இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு!!

பால் மா..

இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரித்துமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர். இதனையடுத்து நிதியமைச்சருடன் நீண்ட நேரம் சந்தையின் நிலை மற்றும் இறக்குமதிக்கான வரி என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் இணங்கியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமை, கப்பலுக்கான கட்டணம் அதிகரித்துள்ளமை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரியிருந்தனர்.

எவ்வாறாயினும் இதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படாமையை அடுத்து பால்மா இறக்குமதி தடைப்பட்டிருந்தது. தற்போது சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்த பின்னணியில் நிதியமைச்சருக்கும் பால்மா இறக்குமதியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் மாதாந்தம் 6,500 முதல் 7,000 மெற்றிக் டன் வரையிலான பால்மா பயன்படுத்தப்படுகின்றது. நாளாந்தம் சுமார் 200 மெற்றிக் டன் பால்மா பயன்படுத்தப்படுகின்றது.

சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் பால்மா 945 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதோடு குறித்த விலை அதிகரிப்பினை அடுத்து 1,145 ரூபாவுக்கு ஒரு கிலோகிராம் பால்மா விற்பனை செய்யப்படும். இந்நிலையில் விலை அதிகரிப்பு அடுத்த வாரம் வாழ்க்கை செலவு குழுவிடம் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.

-தமிழ்வின்-

சர்வதேச வெற்றிப் பாடலாக மாறியுள்ள சிங்களப் பாடல் : குவியும் பாராட்டுக்கள்!!

மெனிகே மகே ஹித்தே..

மெனிகே மகே ஹித்தே என்ற பாடலை 100 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு கடல் கடந்து புகழ் உச்சம் தொட்டுள்ளது. உலகின் பல பாகங்களிலிருந்தும் இந்தப் பாடலுக்கு பெரும் ஆதரவு கிடைக்கப்பெற்று வருகின்றது. உலகின் பலரும் இந்தப் பாடலை ரசித்து தங்களது வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் யூடியூப்பில் இந்தப் பாடலை இதுவரையில் 100 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.இலங்கைப் பாடல் ஒன்று இந்தளவு பேர் பார்வையிட்டது இதுவே முதல் தடவையாகும். யூடியூபில் இந்த பாடல் வெளியாகி 4 மாதங்களில் 110 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் முதல் இன்ஸ்டாகிராமர்கள் வரை அனைவரும் இந்த பாடலின் ரசிகர்களாகியுள்ளார்கள். அவர்களில் சிலர் தங்கள் வீடியோக்களில் பாடலை பின்னணி இசையாகக் கொண்டுள்ளனர், சிலர் அதற்கு நடனமாடியுள்ளனர், ஏனையவர்கள் வெறுமனே டியூன் செய்துள்ளனர்.

வைரலான சிங்களப் பாடலின் தற்போதைய பதிப்பு கடந்த மே வெளியிடப்பட்டது. இலங்கை ரப் பாடகர்கள் யொஹானி மற்றும் சதீஷன் ஆகியோரால் பாடப்பட்டது. அவர்கள் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் ஒரே இரவில் பிரபலமடைந்துள்ளார்கள்.

குறித்த பாடல் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் புதிய கலாசாரத்தூதுவர் யொகானி திலோக்கா டி சில்வா தோன்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

யூடியூப்பில் 110 மில்லியனுக்கும் அதிக தடவைகள் பார்க்கப்பட்ட ‘மெனிகே மகேஹிதே’ பாடல், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை இந்தியாவில் பலமில்லியன் மக்களின் இதயங்களைக்கவர்ந்துள்ளது.

இது,பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானதும் உண்மையில் இயல்பானதுமான இந்திய இலங்கை உறவின் ஆழத்தை, பிரதிபலிக்கின்றது என குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனாவால் மரணித்தவர்களின் உடலை சீரழிக்காது தகனம் செய்யுமாறு மரணித்தவர்களின் உறவினர்கள் வேண்டுகோள்!!

கொரோனா..

கோவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களை இறுதி நேரத்தில் பார்க்க முடியவில்லை. தகனத்தையாவது உடனடியாக செய்து ஆத்ம சாந்திக் கிரியைகளைச் செய்வதற்கு உதவுமாறு மரணித்தவர்களின் உறவினர்கள் உருக்கமாகக் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணித்த 20 வரையிலான சடலங்கள் இதுவரை தகனம் செய்யப்படாத நிலையில் வவுனியா வைத்தியசாலையில் உள்ளன. சில சடலங்கள் கடந்த 8 நாட்களாகத் தகனம் செய்யப்படாத நிலையில் உள்ளன.

இந்நிலையில், கோவிட் தொற்று காரணமாக மரணித்த தமது குடும்ப உறவுகளை குடும்பத்தினர், உறவினர்கள் முழுமையாகப் பார்வையிட்டு அஞ்சலி செலுத்த முடியாத நிலை உள்ளது. தகனம் செய்து, அஸ்தியைப் பெற்று ஆத்ம சாந்தி கிரியைகள் மூலமே மரணித்த உறவுகளின் சோகத்தை ஆற்ற முடிகின்றது.

அதனைக் கூடச் செய்ய முடியாது பல நாட்டைகளாக இறந்தவரின் உடல்களைத் தகனம் செய்யாது, இறந்த பின் கூட உடலை நீண்ட நாள் வைத்து உருக்குலைக்காதீர்கள். இது அவர்கள் இறந்த பின் கூட நிம்மதியாகத் தகனம் செய்ய முடியவில்லையே என்ற வேதனையைத் தருகின்றது. இறந்த துயரைக் காட்டிலும் சடலத்தை வைத்து இழுத்தடிப்பதால் வரும் துயரத்தைத் தாக்க முடியவில்லை.

எனவே, உரிய அதிகாரிகள் இறந்தவர்களின் உடல்களை விரைவாகத் தகனம் செய்வதற்கு உதவ வேண்டும் என மரணமடைந்தவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மின் மயானம் கடந்த சில நாட்களாகப் பழுதடைந்து காணப்பட்டமையால் சடலங்கள் தேக்கமடைந்திருந்ததாகவும், தற்போது மீண்டும் இயங்குகின்ற போதும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 சடலங்களையே குறித்த மின் மயானத்தில் தகனம் செய்ய முடிவதால் தாமத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் சடலங்களை எரிப்பதற்கான பெயர் விபரங்கள் கட்டணம் செலுத்தப்பட்ட அடிப்படையில் நகரசபையினால் தரப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வீதிகளில் பொதுமக்கள் : வீடுகளுக்குள் வைரஸ் : ஊரடங்கை மதித்து நடக்குமாறு வேண்டுகோள்!!

வீதிகளில் பொதுமக்கள்..

நாடு முழுவதும் கொரோனாவின் டெல்டா வைரஸே தாண்டவமாடுகின்றது. இந்நிலையில், நாட்டைத் திறக்கும் திகதியை அரசு ஒக்டோபர் முதலாம் திகதி வரைக்கும் பிற்போட்டமை வரவேற்கத்தக்கது.

ஆனால், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீதிகளில்தான் பயணிக்கின்றார்கள். இதனால்தான் வைரஸ்கள் இன்று வீடுகளுக்குள் புகுந்துள்ளன என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஊரடங்கை மதித்து நடந்து வீட்டிலுள்ள அனைவரினதும் உயிர்களையும் காப்பாற்றுமாறு வெளியில் திரியும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்லுங்கள்.

இன்று வெளியிடங்களில் சமூக இடைவெளிகளைக் காணமுடியாமல் இருக்கின்றது. வீட்டிலிருந்து வெளியே போகும்போதும் வீட்டுக்குள் வந்த பின்னரும் சுகாதார விதிமுறைகளை உரிய வகையில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளை அரசு அதிகரிக்க வேண்டும். மாவட்டங்களுக்கிடையில் அல்லது மாகாணங்களுக்கிடையில் இறுக்கமான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும்.

இலங்கை இன்னமும் கொரோனாவின் சிவப்பு அபாய வலயத்துக்குள் இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அரசு அவசரப்பட்டு நாட்டை முழுமையாகத் திறக்கக்கூடாது. எதிர்வரும் வாரங்கள் தீர்க்ககரமானவை” – என்றார்.

