இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்வதில் நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அமைந்துள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு இறக்குமதி தொடர்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையுடன் ரூபாவின் பெறுமதி இறக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனம் கூறியுள்ளது.
வவுனியா மாவட்டத்திற்கு பி.சீ.ஆர் இயந்திரம் கொள்வனவு செய்வதற்குறிய நடவடிக்கையினை தேவையற்றது என விமர்சித்ததுடன் தங்களால் முடியும் என உறுதிமொழி சொல்லில் மாத்திரம் வழங்கியவர்களினால் மாவட்டத்தில் தற்போது இந்த நிலமை உருவாகியுள்ளதாக வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் ,
இன்று வரை பி.சி.ஆர் இயந்திரத்தை வவுனியாவிற்கு வரவழைக்க முடியாமல் தடுமாறும் நிலை கண்டு நாம் வெட்கி தலைகுனிய வேண்டும்.
வவுனியா வர்த்தக சங்கம் மேற்கொண்ட முயற்சி தேவையற்றது என விமர்சித்தவர்கள் தங்களால் முடியும் என்று சொன்னவர்களின் உறுதிமொழி சொல்லில் மட்டுமே உள்ளது .
அன்று வவுனியா வர்த்தக சங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு ஊக்கம் அளித்து இருந்தால் வவுனியாவின் மோசமான நிலைமையை சற்று குறைத்திருக்க முடியும்.
அத்துடன் அரச வைத்தியசாலைகளின் பௌதீக வளங்களில் ஆளும் தரப்பு அக்கறை கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாவட்டத்தில் பி.சீ.ஆர் இயந்திரம் இன்மையினால் மரணமடைபவர்கள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகள் இரண்டு அல்லது மூன்று நாட்களின் பின்னரே கிடைக்கப்பெறுகின்றன.
அதனையடுத்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் மூன்று மணிநேரத்தினுள் பி.சீ.ஆர் பெறுபேற்றினை பெற்றுக்கொள்ளக்கூடிய பி.சீ.ஆர் இயந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்குறிய அனைத்து நடவடிக்கையினையும் மேற்கொண்டதுடன்,
மாவட்ட வர்த்தகர்கள் மூலம் நிதியும் ஒழுங்கு செய்திருந்தமையுடன் சில அழுத்தங்கள் காரணமாக அச் செயற்பாட்டினை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விலை குழுவினால் நடத்தப்பட்ட கண்காணிப்பின் பிரகாரம், வாழ்க்கை செலவுக் குழுவின் அனுமதியுடன் இந்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார்.
இந்த பொருட்களுக்கான விலை, சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள பின்னணியில், குறித்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கடந்த 6 மாத காலமாக கோரியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா, தவசிகுளம் பகுதியில் இருந்து வெளிநாடு செல்வதாற்காக மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படடுள்ள நிலையில், தொற்றாளர்கள் பிசீஆர் முடிவு வருவதற்கு முன்னரே வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தவசிகுளம் பகுதியில் திருமணம் ஒன்றிக்காக வெளிநாட்டில் இருந்து 6 பேர் வருகை தந்திருந்தனர்.
அவர்கள் மீளவும் வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணம் ஆசிரியர் கல்லூரியில் பிசீஆர் பரிசோதனையை முன்னெடுத்திருந்தனர். அவர்களது பிசீஆர் முடிவுகள் நேற்று இரவு (19.09) வெளியாகிய நிலையில் குறித்த 6 பேரில் 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுகாதாரப் பிரிவினர் குறித்த 5 பேரையும் தனிமைப்படுத்த சென்ற போது அவர்கள் வெளிநாடு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிசீஆர் முடிவு வருவதற்கு முன்னர் குறித்த 6 பேரும் வீட்டில் இருந்து வெளியேறி வெளிநாடு சென்றுள்ளதாகவும், அதில் 5 பேர் கோவிட் தொற்றுடனேயே வவுனியாவில் இருந்து சென்றுள்ளதாகவும் சுகாதரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த நபர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், குறித்த தொற்றாளர்கள் தொற்றுடன் எவ்வாறு வெளிநாடு சென்றார்கள் என்பது குறித்தும் சுகாதாரப் பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய சின்னையா ராஜா, புத்தளம் ஹலாவத்தை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய சச்சிந்த தில்ஷான் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை லொனக் பாற்பண்ணைக்கு சொந்தமான அணைக்கட்டு ஒன்றில் நேற்று (19.09.2021) மாலை 05 மணியளவில் ஐந்து இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர். நீராடிக் கொண்டிருந்த போது,
இதில் இருவர் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன்போது சின்னையா ராஜா என்ற இளைஞன் நீரில் மூழ்கியபோது, சஜிந்த டில்சான் என்பவர் அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட வேலையில் இருவரும் நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதற்கமைய, அவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 19.09.2021 அன்று மாலையே தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், 20.09.2021 அன்று திங்கட்கிழமையே அவர்களிருவரது சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன. இராணுவத்தினரும், பொது மக்களும் இணைந்தே சடலங்களை மீட்டுள்ளனர்.
