இலங்கையில் கடன் பெற்றவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

கடன் பெற்றவர்களுக்கு..

கடன் பெற்றவர்களுக்கான சலுகைக்காலத்தை நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் நிலவும் கோவிட் தொற்று பரவல் நிலை மற்றும் இதனால் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி குறித்த விடயங்களால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற வணிக நிறுவனங்களுக்கு சுற்று நிரூபத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடன் பெற்ற, பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைக்கு அமைவாக வங்கிகள் இந்த சலுகையை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மாதமொன்றுக்கு 10000 பேர் உயிரிழப்பார்கள் : வைத்தியர் எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கை தற்போது நான்காம் எச்சரிக்கை நிலையை அடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினரும், ஊடகக்குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாதமொன்றுக்கு 10,000 பேர் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது காணப்படும் கோவிட் அச்சுறுத்தல் நிலைமையானது தொடர்ந்து நீடித்தால் எதிர்வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 10000 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்படும் அபாயம் உள்ளது. அத்துடன் மாதமொன்றுக்கு 10000 பேர் உயிரிழக்கும் அவலநிலையும் ஏற்படும்.

நாட்டில் தற்போது பதிவாகும் கோவிட் மரண வீதமானது இந்தியாவை விட ஐந்து வீதத்தால் அதிகரித்துள்ளது. பெயரளவில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கில் 90 சதவீதமான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தால் மாத்திரமே கோவிட் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

நாடு தற்போது எச்சரிக்கை நிலை நான்கில் உள்ளது. இது சிவப்பு எச்சரிக்கையையும் சமூக பரவலையும் குறிக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தென்னாபிரிக்காவில் பரவும் சி12 எனப்படும் புதிய கோவிட் திரிபும் இலங்கையில் பரவும் அபாயம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

யாழில் திருமண கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்துள்ள கதி!!

யாழில்..

யாழ். காரைநகரில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமணச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகர், அல்வின் வீதியில் கடந்த புதன்கிழமை குறித்த திருமண நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒளிப்படங்களில் காணப்பட்டவர் முகக்கவசம் கூட அணிந்திருக்காத நிலையில், சுகாதாரத் துறையினர் அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் மேலும் 148 பேருக்கு கொரோனா தொற்று : இருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 148 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (03.09.2021) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். வவுனியாவின் தேக்கவத்தை மற்றும் தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 61 மற்றும் 76 வயதுடைய இருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் உடல்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் (02.09.2021) வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ஆண்டியாபுளியங்குளம், கந்தசாமி கோவில் வீதி, செட்டிகுளம், தவசிகுளம், வேப்பங்குளம், இறம்பைக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 46,47,60,63,83,86 வயதுடைய ஆறு பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொலை : நாட்டை உலுக்கிய கோர சம்பவம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை சு.ட்.டு கொ.லை செ.ய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ரோத்தக் நகரில் வசித்து வருபவர் பிரதீப் மாலிக்.

இவரின் மனைவி சந்தோஷ் பப்ளி. மாலிக் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இந்த தம்பதிக்கு நேகா என்ற மகளும் அபிஷேக் என்ற 20 வயது மகனும் உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மாலிக், அவரது மனைவி, மாலிக்கின் மாமியார், மகள் உள்ளிட்ட 4 பேரும் இ.ர.த்.த வெ.ள்ளத்தில் ச.டலமாக கி.டந்துள்ளனர். இதையடுத்து காவல் அதிகாரிகள் 4 பே.ரை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர வி.சாரணையில் இறங்கிய காவல்துறை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வி.சாரணை நடத்தினர்.

அப்போது ச.ந்தேகத்தின் அடிப்படையில் மாலிக்கின் மகன் அபிஷேக்கிடம் பொலிஸ் நடத்திய வி.சாரணை மூலம் பல உண்மைகளை வெளியே கொண்டு வந்தனர்.

அதாவது, அபிஷேக்கின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அவரது தந்தை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அபிஷேக்கும், குடும்பத்தினருக்கும் அடிக்கடி த.கராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோ.பமடைந்த அபிஷேக் மாலிக் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கொ.லை செ.ய்யத் தி.ட்டமிட்டு 4 பேரை து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். இதையடுத்து பொலிசார் அபிஷேக்கை கைது செய்துள்ளனர்.

மீண்டும் 200 ஐ தாண்டிய கொரோனா மரணங்கள் : 30 வயதிற்கு குறைந்த 5 பேர் பலி!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் (02.09.2021) கோவிட் தொற்றால் 202 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 89 பெண்களும், 113 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்று முன்தினம் (01.09.2021) கோவிட் தொற்றால் 204 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

காதலிக்காக மனைவி, குழந்தைகள், நண்பனை கொன்றுவிட்டு தப்பிப்பதற்காக கணவன் செய்த பயங்கர திட்டம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் காதலிக்காக மனைவி மற்றும் கு.ழந்தைகளை கொ.லை செ.ய்து விட்டு, கணவனும் இ.றந்துவிட்டதாக நம்பப்பட்ட சம்பவத்தில் பல அ.திர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்தவர் Rajesh. தற்போது 35 வயதாகும் இவருக்கும், Ratnesh (27) என்பவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது.

