வவுனியா வடக்கில் தடுப்பூசி அட்டை பரிசோதனை : அட்டை இல்லாதோருக்கு அன்டிஜன் சோதனை!!

வவுனியா வடக்கில்..

கோவிட் தடுப்பூசி அட்டை பரிசோதிக்கும் திட்டம் வடக்கில் இதுவரை நடைமுறையில் இல்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்டத்தில் யுத்தம் காரணமாக மோசமாக பாதிப்படைந்த வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மக்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக தமது வாழ்வாதாரத்திற்காக,

விவசாயம், கால் நடைவளர்ப்பு, மொத்த விற்பனை, மரக்கறி, வைத்திய தேவை என வீதிகளில் சென்றோர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வீதிகளில் சென்றோர் வழிமறிக்கப்பட்டு வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வி.திலீபன் தலைமையில் விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கோவிட் தடுப்பூசி அட்டைகள் கொண்டு செல்லாதோர் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தப்பட்டு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எந்தவித முன்னறிவித்தலுமின்றி வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையால் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட துறைகளில் பணியாற்றும் பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி உள்ளதாக பாதிக்கப்பட்ட பலரும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடச் சென்ற பெண் மருத்துவர் : அடுத்த நாள் சடலமாக வீடு திரும்பிய பரிதாபம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் மகளை கோவா அனுப்பிய நிலையில் அடுத்த நாள் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மஞ்சூரியா மாவட்டத்தை சேர்ந்தவர் பணிக்குமார். இவரது மனைவி ஜெயலலிதா. இருவரும் பிரபல மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரே மகள் நேஹா (24). கடந்த ஆண்டு நேஹா டாக்டருக்கு படித்து முடித்து மேற்படிப்புக்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்தநாளை நண்பர்களுடன் கோவாவில் கொண்டாட நேஹா ஆசைப்பட்டுள்ளார்.

பெற்றோர்கள் உடனே அவரது ஆசையை நிறைவேற்ற நண்பர்கள் மற்றும் சில உறவினர்களுடன் மகளை கோவாவுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவரது பிறந்தநாள் நள்ளிரவில் நண்பர்களுடன் ஜாலியாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

பின்னர் அன்று இரவு மகிழ்ச்சியுடன் உறங்க சென்ற நேஹா காலையில் படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். நேஹாவுக்கு அதிகாலையில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேஹாவின் உடல் கோவாவில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. செல்லமாக வளர்த்த ஒரே மகள் இறந்துவிட்டதாக வந்த செய்தி பெற்றோர்களை நிலைகுலைய செய்தது.

ஏரிக்கரையில் கிடந்த 21 வயது இளம்பெண்ணின் சடலம் : பொலிசார் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் ஏரிக்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள நரசமங்கலம் காலனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் ஜெயஸ்ரீ (21).

இவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந் திகதி வேலைக்குச் சென்ற ஜெயஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதற்கிடையே நேற்று முன்தினம் நரசமங்கலம் பகுதியிலுள்ள ஏரிக்கரையில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

அப்போது அங்கு அவர்கள் சென்று பார்த்த போது அங்குள்ள முட்செடியில் துப்பட்டாவால் ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜெயஸ்ரீயின் உடலை கண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

பின்னர் பொலிசார் இளம்பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெயஸ்ரீயின் பெற்றோர், தங்கள் மகள் மரணத்தில் அவர் காதலித்துவந்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

அதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இளவரசனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த மப்பேடு பொலிசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.

அதேபோல், இளம்பெண்ணின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்ததோடு, வேலைக்குச் செல்லும்போது அவர் எடுத்துச் சென்ற செல்போன், பணப்பை உள்ளிட்ட பொருள்கள் சம்பவ இடத்தில் இல்லாததும் பொலிசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது, இதையடுத்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையில், பொலிசார் தன்னைத் தேடி வரும் தகவலறிந்து, இளவரசன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், உயிரிழந்த ஜெயஸ்ரீயின் தந்தை சுந்தரமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில், தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருப்பதாகத் தாங்கள் சந்தேகிப்பதாகப் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காதல் விவகாரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் இருந்து அமுலுக்கு வந்துள்ள நடைமுறை!!

நள்ளிரவில் இருந்து..

