ஊரடங்கு திங்கட்கிழமைக்கு பின் நீடிக்கப்படுமா? முடிவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

ஊரடங்கு..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி நாளை காலை கூடி, நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது திங்கட்கிழமைக்குப் பிறகு நீக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போதுள்ள கோவிட் நிலைமையை மறுபரிசீலனை செய்ய கோவிட் -19 குழு இன்றிரவு கூடும். இந்த நிலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கோவிட் நிலவரம் மற்றும் முன்னேற்ற நிலைமைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு : இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பது தொடர்பில் நாளைய தினம் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பான முடிவானது ஜனாதிபதி பணிக்குழுவினால் எட்டப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை பணிக்குழு உறுப்பினர்கள் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது.

மேலும், நாட்டில் கோவிட் தொற்று நிலையில் தீவிரமடைந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் கடந்த 30ஆம் திகதி அதிகாலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை எதிர்வரும் 6ஆம் திகதிவரை நீடிக்க முடிவு எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளனர். ஒருவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (01.09) மரணமடைந்துள்ளார்.

மற்றைய நபர் வீட்டில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை (02.09) மரணமடைந்துள்ளார். குறித்த இருவரது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் நேற்றைய தினம் (01.09) போகஸ்வேவ, இறம்பைவெட்டி, தோணிக்கல், சூசைப்பிள்ளையார்குளம், இளமருதங்குளம் ஆகிய பகுதிகளைச் 5 பேர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் நோயாளர் காவு வண்டி சாரதி ஆகியோருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கும், நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் தடிமன் மற்றும் இருமல் ஏற்பட்டதையடுத்து மேற்கொண்டி அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டது.

வவுனியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளல், தொற்றாளர்களை தனிமைப்படுத்தல், தொற்றாளர்களை கண்காணித்தல்,

தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணித்தல், தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லல் உள்ளிட்ட கள வேலைகளில் ஈடுபட்ட வவுனியா நகரசபையின் சுகாதார பரிசோதர் ஒருவரும், நோயாளர் காவு வண்டி சாரதியுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சுகாதார பரிசோதருக்கு சில மாதங்களுக்கு முன்னரும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் குணமடைந்திருந்தமையும், இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தப்பி ஓடிய கொரோனா தொற்றாளர்கள் : கிராமத்தில் 32 பேருக்கு தொற்று!!

கொரோனா..

வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள நொச்சிக்குளம் கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த கிராமத்தினை சேர்ந்த 3 பேர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றனர். அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

ஆயினும் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் தங்காமல் தப்பிச்சென்றிருந்தனர். இது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதாரப் பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடாத்தி ஏழு நபர்களை தனிமைப்படுத்தியிருந்தனர்.

எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அதனை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர். இது தொடர்பாக சுகாதார பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதியை சேர்ந்த 150 பேரிடம் அன்ரிஜன் பரிசோதனையினை முன்னெடுத்தனர்.

அதில் 32 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் அனேக மக்கள் நாடோடி இனமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ஐந்து பேர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (01.09) ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, போகஸ்வேவ, இறம்பைவெட்டி, தோணிக்கல், சூசைப்பிள்ளையார்குளம், இளமருதங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முறையே 60, 54, 71, 72, 58 ஆகிய வயதுகளையுடைய 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மரணித்த 5 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 25 வயது இளைஞன் ஒருவரும் நேற்று முன்தினம் (31.08) இரவு மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று (01.09.2021) இரவு வெளியான பரிசோதனை முடிவுகளில் 237 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 237 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் 237 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (01.09.2021) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 237 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுக்கெல்லாம் கொ.லை செ.ய்வதா? அக்கா கணவரை அ.டி.த்.து.க் கொ.ன்.ற இளைஞன்!!

தமிழகத்தில்..

பள்ளப்பட்டியைச் சேர்ந்த கோகுல்நாத், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பிரியதர்ஷினியின் தம்பி பாலமுருகன் என்பவன் கல்லூரி முடித்துவிட்டு ம.து ம.ற்றும் க.ஞ்.சா போ.தை.க்.கு அ.டி.மை.யா.கி.யு.ள்.ளா.ன்.

