வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் இன்று மாலை (29.08) மரணமடைந்துள்ளதுடன், இன்றைய தினம் (29.08) மரணமடைந்தோர் 5 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின்
கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.
63 வயது ஆண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவார்.
இது தவிர, முன்னதாக இரணைஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், வவுனியா நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் என மூவர் மரணமடைந்தனர்.
இதன்படி 5 பேர் இன்றைய தினம் (29.08) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். குறித்த சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை உண்மையில் அதிக அவதான நிலையிலேயே உள்ளது. மணித்திலாயத்திற்கு 9 கோவிட் மரணங்கள் பதிவாகின்றன என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார். நாட்டின் கோவிட் நிலைமை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மணித்தியாலயத்திற்கு இவ்வாறு அதிகளவான மரணங்கள் பதிவாகின்றமை கட்டுப்படுத்தக் கூடிய நிலைமை அல்ல. எனவே வைரஸ் தொற்று மற்றும் அதனால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து மக்கள் தெளிவு பெறுவது அத்தியாவசியமானதாகும்.
டெல்டா வைரஸ் கொழும்பிலேயே பரவ ஆரம்பித்தது. தற்போது மிகவும் வேகமாக ஏனைய மாகாணங்களுக்கும் பரவிக் கொண்டிருப்பது இந்த வைரஸாகும்.
டெல்டா வைரஸ் திரிபடைந்து புதிய மாறுபாடுகளும் வேகமாக பரவி வருகின்றன. கொழும்பில் 100 சதவீதம் டெல்டா பரவியுள்ளது. இவற்றில் அதிகளவாகக் காணப்படுவது இந்த புதிய மாறுபாடாகும். உலக சுகாதார ஸ்தாபனம் ஏனைய நாடுகளின் உதவியோடு கோவிட் தொடர்பான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருகிறது.
அதற்கமையவே செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாடு முடக்கப்பட்டால் 7,500 உயிர்களைக் காப்பற்ற முடியும் என்றும் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுமானால் மேலும் 10,000 உயிர்களை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நாம் நேற்றைய தினமும் சுட்டிக்காட்டியிருந்தோம். எனவே குறிப்பிட்ட கால வரையறைக்கு நாடு முடக்கப்படுமானால் தொற்று பவலைக் கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பதிவாகும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டே ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதா? அல்லது தளர்த்துவதா?
என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் பெருந்தோட்டத் துறை அமைச்சருமான ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். கோவிட் என்பது சாதாரண நோய் அல்ல. அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை பெருந்தொற்று என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. மருத்துவ துறையில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளினால் கூட வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாதநிலை காணப்படுகிறது. ஆகவே கோவிட் தொற்றை சாதாரண நோய் என ஒருபோதும் கருத முடியாது. அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்படவேண்டும்.
கோவிட் தாக்கத்தை கருத்திற்கொண்டு நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமையவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டாலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஐந்து சதம் கூட கோவிட் நிதிக்காகக் குறைக்கப்படாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மேலதிக நேரம் மற்றும் கூட்டு கொடுப்பனவுகள் போன்ற கொடுப்பனவுகளில் தாக்கம் ஏற்படலாம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“அரசாங்கம் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கிறது. குறிப்பாக அந்நிய செலாவணி பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். கோவிட் 19 தொற்றுநோயால் எங்கள் ஏற்றுமதி வருவாய் ஓரளவு குறைந்துவிட்டாலும், அந்த சுமையை பொதுமக்களுக்கு வழங்க நாங்கள் தயாராக இல்லை.
இந்த தொற்றுநோயுடன் பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து நாங்கள் பெரும்பாலான நேரத்தை அமைச்சரவை விவாதங்களில் செலவிடுகிறோம். அரசு பொது ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதம் குறைக்கப் போகிறது என்று சிலர் கருத்தை பரப்பியுள்ளனர்.
