வவுனியாவில் மரக்கறி வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று : சுகாதாரப் பிரிவினர் விடுத்துள்ள கோரிக்கை!!

கொரோனா..

ஊரடங்கு சட்ட நேரத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களை பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

ஊரடங்கு சட்ட நேரத்தில் கிராமங்களுக்கு சென்று மரக்கறி விற்பனை செய்யாது வவுனியா நகரப் பகுதியில் கடைகளைத் திறந்தும், வாகனங்களை தொடர்ச்சியாக நிறுத்தி வைத்தும் மக்களை வரவைத்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட 10 பேர் வரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் வவுனியா, இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள தண்ணீர் கடையின் அருக்கில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சுகாதாரப் பிரிவினர் சென்று குறித்த மரக்கறி வியாபாரிகளை அகற்றும் வரை மக்கள் பலரும் வருகை தந்து மரக்கறிகளை கொள்வனவு செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் குறித்த மரக்கறி விற்பனை நிலையத்திற்கு சென்று மரக்கறிகளை கொனள்வனவு செய்தோர் சமூகப் பொறுப்புடனும்,

தமது பாதுகாப்பு கருதியும் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு வருகை தந்து அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் மின் மயானத்தில் எரியூட்டுவதற்காக வரிசையில் காத்திருக்கும் கொவிட் உடல்கள்!!

பூந்தோட்டம் மின் மயானத்தில்..

வவுனியா நகரசபைக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின் மயானத்தில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் இ.கெளதமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் கொரோனா தொற்றினால் இறப்பவர்கள் மட்டுமன்றி மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்கள் வவுனியா பூந்தோட்டம் மின் மயானத்திலேயே தகனம் செய்யப்படுகின்றது.

தற்போது கொரோனா இறப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இறந்த உடல்களை எரிப்பதற்கு நேரம் தேவைப்படுவதனாலும், ஒரு உடலை எரித்து இரண்டாவது உடலை எரிப்பதற்கு குறிப்பிட நேர இடைவேளை வழங்க வேண்டி இருப்பதாலும்,

உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரிசையில் உடல்கள் எரியூட்டுவதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று (28.08) மன்னாரிலிருந்து 5 உடல்கள் பூந்தோட்டம் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. வவுனியாவில் இருந்தும் 7 உடல்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதன்போது நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது.

நகரசபை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த உடல்களை எரியூட்டுவதற்காக மிக கடுமையாக வேலை செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியான காலத்தில் தம்மால் இயன்றளவு உடல்களை எரியூட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அனைவருக்குமான சேவையினை வழங்கி வருகின்றோம்.

தொடர்ந்தும் அதிகளவான மரணங்கள் வவுனியாவிலும் நிகழ்ந்து வரும் நிலையில் வவுனியா மக்கள் அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியாவில் தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை : மூவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களுக்கு வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (28.08) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர் வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் முடக்க நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி செயற்படுபவர்கள் மீது பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, பசார் வீதியில் உள்ள பள்ளிவாசல் முன்பாக துவிச்சக்கர வண்டி, மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் வழிமறிக்கப்பட்டு 20 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் சுகாதாரப் பிரிவினராலும், பொலிசாராலும் எச்சரிக்கப்பாட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 7 பேர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் மரணமடைந்துள்ள நிலையில் ஓரே நாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கற்குளம் படிவம் மூன்று பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்திருந்த 45 வயது நபருக்கு பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்திருந்த கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா விடுதியில் சிகிச்சை பெறச்று வந்த உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இதேவேளை முன்னதாக கரப்பங்காடு பகுதியைச் சேர்ந்த 53 வயது ஆண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்திருந்தார்.

தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 62 வயது நபர், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயது நபர், வைரவபுளியங்குளம் பபகுதியைச் சேர்ந்த 76 வயது நபர் ஆகியோரும் வீட்டில் மரணமடைந்திருந்த நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததது.

இதன்படி வவுனியாவில் ஒரே நாளில் 7 பேர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் தடுப்பூசிகளை முழுமையாக பெறாதவர்களே இதுவரை மரணம்!!

வவுனியாவில்..

வவுனியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக பெறாதவர்களே இதுவரை மரணமடைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (28.08) இடம்பெற்ற கோவிட் நிலமை தொடர்பான அவசர கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியாவில் கடந்த புதன்கிழமை வரை கொரோனா காரணமாக 49 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். இவ்வாறு மரணமடைந்த 49 பேரில் 37 பேர் எந்தவிதமான தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஆவர்.