பாலமுருகனின் பெற்றோர் வறுமையில் வா.டியதால், அவனை தன் வீட்டிலேயே தங்கவைத்து, போ.தை.ப் ப.ழ.க்.க.த்.தி.ல் இருந்து மீள்வதற்கான சி.கிச்சையை அளித்து வந்துள்ளார் கோகுல்நாத். தினசரி க.ஞ்.சா போ.தை.யி.ல் வந்து வீட்டிலுள்ளவர்களிடம் த.க.ரா.று செ.ய்.த பாலமுருகனை அவ்வப்போது கோகுல்நாத் க.ண்.டி.த்.து வ.ந்துள்ளார்.

இதனால் அவர் மீ.து ஆ.த்.தி.ர.த்.தி.ல் இருந்த பாலமுருகன், அதிகாலை கோகுல்நாத், க.ழிவறைக்குச் செல்லும்போது காத்திருந்து அவரைக் கு.த்.தி.க் கொ.லை செ.ய்.த.தா.க கூ.றப்படுகிறது. அ.வனை கை.து செ.ய்.து போ.லீசார் வி.சாரித்து வ.ருகின்றனர்.

நாக்கை அறுத்துக் கொண்ட கணவன் : துண்டான நாக்குடன் பதறியபடி மருத்துவமனைக்கு வந்த மனைவி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மன உளைச்சலில் இருந்த கணவன் தனது நாக்கை அறுத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வருபவர் முருகேசன். இவர் சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையிலேயே இருந்த முருகேசன், மன உளைச்சல் காரணமாக தனது நாக்கை கத்தியால் வெட்டிக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசனின் மனைவியும், மகளும் துண்டான நாக்கை கவரில் எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் துண்டான நாக்கில் இரத்த ஓட்டம் இல்லாததால் மீண்டும் இணைக்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும் தெளிவான உச்சரிப்பு இல்லாமல் ஓரளவுக்கு மட்டுமே முருகேசனால் இனிமேல் பேச இயலும் என தெரிவித்தனர். தொடர்ந்து முருகேசனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் மீண்டும் அதிகரித்த கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் (31.08.2021) கோவிட் தொற்றால் 215 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,400 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 100 பெண்களும், 115 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேள நேற்று முன்தினம் (30.08.2021) கோவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

காதலை கைவிட்ட காதலியை விரட்டிச்சென்று காதலன் செய்த வெ.றிச் செயல்!!

இந்தியாவில்..

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த சந்தோஷ் குலால், மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரும், உடுப்பியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த 25 வயதான சவுமியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சவுமியாவுக்கு, வீட்டில் வேறொரு இளைஞருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். இந்த திருமணத்துக்கு சவுமியாவும் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. சவுமியாவிடம் இதுபற்றி சந்தோஷ் கேட்டதால் இருவருக்குமிடையே த.கராறு ஏற்பட்டுள்ளது.

சவுமியா தன்னிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததால், தன்னைக் காதலித்து கழற்றி விட்டதாக சந்தோஷ் ஆ.த்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் திங்கட்கிழமை சவுமியா வங்கியில் பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பிய போது, அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற சந்தோஷ், சந்தேகட்டே பகுதியில் வைத்து சவுமியாவின் ஸ்கூட்டரை மறித்துள்ளார்.

தன்னை காதலித்து விட்டு வேறொருவரை திருமணம் செய்ய சம்மதித்தது ஏன்? என்று சந்தோஷ் கேட்டதால் மீண்டும் அவர்களுக்கிடையே த.கராறு ஏற்பட்டது. அப்போது ஆ.த்திரமடைந்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல், சவுமியாவை ச.ர.மா.ரி.யா.க கு.த்.தி உ.ள்ளான்.

இதில் ப.ல.த்.த கா.ய.ம.டை.ந்.த சவுமியா, ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.க் கொண்டிருந்தார். பின்னர் சந்தோசும், தன்னை தானே க.த்.தி.யா.ல் கு.த்.தி.க் கொ.ண்.டு த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றுள்ளார்.

