மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி!!

14 வயது சிறுமி..

திருகோணமலை – பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமிக்கு ஒக்சிஜன் வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் விடயத்திற்கு பொறுப்பான வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் காணப்பட்டதாகவும், பனடோல் மாத்திரைகளை பாவித்து வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் இந்த சந்தர்ப்பத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சிறுமியின் தாயாருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் தாயாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் கூறியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து : வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!!

கொழும்பு நகரில்..

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகரத்தில் 100 சதவீதம் பரவி வருவதாகவும், மேலும் இந்த விகாரம் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே மற்றும் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர ஆகியோர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

டெல்டா வகை அல்பா வகையை தாண்டி பரவி வருவதாகவும், நாட்டில் ஒரு புதிய ‘சூப்பர் டெல்டா’ வகை உருவாகி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் கடந்த ஜூலை மாதம் தெமட்டகொட பகுதியிலிருந்து முதன்முதலில் கண்டறியப்பட்டனர். அதன் பிறகு டெல்டாவால் பாதிக்கப்பட்ட 292 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தடுப்பூசி திட்டம் 80 சதவீத இலக்கை அடைந்தவுடன், செப்டம்பர் இறுதிக்குள் நோயின் சில கட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம் என்று வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டெல்டா ரகமானது மாறிவிட்டது எனவும், தற்போது புதிய வகை பிறழ்வு கொழும்பு நகரத்தில் பரவி வருவதாகவும், இந்த புதிய வகை மற்ற பகுதிகளுக்கும் பரவக் கூடும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு மணி நேரத்திற்கு 9 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழப்பதாகவும், வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிடுகிறார்.
செப்டம்பர் 18 வரை நாடு மூடப்பட்டால் 7,500 உயிர்களை காப்பாற்ற முடியும் என்று உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. அந்த அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

புதிய வைரஸ் திரிபு ஆபத்தால் எச்சரிக்கை நிலையில் இலங்கை !!

புதிய வைரஸ் திரிபு..

தென்னாபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கோவிட் திரிபு குறித்து இலங்கை சுகாதாரத்துறை எச்சரிக்கை நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பரவும் வைரஸால் இலங்கையின் சுகாதார துறை நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், இன்னுமொரு வைரஸ் பரவுமாக இருந்தால் பெரும் பாதிப்பு நிலைக்கு தளப்பட்டுவிடும் என்று விசேட மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இதுவரையில் இந்த வைரஸ் இலங்கையில் கண்டறியப்படவில்லை. ஆனாலும் இந்த வைரஸ் வேகமாக பரவுவதால் டெல்டா போன்று இலங்கைக்குள்ளும் நுழைந்து விடலாம் என்று விசேட நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

தங்கத்தின் விலை..

நீண்ட காலமாக உயர்மட்டத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் சந்தையில் விலையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் புதிய அறிக்கை வெளியாகி உளளது.

அதற்கமைய ஒரு அவுஸ் தங்கத்தின் விலை நூற்றுக்கு 0.3 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை 1813 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வவுனியா பூந்தோட்டம் மின் மயான திருத்தப்பணி தீவிரம் : மாலை வழமைக்கு திரும்பும் : நகரசபைத் தலைவர்!!

பூந்தோட்டம் மின் மயானம்..

