தொடரும் அவலங்கள்..

அவலங்கள் நடந்தேறுவதை கண்டும் அவலம் ஒன்று இடம்பெறபோவதை அறிந்தும் அங்கிருந்து தலைதெறிக்க அவசர அவசரமாய் தப்பி ஓடுவதும் - பின் "விசாரணை" "போர்க்குற்றம்" "மனித உரிமை மீறல் " என்று உலக நாடுகள் முன் நற்பெயருக்கு முனைவதும் உண்மை நிலைகளை கண்டறியும் "உத்தியோக பூர்வ...

பதினைந்தாம் பொருத்தம்..

எந்தக்கடையிலும் கிடைக்காத ஒன்றை தேடுகிறேன் எனக்கது கிடைக்காது என்று தெரிந்தும். எட்டாத கனி என உனை நினைத்தேன் இருந்தும் முயற்சித்தேன் எட்டிவிட்டேன் கட்டியும் அணைத்தேன். தொட்டிலில் புது சொந்தம் கிடைத்தது மட்டில்லை மகிழ்விற்கு இருந்தும் தொடரவில்லை.... தொடர்ந்தது கருத்துமோதல் இருண்டது என் மனவானம் விடிந்திட சூரியன் இல்லை.. தொலைந்தது நிம்மதி அதைத்தான் தேடுகின்றேன்.... இருமனம் சேர்ந்து திருமணம் கொண்டாலும் இருவர் பணமதும் சரியாய் பொருந்திட வேண்டும். பதின்நான்கு பொருத்தத்தில் புதிதாய்...

என் காதலி போலவே..

உன்னால் நொந்துதான் காலணி செய்தார்கள் உன்னை நீக்கியே மீனினை உண்பார்கள்.. உன்மேல் அழகுறும் மலர்தனைக் கொய்வார்கள் உன்னைப் பிரித்துதான் சுளைதனை சுவைப்பார்கள்.. உன்னை விலக்கியே எலுமிச்சம் கனிதனைப் பறிப்பார்கள் தாகம் நீக்கிடும் பானமும் செய்வார்கள்.. உன்னை கிளையுடன் வெட்டி வேலி அமைப்பார்கள் பயிர்களைக் காத்துதான் பயன் பல பெறுவார்கள்.. நீ இருக்கும் இடமெலாம் இன்பமும் இனிமையும் இருக்கும் இருந்தும் நீ முள்ளு என் காதலி...

உலகம் மாறிப் போகுதையா!!

குடிதண்ணிக்காய் உயிர் தவிக்கும் உடலுள்ளே தண்ணியும் குடலரிக்கும் அடுப்பிலே பூனையும் படுத்திருக்கும் அநியாய வட்டியில் குடி தொடரும்-பணம்.. கொடுத்தவன் உறுதியை அறுதியென்பான்-இவன் தொங்கிட கோவணம் இல்லையென்பான் தின செய்திகள் தலைப்பெல்லாம் தற்கொலைகள் திடுக்கிடும் தகவல்கள் வேதனைகள் பாவிகள் செய்திடும் வன்செயல்கள்.. ஆவியாகினும் அடங்கிடா தறுதலைகள் முறையற்ற உறவுகள்...

தோழி

இனையம் நம்மை இணைத்தது உன் முகம் பார்க்காமல் தொடங்கிய நட்பு இன்று நம் முகவரிகள் கூட மனனமானது விருப்பம் விடுகதை கவிதை கதை பரிசுகள் பகிர்ந்தோம் கண்ணியமாய் கைகோர்த்து நடக்கிறோம் நட்பின் எல்லைகளில் என்றோ ஒருநாள் முகம் சந்திப்போம் அட! பேச ஒருவிஷயம் கூட இல்லாமல் சத்தமிட்டு சிரிப்போம்:) -nandhalala-  

நட்பில் நான்கு

  நட்பில் நாற்பது இருக்கட்டும் நமக்கோ ! நான்கு தான் தேவை ! அவைகள் 1.அக நட்பு 2.முக நட்பு 3. யுக நட்பு 4. சக நட்பு உன்னை அன்பு செய்தல் - அகமாக ! மற்றவரை அன்பு செய்தல் - முகமாக ! உலகை...

நவயுக நட்பு

முல்லை மொட்டுக்களாய்... பள்ளிச் சிட்டுக்களாய்... பகை மறந்து, பை சுமந்து, சென்றோமே பள்ளிக்கு....!!! பதின் ஒரு வருடங்கள். பசுமையான வருடல்கள். மறக்க முடியா மங்கள நினைவுகள். தனிமையில் மீடிப்பர்த்தேன். என் இளமை அழுகிறது...!!! நாங்கள் அடி வாங்காத ஆசிரியர் இல்லை எங்களின் பகிடி வதைக்கு பலிஆகத ஆட்களும் இல்லை...!!! நாங்கள் அங்கு...