12 பேர் சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் மட்டும் பெற்றுக் கொண்டவர்களாவர். தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்சுகளையும் பெற்றுக் கொண்ட எவரும் இதுவரை வவுனியாவில் மரணமாகவில்லை.

தடுப்பூசிகளை முழுமையாக பெறுவதன் மூலம் மட்டுமே இறப்புக்களைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைவரும் தாமாக முன் வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் நால்வர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் மூவர் நோய் தாக்கம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த மூவரும் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

அத்துடன், வீட்டில் மரணமடைந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் மேலும் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, வைரவபுளியங்குளம், தோணிக்கல், கனகராயன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். சுகதாதார நடைமுறைளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்னளனர்.

வவுனியாவில் மேலும் 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : இருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் 222 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (27.08.2021) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், வவுனியா பூங்கா வீதியை சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 86 வயது பெண் ஒருவரும் என இருவர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மரணித்த இருவரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடன் வாங்கிய மகன் தலைமறைவு : குடும்பத்துடன் விவசாயி எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில்..

சித்தூர் மாவட்டத்தில் க.ட.ன் தொல்லை காரணமாக விவசாயி தனது குடும்பத்தினருடன் வி.ஷ.ம் அருந்தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியை அடுத்த ராசா பாலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரின் தந்தை சங்கரையா, தாய் குருமா, தம்பி வினய் ஆகியோர் அருகில் உள்ள கிராமத்தில் விவசாயம் செ.ய்து வருகின்றனர்.

சதீஷ் தனது சொந்த கிராமத்தில் ஒருவரிடம் கடன் வாங்கி உள்ளார். அதனை திருப்பி கொ.டு.க்க முடியாததால் பணம் கொ.டுத்தவர் கொடுத்த அ.ழு.த்.த.த்.தினால் ஊரை விட்டு வெளியேறி உள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காததால் அருகில் உள்ள கிராமத்தில் தாய் தந்தையரிடம் சதீஷ் பெற்ற க.ட.னை குறித்து கேட்டுள்ளார். அவர்கள் மகனைத் தேடி தருவதாகவும் சிறிது காலம் பொறுத்து கொ.ள்ள வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால் க.ட.ன் கொடுத்தவர் அநாகரீகமாக பேசி தொல்லை கொ.டு.த்துள்ளார். இதனால் ம.ன உ.ளை.ச்.சலில் இருந்த குடும்பத்தினர் நேற்று இரவு பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூ.ச்.சி கொ.ல்.லி ம.ரு.ந்தை மூ.வ.ரும் அ.ரு.ந்.தியுள்ளனர்.

இது குறித்து அறிந்து கொண்ட அந்த கிராம மக்கள் அவர்களை புத்தூர் அ.ர.சு மரு.த்.து.வ.மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவரும் இன்று காலை சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழந்துள்ளனர். இச்.ச.ம்.பவம் கு.றித்து புத்தூர் போ.லீ.சார் வ.ழ.க்கு ப.திவு செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் க.ட.ன் கொ.டுத்தவரை பிடித்து வி.சாரணை நடத்தி வருகின்றனர். க.டனுக்காக குடும்பத்தை மா.ய்த்துக்கொண்ட ச.ம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.ப.ரப்பை ஏ.ற்படுத்தியுள்ளது.

அண்ணன், தங்கை என நினைத்து கணவன், மனைவி வலையில் வீழ்ந்த இளைஞன் : பேஸ்புக் நட்பால் வந்த வினை.!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் அண்ணன் மற்றும் தங்கை என நினைத்து இரண்டு பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்த திருமணமான இளைஞனுக்கு அவர்கள் கணவன், மனைவி என்ற உண்மை தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவரது மனைவி முத்துலட்சுமி. கார்த்திக் பேக்கரி நடத்தி வருகிறார். இதையடுத்து தனது கடை போட்டோக்கள அவர் பேஸ்புக்கில் பதிவு செய்து பிரபலப்படுத்தி வந்தார்.

இந்தநிலையில் சத்யா என்ற பெண் பேஸ்புக்கில் கார்த்திகுடன் நண்பராக ரெக்வஸ்ட் தர அவரும் அதை ஏற்று கொண்டார். பின்னர் இவரும் சேட் செய்ய தொடங்கிய போது சத்யா தனக்கு திருமணமாகவில்லை என கூறி கார்த்திக்கை காதல் வலையில் விழ வைத்தார்.