வவுனியா பூந்தோட்டம் மின் மயானம் இன்று (31.08) மாலை முதல் செயற்படக் கூடியதாக இருக்கும் என வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பூந்தோட்டம் பொது மயானத்தில் அமைந்துள்ள மின் வாயு தகன இயந்திரம் பழுதடைந்துள்ள நிலையில் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய நெருக்கடியான நிலையிலும் மக்களுக்கான சேவையினை துரிதமாக வழங்கும் பொருட்டு நகரசபையின் துரித நடவடிக்கை காரணமாக கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள குழு ஒன்று திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திருத்தப் பணிகள் மாலை நிறைவடையும் என நம்புகின்றேன். நிறைவடையும் பட்சத்தில் மாலை முதல் மீண்டும் கோவிட்டினால் உயரிழந்தவர்களின் சடலங்கள் தகனம் செய்ய முடியும். இது வரையில் ஐந்து சடலங்கள் தகனம் செய்யப்படாமல் உள்ளன.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கோவிட்டின் காரணமாக இறப்பவர்களின் சடங்கள் இம் மயானத்திலேயே தகனம் செய்யப்படுவதனால் இதனை விரைவாக திருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் குறிப்பிட்டது போன்று, தற்போதும் கோவிட்டினால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யவதற்கான பணத்தினை நகரசபைக்கு செலுத்த முடியாதவர்கள்,

கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் உறுதிப்படுத்தலோடு வரும் பட்சத்தில் நகரசபை இலவசமாகவே வழங்கி வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்றரை வயதுச் சிறுவன் மரணம்!!

பம்பைமடுப் பகுதியில்..

வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் மரணமடைந்துள்ளான். நேற்று (30.08) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தந்தை தமது ஆடுகளை கொட்டகையில் கட்டிக் கொண்டிருந்த போது, சீமெந்து கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டகையின் சுவருக்கருக்கில் ஒன்றரை வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது ஆடு மிரண்டு கொட்டகையின் சுவர்களை இடித்த போது, சுவர் இடிந்து ஒன்றரை வயது சிறுவனுக்கு மேல் விழுந்ததுள்ளது. இதனால் குறித்த சிறுவன் மரணமடைந்துள்ளார்.

சிறுவனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னரே சிறுவன் மரணமடைந்துள்ளதாக வைத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியா, பம்பைமடுவைச் சேர்ந்த சுஜந்தன் கிருசன் என்ற ஒன்றரை வயது சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார். இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் ஊரடங்கு 14 ஆம் திகதிவரை நீடிக்கப்படுகிறதா? அரசாங்கம் இன்று தெரிவித்துள்ள விடயம்!!

ஊரடங்கு 14 ஆம் திகதிவரை நீடிக்கப்படுகிறதா?

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அத்துடன், ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது பற்றி நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் பேசப்படவில்லை எனவும் அரசாங்கத்தின் இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில், நாடு முழுவதிலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் வருகின்ற 14ஆம் திகதிவரை நீடிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை நிராகரித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், சுகாதார மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே அரசாங்கம் தீர்மானங்களை தற்போது மேற்கொள்கின்றது. கோவிட் ஒழிப்பினை தொடர்ந்து மேற்கொள்வதற்கும், சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், மக்களுக்கு பாதுகாப்பை அளிப்பதற்குமான முழுப்பொறுப்பு அரசாங்கத்திற்கு உரியதாகும்.

இந்த அனைத்தையும் கருத்திற்கொண்டுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கோவிட் ஒழிப்பு செயலணி முடிவுகளை செய்கிறது.

நாட்டு மக்களின் ஒத்துழைப்பை பெற்று கோவிட் மரணம் மற்றும் பாதிப்பை முடிந்தளவு கட்டுப்படுத்த முடியுமென நம்பிக்கை வெளியிடுகின்றேன். மிகக் குறுகிய தரப்பினரே ஊரடங்கு சட்டத்தின் நிலைமையிலும் வெளியே பொறுப்பற்று நடமாடுகின்றனர்.

மக்களின் ஒத்துழைப்பின்றி கோவிட் ஒழிப்பை நிறைவுசெய்ய முடியாது. மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் அவரவர் தங்களது உயிரைப் பாதுகாப்பு செய்ய வேண்டிய நிலைமையே ஏற்படும்.

எவ்வாறாயினும் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது மற்றும் நீக்குவது பற்றி அமைச்சரவையில் நேற்று கலந்துரையாடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி!!