இதையடுத்து இந்த தம்பதிக்கு Avni மற்றும் Arpit என இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை கா.ணவில்லை என்று Rajesh மற்றும் அவரின் மாமானார், அதாவது Ratnesh-ன் தந்தை அங்கிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் பின் அவ்வப்போது இந்த புகார் தொடர்பாக பொலிஸ் வி.சாரணைக்கு வந்து கொண்டிருந்த இவர், திடீரென்று அதன் பின் கா.ணவில்லை. இவர் தொடர்பாக நடத்திய வி.சாரணையின் போது, அப்பகுதியில் கை மற்றும் கா.ல்கள் வெ.ட்டப்பட்ட நிலையில் ச.டலம் கிடந்துள்ளது.

இது கா.ணாமல் போன ராஜேஷின் ச.டலமாக இருக்கலாம் என்று பொலிசார் அவரின் தந்தையான Banwari-யிடம் காட்டிய போது, இவர் என் மகன் தான் என்று கூறியுள்ளார்.

அதன் பின் பொலிசார் டி.என்.ஏ சோதனை மேற்கொண்ட போது, ஒத்துப் போகாத காரணத்தினால், இவர் வழக்கு வி.சாரணை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட தீவிர வி.சாரணையில் உ.யிரிழந்ததாக நம்பப்பட்ட Rajesh ஹரியானாவில் இருப்பது க.ண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது நடத்தப்பட்ட வி.சாரணையில் பல அ.திர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் Rajesh-க்கு Ruby என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கு Ratnesh தொந்தரவாக இருந்த காரணத்தினால் கொ.லை செ.ய்ய முடிவு செய்துள்ளார்.

Ruby ஒரு பெண் கான்ஸ்டபிள். அதுமட்டுமின்றி Rajesh தடவியல் ஆய்வு அலுவலகத்தில் எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இதனால் ஒரு கொ.லை செ.ய்தால், அதில் எப்படி த.ப்பிப்பது என்பது தொடர்பான பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளார்.

இந்த கொ.லையை ம.றைப்பதற்கு, அவர் உடலுடன் ஒத்துப் போகும், அவருடைய நெருங்கிய நண்பரான Rajendra-ஐ கடந்த 2018-ஆம் ஆண்டு கொ.லை செ.ய்து, அவரது கை மற்றும் கால்களை தனியாக வெ.ட்டி அப்பகுதியில் போட்டுவிட்டு, அப்போது இ.றந்தது நான் தான் என்று நம்புவதற்காக அவருடைய ஐடி கார்ட் மற்றும் ஆதார்கார்ட் போன்றவற்றை அங்கே விட்டுச் சென்றுள்ளார்.

அவரின் தந்தை பார்த்த போது கூட, இது தன் மகன் தான் என்று நம்பும் அளவிற்கு இந்த கொ.லையை தி.ட்டமிட்டு செ.ய்துள்ளார். மேலும், தன்னுடைய முக அடையாளத்தை மாற்றுவதற்காக மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஹரியானாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் லேபராக வேலை செய்து வந்துள்ளார்.

ஆனால், பொலிசாருக்கு வி.சாரணையின் போது Ruby பெயர் அடிபட, அவருடைய போனை ஆய்வு செய்து பார்த்த போது, அவருடைய தொடர்பை பின் தொடர்ந்த போது, Rajesh சி.க்கிக் கொண்டுள்ளார். ஒரு பெண்ணிற்காக இப்படி நான்கு பேரை கொ.லை செ.ய்துள்ள இந்த சம்பவம் சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது.

குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 8 வயதுச் சிறுவன் : நெஞ்சை நெகிழச்செய்யும் சம்பவம்!!

திருப்பதி…

திருப்பதியை அடுத்த கங்கூடுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாப்பிரெட்டி – ரேவதி தம்பதி. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள். பாப்பிரெட்டிக்கும், ரேவதிக்கும் கண்பார்வை இல்லை என்பதால்,

குடும்ப சுமையை அவர்களது 8 வயது மகன் கோபால் சுமக்கத் தொடங்கியுள்ளான். அரிசி பருப்பு போன்ற மளிகைப் பொருள்களை பேட்டரி ஆட்டோவில் வைத்து தந்தையுடன் சென்று வியாபாரம் செய்து செய்து வருகிறான்.

