வவுனியாவில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (28.09) காலை வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கைக்கு மிகவும் நுட்பமான முறையில் கடத்தப்பட்ட பெருந்தொகையான தங்கத்தினை சுங்க பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். 220 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 16 கிலோ தங்கம் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கொண்டு வரப்பட்ட வாகன உதிரிபாகங்கள் மற்றும் கோப்பி தயாரிக்கும் இயந்திரம் என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட தங்கம் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுங்கப்பிரிவின் ஊடகப்பேச்சாளர் சுதத்த சில்வா கருத்து வெளியிடுகையில்,“இந்த பொருட்களின் உட்புறத்தின் தொழில்நுட்பப் பகுதிகள் தங்கத்தால் செய்யப்பட்டவை எனவும் அவை அதனுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், சுங்க அதிகாரிகள் இந்த கடத்தல் முயற்சியை தடுத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு கூறியுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை திறந்தவுடன் அரச மற்றும் தனியார் ஊழியர்களை சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு பணிக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலாம் திகதி முதல் தனியார் துறை ஊழியர்களை வழக்கம் போல் அழைப்பதை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நிதி அமைச்சில் இன்று மதியம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சகங்களின் செயலாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பேருந்து சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அதன்படி, முதலாம் திகதி முதல் காலை 9 மணிக்கு அரசு ஊழியர்களை அழைக்கவும், காலை 10 மணிக்கு தனியார் துறை ஊழியர்களை அழைக்க அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பயணிக்ககூடிய வகையில், சுகாதார அமைப்புக்கு ஏற்ப ரயில் மற்றும் பேருந்து சேவைகளை சமமாக இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் விரைவில் வெளியிடப்படும்.
இதனிடையே, நாட்டின் முழுமையாக திறப்பது குறித்து சுகாதார அமைச்சகம் விரைவில் ஒரு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர்களில் வரி செலுத்த ஒப்புக்கொள்ளும் நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதற்கான யோசனையை தங்கள் சங்கமே முன்வைத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கு அமெரிக்க டொலரில் வரி செலுத்த ஒப்புக்கொண்டவர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் நேற்று தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் அந்த யோசனை ஆராயப்படும் என்ற போதிலும் அது செயற்படுத்தப்படாதென இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரென்சிகே தெரிவித்துள்ளார்.
மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பித்த பின்னர் வாகனத்தின் விலை 60 – 70 வீதம் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை நீக்குவதா அல்லது மேலும் நீடிப்பதா என்பது சம்பந்தமான இறுதி தீர்மானம் எதிர்வரும் 30ம் திகதி எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் தற்போது கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை தெளிவாக காணமுடிகின்றது.
விசேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய கோவிட் தடுப்பு செயலணிக்குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பாக மிகவும் பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சர் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (27.09) காலை வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (26.09) 2 பேர் மரணமடைந்துள்ளனர். பட்டானிச்சூர் பகுதியில் (வயது 55) ஆண் ஒருவரும், உக்குளாங்குளம் பகுதியில் (வயது 85) ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.
மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டை திறப்பது குறித்த தீர்மானம் இம்மாதம் 30ஆம் திகதியே எடுக்கப்படுமென இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
இதன்போது சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாார். அத்துடன் நாடு திறக்கப்பட்டதன் பின்னர் சுகாதார விதிமுறைகளை முறையாக பேணுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் (21.08) அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஒக்டோபர் 1ம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளபோதும், இறுதி முடிவு வரும் 30 ம் திகதியே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கோரிக்கைக்கமைய அந்தந்த துறைகளுக்காக திட்டங்களை குறித்த நிறுவனங்களினால் இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாட்டை திறப்பதற்கு தேவையான நடைமுறைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
சுகாதார பரிந்துரைகள் அதற்கமைய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டை திறந்த பின்னர் மக்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பிலும் அனைத்தும் வழிக்காட்டல்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று(26.09.2021) காலை வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று வழமையை விட சற்று குறைவடைந்துள்ள நிலையில் நிலையில் மேலும் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியால் 600 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை மத்திய வங்கி அதன் இறக்குமதி கட்டுப்பாடுகளை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய கையடக்க தொலைபேசி உட்பட 623 வீட்டு உபயோக பொருட்களை இறக்குமதி செய்யும் போது வங்கியின் வைப்பு வரம்பை இரட்டிப்பாக்கி, பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தமையே இதற்குக் காரணமாகும். எனினும், விசேடமாக கடந்த காலங்களின் ஆரம்பத்தில் இருந்து நாட்டிற்கு வேகமாக அந்நிய செலாவணியை கொண்டுவந்த தொழில்நுட்ப துறைகள் இந்த அறிவிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்தகைய கட்டுப்பாடுகள் கொவிட் தொற்றிற்கு பின்னரான பொருளாதார மீட்பு திட்டத்திற்கு பொருந்தாதென ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் என்பது அதிவேகமாக வளர்ந்துள்ள ஒரு துறையாகும். இந்த ஆண்டு 1.7 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை எட்டியுள்ளது.