அடுத்தநாளே போன் நம்பர் வாங்கி கார்த்திக்கிடம் பேசிய சத்யா, பிரசாந்த் என்பவரை தனது அண்ணன் என கூறி போனில் பேச வைத்திருக்கிறார். அப்போது கார்த்திக்கிடம் பிரசாந்த், என்ன தம்பி எப்படி வியாபாரம் செல்கிறது என கேட்க நன்றாக போகிறது, இன்னொரு பேக்கரி ஆரம்பிக்கலாம் என ஐடியா இருக்கு என்றார்.

உடனே பிரசாந்த், நான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன். பல்லடத்தில் நல்ல பேக்கரியாக பார்த்து தருகிறேன், என்னிடம் நம்பிக்கை இருந்தால் வாங்க, உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கு என கேட்க, தன்னிடம் ரூ 7 லட்சம் இருப்பதாக சொன்னார்.

இதையடுத்து பிரசாந்தை நேரில் கூட சென்று பார்க்காமல் சத்யா மீது உள்ள சபலம் மற்றும் மோகத்தில் முன் பணமாக ரூ 4 லட்சத்தை பிரசாந்துக்கு அனுப்பினார். பின்னர் ஒருநாள் சத்யாவுக்கு சர்ப்பரைஸ் கொடுக்க அவர் வீட்டுக்கே சென்றார் கார்த்திக்.

அவரை பார்த்த போது சத்யா மற்றும் பிரசாந்த் அதிர்ச்சியடைந்தனர், ஏனெனில் உண்மையில் அவர்கள் அண்ணன், தங்கை கிடையாது கணவன் மற்றும் மனைவி ஆவார்கள்.

ஆனால் அதிர்ச்சியை வெளிகாட்டி கொள்ளாமல் அங்குள்ள ஒரு பேக்கரியை காட்டி விட்டு மீதி 3 லட்சத்தை வாங்கி கொண்டு கார்த்திக்கை அனுப்பி வைத்தனர்.

அடுத்தநாள் கார்த்திக், சத்யா – பிரசாந்தை போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிச் ஆப்பில் இருந்தது, சத்யாவின் பேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு சென்ற போது அங்கிருந்து காலி செய்து சென்றது தெரியவந்தது. அருகே விசாரித்த போது சத்யாவும், பிரசாந்தும் கணவன் மற்றும் மனைவி என தெரிந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

பின்னர் மனைவி முத்துலட்சுமியிடம் உண்மையை கூறி கார்த்திக் கண்ணீர் விட்டு அழுதார். இதை தொடர்ந்து பிரசாந்த் – சத்யா மீது பொலிசில் அவர் புகார் கொடுத்துள்ள நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் பதிவாகிய அதிக்கூடிய கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 94 பெண்களும் 120 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 30 வயதுக்கும் குறைந்த 5 பேரும், 30 முதல் 59 வயது வரையிலான 58 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 151 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் மயங்கி விழுந்தவர் மரணம்!!

கற்குளம் படிவம் 3..

வவுனியா, கற்குளம் படிவம் 3 பகுதியில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (27.08) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கற்குளம் படிவம் 3 பகுதியில் வசிக்கும் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நபர் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே அவர் மணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்

வறட்சி காலத்திலும் தக்காளி செய்கையை மேற்கொண்டு வெற்றி கண்ட கிளிநொச்சி விவசாயி!!

தக்காளி செய்கை..

வ.றட்சி காலத்திலும் அதிக வருவாய் தரக்கூடிய தக்காளி செய்கையை மேற்கொண்டு கிளிநொச்சி விவசாயி ஒருவர் பாரிய வெற்றி கண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் தக்காளி செய்கையும் பிரதான விவசாய உற்பத்தியாக இடம்பிடித்துள்ளது. இந்த நிலையில் வ.றட்சி காலத்தில் தக்காளி செய்கையில் பாரிய அளவு வருமானம் கிடைப்பதில்லை எனவும், போதுமான விளைச்சல் கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ஜே.கே.வி 2 எனும் இனத்தை ஒரு விவசாய நிறுவனத்தின் உதவியுடன் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயியான மயில்வாகனம் ராஜகோபால் எனும் விவசாயி இத்தக்காளி செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொண்டார்.

