வவுனியாவில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (23.09.2021) இரவு வெளியாகியுள்ளன.

வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கோவிட் தொற்று 47 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் முடக்க நிலை தளர்த்தப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!!

முடக்க நிலை..

நாடு திக்கப்படுவதற்காக சூழல் ஓரளவு ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டை திறப்பது தொடர்பில் ஊடகவியலாளர் பிரதி சுகாதார பணிப்பாளரிடம் வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் நாட்டை ஒரே நேரத்தில் முழுமையாக திறக்க கூடாதென்பதே சுகாதார பிரிவினரின் கருத்தாக உள்ளது. நாட்டை கட்டம் கட்டமாகவே திறக்க வேண்டும். அவ்வாறு கட்டம் கட்டமாக திறக்கும் போது ஏற்படும் சிக்கல்களை தீர்த்து முன்னோக்கி செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஒரே நேரத்தில் நாட்டை திறந்தால் அதன் மூலம் ஏற்படும் முடிவு ஆபத்தானதாக இருக்கும் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா உட்பட இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை..

இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வட-மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, பொது மக்கள் புயல் மற்றும் மின்னலுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கே வானிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள், இடி மற்றும் மின்னலின் போது, மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் வயல் வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளிகளில் இடியுடன் கூடிய மழைக்காலங்களில் மக்கள் நடமாடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது கம்பி இணைப்புத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மற்றும் ஈருருளிகள், உழவு யந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் கேட்டுள்ளது.

ஊருக்குச் சென்ற கணவருக்கு உறவினர்களால் நேர்ந்த விபரீதம் : கதறும் இளம் மனைவி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவரை அவரது குடும்பத்தினரே கொ.ன்றதாக கூறி புகார் அளித்துள்ளார் இளம் பெண் ஒருவர். வேறு சமூகத்தில் தம்மை திருமணம் செய்து கொண்டதாலையே கணவரை அவரது உறவினர்கள் கொன்றதாக குறித்த பெண் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறந்த பிஞ்சு குழந்தையுடனே அவர் திருவள்ளூர் காவல் நிலையத்தில் நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார். ரயில் பயணத்தினிடையே பார்த்து பழகிய இருவரும் பின்னர் காதலில் விழுந்துள்ளனர். இருவேறு சமூகம் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் திருமணம் செய்து கொண்ட இருவரும் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஆனாலும், கணவர் கெளதம் தமது குடும்பத்தினரை சந்திக்க அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்று வருவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆவூர் பகுதிக்கு குடிபெயர்ந்த இந்த தம்பதிக்கு செப்டம்பர் 17ம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ளது. அன்றைய தினம் குடும்பத்தில் ஒரு இறப்பு என தகவல் தெரியவர கெளதம் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து அவர் வீடு திரும்பாததுடன், அவர் மொபைல் போனும் செயல்படாதது கண்டு பயந்து போன அவர், தமது கணவரை தேடி ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் ஊர் முழுக்க கெளதம் இறந்ததற்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அவரை வரவேற்றுள்ளது.

செப்டம்பர் 17, இரவு 7 மணிக்கு இறந்ததாகவும் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது. கணவரின் மரணத்தை போஸ்டர் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய துரதிர்ஷ்டம் ஏற்பட்டதாக கூறி உடைந்து போன அவர், தமது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் துறையை நாடியுள்ளார்.

திருமணமான சில மாதத்தில்இறந்த கணவன் : அவர் சகோதரரை மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு சில நாட்களில் காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் லட்சக்கணக்கிலான பணம் மற்றும் நகைக்காக அண்ணன் மனைவியை தம்பி திருமணம் செய்த நிலையில் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதன் அதிர்ச்சி பின்னணி அம்பலமாகியுள்ளது.

மதுரையை சேர்ந்த தலையாரி பாண்டி மகன் பிரபாகரன் என்பவருக்கும் கல்லூரி மாணவி மாளவிகாவுக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மாளவிகா குடும்பத்தினர், 120 சவரன் தங்கம் மற்றும் 10 லட்சம் ரொக்கம், சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் பிரபாகரன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

திருமணமான சில மாதங்களில் வாழ்க்கையை இழந்த மாளவிகா கைம்பெண்ணாக, தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பிச் சென்றுள்ளார். அவருக்கு சீதனமாகக் கொடுத்த நகை மற்றும் பணத்தையும் சண்டை போட்டு பெண் வீட்டார் திரும்பி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரதட்சணையாக வழங்கப்பட்ட 120 சவரன் நகையையும், 10 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்ற நினைத்த மணமகன் பிரபாகரன் வீட்டார், பிரபாகரனின் தம்பியான பிரகாஷ் என்பவரை மாளவிகாவுடன் செல்பேனில் மூலம் பேசி காதல் வலையில் விழ வைத்தனர்.