இவர்கள் கட்டிட நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 5 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (20.09) காலை வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 42 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (19.09) 5 பேர் மரணமடைந்துள்ளனர். 4ம் கட்டை பகுதியில் பெண் ஒருவரும் (வயது 86), புகையிரத நிலைய வீதியில் ஆண் ஒருவரும் (வயது 63),
புதுக்குளம் பகுதியில் பெண் ஒருவரும் (வயது 61), கோயில்புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 81), தாண்டிகுளம் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 73) என 5 பேர் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா குட்செட் வீதியில் இன்று (20.09.2021) அதிகாலை வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபர் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்த திருடர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் போது வீட்டு உரிமையாளர் அவதானித்ததை தொடர்ந்து வீட்டின் உரிமையாளரை தாக்கி கழுத்தை நெரித்து,
ஒருவர் பிடித்து வைத்திருக்க மற்றையவர் அவரை தாக்கிய பொழுது வீட்டில் இருந்த உரிமையாளரின் மருமகன் அதனை தடுத்து கைகலப்பில் ஈடுபட்ட வேளையில் அயலவர்கள் ஓடி வரவும் சுதாகரித்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
எனினும் ஒருவர் மாட்டிக்கொண்டார் இதனை தொடர்ந்து வவுனியா பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பாக அறிவித்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் திருடனை கைது செய்து கொண்டு சென்றனர்.
இதேவேளை 50000 ரூபா பெறுமதியான பொருட்களை ஏனைய திருட்டில் ஈடுபட்ட ஏனைய நபர்கள் கொண்டு சென்றுள்ளனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த திருட்டில் ஈடுபட்ட நபர் வவுனியாவில் கண்டி வீதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை நிறுவனத்தின் டீசேட் அணிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கிளைமதோன் வவுனியா எனும் தொனிப்பொருளில் நகரங்களை அடிப்படையாக கொண்டு உலகளவில் நடாத்தப்படும் போட்டி நிகழ்வாகும். இவ் நிகழ்வினை வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இயற்கைவழி இயக்கம் இணைந்து நடாத்துகின்றார்கள்.
இவ் வருடம் கிளைமதோன் வவுனியாவானது இளம் புகைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக காலநிலை மாற்றம் மற்றும் அதற்கான தீர்வுகளை புகைப்படத்தினூடாக பதிவு செய்ய உள்ளனர்.
மேலும் போட்டியில் சிறந்த புகைப்பட கலைஞராக ஒரு வெற்றியாளரும் பிரபலமான போட்டியாளராக ஒரு வெற்றியாளராக ஒருவரும் தெரிவு செய்யபடுவார்கள்.
போட்டிக்கான பதிவுகளை செப்டம்பர் 12 முதல் ஒக்டோபர் 10 வரை மேற்கொள்ள முடியும் என்பதுடன் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பற்றலாம்
புகைப்படங்களை 1024 பிக்சல்கள் மற்றும் jpeg வடிவில் இருந்தல் அவசியம் என்பதுடன் மேலதிக தொடர்புகளுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை (https://climathon.climate-kic.org/asia/sri-lanka/vavuniya/?lang=en) பார்வையிடுவதன் மூலம் பெற்று கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை சமந்தா, அவரது காதல் கணவர் நாக சைதன்யா பற்றி கடந்த சில வாரங்களாகவே விவகாரத்து சர்ச்சை எழுந்து வருகிறது. அது பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் நாக சைதன்யா நடித்து வெளிவர உள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தின் டிரைலருக்கு சமந்தா வாழ்த்து கூறி அதற்கு நாக சைதன்யா பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து அவர்களைப் பற்றிய சர்ச்சை செய்திகள், வதந்திகள் தற்போதைக்குக் குறைந்துள்ளன. இதனிடையே, தனது நண்பர்களுடன் திருப்பதி பெருமாள் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் சமந்தா.
