வவுனியாவில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி : பிசிஆர் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!!

பம்பைமடு பகுதியில்..

வவுனியா – பம்பைமடு பகுதியில் கொட்டகை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த சிறுவனின் சடலம் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் இன்று(01.09.2021) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வவுனியா பம்பைமடு பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை குறித்த சிறுவன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் ஆட்டுக்கொட்டகையின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் படுகாயமடைந்த குறித்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். சம்பவத்தில் பம்மைமடு பகுதியைச் சேர்ந்த சுஜந்தன் கீர்த்திகன் என்ற ஒன்றரை வயது சிறுவனே மரணமடைந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக 25 வயது இளைஞன் மரணம்!!

கொரோனா..

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக 25 வயது இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞன் நேற்று மாலை (31.08) செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சென்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவிட் தொற்றுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு வீட்டில் சென்று குறித்த இளைஞன் தங்கியிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வந்த 25 வயதுடைய மன்சூர் முகமட் சப்ரான் என்பவராவார்.

சடலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டக்களப்பு, ஓட்டமாவடி மயானத்தில் அடக்கம் செய்வதற்காக இராணுவத்தினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வயோதிபத் தாய் ஒருவரை சந்தையில் விட்டுச் சென்றவர்களுக்கு வலைவீச்சு!!

நுவரெலியா..

நுவரெலியா பொலிஸ் நிலையத்தை அண்மித்து அமைந்துள்ள வாராந்தச் சந்தைப் பகுதியில் 75 வயது தாய் ஒருவர் அநாதரவாக விட்டுச் செல்லப்பட்டுள்ளார் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தத் தாயைப் பொறுப்பேற்பதற்கு ஒருவரும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண், தான் நுவரெலியா மார்கஸ்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், லபுக்கலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் முன்னுக்குப்பின் முரணானத் தகவல்களை வழங்கியுள்ளார்.

நுவரெலியா வாராந்தச் சந்தையில் உரிமையாளர் இல்லாத வியாபார நிலையமொன்றிலேயே குறித்த வயோதிபப் பெண் விட்டுச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய உரிய இடத்துக்குச் சென்ற நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டத்தை மேலும் 2 வாரங்கள் நீடிக்க முக்கிய இராஜாங்க அமைச்சர் அழுத்தம்?

ஊரடங்கு சட்டம்..

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் நிலையை மேலும் நீடிக்க முக்கிய இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி முடக்கலை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை முடக்கிய போதும் கோவிட் தொற்றுக்கு இலக்காகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படவில்லை.

இதனால் முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு விதிப்பது அவசியம். நாளாந்த கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 5,000ஆக கண்டறியப்படுகிறது.

எனினும் சமூகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50,000 நபர்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்டா திரிபு கண்டறியப்பட்டதை தொடர்ந்து சமூகத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் திறந்திருந்த 10 வர்த்தக நிலையங்கள், உறவினர் வீடுகளுக்கு சென்ற 25 பேருக்கு எதிராக நடவடிக்கை!!

வவுனியாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நேரத்தில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்த 10 வர்த்தக நிலையங்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்கு சென்ற 25 பேருக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று தீவிரமடைந்துள்ளதுடன், இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பொலிசாருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிசார் ஆகியோர் இணைந்து வவுனியா, மரக்காரம்பளை – கல்மடு வீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 10 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் பூட்டப்பட்டதுடன்,

அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டது. அவர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.

அத்துடன், மரக்காரம்பளை – கல்மடு வீதியில் அத்தியாவசிய தேவையின்றி உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது சென்று வந்த 25 பேர் சுகாதாரப் பிரிவினரால் இனங்காணப்பட்டது.

அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அவர்களை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தின் தற்போதைய அபாய நிலமையை கருத்தில் கொண்டு கோவிட் பரம்பலைக் கட்டுப்படுத்த பொதுமக்களையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இன்று நான்கு பேர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இன்று (31.08.2021) நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவிட் தொற்று காரணமாக வவுனியாவின் குடியிருப்பு, தாண்டிக்குளம், தேக்கவத்தை, கோயில்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 99, 86, 39, 76 வயதுகளையுடைய நான்கு பேரே மரணமடைந்தவர்களாவர்.

