திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாடசாலை மாணவிக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பலாங்கொடை தர்மாசோக கல்லூரியில் கல்வி கற்று வந்த, அம்பலாங்கொடை ஹல்வத்துர விலோகொட பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக மாணவி இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். உயிரிழந்த மாணவியின் மரண பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில், இறப்புக்களும் தொடர்கின்றன. இந்த நிலையை கருத்தில் கொண்டு மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வீடுகளில் இருப்பதன் மூலமே நிலமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்களில் 89.25 வீதமானவர்கள் கொரோனா தொடர்பான எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள்.
10.75 வீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் பெற்றுக் கொண்டவர்கள். தடுப்பபூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட எவரும் இதுவரை வவுனியாவில் கொரோனா காரணமாக மரணிக்கவில்லை.
எனவே, 20 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்று உங்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை இளைஞன் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் மற்றும் BMW கார் ஒன்று பரிசாக கிடைத்துள்ளதாக கூறி 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயற்சித்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தெரனியகல பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுக்கு இந்த அழைப்பு கிடைத்துள்ளது. அழைப்பேற்படுத்தியவர், வெளிநாட்டு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த லொத்தர் சீட்டிழுப்பில் குறித்த இளைஞன் வெற்றி பெற்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த பணப்பரிசினை வழங்குவதற்கு தகவல் அவசியம் என்பதனால், பெயர், விலாசம், கையடக்க தொலைபேசி இலக்கம், வங்கி கணக்கிலக்கம், மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்குமாறு மோசடியாளர் கோரியுள்ளார்.
தகவல்களை பெற்றவுடனேயே மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று கிடைத்துள்ளது. அதில் லண்டன் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாகவும், மேலதிக தகவல்கள் பெற்றுக் கொள்வதற்காக அதில் உள்ள ஆவணங்களை திறந்து பார்க்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஆவணங்களை திறந்து பார்த்த போது, இந்த இளைஞனின் தகவல்களுக்கு கீழ் இரண்டரை கோடி ரூபாய் பணம் மற்றும் BMW கார் ஒன்று வெற்றி பெற்றுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. அந்த காரை துறைமுகத்தில் விடுவதற்காக குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கு இலக்கத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வைப்பிடுமாறு கூறப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களை நம்பிய இளைஞன் ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி கிளைக்கு சென்று அந்த பணத்தை வைப்பிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
பணம் வைப்பிட்டவுடன் வருமான வரிக்காக மேலும் 5 லட்சம் ரூபாயை அன்றைய தினமே வைப்பிடுமாறு குறுந்தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த குறுந்தகவலினால் ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய குறித்த இளைஞன் சம்பவம் தொடர்பில் தனது நண்பருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
நண்பர் உடனடியாக பணம் வைப்பிடப்பட்ட இலக்கம் தொடர்பில் வங்கியிடம் தகவல் கோரியுள்ளார். பின்னரே அவர் மோசடி ஒன்றில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் ரூவன்வெல்ல பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இவ்வாறான மோசடி சம்பவங்கள் இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்படலாம் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் விசேட வைத்திளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு வழங்குவதற்கு பதிலாக பிரதான மத்திய நிலையங்கள் பலவற்றில் மாத்திரம் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஆ.யுதம் ஏந்திய ப.டையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட அறிப்பொன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போது வாசித்துள்ளார்.
பொது மக்கள் பா.துகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் கூறியிருந்தார்.
பொது மக்கள் பா.துகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதேபோன்றதொரு உத்தரவானது ஒரு மாதத்திற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர், யுவதிகள் திடீரென மயங்கி விழுந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனமடுவ, கன்னங்கர வித்தியாலத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் சம்பவம் பதிவாகி உள்ளது.
இதன்போது சுகாதார பிரிவினர் உடனடியாக அவருக்கு சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன தெரிவித்துள்ளார்.
20 – 30 வயதிற்குட்பட்டவர்களுக்காக இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மேற்கொண்டிருந்தது. அங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற்றுக் கொண்டு 20 நிமிடங்கள் தடுப்பூசி நிலையத்தில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இளைஞர் யுவதிகள் பலர் மயங்கி விழுந்துள்ளனர்.
உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் ஒரு மணித்தியாலம் வரை அவர்களை அங்கு தங்க வைத்து சிகிச்சையளித்து அதன் பின்னர் உறவினர்களுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முறையான வழி அனுமதிப் பத்தரமின்றி மண் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் வாகனங்கள் வவுனியா வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளன. இன்று (22.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஏ9 வீதியின் ஊடாக நகரப்பகுதியில் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்கள் வவுனியா வனத்துறை அதிகாரிகளால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது 4 டிப்பர் வாகனங்கள் முறையான வழி அனுமதிப் பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்றமை கண்டு பிடிக்கப்டபட்டது. இதனையடுத்து, குறித்த 4 டிப்பர் வாகனங்களும் வனத்துறை அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன்,
அதன் சாரதிகள் 4 பேரும் கைது செய்ப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 5 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (22.09) காலை வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (21.09) 5 பேர் மரணமடைந்துள்ளனர். நெடுங்கேணி பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 39), பட்டக்காடு பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 49), பம்பைமடு காப்பகம் ஒன்றில் ஆண் ஒருவரும் (வயது 79), உக்குளாங்குளம் பகுதியில் பெண் ஒருவரும் (வயது 71) என 5 பேர் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
காதல் என்பது மனிதர்களுக்கும் மட்டும் வருவதல்ல அது சிறு உயிரினங்களில் தொடங்கி, விலங்குகள் , பறவைகள் போன்ற அணைத்து ஜீவராசிக்கும் காதல் என்பது பொதுவான ஒன்றாக இருக்கிறது. காதல் என்பது அன்பு அது யார் யார்மேலயும் வைக்கும் ஒரு உண்தமான புனிதமான ஒரு செயல்.
அன்பிற்கு எல்லை என்பது கிடையாது. அன்பிற்கு எல்லையே இல்லை என்பது தான் உண்மை. அந்த வகையில் தற்போதைய காலத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரைலும் காதலித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதை நாம் அதிகமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டங்களில் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் ஒருவருக்காக அவரை காதலித்து நடிகை ஒருவர் மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் சமீபத்தில் தான் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி வந்தவுடன் அனைவர் மனதிலும் யார் அந்த பிரபலம் என்ற கேள்வி எழுந்தது. சினிமா திரையுலகில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குள் காதல் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வது தான் கேள்விகுறியாக உள்ளது.
ஆனால் தற்போது அவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், நிலைக்காமல் சில வருடங்களுக்குள் பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் பிரபல ஜோடியாக இருந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா.
முதல் படத்திலேயே இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டு தற்போது வி வாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படும் ஜோடிகளாக இருக்கும் பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் பிரிந்தது பலருக்கும் சோகமான விஷயம்தான். ஆனால் அவர்களது காதல் காலங்களில் பார்த்திபனுக்காக சீதா மொட்டை போட்ட செய்தியை பார்த்திபனின் குருவும், நடிகருமான பாக்யராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி கேட்ட அனைவரும் நெகிழ்ச்சியில் உறைந்து போனார்கள். நடிகை சீதா எதற்காக மொட்டை அடித்தார் என்ற கேள்விக்கு பதில் இது தான்.
ஒருமுறை இயக்குனர் பார்த்திபனுக்கு நிற்காமல் விக்கல் எடுத்துக் கொண்டே இருந்ததாம். பல மருத்துவர்களை பார்த்தும் அந்த விக்கலை சரி பண்ண முடிய வில்லையாம். அதனால் பயந்து போன சீதா உடனடியாக சுவாமியிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போட்டு விட்டாராம்.
இதனை ஒருமுறை பாக்கியராஜ் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும், ஏன் என்று கேட்டபோது பார்த்திபன் கூறிய விளக்கத்தைக் கேட்டு இப்படியொரு மனைவியா என ஆச்சரியப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி காதலுடன் இருந்த தம்பதி பிரிந்து போனது எப்படி என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது இந்த செய்து இவ்வளோ ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் காதலன் உதவியுடன் மனைவி, கணவனை து.ண்டு து.ண்டாக வெ.ட்டி, ராசயனங்கள் ஊற்றி அழிக்க முயன்ற சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம்முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவருக்கும் ராதா(30) என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில், ராதாவிற்கு சுபாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட, இவர்களின் பழக்கம், நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது.
இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு ராதாவின் கணவர் தொந்தரவாக இருப்பதால், ராகேஷை மனைவி ராதா கொ.லை செய்ய முடிவுசெய்துள்ளார்.
இதற்காக, ராதா தனது கணவன் ராகேஷை கொலை செய்வதற்கு தனது தங்கை கிருஷ்ணா மற்றும் தங்கை கணவரை அழைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, சுபாஷ், ராதா, கிருஷ்ணா உள்பட 4 பேரும் சேர்ந்து ராகேஷை அடித்துக் கொலை செய்தனர்.
அதன்பின்னர் தடயங்களை அழிக்க விரும்பிய ராதா மற்றும் சுபாஷ் ஆகியோர் , இறந்த ராகேஷ் உடலை பல துண்டுகளாக வெட்டி, ரசாயனத்தை பயன்படுத்தி பிணத்தை கரைக்க முயன்றுள்ளனர்.
ஆனால், ரசாயனம் பயன்படுத்தியதால், திடீரென்று வெடித்து உடல் பாகங்கள் தீப்பற்றியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஏதோ தீ விபத்து என்று எண்ணி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து விரைந்து வந்த பொலிசார், அந்த வீட்டின் உள்ளே சிதறி கிடந்த சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அந்த உடல் பாகங்களை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணயில், ராகேஷ் பீகாரில் தடை செய்யப்பட்ட ம.து.வை சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக பொலிஸார் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதால், அவர் பெரும்பாலும் இரகசியமாகவே வாழ்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில், ராகேஷின் கூட்டாளியான சுபாஷ் தான் ராகேஷின் மனைவியை கவனித்து வந்துள்ளார்.
அப்போது தான் இவர்கள் இருவருக்குள் காதல் வந்துள்ளது. அதன் பிறகு, ராதா, அவளது காதலனுடன் சேர்ந்து, ராகேஷை கொ.லை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கு ராதாவின் சகோதரியும் அவரது கணவனும் கூட்டு சேர்த்துள்ளனர்.
திட்டமிட்டபடி ராகேஷை ராதா வீட்டிற்கு அழைக்க, ராகேஷ் வீட்டிற்குள் வந்தவுடன், சுபாஷின் உதவியுடன் அவரைக் கொன்றுவிட்டு, உடலை துண்டுதுண்டாக வெட்டி ரசாயனம் ஊற்றி அழிக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வெடிசத்தம் காரணமாக மாட்டிக் கொண்டது தெரியவந்தது.
தமிழகத்தில் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்து வந்த இளம்பெண் மருத்துவர் தூ.க்கிட்டு த.ற்கொலை செ.ய்து கொண்டார். திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்ஜினி (30). தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், துறையூரைச் சேர்ந்த மருத்துவர் கோகுல் (37) என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தம்பதியிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதன்பின்னர் சஞ்ஜினி மகனுடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தாத்தாவான பிரபல டாக்டர் கோவிந்தராஜ் (81) என்பவருடன் வசித்து வந்தார். இவர் விவாகரத்து செய்தது அதிக உறவினர்களுக்கு தெரியாது.
இந்த நிலையில் சஞ்ஜினி தனது மகனுக்கு திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் காதுகுத்து விழா நடத்தினார். இதில் அவரது உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்கள், தோழிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கணவர் மட்டும் பங்கேற்கவில்லை.
அப்போது, விழாவிற்கு வந்த சிலர் சஞ்ஜினியிடம் குழந்தையின் தந்தை எங்கே? என கேட்டனர். இது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதனையடுத்து விழா முடிந்ததும் சஞ்சினி குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த சஞ்சினி குழந்தையை தனது தாத்தாவிடம் கொடுத்துவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
நேற்று காலையில் சஞ்ஜினியின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக தாத்தா பார்த்த போது உள்ளே சஞ்சினி மின்விசிறியில் சேலையால் தூ.க்குப்போட்டு த.ற்கொலை செ.ய்து கொண்டது தெரியவந்தது.
இதை பார்த்த கோவிந்தராஜ் அ.திர்ச்சியில் க.தறி து.டித்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சடலத்தை கை.ப்பற்றிவிட்டு வி.சாரணை நடத்தினர்.