கண் தெரியாத தங்களுக்கு மகன் கோபால் தான் அனைத்தையும் செய்து வருவதாக பாப்பிரெட்டி கூறியுள்ளார். குடும்ப வறுமையை போக்குவதற்காக, பள்ளிக்கு செல்லும் வயதில் பேட்டரி ஆட்டோ ஓட்டும் சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றிரவு நான் உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை : சகோதரருக்கு இளம்பெண் கடைசியாக அனுப்பிய செய்தி!!

கேரளா…

கேரளாவில் வரதட்சணை கொ.டு.மை.யா.ல் பெண்கள் அதிகமாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வது அதிகமாகிக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் மீண்டும் வரதட்சணை கொ.டு.மை.யால் கேரளாவில் ஒரு இள.ம்.பெ.ண் த.ற்.கொலை செ.ய்து கொண்டிருக்கிறார்.

சுனிஷாவுக்கும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜீஸ் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சுனிஷா புகுந்த வீட்டில் இ.றந்து கி.டப்பதாக தகவல் வர அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார் என்று எல்லோரும் நினைக்க,

அது த.ற்.கொ.லை.யா கொ.லை.யா என்று ம.ர.ணத்.தில் ம.ர்.மம் உள்ளது என்று சுனிஷாவின் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். வரதட்சணைக் கொ.டு.மை.யால் க.டு.மை.யான ம.ன உ.ளைச்சலுக்கு ஆளாகி இருந்த சுனிஷா,

உங்களால் முடிந்தால் தயவு செ.ய்து இப்போதே வாருங்கள் என்னை அழைத்துச் செல்லுங்கள். நான் வர தயாராக இருக்கிறேன். கணவரும் அவரது தாயாரும் என்னை அ.டி.த்.து து.ன்.பு.று.த்துகிறார்கள்.

இ.ன்றிரவு நான் உ.யி.ரோடு இருப்பேனா என்று கூட தெரியவில்லை என்று தன் சகோதரனுக்கு ஒரு ஆடியோ அனுப்பி இருக்கிறார். அன்று இரவு தான் சுனிஷா இ.ற.ந்.து.வி.ட்.டதாக தகவல் வந்திருக்கிறது.

சுனிதா ம.ர.ணம் குறித்து பொ.லி.சா.ர் வி.சா.ரித்து வருகின்றனர். ஆனால், அ.ர.சியல் செ.ல்வாக்கு உள்ள குடும்பம் என்பதால் வி.சா.ர.ணையில் மெத்தனம் காட்டுவதாக குடும்பத்தினர் புலம்பி வருகின்றனர்.

டிசம்பர் இறுதி வரை இலங்கைக்கு அச்சுறுத்தல் : புதிய கொத்தணிகளும் மரணங்களும் அதிகரிக்கும் : நிபுணர்கள் கடும் எச்சரிக்கை!!

நிபுணர்கள் கடும் எச்சரிக்கை..

டிசம்பர் மாதம் இறுதி வரையில் மிகப்பெரிய சவாலுக்கு நாம் முகங்கொடுக்க நேரும் என இலங்கையின் ஆய்வாளர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவிட் வைரஸ் பரவல் நிலைமையை கடக்கும் கட்டத்தில் நாம் இல்லை, இன்னும் நீண்ட தூர சவால்மிக்க பயணத்தை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையில் 70 தொடக்கம் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி ஏற்றினால் மட்டுமே பாதுகாப்பை உணர முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீட பேராசிரியர் மனோஜ் வீரசிங்ஹ கூறுகையில், இலங்கையை பொறுத்தவரையில் கோவிட் வைரஸ் பரவலை சமாளிக்கும் முறையான வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்கவில்லை என்றே கூறவேண்டும்.

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் மிகச்சிறந்த ஒன்றாகும்.ஆனால் அதனை துரிதப்படுத்த வேண்டும். இப்போது வரையில் நாட்டின் சனத்தொகையில் 30 வீதத்திற்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

நாட்டை திறக்க முன்னர் நாட்டின் மொத்த சனத்தொகையில் 70-80 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றினால் மட்டுமே வைரஸ் பரவலில் இருந்து விடுபட முடியும். ஆனால் இலங்கை இன்னமும் அவ்வாறான சூழல் ஒன்றுக்கு இன்னும் தயாரில்லை.

நவம்பர் மாதம் இறுதி அல்லது டிசம்பர் மாதம் இறுதிக்குள் குறைந்தது 60வீதமான மக்களுக்கேனும் தடுப்பூசி ஏற்றினால் மட்டுமே நிலைமைகளை கையாள முடியும்.

இல்லையேல் நாடு திறக்கப்பட்டால் மீண்டும் முடக்கநிலைக்கு தள்ளப்படுவோம். அதேபோல் கோவிட் வைரஸ் தொற்றுபரவல் நிலைமை இப்பொது முடிவுக்கு வரப்போகும் ஒரு விடயமல்ல.

