விதிமுறைகளை மீறி ஒரேநாளில் கொழும்பிற்குள் நுழைந்த 78 ஆயிரம் வாகனங்கள்!!

கொழும்பிற்குள்..

கொழும்பிற்குள் நுழையும் வாகனங்களுககு 11 நிறங்களிலான ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்றைய தினம் 78 ஆயிரம் வாகனங்கள் கொழும்பிற்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பிற்கு வந்து அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்களின் வசதிகளுக்காக இந்த புதிய ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 6.30 மணியில் இருந்து 3 மணி நேரம் வரையான காலப்பகுதியல் 78784 வாகனங்கள் கொழும்பிற்குள் நுழைந்துள்ளதாக இந்த நடவடிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

ஹைலெவல் வீதி, காலி வீதி, கண்டி வீதி, நீர்கொழும்பு வீதி மற்றும் நாடாளுமன்ற வீதி ஊடாக இந்த வாகனத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் முறை செயற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் தாமதமின்றி எதிர்வரும் நாட்களில் கொழும்பிற்கு நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கோவிட்..

தற்போது உலக நாடுகள் அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது, கோவிட் தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதாத அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு இறுதிப் பகுதியில் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்று தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது. கோவிட் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 174,353,487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,751,332 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையாக கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியிருந்தது. இதனால் பெரும்பாலான நாடுகளில் நோய் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், சில நாடுகளில் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் கோவிட் தொற்றின் புதிய திரிபுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தற்போது அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றின் புதிய திரிபுகள் வேகமாக பரவக் கூடியது. அத்துடன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே, கோவிட் தொற்றின் புதிய திரிபுகள் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதாத அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘‘டெல்டா உருமாற்றம் உள்பட உருமாற்றம் கோவிட் உலகளாவிய பரவுதல் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாட்டை தளர்த்துவது தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்’’ என அவர் எச்சரித்துள்ளார்.

உயிரிழந்த தாயை முத்தமிட்ட மகளுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலத்தை முத்தமிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்த பெண் திருகோணமலை – ரொட்டவெவ-மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 50 வயது உடையவர் எனவும் தெரியவருகின்றது.

அத்துடன் உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த 19 பேருக்கு இன்று (07) மாலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோமரங்கடவல பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளான மூவரில் ஒன்றரை வயது சிறுவனொருவரும் அடங்குவதாகவும், பொதுச்சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார்.
அத்துடன் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணி வந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் கூறினார்.

இலங்கையில் 4 நாட்களில் 48 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் மரணம்!!

கொரோனா..

இலங்கையில் புத்தாண்டு கொவிட் கொத்தணி உருவாகி ஒன்றரை மாதங்களான நிலையில் வீடுகளில் ஏற்படும் மரணய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் 48 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார பணிப்பாளரினால் உறுதி செய்யப்பட்டு அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் கொவிட் அறிக்கையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இந்த மரணங்கள் இடம் பெற்ற 4 நாட்களும் இலங்கையில் தினசரி பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 40 வரை அதிகரித்துள்ளது. குறித்த 4 நாட்களில் மொத்தமான 176 மரணங்கள் பதிவாகிய நிலையில் அதில் 48 பேர் வீடுகளில் உயிரிழந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த 176 பேரில் அதிகமானோர் கடுமையான கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலைமை காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

-தமிழ்வின்-

யாழில் விரக்தியில் இருவர் எடுத்த விபரீத முடிவு!!

யாழில்..

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உ.யிரை மா.ய்த்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை – ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று (06) த.வறான முடிவை எடுத்து உ.யிரை மா.ய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடலுணவுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் அவர், நிதி நிறுவனம் ஒன்றில் குத்தகைக் கட்டணத்தில் வாகனத்தை வாங்கியுள்ளார். தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக அவரது தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எனினும் மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்துமாறு நிதி நிறுவனம் அவரிடம் கோரியுள்ளது. அத்துடன், அந்த நிறுவனத்தின் அலுவலகர்கள் அவரிடம் சென்று பணத்தைக் கோரியுள்ளனர். தன்னிடம் 35 ஆயிரம் ரூபாய்தான் தற்போது உள்ளது. மிகுதியை கிடைத்தவுடன் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நிதி நிறுவன அலுவலகர்கள் அவரை ஏசியுள்ளனர்.

