஷமா பிந்து (Kshama Bindu) எனும் 24 வயதான அப்பெண் வரும் ஜூன் 11-ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை என்று யாரும் இல்லை.

பிந்து, சோலோகாமி (Sologamy) என்று சொல்லப்படும் முறையில், தன்னைத் தானே திருமணம் செய்யவுள்ளார். தன் மீது தானே கொண்ட அதீதமான காதலினால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

குஜராத்தில்லேயே முதல்முறையாக சோலோகாமி திருமணம் செய்யும் முதல் பெண் க்ஷமா பிந்து தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. “நான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகளாக மாற விரும்பினேன்.

அதனால் நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்” என்று அவர் கூறியுள்ளார். இந்த சுய திருமணத்தை வெறும் விளம்பரம் என்று கூறுபவர்ககளுக்கு பதிலளித்த பிந்து, “உண்மையில் நான் சித்தரிக்க முயற்சிப்பது பெண்களின் முக்கியத்துவத்தைத்தான்” என்று கூறியுள்ளார்.

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிந்து, தனது முடிவுக்கு தனது பெற்றோர் ஆதரவாக இருப்பதாகவும் கூறினார். அனைத்து சடங்குகளையும் பின்பற்றுவதுடன், மணமகள் தனக்கென ஐந்து சபதங்களையும் எழுதி வைத்துள்ளார். திருமண விழாவிற்குப் பிறகு, பிந்து கோவாவில் இரண்டு வார தேனிலவுக்குச் செல்கிறார்.

கணவர் கொலையான நிலையில் ஆண் நண்பரை வைத்து தம்பியை வெட்டிய பெண் : அதிர்ச்சிப் பின்னணி!!

திண்டுக்கலில்..

தமிழகத்தின் திண்டுக்கலில் பெண்ணொருவர் ஆண் நண்பரை வைத்து தனது த.ம்பியை கொ.லை செ.ய்.ய மு.யன்ற ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைபட்டியை சேர்ந்தவர் சூர்யா(24). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ம.ர்ம ந.பர்களால் வெ.ட்.ட.ப்.ப.ட்.டு, ம.ருத்துவமனையில் சி.கிச்சை பெ.ற்று வந்தார்.

இதுதொடர்பாக வ.ழக்குப்பதிவு செய்த பொ.லிஸார், வி.சாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சூர்யாவின் சித்தி மகளான மனிஷா(25), அரசியல் பிரமுகர் ஒருவர் தனக்கு கா.த.ல் தொ.ல்லை தருவதாகவும், அதனால் கூறி வி.ஷ.ம் கு.டித்ததாகவும் கூறி அதே ம.ருத்துவமனையில் சி.கிச்சைக்கு அ.னுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மனிஷாவை ப.ரிசோதித்தபோது அவர் வி.ஷ.ம் எ.துவும் அ.ருந்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், அப்பெண்ணிடம் வி.சாரணை ந.டத்தினர்.

அவர் முன்னுக்கு பின் மு.ரணாக பேசியதால், மனிஷாவின் செல்போனை கை.ப்பற்றி ஆ.ய்வு செ.ய்ததில், சர்தார் என்பவர் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்துள்ளது. அ.வரை பி.டித்து வி.சாரித்தபோது அ.தி.ர்.ச்.சி த.கவல்கள் வெளியானது.

தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட நி.லையில், தனியாக வசித்து வந்த மனிஷாவுக்கு, சார்தருடன் த.கா.த உ.ற.வு ஏ.ற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த மனிஷாவின் தம்பி சூர்யா க.ண்.டி.த்.த.தா.ல், தனது காதலரிடம் கூறி சொந்த த.ம்பியையே கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சர்தார் தனது நண்பர்களான யோகராஜ், கவுதம், ரியாஸ் ஆகியோருடன் சேர்ந்து சூர்யா மீ.து தா.க்.கு.த.ல் ந.டத்தியுள்ளார். அ.தில் அதிர்ஷ்டவசமாக சூர்யா உ.யி.ர் த.ப்.பி.யு.ள்.ளா.ர். அதன் பின்னரே மனிஷா த.ற்.கொ.லை நா.ட.கமாடியுள்ளார்.

இந்நிலையில் சர்தார் மற்றும் அவரது நண்பர்களை கை.து செ.ய்த பொலிஸார், மனிஷாவையும் அவருக்கு உதவிய அவரது சகோதரி சீமாதேவியையும் கை.து செ.ய்துள்ளனர்.

மேலும், மனிஷாவின் கணவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து கு.றித்து ர.க.சி.ய வி.சாரணையை பொ.லிஸார் தொ.டங்கியுள்ளதாக கூறப்படுகிறது. த.ம்பியை ஆட்களை வைத்து அ.க்கா கொ.லை செ.ய்.ய மு.யன்ற ச.ம்பவம் திண்டுக்கலில் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய் குளத்திலிருந்து சடலமாக மீட்பு!!

இரண்டு பிள்ளைகளின் தாய்..

பெரியநீலாவணை – மருதமுனையில் காணாமல்போன தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அம்பாறை – பெரியநீலாவணை, மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 54 வயதுடைய எம்.ஆர். பஸீரா என்ற பெண் கடந்த இரண்டு தினங்களாகக் காணாமல் போயிருந்தார்.

மருதமுனையில் காணாமல்போன இரண்டு பிள்ளைகளின் தாய் 65 மீட்டர் வீடமைப்பு பகுதிக்குப் பின்புறமாகவுள்ள குளத்திலிருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த தாய் காணாமல்போனமை தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், உதவி செய்யுமாறு பொது மக்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பிரதேச மக்களும் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மருதமுனை 65 மீட்டர் வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியின் பின்பக்கமாக உள்ள குளத்துக்குள் உயிரிழந்த நிலையில் தாயின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் தலைமையில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் மற்றுமொரு வரி அதிகரிப்பு!!