இப்போது நாம் சகலரும் கோவிட் பரவலின் நடுப்பகுதியில் உள்ளோம். இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகமாகும். அதற்குள் மீண்டும் கோவிட் கொத்தணிகள் உருவாகும். மரணங்கள் பதிவாகும்.

தொற்றாளர்களின்எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே கோவிட் மரணங்களை தடுக்கவோ அல்லது குறைக்கவோ விரைவாகதடுப்பூசி ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

கோதுமை மாவின் விலையை உடனடியாக அதிகரிப்பதற்கு ப்ரிமா நிறுவனம் தீர்மானம்!!

கோதுமை மா..

ப்ரிமா சிலோன் (பிரைவேட்) லிமிடெட், கோதுமை மாவின் விலையை 12 ரூபாவினால் உடனடியாக அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

எனினும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர், இந்த முடிவு குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் விலையை அதிகரித்த, ப்ரிமா நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், கோதுமை மா நிறுவனங்களுக்கு, தமது பொருட்களுக்கான விலையைத் தாமாகவே அதிகரிக்க எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

முகக் கவசம் அணிவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

முகக் கவசம்..

முடிந்தால் இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு இராஜங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதால், இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது முக கவசம் அணிவது மிகவும் முக்கியம் என்பதனை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசிகள் என்ன என்று தேர்வு செய்யாமல் அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று உடனடியாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சில தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் வெளிநாட்டில் குடியேற முடியாமல் போய்விடும் என சிலர் நினைக்கின்றார்கள். முதலில் நாங்கள் உயிர் வாழ வேண்டும். அதன் பின்னரே வெளிநாடுகள் பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் தடுப்பூசிகளின் வகைகளை தெரிவு செய்துக் கொண்டிருப்பது பொருத்தமில்லாத ஒரு செயலாகும் என இராஜங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நோயைக் கருத்தில் கொண்டு குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக தகவல்களை www.donet.lk என்ற இணையத்தளத்தின் மூலமாக அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் 6 பேர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் நேற்றையதினம் (02.09.2021) கொரோனா தொற்றால் 6 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

திடீர் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் நேற்றையதினம் (02) மரணமடைந்தனர். இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் ஆண்டியாபுளியங்குளம், கந்தசாமி கோவில் வீதி, செட்டிகுளம், தவசிகுளம், வேப்பங்குளம், இறம்பைக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 46, 47, 60, 63, 83, 86 வயதுடைய 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மரணித்த ஆறு பேருடைய உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நாளாந்தம் மரணமும் அதிகரித்துச் செல்கின்றது. கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 50 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கோதுமை மா விலையில் மாற்றம் செய்து மோசடி : நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!!

கோதுமை மா..

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் கோவிற்குளம் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள கோதுமை மா விநியோக நிறுவனத்திற்கு வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது கோதுமை மா மூட்டையில் காலாவதி திகதி, உற்பத்தி திகதி, விலை என்பவற்றினை மாற்றம் செய்து அதன் மேல் புதிய விலையினை ஒட்டி விற்பனைக்கு விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைத்திருந்த கோதுமை மா மூட்டைகளை வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் கைப்பற்றியிருந்தனர்.

குறித்த விநியோக நிலையத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கோதுமை மா மூடை சிலவற்றினையும் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் எடுத்துச் சென்றனர்.

வவுனியா சதொச விற்பனை நிலையங்களில் சீனியைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!!

நீண்ட வரிசையில் மக்கள்..

வவுனியா சதொச விற்பனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சீனியைப் பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை அறிவித்துள்ளதுடன், அப் பொருட்களை நாடு பூராகவும் உள்ள சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வவுனியா மாவட்டத்தில் உள்ள 14 சதொச விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சீனியைப் பெற்றுச் செல்கின்றனர்.

ஒருவருக்கு மூன்று கிலோ வீதம் சீனி விநியோகிக்கப்பட்டு வருவதுடன், சிவப்பு சீனி 125 ரூபாய்க்கும், வெள்ளை சீனி 122 ரூபாய்க்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சில நாட்களாக வவுனியாவிலும் சீனிக்கு தட்டுப்பாடு நிலவியதுடன், தனியார் விற்பனை நிலையங்களில் 200 ரூபாய்க்கு மேல் சீனி விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் குறைந்த விலையில் சீனியைப் பெற்க் கொள்வதற்காக அதிகளவிலான மக்கள் கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சதொவிற்கு வருகை தந்து சீனியைப் பெற்று செல்வதையும், சீனி கிடைத்தமையால் மகிழ்ச்சி தெரிவிப்பதையும் அவதானிக்க முடிந்தது.