வவுனியாவைச் சேர்ந்த 14 வயது சி.றுவன் மீது தி.ருட்டுப் பழி சுமத்தியதால் தூ.க்கிட்டு ம.ரணம் : கொ.லையென க.தறும் தாய்!!

நாகேந்திரன் டிலக்ஸன்..

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த 14 வயதுடைய சி.றுவனொருவர் தூ.க்கில் தொ.ங்கிய நி.லையில் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

இதன்போது, நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவனே நேற்று தூ.க்கிட்ட நிலையில் அவரது வீட்டின் சாமி அறையிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

கள்ளியடியில் உள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற தி.ருட்டுச் சம்பவம் தொடர்பான மு.ரண்பாட்டின் காரணமாக குறித்த சி.றுவன் த.ற்கொலை? செய்துள்ளதாக தெரிய வருகிறது.

கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த சிறுவன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் தி.ருடப்பட்டதாக அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சி.றுவனின் நண்பரிடத்தில் கூறிய போது அவர் எடுத்திருந்தால் பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்.

பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்று சி.றுவனை தா.க்கியதாகவும், சிறுவனின் தாய் தா.க்க முயன்றவர்களின் காலில் விழுந்து க.தறியதாகவும், சி.றுவனை தொடர்ந்தும் தா.க்கிவிட்டு செ.ன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் வெளியில் சென்று வீட்டுக்கு வந்தபோது சி.றுவனை தா.க்கியவர்கள் மறுபடியும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்து தாயார் ஓடி வந்து பார்த்த போது மகன் தூ.க்கில் தொ.ங்கிய நி.லையில் இருந்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

இது த.ற்கொலை அ.ல்ல எனவும், மகன் த.ற்கொலை செய்யுமளவுக்கு விபரம் தெரியாதவர் எனவும் தாய் தெரிவித்துள்ளார். குறித்த சி.றுவனின் ம.ரணம் தொடர்பாக இதுவரை எவரும் கை.து செய்யப்படாத நிலையில், மேலதிக வி.சாரணைகளை இலுப்பைகடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நடந்த கொடூரம் : கணவனை அடித்துக் கொன்ற மனைவி!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் கணவனை அ.டித்து கொ.லை செ.ய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு குடும்ப மு.ரண்பாடு மு.ற்றியமையினால் அது வ.ன்முறையாக மாறியது. இந்நிலையில் மனைவியின் கடு.மையான தா.க்குதலுக்குள்ளான 32 வயதான துரைராசா செல்வராசா என்ற ஒரு பிள்ளையின் தந்தை உ.யிரிழந்துள்ளார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப மு.ரண்பாடு முற்றிய நிலையில் நேற்றிரவு கொ.லை செ.ய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப வி.சாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் வி.சாரணைகள் முன்னெடுத்தனர்.

உடனடியாக ச.ந்தேக நபரான மனைவி கைது செய்யப்பட்டார். திருவலைக் கட்டையால் க.டுமையாகத் தா.க்கப்பட்ட குடும்பத்தலைவரின் உ.டலில் ஐந்திற்கு மேற்பட்ட கா.யங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று : மூவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (18.09) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 83 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் மூவர் மரணமடைந்துள்ளனர். பட்டக்காடு பகுதியில் பெண் ஒருவரும் (வயது 43), மன்னார் வீதியில் பெண் ஒருவரும் (வயது 83), பாண்டியன் வீதி கூமாங்குளத்தில் ஆண் ஒருவரும் (வயது 93) ஆக 3 பேர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த சிறுவன் மன்னாரில் தூ.க்கிட்டு ம.ரணம் : கொ.லையா என சந்தேகம்!!

நாகேந்திரன் டிலக்ஸன்..

மன்னார் -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சி.றுவன் நேற்றைய தினம் மாலை தூ.க்கிட்ட நிலையில் அவருடைய ச.டலம் அவரது வீட்டின் சாமி அறையில் மீ.ட்கப்பட்டுள்ளது.