தொலைத்தொடர்பு வரி..

இலங்கையில் தொலைத்தொடர்பு வரி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. அதற்கமைய குறித்த வரியானது 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொலைத்தொடர்பு வரியானது 15%ஆகவும் அதிகரிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  இதனை தொடர்ந்து வரி அதிகரிப்பு காரணமாக தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேர்மைக்கு உதாரணம்… சமூக வலைத்தளங்களில் புகழப்படும் சங்கக்கார!!

சங்கக்கார..

இலங்கையின் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககரவின் நேர்மையான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க சென்ற சங்கக்கார பிரபுகளுக்குரிய வரப்பிரசாத்தை மறுத்து, சாதாரண நடைமுறையின் கீழ் பெற்றுள்ளார்.

இதற்காக மக்களோடு மக்களான இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளார். அவரை வரிசையில் நிற்காமல் உள்ளே வரும்படி பல அதிகாரிகள் அழைத்த போதும், சங்கக்கார அதனை மறுத்துள்ளார்.

சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான, நேர்மையான முறையில் மக்களோடு இணைந்து செயற்பட்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின் வளங்கள் துஷ்பிரயோகம் செய்து வரும் நிலையில், நாட்டுக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சங்கக்காரவின் நேர்மையான செயற்பாடு பாராட்டத்தக்க விடயம் தான்.

நேற்றைய தினம் கூட முன்னாள் அமைச்சரின் ஒருவரின் மகன் மற்றும் மருமகள், போக்குவரத்து விதி முறைகளை மீறிச் செயற்பட்டதுடன், அவர்களை கண்டித்த பொலிஸாரையும் கடும் சொற்களால் திட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணாமல் போன இளைஞன் வீடு திரும்பினார்!!

கயேந்திரன் கிருத்திகன்..

வவுனியா குருமன்காட்டில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரே கடந்த சில தினங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டினால் யாழ்ப்பாணத்திலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இளைஞர் வீட்டில் ஒருவரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டதாகவும் தற்போது காணாமல் போய்விட்டதாக செய்திகள் பரவியதை அடுத்து மீண்டும் திரும்பி வந்துவிட்டார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இளைஞனை இன்று காலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்!!

3 வயது சிறுமி..

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று (03.06) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இருந்து தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் பூவரசன்குளம், நித்தியநகர் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை நிறுத்திவிட்டு தாய் கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த போது விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த தாயார் சிறுமியை காணவில்லை என தேடிய போது சிறுமி தண்ணீர் தொடர்டியில் விழுந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமியை மீட்டு பூவசரன்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே சிறுமி மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருசாந்தன் தட்சாயினி என்ற 3 வயது சிறுமியே இவ்வாறு மரணமடைந்தவராவார். இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் எரிவாயு விற்பனை நிலையங்களில் அமைதியின்மை!!

எரிவாயு விற்பனை நிலையங்களில்..

வவுனியாவில் இரு எரிவாயு விற்பனை நிலையங்களில் வர்த்தகர்களுக்கும் மக்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில் பாவனையாளர் அதிகாரசபையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் இன்று (03.06) 5 எரிவாயு விற்பனை நிலையங்களில் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த விநியோக நிலையங்களுக்கு முன்னால் மக்கள் இரவு முதல் நீண்ட வரிசையில் எரிவாயு கொள்கலனுடன் காத்திருந்துள்ளனர்.

இதன்போது வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு எரிவாயு விற்பனை நிலையத்தினர் பூனாவ பகுதிக்கு சென்று 20 எரிவாயுவைப் பெற்றதுடன் தமக்கு எரிவாயு வழங்கப்படவில்லை என கூறி நீண்ட வரிசையில் நின்ற மக்களை திருப்பி அனுப்ப முற்பட்டனர். இதனால் மக்களுக்கும் குறித்த வர்த்தக நிலையத்தினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் நெளுக்குளம் பொலிசார் வருகைதந்து எரிவாயுவை மக்களுக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

வர்த்தக நிலையத்தினர் தாம் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள நபர்களுக்கு தான் எரிவாயுவை வழங்க முடியும் எனக் கூறினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பாவனையாளர் அதிகார சபையினர் எரிவாயுவை பதுக்க முடியாது.

பூனாவ பகுதியில் இருந்து பெற்றப்பட்ட எரிவாயுவை வரிசையில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், எரிவாயுவை வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தினர். இதனால் வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இருப்பினும் பாவனையாளர் அதிகார சபையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய 20 எரிவாயுகளில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு ஒன்று வழங்கப்பட்டதுடன் ஏனைய 19 எரிவாயுகளுக்கும் அப் பகுதியில் நீண்ட வரிசையில் நின்ற 19 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதேபோன்று வவுனியா வேப்பங்குளம் 60 ஏக்கர் பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திலும் அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த வர்த்தக நிலையத்திற்கு வந்த 20 எரிவாயுகளையும் தமது வாடிக்கையாளருக்கு வழங்கப் போவதாக தெரிவித்து வர்த்தகர் பிறிதொரு வீட்டில் இறக்கி வைத்திருந்தமையால் நீண்ட வரிசையில் நின்ற மக்களுக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிசார் வர்த்தக நிலைய உரிமையாளருடன் கலந்துரையாடி அங்கு நின்ற 15 பேருக்கும். வர்த்தக நிலையத்தில் பதிவு செய்து வாடிக்கையாளர் 5 பேருக்கும் என 20 எரிவாயுக்களையும் பகிர்ந்தளித்திருந்தனர்.