வவுனியாவில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்!!

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.

அதற்கமைவாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்பட்டது. இதில் பலரும் ஆர்வத்துடன் வருகை தந்து சுகாதார நடைமுறைகளைபர் பின்பற்றி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டனர்.

வவுனியாவில் வீதியால் சென்ற பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியவர் மடக்கிப் பிடிப்பு!!

உக்குளாங்குளம் பகுதியில்..

வவுனியாவில் வீதியால் சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய இளைஞன் மடிக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று (21.09) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடைக்கு சென்று விட்டு வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரை பின் தொடர்ந்து பல்சர் மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் அவர் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை,

இழுத்து அறுத்துக் கொண்டு பல்சர் ரக மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய போது, குறித்த பெண் கூக்குரல் இட்டு கத்தியுள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த இஞைனை கார் ஒன்றில் விரட்டிச் சென்றதுடன், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கும் தகவல் வழங்கினர்.

திருட்டில் ஈடுபட்ட நபர் வவுனியா, வேப்பங்குளம் சந்தியில் ஏற முற்பட்ட போது அங்கிருந்த வந்த பொலிசாரும், விரட்டிச் சென்ற இளைஞர்களும் இணைந்து திருட்டில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மோட்டர் சைக்கிளை பொலிசில் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிசார், குறித்த நபரிடம் இருந்து அறுத்துச் செல்லப்பட்ட இரண்டரைப் பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளர் கொரோனா தொற்றால் மரணம்!!

சலாஹீதீன் ஹாஜி..

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த சலாஹீதீன் ஹாஜி (சாபு) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21.09) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவர் பட்டக்காடு மஸ்ஜிதுல் இலாஹிய்யா ஜீம்ஆ பள்ளி வாசல் தலைவரும், பட்டானிச்சூர் மன்பஉல் உலூம் அரபுக் கல்லூரியின் உபதலைவரும், வவுனியா பள்ளிவாசல் குழுவின் பொருளாளரும், சிறிலங்கா பொதுஜன பெரமுவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளரும் ஆவார்.

இவரின் சடலம் அடக்கம் செய்வதற்காக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஒட்டமாவடிக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று : 21 வயதுப் பெண் உட்பட 6 பேர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 21 வயது பெண் உட்பட 6 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில (21.09) காலை வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (20.09) 6 பேர் மரணமடைந்துள்ளனர். அட்டமஸ்கட பகுதியில் பெண் ஒருவரும் (வயது 21), தேக்கவத்தை பகுதியில் நகரசபை உறுப்பினரான பெண் ஒருவரும் (வயது 55), பம்பைமடு காப்பகம் ஒன்றில் ஆண் ஒருவரும் (வயது 78),

குருமன்காடு பகுதியில் பெண் ஒருவரும் (வயது 75), பட்டானிச்சூர் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 65), ஆர்டிஎஸ் விடுதியில் ஆண் ஒருவரும் (வயது 92) என 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் நான்கு கிராம அலுவலர்களுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா மாவட்டத்தில் நான்கு கிராம அலுவலர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆண்டியாபுளியங்குளம் கிராம அலுவலர் மற்றும் விடுமுறையில் இருந்த பெண் கிராம அலுவலர் ஆகிய இருவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல் கட்டி ஆகிய பிரிவு கிராம அலுவலர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா வடக்கில் ஏற்கனவே பிரதேச செயலாளர், இரு கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பல பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சுகமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சீமெந்துக்கு தட்டுப்பாடு : விநியோகத்தர்கள் அதிக விலைக்கு தர முயல்வதாக குற்றச்சாட்டு!!

சீமெந்து..

வவுனியாவில் சீமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு கட்டுமாணப் பணிகளும் பாதிப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் பரவலாக கட்டடநிர்மாணப் பொருள் விற்பனை நிலையங்களில் சீமெந்துக்கு தட்டுபாடு நிலவி வருகின்றது.

அபிவிருத்திட்டங்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமாணங்களில் ஈடுபட்டுள்ளோர் சீமெந்தினை தேடி பல்வேறு வர்த்தக நிலையங்களுக்கும் அலைந்து வருகின்றனர்.

இது தொடர்பில் சீமெந்து விற்பனையாளர்களிடம் கேட்ட போது, தாம் 1005 ரூபாய்க்கு சீமெந்தினை விற்பனை செய்து வந்தோம். தற்போது அந்த விலைக்கு விற்பனை செய்யக் கூடிய வகையில் சீமெந்து வழங்கப்படவில்லை.

