வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா : நிர்வாக சபையினர் 22 பேருக்கு மட்டுமே அனுமதி!!

புதூர் நாகதம்பிரான்..

வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (07.06) சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆலய நிர்வாகத்தினர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றது.

400 வருடங்களுக்கு மேல் பழமையான புதுமைமிகு புதூர் நாகதம்பிரானின் அருளினைப் பெறுவதற்காகவும், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காகவும் பக்தர்கள் வருகை தந்த போதும், கொவிட் – 19 தாக்கம் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புதூர் ஆலய உற்சவத்திற்கு நிர்வாகத்தினர் 22 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆலயத்திற்கு பலரும் வருகை தந்த நிலையில் புதூர் பிரதான நுழைவாயில், ஆலய முன்பகுதி நுழைவாயில் என்பவற்றில் வைத்து பொலிசாரும் பொது சுகாதாரப் பரிசோதகர்களும் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஆலயத்திற்கு நேர்த்திக் கடனுக்காக கொண்டு வரும் கோழி, பால் மற்றும் ஆலயத்திற்கான பொருட்களை ஆலயத்திற்குள் நுழையும் வாயில்களில் வைத்து ஆலய நிர்வாகத்தினரால் பெறப்படுவதுடன், ஆலயத்திற்கு பணம் செலுத்துபவர்களுக்கான பற்றுச் சீட்டுக்களும் வழங்கப்படுகின்றது.

அத்துடன், புதூர் நாகதம்பிரான் ஆலய விபூதி, நூல் மற்றும் விசம் தீண்டியவர்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் புதூர் நாகதம்பிரான் ஆலய மண் என்பவற்றையும் ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்தின் நுழைவாயிலில் வைத்து வழங்கி வருகின்றனர்.

ஆலயத்தில் நிர்வாகத்தைச சேர்ந்த 22 பேருக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரப் பிரிவினர் 17 பேரும், பிரதேச சபை ஊழியர்கள் 7 பேரும், பொலிசார் 10 பேரும் காண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த ஆலோசனை?

ஊரடங்கு…

பயணத் தடை அமலாக்கலாம் கொரோனா வைரஸ் பரவல் குறையாமல் இருப்பதை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. கொழும்பில் நேற்று (06.06) இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையாது, நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை தொடருமாக இருந்தால், எதிர்வரும் சில தினங்களில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடும் கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு சட்டத்தை இரு வாரங்களுக்கு அமலாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று குறைவடைந்தமை தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை இங்கு முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஊரடங்கை பிறப்பிப்பது குறித்து, ஜனாதிபதியின் கவனத்திற்கு இன்று கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், உடனடியாக ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.

-தமிழன் பத்திரிகை செய்தி-

வவுனியா வறுமைக்கோட்டிற்குட்பட்ட 25 குழந்தைகளுக்கு பால்மா உள்ளடங்கிய பொதிகள் வழங்கி வைப்பு!!

பால்மா..

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள EVAHSAA KIDS WORLD நிறுவனத்தினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 25 குழந்தைகளுக்கு பால்மா உள்ளடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பயணத்தடையினால் அன்றாட வாழ்வாதாரத்திற்கு மக்கள் இன்னல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பல அமைப்புக்கள், சமூக ஆர்வளர்கள் அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொதிகள் என்பவற்றினை வழங்கி வருகின்றனர்.

எனினும் சில வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு பால்மா கொள்வனவு செய்வதற்கு பணமின்றி பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை தொடர்பில் வவுனியா மாவட்ட ஊடகவியவாளர் பாஸ்கரன் கதீஷனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமையினையடுத்து,

வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள EVAHSAA KIDS WORLD நிறுவனத்தினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 25 குழந்தைகளுக்கு பால்மா உள்ளடங்கிய பொதிகள் வழங்கப்பட்டது.

பாடசாலைகளை மீள திறக்கும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!

கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்..