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப சுகாதாரப் பிரிவினரும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுக்கவுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்க தீர்மானித்து கடந்த யூலை மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 30 வயதிற்கு மேற்பட்ட 83 ஆயிரத்து 151 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நோய் தாக்கம் அதிகமாகவுள்ளமையால் அவர்களுக்கு முன்னுரிமையளித்து 5 ஆயிரத்து 800 பேருக்கு நடமாடும் திட்டத்தின் மூலம் இராணுவத்தினர் ஊடாக தற்போது அவர்களுக்குரிய முதலாவது டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனையடுத்து முதலாவது டோஸ் சினோபாம் தடுப்பூசி பெற்றுக் கொண்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் சினோபாம் தடுப்பூசிகளை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் தங்கள் கிராம அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய உரிய திகதிகளில், குறிப்பிட்ட இடங்களில் அவற்றை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 215 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 215 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

90 நாட்களுக்கு மேல் நீடித்த மாதவிடாய் : பரிசோதனையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

லண்டனில்..

லண்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு 90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் தொடர்ந்த சம்பவம் மருத்துவர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

லண்டனில் வசிக்கும் பெண் Bansri Dhokia(30). இவருக்கு 90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் தொடர்ந்து வந்துள்ளது. இதனால், அவர் மிகவும் சோர்வடைந்ததோடு, அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து, தான் பிசியாக பணியில் இருந்த காரணத்தால் தான் இப்படி ஆகிறது என முதலில் நினைத்து கொண்டிருநந்துள்ளார். அதன் பின்னர் ரத்த பரிசோதனை செய்து பார்த்துள்ளார்.

அதில் அவருக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்ற முடிவு வந்தது. இருந்தாலும், உடல் உபாதைகள் நீங்காத காரணத்தால், அவர் அடுத்தக்கட்ட பரிசோதனைகளை செய்துள்ளார்.

அப்போது வந்த முடிவுகள் அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால், Bansri, lymphoblastic leukaemia என்ற அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது.

அதே நேரத்தில், அவரின் உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது தொடர் சிகிச்சையின் மூலம் நோயிலிருந்து Bansri மீண்டு வருகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், “தொடக்கத்தில் ஏதோ என்னிடம் பிரச்சினை இருக்கும் என நினைத்தேன். ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கும் என நினைக்கவில்லை.

ஆரம்பத்தில் 12 மணி நேரம் தூங்கினாலும் உடல் மிகவும் சோர்வாக இருக்கும். தற்போது ராயல் லண்டன் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை எடுத்து வருகிறேன்.

என் வாழ்வை நினைத்து எனக்கு பயம் வந்துவிட்டது. எனக்கு ஏன் இப்படி ஆனது என என்னையே நொந்து கொண்டேன். சிகிச்சையை தொடர்ந்து எடுத்த நிலையில் நோயிலிருந்து மீண்டுள்ளேன்.

மேலும், உங்கள் மாதவிடாயில் எதாவது பெரிய மாற்றம் நிகழ்ந்தாலோ அல்லது உடல்நிலையில் பிரச்சினை இருந்தாலோ அலட்சியப்படுத்தாதீர்கள் என கவலையுடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், leukaemia தீவிரமான பிரச்சினை என்பதால் அது மீண்டும் வரும் அபாயத்தைக் குறைக்க ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய பன்ஸ்ரிக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனால் அந்த சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது. மேலும், அவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் தொடர்ந்து நோயில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இலங்கையில் நேற்றும் 200 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம்(29.08) கோவிட் தொற்றினால் 216 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 101 பெண்களும் 115 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்று முன்தினம் (28.08) கோவிட் தொற்றினால் 192 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆன பெண்ணை விரும்பிய நண்பன் : அது தெரியாமல் பெண் கேட்க சென்ற நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலிக்கு திருமணமானதை மறைத்த காதலன், தன் நண்பர்களை வீட்டிற்கு அனுப்பி தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்த பிரபல நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர், கடந்த 6-ஆம் திகதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தனது வாட்சப் எண்ணுக்கு, அவரது மனைவியின் ஆ.பாச வீடியோ ஒன்றை மர்ம நபர் ஒருவர் அனுப்பி, மனைவியை திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவோம் என்று மிரட்டிவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இது குறித்து அந்த பெண்ணிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, வீட்டின் அருகில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும்,