முதல் கட்ட வி.சாரணையில், மகனின் காதுகுத்துவிழாவின்போது கணவரை பற்றி சிலர் கேட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் த.ற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் தீவிர வி.சாரணை நடைபெற்று வருகின்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 66 பேர் நேற்று மரணமடைந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மரணங்களுடன் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 284 ஆக பதிவாகியுள்ளது.உயிரிழந்தவர்களில் 53 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.
30 வயதுக்கும் 24 வயதுக்கும் உட்பட்ட 11 பேரும், 30 வயதுக்கும் குறைந்த இரண்டு பேருக்கு கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 30 ஆண்கள் எனவும் 36 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை யுவதியான யொஹானியின் (Yohani Diloka de Silva) மெனிக்கே மகே ஹிதே பாடல் தற்போது உலகளவில் மிகவும் பரவலாக பேசும் இடத்தை பிடித்துள்ளது.
குறித்த பாடல் இலங்கையை தாண்டி உலகளாவிய ரீதியில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளதுடன், தமிழ், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் “யூடியூப்” பார்வைகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டிய பாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் புதிய கலாச்சாரத் தூதுவர் யொஹானி டி சில்வா தோன்றுவதில் பெருமிதம் கொள்கிறோம் என மிகப்பெரிய அங்கீகாரமொன்றை வழங்கியுள்ளது.
கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இட்டுள்ள டுவிட்டர் பதிவொன்றிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும்,
யூடியூப்பில் 110 மில்லியனுக்கும் அதிக தடவைகள் பார்க்கப்பட்ட ‘மெனிகே மகேஹிதே’ பாடல், பிரபலங்கள் முதல் பொது மக்கள் வரை இந்தியாவில் பல மில்லியன் மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.
இது, பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானதும் உண்மையில் இயல்பானதுமான இந்திய இலங்கை உறவின் ஆழத்தை, பிரதிபலிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்கள் அதிரித்து செல்லும் நிலையில் நிலமையை சீர் செய்யும் முகமாக சுகாதாரப் பிரிவினரும், நகரசபையினரும் இணைந்து இன்று (21.09) 8 சடலங்களை தகனம் செய்யதனர்.
வவுனியா மாவட்டத்தில் கொவிட் பரவல் காரணமாக தொடர்ந்தும் பலர் மரணித்து வரும் நிலையில் கொவிட்டால் மரணமடைந்தவர்களின் சடலங்கள் தேக்கமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலங்கள் தேக்கமடைவதை தவிர்க்கும் பொருட்டு வவுனியா சுகாதாரப் பிரிவினரும், நகரசபையினரும் இணைந்து காலை 7 மணியில் இருந்து மாலை 8 மணி வரை சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை பூந்தோட்டம் மின் மாயானத்தில் முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி 8 சடலங்கள் அதிகபட்சமாக ஒரே நாளில் தகனம் செய்யப்பட்டப்பட்டன. வழமையாக நாள் ஒன்றுக்கு மின் தகன இயந்திரத்தின் வினைததிறனை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 6 வரையிலான சடலங்களே எரியூட்டப்பட்டு வந்தன.
அத்துடன் இயந்திரமும் அவ்வப்போது பழுதடைந்தமையாலும், கோவிட் உயிரிழப்புக்கள் தொடர்கின்றமையாலும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் சடலங்கள் வருவதானாலும் வவுனியாவில் பல சடலங்கள் தேக்கமடைந்துள்ளன.
இதனால் அதனை துரிதமாக தகனம் செய்யும் முகமாக இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் திடீரென கூடியமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மல்லாகத்திலுள்ள காங்சேகன்துறை இலங்கை வங்கி கிளைக்கு முன்னால் பெருமளவு மக்கள் கூடியுள்ளனர். வீட்டுத்திட்டம் ஒன்றுக்காக வங்கி கணக்கு இலக்கத்தை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளனர்.
அதற்கான இறுதித்தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கிக் கணக்கை ஆரம்பிக்கும் நோக்கில் பெருமளவு மக்கள் வங்கிக் கிளையின் முன்னாள் கூடியுள்ளனர்.
வீட்டுக்கு இருவர் என்ற அடிப்படையில் மக்கள் கூடியுள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார விதிமுறைகளை மீறி மக்கள் கூடியுள்ளமை அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் ச.டலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கணவனை பிரிந்த நிலையில் இரு பிள்ளைகளுடன் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 32 வயதான பிரதீபன் புஸ்பராணி எனும் இளம் குடும்ப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.