அவரிடம் ஒரு டிவி நிருபர் ஒருவர் உங்களைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருக்கிறதே எனக் கேட்டதற்கு சமந்தா, கோபத்துடன், ‘கோயிலுக்கு வந்து. இதைக் கேக்கறீங்களா, புத்தி இருக்கா” என பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மன அமைதி வேண்டி சாமி கும்பிடச் சென்றவரிடம் இப்படி கேள்வி கேட்கலாமா என அந்த நிருபரை பலரும் திட்டி வருகிறார்கள்.
நீட் தேர்வு எழுதிவிட்டு மாணவி ஒருவர் மாயமாகிய நிலையில், இறுதியில் காதலனுடன் திருமணம் செய்துவிட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்ன அரியா கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவர் நாமகிரிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இவரது மனைவி தங்கம்.
இவர்களுக்கு சுவேதா என்ற மகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், ஸ்வேதா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி பெற்றுள்ளார்.
கடந்தவாரம் திருச்செங்கோட்டில் உள்ள மையத்தில் அவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்தது முதலே சோகமாக காணப்பட்டுள்ளார். ஸ்வேதாவை அவரது பெற்றோர்கள் சமாதானம் செய்துள்ள நிலையில், நேற்று காலை 11 மணியளவில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரைக் காணவில்லை.
இதனால் பல இடங்களில் தேடிய உறவினர்கள் பின்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் மாணவி சரணடைந்ததாக வந்த தகலையடுத்து நாமக்கல் பொலிசார் அங்கு சென்றுள்ளனர்.
விசாரணையில் காதல் விவகாரம் காரணமாக மாணவி வீட்டிலிருந்து மாயமாகியதாகவும், அவரும் அவரது காதலனும் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் குடும்ப தகராறில் தனது மனைவியை கண்ட துண்டமாக வெ.ட்டி கொ.லை செ.ய்து கால்வாயில் வீசிய ச.ம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரேதேச மாநிலம் மீரூட் பகுதியை சேர்ந்தவர் தீபக் நிராலா. இவர் எழுத்தாளர் என்பதால் அ.டிக்கடி ரயிலில் பயணம் செய்வது வ.ழக்கம். அப்போது அவருக்கு லக்னோ பகுதியில் உள்ள ஒரு வர்த்தக தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த ரூபி குப்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அது நாளடைவில் இருவருக்குள் காதலாக மலர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவருக்குள் அ.டிக்கடி த.கராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி இருவருக்குள் 20 லட்சம் பண தொடர்பாக ச.ண்டை ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் வா.க்குவாதம் அளவுக்கு மீறியதால் ஆ.த்திரம் அடைந்த தீபக் தனது மனைவியை இரும்பு கம்பியால் பலமாக தா.க்கியுள்ளார்.
இதில் ரூபிக்கு ப.லத்த காயம் ஏற்பட்டு ம.யங்கி விழுந்து உ.யிரிழந்தார். பின்பு செய்த கொ.லையை மறைக்க மனைவியை துண்டு துண்டாக வெ.ட்டி சா.க்கு மூட்டையில் கட்டி கால்வாயில் தூ.க்கி வீசியுள்ளார்.
அதன் பிறகு தன் மேல் சந்தேகம் வரக்கூடாது என்று சினிமா பாணியில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா சென்று வந்த பிறகு தனக்கு எதுவும் தெரியாதது போல் ம.னைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் பு.காரும் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் முதற்கட்ட வி.சாரணையாக தீபக்கிடம் நடைபெற்றது. இதில் தீபக் நிராலா தன்னுடைய மனைவியை கொ.லை செ.ய்து நாடகமாடுவதை பொலிஸ் கண்டுபிடித்தனர். இதையடுத்து பொலிசார் தீபக் மீது வழக்கு பதிவு செய்து கைது செ.ய்துள்ளனர்.