இலங்கையில் பாடசாலைகளை மீள திறக்கும் திகதியை தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் குறிப்பிட முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

குடும்ப வறுமை காரணமாக பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பிறரின் பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டு வெளிநாடுகளில் தொழில் புரிகிறார்கள். பிறரது பொறுப்பில் உள்ள பெரும்பாலான பிள்ளைகள் ஏதாவதொரு வழிமுறையில் சிறுவர் வ.ன்.கொ.டு.மை.க.ளு.க்.கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமுள்ளன. சிறுவர் சி.த்.தி.ர.வ.தை கு.ற்றங்களுக்கு வழங்கப்படும் த.ண்டனைகளை திருத்தியமைக்க நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்கு கல்வி அமைச்சின் ஊடாக பல ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளோம். முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்ளுக்கு ஆரம்ப கற்றல் எழுத்துக்களை மாத்திரம் கற்றுக் கொடுக்கும் வரையறைக்குள் இருக்கக்கூடாது.

பிள்ளைகளின் எதிர்காலத்தை சீர்படுத்தும் அடித்தளத்தை முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும். ஆகவே மாணவர்களின் எதிர்காலம் சிறந்த முறையில் அமைய முன்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு பிரதானமானதாகும்.

கோவிட் – 19 தொற்று காரணமாக கல்வித் துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் முழுமையாக இடம்பெறவில்லை. மாணவர்கள் உளவியல் ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கோவிட் – 19 வைரஸ் கடந்த காலத்தை காட்டிலும் தற்போது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் பாடசாலைகளை மீள திறக்கும் தீர்மானம் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

பாடசாலையினை திறக்கும் விவகாரத்தில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொலைநோக்கு கல்வி முறைமை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. குருகெதர மற்றும் இலத்திரணியல் முறைமை ஊடாக தற்போது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொலைநோக்கு கல்வி முறைமை மாணவர்களுக்கு முழுமையான கற்பித்தலை வழங்கும் என்று குறிப்பிட முடியாது. இருப்பினும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இதனை தவிர்க்கவும் முடியாது.

தொலைநோக்கு கல்வி முறைமை ஊடாக கற்றல் நடவடிக்கையினை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த தொலைக்காட்சி சேவை ஊடாக கற்பித்தலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்

 

இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக 17 பேர் உயிரிழப்பு!!

சீரற்ற வானிலை..

இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக இன்று காலை நிலவரப்படி 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் கேகாலையை சேர்ந்த ஐந்து பேரும், புத்தளம், இரத்தினபுரி மற்றும் கம்பஹாவை சேர்ந்த தலா 3 பேரும் அடங்குவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பேரைக் காணவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக 206,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 17 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை 978 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சீரற்ற வானிலை, நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் சேதங்களை விளைவித்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று : தொற்றாளர் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது!!

கொரோனா..

யாழ்ப்பாணத்தில் 112 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்று 247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று (07.06.2021) காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 112 பேரும், வவுனியா மாவட்டத்தில் 85 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 26 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 21 பேரும், மன்னார் மாவட்டத்தில் 03 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை இதுவரை வவுனியா மாவட்டத்தில் 1040 கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இது தகவல் வெளியிடப்பட்டுள்ளது

வவுனியா சகாயமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த மேலும் 22 பேர் உட்பட 30 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா, சகாயமாதாபுரம் பகுதியில் மேலும் 22 பேர் உட்பட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சகாயாமாதபுரம் பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (06.06) வெளியாகின.

அதில் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், குட்செட் வீதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 30 பேருக்கு கொரோனா தெர்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சனத்தொகை குறைந்த குறித்த சகாயமாதாபுரம் சிறிய கிராமத்தில் இதுவரை 53 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தில் கோவிட் பரவலை தடுக்கும் வகையில் கிராமத்தில் இருந்து வெளியேறவும், கிராமத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் கிராமத்தின் பிரதான வீதிகள், உள் வீதிகள் என்பன போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டு கிராமத்தைச் சுற்றி பொலிசார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

26 வயதுப் பெண் இரு கு.ழந்தைகளுடன் கி.ணற்றில் கு.தித்த ப.ரிதாபம் : அ.திர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான இளம்பெண் தனது இரண்டு கு.ழந்தைகளுடன் கி.ணற்றில் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (31). இவருக்கும் இவருக்கும் செல்விக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு அனுஷ்கா (5) மாதேஷ் (2). என இரண்டு கு.ழந்தைகள் உள்ளனர்.