குறித்த நான்கு பேரது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் மேலும் 299 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், சடுதியாக தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 299 பேருக்கு கொரோனா தொற்று : சடுதியான அதிகரிக்கும் எண்ணிக்கை!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 299 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், சடுதியாக தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (31.08.2021) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒரே புடவையில் அடுத்தடுத்து த.ற்கொலை செய்து கொண்ட தம்பதி : நெஞ்சை உருக்கும் கடிதம்!!

வேலூரில்..

வேலூரில் மனைவி உ.யிரிழந்ததையடுத்து கணவரும் த.ற்கொலை செ.ய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் வசித்து வருபவர் வராதராஜ் (35). இவர் ஆஷா (23) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

வரதராஜ் அரிசி மட்டும் மாட்டுதீவன கடையை நடத்தி வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் அக்கம்பக்கத்தினரிடம் ஏலசீட்டு எடுத்து நடத்தி வந்த நிலையில் கொரோனா காலத்தில் பெரும் இழப்பை சந்தித்தார்.

ஒருபக்கம் இருவருக்கும் குழந்தை இல்லாத ஏக்கம் வதைக்க மறுபக்கம் மக்களிடம் வாங்கிய ஏலச்சீட்டு பணத்தை திரும்பி கொடுக்க முடியாமலும் திணறி வந்தனர். இந்நிலையில் நேற்று ஆஷா குழந்தை இல்லாத ஏக்கத்தால் பு.டவையில் தூ.க்குமாட்டி த.ற்கொலை செ.ய்துகொண்டார்.

இதையடுத்து வரதராஜும் மனைவி இல்லாத உலகத்தில் வாழ விரும்பாமல் அதே புடவையில் அவரும் த.ற்கொலை செ.ய்து கொண்டார். நேற்று வரை வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் ச.ந்தேகப்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். பொலிஸ் அதிகாரிகள் கதவை உ.டைத்து பார்த்த போது இருவரும் ச.டலமாக தொ.ங்கியுள்ளனர்.

இதையடுத்து அவர்களை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உ.டல்கள் கை.ப்பற்றிய இடத்தில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில் எங்கள் ம.ரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. எங்களுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை.

இதனால் ஏற்பட்ட ம.னவேதனையால் என் மனைவி த.ற்கொலை செ.ய்து கொ.ண்டதையடுத்து நானும் த.ற்கொலை செ.ய்து கொ.ண்டேன் என்று உ.ருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

நீ வேற யாரையாவது திருமணம் செய்துகொள் : நடுரோட்டில் 23 வயதான இளம் பெண்ணுக்கு காதலனால் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் நடுரோட்டில் இளம்பெண் க.ழுத்தறுத்து கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வந்தவர் அனிதா (23). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும்.

பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வெங்கடேஷ் (27) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.

ஒரே நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்ததால், அனிதாவுக்கும், வெங்கடேசுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

வெங்கடேசை காதலிப்பது பற்றி தனது பெற்றோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனிதா கூறியுள்ளார். ஆனால் அனிதாவை, வெங்கடேசுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்து விட்டனர். அத்துடன் அனிதாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் பெற்றோர் முடிவு செய்தார்கள்.

இதுபற்றி வெங்கடேசிடம் பேசிய அனிதா பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டதால், என்னை நீ மறந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள் என கூறினார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த வெங்கடேஷ், நேற்று காலையில் வீட்டில் இருந்து அனிதா வேலைக்கு புறப்பட்டு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் அனிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு வெங்கடேஷ் ஓடிவிட்டார்.

இதில், கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனிதா பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார் தலைமறைவாக இருந்த வெங்கடேசை கைது செய்துள்ளனர். அனிதாவை கொலை செய்ய ரூ.80-க்கு புதிதாக கத்தி ஒன்றை வெங்கடேஷ் வாங்கியதும் அதனை பயன்படுத்தி தான் அனிதாவை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. கைதான வெங்கடேஷிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் (30.08.2021) கோவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, நேற்று உயிரிழந்தவர்களில் 94 பெண்களும் 100 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை நேற்று முன்தினம் (29.08) கோவிட் தொற்றினால் 216 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த அதிசயம்!!

பின்னவலை..