நடுரோட்டில் நிகழ்ந்த இந்த ப.ய.ங்.க.ர ச.ம்.பவத்தை பார்த்து அந்தப்பகுதியில் இருந்தவர்கள் அ.தி.ர்.ச்.சி.யி.ல் உ.றை.ந்து போ.யினர். அவர்களது பைகளில் இருந்த ஆவணங்களை வைத்து இருவரையும் அவர்கள் யார்? என்று அடையாளம் கண்டனர்.

ர.த்.த.வெ.ள்.ளத்தில் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய 2 பேரையும் மீ.ட்.டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணிபால் தனியார் மருத்துவ கல்லூரி ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீ.வி.ர சிகிச்சை அளித்தும் ப.ல.னின்றி சவுமியாவும், சந்தோசும் உ.யிரிழந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தி உள்ளது.

விழியில் விழுந்து இதயம் நுழையும் காதல் விருப்பமின்றி வி.ல.கிச்சென்றால் விட்டுவிட வேண்டும், அதை விடுத்து க.த்.தி.யா.ல் கு.த்.தி உ.யி.ரை மா.ய்ப்பதால் இருவரின் வாழ்க்கையும் சீ.ரழிந்து விடும் என்பதற்கு இந்த ச.ம்பவமும் ஒரு சாட்சி.

மரணங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் : அதி அபாய வலயத்திற்குள் இலங்கை!!

கொரோனா..

தென்னாபிரிக்க வைரஸ் இலங்கையில் பரவும் நிலை ஏற்பட்டால் மரணங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் அபாய நிலை உள்ளதாகவும் சுகாதார, வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸின் தாக்கத்தினால் கடந்த மாதத்தில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை நாட்டின் கோவிட் தாக்கங்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர கூறுகையில், சி.1.2 என்ற தென்னாபிரிக்க வைரஸ் மற்றும் “மூ” கொலம்பிய வைரஸ் ஆகியவை தற்போது பாவனையில் உள்ள தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாதவை என கூறப்படுகின்றது.

எனவே இலங்கையில் இந்த வைரஸ்களில் ஏதேனும் ஒன்றேனும் பரவினால் தற்போது பதிவாகும். கோவிட் மரணங்களை விட மூன்று மடங்கு மரணங்கள் நாட்டில் ஏற்படும் அபாயநிலை எம்மெதிரே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமூக மருத்துவத்துறை நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி இது குறித்து கூறுகையில், நாம் புதிய வைரஸ் தொற்றுக்குள் சிக்கிக்கொண்டால், புதிய வைரஸ் பரவலுக்கு இடமளித்தால் கோவிட் மரணங்களால் எண்ணிக்கை இந்த ஆண்டுக்குள் 30 ஆயிரத்தை அண்மிக்கலாம். எனவே இந்த அச்சுறுத்தல் நிலைமையை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

இது குறித்து இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி நாட்டின் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 4,508 ஆககாணப்பட்டது. செப்டெம்பர் 1 ஆம் திகதி இந்த எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை கடந்துள்ளது.

அப்படியென்றால் இந்த ஒரு மாதத்தில் 50 வீதத்தால் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலைமையை வெளிப்படுத்துகின்றது.

இந்த நிலைமை தொடர்ந்தால் அடுத்த மாதத்தில் மரண எண்ணிக்கை நூறுக்கு முன்னூறு என்ற ரீதியில் அதிகரிக்கும். இது நாட்டின் சுகாதார கட்டமைப்பை மட்டுமல்லாது பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா மின் மயானத்தில் சடலங்களை கட்டணமின்றி எரியூட்டுமாறு மாக்ஸ்சிச கட்சி கோரிக்கை!!

புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சி..

கொரோனா பெருந்தொற்று காலத்தினை பேரிடர்காலமாக கருத்தில்கொண்டு கட்டணமின்றி சடலங்களை எரியூட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் கோவிட் பெருந்தொற்றின் மூலம் அதிகளவு மரணங்கள் பதிவாகி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக வன்னி மாவட்டத்திலும் இறப்புக்கள் அதிகரித்துள்ளது.

இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் வரை குடும்ப உறவுகள் செலவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது. இறப்பவர்களில் அதிகமானோர் சாதாரண குடும்பங்களை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான எரிவாயு மாயானத்தில் ஒரு சடலத்தினை எரியூட்டுவதற்கு 7 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுகின்றது. இது நிறுத்தப்பட்டு எதுவித கட்டணமும் இன்றி சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என நாம் கோருகிறோம்.