சங்கரநாராயணன் தீப்பெட்டி ஆலையில் வேலைபார்த்து வந்தார். குடும்பத்தில் அ.டிக்கடி த.க.ரா.று வந்துள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சங்கரநாராயணன் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

அதன்பின்பு செல்வி அதே கிராமத்தில் தனது தாயார் வீரலட்சுமியின் (60) வீட்டின் அருகே வேறு ஒரு வீட்டில் கு.ழந்தைகளுடன் வசித்து வந்தார். தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார்.

க.ணவர் த.ற்.கொ.லை.க்.கு பி.ன்னர், செல்வி மிகவும் ம.ன வே.தனையுடன் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை செல்வி தனது நகைகளை எல்லாம் க.ழற்றி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த அவருடைய தாய் வீரலட்சுமி எதற்காக நகையை எல்லாம் க.ழற்றுகிறாய்? என கேட்டுள்ளார். அதற்கு செல்வி, சும்மா தான் க.ழற்றி வைக்கிறேன் என கூறி இருக்கிறார்.

பின்னர் சிறிது நேரத்தில் தனது 2 கு.ழந்தைகளையும் அழைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஊரை அடுத்த காட்டுப்.பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றார்.

பின்னர் ம.னதை க.ல்லாக்கிக் கொண்டு, பெற்ற கு.ழந்தைகள் என்றும் பாராமல் ம.கனையும், ம.களையும் கி.ணற்றில் தூ.க்கி வீ.சி.யு.ள்.ளா.ர். கி.ணற்றில் கு.ழந்தைகள் த.த்தளித்ததும், செல்வியும் கு.தித்தார்.

பின்னர் 3 பேரும் த.ண்ணீரில் மூ.ழ்கி ப.ரிதாபமாக இ.ற.ந்.த.ன.ர். இதற்கிடையே தனது மகளும், பேரக் கு.ழந்தைகளும் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் வீரலட்சுமி அருகில் உள்ள இடங்களில் எல்லாம் தே.டி உ.ள்ளார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்வி, தனது கு.ழந்தைகளுடன் காட்டுப் பகுதியை நோக்கி சென்றதாக தெரிவித்தனர். பின்னர் வீரலட்சுமி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று தே.டிப் பா.ர்த்த போது, கி.ணற்றில் செல்வியும், கு.ழந்தை அனுஷ்காவும் பி.ண.மா.க மி.த.ந்.த.து கண்டு அ.தி.ர்.ச்.சி அ.டைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு வி.ரைந்து வந்து 3 பேரின் உ.ட.ல்.க.ளை.யு.ம் மீ.ட்.ட.ன.ர். கணவர் இ.ற.ந்.த து.க்கத்தில் இந்த முடிவை செல்வி எடுத்தது தெரியவந்த நிலையில் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து வி.சாரணை நடத்தப்பட்டு வருகிறது

காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணின் வீ ட்டிற்குள் பு.குந்து இளைஞன் செய்த கொ.டூரம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் த.னியாக வீட்டில் இருந்த இ.ள.ம் பெ.ண்ணை கு.த்.தி கொ.லை செ.ய்.த ந.பரை கி.ரா.ம ம.க்கள் க.ல்.லா.ல் அ.டி.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா. இவர் சித்தூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பணி நிமித்தம் காரணமாக மருத்துவமனைக்கு சென்று வரும் போது, அதே கிராமத்தை சேர்ந்த கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சின்னா என்ற இளைஞரை இவரை பின் தொடர்ந்து, காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

ஆனால், இவரின் காதலை சுஷ்மிதா ஏற்க ம.றுத்துள்ளார். இருப்பினும் சின்னா தொடர்ந்து அவரை காதல் என்ற பெயரில் தொ.ந்தரவு செய்து வர, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுஷ்மிதா இது குறித்து காவல் நிலையத்தில் பு.கா.ர் தெரிவித்துள்ளார்.

