இலங்கையில் மேலும் ஊரடங்கு நீடிப்பு : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!!

ஊரடங்கு..

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். இதன்படி மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கப்பட்ட ஊரடங்கு 13.09.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20.08.2021 அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கானது கடந்த வெள்ளிக்கிழமை அன்று 06.09.2021 ம் திகதி வரை நீடிக்கப்பட்ட நிலையில் மேலும் 13.09.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் போக்குவரத்து பொலிசார் விசேட சோதனை : தேவையின்றி பயணிப்போருக்கு வழக்கு பதிவு!!

விசேட சோதனை..

கோவிட் தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறி அத்தியாவசிய தேவையின்றி வவுனியா நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு எதிராக போக்குவரத்து பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் வாகனங்களை கண்டறியும் முகமாக போக்குவரத்து பொலிசார் குருமன்காடு மற்றும் மன்னார் வீதியில் இன்று (03.09) காலை விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, மன்னார் வீதி வழியாக வவுனியா நகருக்குள் நுழைந்த அனைத்து வாகனங்களும் வழி மறிக்கப்பட்டு, அவர்களது போக்குவரத்து அனுமதிப் பத்திரம் சோதனை செய்யப்பட்டதுடன்,

அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் பிரவேசித்த வாகனங்கள் பலவும் கடுமையான எச்சரிக்கையுடன் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட 10 வாகன சாரதிகளுக்கு எதிராக போக்குவரத்து பொலிசாரால் சட்ட நடவடிக்கைக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இலங்கையில் டிசம்பர் வரையில் அவ்வப்போது முடக்கம் : தயார் நிலையில் இருக்குமாறு தகவல்!!

முடக்கம்..

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பில் இன்று கோவிட் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

இந்த நிலையில் கோவிட் பரவல் நிலைமையை கடக்கும் கட்டத்தில் நாம் இல்லை, இன்னும் நீண்ட தூர சவால்மிகு பயணத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது என இலங்கையில் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் மாதம் இறுதி வரையில் மிகப்பெரிய சவாலுக்கு நாம் முகங்கொடுக்க நேரிடும் என அவர்கள் எச்சரித்துள்ளதுடன், அவ்வப்போது முடக்கத்திற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் மேலும் 159 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 159 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (02.09.2021) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றால் நேற்றும் 200 ஐ தாண்டிய மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் (01.09.2021) கோவிட் தொற்றால் 204 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,604 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 95 பெண்களும், 109 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்று முன்தினம் (31.08.2021) கோவிட் தொற்றால் 215 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் செய்த விபரீத செயல்!!

இந்தியா..

காதலை கைவிட்ட காதலியை, காதலன் க.த்.தி.யா.ல் கு.த்.தி து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.த சம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குலால்.

மருந்துக் கடையில் வேலை பார்த்து வரும் இவரும், உடுப்பியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த 25 வயதான சவுமியா என்பவரும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சவுமியா வீட்டில் திடீரென்று வேறொரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டனர். இதற்கு சவுமியாவும் சம்மதித்துள்ளார்.

இதனால் இதை அறிந்து அ.திர்ச்சியடைந்த சந்தோஷ் குலால், இது குறித்து காதலியிடம் கேட்ட போது, இருவருக்குமிடையே வா.க்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சவுமியா அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதாக கோ.பமடைந்த சந்தோஷ் குலால், கடந்த திங்கட் கிழமை சவுமியா வங்கியில் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற சந்தோஷ், சந்தேகட்டே பகுதியில் வைத்து ம.றித்து பேசியுள்ளார்.

அப்போது தன்னை காதலித்து விட்டு வேறொருவரை திருமணம் செய்ய சம்மதித்தது ஏன்? என்று கேட்ட போது, மீண்டும் அந்த இடத்தில் இருவருக்கும் இடையே க.டுமையான த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், கோ.பத்தின் உ.ச்சிக்கு சென்ற சந்தோஷ், தான் ம.றை.த்.து வைத்திருந்த க.த்.தி.யா.ல், சவுமியாவை சரமாரியாக கு.த்.தி.வி.ட்.டு, அவரும் தன்னை க.த்.தி.யா.ல் கு.த்.தி த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றுள்ளார்.