இப்போது மத்திய வங்கியினால் முக்கிய தயாரிப்புகளுக்கு 100 சதவீத கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இரவு நேரங்களில் 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை,
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையும் அமுலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பான சுகாதார விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அரச தரப்பை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு அந்நிய செலாவணி வருவதை கருத்தில் கொண்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை பரிசீலிக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வரும் அந்நிய செலாவணியை கருத்திற் கொண்டு வாகன இறக்குமதி மாத்திரமின்றி தற்போது இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்வரும் காலங்களில் நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட் இணையத்தள கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை தற்போது வெற்றிகரமாக கொவிட் தடுப்பூசி வழங்கி வருவதனால் விரைவில் சுற்றுலா துறையை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.
இறக்குமதிக்கு முக்கிய காரணமாக இருக்கும் தொழிற்சாலைகளை வழமையை போன்று நடத்தி செல்ல முடிந்தால் நாட்டில் மீண்டும் அந்நிய செலாவணி அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா வர்த்தக நிலையங்களில் பணிபுரிவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்று இருக்க வேண்டும். இதுவரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களிற்கு (20 வயதுக்கு மேற்பட்டவர்கள்),
நாளை மறுதினம் (28.09.2021) செவ்வாய்க்கிழமை மன்னார் வீதியிலுள்ள காமினி மகா வித்தியாலயத்தில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் வவுனியா வர்த்தகர் சங்கத்தை தொடர்பு கொண்டு (தொடர்புகளிற்கு 0766628386) உங்களது விபரங்களை முன்னர் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் இரவு வேளையில் அதனை தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிய வருகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய திருமண நிகழ்வுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. குறைந்த அளவிலான மக்கள் பங்களிப்புடன் வீடுகளினுள் மாத்திரம் திருமண நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மரண வீடுகளுக்கும், மக்கள் ஒன்றுக்கூடும் பொது நிகழ்வுகள் பலவற்றிற்கும் சுகாதார வழிக்காட்டல்கள் ஊடாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கட்டுப்பாடுகளின் கீழ் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல நேற்று கூறியிருந்தார்.
எப்படியிருப்பினும் இது தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி தீர்மானம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு திறக்கப்படும் போதிலும் சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய மக்கள் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி மனோகரன். விவசாயியான இவருக்கு, சொந்தமான நிலம் உள்ளது.
அந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு TVS Credit Service என்னும் தனியார் நிறுவனத்தில் ரூ. 2,11,734/- கடன் பெற்றுள்ளார் மனோகரன்.
அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவருடைய ஜாமினில் ராமகிருஷ்ணன் என்பவரது பெயருக்கு கடன் பெறப்பட்டுள்ளது. அந்த கடன் தொகையில் ரூ. 1,68,354- த்தை மனோகரன் திருப்பி செலுத்தியுள்ளார். மீதி கடன் தொகையான ரூ.43,380/- நிலுவையில் உள்ளது.
இதை வசூல் செய்ய அந்த ஃபைனாஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மனோகரன் வீட்டிற்கும், ராமகிருஷ்ணன் வீட்டிற்கும் சென்று மி.ரட்டி உள்ளனர். பதில் சொல்ல இயலாமல் நிறுவனத்திற்கு மனோகரனே நேரில் சென்று அவகாசம் தர கெஞ்சியுள்ளார்.