குறித்த, ஜே.கே.வி 2 எனும் தக்காளி இனமானது, வழமை போன்று விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டும் தக்காளி செய்கையில் கிடைக்கும் விளைச்சலுக்கு மேலதிகமான விளைச்சலை இன்று பெற்றுக்கொடுத்துள்ளது. குறித்த தக்காளி இனம் தொடர்பில் மயில்வாகனம் ராயகோபால் தெரிவிக்கையில்,

இந்த தக்காளி இனம் வழமையாக நாம் மேற்கொள்ளும் தக்காளி இனத்தை விட அதிகளவான விளைச்சலைப் பெற்றுத் தந்துள்ளது. வழமையாக மேற்கொள்ளும் தக்காளி செய்கையில் 6 கிலோ வரையிலான விளைச்சலைப் பெற்றுக்கொள்வோம்.

இது மாறாக மேலும் அதிக விளைச்சலை தருகின்றது. இவ்வாறான தக்காளி இனத்தை இந்த பகுதிகளில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டும் இவ்வாறான வ.றட்சி காலத்தில் மேற்கொண்டு அதிக வருவாயைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வ.றட்சி காலத்தில் நோய், தேவைக்களவான நீர், அதிக விளைச்சலைக் கொடுக்கும் இந்த வகை தக்காளியைச் செய்கை செய்வதன் மூலம் அதிக வருவாயைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த விவசாயி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த தக்காளி இனம் தொடர்பில் கெலிஸ் விவசாய நிறுவனத்தின் வடமாகாண விற்பனைப் பிரதிநிதி குமாரசாமி புவனேந்திரா குறிப்பிடுகையில்,

சிறுபோக காலத்தில் தக்காளி செய்கை வடமாகாணத்தில் போதிய விளைச்சல் கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இம்முறை இந்த தக்காளி இனத்தை பரீட்சார்த்தமாக மேற்கொண்டிருந்தோம்.

அந்த தக்காளி இனம் ஏனைய தக்காளி இனங்களை விட அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளது. குறித்த செய்கையாளரின் தக்காளி செய்கையை இரணைமடு விவசாய ஆ.ராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி அரசகேசரி சென்று பார்வையிட்டிருந்தார்.

இதன்போது வ.றட்சியைத் தா.ங்கி அதிக விளைச்சல் கொடுத்துள்ள குறித்த தக்காளி இனம் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவிக்கின்றார். வழமையாகச் சிறுபோக செய்கை காலத்தில் வெப்பநிலை அதிகமாகக் காணப்படும். இவ்வாறான காலநிலையில் தக்காளி செய்கை மேற்கொள்வது சவாலாகக் காணப்படும்.

அதனால் நாங்கள் கே சி 1 எனும் கிளிநொச்சிக்கான இனம் ஒன்றையை விவசாயிகள் பெற்று செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அதில் விதை உற்பத்தி குறைவாக உள்ளது. அது தவிர பத்மா, மகேசு எனும் இரண்டும் அதற்கீடாக காய்ப்பதனால் விவசாயிகள் அதனையும் விரும்புகின்றனர்.

அவற்றுடன் இந்த இனமும் வெளி மாவட்டங்களில் ஆ.ராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அவற்றோடு ஒப்பிடும்போது இந்த இனம் அதிக விளைச்சலைக் கொடுப்பதாகவே நான் கருதுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் விவசாய செய்கையில் புதிய தொழில்நுட்ப முறைகள், புதிய இனங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றது.

அவ்வாறான இனங்களை அடையாளம் கண்டு விவசாயிகள் செய்கை மேற்கொண்டு அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ராயகோபால் என்ற விவசாயி வெளிப்படுத்துகின்றார்.

வவுனியாவில் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ ஆகிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!

விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ..

கோவிட் தொற்று காரணமாக வவுனியா மாவட்டத்தில் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ ஆகிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. நாட்டில் கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன் கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க கூடிய விற்றமின் சீ மற்றும் விற்றமிகன் டீ ஆகிய மாத்திரைகளை பயன்படுத்துமாறு சில மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

இதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் பலரும் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ ஆகிய மருந்துகளை அதிகளில் கொள்வனவு செய்து வீடுகளுக்கு கொண்டு செல்வதனால் பல தனியார் மருந்தங்களில் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ ஆகிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தனியார் மருந்தகங்களுக்கு செல்லும் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது. அத்துடன், பரிசிட்டமோல் மருந்துக்கான கேள்வியும் அதிகரித்துள்ளமையால் சில மருந்தகங்களில் அதன் இருப்பு முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்திய முச்சக்கர வண்டிகளுக்கு சவால் : இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார முச்சக்கர வண்டி!!