இதனால் பொலிசார் சின்னாவை வி.சாரணைக்கு அழைத்து எ.ச்.ச.ரி.த்.து அனுப்பியுள்ளனர். இதனால் க.டு.ம் ஆ.த்.தி.ர.ம.டை..ந்த சின்னா, கடந்த வெள்ளிக் கிழமை சுஷ்மிதா தனியாக வீட்டில் இருப்பதை அறிந்து, வீ.ட்டிற்குள் பு.குந்து அ.வ.ரை கு.த்.தி.க் கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

சுஷ்மிதாவின் அ.ல.ற.ல் ச.த்.தத்தைக் கேட்ட, அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த சின்னா, அவர்களிடம் இருந்து த.ப்.பு.வ.த.ற்.கா.க தனது க.ழு.த்.தை லே.சா.க அ.று.த்.து கொ.ண்.டு உ.யி.ரு.க்.கு போ.ரா.டு.வ.து போல கீழே வி.ழு.ந்.து ந.டித்துள்ளான்.

அவன் செவிலியர் சுஷ்மிதாவை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ற்.கொ.லை மு.யற்சி நா.டகம் ஆ.டுவதை அறிந்த கிராம மக்கள் சின்னா மீது ச.ரமாரியாக க.ற்களை வீ.சியும் அ.டி.த்.து.ம் கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர்.

இதற்கிடையில் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வி.ரைந்து வந்த பொலிசார் இருவரின் ச.ட.ல.த்.தை.யு.ம் கை.ப்.ப.ற்.றி சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்து வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருகின்றனர்.

திரிபு வைரஸ் தொற்று : வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் அபாயம்!!

கொரோனா..

கோவிட் தொற்றாளர் ஒருவருக்கு புதிய வகை வைரஸ் திரிபுகளின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் அவரது வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளாகும் நபர்கள் சிலர் குறுகிய காலத்துக்குள் குணமடையாமையின் காரணமாக புதிய வகை வைரஸ் திரிபுகளுக்கு எதிராக போராடுவதற்கு வைத்திய நிபுணர்கள் வெவ்வேறு சிகிச்சை முறைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவிட் நிமோனியாவின் கடுமையான பாதிப்புக்களில் இருந்து சிலர் மீண்டு வந்தாலும் புதிய திரிபுகள் நீண்டகால சுகாதார பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றது.

சிலர் குறுகிய காலத்துக்குள் மீண்டும் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய நிலை காணப்படுகின்றது. பயணக் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள காலப்பகுதிகளிலும் வீதிகளில் மக்களின் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையினால் வைரஸ் பரவல் தொடரும் நிலையே காணப்படுகின்றது.

புதிய வைரஸ் திரிபுகளின் தீவிரத்தன்மை தொடர்பில் தினசரி அதிகரிக்கும் கோவிட் மரணங்களின் மூலம் மக்கள் தற்போது தெளிவு பெற முடியும். இருப்பினும் கட்டுபாடுகளை தளர்த்தி நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொது மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகங்கள் வீணாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

குறுஞ் செய்தியினால் ஏற்பட்ட விபரீதம் : எட்டு பேர் காயம், ஆபத்தான நிலையில் இருவர்!!

குறுஞ் செய்தியினால்..

கொழும்பு – பொரள்ளை பகுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோ.த.லி.ல் எட்டு பேர் காயமடைந்துள்ள நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு குடும்பங்களின் கணவன்மார்களும் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“ஒரு பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆண் ஒருவருக்கு குறுஞ் செய்தி (கோஹோமத சுது ) அனுப்பியுள்ளார். இது குறித்து அறிந்துகொண்ட கணவர் ( 35 வயது) அந்த குறுஞ் செய்தி யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் கண்டுப்பிடித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அந்த பெண்ணிடம் கேட்ட போது அந்த குறுஞ் செய்தி தவறுதலாக அனுப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறுஞ் செய்தி அனுப்பப்பட்ட அயல் வீட்டுக்காரருடன் (25 வயது) இது தொடர்பில் விசாரித்துள்ளதுடன், பின்னர் இந்த விவகாரம் மோதலாக மாறியுள்ளது.

