ஓடும் ரயிலில் கண்ட காட்சியால் அதிர்ச்சியில் உயிரிழந்த பெண்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஓடும் இரயிலில் தந்தை அ.டிவாங்கும் காட்சியை கண்டு அதிர்ச்சியில் கீழே சுருண்டு விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி ராஜன். இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு 3 வயதில் உமேஸ்பவின் என்கிற மகன் உள்ளார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த தனது தங்கையை மறுவீட்டுக்கு அழைத்து வருவதற்காக மகேஸ்வரி தனது தந்தை அண்ணாமலை, தாய் கல்யாணி ஆகியோருடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து நேற்று மாலை 4 மணி அளவில் திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தார்.

அந்த ரயில் செங்கல்பட்டு வந்ததும், அந்த பெட்டியில் 4 பேர் ஏறினர். அதில் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட மேல் இருக்கையில் அமராமல், மகேஸ்வரி தந்தை அண்ணாமலை இருந்த கீழ் இருக்கைக்கு அருகில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில் அந்த ரயில் விழுப்புரம் வந்ததும், அந்த மேல் இருக்கைக்கு அவருடன் வந்த 3 பேரில் ஒருவர் சென்று படுத்தார். இதை பார்த்த அண்ணாமலை உங்கள் இருக்கையில் உங்களுடன் வந்த நபர் ஏறி விட்டார். ஆகவே எனது இருக்கையை விட்டு எழுந்து செல்லுங்கள். நாங்கள் சாப்பிட போகிறோம் என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த நபர் செல்ல முடியாது என்று அண்ணாமலையிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதை பார்த்த மகேஸ்வரி, அந்த நபரை தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது அந்த நபர், அண்ணாமலையை தாக்க தொடங்கியதாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அண்ணாமலை, அவரது தாய் கல்யாணி எழுப்பினர். ஆனால் அவர் மூச்சு, பேச்சு இல்லாமல் இருந்தார்.

இதையடுத்து இரயில் டிக்கெட் பரிசோதகர் உதவியுடன் ஏற்கனவே தயாராக இருந்த ஆம்புலன்சில் மகேஸ்வரியை ஏற்றி சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,மகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட அண்ணாமலை, இவரது மனைவி கல்யாணி ஆகிய 2 பேரும் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்று வாரங்களாக பால்மாவுக்கு தட்டுப்பாடு : பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள்!!

பால்மா..

சந்தையில் மூன்று வாரங்களாக காணப்படும் பால்மா தட்டுப்பாடு காரணமாக நுகர்வோரான மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். பால்மா விலைகளை அதிகரிக்கக்கோரி இறக்குமதி நிறுவனங்கள் பால்மாவை சந்தைப்படுத்தாமல் இருப்பது இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம்.

குறிப்பாக குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் இதனால், பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பால்மா சந்தைக்கு வந்தாலும் வர்த்தகர்கள் அவற்றை விற்பனை செய்யும் போது விதிக்கும் நிபந்தனைகள் காரணமாக மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகின்றது.

பால்மாவை தவிர சில பிரதேசங்களில் சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவில் பெற்றோரை இழந்து உறவினர்களுடன் வளர்ந்த மாணவன் பரீட்சையில் படைத்த சாதனை!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சையில் சித்திப்பெற்று மாணவரொருவர் தனது சாதனையினை நிலை நாட்டியுள்ளார்.

தலவாக்கலை – நுவரெலியா பகுதியினை சேர்ந்த யூட் நிலக்சன் என்ற மாணவன் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நிலையில் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆரோவனம் சிறுவர் விடுதியில் கல்வியை தொடர்ந்த மாணவன் அதன் பின்னர் முல்லைத்தீவு அருட்தந்தை றொபின்சன் அடிகளாரின் கற்பித்தலின் கீழ் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர் விடுதியில் நின்று கல்வி கற்று வந்துள்ளார்.

ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் எந்த தொழில்நுட்ப தொலைத்தொடர்பு சாதனங்களும் அற்ற நிலையில் நிகழ்நிலை கல்வி கூட கற்காத நிலையில் 4 ஏ, 2பி, 2சி என சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளார்.

