இலங்கையில் தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது.
டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது. அத்துடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும். அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், முகக்கவசம் அணியாதவர்களை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது கோவிட்டை கட்டுப்படுத்த முடியாது. எனவே ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்து, உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து,
வரலாற்றில் இடம்பிடித்துள்ள இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு இலங்கை ஜனாதிபதி, பிரதமர், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கமைய F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட தினேஷ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்துள்ளார். இந்த தூரமானது உலக சாதனை புத்தகத்தில் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளை தவிர்த்து பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாக தெரியவருகின்றது.
இவ் விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அக் கலந்துரையாடலில், க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய 622,000 மாணவர்களில், 170,000திற்கும் குறைவான மாணவர்களே, சங்கீதம், நடனம் மற்றும் சித்திரம் போன்ற செயன்முறைப் பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளமை கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
செயன்முறைப் பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டிய மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு, ஏனைய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்துவது, எதிர்வரும் பரீட்சைகளை நடத்துகின்றமை மற்றும் பெறுபேறுகளை வெளியிடுகின்றமை ஆகிய நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் அத்தியாவசியம் என்றால், அந்த மாணவர்கள், பாடசாலை மட்டத்தில் செயன்முறைப் பரீட்சையின் ஊடாக பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகின்றமையினால், உயர்தர கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண சாதாரண தர பரீட்சை பரீட்சைகள் நிறைவு பெற்று, 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறாததால் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இம்மாதம் 24 ஆம் திகதி வவுனியா – ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பட்டடைபிரிந்தகுளம் பகுதியில் மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றது.
பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதனையடுத்து புளியங்குளம் வைத்தியசாலைக்கு சென்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட போது இருவருக்கும் கொரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வவுனியா வடக்கு சுகாதார பிரிவினரால் மரணசடங்கில் கலந்து கொண்ட நெருங்கிய உறவினர்கள் 30 பேருக்கு இன்றையதினம் (30.08.2021) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் மரணச்சடங்கில் பங்கேற்ற ஏனையவர்களை இனங்கண்டு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதோடு சுகாதார பிரிவினர் வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.
தற்போது நாட்டில் கொரோனா தாண்டவமாடி வரும் நிலையில் இவ்வாறான சடங்குகளிற்கோ, நிகழ்வுகளுக்கோ தேவையற்ற விதத்தில் வெளியே செல்வதனை தவிர்க்குமாறும் சுகாதார பிரிவினர் கேட்டுகொண்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டத்தையும் மீறி வவுனியா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. கோவிட் தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அதியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதும் வவுனியா நகரப்பகுதியில் அதிகளவிலான மக்கள் நடமாட்டம் காணப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று மற்றும் கோவிட் இறப்பு என்பன சடுதியாக அதிகரித்துள்ள போதும் அதனைப் பொருட்படுத்தாமல் நகரப் பகுதியில் பெருமளவில் மக்கள் வந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.
வங்கிகள், மருந்தகங்கள், மரக்கறி விற்பனையகங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஒரு கதவுடன் திற்திருக்கும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றை நோக்கி மக்கள் அதிகளவில் வந்து செல்வதுடன், வங்கிகளிலும், மருந்தகங்களிலும் அதிக சன நெரிசலையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, இந்ந நிலை தொடருமானால் வவுனியாவின் கோவிட் பரம்பலை கட்ப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என சுகாதாரப் பிரிவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
கட்டான பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வீடுகளுக்குள் மரணமடைந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மரணமடைந்த அனைவரும் கோவிட் வைரஸ் தொற்றாலேயே மரணமடைந்துள்ளனர் என நீர் கொழும்பு வைத்தியசாலையின் அறிக்கைகள் தெரிவிப்பதாக, கட்டான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஏ.யூ.டி குலத்திலக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்தவர்களில் ஆண்கள் நால்வரும் பெண்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 9 பேர் என்ற அடிப்படையில் கோவிட் மரணங்கள் பதிவாவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேல் மாகாணத்தில் நூறு வீதம் டெல்டா வைரஸ் பரவியுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களிலும் டெல்டா வைரஸ் பரவும் அபாய நிலைமை உருவாகியுள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே பொது ஒன்றுகூடலை உடனடியாக நிறுத்தி, வீடுகளில் கூட ஒன்றுகூடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர். அத்துடன் நாடு தற்போது சிவப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நேற்றிரவு விபத்திற்கு இலக்காகியுள்ளது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ஹட்டன், குடாகம பகுதியில் வைத்து குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளதாக தெரியவருகிறது.
சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
லொறியில் சாரதி மட்டுமே பயணித்துள்ள நிலையில், அவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திரிபடைந்த டெல்டா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்டா மாறுபாடினால் பாதிக்கப்பட்டவர், மற்றுமொருவருக்கு பரப்ப கூடிய நிலைமை ஏற்பட்டு 2 நாட்களாகும் வரை நோய் அறிகுறிகள் தென்படாதென சர்வதேச இதழான நேச்சர் தெரிவித்துள்ளது.
ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் பெஞ்சமின் கவுலிங் மேற்கொண்ட ஆய்வுக்கமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளதாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே வைரஸ் தெளிவாக பரவத் தொடங்குகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கமைய, இந்த மாறுபாட்டினை தடுக்க மிகவும் கடினமானது என பெஞ்சமின் கவுலிங் தெரிவித்துள்ளார்.