ஆனால் இந்த கடினமான நேரத்தில் பொது ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஐந்து சதம் கூட நாங்கள் கழிக்க மாட்டோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ஆனால் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் கூட்டு கொடுப்பனவு போன்ற பிற சலுகைகள் பாதிக்கப்படலாம். இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
சில அலுவலகங்கள் நிறுவனத் தலைவரின் விருப்பப்படி ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படுகின்றன. எனவே, மிகவும் அத்தியாவசியமானவர்கள் மட்டுமே அலுவலக வேலைக்கு அழைக்கப்படுகிறார்கள்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7,500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேநிலைமை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நீடித்தால் 10,000 பேரை பாதுகாக்க முடியும் எனவும் அக் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த 7 நாட்களில், ஒரு இலட்சம் சனத்தொகையில் இலங்கையில் மரண வீதம் 5.52 வீதமாக காணப்படுவதாக சுயாதீன தொழில்நுட்ப குழு குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 10 நாட்களில், நாடு மூடப்பட்டுள்ளதால் பொருளாதாரத்திற்கு 1.12 பில்லியன் அமெரிக்க டொலர் பாதிப்பும்,
எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதியுடன் நிறைவடையும் வகையில் 04 வாரங்கள் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பட்சத்தில் 1.67 பில்லியன் அமெரிக்க டொலர் பாதிப்பு ஏற்படும் எனவும் சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நோய் ஆபத்து குறித்து குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இணைய வழி கற்கைகளில் ஈடுபடும் சிறார்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் gaming disorder என்னும் நோயினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவ உளநல மருத்துவர் ருமி ருப்டீன் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகளவான இளைஞர்களும் சிறார்களும் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
gaming disorder என்ற நோய் சிறுவர்களை மட்டும் பாதிப்பதல்ல எனவும் இளைஞர் ஏன் வயது வந்தவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
gaming disorder என்னும் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாதல் நோய் மெய்யானது எனவும் உலக ஸ்தாபனத்தின் நோய் பட்டியலில் இடம்பெற்றுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கோவிட் பெருந்தொற்று நிலைமை நீடித்து வருவதனால் மாணவர்கள் இணைய வழி கற்கையில் ஈடுபடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கைப்பேசி பயன்படுத்தாத சிறார்கள் தற்பொழுது கல்விக்காக அதனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 8 வயதுக்கும் மேற்பட்ட 24 வயது வரையிலானவர்கள் அதிகளவில் இந்த கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாதல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அநேகமான இந்த கேம்கள் கொலைகள் உள்ளிட்ட வன்முறைகளை தூண்டும் வகையிலனாது எனவும் இதில் வெற்றியீட்டுவோருக்கு சில வெகுமதிகளும் வழங்கப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்ட நேரம் கைப்பேசியில் கேம் விளையாடுவோர் இந்த பழக்க அடிமைத்துவத்தினால் பாதிக்கப்படுவதாகவும் இது பாரதூரமான நோய் நிலைமைகளை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் திடீர் நடத்தை மாற்றங்கள், அதிகளவில் கோபப்படுதல் போன்றவற்றுக்கு இந்த gaming disorder நோய் ஏதுவாகின்றது என டொக்டர் ருமி ருபன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தங்களை கேம் கதாபாத்திரங்களாக உருவகப்படுத்திக் கொண்டு அதேவிதமாக ஆடைகளை அணிந்து அந்த பாத்திரத்தின் குணவியல்புகளை பிரதிபலிக்க எத்தனிக்கின்றனர் எனவும் இது ஆபத்தான நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நோய்களினால் பாதிக்கப்படும் சிறார்கள் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
உளநல மருத்துவர்களின் ஆலோசனை வழிகாட்டல்களை பெற்றுக்கொள்வது பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த வருடம் முதல் வாகனம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் உள்ள வாகனங்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக விலையில் வாகனங்களை விற்பனை செய்வதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிய பின்னர் லீசிங் நிறுவனங்கள் பாரிய வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய தற்போது இலங்கையில் உள்ள வாகனங்களை விற்பனை செய்யும் போது வாகனங்களின் நிறம், உற்பத்தி மற்றும் ஓட்டக்கூடிய தூரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட முறை ஊடாக குறைந்த விலையில் லீசிங் வசதிகள் வழங்கப்படுகின்றன.