எதிர்காலத்தில் உயர்தரத்தில் கலைபிரிவினை தெரிவு செய்து பல்கலைக்கழகம் சென்று பல கல்விமான்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் தான் கல்வி கற்று வருவதாகவும் குறித்த மாணவன் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார்.

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 6 பேர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 06 மரணங்கள் நேற்று (26.09.2021) பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 06 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் ஆண் ஒருவரும் (வயது 80), கன்னாட்டி கணேசபுரத்தில் ஆண் ஒருவரும் (வயது 77), கந்தசாமி கோவில் வீதியில் பெண் ஒருவரும் (வயது 91), தேக்கவத்தை பகுதியில் பெண் ஒருவரும் (வயது 74), தோணிக்கல் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 83), சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 58) கொரோனா தொற்றால் மரணித்தவர்களாவர்.

இந்நிலையில் மரணித்த 6 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட 88 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்!!

வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 88 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் மூத்த பிரஜைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு சுகாதாரப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 70 வீதமானவர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசிகளையும், 88 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

ஏனையவர்களும் அடுத்து வரும் நாட்களில் தடுப்பூசி ஏற்றப்படும் இடங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாராப் பிரிவினர் கோரியுள்ளனர்.

அத்துடன், 30 – 59 வயதிற்கிடைப்பட்ட 51 வீதமானவர்கள் ஒரு தடுப்பூசியையும், 72 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர் எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மிகவும் பின்தங்கிய பாடசாலையான அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் இரண்டாம் இடம்பெற்று வரலாற்று சாதனை!!

அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம்..

வவுனியா தெற்கு வலயத்தில் அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தில் 36 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன், 90 வீத சித்தியை பெற்று வலயத்தில் இரண்டாம் நிலை பெற்று சாதனை படைத்துள்ளது.

வவுனியா தெற்கு வயலத்தின் செட்டிகுளம் கோட்டத்தில் அமைந்துள்ள கஸ்ரப் பிரதேச பாடசாலையான அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தில் இம்முறை 40 பேர் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அதில் 36 மாணவர்கள் கணித பாடாத்துடன் கூடியதாக சித்தி பெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

வவுனியா தெற்கு வலயத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சித்தி வீதத்தில் முதல் நிலையில் உள்ளதுடன், பினதங்கிய பாடசாலையான அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் அதிபர் பி.கேமலதன் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையூடாக 90 வீத சித்தியைப் பெற்று வலயத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளது.

அத்துடன், பின்தங்கிய குறித்த பாடசாலையானது கத்தோலிக்கம், தமிழ், புவியியல், சித்திரம் உள்ளிட்ட 5 பாடங்களில் 100 வீத சித்தியையும், சைவசமயம், விஞ்ஞானம், குடியுரிமைக்கல்வி, சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய பாடங்களிர் 90 வீதத்திற்கு மேற்பட்ட சித்தி வீதத்தையும் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் விபத்திற்கு பின் தப்பிச் சென்ற முச்சக்கரவண்டி வாய்க்காலுக்குள் விழுந்தது : சாரதி தப்பியோட்டம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி குளத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டி வாய்க்காலுக்குள் விழுந்துள்ள நிலையில் அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்று (25.09.2021 நண்பகல் கிளிநொச்சி குளத்திற்கு அருகில் உள்ள ஐந்தடிவான் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி குளத்திற்கு அருகில் ஐந்தடிவான் பகுதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த யுவதி ஒருவரை முச்சக்கரவண்டியில் சென்றவர் மோதியுள்ளார். இதன்போது யுவதி வீதியில் விழுந்துள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாத முச்சக்கரவண்டி சாரதி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து வீதியில் பயணித்தவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டியை பிடிப்பதற்கு துரத்திய போது வேகமாக சென்ற முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் விழுந்துள்ளது.

இருப்பினும் சாரதி முச்சக்கரவண்டியையும் விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் ஊரடங்கை மீறி திறந்திருந்த மேலும் 8 வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தல்!!

வர்த்தக நிலையங்கள்..