தற்போது சீமெந்து விநியோகிக்கும் சிலரிடம் சீமெந்தினைப் பெற்றால் 1200- 1250 ரூபாய் வரையிலேயே எம்மால் விற்பனை செய்ய முடியும்.

அவ்வாறு விற்பனை செய்தால் அதிக விலைக்கு விற்பதாக பாவனையாளர் அதிகார சபையினர் நடவடிக்கை எடுப்பார்கள். அதனால் நாம் கூடிய விலைக்கு வரும் சீமெந்தினை கொள்வனவு செய்யவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சீமெந்துக்கு தட்டுபாடு நிலவுவதால் விடுமுறைக் காலத்தில் கூட பல்வேறு அபிவிருத்தி சார் மற்றும் சொந்த கட்டுமாண நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையில் அரச நிர்வாகத்தினரும், ஒப்பந்தக்காரரும், பொது மக்களும் அவதிப்படுவதை அவதானிக்க முடிகிறது.

வவுனியாவில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படாது மீள ஒப்படைக்கப்பட்ட சடலம்!!

வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சடலம் ஒன்று வழமையாக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனை எதுவும் முன்னெடுக்கப்படாது, மீளவும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் மரணமடைபவர்களின் சடலங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு கோவிட் தொற்று தொடர்பில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு,

அதன் முடிவுகளின் பிரகாரமே சடலங்களை அடக்கம் செய்யும் செயற்பாடுகள் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்தார். இதனையடுத்து குறித்த சடலத்தை வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காகச் சடலத்தை ஏற்றும் வாகனம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த வாகனத்தை மரணித்த பெண்ணின் உறவினர்கள் திருப்பி அனுப்பி விட்டு, வவுனியா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியை அழைத்து அதில் சடலத்தை ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டதும், வழமையாக முன்னெடுக்கப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனைகள் எதுவும் முன்னெடுக்கப்படாது உடனடியாக குறித்த சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் விபத்தில் இறந்தவர்கள், தற்கொலை செய்து மரணித்தவர்கள், வீட்டில் மரணித்தோர் எனப் பலரது சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதில் பலர் தொற்றாளர்களாகவும் இனங்காணப்பட்டும் இருந்தனர்.

இந்நிலையில் குறித்த சடலத்திற்கு வழமையான நடைமுறைகள் எவையும் பின்பற்றப்படாதும், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாதும் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர் காவு வண்டியும் சடலத்தைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவமானது, வைத்தியசாலை அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும், அதிகார பலத்தால் நடைமுறைகள் மாற்றப்படுவதாகவும் சாதாரண அப்பாவிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம்!!

நகரசபை உறுப்பினர்..

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று (20.09) மரணமடைந்துள்ளார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டிருந்த தேக்கவத்தையில் வசித்து வரும் திருமதி.த.புஞ்சிகுமாரி என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மாலை (20.09) மரணமடைந்துள்ளார்.

இவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய போதும் இன, மத பேதங்களுக்கு அப்பால் ஆளும் கட்சி உறுப்பினராக செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதலன் கைவிட்டதால் காதலி எடுத்த விபரீத முடிவு!!

கலையரசி..

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காதலித்த பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்து காதலன் கைவிட்டதால் அப்பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நல்லாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான கலையரசி என்ற பெண், தனியார் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணி செய்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய முத்துக்குமார் என்பவரும் கலையரசியும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

தொடக்கத்தில் கலையரசியின் சாதி குறித்து அறிந்த முத்துக்குமார், விலகத் தொடங்கினார் என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கலையரசி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர் போராட்டம் நடத்திய நிலையில், முத்துக்குமார் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு கணவன் அனுப்பிய சிறுமியின் புகைப்படம் : அதிர்ச்சியில் சிலையான மனைவி!!

தஞ்சாவூர்..

வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு சி.றுமியை கொ.லை செ.ய்த பு.கைப்படத்தை கணவன் அனுப்பிய சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் – விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வித்யா(7), விக்னேஷ் (4). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் ரங்கேஸ்வரன் இ.றந்துள்ளார்.

இந்நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்த விஜயலெட்சுமிக்கு, அண்ணன் முறைகொண்ட அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது த.வறான உறவாக மாறியதால் உறவினர்கள் கண்டித்துள்ளனர்.