இப்படி இருவரும் இ.ர.த்.த வெ.ள்ளத்தில் சவுமியாக உ.யி.ரு.க்.கு போ.ரா.டு.வ.தை.க் க.ண்டு, அ.திர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்த வந்த பொலிசார், அவர்கள் வைத்திருந்த பைகளில் அடையாளம் கண்டு, இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ப.ல.த்.த க.த்.தி.க்.கு.த்.து கா.ரணமாக கா.ய.ம.டை.ந்.த சவுமியா, ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.க் கொ.ண்டிருந்தார்.

பின்னர் சந்தோசும், தன்னை தானே க.த்.தி.யா.ல் கு.த்.தி.க் கொ.ண்டு த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றுள்ளார். அங்கு தீ.வி.ர சி.கிச்சை அளித்த போதும், இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.த.ன.ர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இலங்கையில் 109 வயதுடைய மூதாட்டியொருவர் மரணம்!!

செம்பக்குட்டி செல்லம்மா..

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வந்த செம்பக்குட்டி செல்லம்மா (109 வயது) எனும் மூதாட்டியொருவர் இன்று இயற்கை எய்தியுள்ளார்.

1912 ஆம் ஆண்டு பிறந்த செல்லம்மா தனது 109 வயது வரை ஆரோக்கியமாகவே வசித்து வந்துள்ளார். இப்பிரதேசத்தில் அதிகூடிய வயதுடன் வாழ்ந்து வந்த செல்லம்மா ஆச்சிக்கு 12 பிள்ளைகள், 62 பேரப்பிள்ளைகள்,

147 பூட்டப்பிள்ளைகள், 27 கொள்ளுப்பிள்ளைகள் உள்ளனர். இவர் மூன்று நேரமும் தவறாது , தேவார, திருவாசகங்களை ஓதுவது என தமது பொழுதைக்போக்கியுள்ளார்.

பிள்ளைகளை கட்டியணைத்தபடி தீக்குளித்த தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் இரண்டு பிள்ளைகளுடன் தீ.க்குளித்து த.ற்கொலைக்கு மு.யன்று சிகிச்சையில் இருந்த தாயார் ம.ரணமடைந்துள்ளார்.

கேரள மாநிலம் அங்கமாலி பகுதியில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த அஞ்சு என்பவரே தீ.க்குளித்து த.ற்கொலை செ.ய்து கொ.ண்டவர். சம்பவத்தின் போது பிள்ளைகளான ஆதிரா(7), அனூஷ்(3) ஆகிய இருவரையும் க.ட்டியணைத்தபடி அஞ்சு தீ.க்குளித்ததாக கூறப்படுகிறது.

மதியத்திற்கு பிறகு சுமார் 3 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, உ.யிருக்கு ஆ.பத்தான நிலையில் மீ.ட்கப்பட்ட அஞ்சு சிகிச்சை ப.லனின்றி ம.ரணமடைந்துள்ளார்.

முன்னதாக, தீ.க்காயங்களுடன் ஆ.பத்தான நிலையில் மீ.ட்கப்பட்ட ஆதிரா மற்றும் அனூஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்ப்பித்த நிலையில் ம.ரணமடைந்ததாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்திருந்தது.

அஞ்சுவின் கணவர் அனூப் கடந்த மாதம் 2ம் திகதி மா.ரடைப்பால் ம.ரணமடைந்தார். இதனால் கடும் மன உ.ளைச்சலில் இருந்த அஞ்சு இன்று பிள்ளைகள் இ.ருவருடன் த.ற்கொலை செ.ய்து கொ.ண்டதாக கருதப்படுகிறது.