கள்ளியடியில் உள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற தி.ருட்டுச் சம்பவம் தொடர்பான மு.ரண்பாட்டின் காரணமாக குறித்த சி.றுவன் த.ற்கொலை செ.ய்துள்ளதாக தெரிய வருகிறது. குறித்த சம்பவம் தெடர்பாக மேலும் தெரிய வருகையில்,

கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் தி.ருடப்பட்டதாக அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சிறுவனின் நண்பரிடத்தில் கூறிய போது அவர் எடுத்திருந்தால் பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளனர்.

பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவனை தா.க்கியதாகவும் சி.றுவனின் தாய் தா.க்க முயன்றவர்களின் காலில் வி.ழுந்து க.தறியதாகவும் இருந்தாலும் சி.றுவனை தொடர்ந்து தா.க்கிவிட்டு செ.ன்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் குளித்து விட்டு வந்த நேரம் தா.க்கியவர்கள் மறுபடியும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்து தாயார் ஓடி வந்து பார்த்த போது மகன் தூ.க்கில் தொ.ங்கிய நி.லையில் இருந்ததாகவும் தாயார் தெரிவிக்கின்றார்.

இது த.ற்கொலை அல்ல எனவும் மகன் த.ற்கொலை செய்யுமளவுக்கு விபரம் தெரியாதவர் எனவும் தாய் தெரிவிக்கின்றார். குறித்த சி.றுவனின் ம.ரணம் தொடர்பாக இதுவரை எவரும் கை.து செய்யப்படவில்லை. மேலதிக வி.சாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 4 நாளில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம் : கதறும் குடும்பம்!!

தியாகராஜன்…

பெரம்பலூர் அருகே திருமணம் செய்த 4 நாட்களில் இளைஞர் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அடுத்த பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமரேசன் மகன் தியாகராஜன் (30). கூலி தொழிலாளியான இவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த 13ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தியாகராஜன் கழிவறைக்கு சென்று வெகுநேரம் கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்த போது, புதுமாப்பிள்ளை ஜன்னலில் தூ.க்.கி.ட்டு உ.யிருக்கு போ.ராடியவாறு து.டிதுடித்துள்ளார்.

உடனே மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர் உ.யிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளதோடு, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 4 நாட்களில் இளைஞர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 84 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்,

இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 33 பெண்களும்,51 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குழந்தை பிறந்த 10 நாளில் மனைவியை கொலை செய்த கணவன் எடுத்த விபரீத முடிவு : மிகுந்த வலியுடன் எழுதி வைத்த கடிதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் குழந்தை பிறந்த 10 நாட்களில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள தாரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் திலீப் (26). இவருக்கும் பிரதீபா (22) என்ற பெண்ணிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பிரதீபா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தம்பதி இடையே சில காலமாகவே குடும்ப விடயம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் பிரதீபாவுக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற திலீப் பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இருவரின் சடலங்களையும் பொலிசார் கைப்பற்றிய பின்னர் திலீப் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள். அதில், என் வாழ்க்கையில் விரக்தியடைந்துவிட்டேன், எனக்கு திருமணம் ஆன போதும் பின்னரும் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் திருமணம் செய்த பெண் என் குடும்பம் மற்றும் அனைத்தும் நாசமாகிவிடும் என அப்போது எனக்கு தெரியாது.

அவளும், அவள் தாயாரும் என் மீது மிக கேவலமான குற்றச்சாட்டை முன் வைத்ததால் நான் மிகவும் மனமுடைந்து போனேன். என் தாயாரிடம் பிரதீபா மிகவும் மோசமாக நடந்து கொண்டார், நான் என் மனைவியை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்கிறேன்.

என் தாயார் மற்றும் சகோதரிகள் வரும் வரை என் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டாம் என மிகுந்த வலியுடன் அந்த கடிதத்தை திலீப் எழுதியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலியை 10 ஆண்டுகளாக வீட்டு அறையில் ரகசியமாக வைத்திருந்த இளைஞர் : அதிர்ச்சியூட்டும் பின்னணி!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில், பத்து வருடங்கள் இரகசியமாக ஒன்றாக வாழ்ந்த ஒரு காதல் ஜோடி இறுதியாக திருமணம் செய்து கொண்டது. யாருக்கும் தெரியாமல் தனது காதலி சஜிதாவை தனது வீட்டில், ஒரே அறையில் 10 வருடங்களுக்கு மேலாக மறைத்து வைத்திருந்ததற்காக சமீபத்தில் தலைப்பு செய்தியாக வந்தவர் ரஹ்மான்.