இந்த நிலையில் மன வி.ரக்தியில் அவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி உ.யி.ரை மா.ய்த்துள்ளார்” என்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற வி.சாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலயங்கள், ஊர்கள், வெளிமாவட்டங்கள் என தினமும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் ஒருவர் பயணத்தடையினால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தமையினால் ஏற்பட்ட மன வி.ரக்தியில் தவறான முடிவெடுத்து தனது உ.யிரைத் து.றந்துள்ளார்.

வதிரி கரவெட்டியைச் சேர்ந்த கோபசிங்கம் மயூரதன் (வயது-36) என்பவரே நேற்று (06) இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். “அவர் சில தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்.

அதனால் அவர் தினமும் ஆலயங்கள், ஊர்கள், வெளி மாவட்டங்கள் என மோட்டார் சைக்கிளில் பயணித்து வருபவர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தமையினால் த.ற்.கொ.லை செ.ய்.ய.ப் போகின்றேன் என்று வி.ரக்தியுடன் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி உ.யி.ரை மா.ய்த்துள்ளார்” என்று உறவினர்களினால் சட்ட மருத்துவ அதிகாரியின் வி.சாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு ச.டங்களையும் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா, வி.சாரணைகளின் பின்னர் ச.டலங்களை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

வவுனியாவில் அத்தியாவசியப் பொருள் விநியோகம் தொடர்பில் மாவட்ட சுகாதாரப் பிரிவினரின் கோரிக்கை!!

வவுனியா மாவட்டத்தில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த பயணத்தடைக் காலப்பகுதிளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை சரியாக பயன்படுத்தி கோவிட் பரவலை தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தகர்களிடம் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

நாட்டில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், வவுனியா மாவட்டமும் கோவிட் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 17 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. சிறிய கிராமமான சகாயமாதாபுரத்தில் கடந்த சில நாட்களுக்குள் 54 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, வவுனியா மாவட்டததிலும் கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனைப் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதுடன், அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை மீறாது ஒத்துழைப்பு அனைவரும் வழங்க வேண்டும்.

அத்துடன், பயணத்தடை காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிப் பொருட்களை வழங்கும் பொருட்டு பிரதேச செயலகம் ஊடாக பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதியானது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அவர்களது வீடுகளுக்கு வழங்கவே வழங்கப்பட்டுள்ளது.

அதனை வர்த்தகர்கள் சரியாக வேண்டும். பல வர்த்தகர்கள் அவ்வாறதன பாஸ் அனுமதியைப் பெற்று தமது வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

வாகனங்களில் விற்பனை செய்வோர் நிலையாக ஓர் இடத்தில் நின்று வியாபாரம் செய்கின்றனர். இதனால் வர்த்தக நிலையங்களிலும், குறித்த வாகனங்களின் முன்னும் மக்கள் குவிகின்றனர். இது சுகாதார பாதுகாப்பு முறைகளை கேள்விக்குட்படுத்துவதுடன், கோவிட் பரம்பலுக்கும் வழிவகுக்கின்றது.

எனவே வர்த்தக நிலையங்களுக்கு மக்களை அழைக்காது பாஸ் அனுமதியை முறையாக நடைமுறைப்படுத்தி வீடுகளுக்கு பொருட்களை வழங்குவதன் மூலம் கோவிட் பரம்பலை கட்டுப்படுத்த முடியும்.

சுகாதாரப் பிரிவினர் ஆகிய நாம் இரவு பகல் பாராது கோவிட் பரம்பலை கட்டுப்படுத்துவதற்காக எமது குடும்பங்களை கூட கவனிக்காது அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வேலை செய்கின்றோம்.

எனவே எமது பணிக்கு ஒத்துழைப்பு வழங்கி கோவிட் பரம்பலை தடுக்க முன்வாருங்கள். நாம் மட்டும் செயற்பட்டு கோவிட்டை கட்டுப்படுத்த முடியாது. மாவட்டத்தின் உண்மை நிலமையை உணர்ந்து அனைவரும் ஒத்துழைத்து செயறபடுவதன் மூலமே கோவிட் பரம்பலைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இரண்டு மாத குழந்தைக்கு கொரோனா தொற்று!!

கொரோனா…

கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தர்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தைக்கு கோவிட் தொற்றுள்ளமை நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தந்தை கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுபவர் என்றும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் குழந்தைக்கு ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் குழந்தைக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தாய்க்கு ஆன்டிஜென் பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்த போதும் அவருக்கு இருக்கும் அறிகுறிகள் தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 14 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் அதிரடி நடவடிக்கை : 5 தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு!!