பின்னவலை யானைகள் சரணாலயத்தில் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. சுரங்கி என்ற பெண் யானைக்கு இரண்டு ஆண் யானைக் குட்டிகள் பிறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் குட்டி இன்று அதிகாலை 04 மணிக்கும் இரண்டாவது குட்டி காலை 10 மணிக்கு பிறந்ததாக சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக யானை ஒன்று இரட்டை குட்டிகளை பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைபவர்களின் தகனத்திற்கான செலவை பொறுப்பேற்றுள்ள இரு இளைஞர்கள்!!

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைபவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான செலவினை தாம் வழங்குவதாக ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் சேப்ரி கண் நிறுவன உரிமையாளர் ம.மயூரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் வவுனியா நகரசபைக்கு சொந்தமாக பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இதன்போது சடலம் ஒன்றிக்கு 7 ஆயிரம் ரூபாய் நகரசபையால் கட்டணமாக அறவிடப்படுகின்றது.

குறித்த மின் மயானத்தின் தகனத்திற்கான இயந்திர திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புக்காகவே குறித்த கட்டணம் அறவிடப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக சில குடும்பங்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் பிரபல வர்த்தகரும், சேப்ரிகண் நிறுவன உரிமையாளருமாகிய ம.மயூரன் ஆகியோர் தாமாக முன்வந்து,

குறித்த சடலங்களை தகனம் செய்வதற்கு கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் நகரசபைக்கு தம்மால் முழுபணத்தையும் செலுத்தி தகனம் செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க உதவுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தகனம் செய்வதற்கு நகரசபைக்கு பணம் கட்ட முடியாதவர்கள் 0778500294 அல்லது 0773525375 ஆகிய தொலைபேசி இலங்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் குறித்த உதவியினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நித்திரையிலிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை அறுத்து சென்ற கொள்ளையர்கள்!!

மட்டக்களப்பு..

மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் கொள்ளையர் ஒருவர் கத்தியை வைத்து அவரின் கழுத்திலிருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியைப் பறித்து எடுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உரிமையாளர் தனது வீட்டை இடித்துப் புனரமைத்து வருகின்ற நிலையில் அதே காணியில் தற்காலிகமாக வீடு ஒன்றை அமைத்து வசித்து வருகின்ற நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் வயதான மாமியார் உட்பட 3 பேர் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டின் தகரக் கதவைத் திறந்து வீட்டிற்குள் கொள்ளையர் ஒருவர் புகுந்துள்ளார். உறக்கத்திலிருந்த 45 வயதுடைய பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியைக் கழற்றி தருமாறும் அல்லது கத்தியால் வெட்டி கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி கொடுத்த நிலையில் அதனைப் பறித்தெடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வீட்டிற்கு பொலிஸ் தடயவியல் பகுப்பாய்வு பிரிவினர் சென்று கொள்ளை தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவிக்கு கொரோனா தொற்று : நாட்டை விட்டுச் சென்ற கணவன்!!

கொரோனா..

கர்ப்பிணி மனைவிக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டதால் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கேகாலை சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களுக்கு முன்பு குறித்த நபர் நாடு திரும்பியிருந்த நிலையில் துபாயில் கடமையாற்ற வேண்டியிருந்ததால் அவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மனைவிக்கு ஆகஸ்ட் 16ம் திகதி கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், வீட்டில் வசிப்பவர்கள் செப்டம்பர் முதலாம் திகதி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், கணவர் ஆகஸ்ட் 28ம் திகதி அதிகாலையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

2000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

2000 ரூபாய்..

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அரசாங்கம் 2000 ரூபாய் வழங்கி வருகின்றது.

இந்த கொடுப்பனவிற்கு தகுதி பெற்றும் இதுவரை பெறாத மக்கள் அதிகமானோர் இன்னமும் உள்ளனர். அவ்வாறு கொடுப்பனவு பெறாத மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தின் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் என உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கொடுப்பனவிற்கு தகுதி பெற்ற நூற்றுக்கு 50 வீதமான மக்களுக்கு இதுவரையில் 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். கிடைக்காதவர்கள் கிராம சேவகர் ஊடாக விண்ணப்பித்துக் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நீடிப்பு தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு வெளியானது!!

ஊரடங்கு நீடிப்பு தொடர்பில்..

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை செப்டெம்பர் 6ஆம் திகதி தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது தொடர்பில் இன்னமும் நாம் தீர்மானிக்கவில்லை என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் உடனே முடிவு எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பிரிவினருடன் இது தொடர்பில் இந்த வாரம் கலந்துரையாடப்படும் எனவும், அதன்பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.