கண்ணே என் கண்மணியே..

கண்ணே என் கண்மணியே. காதல் பெற்ற தவக்கொழுந்தே. உயிரே உயிர் ஒளியே. உயிரில் பூத்த பூந்தளிரே. தத்தி நீ நடக்கையிலே தாவி நானும் அணைத்திடனும். தித்திக்கும் பேச்சினிலே பொழுதெல்லாம் மறந்திடனும். உன் உதட்டோர எச்சியிலே என் கன்னம் நனைத்திடனும். பொக்கை வாய்ச் சிரிப்பினிலே பொன்னூஞ்சல் ஆடிடனும். கண்கள் எனைப் பார்க்கையிலே குழந்தையாய்...

என் அறை

என் அறைக்குள் வர நினைக்கிறீர்களா சிறிது நேரம் தாமதியுங்கள் என் அறைக்குள் வருவதற்கு முன் தனிமைப் புத்தகத்தை ஒரு முறை எனினும் நீங்கள் வாசித்திருக்க வேண்டும் ஒரு தேநீர் குவளையோடு யன்னல் மழைய ரசித்து அருந்த தெரிந்திருக்க வேண்டும் ஒற்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடமாட தெரிந்திருக்க வேண்டும் புழுதி வாசத்தை வெளியேறி...

சூரியன் விழுகின்ற கடலினில்..

சூரியன் விழுகின்ற கடலினில் என்னை நனைய விடு..! விரிகின்ற வெளிகளில் தனிமையின்... கவிதையை படிக்க விடு..! மழை பொழிகின்ற வேளையினில் மரங்களின்... வேர்களாய் மகிழ விடு..! ஒளிர்கின்ற மெழுகினில் உன் பிரிதலின்... வலியினை கருக விடு..! அலைமோதும் ஓசையினில் உரிமையாய்... எனதன்பினை எடுத்து விடு..! தினம் விடிகின்ற...

கவிதைப் பூ..

ஒரு நாள் எனது கிறுக்கள்களை படித்து முடித்ததும்... உனக்கு பிடித்த கவிதை எது என்று என்னை கேட்டாய்... என் வாழ்க்கை என்றேன்.. உடனே கோபமாய் ஓர் பார்வை பார்த்து ஒன்றும் புரியாதவளாய்... நான் கவிதையை கேட்டேன் என்றாய்... உன்னால் எழுதப்பட்ட கவிதை என் வாழ்க்கைதானே என்றேன்... உடனே என்னை பார்க்க பிடிக்காதவள் போல் திரும்பி நின்று வெட்கப் பூ பூத்தாய்... எனது வாழ்க்கையில் இன்னுமொரு கவிதை பூ பூத்தது... -இராஜ சேகர்-

ஒத்தையிலே நிற்கிறியே..

மங்கல நாண் பூட்டி மதியொளி அழகு காட்டி நெஞ்சுக்குள் குளிர்ந்தவனை நெருப்பாற்றில் தொலைத்தாயோ. புறநானூற்று வீரனம்மா. புறமுதுகு காட்டவில்லை. சதி வலையில் சிக்க வைத்தே சிறைபிடித்துப் போனாரம்மா. எண் பத்து ஆயிரமம்மா யுத்தத்தில் விதவைகள் நெருப்பாற்றின் வரலாறுகளம்மா. கற்பாலே ஊர் எரித்த கண்ணகியின் கோயிலிலே தீச்சட்டி ஏந்தியவளே உன் நெஞ்சத்து நெருப்பதனை பெண் தெய்வம்...

வவுனியா தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செவ்வரத்தை’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் பாலாம்பிகை மண்டபத்தில் வவுனியா தமிழ்ச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்   06.09.2015  ஞாயிற்றுக்கிழமைஅன்று 'யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்' தனது பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களுக்கிடையில் நடத்திய...

உறங்காத இரவுகளுக்குப் பின்னே நிஜமான கனவு……

ஒவ்வொரு மாதமும் கலைந்து போயின எதிர்பார்ப்புகள்..... எட்டு வருடங்களாக நுகரவில்லை நாசி பால் மணம் வீசும் மழலையின் நறுமணத்தை..... குருதியோடு சேர்ந்து கரைந்து ஓடின கனவுகள்... கடவுள்களும் மருந்துகளும் அன்றாட அவசியங்கள்... கிழித்தும்...