யாழில் இளம் ஊடகவியலாளர் கொரோனா தொற்றால் மரணம்!!

பிரகாஸ் ஞானப்பிரகாசம்..

யாழில் சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றிய பிரகாஸ் ஞானப்பிரகாசம், கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். பிரகாஸ், சமூக வலைத்தளங்களில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தமைக்காகவும் சமூகத்துக்கு ஆற்றல் மிகுந்த பங்களிப்பை வழங்கியமைக்காகவும் மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த நினைவு விருதினை பெற்றவர்.

நேற்று செப்ரெம்பர் முதலாம் திகதி, தனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் டுவிட்டரில் அறிவித்திருந்தார். இன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மரணமானார்.

ஊடகவியலாளர் பிரகாஸ் தசைத்திறன் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இலங்கை மருத்துவ துறைக்கு வளர்ச்சியை கொடுக்க எனது உடலை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு ஒப்படைக்க என தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்த நிலையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் அதி தீவிர நிலையை அடைந்துள்ள கொரோனா தொற்று : உண்மை நிலவரம் இதோ!!

கொரோனா..

தெற்காசியாவில் கோவிட் வைரஸ் தாக்கத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கோவிட் மரணங்களானது 19 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவை விடவும் மோசமான நிலையில் அபாயகரமான கட்டத்தில் இலங்கை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தூரநோக்கு திட்டங்களை விடவும் மக்களை பாதுகாக்க உடனடி தீர்மானங்களை இப்போது முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தெற்காசிய வலயத்திற்கான கோவிட் நிலைமைகள் குறித்து உலக சுகாதார தாபனம் தனது அறிக்கையை முன்வைத்துள்ள நிலையில், சுகாதார தரப்பினர் அறிக்கை குறித்தும் இலங்கையில் நிலைமைகள் குறித்தும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் நீலிகா மளவிகே கூறுகையில்,

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுக்குகுழுவுடன் இணைந்து இலங்கையின் வைத்திய நிபுணர்கள் 15 பேர் ஆய்வு வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றோம்.

ஏற்கனவே இணைந்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது உலக சுகாதார ஸ்தாபனம் புதிய அறிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

இதில் இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கையில், கடந்த வாரத்தில் மாத்திரம் தெற்காசிய பிராந்தியத்தில் 14,000 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இலங்கை இந்தியாவின் மரணவீத அதிகரிப்பினால் மோசமான பதிவுகள் பதிவாகியுள்ளன.

எனவே நிலைமைகளை கட்டுப்படுத்த துரிதமான அதேபோல் கடுமையான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இப்போதும் நாம் ஆபத்தான கட்டத்தில் உள்ளோம் என்பதை ஏற்றுக்கொண்டு தற்போது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.

இப்போது நீண்டகால தூரநோக்கு திட்டங்களை ஆராய்ந்து கொண்டிருக்காது மக்களை காப்பாற்றும் தீர்மானங்கள் எடுப்பதே முக்கியம். ஆசியாவில் மிக மோசமான வைரஸ் தாக்கம் கொண்ட நாடாக இலங்கை அடையாளபடுத்தப்படுகின்றது என்பதை மனதில் வைத்து தீர்மானம் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

சர்வதேச மட்டத்தில் பிரபலமடைந்த இலங்கையின் கார்ட்போர்ட் சவப்பெட்டி!!

கார்ட்போர்ட் சவப்பெட்டி..

இலங்கையில் தயாரிக்கப்படும் கார்ட்போர்ட் சவப்பெட்டி சர்வதேச மட்டத்தில் அதிகம் பேசப்படுவதுடன், அதனை கொள்வனவு செய்யவும் சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

தெஹிவளை – கஸ்கிஸ்ஸ மாநகர சபையின் உறுப்பினர் பிரியந்த சஹபந்துவின் கார்ட்போர்ட் சவப்பெட்டி தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதற்கமைய 1000 கார்ட்போட் சவப்பெட்டிகளை கொள்வனவு செய்வதற்கு உலகில் முதல் வெளிநாடாக வியட்நாம் முன்வந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த சவப்பெட்டிகளை எதிர்வரும் திங்கட்கிழமை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5000 ரூபாய் என்ற சிறிய தொகையில் சவப்பெட்டி வழங்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக சஹபந்து தெரிவித்துள்ளார்.