இறுதியாக சென்ற புதன்கிழமை கேரளாவின் பாலக்காட்டில் உள்ள நென்மாராவில் தனது காதலியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார். உள்ளூர் துணை பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சரி அவர்கள் மாட்டிக்கொண்டது எப்படி? : ரஹ்மான் மார்ச் 10-ஆம் திகதி தனது வீட்டை விட்டு எங்கேயோ சென்று விட்டார். அவரது குடும்பத்தினர் அவரை தேடிவந்தனர்.

இந்த நிலையில், ஜூன் 7, 2021 அன்று, ரஹ்மானின் சகோதரனான டிரக் டிரைவர் பஷீர் பாலக்காட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் நென்மாரா நகரில், தனது சகோதரர் ரஹ்மான் மோட்டார் சைக்கிளில் செல்வதைக் கண்டார். பஷீர் அவரைப் பின்தொடர்ந்தார். பல நாட்கள் கழித்து அவரை பார்க்க செல்வதால் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க முடிவு செய்தார் பஷீர்.

வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்துவந்த ரஹ்மானை காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் பிடித்தனர். பின்னர் பொலிஸார் ரஹ்மானுடன் அவர் விதானசேரி என்ற இடத்தில் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு சென்றனர்.

அங்கு அதிகாரிகள் சோதனை செய்ததில், ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தனர். ரஹ்மான் அவர் தனது மனைவி என்று கூறினார்.
அப்பெண்ணிடம் விசாரித்ததில், அவர் 11 வருடங்களாக அதே காவல் நிலைய எல்லைக்குள் காணாமல் போயிருந்த சஜிதா என்பதை அவர்கள் அறிந்து அதிர்ந்துபோனார்கள்.

பின்னர் விசாரணையில், சஜிதா கடந்த 10 ஆண்டுகளாக தனது பெற்றோர் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் ரஹ்மானின் வீட்டில் ஒரு அறையில் ரகசியமாக வாழ்ந்துவந்துள்ளார், இந்த விடயம் ரஹ்மானுடன் அதே வீட்டில் இருந்த அவரது பெற்றோருக்கே தெரியாது என்று தெரியவந்தது. இவர்களை பற்றிய செய்தி இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

10 வருடங்களுக்கு முன் நடந்தது என்ன? : பிப்ரவரி 2010 இல், சஜிதா தனது இரண்டு சகோதரிகளில் ஒருவரது வீட்டிற்குச் சென்று திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர், ஆனால் பொலிஸாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

குடும்பம், இறுதியில் அவளைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையை கைவிட்டது. அந்த கிராமமும் அவரை கிட்டத்தட்ட மறந்துவிட்டது. அவர் யாரோ ஒருவருடன் தமிழ்நாட்டுக்கு ஓடிவிட்டார் என்று பலர் நினைத்தார்கள் என்று ஒரு பொலிஸ் அதிகாரி கூறினார்.

அனால், சஜிதா 100 மீட்டர் தொலைவில் இருந்த காதலன் ரஹ்மானின் வீட்டிற்கு சென்றுள்ளார். ரகுமானின் தாய் தந்தைக்கே தெரியாமல் ஒரே வீட்டில், குறிப்பாக ஒரே அறையில் தங்கி இருந்துள்ளார்.

அந்த அறையில் கழிப்பறை கூட கிடையாது. இரவில் ஜன்னல் வழியாக யாருக்கு தெரியாமல் வெளியேறி சென்று தனது தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, ரஹ்மான் தனது அறைக்கு என்று பிரத்தியேகமாக ஒரு பூட்டை தயார் செய்து பயன்படுத்தியுள்ளார்.

