அக்டோபர் முதலாம் திகதிக்கு பின்னர் “புதிய வழமைக்கு திரும்புதல்” என்ற அடிப்படையில் கட்டம் கட்டமாக நாட்டை திறப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி நாட்டை திறக்கும் போது விதிக்கப்பட வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தலைமையில் நடைபெற்ற கோவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வவுனியாவில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (25.09) காலை வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 46 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (24.09) 2 பேர் மரணமடைந்துள்ளனர். சுகயீனம் காரணமாக மரணமடைந்த இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்க்கை செலவுகள் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கபெற்றால் மாத்திரமே இந்த நடைமுறை அமுலுக்கும் வரும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெறுமாயின், ஒரு கிலோகிராம் பால்மாவின் விற்பனை விலை 1,145 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட 55.59 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா, வுவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட 84.62 வீதமானவர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசிகளையும், 55.59 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
ஏனையவர்களும் அடுத்து வரும் நாட்களில் தடுப்பூசி ஏற்றப்படும் இடங்களுக்குச் சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் சிம்பு. இவரின் திருமணத்தைப்பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு தகவல் வெளிவந்துகொண்டு தான் இருக்கிறது.
அண்மையில் கூட நடிகர் ஜெய் சிம்பு அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வார் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையான ஐஸ்வர்யா என்ற ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார் சாய் காயத்ரி.
அவரது சகோதரி மதுராவும் ஒரு சின்னத்திரை பிரபலம் தான். இவர் சிம்புவை காதலிப்பதாக கூறி தற்போது ப ரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சமீபத்திய பேட்டியில் தான் சிம்புவை காதலிப்பதாக கூறி இருக்கிறார்.
அதில், பள்ளி படிக்கும் காலத்தில் காலையில் சன் மியூசிக் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது சிம்புவின் பாடல் ஒன்றை கண்டேன். அப்போது பார்த்ததில் இருந்தே அவர் மேல் கிரஷ்.
அதன் பின் அந்த படம் தம் என கண்டுபி டித்து, அந்த நடிகர் சிம்பு என்பதை கண்டுபிடித்தேன். அப்போது இருந்து 16 வருடமாக சிம்புவை ஒருதலையாக காதலித்து வருகிறேன் என தெரிவித்தார்.
சிம்புவை நேரில் பார்த்தால் உடனே ப்ரபோஸ் செய்துவிடுவேன் என்றும் கூறி உள்ளார் அவர். அவர் சிம்புவை ப்ரோபோஸ் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் 3 கு.ழ.ந்.தைகளை கொ.லை செ.ய்.து தானும் த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்ட ச.ம்.பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டம் வேலூரில், தெற்கு கா.வல் நிலைய எல்லைக்குட்பட்ட சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ் குமார்-ஜீவிதா தம்பதியர்.
இவர்களுக்கு 7 வயதில் அக்சயா என்ற பெ.ண் கு.ழ.ந்.தையும், 5 வயதில் நந்தகுமார் என்ற ஆண் கு.ழ.ந்தை மற்றும் ஆறு மாத கை.க்.கு.ழந்தை என 3 கு.ழ.ந்தைகள் உள்ளனர்.
தினேஷ்குமார் தினமும் ம.து கு.டி.த்துவிட்டு ஜீவிதாவிடம் த.கராறு செ.ய்து வந்துள்ளார். தொடர் பி.ர.ச்சனை காரணமாக ஜீவிதா கோ.பி.த்துக்கொண்டு தாய் வீட்டில் இருந்து வந்த நிலையில், செப்டம்பர் 22-ஆம் திகதி சலவன்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜீவிதாவின் தம்பி ஜெகதீஷ் வியாழக்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொ.ண்டுள்ளார். பலமுறை தொடர்பு கொண்டும் ஜீவிதா அழைப்பை எடுக்காததால் ச.ந்.தேகம் அ.டைந்த ஜெகதீஷ் ஜீவிதாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் தாள்பாள் உள்ளே போடப்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரம் கதவை தட்டியும் ஜீவிதா வெளியே வராமல் இருந்துள்ளார். அ.ச்சமடைந்த ஜெகதீஷ் பக்கத்து வீட்டாரின் உதவியோடு தா.ழ்ப்பாலை உ.டை.த்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
உள்ளே சென்று பார்த்ததில் தீபிகா தனது 3 கு.ழ.ந்தைகளையும் கொ.லை செ.ய்.துவிட்டு தானும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டுள்ளார். இது குறித்து த.கவலறிந்த தெற்கு கா.வல் நிலைய பொ.லிஸார் ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து,
உ.டலை மீட்டு பி.ரேத பரிசோதனைக்காக வேலூர் அ.ரசு ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ச.ம்பவ இடத்தில் வேலூர் மா.வட்ட உதவி கா.வல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வி.சாரணை மேற்கொண்டார்.