அவருடன் அடிக்கடி சேர்ந்து டிக்டாக் வீடியோக்களும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி பிரச்சனையை ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில், எப்படியாவது கணவரிடம் இருந்து டிக் டாக் காதலியை பிரித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என திட்டமிட்ட வசந்த், தன்னுடைய அப்பாவி நண்பர்கள் இருவரை அதற்கு பயன்படுத்தியுள்ளார்.

தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் எனவும், தனது நண்பர்களிடம் வசந்த் புலம்பியுள்ளார். இதை கேட்டு அவரது காதலுக்கு உதவ முன்வந்த நண்பர்கள், பெண்ணுக்கு திருமணமானதை மறைத்து பெண் கேட்க சென்றுள்ளனர்.

அப்போது தான் அவர்களுக்கே திருமணம் ஆன விஷயம் தெரியவர, அதுவும் அவரை திருமணம் செய்த கணவரிடமே இப்படி பெண் கேட்கிறோம் என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர், அந்த பெண்ணின் கணவர் ஆத்திரமடைந்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வீடியோ அனுப்பி மிரட்டிய வழக்கில் வசந்தை ஏற்கனவே தேடி வந்த அண்ணா நகர் பொலிசார், அந்த பெண்ணை திருமணம் செய்துகொடுக்க, பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்துவிட்டதாக நண்பர்களை விட்டே பேசவைத்து வசந்தை வரவழைத்துள்ளனர்.

அதனை நம்பி வந்த வசந்தை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை அறியாமல் நண்பனுக்காக பெண் கேட்க வந்த நண்பர்களை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

25 வயதில் 485 கோடிக்கு சொத்து : கட்டை விரல் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் : நீடிக்கும் மர்மம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் கோடிக்கணக்கில் மதிப்பிலான பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பில் கொ.ல்லப்பட்ட 25 வயது இளைஞரின் வழக்கில் இதுவரை எந்த துப்பும் துலங்காமல் பொலிசார் த.டுமாறி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் பிட்காயின் பரிவர்த்தனை முன்னெடுத்து வந்த 25 வயதான அப்துல் ஷுக்கூர் என்பவர் கொ.ல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது.

2019 ஆகத்து 29ம் திகதி ம.ர்ம ந.பர்களால் க.டத்தப்பட்டு அப்துல் ஷுக்கூர் உத்தரகாண்ட் மாநிலத்தின் டெராடூன் நகரில் ப.டுகொலை செ.ய்யப்பட்ட நிலையில் ச.டலமாக மீ.ட்கப்பட்டார்.

ஷுக்கூர் தலைமையில் 485 கோடி மதிப்பிலான பிட்காயின் பரிவர்த்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பிலான பிரச்சனையில் ஷுக்கூர் கொ.ல்லப்பட்டதாகவே தெரிய வந்துள்ளது.

பிட்காயின் பரிவர்த்தனையால் ஈட்டிய கோடிக்கணக்கான தொகையை ஷுக்கூர் என்ன செய்தார் என்பது தொடர்பில் இதுவரை தெளிவான தகவல் இல்லை. ஷுக்கூர் பயன்படுத்திய மடிக்கணினியின் கடவுச்சொல்லாக அவரது கட்டை விரல் கை ரேகைகளே பயன்படுத்தி வந்துள்ளார்.

ஆனால் அவரது சடலம் மீ.ட்கப்பட்ட போது, க.ட்டை வி.ரல் து.ண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. ஷுக்கூர் கொ.லை தொடர்பில் டெராடூன் பொலிசார், கு.ற்றவாளிகளை கைது செய்திருந்தும், பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பில் வி.சாரணை தடுமாறியது.