முச்சக்கர வண்டி..

வேகா இன்னோவேஷன்ஸ், ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கக்கூடிய மின்சார முச்சக்கர வண்டிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

வேகா இன்னோவேஷன்ஸின் இயக்குநர் கலாநிதி பெஷன் குலாபால இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் மூலம் ஒரு வருடத்திற்கு பில்லியன் கணக்கான டொலர்களை சம்பாதிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மின்சார முச்சக்கரவண்டி அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் விற்பனைக்கு வரும் என்றும், அதை வெளிநாட்டு சந்தைகளுக்கு விற்று இலங்கைக்கு பில்லியன் டொலர் அந்நிய செலாவணியை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது இந்திய முச்சக்கர வண்டிகளை விட மலிவானது எனவும், அத்துடன், இந்திய முச்சக்கர வண்டிகளை விட திறமையானதாகவும், சிறப்பானதாகவும் வடிவமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை இலங்கை தயாரிப்பு என்று கூறலாம். இந்த மின்சார முச்சக்கர வண்டியின் அனைத்து வடிவமைப்புகளும் இலங்கை பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு!!

அத்தியாவசிய பொருட்கள்..

அத்தியாவசிய உணவு பொருட்கள் பலவற்றின் விலை திடீரென பாரியளவு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 250 ரூபாயிலும், சீனி ஒரு கிலோ கிராம் 220 ரூபாயினும்,

இலங்கை கிழங்கு ஒரு கிலோ கிராம் 300 ரூபாயிலும், இந்திய கிழங்கு ஒரு கிலோ கிராம் 240 ரூபாயிலும், இலங்கை வெங்காயம் ஒரு கிலோ கிராம் 135 ரூபாயிலும் சிவப்பு வெங்காயம் ஒரு கிலோ கிராம் 400 வரையிலும் அதிகரித்துள்ளது.

மொத்த விற்பனை விலை உயர்வு காரணமாக பருப்பு, சீனி, கிழக்கு, வெங்காயம், நெத்தலி மற்றும் கருவாடு ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சதொசயில் சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 250 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ஒரு தொகை சீனி கிடைக்கவுள்ளதாகவும் அதன் பின்னர் ஒரளவு விலை குறையும் என எதிர்பார்ப்பதாக சதொச தலைவர் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் மாணவனின் அசத்தலான கண்டுப்பிடிப்பு!!

கிளிநொச்சி..

கோவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. சிறுவர்கள் வீட்டில் தங்கியிருப்பது அவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் சொல்லுகின்றன.

எனினும், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தரம் 10 பயிலும் மாணவரான சுந்தரலிங்கம் பிரணவன் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்த்துள்ளார்.

குறித்த மாணவன் எரிபொருள் இல்லாமல் சோலார் பேனல்களில் இயங்கும் முச்சக்கர வண்டியை உருவாக்கியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கோவிட் தொற்றுநோயால், எங்களுக்கு இப்போது பாடசாலைககள் இல்லை. நாங்கள் இணைம் மூலம் கற்பிக்கப்படுகிறோம், ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம்.

இப்போது, ​​கோவிட் பரவலினால் முன்பு போல் நண்பர்களுடன் விளையாடவும் வழியில்லை. அதனால்தான் நான் ஒன்றை உருவாக்க என் தாத்தாவுடன் இணைந்து பணியாற்றினேன்.

எனது சமீபத்திய வடிவமைப்பு சோலார் பேனல்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மூன்று சக்கர வண்டியாகும். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான நேரங்களில் நான் என் தாத்தாவுடன் விளையாடுவேன்.

என் தாத்தாவுக்கு மெக்கானிக்காக வேலை செய்யத் தெரியும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விடயங்களை உருவாக்க நான் என் தாத்தாவுடன் வேலை பணியாற்றுகின்றேன்.

எனது தாத்தாவின் உதவியுடன், கடந்த ஆறு மாதங்களாக சோலார் பேனல்களைப் பயன்படுத்தி முச்சக்கர வண்டியை உருவாக்கினேன். சூரிய சக்தியைப் பயன்படுத்தி சார்ஜ் செய்து முச்சக்கர வண்டியை ஓட்டலாம்.

இந்த முச்சக்கர வண்டி ஒரு மணி நேரத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும். நான் செய்த வடிவமைப்பைப் பார்த்து பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என கூறியுள்ளார்.