5 தனியார் நிதி நிறுவனங்களுக்கு பூட்டு..

வவுனியாவில் கொரோனா விதிமுறைகளை மீறி செயற்பட்ட 5 தனியார் நிதி நிறுவனங்கள் இன்று (08.06.2021) மூடப்பட்டதுடன் தனிமைப்படுத்தப்பட்டன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு மட்டும் அரசாங்கத்தால் பாஸ் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு தலைமையிலான பொலிஸ் அணியினரும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் தலைமையிலான சுகாதாரப் பிரிவினரும் வவுனியா நகரில் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அரசாங்கத்தின் கோவிட் சுகாதார விதிமுறைகளை மீறி பயணத்தடைக் காலத்தில் தனியார் நிதி நிறுவனங்களை திறந்து மக்களை அழைத்து நிதி நடவடிககைளை மேற்கொண்ட நிதி நிறுவனங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

வவுனியா பசார் வீதியில் இரண்டு நிதி நிறுவனங்களும், முதலாம் குறுக்குத்தெருவில் இரண்டு நிதி நிறுவனங்களும், புகையிரத நிலைய வீதியில் ஒரு நிதி நிறுவனமும் என 5 நிதி நிறுவனங்கள் இவ்வாறு மூடப்பட்டன.

இதேவேளை வவுனியா நகரையண்டிய பகுதிகளில் பல வர்த்தக நிலையங்களும் கடந்த சில நாட்களாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தையில் தனிமைப்படுத்தலுக்கு வெளிநாட்டுப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து!!

பேருந்து விபத்து..

வெளிநாட்டில் இருந்து வருகைதந்த பயணிகளை தனிமைப்படுத்தலுக்காக ஏற்றிச் சென்ற சொகுசு பேரூந்து வவுனியா, ஓமந்தை, பனிக்கநீராவி பகுதியில் சென்ற போது இன்று அதிகாலை (08.06) விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சொகுசுப் பேரூந்து வெளிநாடுகளில் இருந்து நாடு தி்ரும்பிய பயணிகளை அழைத்துக் கொண்டு கிளிநொச்சி, பூநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதன்போது, ஏ9 வீதியில் ஓமந்தை, பனிக்கநீராவிப் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்திற்குள்ளாகியது.

குறித்த விபத்தில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (07.06) வெளியாகின.

அதில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த நான்கு பேருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், சகாயமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,

கரப்பங்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், குருமன்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் இன்றும் 47 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று நாட்டில் 2,610 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 207,943 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,670 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166,045 ஆக அதிகரித்துள்ளது.

காதலியின் திருமணத்தில் மணமகள் வேடத்தில் சென்று உறவினர்களிடம் சிக்கிய காதலன்!!

இந்தியாவில்..

இந்தியாவில் காதலியின் திருமணத்தில் காதலன், மணப் பெண் போன்று சென்று சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் Bhadohi பகுதியிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த இளைஞன் யார்? அவருடைய பெயர் என்ன என்பது குறித்த எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை.

ஆனால், அந்த இளைஞன் காதலித்த பெண்ணிற்கு பெற்றோரால் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான வேலைகள் நடந்துள்ளது. அதன் படி திருமண நாளான்று காதலியிடம் எப்படியாவது சென்று பேசி, இந்த திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த இளைஞன், பெண் வேடமிட்டு சென்றுள்ளார்.

அதாவது அசல் மணப் பெண் போன்று, சிவப்பு நிற சேலை, கழுத்தில் சில கவரிங் நகைகள், சரிகை முடி மற்றும் ஒரு ஹேண்ட் பேக் என்று, திருமண வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, இவர் அங்கிருந்தவர்களிடம் தொடர்ந்து, மணப் பெண் அறை எங்கே இருக்கு, எங்கே இருக்கு, என்று கேட்டபடி இருந்துள்ளார். இதனால் ஒரு சிலருக்கு இவர் மீது சந்தேகம், வர, அப்போது அவரின் முகத்தை பார்க்க முற்பட்ட போது, போலி முடி கீழே விழுந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். ஆனால், அதன் பின் என்ன நடந்தது என்பது தெரியவில்லை, இந்த காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். திருமணம் நடந்ததா? இளைஞனுக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்த ஒரு விவரமும் தற்போது வரை வெளியாகவில்லை.

செல்போனில் அடிக்கடி பேசிய ம.னைவியை ச.ந்தேகத்தில் கொ.லை செ.ய்.த க.ணவன்!!