நள்ளிரவு 12.00 மணி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், விமானத்தில் ஏறும் முன் மேற்கொண்ட கோவிட்-19 தொற்று தொடர்பான பி.சி.ஆர். முடிவுகளுக்கமைய, மீண்டும் இலங்கையில் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளாது விமான நிலையத்திலிருந்து வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக, கோவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் முழுமையாக பெற்ற பயணிகள் இலங்கைக வருவதற்கு முன்னர் 72 மணிநேரங்களுக்குள் மேற்கொள்ளும் பி.சி.ஆர். சோதனைகளில் கொவிட் தொற்றுக்கு எதிர் முடிவினை கொண்டிருக்க வேண்டும்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், இது தொடர்பான தொழில்நுட்பக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முழுமையாக தடுப்பூசி போடாத வெளிநாட்டவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டலுக்கு, தனிமைப்படுத்தல் உயிர்க்குமிழி(Bio Bubble)பாதுகாப்பின் அடிப்படையில், செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

அங்கு வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

எனினும், இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் அல்லது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் அவர்களுக்கு தொற்று ஏற்படாவிட்டால்,

அவர்களை வீட்டிற்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும், அவர்களுக்கு 12 ஆவது நாளில் மீண்டும் மேற்கொள்ளும் பி.சி.ஆர். சோதனையில் அவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை சமூகத்துடன் இணைக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டு தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாதவர்கள், அரசாங்க தனிமைப்படுத்தல் மையங்களில் அல்லது அவர்கள் விரும்பும் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டிற்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன் கட்டாயம் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அவர்களது சோதனை முடிவுகளின் அடிப்படையில், அவர்கள் தொற்றாளர்களாக இல்லையெனின் மாத்திரம் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வவுனியா பிரதேச செயலகம் முன்பாக பட்டதாரி பயிலுனர்கள் போராட்டம்!!

பட்டதாரி பயிலுனர்கள்..

பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி காலத்தை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு வருட பயிற்சி முடித்த பட்டதாரி பயிற்சியாளர்கள் இருக்கும் இடங்களில் தொடர்ந்து பயிற்சி அளிக்கவும் அந்த காலத்திற்கான பயிற்சி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா பிரதேச செயலகம் முன்பாக இன்று (29.09) மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குறுதியளித்தபடி 53000 பட்டதாரி பயிலுனர்களையும் செப்டம்பர் 3ம் திகதியிட்டு விரைவில் நியமனமாக்கு எனும் தொனிப்பொருளில் இக் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் 20க்கு மேற்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுகிறது : வெளியான அதிரடி அறிவிப்பு!!

ஊரடங்கு..

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளதாக,

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் 21ம் திகதி (21.08.2021) முதல் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் (01.10.2021) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் வைரஸ் என்ற கெட்டகாலம் முடிவுக்கு வந்துள்ளது : மகிழ்ச்சியான தகவலை அறிவித்த பேராசிரியர்!!

கொவிட் வைரஸ்..

கோவிட் வைரஸ் தொற்று நோய் என்ற கெட்டகாலம் முடிவுக்கு வந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கோவிட் வைரஸ் தனது இளம் பருவத்தை கடந்துள்ளது எனவும் இதனடிப்படையில் தொற்று நோய் நிலைமை படிப்படியாக குறையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மத்திய நிலையத்திற்கு ஆலோசனை வழங்கும் ஆய்வாளர்கள் சிலர் மேற்கொண்ட பரிசோதனையை மேற்கோள்காட்டி ஜீவந்தர இதனை கூறியுள்ளார். இந்த பரிசோதனைக்கு அமைய கோவிட் தடுப்பு தடுப்பூசி மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

இதனடிப்படையில், உலக மக்கள் அனைவரும் தமதுபொறுப்பு எனக் கருதி, தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியமானது எனவும் ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முடக்க நிலை தளர்த்தப்படுமா? குழப்பத்தில் அரசாங்கம்!!

முடக்க நிலை தளர்த்தப்படுமா?

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் குழப்ப நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்து 6 வாரங்களாக முடக்கப்பட்டுள்ள நாட்டை எதிர்வரும் முதலாம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் சில தினங்களுக்கு இது குறித்த இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திட்டமிட்டபடி தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுமாயின் அதன் பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவையை பராமரித்துச் செல்லும் முறையை தயாரிப்பதற்காக கொவிட் -19 செயலணியினால் குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் நேற்றைய கொரோனா தொற்றாளர் நிலவரம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (28.09) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (28.09) ஒருவர் மரணமடைந்துள்ளனர். நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 64) ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

மரணமடைந்தவரின் சடலத்தை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

கனடாவில் பெண்ணும் பெண்ணும் தாலிகட்டி திருமணம் செய்த வினோதம்!!