இதனால் ஏற்பட்ட மோதலில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயண கட்டுப்பாடு அமுலிலுள்ள போதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!!

கொரோனா..

பயண கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்ளாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு குறையைவில்லை என சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார். பலர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் அடுத்தவாரமளவில் நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடையலாம் என தெரிவித்துள்ள அவர் ஆனால் அது நாங்கள் எதிர்பார்த்தளவிற்கு காணப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி!!

சவுதி அரேபியாவில்..

சவுதி அரேபியாவில் நடந்த விபத்தொன்றில் அங்கு அல் மராய் நிறுவனத்தில் கடமையாற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூரைச் சேர்ந்த 38 வயதான சுலைமாலெப்பை ஹமீட் சபீர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அவரது உறவினர் தெரிவித்தார்.

சடலம் சவுதி அரேபியாவில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் (06.06) அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை வாழ் இளைஞர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயணத்தடைகளை தளர்த்துவது பொருத்தமற்றது : உபுல் ரோஹன!!

உபுல் ரோஹன..

பயணத்தடைகளை தளர்த்துவது பொருத்தமற்றது என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டில் பதிவாகி வரும் கோவிட் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கையை கருத்திற் கொள்ளும் போது எதிர்வரும் 14ம் திகதி பயணத்தடையை தளர்த்துவது சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயணத்தடை விதிக்கப்பட்டாலும் மக்கள் அதிகளவில் பயணங்ளை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பயணத்தடை மூலம் 90 வீதமான மக்களின் பயணங்களை வரையறுப்பதே நோக்கமாக காணப்பட்டது எனவும் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாள் கூலிக்கு பணியாற்றுவோர் தவிர்ந்த பலரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் நாள்தோறும் கடமைக்கு சமூகமளிக்கும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பயணத் தடை காலத்தின் ஒரே வித்தியாசம் பொதுப் போக்குவரத்து கிடையாது எனவும் மக்கள் தனியார் வாகனங்களில் பயணங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவிட் மூன்றாம் அலையின் முதல் தொற்றாளர்கள் மட்டுமே பரிசோதிக்கப்படுவதாகவும், பீ.சீ.ஆர் பரிசோதனைகளை நடாத்துவதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய்த் தொற்றாளியின் இரண்டாம், மூன்றாம் தொடர்பாளர்கள் பயணத் தடை காலத்தில் பயணங்களை மேற்கொள்வதனால் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையை வரையறுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் சிரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களில் 14 பேர் இறப்பு!!

சிரற்ற காலநிலை..

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பத்து மாவட்டங்களில் பதினான்கு பேர் இறந்துள்ளனர், 60, 674 குடும்பங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, இரத்னபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா , கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களின் போது இரண்டு பேர் காயமடைந்தனர், இருவரை காணவில்லை என்றும் மத்திய மையம் குறிப்பிட்டுள்ளது.

14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன, 817 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 3,520 குடும்பங்களைச் சேர்ந்த 15,658 பேர் 72 பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இறப்புக்களை பொறுத்தவரையில் கம்பஹாவில் – 2, இரத்னபுரியில் – 3, கொழும்பு, புத்தளம், களுத்துறை, காலியில் தலா – 1, கேகாலையில் – 5 என்ற எண்ணிக்கையில் இறப்புகள் பதிவாகியுள்ளன.

நாடு எப்போது முழுமையாக திறக்கப்படும் : இராணுவத் தளபதி தெரிவித்த விடயம்!!

இராணுவத் தளபதி..

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் அது குறித்து இன்னும் தீர்மானிகக்ப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து தினமும் 3 ஆயிரம் கோவிட் நோளிகள் அடையாளம் காணப்படுவது கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைமை. இதனால், மக்களின் பாதுகாப்பை கவனததில் கொண்டு, எடுக்க வேண்டிய தீர்மானங்கள் சரியான நேரத்தில் எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் என்றோ ஒரு நாள் மீண்டும் நாடு திறக்கப்படும் வரை மக்கள் வீடுகளில் சுகாதார பாதுகாப்புடன் இருந்து தொற்று நோயை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என வெளியாகியுள்ள செய்தி குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

-தமிழ்வின்-