வீட்டில் உள்ளவர்களையும் அந்த ஊழியர்கள் மி.ர.ட்டியதால், இதுகுறித்து மனோகரன் காவல் நிலையத்திற்கும் சென்று பு.கா.ர் அளித்துள்ளார் மனோகரன்.
காவல் நிலையத்தில் பு.கா.ர் பதிவு செ.ய்யப்பட்டது. ஆனால் வி.சாரணை ஏதும் செ.ய்யாததால் மீண்டும் நிறுவனத்திற்கு சென்று மீண்டும் அவகாசம் தரக் கோரி கேட்டிருக்கிறார் மனோகரன்.
இந்த நிலையில், அவர் ம.னைவிக்கும் அவரது ஒரு வயது கு.ழந்தைக்கும் உ.டல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதுனால் மனோகரனால் மேலும் கடன் தவணைகளை செலுத்த முடியாமல் போயுள்ளது.
கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக தவணைத் தொகை செலுத்தாத நிலையில், கடனை உடனடியாக செலுத்தகோரி தனியார் ஃபைனான்ஸ் ஊழியர்கள் நேரிலும், தொலைபேசியிலும் அ.டிக்கடி நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
ஒருகட்டத்தில் கடனை திருப்பி செலுத்தக் கோரி மனோகரனை அவர் வீட்டு வாசலில் வைத்து ஊழியர்கள் கிராம மக்கள் முன்னிலையில் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அவரை அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ம.னமுடைந்து வேதனையுடன் இருந்த விவசாயி மனோகரன் ஃபைனான்ஸ் நிறுவன வாசலில் பூச்சி மருந்தை கு.டித்து த.ற்.கொ.லைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து காஞ்சிபுரம் அரசு ம.ருத்துவக் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். அங்கு தீ.விர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உ.யிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து விவசாயி மனோகரன் உயிரிழப்புக்கு காரணமான தனியார் ஃபைனான்ஸ் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மனோகரின் உறவினர்களும் வாலாஜாபாத் காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் ஃபைனான்ஸ் ஊழியர்கள் அமர்நாத், கிருஷ்ணா, சரத்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பாணிபூரி வியாபாரி பெரியசாமியின் மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் சத்தியமூர்த்திக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற திவ்யாவை, செல்ஃபோனில் பேசி சமாதானப்படுத்தி கோவிலுக்குச் செல்லலாம் என சத்தியமூர்த்தி அழைத்துள்ளான். அதை நம்பி அதிகாலை 4 மணிக்கு, பட்டுப்புடவை கட்டிக் கொண்டு, சத்தியமூர்த்தியுடன் திவ்யா சென்றுள்ளார்.
கணவனுடன் அவ்வப்போது ச.ண்.டையிட்டு சாப்பிடாமல் கிடந்த திவ்யாவுக்கு அல்சர் இருந்த நிலையில், கோவிலுக்கு செல்வதால் சாப்பிட நேரமாகும் எனக் கூறி மாத்திரை ஒன்றை சத்தியமூர்த்தி கொடுத்துள்ளான்.
அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் திவ்யா ம.யக்கமடைந்துள்ளார். இதன் பிறகு, எலவம்பட்டி பகுதியிலுள்ள திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, காலி நிலத்தில் திவ்யாவை கிடத்தி பெட்ரோலை ஊற்றி உயிரோடு தீ வைத்துள்ளான்.
அ.லறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, தீயில் கருகி துடித்த நிலையில் திவ்யா கிடந்துள்ளார். 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து, திருப்பத்தூர் அ.ரசு ம.ருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
உ.யிருக்கு போ.ராடும் நிலையிலும், நடந்த விவரங்களை திவ்யா போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதால்,
தனக்குப் பிறகு மனைவியை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்பதால் தீ வைத்து எ.ரித்ததாகவும், தானும் சாகப்போவதாகவும் எனவே உ.டலை தேட வேண்டாம் என்றும் சத்தியமூர்த்தி வீடியோ வெளியிட்டுள்ளான்.
சத்தியமூர்த்தி கூறுவது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என கூறும் போ.லீசார், செல்போன் சிக்னல் மூலம் அவன் பதுங்கியுள்ள இடத்தை ட்ரேஸ் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.