தமிழகத்தில்..

ச.ந்தேகத்தால் 2வது க.ணவன் ம.னைவியை கொ.லை செ.ய்.த ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் எழில் செல்வி. இவருக்கும் நயினார்குப்பத்தை சேர்ந்த சிவா என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இவர்கள் குடும்பத்தில் காதலுக்கு எ.திர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நயினார்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த தம்பதிக்கு 2 வயதில் கன்சிகா என்ற பெண் கு.ழந்தை உள்ளது.

இதையடுத்து சிவாவுடன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஐயப்பன் என்பவருடன் எழில் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

அத்துடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு எழில் செல்வி தனது கு.ழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஐயப்பனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். உளுந்தூர்பேட்டை கந்தசாமி புரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதனிடையே அ.வமானம் தாங்க முடியாமல் சுற்றித்திரிந்த சிவா தனது சொந்த ஊரை விட்டு விட்டு தேனி மாவட்டம் கம்பத்தில் லாரி ஓட்டுவதற்காக சென்றுவிட்டார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு லாரி ஓட்டுனராக பணியில் சேர்ந்தார் ஐயப்பன். கடந்த 3ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில் தனது மனைவிக்கு உ.டல்நிலை சரிஇல்லை எனவும் ம.யக்க நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஆட்டோ எடுத்து வருமாறு நண்பரை வரவழைத்துள்ளார்.

இதையடுத்து எழில் செல்வியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . ஆனால் அதில் அவர் ஏற்கனவே இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் அ.வரது க.ழு.த்.தி.ல் கா.ய.ங்.க.ள் இ.ருந்ததால் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஐயப்பனை கை.து செய்து வி.சாரணை மே.ற்கொண்டதில் பல தி.டு.க்.கி.டு.ம் உ.ண்மைகள் வெளியாகின.

தனது ம.னைவியின் செல்போனின் அடிக்கடி பிஸி என்று வரும். இதுகுறித்து நான் கேட்டபோது அவர் மழுப்பலாக பதில் கூறி வந்தார். அதனால் என்னிடம் பேசியது போல வேறு யாரிடமும் பேசுகிறாளோ என்று எனக்கு ச.ந்தேகம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று இரவு நான் என் மனைவிக்கு போன் செய்தேன் . அப்போது அவர் நம்பர் பிஸியாக இருந்தது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த நான் போனை பி.டித்து பார்த்தபோது, அதில் நம்பர் அ.ழிக்கப்பட்டிருந்தது.

இதனால் இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டது. ஆ.த்.தி.ர.த்.தி.ல் நான் அ.வ.ள் க.ழு.த்.தை நெ.ரி.த்.தே.ன். அ.தி.ல் மூ.ச்.சு.த்.தி.ண.றி அ.வ.ர் இ.ற.ந்.து.வி.ட்.டா.ர் எ.ன்று கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ஐயப்பன் கை.து செ.ய்யப்பட்டு சி.றையில் அ.டைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது.

இரு வாரங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் 23 வயது இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய கடிதம்!!

இந்தியாவில்…

இந்தியாவில் இரண்டு வாரங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம் பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். ஜார்கண்டை சேர்ந்தவர் சுதிர்குமார்.

இவர் மகள் நேஹா (23). இவருக்கு வரும் 24ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலையில் வீட்டருகில் உள்ள கிணற்றில் நேஹா ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த பொலிசார் ச.டலத்தை மீ.ட்டனர். இந்த நிலையில் நேஹா எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கை.ப்.ப.ற்றினார்கள்.

அதில், அப்பா என்னை மன்னித்து விடுங்கள், நான் ஒரு நல்ல மகள் அல்ல. நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க நான் த.ற்.கொ.லை செ.ய்.து கொள்கிறேன். என் த.ற்.கொ.லை.க்.கு யா.ரு.ம் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சுதிர்குமார் கூறுகையில், நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டிலிருந்து நேஹா திடீரென கா.ணாமல் போனாள். அதிகாலை 4 மணி வரை தே.டியும் கிடைக்கவில்லை. பின்னர் தான் கி.ணற்றில் ச.டலத்தை க.ண்டுபிடித்தோம்.

இ.றப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவள் ம.ன அ.ழுத்தத்தில் இருந்தார் என கூறினார். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து நேஹா த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ரணம் குறித்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் முடித்த உடனே அமெரிக்கா சென்ற மாப்பிள்ளை : கலங்கிய மணப்பெண்!!