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக வவுனியாவில் மேலும் 8 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

கோவிட் பரவல் வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது செயற்படல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியாவில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றினை சுகாதாரப் பிரிவினர் இன்று (25.09) முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை ஒன்று கூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டட வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

அந்தவகையில் தர்மலிங்கம் வீதியில் மூன்று புடவை கடைகள், ஹொரவப்பொத்தானை வீதியில் மரக்கறி கடை ஒன்றும், கந்தசாமி கோவில் வீதியில் காலணிக்கடை ஒன்றும், பழைய பேரூந்து நிலையத்தில் தொலைபேசி விற்பனை நிலையம் இரண்டும், கண்டி வீதியில் பிரபல தனியார் இலத்திரனியல் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றும் என 8 வர்த்தக நிலையங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டன.

அத்துடன், நேற்றும் (24.09) ஹொரவப்பொத்தானை வீதியில் இறைச்சி விற்பனை நிலையம், தளபாட விற்பனை நிலையம், சந்தை உள்வட்ட வீதியில் பல்பொருள் விற்பனை நிலையம், பசார் வீதியில் விற்பனை நிலையம் ஒன்று என 4 வியாபார நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 6 மாணவர்கள் 9A பெறுபேறு : 84வீதமான மாணவர்கள் சித்தி!!

6 மாணவர்கள் 9A பெறுபேறு..

2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் (23.09.2021) வெளியாகிய நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 84 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் லோகேஸ்வரன் தெரிவித்தார்.

230 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 193 மாணவர்கள் (84வீதம்) மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி மூல பரிட்சையில் நான்கு மாணவர்கள் 9A சித்திகளையும் ஆங்கில மொழி மூல பரிட்சையில் இரண்டு மாணவர்கள் 9A சித்திகளையும் பெற்றுள்ளதுடன் அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் வெளியாகாத நிலையில் ஒன்பது மாணவர்கள் 8A சித்தியுடன் காணப்படுகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இன்று மாலை (25.09.2021) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில், மோட்டர் சைக்கிள் பயணித்த இளைஞர்கள் இருவரும், துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாடு திறந்த பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும்? இராணுவத் தளபதி விளக்கம்!!

இராணுவத் தளபதி..

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் புத்தாண்டு காலப்பகுதியில் செயற்பட்டதனை போன்று செயற்பட வேண்டாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் கொவிட் அலை மீண்டும் ஏற்படுவதனை தவிர்க்க முடியாமல் போய்விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாகும் வரை சுகாதார சட்டத்தை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் நாட்டை திறப்பது தொடர்பில் தனக்கு சில ஆலோசனைகள் வழங்குவார். கொவிட் தொற்று மகிழ்ச்சிகரமான நிலைமையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கொவிட் பரவல் எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்க முடியும். கொவிட் தொற்றாளர்களை வீடுகளில் பார்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிகவும் வெற்றிகரமாக கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அடு மிகபெரிய உதவியாக இருந்தது. நாட்டை திறப்பதற்கான சுகாதார வழிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் 51 வீதமானோர் கொவிட் தொற்றிற்கு எதிராக இராண்டாவது தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். ஏனையவர்களுக்கும் விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

குழந்தையை பழி தீர்த்து தந்தை எடுத்த விபரீத முடிவு : ஆபத்தான நிலையில் மனைவி!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில், பிறந்து 8 மாதமேயான ம.கனை வெ.ட்.டி.க் கொ.ன்.று த.ந்தை த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஏருவேஷி பகுதியில் குடியிருந்து வந்த 39 வயதான சதீஷன் என்பவரே தமது 8 மாத கு.ழந்தையை கொ.ன்.ற.து.ட.ன், ம.னைவி அஞ்சு மீ.தும் தா.க்.கு.த.ல் ந.டத்தியுள்ளார்.