ஷுக்கூர் கொ.லை வ.ழக்கு தொடர்பில் அவரது சொந்த ஊரில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கை.து செய்யப்பட்டனர். இருப்பினும் பொலிசார் உரிய வி.சாரணை முன்னெடுக்கவில்லை என்றே, ஷுக்கூரின் தாயாரும் உறவினர்களும் கு.ற்றஞ்சாட்டியுள்ளனர்.

மட்டுமின்றி, டெராடூன் பொலிசார் கை.து செ.ய்துள்ள கு.ற்றவாளிகளை கேரளா பொலிசார் சந்திக்கவோ வி.சாரிக்கவோ இல்லை என்ற கு.ற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

ஊரடங்கின் தளர்வை கொரோனா தொற்று மரணங்களே தீர்மானிக்கும்!!

கொரோனா..

கோவிட் வைரஸ் தொற்று என்பது சாதாரண நோயல்ல. அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். நாளாந்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே,

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமுல்படுத்துவதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துதுறை அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பலப்பிடிய வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

கோவிட் வைரஸ் தாக்கத்தை ‘பெருந்தொற்று’ என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. மருத்துவத்துறையில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளால் கூட வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

ஆகவே, கோவிட் தொற்றை சாதாரண நோயென ஒருபோதும் கருத முடியாது. அனைத்துத் தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். கோவிட் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு நாடு முழுவதும் தனிப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத் தரப்பினரது ஆலோசனைகளுக்கமையவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளாந்தம் அடையாளம் காணப்படும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் எடுக்கப்படும்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையாக்கப்படும். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சேவைகளை மட்டுப்படுத்தப்பட்டளவில் முன்னெடுப்பது அவசியமாகும் என்றார்.

-தமிழ்வின்-

21 உள்ளூர் மூலிகை மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முகக்கவசம்!!

சுமார் 21 உள்ளூர் மூலிகை மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முகக்கவசம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கோவிட் கட்டுப்பாடு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பெருங்காயம், கறுவாப்பட்டை, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, வெனிவேல்,கிராம்பு, இஞ்சி மற்றும் மூல மஞ்சள் உள்ளிட்ட 21 உள்ளூர் மூலிகை பொருட்கள் பயன்படுத்தி, இந்த மூலிகை முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த முகக்கவசம் புதிய கண்டுபிடிப்பாக காப்புரிமை பெற்றுள்ளது மற்றும் இலங்கை தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தால் (ITI) சான்றளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய கண்டுபிடிப்பு ஆணைக்குழு ஏற்பாடு செய்த சஹசக் போட்டியில், இந்த முகக்கவசம் தங்க விருதை வென்றுள்ளது.

அத்துடன் சர்வதேச போட்டியில் சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முகக்கவசம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய, அமைச்சர், இந்த புதிய கண்டுபிடிப்பாளர், மேற்கத்திய மருத்துவர் என்பது முக்கியமான விடயம் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த தயாரிப்பை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும் அமைச்சர் முன்மொழிந்தார்.

வவுனியாவில் 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைப்பு!!

2000 ரூபாய் கொடுப்பனவு..

வவுனியா பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட பகுதிகளில் வறுமைக் கேட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணமாக 2000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகின்றது.

ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக வவுனியாவில் 17 ஆயிரத்து 270 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அதற்காக 16 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் முதற்கட்டமாக 8 ஆயிரம் குடும்பங்களிற்கு அந்த நிதியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக வவுனியா, உக்குளாங்குளம், பண்டாரிக்குளம் மற்றும் ரகுபாக்கம் ஆகிய கிராமங்ளை உள்ளடக்கிய பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 350 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பனவு அப்பகுதி கிராம அலுவலரினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், வைரவபுளியங்குளம், இறம்பைக்குளம், வவுனியா நகரம் உள்ளிட்ட பல்வேறு கிராம அலுவலர் பிரிவுகளிலும் குறித்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.