கனடாவில்..

இந்து திருமணச் சடங்குகளுடன் இரண்டு பெண்கள் திருமணம் முடித்துக்கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இரண்டு பெண்களும் தமது சுற்றத்தார் முன்னிலையில், அம்மி மித்து, அருந்ததி பார்த்து, தாலிகட்டிக்கொண்ட அந்தக் காட்சி ஊடகங்களில் வெளியாகி சாதகமாகவும், எதிரானதுமான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தச் சம்பவம் கனடா நாட்டின் Grafton பகுதியில் கடந்த 26ம் திகதி நடந்ததாக தெரியவருகின்றது.

அணிந்திருந்த ஆடையே குழந்தைக்கு எமனான சோகம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்தி!!

தெய்வவெனுசியா..

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வேல்முருகன். இவருக்கு மதிவதனா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.

இதில் 6 வயதான மூத்தமகள் தெய்வவெனுசியா கடந்த 21ந் தேதி காலை வீட்டின் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் நான்கு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த கோவிலுக்கு அண்மையில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பதால் தினமும் அங்கு விளக்கேற்றி வைத்துள்ளனர். இந்த நிலையில் தெய்வவெனுசியா வெளியே நின்று சாமி கும்பிட்டுவிட்டு,

திருநீறு பூசுவதற்காக கோயில் உள்ளே சென்றபோது, அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீ சிறுமியின் ஆடையின் மீது பிடிக்க தொடங்கி மள மளவென உடல் முழுவதும் தீ பரவி உள்ளது. அங்கிருந்து உடல் முழுவதும் எரிந்த நெருப்போடு அலறியடித்து வீட்டிற்கு சிறுமி ஓடிச் சென்றுள்ளார்.

சிறுமி அணிந்திருந்த ‘கவுன்’, பாலியஸ்டர் துணியிலானது என்பதாலும் இறுக்கமான எளாஸ்டிக் உடன் காணப்பட்ட அந்த ஆடை தீயில் உருகி உடலில் ஒட்டிக் கொண்டதால் தீயை அணைக்க இயலாததால் தாயார் மதிவதனா என்ன செய்வது என்று தெரியாமல் தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தெய்வ வெனுசியாவை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிறுமி பரிதாமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்கும் போது மிகுந்த கவனத்துடன் கண்காணிக்க வேண்டியது அவசியம். எளிதில் தீப்பற்றக்கூடிய பாலியஸ்டர் துணிகளை அணிவதை தவிர்த்திருக்கலாம் என்றும் மேலும் உடலில் தீப்பிடித்தால் தண்ணீரால் அணைப்பது மிகவும் ஆபத்தாக மாற்றிவிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த காதல் மனைவிக்காக கணவன் செய்த நெகிழ வைக்கும் செயல்!!

இந்தியா…

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மனைவிக்காக அவரது கணவர் கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வரும் நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் உள்ள சம்ப்கேடா கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண சிங் ரத்தோர். இவரது மனைவி கீதா பாய். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் போது அவரது மனைவி கீதா பாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மனைவியின் திடீர் பிரிவை ஏற்க முடியாமல் நாராயண சிங் ரத்தோர் தவித்து வந்துள்ளார்.

இதையடுத்து அவரது மனைவியின் உருவிலான சிலை ஒன்றை வடிவமைத்து கோவில் ஒன்றை கட்டி தினந்தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.

கோவில் கட்டியதால் தன்னை சுற்றி எப்பவும் கீதா பாய் இருப்பது போல உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த உலகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் மத்தியில் இந்த தம்பதி ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கி வருகின்றனர்.

கதறி அழுதபடி ரயில் முன் நின்ற இளம்பெண் : அடுத்த சில நொடிகளில் நடந்த திகிலூட்டும் காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் மின்னல் வேகத்தில் வந்த ரயில் முன் நின்ற இளம்பெண்ணை கடைசி நொடியில் ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வீடியோவில், ரயில் வரவிருப்பதால் சாலையின் இருபுறமும் தண்டவாளத்தை கடப்பதை தடுக்க வேலி போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தண்டவாளத்தை கடக்க காத்திருந்த ஆட்டோவில் இருந்த நபர் ஒருவர் தனது போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது, வேலிக்கு அருகில் முகத்தை துப்பட்டாவில் முகத்தை மூடிய படி நின்றுக்கொண்டிருந்த இளம்பெண், ரயில் அருகே வந்துவிட்டதை அறிந்து திடீரென வேலியை கடந்து தண்டவாளத்தில் சென்று நிற்கிறார்.