வெற்றிவேலுக்கு திருமணம் ஆகி இரண்டு கு.ழந்தைகள் உள்ளனர். மேலும் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தொடர்புக்கு இடையூறாக இருந்த விஜயலட்சுமியின் ஏழு வயது மகள் வித்யாவை வெற்றிவேல் தா.க்கியதாக கூறப்படுகிறது.

இதில் சம்பவ இடத்திலே சி.றுமி உ.யிரிழந்துள்ளார். இதனையடுத்து உ.யிரிழந்த சி.றுமியின் உ.டலை இருவரும் சேர்ந்து பு.தைக்க மு.யன்றபோது அது தோல்வியடைந்தது. இதையடுத்து சடலத்தை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர்.

மேலும் வித்யாவின் புகைப்படத்தை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு வெற்றிவேல் கு.டி.போ.தை.யி.ல் அ.னுப்பியுள்ளார். அதனை பார்த்து அ.திர்ச்சியில் சில நிமிடங்கள் சிலையாக நின்ற மனைவி பின்னர் சுதாரித்து கொண்டு தஞ்சையில் உள்ள உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக உறவினர்கள் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுக்க, விஜயலெட்சுமி மற்றும் வெற்றிவேல் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் ஆ.ற்றில் தூ.க்கி வீ.சப்பட்ட வித்யாவின் உ.ட.லை தே.டும் பணி நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

வீட்டுக்கு எதிரில் சிறுநீர் கழித்த நபருக்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் வீட்டின் எதிரே சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட ச.ண்டையில் ஒருவர் அ.டித்துக் கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில், அனகாபுத்தூர் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். விநாயகர் சதுர்த்தியன்று ராஜேந்திரன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு அவசரமாகச் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டதால் சீனிவாசன் என்பவரின் வீட்டின் எதிரே சிறுநீர் கழித்துள்ளார். அந்நேரம் வீட்டில் இருந்து வெளியே வந்த சீனிவாசன்,

ராஜேந்திரனை தி.ட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் த.கராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆ.வேசமடைந்த சீனிவாசன் அங்கிருந்த உ.ருட்டுக் க.ட்டையை எடுத்து ராஜேந்திரன் த.லையில் பல.மாக அ.டித்துள்ளார்.

இதனால் இ.ரத்த வெ.ள்ளத்தில் கீ.ழே வி.ழுந்த ராஜேந்திரனை அப்பகுதி மக்கள் மீ.ட்டு சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 17-ஆம் தேதி உ.யிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், த.லைமறைவாக இருந்த சீனிவாசனைக் கை.து செ.ய்து சி.றையில் அ.டைத்தனர். சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட த.கராறில் ஒருவர் அ.டித்து கொ.லை செ.ய்யப்பட்ட ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.

மீன்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!!

விபத்து..

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் முன்பாக இன்று அதிகாலை விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு கல்முனை பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

எனினும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் நேரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் மரணம்!!

ஜந்தன் துஷ்யந்தினி..

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்த நிலையில் 27 வயதான இளம் தாயார் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரம் கிளிநொச்சியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது பிரசவத்திற்காக யாழ் போதனா மருத்துவமனை சென்றுள்ளார்.

அங்கு குழந்தையினை பிரசவித்த நிலையில் தாயார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் (19.09.21) நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தர்மபுரத்தில் வசித்துவந்த 27 அகவையுடைய துசி என்று அழைக்கப்படும் அஜந்தன் துஷ்யந்தினி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் யாழ் போதான மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது. இவரது உயிரிழப்பு கிராமத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு இரு வாரங்களுக்குள் தடுப்பூசி!!

தடுப்பூசி..

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளதாக மருந்து தயாரிப்பு விநியோகம், கட்டுப்பாடு தொடர்பான,

ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து ஒரு தொகை பைசர் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

இலங்கையில் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா? வெளியான தகவல்!!

தடுப்பூசி அட்டை..

கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சட்ட ரீதியான விடயங்கள் உள்ளிட்ட,

அனைத்து வகையான விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு தகுதி உடைய அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றியதன் பின்னரே இந்த தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளது.

60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வட்ஸ்அப்..

வட்ஸ்அப் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் நைஜீரிய பிரஜைகள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை பெண்ணொருவருக்கு பரிசு கிடைத்துள்ளதாகவும், அதற்காக குறிப்பிட்டளவு பணத்தை வைப்பு செய்ய வேண்டும் எனவும்,

வட்ஸ்அப் ஊடாக சந்தேகநபர்கள் குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் வட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் இவ்வாறான போலி குறுந்தகவல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.