வரலாற்றில் அழியா மே 18!!

எஞ்சியது உயிர்தான் அஞ்சி அஞ்சி அடுத்தடுத்து பலஊர்கள் எங்கள் குஞ்சுகளை சுமந்து குலங்காக்க குரல்கொடுத்தோம் எங்கள் குரல்வளை தங்கி நிற்கும் இறுதி மூச்சுவரை துஞ்சித்தும் இரக்கமில்லா அரக்கர் தேசங்கள் நஞ்சூட்டிய எமக்கு ஞானஉபதேசம் செய்கிறது இன்று அகவை ஏழாச்சு அன்று இருந்த நிலையிலேயெ நாமின்றும்.. இழந்த எம்உறவுகளை...

புரிந்துணர்வு..

வான், கடலைப் புரிந்ததால் மழை நீரானது மண், வித்தை புரிந்ததால் விளைச்சலானது கதிரவன், ஒளியைப் புரிந்ததால் பசுமையானது இருள், நிலவைப் புரிந்ததால் பௌர்ணமியானது நான், உன்னைப் புரிந்ததால் உனக்கேயானேன் நீ, என்னைப் புரிந்தால் நாமாய் ஆனோம் உண்மை, வாய்மை புரிந்ததால் சத்தியமானது நியாயம்,...

தாய்மையது போற்றிடுவோம்..

தாய்மையது போற்றிடுவோம் நாளும்- பெண் தவமது என்றிடுவோம் மீளும்- கண் தாய்மையவள் மென்மையவள் தூய்மையவள் பெண்மையவள் தேற்று உயர்வு ஏற்று. வாய்மையது தன்னுதிரம் தந்து -மண் வாழ்வளித்த தெய்வமவள் நொந்து -என் வரமென்றும் உரமென்றும் தரமென்றும் கரமென்றும் வார்த்தாள் என் ஆத்தாள். -குமுதினி ரமணன்-

என்னவளே..

என்னால் உனக்கு காதல் பிறக்கவில்லை என்றாலும் உன்னால் எனக்கு பல கவிதை பிறக்கிறது.. துயர் மரணித்தது மகிழ்வு பிறந்தது உன் விழி மொழி கண்டு காதல் விஷம் ஏறிக்கொள்கிறது உன் அழகுண்டு.. தனி வரவை எதிர்பார்தேன் சகி ககிதம் வருகிறாய் நெஞ்சில் தனிதம் எழுகிறது தணிய மறுக்கிறது இருந்தும் சகித்துக்கொள்கிறேன்... -திசா.ஞானசந்திரன்-

இன்று..

வாழ்வின் இறுதி அத்தியாயங்களில் -உயிருடன் ஊசலாடிக் கொண்டிருக்கும் -எம் ஈழத்து உறவுகளை -இன்னும் என்ன செய்ய போகின்றாய்? உண்மைகள் மறைக்கப்படும் இரவுகள் தொடர்ந்து கொண்டே விடிகின்றது எம் முற்றம்.. எங்கோ மண் பிறாண்டி துடிப்படங்கும்-நாயின் ஓலமும் இரும்புச் சப்பாத்துகளின் இரக்கமற்ற உதைப்புகளும் சொல்லித் தருகின்றன எம் மீதான பார்வைகளை.. எதை எதையோ எழுத நினைத்த-என் கரங்கள் அடங்கிப்போயிற்று ஒரு...

ஒற்றைப் பனை

ஒற்றைப் பனை நீ ஒராயிரம் கவிதை நீ. தட்டத்தனியே தவிப்பாய் என் கண்களில் நீரை நிறைக்கிறாய். மண் ஆண்ட உறவுகள் மனம் ஆண்ட வாசனையில் நிறைகிறாய். முன்னோர் எழுதிய அரிச்சுவடியில் நீ. புறாவைத் தூது அனுப்பும் கவியிலும் நீ. என் பாட்டன் எல்லைக்குள் வேலி...

அறிஞரின் மகன் – சிறுகதை

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப்...

எனக்குள் உலகம்..

அமைதியும் மௌனமும் உலகின் அழகிய விழிகளாகலாம். தூய்மையும் சுவாசமும் பிராண வாயுவாகலாம். ஒற்றைக்கல் தீப ஒளி அகல் விளக்காகலாம். இயற்கையின் பச்சையில் இனிமை காணலாம். தெளிந்த நீர் போல் கண்ணாடியாய் மனதைக் காணலாம். எனக்குள் உலகம். எனக்கேன் உலகம். -குமுதினி ரமணன்-

வைகாசி நிலவு- வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை- வே.முல்லைத்தீபன்-!!

(எதிர்வரும் 01.06.2015 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை. மரபுகள்.. சம்பிரதாயங்கள் சிலவற்றைக் காணலாம்) வைகாசி நிலவு ********************* பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய் பத்தாவது இடத்தில் பக்குவமாய் வந்தமர்ந்ததால்.. பத்தாப்பளையென்று நந்திக்கடலோரம் பெயரெடுத்தது -...

துருப்பிடித்த காதல்..