பொதுவாக மரப்பலகையிலான ஒரு சவப்பெட்டி செய்வதற்கு 2 மரங்களை வெட்ட வேண்டும் என்ற காரணமாக இந்த பெட்டி சுற்றுசூழலுக்கு நெருக்கமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சவப்பெட்டி அவசியம் ஏற்பட்டால் உடனடியாக கொள்வனவு செய்துக் கொள்ள முடியும் என மாநகர சபையின் உறுப்பினர் பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உத்தரவாதமின்றி ஒக்ஸிமீட்டர் விற்பனை செய்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

ஒக்ஸிமீட்டர்..

வவுனியாவில் பொருளுக்கான உத்தரவாதமின்றி ஒக்ஸிமீட்டர் விற்பனை செய்த மூன்று மருந்தங்கங்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் உள்ள தனியார் மருந்தங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது வவுனியா வைத்தியசாலை வீதி, வவுனியா நகர், குருமன்காடு சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருந்தகங்களில் ஒக்ஸிமீட்டர் உத்தரவாதம் இன்றி விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியாவில் ஒக்ஸிமீட்டர் 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்,

ஒக்ஸிமீட்டர் ஒன்றுக்கான அதிகூடிய சில்லறை விலை 3000 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முடக்க நிலையிலும் கொழும்பு மக்களின் மோசமான செயற்பாடு!!

கொழும்பு..

இலங்கையில் கொவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
எனினும் முடக்க நிலையை மறந்த மத்திய கொழும்பு மக்கள் வீதிகள் நிறைந்து காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பலர் பொருட்கள் கொள்வனவு செய்து வருகின்ற நிலையில், வர்த்தகர்கள் விற்பனை நடவடிக்கைகளும் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் பரவும் கொவிட் தொற்றினை மறந்து முகக் கவசம் அணியாமல் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது மக்கள் வீதிகளில் நடமாடும் காட்சிகளை அவதானிக்க முடிந்துள்ளது.

கொழும்பில் டெல்டா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை மக்களை தயார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை!!

எச்சரிக்கை..

கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நாம் தயார் நிலையில் இருக்க வேண்டுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,  உலகில் இடம்பெற்ற போர்களை விட இந்த கோவிட் வைரஸினால் உயிர்களுக்கும்,

பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க ஒரு நாடு என்ற ரீதியில் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் இரண்டு நெல் களஞ்சியசாலைகளிற்கு சீல் வைப்பு!!

நெல் களஞ்சியசாலை..

வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வவுனியா தாண்டிக்குளம் மற்றும் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரண்டு தனியார் நெற்களஞ்சிய சாலைகளிற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் தொற்று பரவலடைந்து வரும் நிலையில் உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டிலுள்ள தனியார் நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் அரசினால் அறிவிக்கப்பட்ட கால எல்லைக்குள் குறித்த தகவல்களை வழங்காத இரண்டு நெற்களஞ்சிய சாலைகளை வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த களஞ்சிய சாலைகளில் உள்ள நெல்லினை நெல் சந்தைப்படுத்தும் சபையால் நிர்ணய விலையினை செலுத்தி கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்க நிலையை தளர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட செய்தி!!

முடக்கநிலை..

சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க முடியும் என தான் நம்புவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண அதிகளவில் பீசீஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பைஸர், மொடர்னா, எஸ்ட்ராசெனேக்கா, சினோபாம் உட்பட அனைத்து தடுப்பூசிகளும் செலுத்தும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் வரையில் 1,190,6104 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க முடியும் என நம்புவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர்ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-