இறப்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களாக இருப்பின் கிராமசேவையாளரால் அவர்களது வறுமை நிலை உறுதிப்படுத்திய சான்றிதழ் வழங்கும் பட்சத்தில் கட்டணமின்றி உடல்களை எரியூட்டமுடியும் என்று வவுனியா நகரசபை நிர்வாகம் கூறுகின்றது. இது மரத்தில் இருந்து வீழ்ந்தவரை மாடு ஏறி மிதிப்பது போன்றதாகிவிடும்.

எனவே, கொரோனா பெருந்தொற்று காலத்தினை தேசிய அனர்த்த பேரிடர் காலமாக கருத்தில் கொண்டு துயர் அடைந்திருக்கும் குடும்ப உறவுகளை மேலும் அசௌகரியங்களிற்கு உட்ப்படுத்தாமல் எந்தவித கட்டணமுமின்றி அந்த சடலங்களை எரியூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

குறித்த விடயத்தில் மத்திய அரசு, மாகாண உள்ளூராட்சி சபைகள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர், சுகாதாரத் திணைக்களம் ஆகிய தரப்பினர்கள் ஒன்றிணைந்து உரிய பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் சீனி இல்லை : ஏமாற்றத்துடன் செல்லும் மக்கள்!!

ஏமாற்றதுடன் செல்லும் மக்கள்..

சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் சீனியைப் பெறுவதற்காக சென்ற வவுனியா மக்கள் அங்கு சீனி இன்மையால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் சிவப்பு சீனியை இன்று (01.09) முதல் நடாளாவிய ரீதியில் 130 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

கடந்த சில நாட்களாக வவுனியா மாவட்டத்திலும் சீனிக்கான தட்டுப்பாடு நிலவி வருவதுடன், தனியார் விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சீனி 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா பரவலின் தீவிர தன்மை மற்றும் ஊரடங்கு சட்டம் என்பவற்றுக்கு மத்தியில் சிவப்பு சீனியை 130 ரூபாய் விலையில் பெற்றுக் கொள்வதற்காக வவுனியாவின் பல்வேறு கிராமங்களிலும் இருந்து சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.

எனினும் குறித்த அரச விற்பனை நிலையங்களில் சீனி இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

கொரோனா தொற்றால் தாயும், மகனும் பலி : இலங்கையில் நடந்த சோகம்!!

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றால் தாயும், மகனும் உயிரிழந்துள்ள மற்றுமொரு பெருந்துயர் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொரலஸ்கமுவ, திவுல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதான சுனிதா டி சில்வா என்ற தாயும், அவரின் மகன் 25 வயதான ட்ரிவின் டி சில்வா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய தாய், உயிரிழந்து, 11 நாட்களின் பின்னரே மகனும் உயிரிழந்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பிரதி பொலிஸ் அத்தியட்சகரான டிரோன் டி சில்வாவின், மனைவி, மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டிரோன் டி சில்வாவின் மனைவி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 20ம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

புதிய கொரோனா திரிபு நாட்டில் பரவுவதை தவிர்க்க முடியாது : விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை!!

புதிய கொரோனா திரிபு..

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

C 12 என்ற குறித்த கொரோனா வைரஸ் திரிபு தென்னாப்பிரிக்காவில் பரவி வருகின்றது. இதற்கு முன்னர் அங்கு பரவலடைந்த வைரஸ் திரிபும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு நாடுகளில் பரவிய கோவிட் வைரஸ் திரிபுகளும் நாட்டில் அடையாளம் காணப்பட்டன. புதிய வைரஸ் திரிபுகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியுமாயின் அதனை தவிர்க்க முடியும். ஆனால் அதனை இனங்காண்பதில் தாமதமாவதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் குறிப்பிட்டு்ள்ளார்.

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள புதிய செய்தி!!

ஊரடங்கு..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் உடனடியாக எந்த தீர்மானங்களையும் எட்ட முடியாது என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் பதிவாகும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியே இந்த தீர்மானம் எட்டப்படும்.

மேலும், இது தொடர்பில் சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியே, இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.