இதன் ஊடாக சங்தையில் நிதியை நிலையாக வைப்பது மற்றும் பாரிய அளவிலான வாகன விலையை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த தீர்மானத்தை செயற்படுத்துவதன் மூலம் சந்தையில் தற்போது உள்ள வாகனங்களின் விலை குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு குறைவடையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தொற்றினை தொடர்ந்து வாகன இறக்குமதிக்கு தடை விதித்தமையின் காரணமாக அரசாங்கத்தினால் 25000 கோடி ரூபாய் சேமிக்க முடிந்ததாக நிதி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இலங்கையி்ல் கடந்த 28 நாட்களில் அதிகளவான கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. குறித்த காலப்பகுதியில் கோவிட்-19 தொற்றினால் 4,100 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
ஒகஸ்ட் 27 அன்று மாத்திரம் 212 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கைகள் கூறுகின்றன.
இது கோவிட்-19 தொற்றால் இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகபடியான உயிரிழப்பு ஆகும். இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8583 ஆக அதிகரித்துள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் மூவர் இன்று (29.08) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூவர் மரணமடைந்துள்ளனர்.
வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், வவுனியா நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.
குறித்த மூவரது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 28 நாட்களில் 2521 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. குறிப்பாக இம் மாதம் முதலாம் திகதியில் இருந்து 28 ஆம் திகதி வரை 2521 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன்,
42 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒட்சிசன் தேவையுடையோரின் எண்ணிக்கையும் சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதனால், மக்கள் தமது பாதுகாப்பையும், சமூக பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.
அத்துடன் வீட்டில் இருந்து வெளியில் வருதை இயன்றவு தவிர்க்கும் போது நோய் பரம்பலை கட்டுப்படுத்த முடியும். இதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் திறந்திருந்த 4 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் முழுமையான முடக்கம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் கடைகளைத் திறந்து மரக்கறி மற்றும் பலசரக்கு வியாபாரத்தில் ஈடுபட்ட 4 வர்த்தக நிலையங்கள்,
சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிசாரால் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டு அறிவித்தல் ஒட்டப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டது.
வவுனியாவில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் மரணமடைந்துள்ள நிலையில் ஓரே நாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கல்குண்ணாமடு பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கோவிட் தொற்று காரணமாக மரமணமடைந்துள்ளனர்.
இது தவிர கற்குளம், கோவில்குளம், உக்குளாங்குளம், கரப்பங்காடு, தோணிக்கல், கனகராயன்குளம், வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45, 71, 71, 53, 62, 60, 76 ஆகிய வயதுகளையுடைய 7 பேர் மரணமடைந்திருந்தனர்.
வவுனியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 9 பேர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 7 பேர் மரணம்!!
வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் மரணமடைந்துள்ள நிலையில் ஓரே நாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கற்குளம் படிவம் மூன்று பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்திருந்த 45 வயது நபருக்கு பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்திருந்த கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா விடுதியில் சிகிச்சை பெறச்று வந்த உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இதேவேளை முன்னதாக கரப்பங்காடு பகுதியைச் சேர்ந்த 53 வயது ஆண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்திருந்தார்.
தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 62 வயது நபர், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயது நபர், வைரவபுளியங்குளம் பபகுதியைச் சேர்ந்த 76 வயது நபர் ஆகியோரும் வீட்டில் மரணமடைந்திருந்த நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததது.
இதன்படி வவுனியாவில் ஒரே நாளில் 7 பேர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,583 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 103 பெண்களும் 109 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் இலங்கை வரலாற்றில் அதிகபட்சமாக 214 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் 30 அகவைக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இப்போது முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா வெளியிட்டுள்ளார். இன்றைய நிலவரப்படி 30 அகவைக்கு மேற்பட்டவர்களில் 60 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செகுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தடுப்பூசி பெறாத அனைவரும் அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவரின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவரிடம் கப்பமாக பணம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக் ஊடாக பெற்றுக் கொண்டு அந்த புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக மாற்றி கப்பம் பெறுவதற்கு சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்த இரண்டு கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் இரண்டை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். அவர்கள் பொலநறுவை மற்றும் அங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 20 – 23 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.