மேலும் பிரகாஷ். தான் புதிய வாழ்க்கை தருவதாகவும் , அண்ணனை விட நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் மாளவிகாவிடம் ஆசைவார்த்தை கூறினார். ஆனால் இவர்களின் காதலுக்கு மாளவிகா பெற்றோர் ஒப்பு கொள்ளாத நிலையில் வீட்டை மீறி பிரகாஷை கோவிலில் வைத்து மாளவிகா திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தான் திருமணமான சில மாதங்களில் மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது திருமணம் முடிந்த சிறிது நாளிலேயே வரதட்சணை பணத்தை வாங்கி வர கூறி மாளவிகாவை அவர் கணவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்தினர், இதனால் கணவர் மற்றும் குடும்பத்தாரின் சுபரூபத்தை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து மகளின் வாழக்கைக்காக 80 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் ரொக்கத்தை மாளவிகாவின் பெற்றோர் மீண்டும் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதனை ஏற்காமல் மீதமுள்ள நகையையும் பணத்தையும் வாங்கி வரச்சொல்லி மாளவிகாவை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாளவிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பெண் வீட்டார் பொலிசில் புகார் அளித்ததோடு தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

புகாரை தொடர்ந்து பிரகாஷையும் அவனது தந்தை தலையாரி பாண்டியையும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!!

ஊரடங்கு..

நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கும் முடிவை எடுக்கும்போது நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

சுகாதார சேவைகளின் பிரதிப்பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) இன்று ஊடகங்களிடம் இது தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.

நாட்டை முழுமையாக ஒரே நேரத்தில் திறக்க பரிந்துரைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுமையாகத் திறக்கப்படுமானால், நிலைமையை, அது இன்னும் மோசமாக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, நாட்டை படிப்படியாகத் திறப்பது மிகவும் பொருத்தமானது என்று பரிந்துரைக்கப்படுகின்றது. இதனால் கோவிட் தொற்றுகள் ஏற்படக்கூடிய ஆபத்து காரணிகள் உள்ளதா என்பதை பார்க்கமுடியும் என்று ஹேரத் கூறியுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் பயன் கிடைத்து வரும் நிலையிலேயே அடுத்த வாரத்திலிருந்து நாட்டை மீண்டும் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

வவுனியா – மன்னார் வீதியில் பிரபல சுப்பர் மார்க்கட் தனிமைப்படுத்தப்பட்டது!!

மன்னார் வீதியில்..

சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள பிரபல சுப்பர் மாக்கட் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது செயற்படல்,

உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியா – மன்னார் வீதியில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றினை சுகாதாரப் பிரிவினர் இன்று (23.09) முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, வவுனியா – மன்னார் வீதியின் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுப்பர் மார்க்கட் ஒன்று சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை ஒன்றி கூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டமை சுகாதாரப் பிரிவினரால் அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த சுப்பர் மாக்கட் சுகாதாரப் பிரிவினரால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டது.

வவுனியாவில் இரு மதுபானசாலைகள் தனிமைப்படுத்தப்பட்டன!!

மதுபானசாலை..

வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட இரு மதுபானசாலைகள் சுகாதாரப் பிரிவினரால் இன்று மாலை (23.09) தனிமைப்படுத்தப்பட்டன.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவிலவானோரை ஒன்று கூடி நின்ற நிலையில், வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர்.

இதனையடுத்து வவுனியா குழுமாட்டு சந்தி பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் மற்றும் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் என்பனவே இவ்வாறு தனிமைப்படுததப்பட்டன. குறித்த இரு மதுபான விற்பனை நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

வவுனியா நொச்சிகுளத்தில் இடம்பெற்ற ஆலய கும்பாபிசேகத்த்தால் கிராமம் அபாய கட்டத்தில் : தொற்றாளர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு!!

நொச்சிகுளத்தில்..

சுகாதார விதிமுறைகளை மீறி ஆலய கும்பாபிசேகம் இடம்பெற்ற ஓமந்தை, நொச்சிகுளம் கிராமத்தில் கோவிட் தொற்றாளர்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அபாய நிலையில் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி இடம்பெற்ற குப்பாபிசேக நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேர் கோவிட் தொற்றாளர்களாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டனர்.

இதனையடுத்து குறித்த 13 தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகிய நிலையில் மேலும் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் சுமார் 100 பேர் வரையிலேயே வசித்து வரும் நிலையில், 38 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்னர். இதனால் கோவிட் அச்சுறுத்தல் மிக்கதாக குறித்த கிராமம் மாறியுள்ளதால் மக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி அவதானமாக இருக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

அத்தியாவசிய பொருட்கள்..