இளம்பெண் வேலியை கடந்து செல்வதை பார்த்த அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர், உடனே அப்பெண் பின்னாலே சென்று வலுக்கட்டயமாக இழுத்து வர, மின்னல் வேகத்தில் ரயில் கடந்து செல்கிறது.

காப்பாற்றப்பட்ட இளம்பெண் கதறி அழ சம்பவயிடத்தில் கூடிய பெண்கள் அவருக்கு ஆறுதல் செல்கின்றனர். வேலை இல்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு அப்பெண் தண்டவாளத்தில் சென்று நின்றதாக கூறப்படுகிறது.

தக்க சமயத்தில் இளம்பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை பாராட்டி வரும் பலர், பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வல்ல என வலியுறுத்தியுள்ளனர்.

நள்ளிரவில் போன் பேசி வந்த மனைவி : தட்டிக் கேட்ட கணவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் இரவு முழுவதும் செல்போனில் பேசியதை க.ண்டித்த கணவரை க.த்தியால் கு.த்தி கொ.லை செ.ய்த இளம்பெண்ணை பொலிஸ் அதிரடியாக கை.து செ.ய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவர் சொந்தமாக விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி இலக்கியா(26).

இலக்கியா கல்லூரியில் படிக்கும் போது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை.

இதனால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பெற்றோர் எ.திர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி த.கராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் இலக்கியா நள்ளிரவில் நீண்ட நேரம் சிரித்து கொண்டு போனில் பேசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பாலமுருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தனது மனைவியை க.ண்டித்துள்ளார்.

இதையடுத்து இருவருக்குள் க.டுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆ.த்திரம் அடைந்த இலக்கியா க.த்தியை எடுத்து பாலமுருகனின் மா.ர்பில் ச.ரமாரியாக கு.த்தி கொ.லை செ.ய்துள்ளார்.

அவரின் அ.லறல் ச.த்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் ர.த்.த வெ.ள்ளத்தில் மி.தந்து கி.டந்த பாலமுருகனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பொலிஸ் இலக்கியா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் தடுப்பூசி ஏற்றுவதில் ஆர்வமின்றி இருக்கும் 20 – 30 வயதிற்கு உட்பட்டவர்கள்!!

தடுப்பூசி..

வவுனியாவில் 20 – 30 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் சினோபாம் தடுப்பூசி பெறுவதில் ஆர்வமற்ற தன்மை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் தடுப்பூசிகளை விரைவுபடுத்தி தற்போது வழங்கி வருகின்றது.

அதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்திலும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

அதிலும் குறிப்பாக 20 – 30 வயதிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் பலர் தடுப்பூசி பெறுவதில் ஆர்வம் காட்டாத தன்மை காணப்படுவதுடன், சினோபாம் தடுப்பூசி அல்லாது வேறு தடுப்பூசி வருமா என வினவுவதையும் அவதானிக்க முடிகிறது.

20, 21 வயது இளைஞர், யுவதிகள் தடுப்பூசிகளைப் பெற வருகின்ற போதும் 22- 29 வயதிற்குட்பட்டோர் தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தடுப்பூசியைப் பெறுவது மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

எனவே, காலத்தை கடத்தாது கிடைக்கும் தடுப்பூசியைப் பெற்று தாமும், தமது சமூகமும் கொரோனாவில் தொற்றில் இருந்து விடுபட இளைஞர்கள், யுவதிகள் முன்வர வேண்டும்.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற இறப்புக்களில் தடுப்பூசி பெறாதவர்களே அதிகமான மரணித்துள்ளார்கள். இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்ற எவரும் இதுவரை மரணிக்கவில்லை.

இதனால் தேவையற்ற வதந்திகள், குழப்பங்களை தவிர்த்து தடுப்பூசிகளை பெறுவதற்கு உங்களுக்குரிய நிலையங்களுக்கு 20 -30 வயதிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

புதிய நடைமுறை..

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருர் இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தியிருந்தால் விலக்களிப்பு வழங்கப்படவுள்ளது.

நாட்டுக்கு வருவதற்கு முன்னதாக செய்துக்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனையின்றி வெளியேற அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதுவரை வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் வெளியேற அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.