எப்படியோ, எல்லாம் வெட்டவெளிச்சமாகி, இறுதியாக சென்ற புதன்கிழமை கேரளாவின் பாலக்காட்டில் உள்ள நென்மாராவில் தனது காதலியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மதுபானசாலை மீண்டும் திறப்பு : அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்!!

வவுனியாவில் சுகாதாரப் பிரிவினரால் தனிப்படுத்தப்பட்ட மதுபானசாலை சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மதுபானசாலைகளை திறப்பதற்கு மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியதாக நேற்று மாலை (17.09) வவுனியாவில் சில மதுபானசாலைகள் திறக்கப்பட்டதுடன்,

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நேரத்திலும் மதுபானசாலைகளின் முன்னால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவானோர் கூடியிருந்தனர்.

இதனையடுத்து வவுனியாவில் சுகாதாரப் பிரிவினரால் அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு சில மதுபானசாலைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் சுகாதாரப் பிரிவினரின் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி தனிமைப்படுத்தல் நோட்டீஸை அகற்றி, மருகாரம்பளை மதுபானசாலை இன்று (18.09) திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது.

அத்துடன், குறித்த மதுபானசாலையில் அதிகளவிலவானோர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது வந்து செல்கின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட மதுபானசாலை சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி ஆனுமதியின்றி திறக்கப்பட்டமை தொடர்பில் வழக்கு தொடரவுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாவட்டத்தின் தற்போதைய கோவிட் பரம்பல் நிலையிலும் மதுபானசாலைகளின் முன்னால் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவில் மக்கள் கூடுகின்றமை மற்றும் சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை மீறி,

மதுபானசாலையை திறந்து வியாபாரம் செய்கின்றமை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள சுகாதரப் பிரிவினர் ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், வர்த்தக நிலையங்களை பார்வையிடல், மக்களின் நடமாட்டமத்தை கட்டுப்படுத்தல், சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல் போன்ற செயற்பாடுகளில் இருந்து ஓதுங்கி இருப்பது தொடர்பிலும் கலந்துரையாடி வருவதாகவும் தெரியவருகிறது.

விண்வெளியிலிருந்து 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்!!

விண்வெளியிலிருந்து..

விண்வெளியில் ஆய்வு மையம் ஒன்றை கட்டமைக்கும் பணிகளுக்காக சென்றிருந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளனர்.

சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைத்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.

தியான்ஹே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி ஆய்வு மையத்துக்கான மைய பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் திகதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ‘தியான்ஹே’ விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நை ஹைஷெங்,லியு போமிங், மற்றும் டாங் ஹோங்போ ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு அவர்கள் விண்வெளி ஆய்வு மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் முழு ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் 2 முறை விண்வெளி நடை பயணத்தையும் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி 90 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் பூமிக்கு புறப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.30 மணிக்கு சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில், இவர்கள் பயணித்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.

வவுனியா உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் 50 பேருக்கு கொரோனா தொற்று : மூவர் தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த காப்பகத்தில் கொரோனா தொற்று காரணமாக மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தை சேர்ந்த இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் மரணமடைந்த நிலையில், இன்றும் (17.09) ஒருவர் மரணமடைந்துள்ளார்.

அத்துடன், குறித்த காப்பகத்தில் இருப்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நோயினால் உயிரிழந்த தாய் : கொரோனா தொற்றுக்குள்ளான யுவதிக்கு அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

பண்டாரவளையில்..

பண்டாரவளையில் உயிரிழந்த தாயை பார்க்க கொவிட் தொற்றுக்குள்ளான மகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 17 வயதான யுவதிக்கு இந்த வாய்ப்பினை கொடுத்து நெகிழ்ச்சியான செயலினை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்ட மகளுக்கு தாயின் சடலத்தை பார்வையிடுவதற்காக சுகாதார பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மகள் கொவிட் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தாய் திடீரென உயிரிழந்துள்ளார். அவர் பண்டாரவளை, ஒபடஎல்ல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய யுவதியாகும்.

குறித்த யுவதி தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்த போது கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று தனிமைப்பட்டிருந்த நிலையில் அவரது தாயார் வேறு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சங்கடமான இந்த தருணத்தில் தாயினை பார்க்க பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.