பால் மா, சமையல் எரிவாயு, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரான பெருந்தோட்ட தொழில் துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எனினும் உலக சந்தையில் காணப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு விநியோகம் தொடர்பான நெருக்கடி, இலங்கைக்குள் டொலரின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக எதிர்காலத்தில் சில தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய நடைமுறையின் கீழ் பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டம்!!

பாடசாலை..

நாடாளவிய ரீதியில் கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிக்காட்டல்களுக்கமைய பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பல்வேறு தரப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் அதன் சுற்றுச் சூழல்களை சுத்தம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய 200க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளை உடனடியாக திறப்பதற்கு ஆசிரியர்களின் உதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய முதல் கட்டமாக உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் வெளிநாடு செல்ல இருந்த பெண்ணொருவர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழில்..

யாழில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ். வடமராட்சி, நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன் துளசிகா (வயது 37) எனும் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பெண் சில வாரங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் உயிரிழந்த பெண் வெளிநாட்டிலுள்ளவரை திருமணம் செய்துள்ள நிலையில், மிக விரைவில் வெளிநாடு செல்ல இருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

14 வயது மாணவிக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் : ஒரு மணித்தியாலத்தில் மரணம்!!

மாணவி..

அம்பலாங்கொட, பலபிட்டிய பிரதேசத்தில் திடீர் சுகயீனமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்து ஒரு மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அம்பலங்கொட, தர்மாஷோக வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி நெஞ்சு வலி மற்றும் மூச்சு விட சிரமம் காரணமாக நேற்று அதிகாலை 12.05 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 1.05 மணியளவில் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவி தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஜேந்திரன் எம்.பியை இழுத்துச் செல்லும் பொலிஸார் : பெண்களுடன் முறுகல் : பரபரப்பு காணொளி!!

கஜேந்திரன் எம்.பி..

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழில் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான பரபரப்பு காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த காணொளியில் கஜேந்திரனை, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை கூட கருத்தில் கொள்ளாது பொலிஸார் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை தடுக்க முற்பட்ட பெண்களுடன் பொலிஸார் முறுகலிலும் ஈடுபட்டுள்ளமை அந்த காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ளது.

தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று : 2 பேர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 2 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (23.09) காலை வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 94 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (22.09) 2 பேர் மரணமடைந்துள்ளனர். சாந்தசோலை பகுதியில் பெண் ஒருவரும் (வயது 58), தவசிகுளம் பகுதியில் பெண் ஒருவரும் (வயது 35) என 2 பேர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

பெற்ற இரு மகள்களை பள்ளத்தாக்கில் தூ.க்கி வீ.சி கொ.லை செ.ய்த இளம் தாய் : நெ.ஞ்சை உ.லுக்கும் சம்பவம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் இரண்டு மகள்களை கொ.லை செ.ய்த தாயார் குறித்து பல்வேறு அ.திர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டியை சேர்ந்தவர் ஹீனா. இவர் தான் தனது 9 மற்றும் 2 வயதிலான இரண்டு மகள்களை பெரிய பள்ளத்தாக்கில் தூ.க்கி வீ.சி கொ.லை செ.ய்திருக்கிறார்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஆஷிஷ் சர்மா கூறுகையில், கடந்த சில நாட்களாக த.லைமறைவாக இருந்த ஹீனா என்ற பெண்ணை மகள்களை கொ.லை செ.ய்த வழக்கில் கை.து செ.ய்துள்ளோம்.

5 நாட்கள் அவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது, வி.சாரணையின் போது சம்பவத்தில் மற்றவர்களுக்கு தொடர்பு உள்ளதா என கண்டுபிடிக்கப்படும்.

ஹீனாவுக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த 2011ல் காதல் திருமணம் நடந்திருக்கிறது. இதன் பிறகு வேறு ஒரு நபரை ஹீனா காதலித்திருக்கிறார், இதன் காரணமாக சில முறை வீட்டை விட்டு ஓ.டியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மாமியார் இ.றந்த சமயத்தில் கூட ஹீனா வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார், பின்னர் அவரை க.ண்டுபிடித்து திரும்ப அழைத்து வந்துள்ளனர்.

கொ.ல்லப்பட்ட இரண்டு சி.றுமிகளின் பிரேதப் ப.ரிசோதனை முடிந்துள்ளது, அதன் அறிக்கைகள் வந்தபின்னர் வி.சாரணை துரிதப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

பெற்ற மகள்களை இ.ரக்கமின்றி கொ.ன்.ற ஹீனா வழக்கில் வி.சாரணைக்கு பின்னர் மேலும் பல தி.டுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.