நீ வாழ்வின் வாசலில் நுழையும் போது நான் மரணத்தின் பிடியில் தள்ளப்படுவேன்.. உன் உபசரிப்பு வைப்பகத்தில் நான் ஏகாந்தத்தில் நுழைந்து துருப்பிடித்த என் இதயத்தில் காதல் சிலையொன்றை நிறுவி பூசிப்பேன்.. காதலை திராட்சை மதுவைப்போல் குடிப்பேன்.. அது என்னை பாலைவனத்திற்கு அழைத்துசென்று மேகங்கள் வானில் நீந்துவதைக்காட்டும்.. இரவு இரத்தில் காதல் பட்டுப்போன்ற உதடுகளால் ஒரு நீண்ட ஆழ்ந்த தவிக்கும் முத்தத்தை என் மீது பதித்து விட்டு தன் வலிய கரத்தால் அறைந்து விடுகிறது.. நீண்ட போரின் பின்னரான அமைதி மண்டையோடுகளையும் எலும்புகளையும் விட்டு செல்லவதைப்போல்.. இருந்தும் துன்ப உயிர் தனிமையில் ஆறுதல் கொள்ளவதெல்லாம் துருப்...

வவுனியாவில் வெளியிடப்பட்ட கவிஞர் முல்லைத்தீபன் அவர்களின் “கடவுளிடம் சில கேள்விகள்” கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு : தலவாக்கலை றாஜ்சுகா!!

முல்லை மண்ணிலிருந்து நல்ல கவிதை நூலொன்றினை தழுவும் சந்தர்ப்பம் நம் ரசனைக்கண்களுக்கு கிடைத்துள்ளது. தீபன் என்ற கவிஞர் தன் மண்ணின்மீதுள்ள பற்று அன்பின் காரணமாக 'முல்லைத்தீபன்' என்ற பெயருடன் இலக்கியத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றார். கல்விச்சூழலில் வளர்ந்த...

இன்றைய விஞ்ஞானம்

எதை தேடிச் செல்கிறது இன்றைய விஞ்ஞானம்... மருந்தறியா நோய்களோடு அல்லாடும் மக்கள் தீர்வு தேடி.. ஆணென்றும் பெண்ணென்றும் அறியாமல் வாழ்வோடு போராடும் திருநங்கைகள்.. இன்னும் இன்னும் ஏராளமாய்.. ஆடம்பரமாக பகட்டு வாழ்விற்கு ஆதரவாய்.....

யார் இறைவன்..

  கொண்டவன் மீளாதுயிலினில் அவள் மீளா துயர்தனில் அவன் கொடுத்தவன் ஆறாப்பசிதன்னில்.. அடுப்பேறும் அயல் பாத்திரங்கள் அவள் தொட்டு பளபளக்கும் அவள் வீட்டு பாத்திரங்கள் எப்பொதும் மினுமினுக்கும்.. தேய்த்திடும் பாத்திரத்தில் தேடுவாள் ஒரு வாய் உணவு எதிர் வீட்டு வளவினில் நிலத்தினுள் சோறு.. கடைத்தெரு அவளும் சென்றால் காளையர் துன்பக்கேடு வந்திடு இரண்டு...

என் உயிர் தோழி

எனக்கு உயிரை கொடுத்து உலகை பரிசாக காட்டிய எனது முதல் உயிர் தோழி என் " அன்னை" உலகை பரிசாக கொடுத்த என் அன்னைக்கு அடுத்து என் உள்ளத்தை எப்போதும் குழந்தையாய் வைத்திருப்பவள் நீயடி... நீ என்ன இயற்கையின் அவதாரமோ உன் அருகில் இருந்தால் மட்டும் சோகம் என்ற...

காதல்…… என்னவென்று கூற

மாதம் பன்னிரெண்டும் எனை மதியாது கழிந்தோட, ஈகைப் பண்புள்ள வெறுமையோ நாளும் எனை வாட்ட, நித்திரைப் பொழுதில் நிசப்த்த நாளங்கள், ஒத்திகை நடத்துதே என் விழியோர ஈரங்கள்.. நேசம் வீசி நாடி வந்தேன்,...

ஒரு பயணத்தில்..

ஒரு பயணத்தின் முடிவுகள் முடிவிலியாய்.. பேருந்து பயத்தின் நெருசல்களின் உரசல்களால் யார் யாரோ விட்டு சென்ற வியா்வை நாற்றங்கள் இன்னும் என்னுள் அருவருக்க...... காலைத் தேநீரும் காலவதியாகி களைப்பும் இளைப்பும் சடுதியாய் வந்துவிட தோற்றுப் போன பயணத்தின் வெறுமை தனிமையை நொந்து கொள்ள கரை தொட்டும் கடல் மேவும் அலையாகி நுளைவாயில் நோக்கி நடந்து கொண்டிருந்தேன் அத்தனை வெறுமைகளையும் விழுங்கி .. கொட்டும் வெயிலையும் குளிருட்டி கணப்பொழுதொன்றை கனதியானக்கியது அவன் வருகை உயிரள்ளிப்...