பொ.லிஸாரின் முதற்கட்ட வி.சாரணையில் கு.டு.ம்.ப.த்தகராறு காரணமாக ம.ன உ.ளை.ச்சலில் இருந்து வந்த ஜீவிதா தனது 3 கு.ழ.ந்தைகளையும் துணியால் க.ழு.த்தை இறுக்கிக் கொ.ன்.றுவிட்டு தானும் தூ.க்.கி.லிட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டுள்ளது தெரியவந்துள்ளது. 3 கு.ழ.ந்தைகளை கொ.லை, செ.ய்.துவிட்டு தாயும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் வேலூரில் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த மானியதஅள்ளி மலைப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசன். இவருக்கும் சேலம் மாவட்டம் ஒமலூர் அடுத்த வெங்காயனூரை சேர்ந்த வனிதா(எ) பவித்ரா பி.இ.,பட்டதாரி.
இவர்கள் இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது வனிதா 4 மாதம் க.ர்.ப்பிணியாக உள்ளார்.
மேலும் மாணிக்கவாசன் ராணுவத்தில் இருப்பதாக கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்து 5 மாதம் கடந்தும் இன்னும் பணிக்கு செல்லவில்லை.
இந்நிலையில் மாணிக்கவாசன் வரதட்சனை கேட்டு வனிதாவை, அ.டி.க்.கடி து.ன்.புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று வனிதாவின் தாய் மாதம்மாள் மகளை பார்க்க சென்றுள்ளார். அப்போது தாய், மகள் இருவரையும் மாணிக்கவாசன் அ.டி.த்.ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை வனிதா வீட்டின் அருகே உள்ள குளியல் அறையில் தூ.க்.கி.ல் தொ.ங்.கிய நிலையில் இருந்துள்ளதை அருகே இருந்தவர்கள் பார்த்து தொப்பூர் கா.வ.ல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் ச.ம்.ப.வ இடத்திற்கு வந்த கா.வ.ல் துறையினர் உ.ட.லை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அ.ர.சு ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனிதா இ.றந்த விவரம் அவரின் உறவினர்களுக்கு விரைந்துள்ளனர்.
அப்போது ஊருக்கு செல்லும் வழியில் காட்டு பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் நின்றுள்ளது. அந்த ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு, ஒட்டுநர் ம.து அ.ரு.ந்தி இருந்துள்ளனர். அந்த ஆம்புலன்ஸில் வனிதா உ.டல் இருந்துள்ளது.
இதனை கண்ட உ.றவினர்கள், அ.தி.ர்ந்த போய், முற்றுகையிட்டு போ.ரா.ட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து வனிதாவின் உ.டல் அ.ரசு ம.ருத்துவமனைக்கு கா.வல் துறையினர் அனுப்பி வைத்தனர். ஆனால் மாணிக்கவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் வரவில்லை.
இதனால் இ.றப்பில் ச.ந்தேகம் உள்ளதாகவும் அ.வசரசமாக உ.டலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றதாக கூறி தொப்பூர் டோல்கேட் அருகே, உடலை கொண்டு சென்ற ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போ.ரா.ட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது சிலர் ஆம்புலன்ஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்சை விடுவித்து வனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மீண்டும் தருமபுரி அரசு ம.ருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் இறப்பில் ச.ந்தேகம் உள்ளதாகவும், மாணிக்கவாசன் மற்றும் அவரது குடும்பத்தினரை கை.து செ.ய்ய வேண்டும் என வ.லி.யுறுத்தி அரசு ம.ருத்துவமனை முன்பு அமர்ந்து சாலை மறியல் போ.ரா.ட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போழுது காவல் துறையினர் போ.ரா.ட்.டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போ.ரா.ட்டக்காரர்கள் ச.ம்மதிக்காததால், காவல் துறையினர் கு.ண்.டு கட்டாக தூ.க்.கி வண்டியில் ஏ.ற்றி கை.து செ.ய்.தனர். அப்பொழுது கா.வல் துறையினருக்கும், போ.ரா.ட்.டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து கா.வல் துறையினரை க.ண்டித்து மு.ழ.க்கங்களை எழுப்பியும், சாலையில் படுத்தும், வாகனத்தை தடுத்து, கை.து செய்தவர்களை விடுவிக்க வ.லி.யுறுத்தி போ.ரா.ட்டம் நடத்தினர். இதனால் சேலம் பிரதான சாலையில் போக்குவரத்து பா.திக்கப்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால், போக்குவரத்து க.டு.மையாக பா.தி.க்கப்பட்டது. ம.ருத்துவக் கல்லூரி ம.ருத்துவமனைக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தேன்மொழி, பாதிக்கப்பட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போ.ரா.ட்டத்தை கைவிட்டு சென்றனர்.