இந்திய மாநிலம் கர்நாடகாவில் குடியிருப்பு ஒன்றில் பிஞ்சு குழந்தை உட்பட ஐவரை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மாகடி சேதன் பகுதியில் வாடகை குடியிருப்பு ஒன்றில்,
வசித்து வந்த சங்கர் என்பவரின் மனைவி பாரதி(51), இவரது மகள் சிஞ்சனா(34), சிந்துராணி(34), இவரது மகன் மதுசாகர்(25) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இவர்களுடன் 9 மாத குழந்தை பசியால் இறந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. மேலும், சடலங்களுடன் சுயநினைவை இழந்த நிலையில் இரண்டரை வயதுள்ள சிறுமி ஒருவரையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
தற்போது அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சொத்து மீதான தகராறு காரணமாகவே இச்சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பாரதியின் கணவர் சங்கர் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். இந்த நிலையில் தமது மனைவி உள்ளிட்டவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் குடியிருப்பில் எவரும் அழைப்பை ஏற்காத நிலையில் அவர் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையிலேயே மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்டது அவருக்கு தெரிய வந்தது. தற்போது இந்த வழக்கை பொலிசார் தீவிரமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18.09.2021) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையில் வருகைத் தந்த கணவர், நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மனைவி, கணவரை பொல்லால் தாக்கியுள்ளதை அடுத்து, கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தனது 8 வயதான மகளுடன் அதே வீட்டில் தங்கியிருந்த 27 வயதான மனைவி, அதிகாலை தனது மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தையை ஒப்படைத்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவத்தில் அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி நடைபெற்ற கும்பாபிசேக நிகழ்வில் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையால் ஆலயம் மற்றும் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாபிசேகம் நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரப் பிரிவினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
தற்போதைய கோவிட் பரவல் நிலையை அடிப்படையாக கொண்டு ஆலய நிர்வாகத்தினர், உபயகாரர் என 9 பேருக்கே சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
ஆனால், குறித்த ஆலயத்தில் 20 பேருக்கு மேல் கலந்துகொண்டுள்ளதாகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து அங்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி ஆலயத்தில் நின்ற 20 பேரிடமும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் ஆலய குருக்கள் உட்பட 6 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதுடன், ஆலயத்திற்கு வந்து சென்றோர் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் ஆகியோரிடமும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மேலும் 7 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆலய கும்பாபிசேக நிகழ்வுடன் தொடர்புபட்ட 13 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கிண்ணியா – சமாவச்சதீவு பள்ளிவாசலுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை யாருடையது எனக் கிண்ணியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமாவச்சதீவு பகுதியில் ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று (19.09) அதிகாலை மீட்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு இராணுவ புலனாய்வுத் துறையினர் வழங்கிய தகவலையடுத்து குறித்த குழந்தை மீட்கப்பட்டதாகவும் பிறந்து ஒரு மாதத்திற்குக் குறைவாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தையைக் கிண்ணியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா-சமாவச்சதீவு பிரதேசத்திற்குப் பொறுப்பான குடும்ப நல உத்தியோகத்தரை கேட்டபோது தங்களுடைய பகுதியில் கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் தமது கிளினிக் வருவதாகவும்,
இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட எவரும் இல்லை எனவும் கிண்ணியாவில் வேறு பகுதியிலிருந்து கொண்டு வந்து குறித்த இடத்தில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஆனாலும் வெளிநாடுகளிலிருந்து இங்கே வந்து திருட்டுத்தனமாக மறைந்திருந்து குழந்தையைப் பிரசவித்த பின்னர் தனது கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் மற்றுமொரு குடும்ப நல உத்தியோகத்தரொருவர் தமது சந்தேகத்தை வெளியிட்டார்.
இருந்தபோதிலும் கிண்ணியா பொலிஸார் குழந்தை மீட்கப்பட்ட இடத்தை அண்மித்த பகுதியில் உள்ள சிசிடிவி காணொளிகளைப் பெற்று வருவதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சிறுவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் சிறுவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு விசேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்களுக்குள் சிறுவர்களுக்கு இதுவரையில் கருப்பு பூஞ்சை தொற்றியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சிறுவர்களை கருப்பு பூஞ்சை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் தொற்றினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதன் போது இதன் அறிகுறிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதற்கமைய, கருப்பு பூஞ்சை பாதித்து விட்டால் முதலில் முகம் வீங்கும், காய்ச்சல் ஏற்படும், தலைவலி, மூக்கின் உட்புறத்தில் கருப்பு நிறத்தில் காணப்படும் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இதனை கவனிக்காமல் விட்டால் கண்களை பாதிக்கும். கண்களை பாதித்து விட்டால் பார்வையில்லாமல் போய்விடும். பார்வையில்லாமல் போய்விட்டால் அதன் பின்னர் எவ்வளவு சிகிச்சையளித்தாலும் மீளவும் இழந்த பார்வையை மீள பெற முடியாது.
அவ்வாறான நோய் அறிகுறிகள் கொண்ட சிறுவர்கள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.