கேரளாவில்..

கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருமணம் தடைபட்டே வந்ததால், இறுதியில் நீதிமன்றத்தை நாடி திருமணத்தை செய்து முடித்துள்ளார்.

கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள பூஞ்சார் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகான டென்னிஸ் ஜோசப் அமெரிக்காவில் இருக்கும் அமேசான் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் டென்னிஸ் ஜோசப்பிற்கும், கேரளா திருச்சூரை சேர்ந்த பல் மருத்துவரான பெபி வீசன் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு மே 19-ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அதில், வரும் 2020 மே 5-ஆம் திகதி திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் அப்போது திருமணத்தை நடத்த முடியவில்லை. இதையடுத்து, 2021 மே 5-ஆம் திகதி திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

இதனால் அன்றைய தினம் ஊருக்கு வந்த ஜோசப், ஜூன் 5-ஆம் திகதி அதிகாலை 5 மணி விமானத்தில் அமெரிக்கா செல்லவும் டிக்கெட் புக் செய்தார். ஆனால், கொரோனா 2வது அலையால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், இந்த முறையும் திருமணம் நடத்த முடியாமல் போனது,

இதனால், பதிவுத் திருமணம் செய்ய தீர்மானித்தனர். ஆனால், இதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் மணமக்களில் ஒருவர் திருச்சூர் அல்லது எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவராக இருந்தால் சிறப்பு சட்டத்தின்படி, சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் 5-வது பணி நாளில் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

அதன்படி, திருச்சூர் மாவட்டம் கூட்டநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். ஆனால், அப்போது திருச்சூர் மாவட்டத்தில் மும்மடங்கு ஊரடங்கு அமலில் இருந்தது.

இதற்கு தீர்வு காண உயர் நீதிமன்றத்தை நாடி இந்த தம்பதி தங்களது சோகக்கதையை தெரிவித்தனர். அவரின் பிரச்னையை புரிந்து கொண்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கியது.

இதையடுத்து, நேற்று முன்தினம் டென்னிஸ் ஜோசப், பெபி வீசன் திருமணம் நடந்தது. திருமணம் முடிண்டு கழுத்தில் சூடிய மாலையின் மணம் மாறுவதற்குள் டென்னிஸ் ஜோசப் நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். புதுப்பெண் அவரை பிரிய மனமின்றி கண்ணீர் மல்க விடைகொடுத்தார்.

வேலையிழந்த உதவி பேராசிரியர் : கூலிக்கு பனைமரம் ஏறி நுங்கு வெ.ட்.டும் போது ஏற்பட்ட விபரீதம்!!

சென்னை..

சென்னை செங்குன்றம் அருகே ஊரடங்கு காரணமாக வேலையின்றி வாழ்வாதாரம் இ.ழந்து வீட்டில் இருந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியர், பனைமரம் ஏறி நுங்கு வெ.ட்.டி தரும் கூலி வேலைக்கு சென்று மரத்தின் உச்சியில் இருந்து தவறிக் கீழே விழுந்து பரிதாபமாக உ.யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னடபாளையம் நசரேத் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் லோகநாதன் (35). அலமாதி கிராமத்தில் வசித்து வந்த லோகநாதன், இரண்டு ஆண்டுகளாக வேலை இன்றி வீட்டில் முடங்கி இருந்தார்.

இவரது மனைவி கவிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு பிரியன் என்ற 2 வயது சிறுவனும் உள்ளான். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த லோகநாதன் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்தார்.

இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக அவ்வப்போது பனைமரம் ஏறி நுங்கு அ.றுத்து கொடுத்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல் பனை மரத்தில் ஏறி நுங்கு அ.றுத்து கொடுக்க முயன்றபோது பனை மரத்தின் உச்சியில் இருந்து லோகநாதன் தவறி விழுந்து ப.டுகாயமடைந்தார்.

இதையடுத்து, ப.டுகாயமடைந்த லோகநாதனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் ப.ரிதாபமாக உ.யிரிழந்தார்.

ஊரடங்கு காரணமாக வேலையின்றி பனைமரத்தில் ஏறி நுங்கு வெ.ட்.ட சென்று தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் ப.ரிதாபமாக உ.யிரிழந்த ச.ம்பவம் அப்பகுதியில் பெரும் சோ.க.த்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நிறைமாத கர்ப்பிணியாக 2 வயது கைக்குழந்தையுடன் உள்ள அவரது மனைவிக்கு உதவிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.