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வவுனியாவில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான தட்டான்குளம் பிரதேசத்திலிருந்து தினமும் பேரூந்தில் 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து இம் மாணவி இச் சாதனையை படைத்துள்ளார்.
மிகவும் வ.றுமையான குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரன் மற்றும் இரு இளைய சகோதரிகளுடன் பிறந்த தனுசிகாவின் அம்மா வீட்டு வேலைகளை கவனித்து வரும் நிலையில், தந்தை கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் மிகவும் சி.ரமக்களுக்கு மத்தியிலேயே தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கல்விகற்க அனுப்பி வருகின்றார்.
இருப்பினும் வறுமை மற்றும் பல்வேறு சி.ரமங்களை தாண்டி தனுசிகா இச் சாதனையை படைத்துள்ளார். சாதனைக்கு வறுமை ஒரு த.டையல்ல என்று நிரூபித்துள்ள இம் மாணவி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் மிகையல்ல.
இம் மாணவி வாழ்வில் பல்வேறு சாதனைகளை படைக்க வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெருமையடைகின்றோம்.
கொரோனா மூன்றாவது அலை கண்ணுக்கு தெரியும் எல்லைக்கு வந்துள்ளதாக கோவிட்-19 தொடர்பான இணைப்பதிகாரியும் சுகாதார அமைச்சின் தொழிநுட்ப சேவைகள் பணிப்பாளருமான மருத்துவர் அன்வர் ஹம்தானி(Anvar Hamdani) தெரிவித்துள்ளார்.
நாட்டை திறப்பதற்காக அறிமுகப்படுத்த எண்ணியுள்ள சுகாதார வழிக்காட்டல்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் தினமும் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300 என்ற வரையறை நெருங்கி உள்ளதாக கூறியுள்ள ஹம்தானி,
கோவிட் மரணங்கள் 40 வீதமாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிக்கான பிரதான காரணம் தடுப்பூசி எனவும் தடுப்பு வழங்கும் நடவடிக்கைகள் உலகில் ஏனைய நாடுகளை தாண்டி மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.
கோவிட் வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் மக்கள் தமது சமூக பொறுப்பை சரியாக நிறைவேற்றியமை கோவிட் பரவலை தடுக்க ஏதுவான மற்றுமொரு பிரதான காரணமாகும்.
இவ்வாறு சமூக பொறுப்பை நிறைவேற்றிய மக்களை பாராட்டுகிறேன். நாடு திறக்கப்பட்ட பின்னரும் மக்கள் அந்த சமூகத்தை தொடர்ந்தும் நிறைவேற்றுவது முக்கியமானது.
அப்படியில்லை என்றால், மற்றுமொரு கொடி கோவிட் அலை ஏற்படுவதை தடுக்க முடியாது. தடுப்பூ காரணமாக மக்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் ஒக்சிஜன் தேவைப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது எனவும் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்ததுடன் வர்த்தக நிலையங்களை மூடுமாறு தெரிவித்துள்ளனர்.
கோவிட் பரவல் வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது செயற்படல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியாவில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை ஒன்றுகூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டட வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் எச்சரிக்கை விடுத்துடன் நாடமாடி பொருட்களை விநியோகம் மேற்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.
அத்துடன் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டதுடன் மீண்டும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் முதல் முறையாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூரான காணொளி ஒன்றை வெளியிட்டமை தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமது கல்வி நிறுவனம் செய்த முறைப்பாடு மற்றும் சட்டத்தரணி ஊடான கடிதத்தை கவனத்தில் கொள்ளாது யூடியூப் நிறுவனம் இந்த அவதூரான காணொளியை நீக்காததை காரணமாக கொண்டு, இலங்கையின் கல்வி நிறுவனம் யூடியூப் எல்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளான கொழும்பு டுடே என்ற பெயரில் யூடியூப் வலையொளியை நடத்தும் கீர்த்தி துனுவில, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் யூடியூப் நிறுவனம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட மேலதிக நீதிபதி கே.கே.லியனகே, குறித்த அவதூறு காணொளி தொடர்ந்தும் ஒளிப்பரப்படுவதற்கு தடைவிதித்து கொழும்பு டுடே நிறுவனத்தின் கீர்த்தி துனுவில மற்றும் யூடியூப் நிறுவனத்திற்கு தடையுத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார்.