சாதாரண கொவிட் தொற்றுக்குள்ளாகிய ஒருவர் நோய் அறிகுறிகள் ஏற்பட 6 நாட்களாகின்றது. ஐந்தாவது நாளின் இடைப்பட்ட காலப்பகுதியில் வைரஸ் தொற்று மற்றுமொருவருக்கு பரவும். ஆனால் டெல்டா வகைகளில், வைரஸ் பரவுவதற்கும் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே உள்ள இடைவெளி ஒரு தீவிர நிலை என்பதை ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.
இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 74 வீதமானோர் டெல்டா தொற்றுக்குள்ளாகியும் நோய் அறிகுறிகளற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கமைய F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்துள்ளார். இந்த தூரமானது உலக சாதனை புத்தகத்தில் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்தால் இம்முறை இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி 22 வயது இளம் பெண் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நல்லூரைச் சேர்ந்த 69 வயதுடைய பெண், நெல்லியடியைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் மற்றும் சுன்னாகத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது இளம் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் மேலும் 206 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 17 வயது சிறுவனுடன் 19 வயது இளம் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் லாவண்யா(19) என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார்.
இதே பங்கிற்கு அடிக்கடி கணேசன் என்ற 17 வயது சிறுவன், பெட்ரோல் போட வந்துள்ளான். இதில் லாவண்யா மற்றும் கணேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு சிறுவன் கணேசனுக்கு ஹிரன்யா அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது கணேசனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற லாவண்யா, கணேசனிடம் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து லாவண்யா, கணேசனை பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் சிறுவன் கணேசனை காணவில்லை என்று தேடிய போது, கணேசன் வீட்டிற்கு வந்து லாவண்யாவும் தானும் திருமணம் செய்துகொண்டதாக கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த கணேசனின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய பொலிசார் நடத்திய விசாரணையில் உண்மை என்பது தெரியவந்ததால், லாவண்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நாமக்கல்லில் குடிபோதைக்கு அடிமையான கணவனை திட்டமிட்டு க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்த மனைவியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளது அப்பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரகுபதி. இவரின் மனைவி அருணா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரகுபதி குடிப்பழக்கத்திற்கு பயங்கர அ.டிமையாக இருந்துள்ளனர்.
இதனால் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு ரூபாய் கூட வீட்டு செலவுக்கு கொடுக்காமல் முழுவதையும் குடித்தே அழித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தினமும் குடித்துவிட்டு மகன்கள் மற்றும் மனைவி என மூவரையும் அ.டித்து து.ன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இவற்றை சகித்து கொண்ட அருணா ஒரு கட்டத்தில் கணவன் செய்யும் கொ.டுமைகளை பொறுக்க முடியாமல் 2 நாட்களுக்கு முன்பு ஆடு கட்டுவதற்காக பயன்படுத்தும் நைலான் கயிற்றை கொண்டு கணவனின் க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்துள்ளார்.
அதன் பின்னர் கணவன் கு.டிபோதையில் இ.றந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். ஆனால் ரகுபதியின் க.ழுத்தில் இருக்கும் கா.யத்தை கண்டு சந்தேகப்பட்ட அதிகாரிகள் அருணாவிடம் வி.சாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் அருணா கொ.லை செ.ய்த உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து பொலிசார் அருணாவை கைது செய்து மேலும் வி.சாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தினால் எந்த பாவமும் அறியாத இரண்டு கு.ழந்தைகள் தாய், தந்தையை இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர்.
மலேசியாவிற்கு வேலைக்கு சென்று திரும்பிய தமிழக இளைஞர் நடுவானிலே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் நீர்ப்பழனி அருகே உள்ள கிராமம் நரியப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு வேல்மணி(36) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு வேல்மணிக்கும், நிஷாராணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் வேல்மணிக்கு மலேசியாவில் வேலை கிடைத்துள்ளது. அதாவது தமிழகத்தின், மணப்பாறையை சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் ரவிராஜ் ஆகியோர் மலேசியாவில் சொந்தமாக சலூன் கடை வைத்துள்ளனர்.
அந்த கடையில்தான் வேல்முருகன் வேலைக்கு சென்றுள்ளார். நான்கு ஆண்டுகளாக வேல்முருகன் அங்கு வேலை பார்த்து வந்த நிலையில், அடிக்கடி அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், ஒப்பந்த காலம் முடிந்தும், வேல்முருகனை சொந்த ஊருக்கு அனுப்பாமல், அதே கடையில் தொடர்ந்து வேலை பார்க்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் உடல்நிலை மேலும் பாதித்துள்ளது.
எனவே, வேல்முருகன் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை, 4 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மலேசியாவில் இருந்து தமிழகத்தின் திருச்சிக்கு வரும் விமானத்தில் வேல்மணி புறப்பட்டுள்ளார்.
விமானம் திருச்சி வந்தடைந்ததும் மற்ற பயணிகள் எல்லாம் இறங்கிவிட்டனர்.ஆனால், வேல்முருகன் மட்டும் இருக்கையில் உட்கார்ந்த நிலையிலேயே கிடந்துள்ளார். அசைவின்றி ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்ததால், விமான நிலைய ஊழியர்கள் சந்கேமடைந்து, விமான நிலைய மருத்துவர்களை அழைத்து வந்துள்ளனர்.
அப்போது அவரை பரிசோதித்து பார்த்த போது, அவர் உயிரிழந்தை உறுதி செய்த மருத்துவர்கள், நடுவானில் வரும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருமணம் முடிந்து 2 மாதங்களில் கணவன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, நான்கு ஆண்டுகளுக்கு பின்பு திரும்புவதால், அவரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மனைவி நிஷாராணி, அவரின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
நாட்டில் நேற்றைய தினம்(28) கோவிட் தொற்றினால் 192 பேர் மரணமடைந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 8,775ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 83 பெண்களும் 109 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.