இதில் ப.டு.கா.யமடைந்த அஞ்சு ஆ.பத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். உ.ட.ல் மு.ழுவதும் கா.யங்களுடன் தாயாரையும்  கு.ழந்தையையும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதில், சிகிச்சை ப.லனின்றி கு.ழந்தை ம.ரணமடைந்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வந்துள்ள சதீஷன் கடந்த நான்கு ஆண்டுகள் முன்பு நாட்டுக்கு திரும்பியதுடன், திருமணமும் செய்து கொண்டுள்ளார். மட்டுமின்றி உ.ளவியல் பா.திப்பு கொண்டவர் அவர் என்பதும் முதற்கட்ட வி.சாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக மருத்து எடுத்துக்கொள்ளாமல் இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று ம.னைவியையும் ம.கனையும் வா.ளா.ல் வெ.ட்.டி.ய பி.ன்னர் சதீஷன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார் என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யாழ். வடமராட்சி மீனவர்களின் வலையில் சிக்கிய 8 அடி நீளமான கோமராசி மீன்!!

கோமராசி மீன்..

யாழ். வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு மீனவர்களின் வலையில் கோமராசி மீனொன்று சிக்கியுள்ளது. கட்டைக்காடு பகுதியில் நேற்று மாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் சிக்கியுள்ளது.

சுமார் 8 அடி நீளம் கொண்ட இந்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்து வந்து கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளது.

வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை. சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு கோமராசி மீன் சம்மாட்டியின் வலையில் அகப்பட்டதோடு நேற்று இரண்டாவது முறையாகவும் சிக்கியுள்ளது. ஆழ்கடலில் வசிக்கும் இம்மீன்கள் சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் கொரோனா தடுப்பூசி செலுத்த நேரிடும் அபாயம்!!

தடுப்பூசி..

கொவிட் தடுப்பூசி மூலம் கொவிட் பரவலை சாதாரண தடுமன் காய்ச்சல் நிலைமைக்கு ஏற்படுத்துவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவீகே (Neelika Malavige) தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் உலகின் முதன்மை மாறுபாடாக டெல்டா மாறியுள்ளது. ஏனைய அனைத்து மாறுபாடுகளும் நூற்றுக்கு ஒரு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

எதிர்காலத்தில், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட குழுக்களுக்கு கொவிட் தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

நாட்டை திறக்கும் திகதியை வெளியிட்ட சுகாதார அமைச்சர்!!

ஊரடங்கு..

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டுள்ளார்.

அதன்படி சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாவலப்பிட்டியில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறும் கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள் : வெளியான விசேட அறிவிப்பு!!

திறக்கப்படும் பாடசாலைகள்..

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் படி நான்கு நிலைகளில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

அந்த வகையில், 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3,884 பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரை முதல் கட்டத்தில் தொடங்கும் என்று பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி தேவையில்லை என்பதால், தரம் 1 முதல் 5 வரை பாடசாலைகளை திறப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

“இது வரை, எந்த நாடும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை அடையாளம் காணவில்லை அல்லது கட்டாயப்படுத்தவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

அத்தகைய வெளிப்பாடு தங்கள் குழந்தை மற்றும் பிற குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட 16 மற்றும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அமைச்சகங்களின் அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், 12 முதல் 15 மற்றும் 16-19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி எப்போது தொடங்குகிறது மற்றும் எந்த குழுவிற்கு ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசி அளிக்கப்படும் என்பதைப் பொறுத்து, தரம் 6 முதல் 13 வரையான பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நாடு முழுவதும் பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தொடங்கும் எனவும், சுகாதார பரிந்துரைகள் கிடைத்தவுடன் பாடசாலைகள் திறக்கும் திகதிகள் அறிவிக்கப்படும்.

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து நிலைமை குறித்து விவாதித்ததாகவும் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலை மேம்பாட்டுக் குழுக்கள், சமூக காவல்துறை, பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடசாலைகளை சுத்தம் செய்யத் தொடங்குவார்கள். பாடசாலைகளின் சுகாதாரத்தை உறுதிசெய்த பிறகு, பரிந்துரைகள் கிடைத்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்.

எவ்வாறாயினும், 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 5,131 பாடசாலைகள் நாடு முழுவதும் உள்ளதாகவும், இந்தப் பாடசாலைகள் தான் முதலில் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலர் பாடசாலை முதல் தரம் 5 வரை வகுப்புகள் நடத்தும் 3,884 பாடசாலைகள் உள்ளன என்றும், இந்த பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு கல்வி மண்டலத்திலிருந்தும் நூறு குழந்தைகள் நல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-