யூடியூப் நிறுவனம் வணிக ரீதியான நன்மையை பெற்றுக்கொள்ள உண்மை மற்றும் நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாது யூடியூப் வலையொளி தளத்தை உருவாக்க வசதிகளை வழங்குவதாக நீதிமன்றத்தில் கூறியுள்ள முறைப்பாட்டாளர்,
கொழும்பு டுடே என்று பெயரில் ரகசியமாக இயங்கும் யூடியூப் வலையொளியில் வெளியிடப்பட்ட அவதூறான காணொளி இந்த வழக்குக்கு ஏதுவாக அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
உண்மையான நபர்களின் அடையாளம் இன்றி, உரிய விமானம் இன்றி, யூடியூப் வலையொளி தளத்தை ஆரம்பிக்க அந்த நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த வலையொளி தனத்தை பதிவு செய்ய வழங்கப்பட்டுள்ள விலாசம் உண்மையான விலாசம் அல்ல எனவும் அது லண்டனில் உள்ள களியாட்டம் நடத்தும் இடம் ஒன்றின் விலாசம் எனவும் கூறியுள்ள முறைப்பாட்டாளர்,
குறித்த அவதூறு காணொளியை நீக்குமாறு விடுத்த கோரிக்கையை யூடியூப் நிறுவனம் மறுத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
அந்த அவதூறான காணொளியில் ஆர்.ஈ.ஜி என்ற கல்வி நிறுவனம் மாணவர்களிடம் பண மோசடி செய்யும்.
மோசடியாளர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம் பெரிய அவமானத்திற்கு உள்ளானதாகவும் முறைப்பாட்டாளர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகிய நிலையில் கஷ்ர பிரதேச பாடசாலையான வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம் வரலாற்றில் முதல் தடவையாக உயர் பெறுபேற்று சாதனையை நிலைநிறுத்தியுள்ளது.
அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் வெளியாகாத நிலையில் தமது சிறப்பு அடைவினை பாடசாலை வெளிப்படுத்தியுள்ளதாக அதிபர் இ.தமிழழகன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அழகேஸ்வரன் தர்சிகா அனைத்து பாடங்களிலும்(8A) திறமைச் சித்தி பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்களான,
யோகராசா கோகிலா 7A,B
யோகேந்திரன் நிரோசா 7A,B
சிற்பவானந் டேன்சிகா 5A, 2B,C
யோகராஜா கிஷா 5A,3C
நாகேந்திரன் கோபிகா 4A, 4B
நாகராசசிவம் அபிசா 3A,3B,C,S ஆகியோர் சிறப்பு அடைவு மட்டங்களை எட்டியுள்ளமை சிதம்பரபுரம் வரலாற்றின் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்வி போட்டி நிர்ணயம் என முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேகூறிய அறிக்கை ஆதாரமற்றது என்பதை சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவு விசாரணைகளை முடித்துள்ளது. குமார் சங்கக்கார , மஹேல ஜயவர்த்தன, உபுல் தரங்கா மற்றும் அந்த அணியின் பல வீரர்களை பொலிஸார் விசாரித்தனர்.
அந்த அறிக்கையை உடனடியாக விசாரிக்குமாறு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த டல்லாஸ் அழகப்பெரும பொலிஸ் பிரிவுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
எனினும், மஹிந்தானந்த அளுத்கமகே போட்டி நிர்ணயம் செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அப்போது கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் யோகராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அமர்வில் கலந்து கொள்ள வருகை தந்த சபை உறுப்பினர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த அன்டிஜன் பரிசோதனையில் சபை உப தவிசாளர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தவும், அவருடன் தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லண்டனில் இளம் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
38 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தென் கிழக்கு லண்டனில் Cator பூங்காவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியில் பணி முடித்துவிட்டு நடைபயிற்சிக்கு சென்ற சபீனா நெஸ்ஸா என்ற பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். 28 வயதான சபீனா நெஸ்ஸா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 18ம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மறுநாள் காலையில் குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் 38 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேக நபர் லூவிஷாமில் உள்ள முகவரியில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் இரண்டாவதாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக 40 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விரைவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக பிரபல சுப்பர் மாக்கட் உட்பட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.
கொரோனா தொற்று வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது செயற்படல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியாவில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை ஒன்றுகூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டட வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
அந்தவகையில், மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கட், தர்மலிங்கம் வீதியில் இலத்திரனியல் விற்பனை நிலையம், குருமன்காடு பகுதியில் சுப்பர் மார்க்கட் ஒன்று, ஹொரவப்பொத்தானை வீதியில் இரு வர்த்தக நிலையங்கள் என 5 வர்த்தக நிலையங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டன.